அடியார்க் கெளியனாய் மிளிர்ந்தார் அப்பர் !
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ...... அவுஸ்திரேலியா 


சைவத்தைச் சிவனை போற்றிடும் குடும்பம்
சன்மார்க்க வழியிலே நடந்திடும் குடும்பம்
பெண்ணும் ஆணும் பிள்ளையாய் வாய்த்தனர்
பெற்றோர் சிவனைப் பரவியே வாழ்ந்தனர் 

சிவனைச் சைவத்தை சிந்தையில் இருத்திட
பெற்றோர் நாளும் எண்ணியே வளர்த்தனர்
பெற்றோர் வழியில் பிள்ளைகள் நடந்தனர்
நற்றவச் செல்வமாய்  நன்றாய் வளர்ந்தனர்

இல்லற வாழ்வில் இணைத்தனர் பெண்ணை
நல்லதோர் துணையும் வந்தே அமைந்திட
பெற்றவர் மகிந்தார் உற்றவர் மகிழ்ந்தார்
காலனோ மகிழா கண்ணீரைக் கொடுத்தான்

இறுதிவரையில் தமிழ் ஈழக்கனவுடன் வாழ்ந்த ஈழவேந்தன் கனடாவில் விடைபெற்றார் ! முருகபூபதி


தனது வாழ்நாள் முழுவதும்  தமிழுணர்ச்சிப் பிழம்பாக வாழ்ந்தவர்  மாணிக்கவாசகர் கனகசபாபதி கனகேந்திரன் என்ற இயற்பெயரைக்கொண்டிருந்த ஈழவேந்தன்.

கனடாவில் தமது 91 ஆவது வயதில்,  உடல் நலக்குறைவினால்  அண்மையில் மறைந்துவிட்டார்.

முதல் முதலில்  அவரை, கொழும்பு மத்திய வங்கியில் 1973 ஆம்


ஆண்டு ஒருநாள் மதிய உணவுவேளையில் சந்தித்தேன்.  என்னை அவரிடம் அழைத்துச்சென்றவர் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரன்.

அக்காலப்பகுதியில் எமது சங்கம்,  தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுப்பதிப்பகத்தினை உருவாக்கியிருந்தது. அதில் ஈழவேந்தனையும் உறுப்பினராக இணைத்துக்கொள்வதற்காகத்தான் அவர் பணியாற்றிய மத்திய வங்கிக்குச்சென்றோம்.

1970 இல் நடந்த பொதுத்தேர்தலில் அறுதிப்பெரும்பான்மையுடன் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி – லங்கா சமசமாஜக்கட்சி – கம்யூனிஸ்ட் கட்சி இணைந்து கூட்டரசாங்கம்  அமைத்திருந்தது. 1972 இல் உருவான புதிய அரசியலமைப்பினால், தமிழ்த் தேசியப்பற்றாளர்கள் வெகுண்டிருந்த காலம்.

அன்றைய சந்திப்பின்போதும், அவர் தூய வெள்ளை நிற வேட்டி நெஷனல் அணிந்திருந்தார். அவர் எம்முடன் இலக்கியம் பேசாமல், தமிழ் உணர்ச்சிப்பெருக்கோடு,  உரையாற்றினார்.  அதன்பின்னரும் அவரை நான் பல தடவைகள் சந்தித்து பேசியிருக்கின்றேன்.

அக்காலப்பகுதியில் எங்கள் நீர்கொழும்பூர் இந்து இளைஞர் மன்றத்தில் பொதுச்செயலாளராகவிருந்தவர் பேரின்பநாயகம். இவர் தமிழ் அரசாங்க எழுதுவினைஞர்  சங்கத்திலும் செயலாளராகவிருந்தார். ( பின்னாளில் அமிர்தலிங்கம், மற்றும் அநுரா பண்டாரநாயக்கா ஆகியோர் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு வந்தபோது,  இவர்தான் அவர்களின் செயலாளர் )

1974 ஆம் ஆண்டு எமது இந்து இளைஞர் மன்றத்தில் நடந்த  கலைமகள் விழாவில் திருக்குறள்  சமய நூலா ?  சமூக நூலா ? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தபோது, அதற்கு தலைமை தாங்குவதற்கு செயலாளர் பேரின்பநாயகம்,  ஈழவேந்தனை அழைத்து வந்தார்.

