நானும் காற்றில் கத்தி வீசுகிறேன்

.



நானும் காற்றில் கத்தி வீசுகிறேன்
யாரின் முகமூடி கிழிக்கவோ
திறந்த முகத்தில்
குத்தி கூர்பார்கவோ அல்ல

எமக்கான விளையாட்டு
காற்றில் கத்தி வீசுவது

என் தூரம் அறிந்தே வீசுகிறேன்
எல்லைக்கு உட்பட்டு

மழுங்கிய கத்தி கொண்டே
வீசுகிறேன்
காற்றை கிழிக்கும்
ஓசை எனக்கானது

சைவசமய அறிவுத்திறன் தேர்வுக்கான பரிசளிப்பு விழா 2013 26.05.13

.
சைவமன்றம் நடாத்திய அறிவுத்திறன் தேர்வுக்கான பரிசளிப்பு விழாவின்போது எடுத்த படங்களை கீழே காணலாம்.

படப்பிடிப்பு ஞானி

வைகாசி விசாகம் - சிட்னி முருகன் கோயில் 24-05-2013

படப்பிடிப்பு ஞானி


அவுஸ்திரேலிய மருத்துவ உதவி நிதியத்தின் மருத்துவ, சுகாதார விபரப் பட்டறை




அவுஸ்திரேலிய மருத்துவ உதவி நிதியத்தினால் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இளைஞர் அமைப்பினரால் மருத்துவ, சுகாதார விபரப் பட்டறை ஒன்று சிறப்பாக நடாத்தப்பட்டது.
இரண்டாவது வருடமாக நடாத்தப்படும் இந்த மருத்துவ, சுகாதார விபரப் பட்டறை கடந்த சனிக்கிழமை, 25-05-2013 அன்று 2.00மணிக்கு ஆரம்பமானது.
இந்த பட்டறை மருத்துவ, சுகாதார துறைகளில் பல்கலைக்கழகத்திவ் பயில விரும்பும், தற்போது 11ம், 12ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கென ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.
இந்தப் பட்டறையில் நாற்பதிற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். பல பல்கலைக்கழக மருத்துவ சுகாதார மாணவர்களும், பட்டதாரிகளும் இந்த பட்டறையில் பல விதமான விளக்கங்களை வழங்கினார்கள். குறிப்பாக
UMAT பரீட்சை, நேர்முகம் காணல், பல மருத்துவ, சுகாதார பட்டப்படிப்புக்களைப் பற்றி விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
பட்டறைக்கு வந்திருந்த பல மாணவர்களும் பல விடயங்களைப் புதிதாகத் தெரிந்து கொண்டதாகவும், தமக்கு மிகவும் பிரயோஷனமாக அமைந்திருந்ததாகவும் கூறினர். இந்தப் பட்டறையில் எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே காணலாம்.
அவுஸ்திரேலிய மருத்துவ உதவி நிதியத்தினால் இளைஞர் அமைப்பின் அடுத்த நிகழ்ச்சியாக,
Get Healthy என்ற பட்டறையை சிட்னியிலுள்ள குடும்ப வைத்தியர்களுக்கும், மற்ற மருத்துவ, சுகாதார துறைகளில் பணிபுரியும் தமிழ் ஊழியர்களுக்கென ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அந்த நிகழ்வு ஜுன் மாதம் 16ம் திகதி மாலை 6.30மணிக்கு, யாழ் மண்டபத்தில் (Yaarl function centre) நடைபெறும். இதில் பங்குபற்ற விரும்புவோர் Dr. சித்ரா ஹரிநேசனுடன் (9687 0992) தொடர்பு கொள்ளவும்.





சிட்னி தமிழ் அறிவகத்தின் கொடிதினம் 2013. 01 06 13




.


ஏழிசை வேந்தன் சௌந்தரராஜனுக்கு முரசின் அஞ்சலி -செ .பாஸ்கரன்

.
 ஏழிசை வேந்தனின் மறைவிற்கு முரசு தனது அஞ்சலியை  தெரிவிக்கின்றது. 

கடவுள் மனிதானாக பிறக்க வேண்டும் என்ற பாடலில் இறைவனை சாகச்சொல்லி பாடமாட்டேன் என்று சொல்லி கண்ணதாசன் எழுதிய பாட்டையே மாற்றி அமைக்க வைத்த TM சௌந்தரராஜன் இறைவன் அடி சேர்ந்துவிட்டார்.  
உடல் நிலை சரியில்லாமல், சென்னையில் சனிக்கிழமை தனது 91 வது வயதில் இவர்  காலமானார்.  அவரது இறுதிச்சடங்கு, மைலாப்பூரில் சென்னையில் நடந்தது .

