தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில்

 தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை  அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு

ஸ்ரீசத்திய சாய் பாபா அவதாரஞ் செய்து நூற்றாண்டு நிறைவை நினைவுகூரும் ஞான்று மலரும் நினைவுகள்!

சிவமயம்

 

மும்மைமா மலப்பற்றின் தளைய கற்றி

   மூவுயிரும் ஈடேறத் தோன்றாத் துணையாய்

இம்மையிலும் தொடர்ந்துவரும் எழுமையி லுமடியர்

   எடுத்திடுமெப் பிறப்பினிலும் அருள்பா லித்தே

செம்மைவாழ் வளித்தெமக்குப் பதஞ்சே விக்கும்

   சிவனவனின்; தேவதூதனாய்ப் புட்ட பதியில்

தம்மையுமிப் புவியிலுள்ளோர் தரிசித்தே உய்யத்

   தவப்பேற்றால் உதித்தவரே சத்யசாய் பாபா!

 


 

 

 





பத்தர்கள் நினைவுகூர்ந்து விழா வெடுத்துப்

   பாபாவின் நூற்றாண்டு பிறந்த நாளை

எத்திக்குங் கொண்டாடி மகிழும் வேளை

   இறைதூதன் எமக்கருளிப் போந்த நல்ல

தித்திக்கும் அருளுரையைச் சிந்தைக் கெடுத்துச்

   சீராக அறுகுணசீ ரமைப்பைச் செய்து

அத்தனருள் கூர்ந்தெம்மை வழிந டத்தி

  அருள்வரென நம்பியவர் அடிகள் தொழுவாம்  ! 

மனமகிழும் வகையினிலே மற்றவரை வைத்துவிடு !

 





         














மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ..... அவுஸ்திரேலியா




பசி சென்றபின்னர் சாப்பிட அழைக்காதே 
மனம் உடைந்தபின்னர் மன்னிப்பு கேட்காதே
தாகம் இருப்பாரின் தாகத்தைத் தணித்துவிடு
தலையையினைத் தடவி தண்ணளியைக் காட்டு

பரிசுகள் கொடுத்து பரிகாசம் செய்யாதே
பசிக்கின்ற  வேளை உணவளிக்க தயங்காதே
ஏங்குவார் யாவரையும் ஏளனம் செய்யாதே
இரக்கமே எல்லோர்க்கும் இறையீந்த சொத்தாகும் 

உறவாடி உறவாடி  உயிரெடுக்க முனையாதே
உள்ளொன்று வைத்துப் புறமொன்று உரையாதே
கள்ளநிறை மனத்தோடு கட்டியே அணைக்காதே
கருணையுடன் யாவரையும் கட்டியே அணைத்துவிடு

கிளிக் கண்ணிகள் (சென்றவாரத்தொடர்ச்சி)

 



இயற்றியவர்

பல்மருத்துவ கலாநிதி

பாரதி இளமுருகனார்

 



பழந்தமிழ்ப் பெருமையைப் பறைசாற்றி வருவோர்தம்

வழக்கத்தில்; ஓம்பாரடி - கிளியே

வாய்ச்சொல்லில் தீரரடீ!

 

 



 

 




நடைமுறையில் ஓம்பிடாத நனிசிறந்த விழுமியங்கள்

நாளடைவில் நலியுமன்றோ? கிளியே

நாளும்புழங் கச்சொல்லுவாய்!

 

வாய்பேசாச் சீவன்களை வேள்வியென்ற பாவனையில்

கோயிலில் உயிர்ப்பலியா?  - கிளியே

கொடுமையிற் கொடுமையடீ!

 

மனதைச் சலவைசெய்தே சைவர்களை மதம்மாற்றத்

தினமும் முயலுகிறார் கிளியே

சிறுநெறி ஈனரடீ!

கவிதை..."பூச்சாடி பூக்கள்"... மெல்போர்ன் அறவேந்தன்

 














அரவணைப்பே பேரின்பம் என்பதையே அகமிருத்து !




