புத்தாண்டு வாழ்த்துக்கள்


தமிழ் முரசு வாசகர்கள் அனைவருக்கும் எமது உளம் கனிந்த சார்வரி வருட புத்தாண்டு வாழ்த்துக்கள் 


மரண அறிவித்தல்

..

 இளைப்பாறிய ஆசிரியை திருமதி அன்னம்மா செல்வதுரை 



ஒரே மேடையில் இளம் இசையமைப்பாளர்கள்


இசை என்றாலே மனித மனங்களை ஆட்கொள்ளும் சக்தி . இங்கு நான்கு மிகப் பெரிய இளம் இசையமைப்பாளர்கள் இசையின் சிகரம் A .R . ரகுமான் இசையை எப்படி ரசித்தார்கள் என்று பார்ப்பது அருமையாக உள்ளது. நீங்களும் ரசிக்கலாம் .

https://www.facebook.com/ZeeTamizh/videos/602230380577037/


நன்றி Z தமிழ் 

சார்வரி வருஷப்பிறப்பு - நாதன்குருக்கள்


வாக்கிய பஞ்சாங்கப்படி அவுஸ்த்திரேலியா SYDNEY MELBOURNE நேரத்தில் தரப்பட்டுள்ளது.

வருஷம் பிறக்கும் நேரம் 13ம் திகதி திங்கட்கிழமை இரவு 11.56 
விஷுபுண்ணிய காலம்.  திங்கட்கிழமைஇரவு 7.56 முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.56 வரை
இந்த விஷுபுண்ணிய காலத்தில் மருத்து நீர் வைத்து நீராடி வெண்பட்டாடை அல்லது வெள்ளைக்கரை அமைந்த புத்தாடை அணிதல் வேண்டும்.
கைவிஷேஷம் 14/04/2020 செவ்வாய்க்கிழமை
நண்பகல் 12.01 முதல் 12.42 வரை 

அனைவரும் இப்புதுவருடத்தில் நோய்நொடிகள் அகன்று சகல செல்வங்களும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ சிட்னி முருகன் பாதம் பணிந்து  வாழ்த்துகின்றேன்.  நன்றி 

மருத்து நீர் தயாரிப்பு - நாதன் குருக்கள்


எதிர்வரும் சித்திரை புத்தாண்டு தினத்திலே அனைவரும் மருத்து நீர்வைத்து நீராடுதல் வேண்டும். இன்றைய சூழ்நிலையில்  மருத்து நீர் வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு தயாரிப்பது எப்படி என்பதை உங்களுக்கு அறியத்தருகின்றேன் 

மஞ்சள் கட்டி 
மிளகு 
அறுகம்புல் 
துளசி 
றோஜா பூக்கள்
சுக்கு
வில்வம்
கோசலம்
கோமயம்
சிறிதளவு பால் 

இவற்றில் கிடைப்பவற்றை சுத்தமான நீரில் இட்டு காய்சசி எடுத்தால் மருத்து நீர் தாயாராகி விடும் .
கோசலம்,  கோமயம் கிடைக்காதவிடத்து வீபூதி சேர்த்து கொள்ளலாம் .

இந்த மருத்து நீரை தயாரித்து சிரசில் இட்டு நீராடி சார்வரி வருடப்பிறப்பை அவர்அவர் இல்லங்களில் இருந்து இறைவழிபாட்டை மேற்கொண்டு அவன் அருள் பெறுவோமாக. நன்றி



'கொறோனா'வால் - அந்தரிக்கும் அகிலத்து மக்களைநீ காப்பதெப்போ? - ........ பல்வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி


முந்திவந்து அருள்சிந்தி விந்தைசெய்யும் கந்தகுகா!
எந்தநாளும்  ஏங்கிவாழும்  சொந்தங்களுக் கருள்வதெப்போ?
                                       (முந்தி) 

அந்திவண்ணன் உமையாளொடு எந்தநாளும் மகிழ்ந்திருக்கத்
தந்திமுகன் தம்பியெனப் பிந்திவந்த செந்திவேலா!
                                       (முந்தி) 

சந்ததமுந் தொழுதேத்தி வந்தனையும் செய்யலையோ?
சிந்தையிலே உனையிருத்திச் சிவம்வளர்த்தோம் மறந்தனையோ?  
சுந்தரம யூரமேறிச் செஞ்சரண அருள்சொரிந்து
அந்தரிக்கும் அகிலத்து மக்களைநீ காப்பதெப்போ?
                                     
