மரண அறிவித்தல்

.
                                                      திரு.சுவாமிநாதன் பாலேந்திரா

மறைவு  24.04.2019

ஆதி மயிலிட்டியை பிறப்பிடமாகவும்,  சிட்னி அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சுவாமிநாதன் பாலேந்திரா (முன்னாள் வட மாகாண பணிப்பாளர்வீதி அபிவிருத்தி அதிகாரசபை,  இலங்கை) அவர்கள்  24.04.2019 புதன்கிழமை அன்று சிவபதமடைந்தார்.

அன்னார் காலஞ் சென்ற சுவாமிநாதன்பூதாத்தைப் பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ் சென்ற சுன்னாகத்தைச் சேர்ந்த  மண்டலநாயகம் இரத்தின தேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்
பத்மலோஜினியின் அருமைக் கணவரும்,
 பூம்பொழில் உமாபங்கன் கலாநிதி உமைமைந்தன் ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்
அஜந்தன்வைத்திய கலாநிதி சௌமியா ஆகியோரின் அன்பு மாமனாரும் 
ஆகாஷ்அனிதாஹரன் ஆகியோரின் பாசமிகு  பேரனாரும்,  
காலஞ் சென்றவர்களான மகேஸ்வரி சிவராசாஇராஜராஜேஸ்வரி முதலியார்ஆனந்த குமாரசுவாமிமற்றும் புவனேஸ்வரி சண்முகலிங்கம் (சிட்னிஅவுஸ்திரேலியா),  காலஞ் சென்றவர்களான பரமேஸ்வரி சச்சிதானந்தன்,  ஸ்ரீ பாஸ்கரன்பேராசிரியர் சுசீந்திரராஜாவைத்திய நிபுணர் மகேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்
வைத்தியகலாநிதிசெல்லப்பா,  திருஞானசம்பந்தன்விக்கினேஸ்வரன்கோணேஸ்வரன்,கமலலோஜினி,வரதராஜா,அம்பிகா  குகதாசன்நளினலோஜினி சத்தியகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் பார்வைக்காக 28.04.2019 காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை கமிலியா மலர்ச் சாலைமக்குவாரி பார்க்கில் (Camellia Chapel, Macquarie Park, NSW) வைக்கப்பட்டு, 10.30 மணி முதல் 12.30 மணி வரை கிரியைகள் நடைபெற்று தகனம் செய்யப்படும்  என்பதனை உற்றார்உறவினர் நண்பர்களுக்கு அறியத்  தருகிறோம். 

தகவல் :உமை மைந்தன் 02 8840 9799





உயிர்த்தெழுந்த ஞாயிறு ஒன்றில் - செ .பாஸ்கரன்

.
Image result for sri lankan bomb blast

மனதை உருக்கும் 
மக்களின் ஓலம் 
ஒன்பது குண்டுகள் 
ஒன்றாய் வெடித்தது 
புனித ஞாயிறில் 
புவியெலாம் அதிர்ந்தது
கோவில் தரையில்  
குருதி குளித்த 
மனித உடல்கள்  
உயித்தெழுந்த 
தேவனின் கோவிலில் 
செத்து விழுந்த 
சேதிகள் வந்தன 
அமைதி வாழ்வை 
தேடிய மக்கள் 
உடலம் கருகி 
உயிர் விட்டிருந்தனர் 
கழுகுகள் மீண்டும் 
இரையினைத் தேடி 
அமைதியாய் இருந்த 
தீவினில் இறங்கிட 
அவலக்  குரல்கள் 
வானெலாம் எழுந்தது 

உயிர்த்த ஞாயிறில் வெடித்த குண்டுகள் சதியா? - செ .பாஸ்கரன்



.
கர்த்தர் உயிர்த்த ஞாயிறு இலங்கையில் கோர நாளாக மாறியது. வழிபாட்டிடற்கு சென்றமக்கள் கொடூரமாக கொல்லப் பட்டார்கள் 
இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தியது தற்கொலை குண்டுதாரிகள் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இன்றைய 9 இடங்களில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் இதுவரை, மூன்று போலீஸ்  அதிகாரிகள் உள்பட 207 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 35 பேர் வெளிநாட்டவர்களாகும் மேலும் 450 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பு தாக்குதல்கள் தொடர்பாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரூவான் விஜேவர்தன, ஊடக நிறுவனங்களின் பிரதம அதிகாரிகளை சந்தித்து "இந்த குண்டு வெடிப்புகளில் பெரும்பாலானவை தற்கொலை தாக்குதல்கள். என்று குறிப்பிடடார். அத்தோடு இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். என்றும் குறிப்பிடடார். 
இறுதியாக குண்டுவெடித்த தெமட்டகொடவில் சந்தேகநபர்களை கைதுசெய்ய போலீசார் சென்றபோது குண்டுத்தாக்குதல் மேட்கொள்ளப் பட்டதால் 3 போலீஸ் அதிகாரிகள் கொல்லப் பட்டார்கள். 