            
   

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ..... அவுஸ்திரேலியா




பட்டமும் வேண்டாம் பரிசும் வேண்டாம்
பண்புடனே வார்த்தை பகர்ந்தாலே போதும்
உள்ளொன்று வைத்து உரைக்கவும் வேண்டாம்
உண்மையாய் நடப்பதே உத்தமம் ஆகும்

ஏற்றுவது போல தூற்றவும் வேண்டாம்
இரங்குவது போல நடிக்கவும் வேண்டாம்
கூற்றுவன் போல கொல்லவும் வேண்டாம்
குறையின்றி வாழ்வில் நடந்தாலே போதும்

போற்றுவார் போன்று பொய்யராய் நின்று
தூற்றவும் வேண்டாம் தூக்கவும் வேண்டாம்
மாற்றுவே னென்று மயக்கவும் வேண்டாம்
மனமதனைச் செம்மை ஆக்கினால் நன்று

சேற்றினை வாரி கொட்டவும் வேண்டாம்
சின்னத் தனமாகச் செயலாற்ற வேண்டாம்
சோற்றிலே மண்ணை கொட்டவும் வேண்டாம்
சுகமான எண்ணங்களை சுமந்திடவே எண்ணு

சிந்திக்கத் தூண்டும் சிறுகதை!

இரத்த அழுத்தத்துக்கு போடவேண்டிய மாத்திரையை போட்டு படுக்கையில் படுத்திருந்த பரமசிவனைத் தட்டி எழுப்பினான் பேரன் சிவா. பேரன்மேல் மிகுந்த பாசம் அவருக்கு. அவருக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவனுக்கு கதை சொல்வார்.


இரண்யாட்சசன் பூமியை பாயாக சுருட்டி கடலுக்குள் ஒளிந்து கொண்டான் என்றும் மகாவிஷ்ணு கூர்ம அவதாரம் எடுத்து கடலுக்குள் ஒளித்து வைத்திருந்த பூமியை மீட்டெடுத்த கதையையும் சொல்லிக் கொடுத்தார். அதேசமயம் கலிலியோ பூமி தட்டையல்ல உருண்டையானது என்று கண்டுபிடித்துக் கூறியதை உலகம் ஏற்றுக் கொண்டதையும் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.

இவற்றையெல்லாம் கேட்டுவந்த சிவாவுக்கு கலிலியோவுக்கு முன்பே முருகன் உலகம் உருண்டையானது என்பதைக் கண்டுபிடித்து விட்டார் என்ற உண்மை தெரியவந்தது. இதைச்சொல்லவே தாத்தாவை எழுப்பினான் சிவா. படுக்கையிலிருந்து எழுந்த பரமசிவன்,

“என்னப்பா, என்ன வேணும், கதை சொல்லணுமா?” என்று கேட்டார்.

“கதை வேண்டாம் தாத்தா. நீங்க சொன்ன கதையில் ஒரு தப்பு இருக்கு தாத்தா”

“என்னடா, குட்டிப்பயலே அப்படி என்ன தப்பை கண்டு புடிச்ச?”

தமிழன் அன்று சீனாவில் வணிகம்! தமிழன் இன்று சீனாவில் பயணம்!! தொடர்-3…..சங்கர சுப்பிரமணியன்.

அங்கிருந்து மறுபடியும் கீழ்தளம் சென்று வாடகை வாகனத்தைப் பிடிக்க வேண்டும்.

எவருக்கும் ஆங்கிலம் சிறிதும் தெரியவில்லை. குடிவரவுச் சோதனையில் இருப்பவர்கள் கூடவார்த்தைகளை அளந்தே ஆங்கிலத்தில் பேசுகின்றனர். விளக்கம் கேட்டு எந்த பதிலையும் பெறமுடியாது. ஆதலால் டெர்மினல் இரண்டுக்கு சென்று சிம் கார்டு வாங்கும் முயற்சியைக் கைவிட்டேன்.

ஒரு வழியாக கீழ்த்தளம் வந்து வாடகை வாகனங்கள் நிற்கும் இடத்தை அடைந்தேன். நான் தங்கும் ஹயட் ஓட்டலின் விலாசத்தை சீனமொழியில் மொழிபெயர்த்து பிரிண்ட் எடுத்திருந்தேன். தவிர, வீசேட் மற்றும் கூகுள் மொழிபெயர்க்கும் ஆப்களையும் தரவிறக்கம் செய்து தயார் நிலையில் வைத்திருந்தேன். ஆனால் சிம் கார்டு வாங்காததால் அவற்றைப் பாவிக்க இயலவில்லை.

