உள்ளமதை கோவிலாக்கு.. (கவிதை) வித்யாசாகர்!

கோவிலின் அமைதியைக் கொண்ட இதயங்களுக்கு
சாமியைப் புரியவில்லை,
சாஸ்திரம் சமயம் சகுனமெல்லாம் செய்ததன்
சூழ்சும தெளிவுயில்லை,
சக்கைமேல் சக்கைபோல் பாலினை
மறைத்ததாய் மூலத்தை மறைத்துவிட்டோம்
சின்னதாய் சின்னதாய் தெளிந்திட இடம்தர
மாற்றத்தை மறுத்துவைத்தோம்.,
சிலுவையோ சிவமோ சலீமோ நம்பினால்
யாதுமே தெய்வமன்றோ;
கடவுளும் கற்பிதமும் கற்பனையும்
தந்ததெல்லாம் திறவுகோல் ஒப்ப அன்றோ ?
அறிவது புரிவது அன்றைய வாழ்தலை
அடுக்கடுக்காய்க் கொண்டுபிள்ளாய்,
பிறகது புதியது உலகமே மாறிட
பழங்கதை சோதி பிள்ளாய்.,
புற்றோ மரமோ கல்லோ கைதொழு

அப்துல் கலாம் மறைவு – காத்திகா கணேசர்


தமிழ் தாய் தன் அரிய மகனை இழந்து கண்ணீர் வடிக்கிறாள். பாரதமோ தன் விலைமதிப்பற்ற ரத்தினத்தை இழந்துவிட்டது. ஆம் பாரதரத்தினை அப்துல் கலாம் இம்மாதம் யூலை 27ம் திகதி மேகாலயா மானிலத்தின் Indian Institue of Management    இல் மாணவருக்கு “Livable Planet” என்ற தலைப்பில் உரையாற்றி கொண்டிருந்த சமயம் மார்அடைப்பால் பாதிக்கப்பட்டார். ஊடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். அங்கு 7:45 மணிக்கு கலாம் காலமாகிவிட்டார் என்ற சோகச் செய்தியை கேகாலய மானில ஆளுனர் எ சண்முகம் நாட்டிற்கு அறிவித்தார். அவருக்கு மிகவும் பிடித்தமானதை செய்துகொண்டிருக்கும் போதே அவர் உயிர் பிரிந்தது. நூளைய பாரதம் எவ்வாறு அமைய வேண்டும் என கனவுகண்ட விஞ்ஞானி சிறிய சமுதாயத்தில் நம்பிக்கை வைத்தார். அதற்கு மாணவரை முறையாக வழிநடத்த வேண்டும், அவர்களே புதிய பாரதத்தை கட்டி எளுப்பும் சக்திவாய்தவர் என உணர்ந்தார். அவர்களை தட்டி எழுப்ப இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் பயணித்தார். 2020 இந்தியா எவ்வாறு அமைய வேண்டும் என்ற திட்டத்தை India – A Vision for the New Millennium  என்ற நூலாக எழுதினார்.

உலக சைவப் பேரவை (ஆஸ்திரேலியா) - சிவஞானபோத ஞானயோகப்பயிற்சி Homebush, Sydney August 2015
பறந்த பாக்குவெட்டி

.

யாராவது இறகு முளைத்து பறந்த பாக்குவெட்டியைக் கண்டீர்களா!

தமிழர்கள் மங்கலப்பொருளாக கருதுவதில் பாக்கும் ஒன்று. பாக்கை வெற்றிலையோடு சேர்த்து உண்பார்கள். இனிப்பு, புளிப்பு, உறைப்பு, கசப்பு, உவர்ப்பு, துவர்ப்பு என அறுசுவையுணவு உண்ணும் எம்மில் பலருக்கு, துவர்ப்பு சுவை எப்படி இருக்கும் என்பது தெரியாது. கொஞ்சம் சீவல் பாக்கை எடுத்து மென்று பாருங்கள். என்ன சுவையை நீங்கள் உணர்கிறீர்களோ அதுவே துவர்ப்புச் சுவையாகும். அதாவது பாக்கின் சுவை எதுவோ அதுவே துவர்ப்புச் சுவை. பாக்கை கத்தியால் வெட்டமுடியாது. பாக்கை வெட்டுவதற்கு பாக்குவெட்டியைப் பயன்படுத்துவார்கள். 

