கடவுள் மொழிபேசும் கடவுள் - இரா சத்திக்கண்ணன்

.

என் கவனம் விழ
கிட்டே
தத்தித்தத்தி ஓடிவந்து
கடவுள் மொழியில் பேசுகிறது

வா வாவென கைகள்
நீட்டுகையில்

வெட்கப்பட்டு
கண்களையும் கன்னங்களையும்
மூடிக்கொள்கிறது
அவ்வப்போது
முன்தலையையும்
மறைத்துக்கொள்கிறது

சற்று கை நகர்த்தி
இருக்கேனா ? என்று
அடிக்கடிப் பார்த்துக்கொள்கிறது

' நாழிகை ' மாலி மகாலிங்கசிவம் சந்திப்பு - முருகபூபதி

.
இங்கிலாந்து ' நாழிகை '  மாலி  மகாலிங்கசிவம் சந்திப்பு
தமிழ்  வாசகர்களை  கவரும்  அரசியல்  விமர்சனங்கள் காலத்தின்  தேவை.
                                      


அவர்  ஒரு  மின்னியல்  பொறியியலாளர்.  தனிமனித  சுதந்திரத்தின் அடிப்படையில்  தனது  மாணவப் பருவத்தில்  சாரணர்  இயக்கத்தில் இணைந்துகொள்ள   மறுத்தவர்.   அணுவாயுத விரிவாக்கத்திற்கு எதிராக   குரல் கொடுத்துவருபவர்.  பெரிய  பட்டப்படிப்புகள்  எதுவும் அவருக்கில்லை.   உயர்தர பரீட்சையில்  குறைந்த சித்திகளைப் பெற்றமைக்காக  ஆசிரியர்களினால்  ஏளனம்  செய்யப்பட்டு,  எதற்குமே   லாயக்கற்றவர்  என்று  தூற்றப்பட்டவர்.   தனது பிள்ளைகளை  தனியார்  கல்லூரிகளில்  சேர்க்கமாட்டேன்  என்று பிடிவாதமாக  இருந்தவர்.   அதனால்  மனைவியே  கோபித்துக்கொண்டு  பிரிந்து சென்றாள்.   ஆடம்பரமான  ஆடைகளை அணியவிரும்பாமல்  தொடர்ந்தும்  சாதாரண  சைக்கிளிலேயே அலைந்து   திரிபவர்.   சுருக்கமாகச்  சென்னால்  அவர்  எளிமையின் மறுவடிவம்.   ஆனால்,  அவர்  இன்று  உலகத்தை   தன்பக்கம் திரும்பவைத்திருக்கிறார்.   அவர்தான்  இங்கிலாந்தின் தொழிற்கட்சியின்   புதிய  தலைவர்  ஜெரமிகொபின் (Jeremy Corbin) .   சமீபத்தில்  பிரான்ஸில்  நடந்த  .எஸ்.   தீவிரவாதிகளின் தாக்குதலினால்  பலர்  கொல்லப்பட்டவேளையில் அந்தத்தீவிரவாதிகளை  சுட்டுக்கொல்லவேண்டாம்  என்றும் அறிவித்து   பரபரப்பை  ஏற்படுத்தியவர்.
கடந்த  சில  நாட்களுக்கு  முன்னர்  அவுஸ்திரேலியாவில்  என்னை எதிர்பாராதவிதமாக  சந்தித்த  இங்கிலாந்து  நாழிகை   இதழின் ஆசிரியர்  நண்பர்  மாலி  மகாலிங்கசிவம்  என்னிடம்  தந்த  நாழிகை இதழில்தான்   குறிப்பிட்ட  எளிமையே  வலிமையாக  வாழும் ஜெரமிகோபின்   என்ற  புதிய  கார்ல்மார்க்ஸ்  பற்றிய  கட்டுரையை படித்தேன்.

