மரண அறிவித்தல்


தோற்றம்  : 06-11-1939       மறைவு  : 26-04-2021

திருமதி மங்களதேவி நித்தியானந்தன் 

வல்வையை பிறப்பிடமாகவும் சிட்னி ஒஸ்திரேலியாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி மங்களதேவி நித்தியானந்தன் 26/04/2021 சித்திரை பௌர்ணமியன்று முருகனடி சேர்ந்தார்.  இவர் காலஞ்சென்ற ஓவசியர் ஒப்பிலாமணி சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அருமைப் புதல்வியும் இலங்கை கட்டிட திணைக்கள இளைப்பாறிய பொறியியளாளர் சிதம்பரப்பிள்ளை நித்தியானந்தனின் அன்பு துணைவியாரும் ஒஸ்திரேலியாவில் வதியும் பிரபாலினி, சுபோதினி, வினோதினி இங்கிலாந்தில் வதியும் தயாளினி, பிரபாலன், இலங்கையில் வதியும் ஜெகேந்திரன் ஆகியோரும் அருமை தாயாரும்  ராமமூர்த்தி, விஜயஸ்ரீ, கோபிஷங்கர், ராதாகிருஷ்ணன், மைத்ரேகி, ஜெயலஷ்மி ஆகியோரின் பாசமிகு மாமியும் ரவீந்திரன் (People's Bank), காலஞ்சென்ற புவீந்திரன், காலஞ்சென்ற மகாமணிதேவி, காலஞ்சென்ற சிவனேந்திரன், தெய்வேந்திரன் ஆகியோரின் அன்பு சகோதரியும் பரதன், நகுலன், நிவேதித், மிஷாலி, அஸ்மிதா, ஆரண்யா, ஷப்னா, விஜித், ஹாரணி, விதேஷ் ஆகியோரின் அருமை பேத்தியும் ஆவார். 

அன்னாரின் பூதவுடல் இறுதி அஞ்சலிகளுக்காக 28/04/2021 புதன்கிழமை மாலை 5 மணியிலிருந்து 7 மணி வரை Allan Drew Chapel, 221 Old Northern Rd., Castle Hill NSW 2154 இல் வைக்கப்பட்டு 29/04/2021 வியாழன் காலை 9 மணியிலிருந்து 11 மணி வரை 60, McMillan CCT, Kellyville NSW 2155 இல்லததில் ஈம சடங்குகள் நடைபெற்று மதியம் 12.15 இலிருந்து 2.15 வரை இறுதி கிரியைகள்  Palm Chappel, Macquarie Park Crematorium இல் நிறைவுபெற்று தகனம் செய்யப்படும்.

அன்னார் தனது இறுதி அஞ்சலிககு மலர் வளையங்களை தவிர்த்து காருண்ய தொண்டுகளை ஆதரிக்க வேண்டினர் என்பதனை அறியத்தருகின்றோம்.

தகவல்களுக்கு:

ஒஸ்திரேலியா:
பிரபாலினி     +61 437 025 633
சுபோதினி     +61 439 898 477
வினோதினி   +61 433 259 173

இங்கிலாந்து:
தயாளினி       +44 75 9532 1290
பிரபாலன்       +44 78 7871 5285

இலங்கை:
ஜெகேந்திரன் +94 760 184 912

 

அஞ்சலிக்குறிப்பு : நூறாண்டு காலம் வாழ்ந்து விடைபெற்ற திருமதி மகேஸ்வரி சொக்கநாதர் அம்மையார் ! முருகபூபதி



இந்த அஞ்சலிக்குறிப்பினை குற்றவுணர்வுடனேயே பதிவுசெய்கின்றேன்.

கடந்த ஆண்டு ( 2020 ) ஓகஸ்ட் மாதம் 06 ஆம் திகதிதான்  எமது மதிப்பிற்குரிய திருமதி மகேஸ்வரி சொக்கநாதன் அம்மையாரின் நூறாவது பிறந்த தினத்தை  அவரது  மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப் பிள்ளைகள், மற்றும் உறவினர்கள், குடும்ப நண்பர்கள், முன்னாள் மாணவர்கள் அனைவரும்  மானசீகமாக வாழ்த்திக்கொண்டாடியதை அறிந்திருந்தேன்.

எலிஸபெத் மகாராணியாரும் அம்மையாரை வாழ்த்தி சான்றிதழ் வழங்கியிருந்தார். அவுஸ்திரேலியப்பிரதமர்,  ஆளுநர் தம்பதியர் உட்பட  நாடாளுமன்ற உறுப்பினரும்  வாழ்த்தியிருந்தார்.

சமூகத்திற்கு பயன்மிக்க பணிகளை மேற்கொண்டவர்கள் பற்றி, முடிந்தவரையில் அவ்வப்போது அவர்கள் வாழும் காலப்பகுதியிலேயே எனது அவதானக்குறிப்புகளை எழுதிவந்திருக்கின்றேன்.

எனினும்,   எனது கணினியில் நேர்ந்த வைரஸ்  தாக்கத்தினால், அம்மையாரின் படங்கள், தேடிச்சேமித்துவைத்திருந்த சில குறிப்புகள் மறைந்துவிட்டன.

பின்னர் எழுதலாம் என்று காலம் கடந்தது.  சமகாலத்தின் கொரோனோ வைரஸ் தாக்கத்தினால்  இடைவெளி பேணும் கலாசாரத்திற்கு கட்டுப்பட்டு,  வீடடங்கியிருந்து இணையவெளி அரங்குகளில் நேரத்தையும்  காலத்தையும்  செலவிட்டதனால்,  உடனடியாக அம்மையார் பற்றி எழுதமுடியாமல் போனதையிட்டு, இதனைப்படிக்கும் அன்னாரின் குடும்ப உறவுகளிடமும்,  வாசகர்களிடத்திலும் மன்னிப்பு கேட்டவாறே இந்த அஞ்சலிப்பதிவுக்குள் வருகின்றேன்.

மக்களுக்காக, குறிப்பாக மாணவர் சமுதாயத்திற்காக தமது வாழ்வை அர்ப்பணித்து சேவையாற்றுபவர்கள், வாழும் காலத்திலேயே பாராட்டி கௌரவிக்கப்படவேண்டியவர்கள். அவர்கள் மறைந்த பின்னர்  பாராட்டுவதும்,   விருது வழங்கி கௌரவிப்பதும் எம்மை நாமே திருப்திப்படுத்திக்கொள்ளும் சுயவிருப்ப இயல்புதான்.