 டி.எம்.சவுந்தர்ராஜன், 1922, மார்ச், 24ல், மதுரையில் பிறந்தார்.. திரையுலக பின்னணி பாடலில் சிகரம் தொட்ட இவர், பக்திப் பாடலிலும் முத்திரை பதித்தவர் . 1946ம் ஆண்டு முதல் திரையுலகில், 60 ஆண்டு காலம் கொடிகட்டி பறந்த இசை மேதை ஓய்வெடுத்துக்கொண்டுள்ளார்.

நான் நிரந்தரமானவன் ..அழிவதில்லை...எனக்கு எந்த நிலையிலும் மரணம் இல்லை... என்று  கண்ணதாசனின் வரிகளைப் பாடிய TMS மரணித்தாலும் நம்மிடம் இருந்து மரணம் இல்லாது நிரந்தரமாகிவிட்டார்.. எம்முடன் இசையாக பாட்டாக வாழ்ந்து கொண்டே இருப்பார் .

இசைக்கேட்டால் புவி அசைந்தாடும்... அது இறைவன் அருளாகும்...!,' என்ற வைரவரிகளுக்கு வர்ணம் பூசியவர். பாடல்களில், வார்த்தைகளுக்கு உயிர்வார்த்தவர். வசீகரக் குரலால் இசைப்பிரியர்களின் உள்ளங்களை வளைத்து, மனதில் குடிகொண்டவர். தேனருவி போல் செவிகளுக்கு விருந்தளித்து, இசையுலகில் கோலோச்சியவர். காற்றலையில் கலந்தே இருப்பார் .

பத்மஸ்ரீ சௌந்தரராஜனுக்குப் பாரதியின் அஞ்சலி!!

                    உ

சிற்சபையோன் அடிக்கமலச் சீர்த்திறம் பாடிடச்   சித்திரத்தேர் ஏறினையோ? சாந்தி! சாந்தி!!


   தீந்தமிழின் இனிமையெலாம் தெவிட்டிடா தென்றும்
      சிந்தைதனில் மலர்ந்தினிக்கச் செய்த தீரா!
   வேந்தனென இசையுலகில் ஐபத் தாண்டு
      விருந்துவைத்த பெற்றியெலாம் பேசப் போமோ?  
   சேந்தனுன்றன்  மதுரகானம் தினமும் மாந்தத்
      திருவடியிற் சேர்த்தனனோ சாந்தி பெற்றாய்!
   ஏந்தலுனக் கென்றும்பிரி வில்லை எங்கள்
      இதயமதில் இசையாய்நீ என்றும் வாழ்வாய்!

   அற்புதமாய்  இராகங்கள் நான்கும் கொஞ்ச
      அமரர்வீ ரமணிஐயர் இயற்றிப் போந்த
    “கற்பகவல் லி”யின்பொற்பதம்” பாடியே மெல்லிசைக்
      கலைக்குமகுடஞ் சூட்டியென்றோ கவினச் செய்தாய்!;
   இற்றைவரை இசைவேந்தே சௌந்தர ராஜனுன்
      இன்னிசையில் இன்புற்றோர் கோடி அன்றோ?
   சிற்சபையோன் அடிக்கமலச் சீர்த்திறம் பாடிடச்
      சித்திரத்தேர் ஏறினையோ? சாந்தி! சாந்தி!!

            பல்வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி.
              சிட்னி - அவுஸ்திரேலியா.


சுகமான கீதங்கள் 2013 - 02 06 13




யாழ் நூலக எரிப்பு - 01 Jun 1981

.