“புனித கயிலாச யாத்திரையும் எனது அனுபங்களும்” நூல் அறிமுக நிகழ்வு - V.M. தேவராஜன் “என் மனைவியுடன் நான் 2014 ஆகஸ்ற் மாதம் கைலாச யாத்திரை சென்று வந்தது தெரியும்தானே அந்த அனுபவங்களை நூல் வடிவில் வெளியிடவுள்ளேன்.  8.11.2015 அன்று பிற்பகல் 3 மணியிலிருந்து 6 மணிவரை பென்டில் ஹில் யாழ் பங்~ன் சென்ரறில் நடைபெறவுள்ளது  தவறாமல் வந்திடுங்கோ” என்று திரு பரமசாமி பஞ்சாட்சரம் எனக்கு அறிவித்தபோது இவருக்கேன் இந்த வேலை யார் போகப்போறாங்கள் என்று சலித்துக்கொண்டேன்.  ஆனால் அன்று அங்கு நான் சென்றபோது எனக்கு ஓர் பெரிய ஆச்சர்யம் காத்திருந்தது. மண்டபத்துள் 325க்கு மேல் இருக்கைகள் போட்டும் போதாமல் மண்டபத்திற்கு வெளியேயும் வீதி வரை கூட்டம் காத்திருந்தது. இது நான் எந்த புத்தக வெளியீட்டிலும் ஒஸ்ரேலியாவில் காணாத காட்சியாக இருந்தது.  எனக்குள் நினைத்தேன் “இது கைலாச யாத்திரை பற்றி அறியவேண்டுமென்ற பக்தி மேலீட்டால் வருகை தந்துள்ள கூட்டமா?” என்று.  இல்லை உண்மை அதுவல்ல. எம். ஜீ. ஆர். படத்துக்கு வரும் ரசிகர்கள் கூட்டம் போல் இது பஞ்சாட்சரம் அவர்களின் அன்பையும் பண்பையும் அறிந்தவர்கள் அவரின் அழைப்பை மறுக்க முடியாது வந்த கூட்டம் தான் அது என்று உறுதி செய்துகொண்டேன்.

தமிழ் இலக்கிய உலகில் பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை - கார்த்தியாயினி

.
தமிழ் இலக்கிய உலகில் தமிழர்களின் பண்டைய வரலாற்றுப் பெருமைகளைத் தனது ஆய்வுகள் மூலம் வெளிக்கொணர்ந்தவர்
இரட்டைக்கலாநிதி பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை அவர்கள்.

தமிழ் இலக்கிய உலகில் தமிழர்களின் பண்டைய வரலாற்றுப் பெருமைகளைத் தனது ஆய்வுகள் மூலம் வெளிக்கொணர்ந்தவர்களில் மிகவும் முக்கியமான ஒருவர் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை அவர்கள் அவரது மறைவை ஒட்டி அவரது மாணவியாக எனது நினைவுகளை இங்கே பதிவு செய்கின்றேன்
இணுவையூர் திருமதி கார்த்தியாயினி கதிர்காமநாதன்;;;;;;;;;;.

இலக்கணம் இலக்கியம் மொழி பண்பாடு வரலாறு சமயம் தொல் எழுத்துக்கலை கல்வெட்டியல் என்று பல துறைகளில் வல்லுனராக தமிழ் இலக்கிய உலகில் மிகச்சிறந்த ஆளுமையாக விளங்கிய பேராசிரியர். ஆ. வேலுப்பிள்ளை அவர்கள் அமெரிக்காவிற்  சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள தனது இல்லத்துக்; குளியலறையில் விழுந்தமையினாற் தலையிலே அடிபட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 1.11.15 அன்று காலமாகிவிட்டார். பிறப்பும் இறப்பும் இயற்கையின் நியதி. ஆயினும் எந்தத் துறையிலாயினும் சிறந்த ஆளுமையுள்ளவர்களை இழக்க நேரிடும்போது அதுவும் அவர்கள் சிறந்த குருவாக தந்தையாக இருந்து எமக்கு நல்வழி காட்டியவர்களாயின் அந்த இழப்பு ஈடு  செய்ய முடியாததொன்றாகி விடுகின்றது. அந்த இழப்புத் தருகின்ற வலியும் மிக அதிகம். 1984 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப்பல்கலைக் கழகத்தின் தமிழ் பேராசிரியராகவும் தமிழ்த்துறைத் தலைவராகவும் பேராசிரியர். ஆ.வேலுப்பிள்ளை அவர்கள் நியமனம் பெற்று வந்தபோது நானும் தமிழைச் சிறப்புப்பாடமாகக் கற்கும் மாணவியாகத் தெரிவு செய்யப்பட்டுத் தமிழ்த் துறையினுட் புகுந்தேன். 