எனினும்,  மறைந்தவர்களின் ஆன்மா எங்கிருந்தாலும்,  பார்த்துக்கொண்டிருக்கும்  என்ற குருட்டு நம்பிக்கையுடனயே மறைந்தவர்கள் பற்றிப்பேசி கொண்டாடி வருகின்றோம்.

அன்புச் சகோதரரின் அருமையான அரங்கேற்றம்


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் மெல்பேண் .... அவுஸ்திரேலியா                

 

   முகக்கவசம் களைந்து முறுவலுடன் சபை விளங்க அன்புச்


சகோதரரின் மிருதங்க  அரங்கேற்றம் மெல்பேண் மாநகரில் றோவில் பாடசாலை மண்டபத்தில் 17-04-2021 சனிக்கிழமை அன்று சிறப்பாக நடைபெற்றது. மேடை அலங்காரம் யாழ்மண்ணை நினைவில் கொண்டுவந்து நிறுத்தியது. மேடையின் முகப்பு கோவில்களின் மண்டபங்களில் காணப்படும் யாளியினைக் கொண்டதாய் வண்ணமாய் ஜொலித்தது. மேடையின் பின் அணியாகப் பெரியதாய் எம்பெருமான் சிவனின் உருவம் அழகான வண்ணத்தில் ஆசி வழங்குவதாய் மிளிர்ந்தது. பின்பக்கமாக அரங்கின் இரு மருங்கும் வாழவைக்கும் வாழைகள் வைக்கப்பட்டிருந்தன.வாழைகளின் நடுவில் பச்சையினைவெளிப்படுத்தும் பாங்கான செடிகள் பக்குவமாய் அழகினை மெருபடுத்தி நின்றன. மேடையின் முன்னே மங்கலாமாய் மஞ்சள் நிற மலர்கள் வட்டமாய் கோலமிட கோலத்தின் நடுவே - தேவ சபையில் சிவனினாரின் திருநடனத்துக்கு லயத்தைக் கொடுத்து மிருதங்கம் முழங்கும் நந்தியெம்பெருமானின் வெண்கல வடிவம் வைக்கப்பட்டிருந்தமையினப் பாராட்டியே ஆக வேண்டும்.விநாயகப்  பெருமானும் கல்வித்  தெய்வமான கலைமகளும் மங்கல விளக்குகள் மத்தியில் மேடைக்குக் காவலாய் அரங்கேற்றத்துக்கு அரணாக வைக்கப்படிருந்தமை பக்தியின் பரவசத்தை நல்கியது எனலாம்.

இன்னிசை இரட்டையர் நதீம் – ஷ்ரவன் சில குறிப்புக்கள் - கானா பிரபா


கானா பிரபா

“ஆண்டவனின் தொழிற்சாலையில் அரிதாக விளைந்த படைப்பு பாலுஜி”

என்று எஸ்,பி.பாலசுப்ரமணியம் அவர்களது மறவில் நினைவு கூர்ந்தவர் நதீம் ஷைஃபி. இவர் ஹிந்தித் திரையிசையில் முக்கிய பாங்காற்றிய இரட்டை இசையமைப்பாளர்களான நதீம் - ஷ்ரவன் கூட்டில் ஒருவர்.
ஷாஜன் படப் பாடல்கள் வெளிவந்து 31 வருடங்களாகி விட்டது. அந்தப் பாடல்களில் பெரும் உச்சம் பெற்ற Dekha Hai Pehli Baar https://www.youtube.com/watch?v=PEbSW6mMWvE
பாடலைப் பதிவாக்கியதே புத்தாண்டு தினத்துக்கு முன் தினம். தானாம். நகரமே புத்தாண்டுக் களியாட்டத்தில் இருந்த போது எதிர்காலத்தில் இந்த உலகமே கொண்டாடப் போகும் பாடலை எஸ்பிபி ஒலிப்பதிவுக் கூடத்தில் கொண்டாடிக் கொண்டிருந்தார்.
அவர் வாத்திய இசைக் கருவிகளில் ஒன்றானவர் என்று தன் நினைவுகளை மீட்டிப் பார்த்தவர் ஷ்ரவன்.
இளையராஜா காலத்துக்குப் பின் ஹிந்திப் பாடல் மோகம் என்பதன் வீச்சு தமிழ்ப் பாடல்களில் அந்நியபட்டிருந்தாலும், தமிழ் ரசிக உலகு முற்றிலும் அதை ஓரம் கட்டி விடவில்லை. அவ்வப்போது அவற்றைக் கொண்டாடி மகிழ்ந்தார்கள். அதுவும் எஸ்பிபாலுவின் பாலிவூட் பாடல்களை நம்மாளின் பாடல்களாகக் கொண்டாடிக் கொண்டோம்.

பிருந்தா சாரதி கவிதை

 .



நேசிப்பவர்களை உதாசீனப்படுத்துவதும்
உதாசீனப்படுத்துபவர்களை
நேசிப்பதுமாகவே ஓடிவிட்டது
இத்தனைக் காலம்.
ஒரு ரோஜாப் பூவைப் பறிப்பதற்காக
ஆயிரம் முறை விரல்களைக்
குத்திக்கொண்டாலும் இந்தக் கைகள்
மீண்டும் மீண்டும்
அந்த ரோஜாவையே தேடிப் போவதேன்?
அந்த அறிவீனத்தையாவது விட்டுவிடுவோம்...
நிராகரிக்கப்படுவதன் அவமானத்துக்காவது
அஞ்ச வேண்டுமல்லவா?
வெட்கமே இல்லாமல்
மூடிய வாசலில் முன்னால்
இதயத்தை ஏந்தி
இத்தனைக் காலம் நான் நிற்பதேன்?

எழுத்தும் வாழ்க்கையும் - அங்கம் 38 புறக்கணிப்புக்கும் அங்கீகாரத்திற்கும் மத்தியில் தேடிய உண்மைகள் ! எத்தனை கோணம்…? எத்தனை பார்வை…? முருகபூபதி



தமிழ் சமூகத்தில் வாழும் தமிழ் எழுத்தாளருக்கு அவரது குடும்பத்தில் எத்தகைய அங்கீகாரம் கிடைக்கிறது என்பது அவரவர்க்கே வெளிச்சம்.