நான் திருக்குறள் சமூக நூல் என்று வாதிட்ட அணிக்குத்தலைமை தாங்கினேன்.  நண்பர் நவரட்ணராஜா , சமய நூல் என்ற அணிக்கு தலைமை தாங்கினார்.

தமிழ் இலக்கிய பாலம் அமைப்போம் ! முருகபூபதி

“ சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம்    என்று மகாகவி


பாரதியார், சொன்னாலும் சொன்னார் !  இப்படிச்சொல்லிவிட்டதால், அதனைச் சரியாக புரிந்துகொள்ளாமல், இன்றும் எமது இலக்கிய உலகிலும், பொதுவெளியிலும் சர்ச்சைகள் தொடருகின்றன.

1983 ஆம் ஆண்டு இலங்கையில் கலவரம் வெடித்தபின்னர்,


தமிழ்நாட்டிலிருந்த எனது தந்தை வழி உறவினர்கள், எமது குடும்பத்தினரை அங்கே வந்துவிடுமாறு அழைத்தனர்.

எனது தந்தையாரும் அந்தக் கலவர அதிர்ச்சியினால், அந்த ஆண்டு  ஓகஸ்ட் மாதம் மறைந்துவிட்டார்.  தந்தையாருக்கு தமிழ்நாடு பாளையங்கோட்டையில் ஒரு பூர்வீக வீடும் இருந்தது.

தந்தையார் லெட்சுமணன், 1940 ஆண்டு காலப்பகுதியில், தனது நண்பர்கள் சிலருடன்  படகேறி வந்து புத்தளத்திற்கு அருகில் கற்பிட்டி கடல் ஏரியில் ஒதுங்கியவர்.  அதன்பின்னர் நீர்கொழும்பில்  வசித்த எனது அம்மாவை திருமணம்செய்து, இலங்கையிலேயே நிரந்தரமாகிவிட்டவர்.

தந்தையாரின் உறவினர்கள் அழைத்தமையால், முதல் தடவையாக 1984 ஆம் ஆண்டு நான் தமிழகம் சென்றேன்.  சென்னை பொது மருத்துவமனையில் ( General Hospital -   G H ) எழுதுவினைஞராக எனது தந்தையாரின் அண்ணன் மகன் பணியாற்றிக்கொண்டிருந்தார்.

எனக்கும் அண்ணன் முறையான அவரது சென்னை வீட்டுக்குச்சென்றேன். அவரின் மகன் சென்னை பல்கலைக்கழகத்தில் அப்போது படித்துக்கொண்டிருந்தார்.

அவர் என்னிடம்,  “ உங்கள் அம்மா தமிழ் பேசுவார்களா..?  “ எனக்கேட்டதும், எனக்கு  தூக்கிவாரிப்போட்டது.

 “ ஏன்…. தம்பி அப்படி கேட்கிறீர்கள்..?  “ என்று நிதானமாகக் கேட்டேன்.

   உங்கள் அப்பா, தமிழ்நாட்டிலிருந்து அங்கே வந்தவர். அதனால், நீங்கள் தமிழ் பேசுகிறீர்கள். ஆனால், உங்கள் அம்மா, ஶ்ரீலங்காதானே…!?  அவர் சிங்களப்பெண்ணாகத்தானே இருக்கவேண்டும். அதனால்தான் கேட்டேன்.  “ என்றார்.

எனக்கு சிரிப்புத்தான் வந்தது. நான் ஏதோ அவரை தவறாக கணித்துவிட்டேன் எனக்கருதிக்கொண்டு,     பாரதியாரும் சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்  “ என்றுதானே சொல்லியிருக்கிறார்.  “ என்று தனது கேள்விக்கு அவர் நியாயமும் கற்பித்தார்.

