பொங்கல் வாழ்த்துக்கள்

.

வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும் தமிழ்முரசின் பொங்கல்  வாழ்த்துக்கள்.



ஆசிரியர் குழு 

துக்கம் தின்ற கணங்கள் - கண்ணீருடன் சமீலா யூசுப் அலி

.
துக்கம் தின்ற கணங்கள் - கண்ணீருடன்
சமீலா யூசுப் அலி
 துக்கம் தின்ற ஒரு பெருமாலையில் உன் மரணச்செய்தி வந்தடைந்தது.நூறு துண்டுகளாய் நொருங்கிப்போனேன்.உள்ளுக்குள் அடங்க மறுத்த கண்ணீர் திமிறிக்கொண்டு வெளியேறியது.

கைகளும் கால்களும் செயலற்று உறைந்தேன்.
உன் வீட்டின் நாளைக்காய் உன் நிகழ்காலத்தை,கனவுகளை,உம்மாவின் அருகாமையை அடகு வைத்தாய்…

உன் வலிக்கும் ஞாபகங்களை மட்டும் எங்களுக்காய் மீதம் வைத்து நீ சென்று விட்டாய்… இல்லை உன்னை பலவந்தமாய் அனுப்பி வைத்தது அநீதியின் கொடிய கரங்கள்.

உன்னைக் காப்பாற்றி விடலாம் என்ற நம்பிக்கை கடைசியில் வெற்றுக் கனவாய் போனது.

ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பது நீதியின் கொள்கை.குற்றம் செய்யாத சூழலை உருவாக்காமல் குற்றவாளிக்குக் கூட தண்டனை வழங்கக் கூடாதென்ற உத்தமமான இறைவனின் நீதியே ஷரீஆ சட்டம். அல்லாஹ்வின் கட்டளையை விட ஆதிக்கத்தின் கட்டளைக்கு அடிபணிந்த சவூதியின் நீதிமன்று.

உன் உள் நெஞ்சின் ஏக்கங்களோ, உன் உம்மாவின் அழுகுரலோ சவூதியின் காதுகளில் கடைசி வரை விழவேயில்லை சகோதரி…

கடைசி கடைசியாய் நீ உன் உம்மாவோடு,தம்பி தங்கைகளோடு கொஞ்சம் பேச ஆசைப்பட்டிருப்பாய்…

றிஷானா நபீக் கருகிய மொட்டு

.


றிஷானா நபீக் என்ற ஏழைக் குழந்தை இரக்கமற்ற சவுதி அரசால்  09.01.2013 அன்று தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது மனித குலத்தினால் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒரு செயல். சட்டம் தண்டனை வழங்குகிறது என்ற பெயரில் ஒரு கொலையை புரிந்திருக்கிறது.

இது நாகிரீக உலகில் நடக்கும் மன்னிக்க முடியாத தண்டனைகள். இதை தடுக்கமுடியாது பார்துக்க்கொண்டிருக்கும் ஐ நா மனித உரிமை அமைப்பு எதற்கு?

றிஷானாவை இழந்து தவிக்கும் அவரின் பெற்றோருக்கும் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த    அனுதாபங்கள் உரித்தாகட்டும்.