இதுவிடயத்தில் மகாகவி பாரதிக்கு நடந்தது பரகசியம் !

கேரள எழுத்தாளர் தகழி சிவசங்கரன் பிள்ளை இந்திய சாகித்திய அக்கடமி விருது பெற்றவர் என்ற தகவலே தெரியாமல் வளர்ந்தாள் அவரது மகளான கல்லூரி மாணவி.

கணவர் பெரிய எழுத்தாளராக இருப்பார்.  மனைவி அதனைக்கண்டுகொள்ளமாட்டார்.  மனைவி பெரிய எழுத்தாளராக இருப்பார், கணவன் அது குறித்து அலட்டிக்கொள்ளமாட்டார்.

எழுத்தாளரின் பிள்ளைகள் அங்கீகரித்தால் அதுவே பெரிய பாக்கியம்தான்.


எனது வாழ்வில் அங்கீகாரமும் புறக்கணிப்பும் நிகழ்ந்திருக்கின்றன.

சிறுவயதில் தாத்தா பாட்டியிடம் கதை கேட்டு வளர்ந்தமையால், பின்னாளில் எழுத்தாளனாகிவிட்டேன்.

பால்ய வயதில்  பாடசாலைப்புத்தகங்கள் தவிர வேறு எதுவும் படிக்க வீட்டில் அனுமதி இல்லை. எங்கள் ஊரில்  கடலும் நதியும் சங்கமிக்கும் பகுதியில் முன்னக்கரை  என்ற  இடத்தில் வசித்த கணித ஆசிரியர் டேவிட் அவர்களிடம் மாலைவேளைகளில் ரியூஷனுக்கு செல்லும்போது, தென்படும் மாநகர சபையின் பொது நூலகத்திற்குள் எனது  கால்கள் என்னையறியாமலே சென்றுவிடும்.

அங்குதான் ஆனந்தவிகடன், கல்கி, கலைமகள், கல்கண்டு, கண்ணன்  படித்தேன். அதில் வந்த தொடர்கதைகள் எனது விருப்பத்திற்குரியவை.

1970 இற்குப்பின்னர் எழுத்தாளனாகியதை  எனது  அம்மா விரும்பவில்லை.  பாடசாலை பருவத்தில் தமிழ்ப்பாட ஆசிரியர் சுஃபியான் அவர்கள், சிறுகதை எழுதும் பயிற்சி தந்தபோது நான் எழுதிய முதல் கதை சிறு துளி பெருவெள்ளம். அந்தத்தலைப்பினை தந்தவரும் அவர்தான். வகுப்பில் எனது கதையைத்தான் சிறந்தது என்று பாராட்டி எழுதி தனது கையொப்பமும்  இட்டிருந்தார்.

அம்மாவிடம் காண்பித்தபோது, பெரிய எழுத்தாளனாகத்தான் வருவாயோ..? என்று அம்மா மனதிற்குள் குமைந்தார்களா..? அங்கீகரித்தார்களா..? என்பது புரியவில்லை.

வைத்தீசுவரக்குருக்கள் அவர்களின் ஆறாவது ஆண்டு நினைவு அஞ்சலி


   ……. பல்வைத்திய கலாநிதி; பாரதி இளமுருகனார்



சீவன்முத்தராகத் திருத்தக வாழ்ந்த வைத்தீசுவரக்குருக்கள ‘அண்டமெலாம் அருள்விரிக்கும் அந்தி வண்ணன் அருட்சோதி தனிற்கலந்தார் தெய்வந்; தானே’ என்று நான் அவரின் பிரிவை ஆற்றாது யாத்த கவிதைகளிலே அவர் ஒரு சீவன்முத்தராகவே வாழ்ந்து பிறவாப் பேரின்னமுற்றார் என்பதைக் குறிக்கும் இறுதிக்கட்ட நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டியுள்ளேன். சித்தர்கள் தாங்கள் சமாதி அடையும் கால நேரத்தை முன்கூட்டியே தங்களின் சீடர்களுக்கு அறிவிப்பதைப் போலவே வைத்தீசுவரக்குருக்கள் ஐயா அவர்களும் செயற்பட்டவிதம் அவரை ஓர் சீவன்முத்தரெனவே கொள்ளவேண்டியுள்ளது. குருக்கள் ஐயா அவர்கள் முத்தியடைந்த ஆறாவது நினைவு ஆண்டிலே அந்தக் கவிதைகளை வாசகர்களுடன் பகிர்வதிலே மகிழ்வடைகிறேன்.

 

நிலைக்காத உடல்நீத்து ஆவி பிரியுமுன்.

  நினைந்துருகி வழிபடுந்தன் கூத்த னாரின்

கலைக்கோலக் குடமுழுக்குக் காட்சி காணக்

  காததூரம் பலசெல்ல விழைந்த குருக்களை

அலைக்காது அன்றிரவு அதிசய மாயவர்

  அறையிருந்தே முழுநிகழ்வைப் பார்த்தின் புறவே

தொலைக்காட்சி ஒலிபரப்புச் செய்த தென்றால்

  சுந்தரேசப் பெருமானருள் சொல்லப் போமோ?.

 

உற்றநண்பன் இளமுருகன் உவந்தே யாத்த

  ஒப்பரிய சிதம்பரபு ராணத் திற்குக்

கற்றறிந்த புலவோரும் நாணா நிற்கக்

  கலைமகளின் அருள்பெற்று உரைவி ரித்த

பொற்புமிகு பரமேசுவரி அம்மை யாரின்

  புகலரிய நல்வாழ்க்கைச் சரிதம் எழுதி

அற்புதத்தல புராணமதிற் சேர்க்கத் தாரீர்

  அவசரமிது” எனவெனக்குப் பணித்தவ ரெங்கே?