திருக்கார்த்திகை விரதம் 25 11 2015

.

கவி விதை - 4 அம்மன் சிலை -விழி மைந்தன் --

.


அவருக்கு இரண்டு பையன்கள்.

அம்மன் கோயில் வீதியில் இருந்தது அவர் வீடு.

அந்த ஊரிலே அம்மன் ஒரு வித்தியாசமான சிலையாய் வீற்றிருந்தாள். அமுதம் பொழியும் முகம். அரைவாசி மூடிய விழிகள். செவ்விதழிலே சின்னதோர் முறுவல். நான்கு கரங்களில் ஒன்றில் நாணேற்றிய  வில் தரித்திருந்தாள். இன்னொரு கையில் சில பாணங்கள். மூன்றாம் திருக்கரத்தில் ஒரு நெற்கதிர். நாலாம் கரத்தில் நவரத்ன கலசம். பூட்டிய வில்லில் குறிவைத்த பாணத்தை  வயற்காட்டை நோக்கிப் பிடித்திருந்தாள். வில் ஏந்தி நின்ற நிலையிலும் அவள் முகத்தில் வெகுளி இல்லை. தாய்மையே பொலிந்து தரிசனம் தந்தது.

சிலப்பதிகார விழா 2015 ‏28.11.2015

.

நனவிடைதோய்தல் - பேராசிரியர் சி. மௌனகுரு

.
" நாடகக்கலை  தெரிந்தோர்  தமிழ் மக்களிடம்  மேலும் மேலும்  தோன்றவேண்டும் "
இலங்கை தமிழ்  நாடகக் கலையுலகில் சகோதரத்துவத்தைப் பேணி  வளர்த்த  பெருந்தகை குழந்தை  சண்முகலிங்கம்

எனது  பெரும்  மரியாதைக்கும்  அன்புக்குமுரிய  குழந்தை சண்முகலிங்கம், தனது  85  ஆவது  அகவையில் கால் பதிக்கிறார்.
என்னைவிட 13 வயது  மூத்தவரான  குழந்தை சண்முகலிங்கம் அண்ணனில்லாத  குறையை   யாழ்ப்பாணத்தில்  எனக்குப்  போக்கியவர்.
நான் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த பதினேழு வருடங்களையும்(1975-1992) அர்த்த பூர்வமாக்கியதில் மிக முக்கியமானவர்.
நாடக அரங்கக் கல்லூரியுடன் என்னை இணைத்துக் கொண்டதுடன் பலரை எனக்கு அறிமுகமும்  செய்துவைத்து  நான்  பல  நாடகங்கள் மேடையிடக்  காலாக   அமைந்தவர்.
அவரும்  நானும்  நெறியாளர்களாக  இணைந்து 1989 இல் மகாகவியின் புதியதொரு வீட்டினை  யாழ்ப்பாண  பல்கலைக்  கழக  கைலாசபதி அரங்கில்  மேடையேற்றினோம்.
அதில்   நடித்தவர்களுள்  சிலர்  இன்றைய  கலாநிதிகளான

ஜெயசங்கர்,  ஶ்ரீ கணேசன் .  சித்தார்த்தன், கனடாவில்  நடனப் பணிபுரியும் மாலினி   குளோபல்  தமிழ் நியூஸ்  ஆசிரியர்  குருபரன். மற்றும்  முரளி. செல்வகுமார்  எனச்  சிலர்  ஞாபகம்  வருகிறார்கள்.
இவர்கள்  இன்று  பொறுப்பான   பதவிகளில்    இருப்பதுடன்  சிறப்பான பணிகளும்   ஆற்றுகிறார்கள்.

ஹெலன்ஸ்பெர்கில் திருத் தொண்டர் விழா 29 11 15

.

மலரும் முகம் பார்க்கும் காலம் 21 - தொடர் கவிதை

.
மலரும் முகம் பார்க்கும் காலம் கவிதையின் இருபத்திரண்டாவது(22) கவிதையை எழுதியவர் டென்மார்க்கைச் சேர்ந்த படைப்பாளி திரு.இணுவையூர் சக்திதாசன் அவர்கள்.