தமிழ்முரசுஅவுஸ்ரேலியா  


ஒரு பறவையின் மரணச்சடங்கு - செ.பாஸ்கரன்

.
.
ஒரு மனிதன் இறந்துவிட்டால் உற்றார் உறவினர் நண்பர்கள் கூடுவார்கள் துன்பத்தில் வாடுவார்கள் அழுவார்கள் துடிப்பார்கள் இது இயல்பாக நடக்கின்ற ஒன்று . பெரும்பாலனவர்கள் இறந்தவரின் நல்லவற்றைப்பற்றி பேசுவார்கள் "பாவம் நல்ல மனிதன்" என்ற முத்தாய்ப்போடு முடிப்பார்கள் சிலர் இறந்தவரின் தவறுகளை சொல்லிக் காட்டுவதும் நடக்கும். ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ மாநிலத்தீர் வேண்டாம் நமக்கும் அதுவழியே " என்ற பாடல் தெரிந்திருந்தாலும் யாராவது அழாமல் இருந்ததுண்டா .அதுதான் மனித இயல்பு கூட்டம் கூட்டமாக நின்று துக்கம் பேசிக்கொண்டிருப்போம். இன்று காலை வேலைக்கு சென்றுகொண்டிருக்கும்போது High way ஓரத்தில் கூட்டமாக cockatoo பறவைகள் அமர்திருந்தன இயல்பாக கத்தி சத்தம் போட்டுக்கொண்டிருக்கும் அந்த பறவைகள் மிக அமைதியாக அமர்ந்திருந்து ஒன்றை ஒன்று பார்த்துக்கொண்டிருந்தன. என்ன இவைகள் இப்படி இருக்கின்றன என்று யோசிக்கும் தருணம் வீதியில் வாகனத்தில் அடிபட்டு பறவை ஒன்று இறந்து கிடந்தது .


 இப்போது அந்த பறவைக்கூட்டத்தை பார்த்தபோது அவைகளின் முகத்தில் சோகம் அப்பிக்கிடந்தது . புரியாத வேளைகளில் என்னசெய்வது என்று மனிதன் கைகளைப் பிசைவதைபோல் சில பறவைகள் அலகினால் செட்டையைக் கிளறிக்கொண்டிருந்தன. அந்த சோகம் என்னவோபோல் இருந்தது. சின்ன வயதில் நான் கிளி பிடித்துக்கொண்டு வந்தால் வாய் பேசாத பறவையை வருத்தாமல் விடடா என்று என் அம்மா கூறுவது என்மனதில் அறைந்ததுபோல் இருந்தது . வாய் பேசாத பறவையா ? அப்படிஎன்றால் இந்த சோகத்தை அவை எப்படி பகிர்ந்துகொண்டன. எப்படி எல்லா பறவைகளும் சாவீட்டிட்கு வந்து எதுவும் பேசாது அமர்திருக்கின்றது ? எத்தனை அறிவு இந்த பறவைகளுக்கு ? இவைகளையும் மரணம் வாட்டுகின்றதா ? குடும்ப உறவு ,பந்தம், பாசம் இவைகள் இருக்கின்றதா மனிதனைப்போலவே நல்லது கெட்டது என்று பேசிக்கொள்ளுமா? போட்டி பொறாமை இருக்குமா ? சிந்தனை பலவழிகளில் சிறகடிக்க, சிறகடிக்காது இறந்துகிடந்த அந்த cockatoo பறவையும் அதன் மரணச்சடங்கில் கலந்துகொண்ட கூட்டத்தையும் எண்ணியவண்ணம் வேலையை வந்தடைகிறேன் .

இலங்கைச் செய்திகள்


வடக்கு கிழக்கில் அறுபதினாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் இடையில் விலகினர்
பி.பி.சி
அடுத்து என்ன

குடாநாட்டில் சிறுமியர் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் மோசமாக அதிகரிப்பு

மகளிர் படையணியில் இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ் யுவதிகள் கொழும்பு வருகை

ரிசானாவின் மரணத்துக்கு இலங்கை ஜனாதிபதியே பொறுப்பு!- ஆசிய மனித உரிமைகள் ஆணையம்

அநுராதபுரம் பள்ளிவாசல் மீது இனந்தெரியாத குழுவினர் தாக்குதல்

பத்திரிகையின் விநியோகப் பணியாளர் மீது தாக்குதல்: பத்திரிகைகள், மோட்டார் சைக்கிள் எரிப்பு

ரிசானாவின் குடும்பத்தினருக்கு வீடு ஒன்றை அமைத்துக் கொடுக்க முன்வந்த சவூதி தனவந்தர்

பாராளுமன்ற வளாகத்தில் ஆயிரக்கணக்கானோர்

சுவாமி விவேகானந்தர் 150-வது பிறந்தநாள்

.