சிங்களப் பயங்கர வாதிகளால் எம் அறிவுச் சொத்து அழிக்கப்பட்டு முப்பதிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நாகரிக உலகமே வெட்கித் தலைகுனியும் படியான கோரச் செயல் ஒன்றை அன்றைய சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு செய்தது.
1981ம் ஆண்டு யூன் மாதம் முதலாம் திகதி இரவு ஒன்பது மணியளவில் தென்கிழக்காசியாவின் மிகச் சிறந்த நூல் நிலையங்களில் ஒன்றாகக் கருதப் பட்ட யாழ்ப்பாண நூல் நிலையம் தீக்கிரையாக்கப் பட்டது.
97, 000க்கும் மேற்பட்ட நூல்களும் கிடைத்தற்கரிய நூல்களும், சுவடிகளும் எரிந்து சாம்பலாயின. தமிழர்கள் தம்மில் ஒரு பகுதியை தாம் இழந்ததாக உணர்ந்து, உருகி, உறைந்து போயினர். யார் பயங்கரவாதிகள் உலகமே?
தமிழீழ மக்களுக்கு மாறாத வலியையும், வடுவையும் தந்த இந்தக் கோரமான பேரழிவுக்கு அடிப்படையாக அமைந்த காரணிகளையும், வரலாற்று உண்மைகளையும் நாம் இங்கே ஆராய்ந்து பார்ப்பதோடு மட்டுமல்லாது, தேசிய இனங்களை ஒடுக்க முயன்ற பேரினவாத சர்வதேச அரசுகளின் செயல்களில் உள்ள ஒற்றுமைகளைச் சுட்டிக் காட்டித் தர்க்கிப்பதும் இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.
இப்பேரழிவுச் செயல் நிகழ்த்தப் பட்ட யூன் மாதம் முதலாம் திகதிக்கு (1981) முதல் நாள் நடைபெற்ற விடயங்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இவையிரண்டையும் தர்க்க்pத்த பின்னர் இவற்றிற்கு முன்னோடியாக-ஏன் வழிகாட்டியாக இருந்த ஹிட்லரின் நாசி (Nazi) நடைமுறைகளையும், அதன் சட்டங்களையும், செயற்பாடுகளையும் சிறிலங்காவின் அரசுகளோடு ஒப்பிட்டுத் தர்க்கிக்க நாம் விழைகின்றோம்.

இனியவளே காத்திருப்பேன் DVD Release





இலங்கைச் செய்திகள்

.
இலங்கையில் முஸ்லிம் மக்கள் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்: அமெரிக்கா

வட மாகாண சபைத் தேர்தல் தேவையில்லை : பொதுபல சேனா

செல்வராஜா கஜேந்திரனிடம் மீண்டும் யாழில் விசாரணை

பொதுபலசேனாவின் தலைமையகத்திற்கு வெளியே பிக்குமார் ஆர்ப்பாட்டம் - பெரும் பதற்றம்; பொலிஸார் தலையீடு

தனி ஈழத்துக்கான வாக்கெடுப்பே வடமாகாணத் தேர்தல்:ஹெல உறுமய

இலங்கைக்கு சீனா மீண்டும் கடனுதவிகளை வழங்கத் தீர்மானம்

மத்தளயில் விமான நிலையத்துக்கு பதிலாக குளத்தை கட்டியிருக்கலாம்; பொது பலசேனா

======================================================================

இலங்கையில் முஸ்லிம் மக்கள் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்: அமெரிக்கா



21/05/2013 இலங்கையில் முஸ்லிம் மக்கள் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

2012ஆம் ஆண்டுக்கான அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் சர்வதேச மதச் சுதந்திர அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ தேவாயலங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக விசாரணை நடாத்தி தண்டனை விதிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சைவ மன்றம் வழங்கும் கலைக் கதம்பம் 2013





ஊருக்குப்புதுசு சென்னையிலிருந்து முருகபூபதி




இயற்கைக்கு இரக்கமே இல்லையா என்று நினைக்கத்தோன்றுகிறது. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்பன பஞ்சபூதங்கள் என்கிறார்கள். சர்வதேசப்புகழ்பெற்ற இந்திய திரைப்பட இயக்குநர் தீபா மேத்தா
Earth, Fire, Water ஆகிய படங்களை எடுத்தார். அதனால் பல வேதனைகளையும் சோதனைகளையும் சந்தித்தார்; அதனால்தானோ என்னவோ, அவர் காற்று, ஆகாயம் தொடர்பாக இன்னமும் படம் எடுக்கவில்லையோ என்று யோசிக்கவைக்கிறது.
இயற்கையை தெய்வமாக வழிபடும் மக்கள் அன்றும் இருந்தார்கள். இப்பொழுதும் இருக்கிறார்கள். ஆனால் இயற்கையும் அதனைப்படைத்த கடவுளைப்போன்று மக்களை சோதனைக்கும் வேதனைக்கும் தள்ளிக்கொண்டுதான் இருக்கிறது.
இயற்கையை வழிபட்ட இலட்சக்கணக்கான ருஷ்ய மக்களை ஜார் மன்னன் நடுகடத்த முற்பட்டபோது அவர்கள் கனடாவில் கியூபெக் மாநிலத்துக்கு கப்பலில் சென்றார்கள். அவர்களின் போக்குவரத்து செலவுக்காக லியோ டோல்ஸ்ரோய் புத்துயிர்ப்பு நாவலை எழுதி வெளியிட்டு அதில் கிடைத்த பணத்தைக்கொடுத்தாராம்.