வீணாகிப் போகும் எம் வாழ்வும் சாவுமென்று
விலகி நடக்கையிலும் வீணர்களின் நடத்தையிலே
வீணாகிப் போகிறதெம் வாழ்வு
தேனான வாழ்வென்று திரவியமாய் - நாம்
தேடியவை யெல்லாம் திட்டு திட்டாய் விட்டு
வீணாகிப் போகிறதெம் வாழ்வு

குண்டு வெடி வானைத் துளைக்க
குருதி நெடில் நாசைத் துளைக்க
நின்ற விடத்தில் நின்று சிறகு முளைக்க
வங்க கடல் தாண்டி வாழ்வெடுக்க பறந்து
தங்க சுரங்கத்து சிற்பங்களாகி
அங்கம் வருந்திப் பெற்ற குழவிகாள்

பங்கமில்லாத் தமிழை  மீட்டெடுத்து
மலரும் முகம் பார்க்கும் காலம் வரணும்

மூத்த மொழி  - எம்தமிழ்
முகம் மலரும் முகநூலால் வியர்த்த கவி
மூத்தவரும் இளையவரும் கை கோர்க்க
முடி சு10டும் நாள் பார்த்து
வெண் மேகம் தூவும் வெண் பனிக்குள்ளே
என் தேகம் புதை பேனா ? எடுப்பேனா ?

இலங்கைச் செய்திகள்


மன்னாரில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் 2247 பேர் இடம்பெயர்வு

தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது      
எம்.பி. சுமந்திரனின் குற்றச்சாட்டுகளுக்கு வட மாகாண சபை முதல்வர் பதில்

அமெரிக்காவின் 51 ஆவது மாநிலத்தை பார்க்க சமந்தா இலங்கை வருகிறாரா?

 2000 பேருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கி வைப்பு

திருமலையில் இரகசிய முகாம் : ஐ.நா.குழு

இலங்கை பெண்ணை கல்லால் அடித்து மரணத்தை ஏற்படுத்துமாறு தீர்ப்பு

தாய்லாந்து துணை பிரதமர் - ஜனாதிபதி சந்திப்பு

மன்னாரில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் 2247 பேர் இடம்பெயர்வு


அயல் நாடுகளுக்கு புலம் பெயர்ந்த தமிழர்களின் இன்றைய நிலை - தி. சுவாமிநாதன்- நாமக்கல்

.

பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் போது, காலனி நாடுகளில் கரும்புத் தோட்டங்களில் தேயிலை தோட்டங்களில் கடுமையாக உழைக்க நிறைய ஆட்கள் தேவைப்பட்டார்கள். நம் நாட்டில் இருந்து இந்தியர்கள் பலர் கப்பலில் அழைத்துச் செல்லப்பட்டனர். பஞ்சம், பொருளாதார சுரண்டல்களிலிருந்து விடுபடும் நோக்கிலும், சுய வேலை தேடியும், கைவினைத் தொழிலாளர்களாக, வியாபாரிகளாக, காலத்துக்குக் காலம் இந்தியர்கள் பல்வேறு காரணங்களுக்காக புலம் பெயர்ந்துள்ளார்கள். இவ்வாறு பிழைக்கச் சென்றவர்கள் 70-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மக்கள் கிராமப்புறங்களிலிருந்து நகர்புறங்களுக்கும் ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கும், ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கும் புலம் பெயர்வதற்குப் பல காரணங்கள் உள்ளது. இருப்பினும், பொருள் தேடல், புதிய தொழில் தொடங்குதல், உயர்தர வாழ்க்கை நாட்டம், தரமான கல்வி பெறும் எண்ணம் போன்றவை பொதுவானது. அவ்வாறு சென்றவர்களின் இன்றைய நிலையை தெரிந்து கொள்வது அவசியம். திரைக் கடலோடியும் திரவியம் தேடு என்ற முதுமொழிக்கு ஏற்ப பலநூறு ஆண்டுகளாக உலகம் முழுக்க தன் உழைப்பினை தந்து அந்தந்த நாட்டின் வளர்ச்சிக்கு தூணாய் இருந்தவர்களின் இன்றைய சு10ழல் நாடுகளின் ஜனநாயகத் தன்மைக்கு ஏற்றவாறு உலகம் முழுவதும் இன்பம், துன்பம், மகிழ்ச்சி, துயரம் கலந்தே உள்ளது. கடும் உழைப்பைக் கொடுத்தவர்கள் தங்கள் கலாச்சாரம் மொழி வளத்தை இழந்து விடும் அபாயச் சு10ழல் நிறைந்தது.