சைவ மன்றத்தின் பண்ணிசை விழா 25 04 2019

.

உலகத் தொல்காப்பிய மன்றம் – சிட்னிக் கிளை தொடக்கவிழா நிகழ்வு

.

சிட்னி தமிழ் இலக்கிய கலை மன்றம் நடாத்திய  உலகத் தொல்காப்பிய மன்றம் – சிட்னிக் கிளை தொடக்கவிழா  20.04.19 சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு  துர்கா தேவி தேவஸ்தான தமிழர் மண்டபத்தில் இடம் பெற்றது.  இதில்  உலகத் தொல்காப்பிய மன்ற தலைவர் முனைவர் இளங்கோவன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். சிட்னி தமிழ் இலக்கிய கலை மன்றம் நடாத்திய சமய அறிவுப் போட்டி மற்றும் திருக்குறள் போட்டியில் பரிசில்கள் பெற்ற மானவர்களுக்கு பரிசளிப்பும் தலைவர் கலாநிதி இரத்தினம் மகேந்திரன் தலைமையில் இடம் பெற்றது.



பயணியின் பார்வையில் - அங்கம் 03 - முருகபூபதி

.


மயில்வாகனத்தில்  பவனிவந்த  மயில்வாகனனார்
" நினைவு நல்லது வேண்டும் - நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்-
கனவு மெய்ப்பட வேண்டும் - கைவசமாவது விரைவில் வேண்டும் "
                                                                 மகாகவி பாரதி
     
                                                                                       
தமிழர்கள் புதிதாக குடியேறும் எந்தவொரு தேசத்திலும் முதலில் தங்களுக்கென மதம்சார்ந்த வழிபாட்டிடங்களை உருவாக்குவார்கள். அதன்பின்னர் ஒன்றுகூடுவதற்காக ஒரு சங்கம் அமைப்பார்கள். கோயில்கள் பெருகும். அமைப்புகள் உருவாகும். வர்த்தக நிலையங்கள் தோன்றும்.
தமிழ்நாட்டில் இருக்கும்  சாதிச்சங்கங்கள் போன்று, ஊர்ச்சங்கங்கள் மலரும்.  பழையமாணவர் மன்றங்கள் உதயமாகும். கலை, இலக்கிய சங்கங்கள் துளிர்க்கும். அவற்றின் நிகழ்ச்சிகள் வருடாந்தம் நடக்கும்.
மக்களின் பெருக்கத்திற்கு ஏற்பவும் அவர்களின் கருத்துக்களுக்கு ஏற்றவாறும் சங்கங்கள், கோயில்கள், அமைப்புகள் உருவாகிக்கொண்டுதானிருக்கும்.
பனிக்குள் நெருப்பாக அன்றாடம் இயங்கிவரும் பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. அங்கு வாழ்ந்துவரும் வடபுலத்தைச்சேர்ந்த மக்கள் மத்தியில் வட்டுக்கோட்டை, சித்தங்கேணி ஊர்ச்சங்கங்களும் உருவாகி பல சமய பொதுப்பணிகள் பிரான்ஸிலும் அவர்களின் ஊர்களிலும் தொடருகின்றன.
அவர்களின் பேராதரவு பின்னணியில்தான் புலவர்மணி பண்டிதர் .மயில்வாகனனாரின் நூற்றாண்டுவிழா வெகுகோலாகலமாக நடந்தது.
எனது பாரிஸிற்கான  பயணமும்  புலவர்மணி பண்டிதர் .மயில்வாகனனாரின் நூற்றாண்டு விழாவுக்கானது என்பதை முதல் அங்கங்களில் குறிப்பிட்டுள்ளேன்.  பண்டிதர் பன்னூலாசிரியர். இவர் குறித்து யாழ். பல்கலைக்கழக முன்னாள் மாணவியும் தற்போது யாழ். அராலி சரஸ்வதி வித்தியாலய ஆசிரியையுமான லயந்தினி பகீரதன், 2014 ஆம் ஆண்டில் ஆய்வுசெய்துள்ளார்.