இருப்பினும் விலாசத்தை பிரிண்ட் எடுத்திருந்ததால் தயக்கமின்றி இருந்தபோது அத்தி பூத்தாற்போல் என்பார்களே அதேபோல் ஒரு அதிசயம் நடந்தது. ஓரளவு ஆங்கிலம் தெரிந்த ஒருவர் அங்கிருந்தார். அந்த தண்டாயுதபாணியே தண்டத்துடன் வந்து கடவுள் இருக்கான் குமாரு என்பதை நிரூபித்தார். ஆனால் அதற்குபிறகு ஒன்டைம் பாஸ்வேட் போல தண்டபாணி சீனாவைவிட்டு கிளம்பும்வரை வரவேயில்லை.

அவரின் உதவியுடனும் என்னிடமிருந்ந சீனமொழியிலிருந்த விலாசத்தின் ஊடாகவும் வாகன ஓட்டுனரின் தலையின் பின்புறம் ஒளிவட்டம் தெரிந்ததைப் போன்ற ஆறுதலோடு கிட்டத்தட்ட ஒருமணி நேரப்பயணத்திற்கு பிறகு ஓட்டலை வந்தடைந்தோம். வாடகை வாகனத்துக்கு பணம் கொடுக்கவேண்டும். கையில் சீனாவின்
யுயன் எடுத்துச் சென்றிருந்தேன்.

கூகுள் கொடுத்த தகவலின்படி பயணித்த தூரத்துற்குண்டான பணம் மற்றும் இரவுப் பயணத்துக்கான அதிகம் பணம் எல்லாவற்றையும் கணக்கிட்டு வைத்திருந்தேன். முதல் அனுபவம் சீனர்களின் மேல் நன்மதிப்பை உருவாக்கியது. ஓட்டலில்
இருபத்திநான்கு மணிநேரமும் வரவேற்கும் வசதியிருந்ததால் பிரச்சனை ஒன்றுமில்லை மொழிப்பிரச்சனையைத் தவிர.

மனிதனும் தெய்வமாகலாம் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்ற வாதம் நீண்ட காலமாக


சமுதாயத்தில் பேசும் பொருளாக காணப்படுகிறது. அதிலும் தமிழ் நாட்டில் கடந்த எழுபது ஆண்டுகளாக இந்த கேள்வியும் , அதற்கான பதிலும் சர்ச்சைக்குரிய விவாதமாக உலா வருகிறது. மேற்கத்திய நாடுகளில் இந்த கேள்வி இருந்தாலும் எவரும் இதை பற்றி அலட்டிக் கொள்வதில்லை . இஸ்லாமிய நாடுகளில் இந்த கேள்விக்கே இடமில்லை. ஆனால் தமிழ் நாட்டில் கடந்த எழுபது ஆண்டுகளுக்கு மேலாக இந்த விவகாரம் விவாதிக்கப் பட்டு வருகிறது. இந்த பிரச்னையை அடிப்படையாக வைத்து 1975ல் வெளி வந்த படம் மனிதனும் தெய்வமாகலாம். 


 
படத்தின் நாயகன் சிவாஜி. அப்படி என்றால் படத்தில் அவர் ஆஸ்திகரா, நாஸ்திகரா என்ற கேள்வி எழலாம். அதற்கு அவசியம் இல்லாமல் படத்தில் அவருக்கு இரட்டை வேடம் கொடுத்து ஒருவரை ஆஸ்திகராகவும், மற்றவரை நாஸ்திகராகவும் காட்டி விட்டார்கள். ஆகவே இது தொடர்பான மோதலும் இவர்கள் இருவர் இடையில் தான் வருகிறது. 