நெடுநல்வாடையை நுகர வாருங்கள் - 1 - கீதா மதிவாணன்

.
பழந்தமிழ் இலக்கியப் படைப்பான பத்துப்பாட்டில் ஒன்று நெடுநல்வாடை. இதைப் பாடியவர் மதுரைக் கணக்காயர் மகன் நக்கீரனார்.  கூதிர்காலப் பாசறை அமைத்துப் போர் புரியச் சென்றிருக்கிறான்  இப்பாடலின் நாயகன் பாண்டியன்  நெடுஞ்செழியன்.  காதல் கணவனை எதிர்பார்த்து தனிமைத் துயரில் தவிக்கும் அவன் மனைவிக்கு  வாடைக்காலம் நெடியவாடையாகத் தெரிந்ததாம்.  தலைவனுக்கோ கடமையுணர்வின் மேலீட்டால் வெற்றி பெறவிருக்கும் நோக்கில் இருந்ததால் அவ்வாடை நல்வாடையாயிற்றாம். ஒரே காலம் இருவருக்கும் இருவேறு மனநிலையைத் தந்ததால் இதற்கு நெடுநல்வாடை என்ற பெயராம்.  


இந்தப் பாடலில் மதுரை மாநகரின் மழைக்காலத்தையும் குளிர்காலத்தையும் மிக அழகாக வர்ணித்துள்ளதைக் கண்டு நான் வியந்து ரசித்ததை உங்களுடன் பகிரவிரும்புகிறேன். விளக்கத்தையும் எளிமையான வரிகளால்  புதுக்கவிதை போன்ற பாணியில் தரவுள்ளேன். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதுபோல் அளவிடற்கரிய பேராசையே இம்முயற்சிக்கு மூலகாரணம். ஆதலால் கற்றவர் பிழை பொறுத்து குற்றம் காணுமிடத்து உரிமையுடன் திருத்தினால் மகிழ்வேன்.  


இனி நெடுநல்வாடை பாடலும் விளக்கமும்...

  

உலகச் செய்திகள்

.
அமெரிக்காவில் பேரழிவு: சுழல் காற்றினால் 91 பேர் பலி!

சவுதியில் உளவு பார்த்த ஈரானியர்கள் கைது!

லண்டன் வீதியில் பட்டப் பகலில் துணிகரம்: ராணுவ வீரர் தலை துண்டித்து படுகொலை

ஸ்வீடனில் கலவரம்!

ஈரானில் இருவருக்கு தூக்கு!

பயங்கரவாதத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது: டேவிட் கேமரூன்

லண்டனில் பயங்கரவாத தாக்குதல் ; பிரிட்டன் ராணுவ வீரரை கழுத்தறுத்து கொன்ற தீவிரவாதிகள்
==============================================================
அமெரிக்காவில் பேரழிவு: சுழல் காற்றினால் 91 பேர் பலி!
21/05/2013 அமெரிக்க மாநிலமான ஒக்லஹொமாவை நேற்று தாக்கிய சுழல் காற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளது.


ஒக்லஹொமா நகரின் மூர் பகுதியில் சிறுவர் பள்ளியொன்றை சுழல் காற்று தாக்கியதில் 24 குழந்தைகள் பலியாகியுள்ளதாக அஞ்சப்படுவதுடன் இடிபாடுகளுக்குள் இருந்து இதுவரை 7 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.




வானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவை.

.


பிரதி செவ்வாய் தோறும் ஒலிபரப்பாகும் வானமுதம் ஒலிபரப்புச் சேவையைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 28.06.2013 மாலை 6மணி முதல் இரவு 8மணி வரை வானமுதம் தமிழ் ஒலிபரப்பின் சேவையை எவ்.எம்.88.6 அலைவரிசையூடாகவும்ரூபவ் சிட்னி மாநகரில் இன்பத்தமிழ் வானொலியூடாகவும் கேட்கலாம். அதுமட்டுமல்லாமல் நிகழ்ச்சிகளை இணையத்தளத்தில்
www.pvfm.or.au/livestreaming ஊடாகவும் கேட்டுமகிழலாம். இதனை உங்கள் உறவினர்களுக்கும்ரூபவ் நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்.