தமிழ் வளர்த்த சான்றோர் விழா 27/04/2019












இலங்கைச் செய்திகள்


கிளிநொச்சியில் வாள்வெட்டு தாக்குதல்: நான்கு பேர் வைத்தியசாலையில்

ஆவா குழுவை சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தில் 8 பேர் யாழில் கைது


கிளிநொச்சியில் வாள்வெட்டு தாக்குதல்: நான்கு பேர் வைத்தியசாலையில்


16/04/2019 கிளிநொச்சி கல்லாறுப்பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற வாள் வெட்டுச்சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்து கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


நடேசனின் கானல் தேசம் – இனப் போரின் அறியாத பக்கம் - எம்.கே.முருகானந்தன்

.


நான் கனவிலும் நினைத்திருக்க முடியாத ஒரு காரியம் சாத்தியமாயிற்று. அவுஸ்திரேலியா, மலேசியா, தமிழ்நாடு, வடஇந்தியா என முற்றிலும் எதிர்பாராத ஒரு குறுகிய பயணம் சில நாட்களுக்குள் நடந்தேறியது. சாதாரண மக்களை மட்டுமின்றி, சில உயர் அதிகாரிகளையும் பிரமுகர்களையும் கூட சந்திக்க முடிந்தமை என் அதிர்ஸ்டம்தான். அதற்குள் சற்று சுவார்சியமான விடயமாக வெள்ளைக்காரி போல தோற்றமளித்த ஒரு இளம் பெண்ணின் கறுத்த முலைகளைக் பார்த்து அவள் ஒரு ஜிப்ஸிப் பெண் என்பதை உறுதிப்படுத்தவும் முடிந்தது.
இவை யாவும் நொயல் நடேசனின் உபயத்தில் அவரது கானல் தேசம் நாவல் ஊடாக கிடைத்தது. எமது விடுதலைப் போராட்ட வரலாற்றின் பின்னணியில் எழுந்த பல படைப்புகளைப் படித்திருப்பீர்கள். நானும் நிறையவே படித்திருக்கிறேன். நேரடி அனுபவங்களும் நிறையவே உண்டு.
துப்பாக்கி ரவைகளும், எறிகணைத் தாக்குதல்களும் விமானக் குண்டு வீச்சுகளும் இலக்கின்றித் தாக்கி அப்பாவி உயிர்களை காவு கொண்ட கொடுரமான அனுபவங்கள் மறக்க முடியாதவை. சிகிச்சை அளிக்க நேர்ந்ததும் உண்டு. நோயாளியாகாமல் மயிரிழையில் தப்பியதும் உண்டு. இதுவரை படித்த ஈழத்து விடுதலைப் போராட்டம் சம்பந்தமான இலக்கியங்கள் யாவுமே நாம் அனுபத்தில் அறிந்த விடயங்களையே அழகியல் முலாம் பூசிய இலக்கியப் படைப்புகளாக ரசிக்க நேர்ந்தது.
ஆனால் நடேசனின் படைப்பு முற்றிலும் மாறுபட்டது. அது பேசும் பொருள் புதிது, அதன் நிகழ்ப்புலங்கள் வேறுபட்டவை. அது வரையும் காட்சிகள் அந்நியமானவை. ஆனால் அது சிந்தும் வார்த்தைகளும் உவமைகளும் எமது மண்ணின் மணம் வீசுபவை.


சிட்னியில் சொல்லத்தவறிய கதைகள் விமர்சன அரங்கு 27/04/2019





திகதி : 27-04-2019   சனிக்கிழமை மாலை 4.00 மணி

இடம்பெறும் முகவரி: Suite 1, level 5, 9 Wentworth street Parramatta, N.S.W - 2150

தலைமை : திரு. திருநந்தகுமார்
வரவேற்புரை: கானா பிரபா
விமர்சன உரைகள்: கலாநிதி சந்திரிக்கா சுப்பிரமணியன் - கவிஞர் செ. பாஸ்கரன்
கலாநிதி மாலினி அனந்தகிருஷ்ணன்
ஏற்புரை : முருகபூபதி

கலை இலக்கிய ஆர்வலர்கள் அன்புடன் அழைக்கப்படுகின்றனர் letchumananm@gmail.com 04 166 25 766


வாக்களிப்போம் வாருங்கள் ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ....