NSW தமிழ்ப் பாடசாலைகள் வழங்கும் இனிய தமிழ் மாலை 2015 - 29/11/2015ப் 

உலகச் செய்திகள்

.
பிரான்ஸில் அதி வேக புகை­யி­ரதம் கால்­வாயில் விழுந்து விபத்து : 10 பேர் பலி

 பர­ப­ரப்­பான சூழ்­நி­லையில் ஒபாமா, புட்டின் திடீர் சந்­திப்பு

பாரீஸில் ‘தற்கொலை வெடிகுண்டுடன் இருந்த பெண் தீவிரவாதி உட்பட 3 பேர் சுட்டுக் கொலை

பிரான்ஸில் அதி வேக புகை­யி­ரதம் கால்­வாயில் விழுந்து விபத்து : 10 பேர் பலி

16/11/2015 கிழக்கு பிரான்ஸ் நக­ரான ஸ்ராஸ்­போர்க்கில் அதி­வேக ரி.ஜி.வி. புகை­யி­ரதம் விபத்­துக்­குள்­ளா­கி­யதில் குறைந்­தது 10 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

எக்­க­வெர்ஷிம் நகரில் இடம்­பெற்ற பரீ­ட்சார்த்த நட­வ­டிக்­கை­யொன்றின் போதே இந்த விபத்து இடம்­பெற்­றுள்­ளது.
அந்தப் புகை­யி­ரதம் தடம்­பு­ரண்ட போது அதில் 49 புகை­யி­ரத தொழில்­நுட்­ப­வி­ய­லா­ளர்கள் இருந்­துள்­ளனர்.
மேற்படி புகை­யி­ரதம் கால்­வா­யொன்றில் விழுந்து தீப்­பற்றி எரிந்­துள்­ளது.