அன்று 28.06.2013 வானமுதம் வானொலி ஏழு வருடங்களைக் கடந்து எட்டாவது வருடத்தில் காலடி எடுத்து வைக்கின்றது. அதனையிட்டு அன்றை தினம் வாழ்த்து நிகழ்ச்சியாக நடைபெறவிருப்பதால் அனைவரையும் பங்கு பற்றி உங்கள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் வண்ணம் அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.

எமது வானமுதம் Facebook இல்  vaanamutham என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டிருப்பதால் அதன் படைப்புக்களையும் காலப்போக்கில் பார்த்தும் கேட்டும் மகிழலாம் என்பதையும் அறியத்தருகின்றோம்.

உங்கள் முழுமையான பங்களிப்பினையும் விமர்சனங்களையும் எதிர்பார்க்கின்றோம்.

தொடர்பு இலக்கம் :- 03 9404 2111

நன்றி. வண்க்கம்.

ஓர் அகதியில் பாடல் - வ.ஐ.ச. ஜெயபாலன்

.


Posted Image

வ.ஐ.ச. ஜெயபாலன் ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் பட்டம் பெற்றுள்ளார். யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவராக 1974-ஆம் ஆண்டில் பொறுப்பு வகித்து பல முக்கியமான பணிகளைச் செய்திருக்கிறார். எழுபதாம் ஆண்டுகளில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவராக இருந்த காலத்தில் ஈழத்தில் ஏற்பட்ட புரட்சியில் இலக்கியத்திலும் செயற்பாடுகளிலும் இவர் பங்கு வகித்திருந்தார்.

Posted Image


சிட்னியில் உலகத் தமிழ் மாநாடும் திருவள்ளுவர் சிலை திறப்பும்





கலாநிதி சந்திரிகா சுப்ரமண்யன்
( விழா மலர்க்குழு மற்றும் மக்கள் தொடர்பு சார்பாக  )
சிட்னியில் செப்டெம்பர் 2013 இல் உலகத் தமிழ் மாநாடு நடக்கவுள்ளது. அந் நிகழ்வின் போது திருவள்ளுவர் சிலை ஒன்று அமைக்கப்படவுள்ளது. உலகத்தமிழ் சங்கமும் , தமிழ் இலக்கிய கலை மன்றமும் இணைந்து இந் நிகழ்ச்சியில் வள்ளுவப் பெருந்தகையின்  ஏழு அடி உயரமுள்ள சிலை ஒன்றை சிட்னியில் நிறுவத் திட்டமிடப் பட்டுள்ளது.
இம்மாநாட்டின் முக்கிய நோக்கம் உலகளாவி பரந்து வழும் தமிழர்களை ஒன்றிணைத்து இளைய  தலைமுறைக்கு தமிழின் தொன்மையை, அதன் மகிமையை எடுத்துக் கூறுவதாகும்.அதன் ஒரு பகுதியாக , இடைக்காடர் , ‘கடுகைத்துளைத்து எழு கடலைப் புகுத்தி குறுகத்தறித்த குறள் ‘என்று அளவிற் சிறிய அதிசயம் என வியந்த திருகுறளை மேன்மை படுத்தி ஐயன் வள்ளுவனைப்  பணிந்து வியந்து வணங்கும் முகமாக திருவள்ளுவர் சிலை அமைக்கப் பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் முழுமுயற்சியாக ஈடு பட்டுள்ள தமிழ் இலக்கிய கலை மன்றத்தை சேர்ந்த , திரு மகேந்திரன், இம் மாபெரும் விழாவில் கருத்தரங்கு, கவியரங்கு, ஆய்வரங்கு, இசை அரங்கு, நடன அரங்கு, தமிழின் தொன்மையையும் , பெருமையையும்  எடுத்து இயம்பும் கண்காட்சி ஆகிய முத்தமிழ் அம்சங்களும் இடம் பெறும்’ எனத் தெரிவித்தார்.

இராவணன் ஒரு தமிழ் வீரன் - Dr. Vasudevan

.
இராவணன் போல் ஒரு தமிழ் வீரன் இராமாயணத்தில் இல்லை.. கதைக்காக தமிழனை அப்படி காட்டியிருந்தாலும்.. அவனின் வீரம் போற்றுதலுக்குரியது.. மற்றும் மாற்றான் தோட்டத்து மல்லிகையை அவனின் கை படாது வைத்திருந்த கண்ணியவான். உண்மையில் தமிழ் உலகம் தந்த மாபெரும் வீரன் அவன். வரலாற்றின் திரிபுகளால் கொடுங்கோலன் ஆக்கப்பட்டான். ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் சிறந்த சிவபக்தன். இராமனை விட மேலானவன்.