அந்தரங்கம் நூல் விமர்சனம் 01/05/2021 9.30pm (AEST)



மெல்பனில், நடேசனின் நான்கு நூல்களின் வெளியீட்டு அரங்கு

 


அவுஸ்திரேலியா மெல்பனில் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட தென்னாசிய சங்கத்தின் ஏற்பாட்டில் எழுத்தாளரும் சமூகப்பணியாளருமான நடேசனின்  நான்கு நூல்களின் வெளியீட்டு அரங்கு,  எதிர்வரும் மே மாதம் 02 ஆம் திகதி                  ( 02-05 – 2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணிக்கு  கிளன்வேவெலி RSL  மண்டபத்தில்

(RSL Glen Waverley)  161 Coleman Parade, Glen Waverley VIC 3150 நடைபெறும்.

ஏற்கனவே வெளிவந்த நடேசனின் அசோகனின் வைத்திய சாலை ( நாவல் ) நூலின் ஆங்கில மொழிபெயர்பு King Asoka Veterinary Hospital, புதிய சிறுகதைத் தொகுதி அந்தரங்கங்கள், சிறுகதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு Veterinary Vignettes, சிறுகதைகளின் சிங்கள மொழிபெயர்ப்பு உமத்துவுவாத் ஒஹு  பிரிமியெக்கி  ( கிறுக்கனாயினும் அவனும் ஆண்மகன்தான் ) ஆகிய நூல்களே வெளியிடப்படவுள்ளன.

பேராசிரியர் கௌசல் சிறிவஸ்ரா தலைமையில்


இடம்பெறவுள்ள இந்நான்கு நூல்களின் வெளியீட்டு அரங்கை கலைஞரும் எழுத்தாளருமான மாவை நித்தியானந்தன்  நெறிப்படுத்துவார்.

சிங்கள – ஆங்கில எழுத்தாளர் கலாநிதி ஷண்ண விக்கிரமசேகர, கலாநிதி சமன் கரசின் ஆராச்சிகே,   வானொலி ஊடகவியலாளர் திருமதி டில்ருக்‌ஷி விஜேசூரிய , இலக்கிய ஆர்வலர் திரு. அசோக்குமார் ஆகியோர் நூல்களை அறிமுகப்படுத்தி உரையாற்றுவர்.

நடேசன் ஏற்புரை வழங்குவார்.

அந்தணராய் பிறந்த சிந்தனையாளர் உமாபதி சிவாச்சாரியார்


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
 மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் மெல்பேண் ... அவுஸ்திரேலியா

 

      உமாபதி சிவாச்சாரியார் என்றதும் நினைவுக்கு வருவது   " திருவருட்பயன் " என்னும்


உயரிய நூலாகும். அவரால் பல நூல்கள் ஆக்கப்பட்டாலும் என் நினைவில் பதிந்திருப்பது " திருவருட்பயன் " என்றே சொல்லுவேன். உலகில் எந்த ஒரு நாட்டிலும் இல்லாத நல்லதொரு பாடத்திட்ட அமைப்பு இலங்கை
 யில்த்தான் இருக்கிறது. அதாவது சமயபாடம் பாடத்திட்டத்தில் இணைந்திருப்பதேயாகும். இந்தியா சமயங்கள் பிறந்த இடமென்றும் ,வேதங்கள் தோன்றிய இடமென்றும்அருளாளர்கள் பலர் அவதரித்த இடமென்றும் திரு முறைகள் எழுந்த இடமென்றும் திரும்பிய பக்கமெலாம் ஆலயங்கள் அமைந்திருக்கும் இடமென்றும் விதந்து போற்ற ப்படுகிறது என்பது உண்மைதான். ஆனால் அந்த நாட்டில் சமயம் பாடசாலைகளில் பாடமாகக் கற்பிக்கப் படுவதில்லை. அதனால் அங்கு கற்கின்ற மாணவர்களுக்கு திருமுறைகளோ அல்லது உமாபதி சிவாச்சாரியார் போன்ற தத்துவ வித்தகர் களையோ அறியும் வாய்ப்பு என்பது இல்லை என்றே சொல்லலாம். ஆனால் இலங்கையில் இருக்கின்ற தமிழ்ப் பிள்ளைகளுக்கு குறிப்பாகச் சைவப்பிள்ளைகளுக்கு சைவசமயத்தைப் பற்றிய பல விஷயங்கள் சிறிய வகுப்பிலிருந்தே ஊட்டப்படுகிறது என்பது மனங்கொள்ளத் தக்கதாகும்.

  உமாபதி சிவாச்சாரியரைப் பற்றி எழுதவந்து விட்டு என்ன கதையா சொல்லுகிறீர்கள்


என்று எண்ணிவிடாதீர்கள். கதையல்ல கருத்துட ன்தான் பயணிக்கிறேன். க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு சைவசமய பாடம் முக்கியமானதாகும். அந்தப் பாடத்தில் " திருவருட்பயன் " என்பது கட்டாயம்
 படிக்கவேண் டிய நிலை இருந்தது. 1963 ஆம் ஆண்டில் நான் க.பொ. த. சாதாரண வகுப்பில் படிக்கும் பொழுது திருவருட்பயன் என்னும் பெயரினைக் கேட்டாலே கணக்கும் பாடத்தைவிட கசக்கும் நிலை காணப்பட்டது. காரணம் திருவருட்பயனில் நூறு குறட்பாக்கள் இருக்கும்.அத்தனையும்

அரங்கு பற்றி சென்னை இந்து தமிழ் இதழில் வெளியான செய்தி

 உணர்வால், புகழால் எங்கும் நிறைந்திருக்கிறார் ஜெயகாந்தன்:

ஏப்ரில் 24 - பிறந்த நாள் கருத்தரங்கில் ஆளுமைகள் புகழாரம்

சென்னை


உணர்வாலும், புகழாலும் எங்கும் நிறைந்திருக்கிறார் ஜெயகாந்தன் என்று, அவரது பிறந்த நாள் கருத்தரங்கில் ஆளுமைகள் புகழாரம் சூட்டினர்.

எழுத்தாளர் ஜெயகாந்தனின் 87-வது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில், சர்வதேச அளவிலான இணையவழிக் கருத்தரங்கை இந்திய-ரஷ்ய வர்த்தகசபையும், ரஷ்ய கலாச்சார மையமும் இணைந்து நடத்தின.