.

    


              தேர்தல்தேர்தல் தேர்தலென்று 
              தெருவெல்லாம் திரிகிறார் 
             ஆளைஆளை அணைத்துபடி 
              அன்புமுத்தம் பொழிகிறார்
              நாளைவரும் நாளையெண்ணி
              நல்லகனவு காண்கிறார் 
              நல்லதெதுவும் செய்துவிட
              நாளுமவர் நினைத்திடார்  !

              மாலை மரியாதையெல்லாம்
              வாங்கிவிடத் துடிக்கிறார்
              மக்கள்வாக்கை பெற்றுவிட
              மனதில்திட்டம்  தீட்டுறார் 
              வேலைபெற்றுத் தருவதாக
              போலிவாக்கை விதைக்கிறார்
               வாழவெண்ணும் மக்கள்பற்றி 
               மனதிலெண்ண மறுக்கிறார்  ! 

               ஆட்சிக்கதிரை ஏறிவிட
               அவர்மனது துடிக்குது
               அல்லல்படும் மனதுபற்றி
                அவர்நினைக்க மறுக்கிறார்
               அதிகசொத்து பதவியாசை
               அவரைசூழ்ந்து நிற்குது
                அவரின்காசை அனுபவித்தார்
                அவர்க்குத்துதி பாடுறார் ! 

                அறத்தைப்பற்றி நினைத்திடார்
                அக்கறையை விரும்பிடார்
                இருக்கும்வரை அரசியலால்
                 எடுத்துச்சுரட்ட நினைக்கிறார் 
                வாக்களிக்கும் மக்கள்தம்மை
                போக்குக்காட்டி ஏய்க்கிறார்
                 வாக்குக்கொண்டு போகுமாறு
                 வாக்களிப்போம் வாருங்கள் ! 

கவிஞர் திரு. வித்யாசாகருக்கு குவைத்தில் "அம்பேத்கர் சுடர்" விருது..

.


கடந்தவாரம் ஞாயிற்றுக் கிழமை  மாலை ஐந்து மணியளவில் துவங்கி "குவைத்தாய்மண் கலை இலக்கியப் பேரவை" மிகச் சிறப்பாக டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தது.

அறிஞர்கள் பலரும்அனைத்து குவைத் தமிழ் மன்றங்களின் தலைவர்களும் நிர்வாகிகளும்பொறியாளர்கள்பலருமென ஒருங்கிணைந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்களோடு தொண்டர்களாகச் சேர்ந்து பிற கட்சிகள் எனும் பாகுபாடின்றி அனைத்து கட்சியினரும் ஒன்றுகூடி ஒத்துமையாய் "குவைத்,தாய்மண் கலை இலக்கிய பேரவையின்" பேரன்பில் இணைந்து விமரிசையாக இவ்விழாவை "குவைத்தின் மிர்காப் நகரில்" கொண்டாடியது.

உலகம் சுற்றிய வாலிபர் கவிஞர் அம்பிக்கு 90 வயது ! - முருகபூபதி

.

உலகம் சுற்றிய  வாலிபர் கவிஞர் அம்பிக்கு 90 வயது !
     ஈழத்துக்கவிமணிக்கு சிட்னியில் பெருவிழா
  
                                                                                     
" தமிழுலகில் நன்கறியப்பட்ட ' அம்பி' என அழைக்கப்படும் படைப்பாளி இராமலிங்கம் அம்பிகை பாகர் என இனிய நண்பர். எழுத்துலகில் நான் பிரவேசித்த 1972 ஆம் ஆண்டு முதலாக இவரை அறிவேன். அக்காலப்பகுதியில் கொழும்பில் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் பணியாற்றினார்.
எங்கள் நீர்கொழும்புக்கும் பலதடவை வருகைதந்து இலக்கியம் பேசியவர். எமது பிரதேச ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட கல்விக்கருத்தரங்குகளிலும் உரையாற்றினார்.
இலங்கையில் வாழ்ந்த காலப்பகுதியில் அம்பியுடனான இலக்கிய உறவு ஆரம்பித்தபோதிலும், நாம் மிகவும் நெருங்கிய ஆத்மார்த்தமான நண்பர்களானது அவுஸ்திரேலியாவில்தான்.
தற்பொழுது அவர் எமது குடும்ப நண்பர். எனது செல்வங்களுக்கு கனிவான "அம்பித்தாத்தா." நான் வசிக்கும் மெல்பனுக்கு வருகைதரும்போதெல்லாம் அவர் எம்முடனேயே இருப்பார். நாமிருவரும் இரவில் நேரம் கழிவதே தெரியாமல் அதிகாலை வரையில் உரையாடிக்கொண்டிருந்த நாட்களும் பசுமையானவை. " 