அவதானப் புலவர் அபூபக்கர் - பேராசிரியர் மு. அப்துல் சமது

.
தமிழ்த்துறை ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி
                  உத்தமபாளையம் – 625533
  தமிழிலக்கியப் புலமையும் இலக்கணப் புலமையும் நினைவாற்றலும் மிக்கவர்களால் நிகழ்த்தப்படும் ஓர் அரிய கலை ‘அவதானம்’
  “வாயொன்று சொல்லவும் கையொன்று செய்யவும் வாய்த்தமிழ்
   ஆயென்ற போதாத னேர்விடை கூறவும், ஆசினிக்கு
   ஈயென்ற சொல்லை யிணைக்கலம் இட்டிசை யின்னவையோ
   டேயென்ற ஆறும் அவதானம் செய்பவர் மகியைந்தவையே”
  என்று சதாவதானி செய்குத் தம்பிப் பாவலர் அவதானக் கலையை நிகழ்த்துபவர்கள் பெற்றிருக்கும் திறனை அளவிட்டுள்ளார்.
  ஒரே நேரத்தில் பல்வேறு நுட்பமான விசயங்களைக் கவனத்தில் நிறுத்தி, கேட்கும் கேள்விகளுக்குப் பதில் கூறும் விதத்தில் இக்கலை நிகழ்த்தப்படும். இறைநாம உச்சரிப்பு, கைப்பணி, அவையோடு உரையாடல், சுவைப் புலனறிவு, இலக்கிய இலக்கண விடை பகர்தல், கண்டப் பத்திரிக்கை, ஒலி வேறுபாடு உணர்தல், நெல்-கல்லெறிதலையும் மணியோசையையும் கணக்கிடுதல் என பல அம்சங்களில் ஒரே நேரத்தில் கவனத்தைச் செலுத்த வேண்டும்.
  இதில் எட்டுவிதமான அம்சங்களில் கவனகம் நிகழ்த்துவதை ‘அட்டாவதானம்’ என்றும், பத்து அம்சங்களில் நிகழ்த்துவதைத் ‘தசாவதானம்’ என்றும், பதினாறு அம்சங்களில் நிகழ்த்துவதை ‘சோடாவதானம்’ என்றும், நூறு அம்சங்களில் நிகழ்த்துவதை ‘சதாவதானம்’ என்றும் கூறுவர். இக்கலையில் ‘சதாவதானம்’ நிகழ்த்திய ஒரே புலவர் என்ற பெருமைக்குரியவர் கோட்டாறு செய்குத் தம்பிப் பாவலர் ஆவார். ஆனால் பாவலருக்கும் ஏனைய அவதானப் புலவர்களுக்கும் முன்னோடியாய் ‘அட்டாவதானம்’ நிகழ்த்தி இக்கலைக்கு உயிர் கொடுத்த பெருமை இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தைச் சேர்ந்த ‘அட்டாவதானம்’ அபூபக்கர் நயினார் புலவரையே சாரும்.
  திரு.வி. கல்யாண சுந்தரனாரின் ஆசிரியரான இலங்கை மகாவித்துவான் கதிர்வேற்பிள்ளையால் அங்கீகரிக்கப்பட்டு, அழைக்கப்பட்டு இலங்கை வண்ணார் பண்ணை மண்டப மைதானத்தில் அபூபக்கர் நயினார் புலவர் தமது அட்டாவதானத்தை நிகத்தினார்.