சர்வர் சுந்தரம் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 தமிழ் திரையில் சாதாரண நடிகனாக நுழைந்து மிக குறுகிய


காலத்தில் பிரபல நகைச்சுவை நடிகராக உயர்ந்தவர் நாகேஷ். நட்சத்திர நடிகர்களின் கால்ஷீட்டுக்கு தயாரிப்பாளர்கள் தவம் கிடந்த காலம் போய் நாகேஷின் கால்ஷீட்டுக்கு நட்சத்திர நடிகர்கள் காத்திருக்கும் காலம் 64ம் ஆண்டளவில் உருவாகியிருந்தது. அந்தளவிற்கு இரவு பகல் என்று நடித்து தள்ளிக் கொண்டிருந்தார் அவர். நாகேஷின் திறமைக்கும், அவருக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பிற்கும் இருக்கும் ஆதரவையும் கண்ட ஏவி மெய்யப்ப செட்டியார் அவரையே கதாநாயகனாக போட்டு படம் ஒன்றை தயாரிக்கத் தீர்மானித்தார். அவ்வாறு அவர் ஏவி எம் புரடக்சன்ஸ் சார்பில் தயாரித்த படம் தான் சர்வர் சுந்தரம்.


ராகினி கிரியேஷன்ஸ் என்ற நாடக குழுவை அமைத்து அதன் மூலம்

தான் கதை வசனம் எழுதிய நாடகங்களை இயக்கி மேடை ஏற்றிக் கொண்டிருந்த கே பாலச்சந்தரின் சர்வர் சுந்தரம் நாடகத்தையும், அதில் நாகேஷின் நடிப்பையும் பார்த்த ஏவி எம் அதனையே படமாக்க முடிவு செய்து கதை வசனத்தை மட்டும் பாலச்சந்தரிடம் எழுதி வாங்கி கொண்டார். படத்தை இயக்கும் பொறுப்பை அனுபவசாலிகளான கிருஷ்ணன் பஞ்சு இருவரிடமும் ஒப்படைத்தார்.

நாகேஷ் முதன் முதலில் ஹீரோவாக நடித்த இப் படத்தில் அவருடன் முத்துராமன், கே ஆர் விஜயா, சுந்தரராஜன், எஸ் என் லஷ்மி, எஸ் ராமராவ் , மனோரமா , ஆகியோரும் நடித்தார்கள். இவர்களுடன் எஸ் வி ரங்காராவ் ஒரு காட்சியில் நடித்திருந்தார். இவர்களுடன் ராகினி கிரியேஷன்ஸ் நாடக குழுவை சேர்ந்த சில நடிகர்களும் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்கள்.

ஏழ்மையும் , வெகுளித்தனமும் கொண்ட சுந்தரம் சினிமாவில் நடிக்கும் ஆசையால் சென்னை வந்து , அம் முயற்சியில் தோற்று ஹோட்டல் ஒன்றில் சர்வராக பணியாற்றுகிறான். தன்னுடைய தாயுடன் குடிசையில் வாழும் அவன் ஹோட்டல் முதலாளியின் மகள் ராதாவை ஒரு சந்தர்ப்பத்தில் சந்திக்கிறான்.

ராதா தன் மீது காட்டும் பரிவை காதல் என்று தவறாக புரிந்து கொள்ளும் அவன் தன்னுடைய காதலை பற்றி தன் நண்பன் ராகவனுக்கு சொல்கிறான். அது மட்டுமன்றி அவலட்சணமான தனக்கு ராதா கிடைப்பாளா என்ற ஏக்கத்தையும் அவனிடம் வெளிப்படுத்துகிறான் . சுந்தரத்தின் காதல் நிறைவேற அவனின் அந்தஸ்து உயர வேண்டும் என்று எண்ணும் ராகவன் , சுந்தரத்துக்கு சினிமாவில் சேரும் வாய்ப்பை பெற்று கொடுக்கிறான். சுந்தரத்தின் புகழ், அந்தஸ்து உயர்கிறது. அதே சமயம் ராதா ராகவனை காதலிக்கிறாள் என்ற உண்மையும் தெரிய வருகிறது.