இன்றிந்தக் கலியுகத்தில் அதர்மநிலை கண்டுதானோ?
கொன்றழிக்கும்; 'கொறோனா'வை  எங்குமின்று பரவவிட்டாய்?  
என்றென்றும் அறங்காக்கும் இனியவுன்றன் மக்களைநீ
மன்றாடிக்; கேட்டிடுவேன் மால்மருகா காத்திடாயோ?

அவனியெலாம் இயற்கையதன் சீற்றமெனக் கொறோனாவை
பவனிவரச் செய்ததேனோ? பலரையது மாய்க்குதையா!
புவனமெலாம் மனிதகுலம் இயற்கைவள மழித்ததற்குச்;
சிவனவனார் கற்பிக்கும் சீர்திருத்தப் பாடமிதோ?  

பூமிக்கு வந்த சாமிகள் ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ... அவுஸ்திரேலியா


               தேடிக் கண்டுகொண்டேன் - திரு

               மாலொடு நான்முகனும்
               தேடித் தேடொணாத் தேவனை யென்னுளே 
               தேடிக் கண்டுகொண்டேன்.

     என்னும் திருமுறைப் பாடல் இறைவனை உள்ளத்தினுள்ளே கண்டு கொண்டதாக உரைத்து
நிற்கிறது.உள்ளத்தினுள் கண்ணுற்றேன் இறைவனை என்று சொல்லும் இந்தத் திருமுறைக்கு இப்போ என்னதான் அவசியம் என்று எண்ணுகிறீர்களா கண்கண்ட தெய்வம் என்கிறோம் கலியுக வரதன் என்கிறோம். பார்க்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருள் என்கிறோம். தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்கிறோம். கூப்பிட்ட  குரலுக்கு ஓடிவருவான் என்கிறோம். இப்படிஎல்லாம்  நாங்கள்  நினைத்திருக்கும் கடவுளைக் கண்ணால் கண்டோமா என்றால் அதற்குச் சரியான பதிலை வழங்குவது கடினம். சரியான பதிலைத் தருகிறோம் என்று சிலர் முன்வந்தாலும்கூட அங்கும் சரியான பதில் கிடைக்குமா என்பதும் ஐயத்துக்குரியதே. 

    கடவுளைக் காணமுடியுமா என்பது உலகத்தில் அன்று தொடக்கம் இன்றுவரை மனதுக்குள் பதிந்திருக்கும் பெருவினாவாகும். எதிர்பாராமல் எதிர்பாரா நேரத்தில் யாராவது உதவி நிற்கும் வேளை அவரை " கடவுள் போல வந்தீர்கள் " என்று அழைப்பது நம்வாழ்வில் காண்கிறோம். தக்க சமயத்தில் கைகொடுக்கும் செயலை கடவுளின் செயலாகக் கருதுகிறோம். தக்க சமயத்தில் உதவு நிற்பவர்களைக்கூட  சமூகத்தில் கடவுள் வடிவிலேயே 
காணும் நிலையும் காணப்படுகிறது.  தேவ உலகம் இருக்கிறது. அங்கு தேவன் இருக்கின்றான். அந்தத் தேவன் உதவிடுவான் என்னும் நம்பிக்கை சமுகத்தில் வேரூன்றி இருக்கிறது எனலாம். 
  கடவுளை நம்பாதவர்கூட தம்மை அறியாமலே " கடவுளே " என்று சொல்லு வதையும் காண்கிறோம். கடவுளுக்கென பல பெயர்கள் பல உருவங்கள் கொடுக்கப் பட்டாலும் "கடவுள் ஒருவரே " என்னும் கருத்தை மறுப்பதற்கும் இல்லை என்பதும் கருத்திருத்த வேண்டியதே ஆகும்.கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்கூட "  கடவுளை இயற்கை வடிவில் காண்கிறார்கள்"   என்பதும் நோக்கத்தக்கதாகும்.அதுமட்டுமல்ல கடவுள் என்னும் பெயரை உச்சரிக்க விரும்பாதவர்கள் " எமக்கு மேற்பட்ட சக்தி  " என்று அழைப்பதும் கருத்திருத்தக் கூடியதே. 