  இறைநாமம் கூறி அவதானப் பீடத்தில் அமர்ந்தவர் கையில் லாடச் சங்கிலியை விரல்களுக்கிடையே சுழற்றியவராக, நாவில் ‘யாமுஹியத்தீன்’ என்ற நாமம் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்க கேள்விகளுக்குப் பதில் தந்தார். ‘அரைக்கிறக்கத்தில் முளைக்கிறது எது? என்று ஒரு கேள்வி எழ ‘பருத்திக் கொட்டை’ எனப் பதில் தந்தார். ‘சுட்டும் முளைக்கிற விதை எது? என்று ஒருவர் ‘பனைவிதை’ என்று பதில் தந்தார். இதற்கிடையில் தம் முதுகின் மீது எறியப்படும் நெல்மணிகளை எண்ணி நினைவிருத்திக் கொண்டார். இடையிடையே ஒலிக்கும் மணியோசையையும் எண்ணி நினைவிருத்திக் கொண்டார். இறுதியில் எறியப்பட்ட நெல்மணிகள் எத்தனை, ஒலித்த மணியோசை எத்தனை என்று சரியாகக் கூறினார்.
  அறுபது வயதிற்கு மேற்பட்ட ஒருவர் தனது பிறந்த நாள், ஆண்டு கூறி பிறந்த கிழமை கேட்க ‘ஞாயிற்றுக்கிழமை’ எனச் சரியாக கணித்துக் கூறினார். நிகழ்ச்சி நாளன்று காலையில் பல்வேறு இடங்களில் உள்ள எட்டு கிணறுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தண்ணீரை புலவருக்குச் சுவைக்க கொடுத்து, எந்த எந்த கிணற்றுத் தண்ணீர் எனக் கூறினார். மாலையில் நிகழ்ச்சி நடைபெற்ற போது, அவற்றுள் ஒரு கிணற்றுத் தண்ணீரைக் கொடுக்க, சுவைத்து விட்டு “இது சுன்னாகத்து சோமையா கேணித் தண்ணீர்” எனச் சரியாகக் கூறி கைதட்டல் பெற்றார்.
  ஒருவர் எழுந்து ‘இறைவனை ஏத்தியிரந்து’ என்பதை ஈற்றடியாகக் கொண்டு வெண்பா பாடச் சொல்ல, உடனடியாக
  “ஆவெனும் ஈசன் அரவணையான் அக்காளை
  மாவேறச் செய்து வலம் வருங்கால் – நாவால்
  மறையவன் வாழ்த்தினான் வானவர்கள் சூழ
  இறைவனை ஏத்தி யிரந்து”
 (ஈசன் –சிவன், அரவணையான் – திருமால், மறையவன் – பிரம்மன்)
 என்ற வெண்பா பிறந்து விட்டது.
 திருக்குறள் ஒன்றினை இறுதி இரண்டடிகளாகக் கொண்டு, விதி-ஊழ் இரண்டினையும் இணைத்து வெண்பா பாடுக என ஒருவர் வேண்ட,
  “தலைவிதியை மாற்ற தலைவ ரெவரேனும்
  உலகிலில்லை என்ப துறுதி – தொலைவிலா
  ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
  சூழினும் தாமுந் துறும்”
  -என்று பாடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அவையோரின் கைதட்டல்களுக்கு இடையே மகாவித்துவான் பொன்னம்பல பிள்ளை எழுந்து,
  “பக்க மறை தேர்ந்தோர் பலரிருக்க சீருறபு
  பக்கர்நை னாப்புலவன் பண்ணிய –மிக்க நல்
  அட்டாவ தானமெனும் அற்புதத்தைப் பார்க்கிலவன்
  இட்டம் பெறாதார் எவர்”
  -என்று புலவர் அபூபக்கர் மீது புகழ்ப்பா பாடி ஏத்தினார்.
  அவதானக் கலையாலும் புலமைத் திறத்தாலும் முகவை மாவட்டத்திற்குப் புகழ் சேர்த்த பனைக்குளம் அபூபக்கர் நயினார் புலவர் அவதானக் கலையில் எழுதிய அரிச்சுவடி தான் பின் வந்த பலருக்கு அவதானக் கலையில் சாதனை நிகழ்த்த பாலபாடமானது.