இலங்கைச் செய்திகள்

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு 05 பில். அமெ. டொலராக அதிகரிப்பு 

வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதியால் ரூ.33,710 கோடி வருமானம் அதிகரிப்பு

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை இம்மாதம் ஆரம்பம்

நசீர் அஹமட், லக்ஷ்மன் யாபா ஆளுநர்களாக பதவிப்பிரமாணம்

யாழில் 7 ஆயிரம் அரச காணி துண்டுகள் பகிர்ந்தளிப்பு


நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு 05 பில். அமெ. டொலராக அதிகரிப்பு 

2023 உடன் ஒப்பிடுகையில் 9.8 வீத வளர்ச்சி

May 3, 2024 9:00 am 

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு 05 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

உலகச் செய்திகள்

காசா போர் நிறுத்தத் திட்டம் குறித்து ஹமாஸ் பாதக நிலைப்பாடு: தொடர்ந்து பேச்சுவார்த்தை

இஸ்ரேலுடனான உறவை துண்டிக்கிறது கொலம்பியா

பத்தா-ஹமாஸ் சீனாவில் நல்லிணக்கம் பற்றி பேச்சு

இஸ்ரேல் மீதான ஹேக் நீதிமன்ற விசாரணைக்கு அமெரிக்கா எதிர்ப்பு

இஸ்ரேல் இராணுவத்தின் உரிமை மீறல்கள் உறுதி

பல்கலை ஆர்ப்பாட்டம்: பலஸ்தீன – இஸ்ரேல் ஆதரவாளர்கள் மோதல்


காசா போர் நிறுத்தத் திட்டம் குறித்து ஹமாஸ் பாதக நிலைப்பாடு: தொடர்ந்து பேச்சுவார்த்தை

May 3, 2024 8:00 am 

காசாவில் இஸ்ரேல் படை தொடர்ந்து உக்கிர தாக்குதல்களை நடத்தி பலஸ்தீன போராளிகளுடன் கடும் மோதல் இடம்பெற்று வரும் நிலையில், போர் முன்மொழிவு தொடர்பில் தமது நிலைப்பாடு பாதகமாக இருப்பதாக ஹமாஸ் மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

சிட்னி ஸ்ரீ துர்கா தேவி தேவஸ்தானம் - லலிதா சஹஸ்ரநாம ஹோமம் - 12 மே 2024, ஞாயிறு (காலை 9 மணி-1 மணி)


லலிதா சஹஸ்ரநாமம் உங்களுக்கு நம்பிக்கை, ஆரோக்கியம் மற்றும் நோய்கள் மற்றும் கிரஹ தோஷங்களிலிருந்து விடுபட உதவுகிறது.

உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு சாதகமான எதையும் செய்ய மற்றும் அடைய உங்களை அனுமதிக்கிறது.

இந்த ஆற்றல் தேவிக்காக உழைக்க உங்கள் சொந்த சுய நம்பிக்கை, நம்பிக்கை மற்றும் உறுதியை உருவாக்குகிறது

ஆச்சார்யா ஜெயந்தி விழா - ஞாயிற்றுக்கிழமை 12 மே 2024

 
ஸ்ரீ ஆதி சங்கரர்
ஸ்ரீ ராமானுஜர்
ஸ்ரீ மத்வாச்சார்யா

இந்து மதத்தின் மூன்று முக்கிய துறவிகள் / தத்துவஞானிகளைக் கொண்டாடவும், கௌரவிக்கவும், "ஆச்சார்யா ஜெயந்தி" SVT இல் நடத்தப்படுகிறது.
பூஜை விதானம் காலை 10.00 மணிக்கு சங்கல்பத்துடன் துவங்குகிறது, அதைத் தொடர்ந்து மார்கழியில் உள்ள ஸ்ரீ.ஆதி சங்கரர் & ஸ்ரீ ராமானுஜருக்கு அபிஷேகம் & அலங்காரம்.
குருமூர்த்திகள், ஸ்ரீ ஆதிசங்கரர், ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீ மத்வாச்சாரியார் ஆகியோருக்கு சிறப்பு அர்ச்சனைகளும், அதைத் தொடர்ந்து மகா தீபாராதனையும், திருவீதி உலாவும் நடந்தது.
விழாக்களில் கலந்து கொண்டு எல்லாம் வல்ல இறைவன் மற்றும் குருக்களின் ஆசியைப் பெற அனைவரையும் வரவேற்கிறோம்.
இடம்:  SVT Marquee
நேரம்: காலை 10.00 மணி முதல்.