ஆர்வருவார் சித்திரையை ஆவலுடன் வரவேற்க ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா


             
                           மனமெல்லாம் சித்திரையை வரவேற்கத் துடித்தாலும்
                            தினம்தினமாய் வரும்செய்தி செவிகேட்கக் கசக்கிறது 
                      புத்தாடை வாங்கலாமா பொங்கலுமே செய்யலாமா 
                             என்கின்ற அச்சநிலை எங்குமே தெரிகிறதே   ! 

                      கூடிநிற்றல் குற்றமென கொள்கையிப்போ இருக்கிறது
                             ஆடிப்பாடி மகிழுவதும்  அரசால் தடையாகிறது 
                      வீட்டினிலே சிறையிருக்கும் வேதனையில் இருக்கையிலே
                             நாட்டினிலே சித்திரையை  யார்வருவார்  வரவேற்க ! 

                     வழிபாட்டுத் தலமெல்லாம் மனிதநட மாட்டமில்லை 
                             வர்த்தக நிலையமெல்லாம் பாதுகாப்பு மயமாச்சு 
                    வெடிவாங்கி கொண்டாட   வேட்டுவைத்த கொரனோவால் 
                              வடிவான சித்திரையை வரவேற்க யார்வருவார்  ! 

                    பழம்வாங்கப் போவதற்கும் பயமாக இருக்கிறது
                         கிழப்பருவம் எய்தியவர் குலைநடுங்கி நிற்கின்றார் 
                  கொரனோவை எண்ணியெண்ணி கொண்டிருந்த மகிழ்வனைத்தும்
                         அடியோடு கலையும்நிலை ஆர்வருவார் வரவேற்க  ! 

செல்வேந்திரனின் “பாலை நிலப் பயணம்” 📕 நூல் நயப்பு - கானா பிரபா



இந்தக் கொரோனாக் காலத்தில் வீட்டுச் சிறையில் இருக்கும் நாம் அதிக பட்சம் என்ன செய்து விட முடியும் என்பதற்கு நம்மைச் சுற்றியே பல வாய்ப்புகளும், தொழில் நுட்பங்களும் விரவிக் கிடக்கின்றன. இவையெல்லாம் இல்லாத பதுங்கு குழி நாட்கள், பொருளாதாரத் தடை, மின்சாரத் தடை என்று ஐந்து ஆண்டுகள் தொண்ணூறுகளின் முதற் பாகத்தை ஈழத்தில் கழித்தவர்கள் அனுபவ ரீதியாக ஒப்பு நோக்குவர்.

இந்த யுகத்தின் அரியதொரு சாதனம் கிண்டில் எனும் மின்னூல் பதிப்பு. நெருக்கடியான சூழலில் நமக்குத் தேவையானதை அமேசனில் கிண்டினால் கொட்டுகிறது பல நூறு புத்தகங்கள். வல்லிக்கண்ணனின் “நல்ல மனைவியை அடைவது எப்படி?” (தேவையா இது 😀) முதல் போன வாரம் எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் யாரோடு மல்லுக்கட்டினார் போன்ற அக்கப்போர் ஈறாகக் கொட்டிக் கிடக்கிறது.
அவற்றுள் இன்றைய கால நேரத்துக்கு ஏற்றது என்று பொறுக்கியதில் வந்து விழுந்தது செல்வேந்திரனின் “பாலை நிலப் பயணம்” என்ற பயண நூல்.

வானொலியில் நேயர் ஒருவர் வந்து சோக ரசம் பிழியும் பாட்டொன்றைக் கேட்டார்.
நான் அதை மறுதலித்து 
“நல்ல சந்தோஷமான, மன அமைதிக்கான பாட்டைக் கேளுங்கோ இப்போது நமக்குத் தேவை அதுதான்”
என்றேன். அமைதி தரும் நல்லிசை போலத் தான் இந்தப் “பாலை நிலப் பயணம்” படித்து முடித்ததும் எழுந்தது ஒரு திருப்தி.