உலகச் செய்திகள்


கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்குப்பின்  இடம்பெறும் முதலாவது தேர்தல் -  எவ்வாறு அமையும் : ஓர் ஆய்வு

கனடாவில் தேவாலயத்திற்குள் துப்பாக்கிச்சூடு ; ஒருவர் பலி, ஒருவர் காயம்

கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்குப்பின்  இடம்பெறும் முதலாவது தேர்தல் -  எவ்வாறு அமையும் : ஓர் ஆய்வு

15/04/2019 தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடக்க இன்னும் இரு நாட்களே உள்ளன. தமிழகத்தை பொருத்தவரை, மிகப் பெரிய தலைவர்களாக திகழ்ந்த தி.மு.க தலைவர் கருணாநிதி, அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோரின் மறைவிற்கு பிறகு நடக்கவுள்ள முதல் தேர்தல் இது.


எரிந்துபோன பாரிஸின் இதயம் -

.

ஈ பிள் கோபுரத்துக்கு முன்னரே நூற்றாண்டுகளாக பாரிஸின் சின்னமாக இருந்த நோத்ர தாம் தேவாலயம் கடந்த திங்களன்று எரிந்துபோனது. நோத்ர தாம் என்றால் புனித அன்னை என்று அர்த்தம். உலகமெங்கும் வாழும் கத்தோலிக்கர்களுக்கான புனிதத் தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்தத் தேவாலயம் வரலாற்றுரீதியாகவும் பண்பாட்டு அளவிலும் கட்டிடக் கலை சார்ந்தும் முக்கியத்துவம் வாய்ந்தது. “நோத்ர தாம் தேவாலயம் பிரெஞ்சு மக்கள் எல்லாருக்குமுரியது; இதுவரை அங்கே போயிராதவர்களுக்கும்” என்று கூறியிருக்கிறார் அந்நாட்டின் அதிபர் இமானுவேல் மெக்ரான்.
ஆறாம் ஹென்றி முடிசூடிய, நெப்போலியன் பேரரசனாகப் பதவியேற்ற இடம் இது. 1163-ம் ஆண்டிலிருந்து 1345 வரை கட்டி முடிப்பதற்கு ஒன்றரை நூற்றாண்டை எடுத்துக்கொண்ட தேவாலயம் இது.
“கத்தோலிக்கர்களின் புனிதத் தலம் என்பதைத் தாண்டி பிரான்ஸ் நாட்டின் அரசியல், சமூக, பண்பாட்டு, இலக்கிய வரலாற்றிலும் அந்தத் தேவாலயத்துக்கு இடம் உண்டு. 1793-ல் பிரெஞ்சு புரட்சி நடந்தபோது அந்தத் தேவாலயத்துக்குள் இருந்த சில மதகுருக்களின் தலைவர்கள் சிலைகளை அரசர்களின் சிலை என்று நினைத்து 27 சிலைகளின் தலைகளை பிரெஞ்சு புரட்சியாளர்கள் வெட்டினார்கள். அவை தற்போது இன்னொரு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. 1944-ல் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பாரிஸ் நகரம் விடுவிக்கப்பட்டபோது இந்தத் தேவாலயத்துக்குள்தான் பெரும் கொண்டாட்டமொன்று நடந்தது. விக்டர் ஹ்யூகோ 1831-ல் இந்தத் தேவாலயத்தை மையமாகக் கொண்டு கூனமுதுகு கொண்ட க்வாசி மோதோ என்ற கதாபாத்திரத்தைப் படைத்திருப்பார். நிறைவேறாத காதல், தியாகத்தின் உருவம் அவன். விகாரமான உருவத்துக்குள் துணிச்சலான இதயம் ஒன்று குடியிருக்க முடியும் என்பதுதான் விக்டர் ஹ்யூகோ எழுதிய ‘நோத்ர தாமின் கூனன்’ நாவலின் செய்தி” என்கிறார் பிரெஞ்சு சமூகத்தோடு தொடர்புடைய எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான வெ.ஸ்ரீராம்.