‘இந்து தமிழ்’ நாளிதழும் எழுத்தாளுமையைக் கொண்டாடும் இந்நிகழ்வில் தன்னை இணைத்துக்கொண்டது. இதில், தமிழகம் மட்டுமின்றி, உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஜெயகாந்தன் வாசகர்கள் பங்கேற்றனர்.

ரஷ்ய கலாச்சார மையத்தின் இயக்குநர் கெனாடி ரகலேவ், திராவிடர் கழகப் பொதுச் செயலர் கி.வீரமணி, பத்மபூஷன் சிவதாணுப் பிள்ளை, திரைக் கலைஞர் நாசர், ‘இந்து தமிழ்’ நடுப்பக்க ஆசிரியர் சமஸ், கலை இயக்குநர் ஜெயக்குமார், எஸ்பிஐ காப்பீட்டு நிறுவனத்தைச் சேர்ந்த பி.பாலசேகர் ஆகியோருடன், ஆஸ்திரேலியாவிலிருந்து எழுத்தாளர் எல்.முருகபூபதி, கனடாவிலிருந்து எழுத்தாளர் மூர்த்தி, சிங்கப்பூரிலிருந்து தொலைக்காட்சி தயாரிப்பாளர் முகமது அலி, அமெரிக்காவிலிருந்து பொறியாளர் சிவகேசவன், பிரிட்டனிலிருந்து நாடகக் கலைஞர் பால சுகுமார், இலங்கையிலிருந்து எழுத்தாளர் எஸ்.மதுரகன் ஆகியோரும் பங்கேற்றனர்.

 

இந்திய-ரஷ்ய நட்புறவு

இந்திய-ரஷ்ய வர்த்தக சபையின் பொதுச் செயலரும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான பி.தங்கப்பன் பேசும்போது, “ரஷ்ய கலாச்சார மையத்தின் தூதரகப் பிரிவு, வரும் ஆண்டு பொன்விழாவைக் கொண்டாடுகிறது. இதை திறந்துவைத்த நபர்களுள் ஜெயகாந்தனும் ஒருவர். இந்திய-ரஷ்ய நட்புறவைப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்பதில் ஜெயகாந்தன் உறுதியாக இருந்தார்” என்றார்.

கெனாடி ரகலேவ் பேசும்போது, “ரஷ்யாவுக்கும், இந்தியாவுக்குமான உறவை மேம்படுத்துவதில் ஜெயகாந்தனுக்கு இருந்த ஈடுபாட்டை அனைவரும் அறிவோம்” என்றார்.

திக தலைவர் கி.வீரமணி பேசும்போது “நாங்கள் இருவரும் ஒரே ஊர்க்காரர்கள், ஒரே தெருவைச் சேர்ந்தவர்கள், ஒரே பள்ளியில் படித்தவர்கள். நேரெதிரானக் கொள்கைகளைக் கொண்டிருந்தாலும், ஒரே அளவுக்கான நட்போடு இருந்தோம். ஜெயகாந்தன் நம்மை விட்டு மறையவில்லை. இன்றைக்கும் அவர் உணர்வாலும், புகழாலும் எங்கும் நிறைந்திருக்கிறார்” என்றார்.

சிவதாணுப் பிள்ளை பேசும்போது, "ஜெயகாந்தன் உள்ளதை உள்ளபடி சொல்பவர், புரட்சிக் கருத்துகளை அச்சமின்றிப் பேசியவர், மனதைப் பண்படுத்தும் ஆசான். அவரது சொல்லாட்சி தமிழர்கள் மனதில் எப்போதும் நிலைத்திருக்கும்” என்றார்.

திரைக் கலைஞர் நாசர் பேசும்போது, "ஜெயகாந்தனுடன் நெருங்கிப் பழக முடியாததை நினைத்து வருந்தியிருக்கிறேன். ஆனால், பழக முடியாமல் போனாலும், அவர் சிருஷ்டித்த உலகில் வாழ்ந்திருக்கிறேன்” என்றார். மேலும், ஒரு நடிகராக தனக்கு ஜெயகாந்தனின் எழுத்து எப்படியெல்லாம் உதவியிருக்கிறது என்பதை நாசர் விவரித்தது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

ஜெயகாந்தனை நினைவுகூரும் நிகழ்ச்சியை, மேலும் விரிவாக நடத்த வேண்டும் என்ற திட்டத்துடன் கருத்தரங்கம் நிறைவடைந்தது.

நன்றி: இந்து தமிழ்

 

 

 

ஜெயகாந்தனும் தமிழ் சினிமாவும் முருகபூபதி


( சென்னையில் இயங்கும் ரஷ்ய கலாசார மையமும் இந்திய ரஷ்ய கலாச்சார நட்புறவுக்கழகமும் இணைந்து  ஏப்ரில் 24 ஆம் திகதி ( ஜெயகாந்தன் பிறந்த தினம் )  நடத்திய இணையவழி காணொளி அரங்கில் நிகழ்த்தப்பட்ட உரையின் முழு வடிவம் )

 


மிழ்நாட்டிலிருந்து  சினிமாவுக்காகவே வெளியான    பொம்மை  இதழில்  பலவருடங்களுக்கு    முன்னர்  அதன் கேள்வி - பதில்     பகுதியில்    ஒரு கேள்வி.  

தமிழ்     சினிமாவுக்குள்      பிரவேசித்த      ஜெயகாந்தன்      ஏன் இப்பொழுது      அதிலிருந்து     ஒதுங்கிக்கொண்டார் ?

பதில்:    தமிழ்    சினிமா எதிர்பார்ப்பதுபோல்      ஜெயகாந்தன்      இல்லை. ஜெயகாந்தன்      எதிர்பார்ப்பதுபோல்       தமிழ்    


சினிமா     இல்லை.

இந்தத்தகவலை     உயிர்மை    இதழின்     நூறாவது      இதழில்  (டிசம்பர் 2011)  திரையுலக    விமர்சகர்     தியோடர்    பாஸ்கரனின்    பின்வரும் கருத்துடன்  ஒப்பிட்டும்     பார்க்கலாம்.