2019 ஆம் ஆண்டு நவம்பர் முதல் வாரத்தில்
செல்வேந்திரனும், நண்பர்களுமாக எழுத்தாளர் ஜெயமோகன் சகிதம் ஜெய்ப்பூரில் இருந்து அகமதாபாத் வரை சாலை வழியாகச் சென்ற பயணத்தின் நனவிடை தோய்தலாகவே இந்தப் பயண நூல் அமைந்திருக்கிறது. தேதி வாரியாக ஏதும் குறித்து வைத்திருப்பாரோ என்று சந்தேகம் 

நாங்கள், மீண்டும் மனிதர்களாகிவிட்டோம் - வித்யாசாகர்


தோ
மீண்டும் அத்தை மாமா பேசுகிறார்கள்
தொலைபேசியில் யார் யாரோ அழைத்து
நலம் விசாரிக்கிறார்கள்,

மீண்டும் குருவிகள் கீச்சிடுகின்றன
மீண்டும் மழை பெய்கிறது
மீண்டும் ஏசியை அணைத்துவிட்டு 
சன்னலைத் திறந்து உலகத்தை
கம்பிகளின் வழியே பார்த்து அமர்ந்திருக்கிறோம்,

ஊர்குருவிகள் கத்துவதும்
குயில் விடிகாலையில் கூவுவதும்  
இப்போதெல்லாம்
காற்றின் அசையும் சத்தத்தோடு
காதினிக்கக் கேட்கிறது,
மரக் கிளைகளின்
இலைகளில்
உறங்கும் பனிநீரை
மீண்டும் உலுத்துக் கொட்ட
உள்ளூர ஆசை வருகிறது,

இப்போதே நீபோனால் நிம்மதி அடைவார்களாம்----------- பாகம் 3 பரமபுத்திரன்


காற்றில் செய்திகள் நாளும் பரவுது  
கொரொனா கலைந்து குறைந்து போகுதாம்   
இருப்பினும் கொரொனா  சொல்றேன் கேட்பாய்  
ஊருக்கு நீவந்த காலத்தின் கோலம்   
தேவைக்கு தேடினோம் கழிப்பறை சுருள்களை
தொற்றுவாய் நீயென்று ஒழித்தன போலும்
கிடைக்கவே இல்லை ஏனென அறியோம் 
காலையில் போனால் கிடைக்குமாம் கடையில்  
கழிந்தால் பார்த்து தருவினம்  போல
அதற்குள்ளும் சிலபேர் சட்டையை பிடித்து
அடிபிடி சண்டை அதுவும் நடக்குது
அளவில் அறியா  உருவம் உனக்கு
ஐந்தடி காற்றில் பறக்கவும் மாட்டியாம்  
அதற்குள் நிலத்தில்  விழுந்தும் போவியாம்
தூயவர் வீட்டுக்கு போகவும் மாட்டியாம்
போனவர் வீட்டில் பாதிப்பு தந்ததால்    
உலகத்தில்  மாற்றங்கள் பெரிதாய் நடக்குது
காட்டினுள் வாழும்  விலங்குகள் வந்து
நாட்டினுள்  பார்க்கும் மாட்சிமை செய்தாய்
எங்கள் இடமென  உரிமைகள் பேசி  
எதிர்ப்பட்ட உயிர்களை கொன்று குவித்து
ஆட்சிகள் புரிந்த ஆணவக் காரர்  
வீட்டுக்குள் அடைபடும் காட்சிகள் தந்தாய்
பயத்தின் விழிப்பில் உயிர்களை மதித்து
உயிரை கொல்லுதல் தவறென மனதில்   
உயிரின் வலியை  உணர்ந்தரோ  அறியோம்

வா உலகே வந்தென்னை வாரியணை - வித்யாசாகர் - கரோனா கட்டுரை!!


உலகத்தீரே கொஞ்சம் கேளுங்கள்...

அன்பால், நம்பிக்கையால், நமது அறத்தின் வலிமையால், பண்பின் உயர்வு கருதி நாம்  இயற்கையால் மீண்டும்  நிச்சயமாக மண்ணிக்கப் படுவோம். மீண்டும் அனைவருமாய் வென்றெழுந்து வருவோம். 

மீண்டெழுவோ மெனும் சமத்துவச் சிந்தனைகளோடு மேலும் ஆழ்மனத்திலிருந்து தூய தாயன்பு பெருக்கி, கருணையைக் கூட்டி, நட்பு வலுத்து, நானிலம் சிறக்க நாடெங்கும் நம்பிக்கையை பரப்புவோம், வாருங்கள்...