"நானே நானா" ஈழத்துக் கவிஞர் நசீமாவின் புத்தக அணிந்துரை - வித்யாசாகர்!

.
இதோ, அவள் எழுதிடாத அந்நாட்கள்..

வ்வுலகம் எத்தனையோ மனிதர்களை தலையில் தாங்கிக்கொண்டுதான் இயங்கிக்கொண்டிருக்கிறது. என்றாலும், இந்த பூமிப்பந்தின்மேல் மலரும் எண்ணற்ற பூக்கள் அன்றன்றே உதிர்கின்றன. பல வண்ணத்துப்பூச்சிகள் சிறகின் வண்ணம் சிதறி உடைகிறது. பல வண்ணமயில்கள் காலுடைந்து ஆடாமல் அடங்கி நிற்கின்றன. பல குயில்கள் கூவாமலும், மைனாக்களும் சிட்டுக்குருவிகளும் பறக்கஇல்லாது விடியும் விடிகாலையும் அன்றாட வாழ்வில் நிகழ்ந்துக்கொண்டு தான் இருக்கிறது. அப்படியொரு பெண்ணின் மனதொடிந்த பொழுதில் சூரியன் அதே தனது மஞ்சள் வானத்தை விரித்துக்கொண்டு உதித்த பல நாட்களின் கண்ணீர் கதையிது.
மனதை இரத்தம் கசியவைக்கும் தாய்மை கதறும் வரிகள் ஒவ்வொன்றும். ஒரு சுயவரலாற்றை யாருடைய கதையினைப்போலவோ எழுதியிருக்கிறார் பேரன்பு சகோதரி திருமதி நசீமா அவர்கள் என்றே எண்ணத்தோன்றுகிறது. எங்கெங்கெல்லாம் நின்று யாருக்கும் தெரியாமல் அழுதிருப்பாரோ, எத்தனை இரவுகளில் தூக்கத்தை தொலைத்துவிட்டு தனது நனைந்த தலையணையோடு அழுது புலம்பியிருப்பாரோ, இன்னும் எந்த பிறப்பில் இந்தக் கதையின் நாயாகி "திவ்யா" தன் வாழ்வை முழுதாய் கண்ணீரற்று வாழ்ந்து தீர்ப்பாளோ என்றெல்லாம் மனது கிடந்து தவிக்கிறது. கனக்கிறது.
ஒரு பெண் எத்தகைய மகத்தானவள். ஒரு பெண் எத்தனை இடர்களை, வதைகளைக் கடந்து உயிர்வாழ்கிறாள். ஒரு பெண்ணின் மனதுள் எத்தனைப்பேருக்கான ஏக்கங்கள் கொட்டித் தீர்க்க இயலாமல் நிரம்பிக்கிடக்கின்றனவோ என்றெல்லாம் மனது கதைநாயகியை எண்ணி பாடாய் படுகிறது.


இந்தியா இப்போது முன்னேறிவிட்டது! --நா.முத்து நிலவன் கவிதை

.

அப்போதெல்லாம்
வண்டியில் பெட்ரோல் திருடினார்கள்
இப்போது வண்டியையே திருடுகிறார்கள்!
அப்போதெல்லாம்
வங்கியில் கொள்ளை அடித்தார்கள்.
இப்போது வங்கியையே கொள்ளை அடிக்கிறார்கள்!
அப்போதெல்லாம்
குழந்தைகளிடம் நகை திருடினார்கள்
இப்போது குழந்தைகளையே திருடுகிறார்கள்!

அப்போதெல்லாம்
தொலைக்காட்சியில் படங்களும் செய்தியும் வந்ததோடு,
இடையிடையே விளம்பரங்களும் வந்தன
இப்போது விளம்பரங்களுக்காக வரும் தொடர்களில் 
செய்தியும் படமும் சிறிதளவு வருகிறது!

தமிழ் சினிமா - உறியடி-2 திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் தற்போதெல்லாம் பல இளைஞர்கள் சமுதாய பொறுப்புடன் திரைப்படங்களை கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் முதல் படத்திலேயே ஜாதி அரசியல் குறித்து அழுத்தமாக பேசி கவனம் ஈர்த்த விஜயகுமார், இந்த முறையும் கவனம் ஈர்த்தாரா? பார்ப்போம்.