 அவர்  சொல்கிறார்:

“  எழுத்தாளர்களை        நல்ல    முறையில்     ஒரு      சினிமா பயன்படுத்திக்கொள்ள      வேண்டுமென்றால்    இயக்குநர்களுக்கு    ஆழமான    இலக்கியப்பரிச்சயம்       தேவை.      எழுத்தாளர்களுக்கும் சினிமாவின்     தனி      இயல்புகள்     சாத்தியக்கூறுகள்   -    இவை   பற்றிய ஒரு     பிரக்ஞை     வேண்டும்.     அதுமட்டுமல்ல      திரையும்    எழுத்தும் தத்தம்    இயல்புகளில்    மிகவும்    வேறுபட்ட    ஊடகங்கள் என்பதையும்   உணர்ந்திருக்கவேண்டும்.      வங்காள    -    மலையாள சினிமாக்களில்      இத்தகைய     புரிதல்    இருபுறமும்   இருப்பதைக்காணலாம்.     அங்கிருந்து      வரும்     பன்னாட்டுப்புகழ்பெறும் திரைப்படங்களில்     பெருவாரியானவை      ஒரு   இலக்கியப்படைப்பையே     சார்ந்திருப்பதைக்கவனிக்கலாம்.  “நான் ஜே.கே. அவர்களை எனது வாழ்வில் இரண்டு தடவைகள்தான் சந்தித்திருக்கின்றேன்.முதல் சந்திப்பு – 1990 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம். அப்போது, அவரது ஆழ்வார்பேட்டை குடிலில் நீண்டநேரம் பேசினோம். 

யாழ் / இளவாலை Holy Family Convent இந்த 125 வது வருடாந்த நிகழ்வு

 .


நன்றி வீரகேசரி 


கதையால் பழகும் கி.ரா.!

 .

முதுபெரும் படைப்பாளி கி.ராஜநாராயணன் தனது 98-வது வயதில் கொண்டுவந்திருக்கும் புத்தகம் ‘மிச்சக் கதைகள்’. நெடிய அனுபவத்தின் தொடர்ச்சியான இந்தக் கதைகள் பற்றி கி.ரா. இப்படிச் சொல்கிறார்: “ஒரு நகை செய்யும்போது கூடவே சேதாரமும் வரும். அந்தச் சேதாரங்களையெல்லாம் சேகரித்து ஒரு நகை செய்யலாம். தங்கம் எப்போதும் வீண்போகாது!” சேதாரங்களிலிருந்து உருவாக்கியிருப்பதாகச் சொல்லும் இந்த ‘மிச்சக் கதைக’ளை அபூர்வ ஆபரணமாக மாற்றியிருக்கிறார் புதுவை இளவேனில். கி.ரா.வின் வாசகர்கள் தவறவிடக் கூடாத பொக்கிஷப் பதிப்பாக்கியிருக்கிறது ‘அன்னம்’ பதிப்பகம்.

இந்த வயதில் கி.ரா.வின் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கும் என்பதே இந்தப் புத்தகத்தை ஆரம்பிப்பதற்கு முன்பான ஆவலாக இருந்தது. அதைத் தெரிந்துகொள்வதற்கான ஒரு வாய்ப்பாகத் தோன்றியது. அந்த வகையில் நமக்குப் பிடிபடுவது என்னவென்றால், கி.ரா.வின் மனதை நினைவுகளே ஆக்கிரமித்திருக்கின்றன என்பது. அதுவும் பூர்வீக ஊரின் நினைவுகள்; இந்தக் கால மாற்றத்தில் கரைந்துபோன வாழ்வனுபவங்கள்; தனது ஊருக்கே உரித்தான சொற்கள்; அவரது மூதாதையர் சொன்ன கதைகள்!

ஸ்வீட் சிக்ஸ்டி 9- பாசமலர் - ச சுந்தரதாஸ்

 .


அண்ணன் தங்கை பாசத்தை விளக்கும் ஏராளமான படங்கள் தமிழில் வந்துள்ளதன ஆனாலும் 60 ஆண்டுகள் கடந்தும் சகோதர பாசத்திற்கு இலக்கணமாக விளங்குவது போல் மக்கள் மனதில் பதிந்து இருக்கும் படம்தான் பாசமலர். இன்று கூட இந்த படத்தை பார்த்துவிட்டு கண் கலங்காத ரசிகர்கள் இல்லை என்றே கூறலாம், அந்த அளவிற்கு உணர்ச்சிகரமான காட்சிகள் , நெஞ்சை உருக்கும் சம்பவம்கள் தத்ரூபமான நடிப்பு என்று எல்லாம் சேர்ந்தாற்போல் படத்தை இயக்கியிருந்தார் பீம்சிங். மலையாளத்தில் பிரபலமான கதாசிரியர் கே பி கொட்டாரக்கார எழுதிய கதையை ராஜாமணி பிக்சர்சார் தயாரித்தார்கள். சிவாஜியின் தாயார் பெயரில் நிறுவப்பட்ட பட நிறுவனத்தின் உரிமையாளர்கள் நடிகர் எம் ஆர் சந்தானம் இவர் டைரக்டர் சந்தான பாரதியின் தந்தையாவார், மற்றையவர் மோகன் . அட்வர்டைசிங் நிறுவனத்தின் உரிமையாளர் கே மோகன். சிவாஜியின் அனுசரணையுடன் இவர்கள் இந்தப் படத்தை தயாரித்தார்கள் .

இந்தப் படத்தின் மூலமாகத்தான் பிற்காலத்தில் புகழ்பெற்ற வசனகர்த்தாவான ஆரூர்தாஸ் சிவாஜியின் படங்களுக்கு வசனம் எழுத அமர்த்தப்பட்டார். படத்தில் அவர் எழுதிய வசனங்கள் பெரும் வரவேற்பை பெற்றவே பிற்காலத்தில் ஏராளமான சிவாஜியின் படங்களுக்கு வசனம் எழுதும் வாய்ப்பு அவரை தேடி வந்தது.


மலர்ந்தது மனிதம் – சிறுகதை - கே.எஸ்.சுதாகர்


காற்று அனலாக வீசிக்கொண்டிருந்தது. புழுதியை வாரி வேப்பமரங்களில் இறைத்துவிட்டு, பெருவெளியெங்கும் ஓடி வீதிக்கு விரைந்தது. நெடுஞ்சாலையில் ஒன்றிரண்டு வாகனங்கள் ஓடிக்கொண்டிருந்தன. நேரம் மதியம் தாண்டி இரண்டை எட்டிப்பிடிக்கிறது.