          தத்தை அபின் என்று வர்ணித்தார் கம்யூனிசத்தின் தந்தை கார்ல் மார்க்ஸ். பிறப்பிலிருந்தே அந்த போதை ஒவ்வொரு மனிதனுக்கும் ஊட்டப்படுவதால், இறப்பு வரை அது நீடிக்கிறது. மரபணுக்களிலேயே மதஉணர்வுகள் படிந்திருக்கின்றனவோ என்று மருத்துவர்கள் ஆய்வு செய்யவும் கூடும். சில நேரங்களில் போதையும் கூட குறிப்பிட்ட அளவில் மருந்தாகவும் உணவாகவும் பயன் படுத்தப்படுவது உண்டு. அலோபதி மருந்துகள் பலவற்றில் சிறிதளவு ஆல்கஹால் கலந்திருக்கிறது. கிராமப்புறங் களில், ஆப்பம் தயாரிப்பதற்கான மாவில் சிறிதளவு கள் சேர்ப்பார்கள். உணவு சுவையாக இருக்கும் என்பதால்.

போதை வஸ்தை மருந்தாகவும் உணவாகவும் கையாளத் தெரிந்தவர்கள் மிகக் குறைவானவர்களே. மதத்தையும் அப்படித்தான். அதிலும், தொடக்கம் எது என்றே தெரியாத இந்துமதத்தைக் காலத்திற்கேற்ற மாற்றங் களுடன் கையாள்வது என்பது மிகப்பெரும் சவால். பழமையில் ஊறிய சனாதனிகளும், சாதிபேதத்தை வளர்க்கின்ற மதவெறியர்களும் நிறைந்த ஒரு மதத்தில் புதுமைக் கருத்து களைச் சொல்வதும் நடைமுறைப் படுத்துவதும் சவாலான செயல்பாடுகளாகும். அத்தகைய செயல்பாடுகளை மேற்கொண்டவர் தான் சுவாமி விவேகானந்தர்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா நகரில் 1863 ஜனவரி 12-ஆம் நாள் அவர் பிறந்தார். நரேந்திரநாத் தத்தா என்பதுதான் அவரது இயற்பெயர். ஆன்மீகத்தில் அவருக்கு நாட்டம் ஏற்பட்டது. இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரானார். குருவின் புகழ் பரப்பும் வகையில் செயல்பட்டார். இந்து மதத்தின் கோட்பாடுகளைக் கற்றதுடன் அதனை ஒரு புதுப்பார்வையில் நோக்கினார் விவேகானந்தர். 

ஜெயஸ்ரீ ஒஸ்கார் விருதுக்கு பரிந்துரை

.


வானொலி மாமா நா. மகேசனின் குறளில் குறும்பு – 51 “நாள் ஒரு வாள்”


ஞானா:        அப்பா….அப்பா…உங்களை ஒண்டு கேக்கவேணும்…

அப்பா:        ஞானா ஒண்டென்ன…. ஒன்பதும் கேள். எனக்குத் தெரிஞ்சதைச் சொல்லிறன்.

ஞானா:        அதாவது வந்தப்பா “நாள் செய்வது நல்லார் செய்யார்” எண்டு ஒரு பழமொழி இருக்கெல்லே            அப்பா?

அப்பா:        பிள்ளை ஞானா உது பழமொழியோ,  புதுமொழியோ எண்டது எனக்குத் தெரியாது இப்ப                 உதைப் பற்றி என்ன கேகக்கப் போறாய்?

ஞானா:        உந்த நாள் செய்வது எண்டதின்ரை கருத்தென்னப்பா?