இப்போதைக்கு நம்மிடமிருக்கும் பெரும்பலத்தின் மூலமே இந்த நம்பிக்கை தான். நற்சிந்தனைகள் தான். நன்னடத்தையும் நல்ல ஆரோக்கியத்திற்கான புரிதலையும், மண்ணின் மரபூரிய மருத்துவமென அனைத்தோடும் சேர்ந்து நாம் விரைவில் மீண்டெழ மிக அரியதொரு நல்ல வாழ்க்கையை நாமெல்லோரும் வாழ்வோமெனும் நம்பிக்கை தான் இப்போதைக்கு நம்மோடு பிறந்த சொத்து.

மகிழ்ச்சி என்பது இம்மண்ணின் உயிர்க்கெல்லாம் பொது என்பதை மறந்ததொன்றே மனிதர் நாம் செய்த மாபெருங் குற்றம். அதைப் புரியும் தருணமிது. தெளியும் அறிவு பெரின்;அது நமக்கு காலம் தரும் கொடை. இன்னொரு வாய்ப்பு என்பதை மகிழ்வோடு ஏற்போம்.

மழைக்காற்று ( தொடர்கதை ) அங்கம் 31 - முருகபூபதி


ல்லோருக்கும்  ஏதோ ஒரு பிரச்சினை வாழ்க்கையில் இருந்துகொண்டே  இருக்கிறதே..?! ஒன்றுக்கு தீர்வுகண்டுவிட்டால் மற்றும் ஒன்று மனதில் ஏறி அமர்ந்து உளைச்சலைத் தருகிறது. புதியதற்கும் பதில் கிடைத்துவிட்டால், மற்றும் ஒரு விடைதெரியாத கேள்வி வந்து மனதை துருத்துகிறது.
பிரச்சினைகள்தான் வாழ்வின் நீண்ட சங்கிலித்தொடரோ…? இச்சங்கிலியில் தங்களைத்தாங்களே பிணைத்துக்கொண்டு வெளியே வரமுடியாமல் தவிப்பவர்கள், முடியாத பட்சத்தில் மற்றவர்களின் உதவியையும்  ஆதரவையும் நாடுகிறார்கள்.
மீன்கடைக்கு, சண்முகநாதனுடன் வந்து, மீனை விலைபேசி தெரிவுசெய்யும் அவசரத்தில் அபிதா இருந்தாலும், அவளது ஆழ் மனதில் கடலின் ஆழத்திலிருந்து வெளிப்பட்டு வலையில் சிக்கி துடிதுடித்து இறந்து, மற்றவர்களின் வயிற்றுக்காக  தரைக்கு வந்து, பிடித்தவர்களின் வயிற்றுப்பிழைப்பிற்காக மீன் கடைகளில் காட்சிப்பொருளாகியும் விற்பனைப்பண்டமாகியுமிருக்கும் மீன்களின் வகையறாக்களைப்பார்க்கின்றபோது,  மனித மனங்களின் விநோத இயல்புகளும் அபிதாவின் சிந்தனையில் ஊடுறுவின.
அந்த வீட்டிலிருக்கும் ஒவ்வொரு பெண்களுக்கும் ஏதேதோ பிரச்சினைகள், வந்திருக்கும் லண்டன்காரருக்கு மற்றும் ஒரு பிரச்சினை.  ஊரடங்கு எப்போது தளர்த்தப்படும் என்று நேரம் பார்த்து பரிதவிப்போடு வெளியே ஓடிவரும் மக்களுக்கு அன்றாடப்பிரச்சினை, ஆட்சியாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும், எதிர்பாராமல் வந்துள்ள கண்ணுக்குத் தெரியாத எதிரியை எவ்வாறு வரவிருக்கும் பொதுத்தேர்தலின்போது கையாள்வது என்ற பிரச்சினை.
அவரவர் பிரச்சினைகளுக்கு ஏதோ ஒரு தீர்வு இருக்கும்தானே..? ஆசையுடன் தொடங்கப்பட்ட கணினி பயிற்சி வகுப்பு பாதியில் நிற்பதுதான்  அபிதாவுக்கு தற்போது முதல் பிரச்சினையாகிவிட்டது,
அதற்கும் அவள் ஒரு தீர்வைக்கண்டுகொண்டாள்.  வீட்டில் ஜீவிகா பயன்படுத்தும் மடிக்கணினி அவளுக்கு உதவும் என்ற நம்பிக்கை, அவளது  அரசியல் கைதிகள் பற்றிய கட்டுரையை தன்னிடம் வாசிக்கத்தந்ததும் துளிர்விட்டுவிட்டது.
மீனும் நண்டும், இறாலும் வாங்கிக்கொண்டு வீடு திரும்புகையில் சண்முகநாதன், அபிதாவை கடைக்கண்ணால் பார்த்தவாறே,  “ அங்கிருக்கும் ஒவ்வொருவரும் தமக்குத் தமக்கு துணை தேடிக்கொண்டு போய்விட்டால், அதன் பிறகு நீ என்ன செய்வாய் அபிதா..?  “ எனக்கேட்டார்.
அதற்கு அவள் சற்றும் தாமதிக்காமல்,  “ லண்டனில் உங்களிடம் வந்துவிடட்டுமா அய்யா…?  “ எனத்திருப்பிக்கேட்டாள்.