ஊரில் அண்ணண் பக்திமான், கோவில் பூசகர். முருகனிடம்

மானசீகமாக உரையாடுபவர். தம்பியோ பட்டதாரி ஆனால் இறை மறுப்பாளன். பூசகரோ கோவில் கைங்கரியம், பூசை, அபிஷேகம் போன்ற நித்திய கர்மங்கள் சீராக நடக்க வேண்டும் என்பதில் தீவிரமானவர். தம்பியோ ஊரில் மக்கள் பசி தீர வேண்டும், கல்வியறிவு விருத்தி அடைய வேண்டும், ஊழல் ஒழிய வேண்டும் என்பதில் தீவிரமானவன். இவர்கள் இருவருடைய மோதலை தூண்டி விட்டு குளிர் காய்கிறான் ஊர் நாட்டாண்மை. கணவனுக்கும் , கொழுந்தனுக்கு இடையில் சிக்கித் தவிக்கிறாள் அண்ணன் தாரம். தம்பியின் காதலியோ காதலனை பற்றி தப்பபிப்பிராயம் கொண்டு அவனை விட்டு ஒதுங்கி கண்ணீர் சிந்துகிறாள். இறுதியில் ஆஸ்திகமா ,நாஸ்திகமா ஜெயித்தது என்பதை விட , ஊருக்கு நன்மை ஏற்பட்டதா என்பதே படத்தின் ஜீவன்! 

 பூசகராக வரும் சிவாஜியிடம் அமைதி, அடக்கம்,கனிவு தென்படுகிறதென்றால் சுயமரியாதைக்காரராக வரும் சிவாஜியிடம் நக்கல், நையாண்டி, குதர்க்கம், என்பன காணப்படுகின்றன. ஆனால் ஏழை , வறிய மக்களிடம் அவர் காட்டும் அக்கறை அவரின் பாத்திரத்தை உயர்த்தி காட்டுகிறது. பூசகரிடம் காணப்படும் பக்தியை விட , ஊர் நாட்டாண்மையிடம் அவர் வைத்திருக்கும் விசுவாசம் அவரின் அப்பாவித்தனம் என்பன அவர் மீது பரிதாபத்தையே ஏற்படுத்துகிறது. 

சிட்னி / மெல்பேர்ன் / கன்பரா / பிரிஸ்பேனில் நடைபெறும் நிகழ்ச்சிகள் 2025

 .

உங்கள் நிகழ்ச்சிகளை இலவசமாக பிரசுரிக்க   tamilmurasu1@gmail.com  or  paskiho@hotmail.com , murasuau@gmail.com என்ற முகவரியில்  தொடர்பு கொள்ளவும்



                              

சிட்னியில் நடைபெறும் நிகழ்வுகள்                    

29-11- 2025  Sat: Australian Medical Aid Foundation proudly presents முத்தமிழ் மாலை

30-11-2025  Sunமாத்தளைசோமுவின்  100 சிறுகதைகள் நூல் வெளியீடு   ANTHONY CATHOLIC CHURCH-TOONGABBIE-4-00 pm to 6-30 pm.

14-12-2025  Sun: தமிழ் இலக்கிய கலை மன்றம் - திருக்குறள் போட்டிகள் -பரிசளிப்பு நிகழ்ச்சி- 5 PM   ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள  மண்டபம்

14-12-2025  Sunஸ்ரீ  துர்க்காதேவி தேவஸ்தான அறிவுத் திறன் போட்டிக்கான பரிசளிப்பு  5:30 PM   ஸ்ரீ துர்க்கை அம்மன்ஆலய வளாகத்தில் அமைந்துள்ள  மண்டபம்

இலங்கைச் செய்திகள்

நல்லூரில் மாவீரர்களின் நினைவாலயம் அங்குரரர்பணம்

மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க என்றுமில்லாதவாறு எழுச்சி பெற்ற புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசம்

திருகோணமலையில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு விழா   


நல்லூரில் மாவீரர்களின் நினைவாலயம் அங்குரரர்பணம் 

Published By: Vishnu

22 Nov, 2025 | 05:04 AM



தாய் மண்ணின் விடியலுக்காக வித்தாகிப்போனவர்களின் நல்லூர் நினைவாலயம் வெள்ளிக்கிழமை (21) மாலை 06 மணிக்கு அங்குரரர்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

பொது ஈகைச்சுடரினை , மாவீரரின் தந்தையான தம்பிராசா ஏற்றி வைத்ததை தொடர்ந்து , கல்லறை உருவகத்திற்கு, மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