மாபெரும் பொங்கல் விழா - 2013




மாபெரும் பொங்கல் விழா - சிவிக் பூங்கா பெண்டில் ஹில் - 20 Jan 2013 காலை 8.30

கொழும்பில் மூன்று மொழிபெயர்ப்பு நூல்களின் வெளியீடு



“இனங்களின் புரிந்துணர்வுக்கு இலக்கியப்படைப்புகளின் மொழிபெயர்ப்பு அவசியம்”

கொழும்பில் நடந்த மூன்று மொழிபெயர்ப்பு நூல்களின் வெளியீட்டில் கருத்து



சமூகங்களை ஒருங்கிணைப்பதிலும் அவற்றிடையே புரிந்துணர்வை வளர்ப்பதிலும் இலக்கியத்துக்கும் எழுத்தாளர்களுக்கும் முக்கிய பங்குண்டு. அந்த நோக்கோடு இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து அவுஸ்ரேலியாவில் வாழும் நொயல் நடேசன்,  முருகபூபதி ஆகியோரின் மூன்று மொழிபெயர்ப்புப் புத்தகங்களின் வெளியீட்டு நிகழ்வு 08.01.2013 அன்று மாலை 5.00 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் செயற்குழுக்கூட்ட அறையில் நடந்தது.
டொக்ரர் நரேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மங்கல விளக்கினை வீரகேசரி வாரப்பதிப்பின் முன்னாள் ஆசிரியர் வி. தேவராஜ், திரைப்பட இயக்குனர் அசோக ஹந்தகம,  கொடகே பதிப்பக அதிபர்சுமணஸ்ரீ கொடகே,  டான் (தமிழ் ஒளி) தொலைக்காட்சியின் பணிப்பாளர் ‘ பாரிஸ் ஈழநாடு’குகநாதன் உள்ளிட்ட பலர் ஏற்றிவைத்தனர்.

தமிழ் பொறியியலாளர் சங்கத்தினரின் பொங்கல்



றிஷானா நபீக் என்ற ஏழைப் பெண்ணின் பாதாப முடிவு

.
றிஷானா நபீக் என்ற ஏழைப் பெண்ணின் பாதாப முடிவு, நாகரீக உலகம் வெட்கப் பட வேண்டிய விடயம்
-  இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். 09.01.13
2005ம் ஆண்டு வைகாசி மாதம், மூதுரைச் சொந்தவிடமாகக் கொண்ட  பதினேழு வயதான றஷினா நவிக் என்ற ஏழைப் பெண் சவுதி அNபியாவிலுள்ள ஒரு குடும்பத்துக்குப் பணிப் பெண்ணாகச் சென்றார். வேலைக்குச் சென்ற ஒரு மாதத்திலிலேயே, அவரின் பராமரிப்பிலிருந்த நான்கு மாதக்குழந்தையைக் கொலை செய்ததாக்குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப் பட்டார். குழந்தைக்குப்பால் கொடுக்கும்போது குழந்தையின் தொண்டையில் பால் அடைத்துக்கொண்டதால் மூச்சுத்திணறி குழந்தை இறந்ததாகவும் அதற்குக்காரணம் றஷினா என்றும் குற்றம் சாட்டப்பட்டார்.

 அந்தக்குழந்தை எப்படி இறந்தது என்பதற்கான எந்தவிதமான விளக்கமுமில்லாமல் இறந்த குழந்தையின் பெற்றோரின் தகவல்களுடன் றஷினா கொலைகாரியாக்கப் பட்டார்.

 றஷினாவின் பிறந்த திகதி  4.2.1988. அப்படியானால் கொலைக்குற்றம் சாட்டப்பட்டபோது அவரின் வயது பதினேழு. சுவதி அரேபியச் சட்டத்தின்படி வயது குறைந்தவர்களுக்கு மரண தண்டனையில்லை. ஆனால். றஷினாவில் பாஸ்போர்ட்டில் அவரின் பிறந்த திகதி 02.02.1982ம் ஆண்டு என்று போட்டிருந்ததால், றஷினாவின் தலைவிதி இன்று நடந்த கொடுமைச் சம்பவத்தில்; முடிந்திருக்கிறது.

 றஷினாவின் நிலையைக் கேள்விப்பட்ட பல்லாயிரக்கணக்கான நல்ல மனிதர்கள் அவரின் விடுதலைக்காகக் கடந்த பல்லாண்டுகளாகப் போராடினோம். இலங்கையரசும் பல தடவைகளில் பற்பல முயற்சிகளையும் செய்தார்கள். ஆனாலும் இன்று நடந்த விடயம் தாங்கவொண்ணாத் துயரைத் தருகிறது. எப்படியும் றஷினா விடுதலை செய்யப்படுவார் என்று நான் மனதார நம்பினேன்.