இராவணன்
இராவணன் இலங்கையை ஆட்சி செய்த அரசனாகவும், பக்தனாகவும், இராமனுக்கு நேர் எதிராகவும் இராமாயணத்தில் சித்தரிக்கப்பட்ட தீயகதாபாத்திரம் ஆவார். பல ஓவியங்களில் இராவணன் பத்துத் தலைகளை உடையவனாக சித்தரிக்கப்படுகின்றார். இராவணனுடைய ஆட்சியின் போது இலங்கை வளமாகக் காணப்பட்டதாகவும், இராவணன் விமானம் ஒன்றை வைத்திருந்ததாகவும் இராமாயணம் கூறுகின்றது. வாரியபொல - "வானோடும் களம் இறங்குமிடம்" போன்ற ஊர் பெயர்களும் இலங்கையில் உண்டு என்பது இங்கு குறிக்கத்தக்கது. இராவணன் பிராமணராகவும், சிவபக்தி மிகுந்தவராகவும் சித்தரிக்கப்படுகின்றார். அதேவேளை, அவன் ஒரு அசுரனாகவும், அசுரர்களின் அரசனாகவும் சித்தரிக்கப்படுகின்றான். இராவணன் பற்றிய நோக்குகள் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் வேறுபட்டுக் காணப்படுகின்றன.

முத்தமிழ்க் காவலர்' கி.ஆ.பெ.விசுவநாதம்

.


பெயர்ச் சிறப்பு
 மது தாய்மொழியின் பெயர் "தமிழ்' என்பது. தமிழை ""உயர்தனிச் செம்மொழி'' என்பர் அறிஞர். தமிழ் உயர்ந்த மொழி, தனித்த மொழி, செம்மையான மொழி என்பது இதன் பொருள். "தமிழ்' என்பதற்கு "அழகு' எனவும் பொருள் உண்டு. இவ்வுண்மையைத் ""தமிழ் தழுவிய சாயல்'' என்பதால் நன்கறியலாம். தமிழுக்கு "இனிமை' எனவும் பொருள் உண்டு. இதைத் தேன்தமிழ், தீந்தமிழ் என்ற அடைமொழிகளே மெய்ப்பிக்கும். தமிழ் என்பதை தம்-இழ் எனப் பிரித்து, தம்மிடத்தில் "ழ்'ழை உடையது "தமிழ்' எனப் பொருள் கூறுவதும் உண்டு.
 தமிழுக்கு இனம் மூன்று. அவை வல்லினம், மெல்லினம், இடையினம், என்பவை. நமது மொழிக்குப் பெயர் வைக்க எண்ணிய தமிழ்ச் சான்றோர்கள், அக் காலத்திலேயே இனத்திற்கு ஓர் எழுத்தாக எடுத்து மூன்று இனங்களுக்கும் "பிரதிநிதித்துவம்' வழங்கிப் பெயர் வைத்திருப்பது எண்ணி எண்ணி மகிழ்வதற்குரியது. த-வல்லினம், மி-மெல்லினம், ழ்-இடையினம்.
 தமிழுக்கு "முத்தமிழ்' எனவும் பெயர் உண்டு. இது இயல், இசை, நாடகம் என்றாகும். இயற்றமிழ் எண்ணத்தை வளர்க்கும்; இசைத்தமிழ் உள்ளத்தை உருக்கி ஒரு முடிவுக்கு வரச்செய்யும். நாடகத்தமிழ் நடந்து காட்டி மக்களை நல்வழிப்படுத்தும். எண்ணமும், துணிவுமின்றி எச்செயலும் நடைபெறாது. இது உளநூற் புலவர்களின் கருத்து. இதை நமது முன்னோர்கள் அன்றே அறிந்து பெயரிட்டிருப்பது அவர்களின் அறிவாற்றலை விளக்குகிறது.
 சைவ சமய ஆச்சாரியராகிய ஞானசம்பந்தரை, நாம் "திரு' என்ற அடைமொழி சேர்த்து, திருஞானசம்பந்தர் எனக் குறிப்பிடுகிறோம். ஆனால் அவரோ, தம் பெயருக்கு முன் "தமிழ்' என்பதையே அடைமொழியாகக் கொடுத்துத் "தமிழ் ஞானசம்பந்தன்' எனக் குறிப்பிட்டுக் கொண்டார். இது நமக்குத் தமிழையும் சம்பந்தரையும் ஒன்றாகக் காட்டுகிறது.