“இன்னும் எவ்வளவோ வேலைகள் இருக்கு. உப்பிடியே படுத்திருந்தால்?” மனைவி வயிற்றைப் பிடித்துக்கொண்டு எட்டிப் பார்த்தாள்.

இன்னும் பத்து நாட்களில் நியூசிலாந்து நாட்டுக்குப் புறப்படவேண்டும். இந்தப் புலம்பெயர்வு விரும்பி ஏற்றுக்கொண்டதல்ல. என்னுடைய நண்பர்களில் பலர் முன்னதாகவே, இலங்கையை விட்டுப் புறப்பட்டு பல்வேறு நாடுகளுக்கும் சிதறுண்டு போய்விட்டார்கள். நாட்டு நிலைமைகள் மிகவும் மோசமடையவே நானும் புறப்படுவதற்கு ஆயத்தமானேன். இதுவரை சொந்தநாட்டுக்குள்ளேயே நான்கு இடங்கள் இடம்பெயர்ந்துவிட்டேன். வடபகுதிக்குள் இரண்டு இடங்கள், பின்னர் தலைநகரம் கொழும்பு, இப்போ இறுதியாக வன்னி.

எல்லா ஆயத்தங்களும் செய்யப்பட்டுவிட்டன. மனைவி ஏழுமாதக் கர்ப்பிணி. முதலாவது பிரசவம். இனியும் தாமதித்தால் அவரை விமானத்தில் ஏற்றமாட்டார்கள். தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் பின்னடைவையே தரும்.

வீட்டு முகப்பில் சைக்கிள் பெல் சத்தம் கேட்கின்றது. மனைவி ஜன்னலிற்குள்ளால் எட்டிப் பார்த்துவிட்டு, “யோகன் வந்திருக்கின்றான்” என்றார். பாயைச் சுருட்டி வைத்துவிட்டு வெளியே வருகின்றேன்.

“சேர்… உங்களைத் தேடி பாங்கில் வேலை செய்யும் தேவலிங்கம் எண்டவர் வந்திட்டுப் போனார். அவசரமா சந்திக்கவேணுமாம்.”

“சரி… ஒஃபிஸ் வரேக்கை சந்திச்சிட்டு வாறன்.”

யாராக இருக்கும்? மனம் கணக்குப் போடுகின்றது. தினம் தினம் வேலை விஷயமாக பலரும் வந்து போகின்றார்கள்.

பேராளுமை மிக்க அந்தணப் பெரியார் வைத்தீஸ்வரக்குருக்கள்


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்  மெல்பேண் ..    அவுஸ்திரேலியா

 

    அந்தணகுலத்தில் பல ஆளுமைகள் இருந்து அரும்பணிகள் ஆற்றி


இருக்கிறார்கள்.அவர்கள் ஆலயங்களில் கிரியகைகளை ஆற்றும் நிலையிலும்
 அரச பணிகளை ஆற்றும் பதவிகளிலும் இருந்திருக் கிறார்கள்.எங்கு அவர்கள் இருந்தாலும் தங்களின் அக வொழுக்கம்புற வொழுக்கங்களை எந்த நிலையிலும் கைவிடாதவர்களாகவே வாழ்வில் விளங்கியிருக்கிறார்கள் என்பது மனங்கொள்ளத் தக்க தாகும். அப்படி அவர்கள் வாழ்ந்த காரணத்தால் சமூகத்தில் அவர்கள் பெரிதும் மதிக்கப்படுகின்ற நிலையிலே இருந்தார்கள் இன்னும் இருக்கிறார்கள் எனலாம்.

   வேதம் ஒதுவது வேதியர்க்கு அழகு. ஆண்டவனைத் தொட்டு ஆராதித்து அவனைப் பக்தி சிரத்தையுடன் பூசிக்கும் நிலையில் தம்மை ஆட்படுத்திக் கொண்டிருப்பதும் அந்தணரின் அழகென லாம்.கிரியைகளை ஆற்றி ஆலய கும்பிபிஷேகங்களை முறைப்படி செய்து மக்களும் நாடும் வளமுடன் இருக்கும் வழியிலே பயணிப்பதும்கூட அந்தணர்க்கு அழகு எனலாம்.

    கிராமத்தின் நன்மதிப்பைப் பெற்று அங்கு வாழும் மக்களுக்கு நாளும் பொழுதும் நல்ல குருவாய்நல்ல வழிகாட்டியாய்நல்ல ஆலோசகராய்விளங்கிய அழகும்  விளங்கும் அழகும் அந்தணப் பெரியோருக்கு வாய்த்திருக்கிறது எனலாம். இப்படிப் பார்க்கின்ற வேளை ஈழத்தில் குறிப்பாக யாழ்ப்பாண மண்ணுக்கு அந்தணப் பெரியார்கள் பெருந் துணையாகவே விளங்கி இருக்கிறார்கள் என்பதை மனமிருத்தல் அவசியமாகும்.

இலங்கைச் செய்திகள்

 அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கதிரியக்க பொருளுடன் சீன கப்பல்

சீரடி பாபா ஆலயத்துக்கு இராஜகோபுரம் அமைப்பு

இலங்கை பிக்குமார்களுடன் பாகிஸ்தான் ஜனாதிபதி சந்திப்பு

சட்டமீறலில் கைது செய்யப்பட்ட ரிஷாட் - அப்துல்லா மஹ்ரூப் சீற்றம்

ஆபத்தான பயங்கரவாத தடைச்சட்டத்தின் ரிஷாட் பதியுதீன் கைது! கண்டனத்தை வெளியிட்ட த.தே.ம.முண்ணனி


அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கதிரியக்க பொருளுடன் சீன கப்பல்

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கதிரியக்க பொருளுடன் சீன கப்பல்-A Chinese Ship Carrying Radioactive Material Docked In Hambantota Port Due to a Fault

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கதிரியக்க பொருளுடன் வந்த சீன கப்பலை அங்கிருந்து விரைவாக வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளதாக, இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை அறிவித்துள்ளது.