தமிழர் விளையாட்டு விழா 2013





விஸ்வரூபம் ரூ.150 கோடி வசூலிக்கும்! கமல் நம்பிக்கை!!

.


kamal-1விஸ்வரூபம் படம் நிச்சயம் ரூ.150 கோடி வசூலிக்கும் என நடிகர் கமல்ஹாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் இயக்கி, நடித்து பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் விஸ்வரூபம். படத்தின் தலைப்புக்கு ஏற்றார் போல் இப்படத்திற்கு எழுந்த பிரச்னைகளும் விஸ்வரூபமாகவே இருந்தது. இப்படத்தை டி.டி.எச்.இல் வெளியிடும் புதிய திட்டத்தை கமல் கொண்டு வந்தார். இதுதொடர்பாக நாட்டில் உள்ள முக்கிய டி.டி.எச்., நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து, ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி, படமும் கடந்த 10ம் தேதி இரவே டி.டி.எச்.-இல் ஒளிப்பரப்பாக இருந்தது. ஆனால் இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சிட்னி முருகன் கோவிலில் சமயச் சொற்பொழிவு



உலகச் செய்திகள்

.
டெல்லி வல்லுறவு விவகாரம்: எனது மகளின் பெயர் ஜோதிசிங் பாண்டே வெளியிட்டார் தந்தை

 "நாங்கள் தவறு செய்யவில்லை வழக்கை எதிர்கொள்வோம்": டெல்லி பாலியல் குற்றவாளிகள்

சிரியாவில் 10 லட்சம் பேருக்கு உணவு தர இயலாது : ஐ.நா. சபை

சீனாவில் பனியில் சிக்கிய கப்பல்கள்!

டெல்லி வல்லுறவு விவகாரம்: எனது மகளின் பெயர் ஜோதிசிங் பாண்டே வெளியிட்டார் தந்தை


டெல்லியில் 23 வயது மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர் கடந்த மாதம் 16 ஆம் தேதி ஓடும் பஸ்சில் கொடூரமாக வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு பின்னர் சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஆனால் அந்த பெண்ணின் பெயர் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த சம்பவத்தை தொடர்ந்து, பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வகை செய்யும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர இருக்கிறது.



ரிசானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது'

.
- பி.பி.சி
rizana_nafeekஇலங்கை பணிப்பெண்னான ரிசானா நஃபீக் 2005 ஆம் ஆண்டில் தனது பராமரிப்பில் இருந்த குழந்தையை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், சவுதி அரேபிய அரசாங்கத்தினால் அவருக்கு மரண தண்டனை தற்போது நிறைவேற்றப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
4 மாத குழந்தையை கொலை செய்ததாக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ரிசானா நஃபீக் மறுத்திருந்தார்.
ரிசானா அந்தக் கொலையைச் செய்ததாகக் கூறப்படும் தருணத்தில் அவருக்கு 17 வயதுதான் என்றுபரவலாக நம்பப்படும் நிலையில், அந்தக் கொலை நடந்தபோது அவர் சட்டப்படி ஒரு சிறுமி மாத்திரமே.

இந்த நிலையில், ரிசானாவை சிரச்சேதம் செய்ததற்காக, சவுதி அரசாங்கம் சர்வதேச சட்டங்களை மீறியதாக குற்றஞ்சாட்டப்பட முடியும் என்று சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கூறுகின்றன.
நியாயமற்ற விசாரணை
8 வருடங்களுக்கு முன்னர் நடந்த இந்தச் சம்பவத்தில் அந்த 4 மாதக் குழந்தையைக் கொன்ற குற்றச்சாட்டை ரிசானா மறுத்திருந்தார். ஆரம்பகட்டத்தில் பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம்கூட அழுத்தங்களின் கீழ், மொழி பெயர்ப்பு உதவியும் இல்லாமல் பெறப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.