விற்றில்சீ தமிழ்ச்சங்கத்தின் புதிய நிர்வாகம்




(Whittlesea Tamil Association )

மெல்போர்ணில் இயங்கும் சமூக வானொலியான ~~வானமுதம்" தமிழ் ஒலிபரப்புச் சேவையை நடாத்திவரும் விற்றில்சீ தமிழ்ச்சங்கத்தின் ஆண்டுப் பொதுக்கூட்டம் 19.05.2013 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 02.00மணக்கு 
Epping Memorial Hall இல் அமைந்துள்ள
Funtion room இல்  நடைபெற்றது. கடந்த ஆண்டு தலைவராக இருந்த திரு.வில்லியம் இராஜேந்திரம் தலைமையில் கூட்டம் ஆரம்பமானது. அவர் தனது உரையில் நடந்து முடிந்த ஆண்டில் விற்றில்சீ தமிழ்ச் சங்கத்தின் நடவடிக்கைகள், ‘வானமுதம்’ ஒலிபரப்புச் சேவையின் வளர்ச்சி, வருடாந்தம் நடாத்தும் நிகழ்ச்சியின் முக்கியத்துவம், விற்றில்சீ மாநகரசபையுடன் இணைந்து செயற்படவேண்டிய நடவடிக்கைகள், ஈடுபாடுகள் என்பன பற்றி விளக்கமாகக் கூறியிருந்தார்.
மேலும் தனதுரையில் கடந்த ஆண்டு பதவியிலிருந்து அயராது உழைத்த சகல நிர்வாக உறுப்பினர்களுக்கும், வானமுதம் தமிழ் ஒலிபரப்புச்சேவையின் சகல அறிவிப்பாளர்களுக்கும், தேர்தல் அதிகாரியாக செயற்படும் திரு.செல்லத்துரை பாலசுப்பிரமணியம் அவர்களுக்கும், சகல விற்றில்சீ தமிழ்ச் சங்க உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து சங்கத்தின் அறிக்கை செயலாளரால் வாசிக்கப்பட்டது. நிதி நிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அதன் குறை நிறைகள் ஆராயப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. வானமுதம் ஒலிபரப்பின் நேயரான திரு.செல்லத்துரை பாலசுப்பிரமணியம் அவர்கள் தேர்தல் அதிகாரியாகச் செயற்பட்டு புதிய ஆண்டுக்குரிய நிர்வாக உறுப்பினர்களைத் தெரிவு செய்து வைத்தார்.