அதேவேளை நினைவாலயத்தில் மாவீரர்களின் உருவ படங்கள் சிலவும் பெற்றோரினால் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

உலகச் செய்திகள்

 பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை - டாக்கா நீதிமன்றம் தீர்ப்பு

உக்ரைன் மீது ரஷ்யா கடும் தாக்குதல் - 3 சிறுவர்கள் உட்பட 26 பேர் உயிரிழப்பு 

டுபாய் விமான கண்காட்சியில் இந்திய போர் விமானம் விழுந்து நொறுங்கியது - விமானி பலி

வியட்நாமில் வெள்ளப்பெருக்கு ; 43 பேர் உயிரிழப்பு

லெபனான் எல்லையில் இஸ்ரேலின் பாதுகாப்புச் சுவர் - அகற்றுமாறு ஐ.நா. வலியுறுத்து



 பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை - டாக்கா நீதிமன்றம் தீர்ப்பு

17 Nov, 2025 | 04:42 PM
கடந்த ஆண்டு பங்களாதேஷில் நடந்த போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறை மற்றும் உயிரிழப்புச் சம்பவங்கள் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்ட அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான வழக்கில், ஷேக் ஹசீனா “குற்றவாளி” என தீர்ப்பளித்த, டாக்கா சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அவருக்கு மரண தண்டனை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

இன்று (17) டாக்காவில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் நீதிபதி, ஷேக் ஹசீனாவின் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய தன் நாட்டு மக்களையே, அவர் கொலை செய்ய உத்தரவிட்டமை உறுதியாகியிருப்பதாக தீர்ப்பின்போது தெரிவித்துள்ளார். 

பவித்ர உற்சவம் 2025

 

பவித்ர உற்சவம் என்பது “பவித்ர” (புனிதம்) மற்றும் ற்சவம் (திருவிழா) என்ற இரண்டு சொற்களின் சேர்க்கையிலிருந்து உருவானது.

ஆண்டின் முழுவதும் நடைபெறும் திருவிழாக்கள் மற்றும் பூஜைகளில் ஆகம விதிகளின் படி செய்ய வேண்டியவற்றில் ஏதேனும் தவறுகள், தவறுதல்கள் ஏற்பட்டிருந்தால், அவற்றை நிவர்த்தி செய்வதற்காக பவித்ரோத்த்ஸவம் கொண்டாடப்படுகிறது. இந்த உற்சவம், நியமிக்கப்பட்ட விதிகளை பின்பற்றுவதில் ஏற்பட்ட தவறுகளிலிருந்து மீள்வதற்காக நடத்தப்படுகிறது.

உற்சவ மூர்த்திகளின் கருடன் வாகனத்தில் வீதி உலா, புன்யாஹ வாசனம், தெய்வத்தின் புனித நீராடல் (தீர்த்தவாரி) மற்றும் திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சிகள் இதில் அடங்கும்.

மாத்தளை சோமுவின் நூல் வெளியீட்டு விழா 30.11.2025

 .



இலக்கியவெளி நடத்தும் இணையவழி ஆய்வரங்கு – 54 “நூல்களைப் பேசுவோம்”

நாள்:  சனிக்கிழமை 29-11-2025

நேரம்:

இந்திய நேரம் - மாலை 7.00

இலங்கை நேரம் - மாலை 7.00

கனடா நேரம் - காலை 8.30

இலண்டன் நேரம் - பிற்பகல் 1:30

வழி: ZOOM

Join Zoom Meeting:

Meeting ID: 389 072 9245

Passcode: 12345

https://us02web.zoom.us/j/3890729245...

 நூல்களைப் பேசுவோம்:

அனாமிகாவின்  – “ததா கதா”,  “உறுமி” – (கவிதைத்தொகுப்புக்கள்)

 

உரை:  சி.ரமேஷ்

ந. இரத்தினக்குமார்  தொகுத்த  “காடன் கண்டது” – (குறவர் இனக்குழுக்கள் குறித்த சிறுகதைகள்)

 

முத்தமிழ் மாலை 29/11/2025

 


தமிழ் மொழி /யாப்பு இலக்கண வகுப்புகள் (29/10/2025 முதல்)