அவருக்கான தண்டனை வழங்கப்படுவதற்கு முன்னர் அவருக்கு சட்டத்தரணிகளின் உதவியும் வழங்கப்படவில்லை.

ஆனால், தற்போது 8 வருடங்களின் பின்னர் தனது விதி என்ன என்று எதுவும் தெரியாமல் இருந்த நிலையில் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ் சினிமா

நீதானே என் பொன்வசந்தம்

காதல் ஜோடியின் மூன்று காலகட்டத்திலான ஊடலும், கூடலுமாக கலந்த கதையே நீதானே என் பொன்வசந்தம்.
மின்னலே, விண்ணைதாண்டி வருவாயா போன்ற காதல் படங்களைக் கொடுத்த கௌதம் மேனன் மீண்டும் ஒரு முறை காதல் படத்தை எடுக்க முயற்சித்திருக்கிறார்.
கல்லூரியில் சமந்தாவை பார்க்கும் ஜீவா, பள்ளி காலத்தில் அவரோடு பழகியதை நினைவு கொள்கிறார்.
2ம் வகுப்பு படிக்கும்போதே ஜீவாவும், சமந்தாவும் நண்பர்களாக இருக்கின்றனர். பின்பு சிறு பிரச்சினையில் இருவரும் சண்டைபோட்டு பிரிகிறார்கள்.
மீண்டும் 10ம் வகுப்பு படிக்கும்போது ஒரே பள்ளிக்கூடத்தில் படிக்கின்றனர்.
பழைய பகையை மறந்து மீண்டும் நட்பாக பழகுகின்றனர். இந்த நட்பு 11ம் வகுப்பு வரை தொடர்கிறது. அதன்பின் மீண்டும் சண்டை போட்டு பிரிகின்றனர்.
அதன்பின்பு தொடர்பே இல்லாமல் இருக்கும் இவர்கள் இருவரும் பல கல்லூரிகள் பங்கேற்கும் விழாவில் நேரிடையாக சந்திக்கின்றனர்.
அப்போது, தங்களுடைய பகையை மறந்து நெருக்கமாக பழகுகின்றனர். இதனால் இருவருக்குள்ளும் காதல் மலர்கிறது.
கல்லூரி முடிந்து வெளிவந்த பின்பும் தொடர்ந்து காதலிக்கிறார்கள். ஒருகட்டத்தில் இவர்களுக்குள் மீண்டும் பிரச்சினை வர சண்டைபோட்டு பிரிகிறார்கள்.
பல வருடங்கள் கழித்து, தனது காதலியான சமந்தாவை பார்க்க ஒரு கடலோரக் கிராமத்திற்கு ஜீவா வருகிறார்.
அங்கு இருக்கும் சமந்தாவை சந்திப்பதற்காக 10 நாட்கள் அங்கேயே தங்கிவிடுகிறார்.
சமந்தாவை சந்தித்து பேசும்போது, அப்போதும் இருவருக்கும் சண்டை வருகிறது. அதனால், மறுபடியும் பிரிந்து செல்கிறார்கள்.
சில மாதங்கள் கழித்து சென்னையில் மீண்டும் சந்திக்கின்றனர். அப்போது தனக்கு அடுத்த மாதம் கல்யாணம் நடக்கப்போவதாக சமந்தாவிடம் ஜீவா சொல்கிறார். அதைக்கேட்டு சமந்தா பிரமிப்படைகிறார்.
இறுதியில் ஜீவாவுக்கு கல்யாணம் நடந்ததா? அல்லது ஜீவா-சமந்தா காதல் ஒன்று சேர்ந்ததா? என்பதே மீதிக்கதை.
மீண்டும் பிக்கப் பண்ணும் எண்ணத்தோடு ஜீவா, 'நினைவெல்லாம் நித்யா' படத்திலிருந்து நீதானே என் பொன் வசந்தம்... என்ற பாடலை பாட நித்யாவான சமந்தா, வருண் என்கிற ஜீவாவின் பாடலை ரசிக்கிறார்.