கோளாறு காரணமாக நேற்று (20) இரவு அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு குறித்த கப்பல் நுழைந்ததாகவும், தற்போதுவரை துறைமுகத்திற்கு வெளியே குறித்த கப்பல் தரித்து நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகச் செய்திகள்

ஜோர்ஜ் பிளொயிட் கொலை வழக்கு; பொலிஸார் குற்றவாளியாக தீர்ப்பு

மியன்மாரில் ஜப்பான் செய்தியாளர் கைது

அமெரிக்காவில் கறுப்பின சிறுமி பொலிஸாரால் சுட்டுக் கொலை

சர்வதேச பயணங்களுக்கு தடுப்பூசி தேவையில்லை

இரத்தம் உறைவு சம்பவங்கள் குறித்து கூடுதல் விசாரணை

வெப்பவாயுவின் வெளியேற்றத்தை பாதியாகக் குறைக்க அமெ. திட்டம்

கிழக்கு ஜெரூசலத்தில் மோதல்: பலரும் காயம்


 ஜோர்ஜ் பிளொயிட் கொலை வழக்கு; பொலிஸார் குற்றவாளியாக தீர்ப்பு

அமெரிக்காவில் கறுப்பின ஆடவர் ஜோர்ஜ் பிளொயிட் கொல்லப்பட்டது தொடர்பில், முன்னாள் பொலிஸ் அதிகாரி டெரக் சொவின் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

12 பேர் கொண்ட நீதிபதிகள் குழு 24 மணி நேரத்துக்குள் அந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு மினியாபொலிஸ் நகரில் பொலிஸ் அதிகாரியாக இருந்த சொவின், கறுப்பின ஆடவர் பிளொயிட்டை கைது செய்தார். சுமார் 9 நிமிடங்களுக்கும் கூடுதலாக பிளொயிட்டின் கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்தியதால் அவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.

பெயர்கள் படும் பாடு - நாட்டியக் கலாநிதி.கார்த்திகா.கணேசர்

 .

நாம் இங்கு வெளி நாட்டில் வாழ்கிறோம். அவர்களின் பண்பாடு எம்மில் இருந்து வேறுபட்டது.  இவர்கள் தம்மிலும் வயது கூடியோரைப் பார்த்து எவ்வித தயக்கமும் இன்றி அவர்களின் பெயரைச் சொல்லி அழைப்பார்கள். ஒரு 6 வயதுப் பையன் 60 வயது உளளவரைப் பார்த்து ‘ஜோன்’ என அழைப்பது சகஜம்.


எமது வீட்டுக் குழந்தைகளோ அப்படி அல்லாமல் அவரைத் ’தாத்தா’ என்று கூப்பிடுவார்கள். இது எமது பண்பு. பழக்க வழக்கமும் கூட. பெரியோரைப் பெயர் சொல்லி அழைப்பது அவரை மதியாதது போல எம் பண்பாட்டில் கருதப்படும். வயதுக்கேற்ப அக்கா, அண்ணா, மாமா, மாமி, பாட்டா, பாட்டி இப்படி ஒரு உறவு முறையில் அழைப்பது தான் நம் வழமை. மக்களின் பண்பாட்டிலே அவர்களின் பழக்கவழக்கங்களிலே இந்தப் பெயர்கள் படும் பாடு பெரிய பாடு.

ஒரு குழந்தை பிறந்ததும் அதற்கு ’நாமகரணம்’ அதாவது பெயர் சூட்டுகிறோம். ஆனால் அந்தப் பெயர்களோ சில சமயம் வசதிக்காகக் குறுக்கப்படுகிறது. மோகன சுந்தரம் மோகன் என்றோ சுந்தரமாகவோ ஆகி பின்பு சுந் ஆகவோ சுந்தா வாகவோ மாறுகிறது. இது வெகு சகஜம்.

`எல்லோருமே வயோதிக நிலையை அடைய இருப்பவர்கள்தான்' என்கிற உண்மையை


 கரூர் மாவட்டம், சின்னநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராக்கம்மாள் பாட்டிக்கு வயது எண்பது. கணவர் எப்போதே மறைந்துவிட, தனது மகள்கள் இருவரும் தனது இறுதிக் காலத்தை இன்பமாக நகர்த்த பயன்படுவார்கள் என்று மலைபோல நம்பியிருக்கிறார்.

ஆனால், அவர்கள் ராக்கம்மாளைக் கண்டுகொள்ளாமல் தனித்துவிட, தனக்குச் சொந்தமான `இப்பவோ அப்பவோ' என்று உடைந்து, ஓட்டை உடைசலாக நிற்கும் கூரை வீட்டில், தட்டுமுட்டுச் சாமான்கள் சிலவற்றோடு மல்லுக்கட்டியபடி காலத்தை கடத்தி வந்திருக்கிறார்.
கால் காணி நிலம் இல்லை இவருக்கு. ஆனால், திருமணம் செய்துகொண்டு இங்கே வந்ததிலிருந்து தனது தேகத்தை உழைப்புக்குக் கொடுத்து, அந்த வருவாயை வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி சேர்த்து, அதைக் கொண்டு நல்ல இடங்களில் தனது மகள்களைக் கட்டிக்கொடுத்திருக்கிறார். கணவரும் தவறிவிட, `இனி மகள்கள்தான் உலகம்' என்று மலைபோல நம்பி இருக்கிறார். ஆனால், அந்த மகள்கள் தனது தாயைச் சுமையாகக் கருதி, தனித்துவிடப்பட்டிருக்கிறார்.
ஆரம்பத்தில், கூலி வேலைக்குப் போய், அந்த வருமானத்தில் தனது பாட்டை சமாளித்து வந்திருக்கிறார்.
ஆனால், இரண்டு வருடங்களாக வயோதிகம் வாட்ட, வருமானத்துக்கு வழியில்லாமல் ரேஷன் அரிசியை வைத்து காலத்தை `உருட்டி' வந்திருக்கிறார். தனக்கு ஏற்படும் நோய்களைச் சமாளிக்க, இதரச் செலவுகளுக்கு என்று அரசு தரும் ஓ.ஏ.பி உதவித்தொகைக்குப் பலமுறை விண்ணப்பித்திருக்கிறார்.
ஆனால், அரசு அலுவலர்களின் இரும்பு மனதிற்குள் ராக்கம்மாளின் வறுமை நிலைமை ஈரம் சேர்க்கவில்லை.