தமிழ் சினிமா - ஒரு நாள் இரவில்

.

இந்திய சினிமாவில் எப்போதும் தொடர்ந்து தரமான படங்களை கொடுப்பதில் மலையாள சினிமாவிற்கும் பெரும் பங்கு உள்ளது. அந்த வகையில் மலையாள இயக்குனர் ஜோ மேத்யூ இயக்கத்தில் வெளிவந்த ஷட்டர் படத்தின் ரீமேக் தான் இந்த ஒரு நாள் இரவில்.
இத்தனை நாட்கள் எந்திரன், சிவாஜி, காக்க காக்க, என்னை அறிந்தால் என பல பிரமாண்ட படங்களை எடிட் செய்து வந்த ஆண்டனி முதன் முறையாக இப்படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.
கதைக்களம்
எந்த ஒரு பிரச்சனையையும் நிதானமாக யோசித்தால் நல்ல விடை கிடைக்கும், அப்படியிருக்க எடுத்தோம் முடித்தோம் என்றால் பட்ட பிறகு தான் புத்தி வரும் என்பதை சீட்டின் நுனிக்கு ரசிகர்களை இழுத்து கொண்டு வரும் திரைக்கதையின் மூலம் இயக்குனர் கூறியிருக்கிறார்.
சத்யராஜ் சிங்கப்பூரில் நன்றாக சம்பாதித்து சென்னையில் செட்டில் ஆகிறார், தன் மகள் நண்பர்களுடன் பேசுவதை படிப்பறிவில்லாத சத்யராஜ் தவறாக நினைத்துக்கொண்டு அவசர அவசரமாக படிக்கின்ற தன் மகளுக்கு திருமண ஏற்பாடு செய்கிறார். அப்போது தன் மனைவியுடன் ஏற்படும் தகராறில் அவரை அடித்து கோபமாக வீட்டை வீட்டு வெளியேறுகிறார் சத்யராஜ்.
இதற்கிடையில் சிங்கப்பூருக்கு செல்ல வேண்டும் என்று சத்யராஜ் சொல்லும் அனைத்து வேலைகளையும் செய்து வரும் ஆட்டோக்காரர்வருண். இவர் ஆட்டோவில் ஏறும் பீல்ட் அவுட் இயக்குனர் யூகிசேது தான் எழுதிய கதையை அந்த ஆட்டோவில் விடுகிறார். அந்த கதையை சத்யராஜின் கடையில் வைக்கிறார் வருண்.
பின் சத்யராஜின் கடையில் நண்பர்கள் பேச்சால் தண்ணியடிக்க, அன்று இரவு பாலியல் தொழிலாளியான அனுமோலை பார்த்து ஆசை கொள்கிறார். எங்கும் ரூமிற்கு செல்ல பயந்து தன் கடைக்கே அழைத்து வருகிறார்.
அப்படி வருகையில் அந்த ஆட்டோக்காரர் வருண் இவர்களை உள்ளே வைத்து சாப்பாடு வாங்குவதற்காக பூட்டி வைத்து செல்கிறார்.
அவர் குடித்துவிட்டு வண்டி ஓட்டியதற்காக போலிஸாரிடம் மாட்ட, பின் சத்யராஜ் எப்படி வெளியே வருகிறார், யூகி சேதுவிற்கு தன் திரைக்கதை புத்தகம் கிடைத்ததா? என்பதை மிகவும் சுவாரசியமாக கூறியிருக்கிறது இந்த ஒரு நாள் இரவில்.
படத்தை பற்றிய அலசல்
சத்யராஜ் கட்டப்பாவாக இருந்தாலும் சரி, ஒரு குழந்தைக்கு அப்பாவாக இருந்தாலும் சரி அசத்தி வருகிறார். அதிலும் அந்த ரூமில் மாட்டிக்கொண்டு அருகில் இருக்கும் தன் வீட்டை பயத்துடன் எட்டிப்பார்ப்பது எல்லாம் நான் சீனியர்டா..என்ற காலரை தூக்கி விடுகிறார்.
பாலியல் தொழிலாளியாக வரும் அனுமோல் சத்யராஜின் பதட்டத்தை பயன்படுத்தி பணம் வாங்க, பின் அவர் படும் கஷ்டத்தை உணர்ந்து நான் ஏன் படிக்காமல் தான் இந்த தொழிலுக்கு வந்தேன், உன் குழந்தையை படிக்க வைங்க என்று சத்யராஜிற்கு டார்ச் அடித்து வெளிச்சம் காட்டுவது வரை செம்ம ஸ்கோர் செய்கிறார்.
யூகிசேது தான் படத்திற்கு வசனம் என்பதால் அவர் வரும் காட்சிகள் அனைத்திலும் தன் ஸ்டைலிலேயே டார்க் காமெடி அள்ளி வீசுகிறார், அதோடு மட்டுமில்லாமல் பீல்ட் அவுட் ஆன இயக்குனராக ஒரு ஸ்கிர்ப்ட்டை துளைத்து விட்டு, அவர் படம் கஷ்டம் என நடிக்கவும் செய்திருக்கிறார்.
ஒரே ரூம் இரண்டு இரவு, ஒரு பகல் இதில் இரண்டாம் நாள் இரவில் சத்யராஜ் தன் தவறுகள் அனைத்தையும் உணர்கிறார், தன் நண்பர்கள் அனைவரும் நல்லவர்கள் அல்ல, நம்மை திட்டுபவர்கள் அனைவரும் நமக்கு எதிரிகளும் அல்ல என்பதை மிக அழகாக ஆண்டனி காட்டியுள்ளார்.
நவீனின் பின்னணி இசை படத்தின் பதட்டத்தை இன்னும் அதிகப்படுத்துகிறது, பிரபுவின் ஒளிப்பதிவும் ஒரு சின்ன அறையில் நம்மையும் அந்த டென்ஷனுக்குள் கொண்டு செல்ல வைக்கின்றது.
க்ளாப்ஸ்
படத்தின் திரைக்கதை, அடுத்து என்ன, அடுத்து என்ன என்று நம்மை சீட்டில் கட்டிப்போட வைக்கின்றது, படத்தில் அவ்வப்போது வரும் டுவிஸ்ட். பெண் கல்வி பற்றி ஒரு பாலியல் தொழிலாளி வாயிலாக கூறி அனைவரையும் கைத்தட்ட வைக்கின்றது.
பல்ப்ஸ்
படம் ஆரம்பித்த 20 நிமிடம் கொஞ்சம் கதை எதை நோக்கி செல்கின்றது என்பதே தெரியாமல் இருக்கிறது. மற்றப்படி ஏதும் இல்லை.
மொத்தத்தில் ஒரு நாள் இரவில் சத்யராஜ் மட்டுமில்லை படம் பார்க்கும் அனைவரையும் பதட்டத்துடன் பயணிக்க வைத்ததில்ஆண்டனி வெற்றி பெற்றுவிட்டார்.
ரேட்டிங்- 3.25/5