கதைக்களம்

கெமிக்கல் இன்ஜினியரிங் படித்துவிட்டு விஜயகுமார் அவருடைய நண்பர் சுதாகர் மற்றும் ஒருவர் வேலை தேடி அலைகின்றனர். அப்போது சொந்த ஊரிலேயே கெமிக்கல் பேக்ட்ரி ஒன்றில் வேலைக்கு சேர்கின்றனர்.
அப்போது விஜயகுமார் நண்பர் ஒருவர் கெமிக்கல் தாக்கி உயிர் இறக்கின்றார். ஆனால், அதை ஒரு ஜாதி தலைவர் அரசியலாக்கி பணம் வாங்கிக்கொண்டு கம்பெனியை மீண்டும் துறக்க அனுமதி கொடுக்கின்றார்.
ஆனால், அதை தடுக்க வேண்டும் என விஜயகுமார், சுதாகர் போராட, அவர்களை கொல்லவே துணிகின்றனர். அதோடு கெமிக்கல் காற்றில் லேஸாக கலக்க, அதன் பிறகு நடக்கும் உணர்ச்சி போராட்டம் தான் உறியடி2.

படத்தை பற்றிய அலசல்

விஜயகுமார் எப்போதும் ஒரு சமூக பிரச்சனையுடன் தான் வருகின்றார், அதிலும் இந்த முறை தேர்தல் நேரம் என்பதால் போபால் விஷ வாயு தாக்குதல் மற்றும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை அதன் பின் நடந்த அரசியல், மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு என அனைத்தையும் தோல் உரித்து காட்டியுள்ளார். அதற்காக அவருக்கு பாராட்டுக்கள், அதை விட இத்தனை தைரியமாக படத்தை தயாரித்த சூர்யாவிற்கும் பாராட்டுக்கள்.
ஒரு கெமிக்கல் பேக்டரி அதனால் மக்களுக்கு ஏற்படும் விளைவு தெரியாமல், அரசியல்வாதிகள் அவர்கள் சுயலாபத்திற்காக கண்டும் காணாமல் விடுவதனால், கேஸ் லீக் ஆகி காற்றில் கலப்பது போல் ஒரு காட்சி, தமிழ் சினிமாவின் பெஸ்ட் காட்சிகளில் அதுவும் ஒன்றாக சேர்க்கலாம்.
இடைவேளை முன்பு கம்பெனியில் இருந்த கேஸ் வெளியில் கலக்குமா? கலக்காதா? என்பதன் பதட்டம் நமக்கு வர, அதன் பின் அந்த கெமிக்கலால் மக்களுக்கு ஏற்படும் நோய், பாதிப்பு குறித்து காட்டிய 20 நிமிடம் நம் மனதை மிகவும் காயப்படுத்துகின்றது.
சட்டம் வேற, நீதி வேற, இது தான் நீதி, 500 அரசியல்வாதிகள் இத்தனை கோடி மக்களின் வாழ்க்கையை நீங்க யார் தீர்மாணிப்பது போன்ற வசனங்கள் செம்ம கூர்மையாக உள்ளது, படத்தின் ஒளிப்பதிவு எல்லா காட்சிகளும் லைவ்வாக பார்ப்பது போல் உள்ளது, இசை சென்சேஷன் இசையமைப்பாளார் கோவிந்த் வசந்த், பின்னணி நன்றாக இருந்தாலும், வயலின் சத்தத்தை கொஞ்சம் அடக்கியிருக்கலாம்.

க்ளாப்ஸ்

சமீபத்தில் நாம் கண்முன் நடந்த கொடுமையை, தைரியமாக கதையாக எடுத்த விதம்.
ஒரு கெமிக்கல் பேக்டரி குறித்து கூறிய தகவல், நாமே அதற்குள் சென்று வந்த அனுபவம்.

பல்ப்ஸ்

பெரிதாக ஒன்றுமில்லை என்றாலும், சோகக்காட்சிகளில் டயலாக்கை தாண்டி இசையே அதிகம் கேட்கின்றது.
மொத்தத்தில் தேர்தல் நேரத்தில் மக்களை மேலும் சிந்திக்க வைத்து குறிப்பார்த்து அடித்திருக்கின்றது உறியடி2.
நன்றி CineUlagam