தமிழ் சினிமா


நான் ராஜாவாகப் போகிறேன்

"காதலில் விழுந்தேன்" படத்தின் மூலம் ஸோலோ ஹீரோ ஆனார் பாய்ஸ்" நகுல்.
அதைத் தொடர்ந்து வெளிவந்த "மாசிலாமணி", "கந்தகோட்டை" உள்ளிட்ட படங்களில் சோர்ந்து விழுந்த அவரை, எழுப்பி நிற்க வைக்கும் விதமாக வெளிவந்திருக்கிறது "நான் ராஜாவாகப்போகிறேன்" திரைப்படம்.
சென்னையில் சமூக சேவகர் மணிவண்ணனுக்கு உதவிக்கரமாக இருக்கிறார் சட்டக்கல்லூரி மாணவி சாந்தினி. ஒருகட்டத்தில் மணிவண்ணன் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். இந்த கொலை தற்கொலையாக மாற்றப்படுகிறது. ஆனால், இது கொலை என்பதை நிரூபிப்பதற்காக சாந்தினி அதற்குண்டான வேலைகளில் களமிறங்குகிறார்.
இதனைக் கண்டறியும் கொலைக் கும்பல் சாந்தினியை தீர்த்துக்கட்ட நினைக்கிறது. இந்நிலையில், சாந்தினியை காதலிக்கும் நகுல் சாந்தினியைக் காப்பாற்ற முயற்சிக்கிறார். இதனால், இருவரையும் தீர்த்துக்கட்ட அவர்களை துரத்துகிறது அந்த கொலைக்கார கும்பல்.
மறுமுனையில், இமாச்சலப் பிரதேசத்தில் தன் தாய் சீதா மற்றும் மாமா வாசு விகரமின் ஆதரவோடு செல்லப்பிள்ளையாக வளர்ந்து வருகிறார் ஜீவா என்னும் நகுல். ஒருநாள் விளையாடிக் கொண்டிருக்கும்போது தவறுதலாக அங்குள்ள மிலிட்டரி கேம்பிற்குள் சென்றுவிடுகிறார்.
அதனால் அவருக்கு அங்கு சிறு தண்டனை கொடுக்கப்படுகிறது. அப்போது நகுலைப் பார்க்கும் ஒரு இராணுவ அதிகாரி சென்னையில் தன்னுடன் படித்த நண்பனைப் போலவே ஜீவா எனும் நகுல் இருப்பதை கண்டு அவனிடம் சொல்கிறார்.
அவர் மூலமாக சென்னையில் வசிக்கும் ராஜா என்ற நகுலைப் பற்றிய முழு விபரத்தையும் அறிகிறான் ஜீவா. மேலும், ராஜா நகுலை ஒருதலையாக காதலித்த அவனி மோடியைப் பற்றிய தகவலையும் அவனுக்கு கூறுகிறார்.
தன்னைப் போலவே இன்னொருவர் இருப்பதை அறிந்துகொண்ட ஜீவா என்னும் நகுல், அவனைப் பார்க்க ஆர்வமாய் இருக்கிறான். ஒருகட்டத்தில் தன்னுடைய தாய் மற்றும் மாமாவிடம் சொல்லிக் கொள்ளாமல் சென்னைக்கு பயணமாகிறார். போகும் வழியில் அவனி மோடியைச் சந்திக்கிறார். அவரையும் கூட்டிக் கொண்டு சென்னைக்கு வருகிறார்.
சென்னைக்கு வரும் ஜீவா நகுல், சென்னையில் ராஜா நகுலை சந்தித்தாரா? கொலை கும்பலிடம் இருந்து சாந்தினியை காப்பாற்றி ராஜா நகுல் சாந்தினியை கரம்பிடித்தாரா? என்பதே மீதிக்கதை. நகுல் ஜீவா-ராஜா என இருவேறு கதாபாத்திரங்களில் பிரமாதப்படுத்தியிருக்கிறார். அம்மாவுக்கு செல்லப்பிள்ளையாக வெகுளித்தனம் காட்டுவதிலும், கிக்-பாக்ஸிங்-ல் மிரட்டுவதுமாக ரசிக்க வைக்கிறார்.
இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள். சாந்தினி ஹோம்லி என்றால், அவனி மோடி கவர்ச்சியில் கலக்கியிருக்கிறார். நடிப்பிலும் இருவரும் மிரட்டியிருக்கிறார்கள். மணிவண்ணன், தூங்காநகரம் இயக்குனர் கௌரவ், இயக்குனர் ஏ.வெங்கடேஷ், சுரேஷ், டெல்லி கணேஷ், தியாகு, மயில்சாமி என ஒரு நடிகர் பட்டாளமே நடித்திருக்கிறது.
எல்லோரும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள். குறிப்பாக, சமூக சேவகராக வரும் மணிவண்ணனின் கெட்டப்பும், செயற்கை விதைகளால் மனித இனத்தின் எதிர்கால தலைமுறையினருக்கு ஏற்படவிருக்கும் அபாயத்தை எடுத்துக்கூறும் பேச்சும் பிரமாதம்.
புதுமுக இயக்குனர் பிருத்வி ராஜ்குமார் படம் பார்ப்பவர்களுக்கு நகுல் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் என்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டு, இறுதியில் ஜீவா-ராஜா ஆகிய இருவரும் ஒருவரே என்று முடித்திருப்பது சுவாரஸ்யம்.
ஜீ.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் அருமையாக வந்துள்ளன. எரிச்சலூட்டும் இடங்களில் இவருடைய பாடல்கள் காதுகளுக்கு இனிமையை கொடுத்திருக்கின்றன. வேல்ராஜின் ஒளிப்பதிவு, வெற்றிமாறனின் வசனம், திலீப் சுப்பராயனின் சண்டைக் காட்சிகள் படத்திற்கு மேலும் வலுசேர்க்கின்றன.
செயற்கை விதைகளை இறக்குமதி செய்தால் மண்வளம் நாசமாகப் போவதைவிட எதிர்கால சந்ததியினருக்கு ஏற்படும் பாதிப்புகள் என்பதை விளக்கும் நல்ல படமாக இருந்தாலும், திரைக்கதையில் இயக்குனர் சொதப்பி விட்டார்.
மேலும், இயற்கை உபாதை போவதை எல்லாம் கொமெடி என்ற பெயரில் படம்பிடித்து காட்டியிருப்பது எரிச்சலைத் தூண்டியிருக்கிறது. மொத்தத்தில் ‘நான் ராஜாவாகப் போகிறேன்’ ராஜாவாக்க முயன்றிருக்கிறார்கள். நன்றி விடுப்பு