தமிழர் வீடுகளில் எல்லாம் பாக்குவெட்டி இருக்கும். பாக்குவெட்டியை இரும்பு, வெள்ளி, தங்கம் என அவரவர் வசதிப்படி வாங்கி வைத்திருப்பர். இராமச்சந்திர கவிராயர் என்ற தமிழ்க்கவிஞர் வீட்டிலும் ஒரு வெள்ளி பாக்குவெட்டி இருந்தது. அப்பாக்குவெட்டி ஒரு நாள் காணாமல் போய்விட்டது. அதைத் தேடித் தேடிக் களைத்துப் போனார். அப்பாக்குவெட்டி தனக்கு எப்படி எல்லாம் உதவியது என்பதை இராமச்சந்திர கவிராயர் ஒன்றொன்றாக நினைத்துப்பார்த்தார். அவரது கவிதை நெஞ்சில் கவிதை பிறந்தது. ஏட்டையும் எழுத்தாணியையும் எடுத்தார்

தலைப்புச்செய்திகள்


எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் சர்வதேச விசாரணையில் மாற்றமில்லையென கூட்டமைப்பு தெரிவித்துள்ளது

பிரகீத் எக்னெலிகொட கடத்தல் - முன்னாள் புலிகள் இருவரை விசாரணைக்கு உட்படுத்த அனுமதி:-

ரணிலின் புதிய நாட்டில் வடக்கு உள்ளடங்காதுää வடக்கிற்கு செல்ல வீசா தேவைப்படுமென மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.இணையம் ஊடாக செய்யப்படும் பிரச்சாரங்களை தடுக்க முடியாதென தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.முக்கிய பிரபுக்கள் பாதுகாப்பில் அதிரடி மாற்றம் செய்ய ஜனாதிபதி உத்தரவு

ஊடகங்களுக்கு பூரண சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதென மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.


ஒலித்தகடு வெளியீடு 15/08/2015  

எந்திர மாலை 2015 15.08.2015

.
இலங்கைச் செய்திகள்


அடுத்த பிரதமர் யார்?: ரணிலுக்கு 39.8 வீதம், மஹிந்தவுக்கு 27.5 வீதம் : ஆய்வில் தகவல்

டிபென்டர் ரக வாகனத்தில் ஆயுதம் கடத்திய 6 பேர் கைது

கரையோரப் பிரேதசங்களில் கடும் சூறாவளி

மஹிந்தவுக்கு எதிரான கையேடுகளை அச்சிட்ட அச்சகம் சுற்றிவளைப்பு

சிறுமியுட ன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில்; தந்தை தீக்குளிப்பு
அடுத்த பிரதமர் யார்?: ரணிலுக்கு 39.8 வீதம், மஹிந்தவுக்கு 27.5 வீதம் : ஆய்வில் தகவல்

04/08/2015 எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விட பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கே கூடுதலான ஆதரவு கிடைக்கும் என பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் மாற்றுக்கொள்கை நிலையம் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

உலகச் செய்திகள்எம்.எச். 370 விமா­னத்­தினுடை­யது என நம்­பப்­படும் இரண்­டா­வது பாகம் கண்­டு­பி­டிப்பு

இந்தியாவில் ரயில் விபத்து : 30 பேர் பலி, பலர் காயம்

மீட்கப்பட்ட விமானத்தின் பாகம் எம்.எச்.370 உடையதே : மலேசிய பிரதமர்

600 குடி­யேற்­ற­வா­சி­களை ஏற்றி வந்த படகு லிபிய கடற்­க­ரைக்கு அப்பால் மூழ்­கி­யது
எம்.எச். 370 விமா­னத்­தினுடை­யது என நம்­பப்­படும் இரண்­டா­வது பாகம் கண்­டு­பி­டிப்பு

03/08/2015 காணா­மல்­போன மலே­சிய எம்.எச். 370 விமா­னத்தினுடை­யது என நம்­பப்­படும் இரண்­டா­வது பாக­மொன்று பிரான்ஸின் இந்து சமுத்­திர தீவான றீயூ­னியன் கடற்­க­ரையில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