முக்கியமான சினிமா பாடல்களையெல்லாம் கூச்ச நாச்சமில்லாமல் சொந்த காதல்களுக்கு டெடிகேட் பண்ணி வரும் இந்த கால இளசுகளுக்கு நேர்கிற மாதிரியே எல்லாமும் நடக்கிறது.
பள்ளி மாணவனாக, கல்லூரி மாணவனாக, வேலைக்கு செல்லும் இளைஞனாக என்று மூன்று காலகட்டத்திலும் வரும் ஜீவாவை பார்த்தால் எந்த வித்தியாசமும் தெரியவில்லை.
ஆனால், சமந்தா காதலில் கலந்து ரசிகர்களை கரைய வைக்கிறார். ஜீவாவின் காதலுக்குக்காக ஏங்கும் போதும், அவரை வெறுத்து ஒதுக்கும் போதும் நடிப்பில் பிரமாதப்படுத்துகிறார்.
'சுடிதாருக்குச் சாயம் போனாத்தானே உங்களுக்கு பேன்ட், ஷர்ட்லாம் கண்ணுக்குத் தெரியும்’, 'சில்-அவுட் மச்சான்’- மாறி மாறி வரும் ஊடல் கூடல் வசனங்களுக்கு மத்தியில், சந்தானத்தின் ஒன் லைன் பஞ்ச்கள்தான் சின்ன ஆறுதல்.
சமந்தாவை பிரிய ஜீவா சொல்லும் காரணம் அவ்வளவு ரகசியத்திற்குட்பட்டதல்ல.
அதை சமந்தாவிடமே சொல்லிவிட்டு படிக்க போயிருக்கலாம். அவர் சமந்தாவை மீண்டும் சந்திக்கும் போதாவது சொல்வார் என்றால், அதுவும் இல்லை.
சமந்தா அண்ட் கோவுக்கு நடுவில் ஒரு குண்டு பெண் வருகிறார். (பிரபல நடிகர் மோகன்ராமின் மகளாம்) போகிற போக்கில் நடிப்பை ஊதி தள்ளுகிறார்.
நகைச்சுவை வேடத்தில் நடிக்க பெண்களே இல்லை என்ற சமீபகால வறட்சியை போக்குவாரா. இவருக்கும் சந்தானத்திற்கும் ஒரு விண்ணை தாண்டிய லவ்வை காட்டி, தன் முந்தைய படத்தையே லந்து பண்ணுகிறார் கௌதம். இருந்தாலும் ரசிக்க முடிகிறது.
இந்த படத்தில் முதலும் முற்றுமாக இருந்தவர் இசைஞானி இளையராஜாதான்.
இன்னமும் இந்த உலகத்தை தனது இசையால் நிரப்பிக் கொண்டிருக்கிற இந்த ராஜா, இப்படத்திற்காக தந்திருக்கும் பாடல்கள் எல்லாமே அற்புதம். அதுவும் 'சாய்ந்து சாய்ந்து' என்கிற பாடல் இந்த வருடத்தின் சூப்பர் ஹிட்.
ஆனால் படம் முழுவதும் பிரிவதும் சேர்வதுமாக கதை மெதுவாய் நகர்கிறது. திரைக்கதை ரசிகர்களை அதிகளவில் வெறுப்பேற்றுகிறது.
கௌதம் மேனனின் படங்களில் வசனம்தான் படத்திற்கு பெரிய பலமாக இருக்கும். அதுமட்டுமே இந்த படத்தில் இருப்பது இப்படத்திற்கு பலவீனமாக உள்ளது.
வசனங்களுக்கேற்ற ஆழமான காட்சிகள் இல்லை. காட்சிகள் அனைத்தும் செயற்கையாகவும், நாடகத்தனமாகவும் இருக்கின்றன.
இவையெல்லாம் படம் முழுக்க இருப்பதால் படத்தை ரசிக்கமுடியாமல் போய்விட்டது.      நன்றி விடுப்பு