தமிழ் சினிமா


ஆரஞ்சு மிட்டாய்கேட்கும் போதே சுவைக்க தூண்டும் பெயரை தலைப்பாய் வைத்துக்கொண்டு, டீஸர், ட்ரெய்லரை பார்த்தவுடனே முழு படத்தையும் பார்க்கத் தூண்டும் வகையில் அமைத்து, ஒரு வித்தியாசமான கதைக்களத்தை கையாண்டு, ரசிகர்கள் எதிர்பார்ப்புக்கிடையில் வந்திருப்பதுதான் “ஆரஞ்சு மிட்டாய்”.
கதை:
108 ambulance ல் EMT வேலை பார்க்கும் ரமேஷ் மற்றும் ஓட்டுனர் ஆறு பாலாவிலிருந்து படம் ஆரம்பிக்கிறது. இதுவரை 27 முறை மாரடைப்பு வந்த (ஆம் நம்புங்கள்) முதியவரான விஜய் சேதுபதிக்கு உடல்நிலை சரியில்லை என்று அழைப்பு வர ரமேஷ், ஆறு பாலா அங்கு செல்கிறார்கள். பின் அடம் பிடிக்கும் பெரியவாரான விஜய் சேதுபதியை வண்டியில் ஏற்றிக்கொண்டு இவர்கள் படும் பாடு தான் படத்தின் மீதி கதை.
படத்தை பற்றிய அலசல்:
ஒரு முரனான அல்லது யாரும் எதிர்ப்பார்க்காத பயணத்தை எடுத்துக்கொண்டு அதில் பல சுவாரஸ்யமான சம்பவங்களை கோர்த்து, மனித உறவுககளையும் கையாண்டு மிக அழகாக தெளிவாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் பிஜு விஸ்வநாத்.
படத்தில் வரும் மூன்று பேரும் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். முதியவராக வரும் விஜய் சேதுபதி அவரின் உடல் மொழியிலும் வசன உச்சரிப்பிலும் முக பாவனைகளிலும் தான் ஒரு கைத்தேர்ந்த நடிகர் என ஆணி அடித்தார் போல் நிருபித்திருக்கிறார். இவர் ரமேஷ்மிடமும் பாலாவிடமும் வாக்குவாதம் பண்ணும் காட்சிகளில் பவுண்டரிகளாக விளாசுகிறார். அதிலும் குறிப்பாக ஆட்டோவிலிருந்து இறங்கி நடு இரவில் குத்தாட்டம் போடும் இடம் “செம கைலாசம் (விஜய் சேதுபதி) சார்”.
தன் வேலையை மிகவும் நேசிக்கும் ரமேஷ் ஒரு பொறுப்பான கதாப்பாத்திரத்தில் வந்து என்னால் இப்படியும் நடிக்க முடியும் என நிரூபித்துள்ளார். குறிப்பாக Emotional காட்சிகளில் மிக எதார்த்தமாக நடித்திருக்கிறார். இதுவரை கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கதாப்பாத்திரத்தில் நடித்த ரமேஷ் திலக்கிற்க்கு இப்படம் ஒரு திருப்பு முனையாக அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
அட்டக்கத்தியில் சிறு கதாப்பாத்திரத்தில் வந்த பாலா இந்த படத்தில் ஒரு முழு நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் வந்து தன் பங்கை நேர்த்தியாக பூர்த்தி செய்திருக்கிறார், “Welcome பாலா”. ரமேஷிற்கு ஜோடியாக வரும் ஆஷ்ரிதா தன் முதல் படமான இதில், குறைவான நேரமே வந்தாலும் தன் வேலையை சரியாக செய்திறுக்கிறார் என்றே சொல்லவேண்டும்.
தன் வசனத்தின் மூலம் படத்திற்க்கு மேலும் பலம் கூட்டியிருக்கிறார் விஜய் சேதுபதி. இதற்கு முன் தான் இயக்கிய எல்லா படங்களிலும் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த இயக்குனர் பிஜு விஸ்வநாத் இப்படத்திலும் நகைச்சுவையையும், உணர்ச்சிகளும் சரியான கலவையாக தந்திருக்கிறார். இவரே எடிட்டிங் ஒளிப்பதிவு செய்ததினால் தனக்கு என்ன வேண்டுமோ அதை கச்சிதமாக படமாக்கியிருக்கிறார்.
படத்தின் மற்றுமொரு பெரிய பலம் ஜஸ்டின் பிரபாகரனின் இசைதான் என்றால் அது மிகையாகாது. பாடல்களிலும் சரி பின்னணியிலும் சரி பின்னி எடுத்திருக்கிறார். இது போன்ற ஒரு வித்தியாசமான படைப்புகள் தான் தமிழ் சினிமாவிற்கு மற்றும் ஒரு பரிமானத்தை தரும் என்பதில் எந்த சந்தேகமமும் இல்லை.
கிளாப்ஸ்:
படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் தங்களின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியது. படத்தின் வித்தியாசமான கதைக்களமும் அதை கையாண்ட விதமும் மற்றும் ஜஸ்டின் பிரபாகரனின் இசை. படத்தின் நீளம் இரண்டு மணி நேரத்திற்க்கும் குறைவாக அமைத்ததும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. அதை தவிர விஜய் சேதுபதியின் சிகையலங்காரம்.
பல்ப்ஸ்:
சில காட்சிகளில் அழுத்தம் இன்னும் இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.
மொத்தத்தில் தந்தை-மகன் பாசத்தை மட்டும் கையாளாமல், வாழ்வில் நாம் எடுக்கும் முடிவுகள் எவ்வளவு முக்கியம் என்பதை புளிப்பு-இனிப்பு சுவையுடன் சொல்லியிருக்கும் இந்த ஆரஞ்சு மிட்டாயை அனைவரும் கட்டாயம் சுவைக்கவேண்டும்
.
Rating: 3.25/5
நன்றி cineulagam