உயிர்த்த ஞாயிறும் கொரோனாவும்! கண்ணுக்கு தெரிந்த எதிரியும் – கண்ணுக்குத் தெரியாத எதிரியும்!! "ஏலி! ஏலி! லாமா சபக்தானி " - " என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் " - முருகபூபதி


இயேசுகிறிஸ்து ஆறுமணிநேரம் சிலுவையில் தொங்கினார். முதல் மூன்று மணி நேரங்கள் அவர் ரோம வீரர்களாலும், மற்றவர்களாலும், அடிக்கப்பட்டு, இழிவாக பேசப்பட்டு, எள்ளி நகையாடப்பட்டு, வேதனைகளை அனுபவித்தார். அவற்றை எல்லாம் பொறுமையாக பொறுத்துக் கொண்டார். ஆறாம் மணி நேரம் முதல்,  ஒன்பதாம் மணி நேரம் வரைக்கும் அந்தகாரம் பூமியை மூடி கொண்டது.
                      அந்த ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ! “ஏலி! ஏலி! லாமா சபக்தானி  “ என்று உரத்துச்  சத்தமிட்டுக் கூப்பிட்டார் ! அதற்கு  “ என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்..?  “ என்று அர்த்தம். – (மத்தேயு 27:45-46)
இந்த வாசகங்களை ஏற்கனவே படித்திருப்பீர்கள்.  கடந்த வெள்ளிக்கிழமை  10 ஆம் திகதி  யேசுபிரான் சிலுவையில் அறையப்பட்ட  தினம். அதனால் அதனை பெரிய வெள்ளி என்று தமிழிலும்  Good Friday என்று ஆங்கிலத்திலும் அழைப்பர்.
அத்தகைய ஒரு துக்க  தினத்தில் தேவாலயங்கள் சென்று வழிபட்ட மக்கள், யேசுபிரான் உயிர்த்த ஞாயிறு தினத்தில் காலையிலேயே  அங்கு மீண்டும் வந்து பிரார்த்தித்துவிட்டு,  சம்மனசுகள் புடைசூழ யேசுவின் திருச்சொரூபம் பவனிவரும் காட்சியை கண்டுகளிப்பார்கள்.  வழக்கமாக உலகெங்கும் நடக்கும் இந்த நிகழ்வு இந்த வருடம்  வழக்கம்போன்று வெளியே பகிரங்கமாக நடைபெறுவதற்கான வாய்ப்பில்லை.

கவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் அங்கம் -08


யாழ். பரி.யோவான் கல்லூரியில் நல்வழிகாண்பித்த  ஆசிரியப் பெருந்தகைகள்
                                                                                
ரி.யோவான் கல்லூரி என்ற அப்பழம்பெரும் பிரசித்தி பெற்ற கல்வி நிலையம் பற்றி எழுதப்பேனா பிடிக்கும்போது, எழுகின்ற எண்ணங்கள் பல்பல. உயிர்க்கின்ற உணர்வுகள் பலப்பல.  வளரிளம் பருவத்திலே தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் அங்கு பெற்ற கற்றல் அனுபவங்களும் மற்றும் நினைவுகளும் நெஞ்சுணர்வில் மெல்லெனச் சலசலக்கின்றன.
மிகவும் அக்கறையுடனும் ஆதரவுடனும், எனது அறிவும் மனப்பாங்கும் விருத்தி அடைய அயராது உழைத்த நல்லாசான்களின் கோலங்கள் மனத்திரையில் உயிர்க்கின்றன. அன்னார்தம் குரல்கள் கணீரென்று எதிரொலிக்கின்றன. அவற்றுள் எதை எழுதவேண்டும், எதை எப்படி எழுதவேண்டும் என்ற இடர்ப்பாட்டுடன், பரி. யோவான் நனவோடை சுரக்கின்றது.
1938 ஆம் ஆண்டு, அங்கு கல்வி பயிலத்துவங்கிய காலத்தில், கீழ் நிலைப்பள்ளி, நடு நிலைப்பள்ளி, மேனிலைப்பள்ளி என மூன்று பிரிவுகள் இருந்தன. கீழ் நிலைப்பள்ளியில், துவக்கம் – முதலாண்டு – இரண்டாவதாண்டு – ஐந்தாம் தரம் என நான்கு வகுப்புகள். துவக்க வகுப்பிலேதான் நான் அனுமதிக்கப்பட்டேன். கிராமப் பாடசாலை ஒன்றிலிருந்து ஆங்கில அறிவு எதுவுமின்றி விதியின் கையினால் அங்கு தூக்கி வைக்கப்பட்டவன் நான்.   புத்தம் புதிய சூழலையும் புதிய பல அனுபவங்களையுந் தந்து ஊரிலேயே என்னைக் கலாசாரத் திகைப்புக்குள் மூழ்கவைத்த அனுபவம் அது.
கிராமப் பள்ளியிலிருந்து, நகரப்பள்ளிக்குச் சென்ற புதிய அனுபவம். சூழல் புதிது, சக மாணவர் புதியவர், ஆசிரியர்கள் புதியவர்கள். இத்தனைக்கும் மேலாக, குடும்பத்தவரைப் பிரிந்து, கல்லூரி விடுதியிலே வாழவேண்டிய நிலை. இந்த நிலையிலும், அன்றைய அந்த விடுதி வாழ்க்கை அனுபவம், பள்ளிக்கூடத்துக் கல்வி அனுபவம் போல முக்கியத்துவம் வாய்ந்தது என்பது என் நெடுநாளைய கணிப்பு. குறிப்பாக, ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடித்து ஒழுகப்பயின்று வாழ்வதற்கு களம் அமைத்த காலம்  அந்த விடுதி வாழ்க்கைக் காலம் என்பேன்.
ஒன்பது வயதுச்சிறுவன். இரவோடு இரவாக வீட்டாரைப்பிரிந்து வாழவேண்டிய நிலை.  கிராமத்து வாழ்வை மறந்து நகர வாழ்க்கை    முறையுடன் இணங்கி வாழவேண்டும். படுக்கை, உடைகள், சொந்தப்பொருள்கள் போன்றவற்றை பேணுதற்கும் சில அன்றாட விதிமுறைகளை அனுசரித்து வாழ்வதற்கும் பயிலவேண்டும்.
காலையில் எழுந்து கடன்களை முடித்தபின் காலைப்படிப்பு நேரம் படிக்கவேண்டும். பின்பு உணவுக்குச்செல்லல் வேண்டும்.  அதன்பின் வகுப்புகளுக்குச் சென்று, பின்னேரங்களில் விளையாடி, குறித்த நேரம் திரும்பிக் குளித்து, இரவுப்படிப்பு நேரம் படித்து, இரவுணவு நேரம் போசன சாலைக்குச் சென்று உணவுண்டு… இவ்வாறாக, அன்றாடக்  கருமங்களை எல்லாம் செவ்வனே பயின்ற காலம் அது. படுக்கையை சுத்தமாக வைத்திருத்தல், உடைகளைச் சுத்தமாக வைத்துப் பாவித்தல், சலவைத் தொழிலாளியிடம் துணிகளைக் கணக்கெழுதிக்கொடுத்து மீளப்பெறுதல்… இவைபோன்ற பலவற்றுக்கும் பொறுப்பேற்கப் பயிற்சி பெற்ற காலம் அது.

ஒரு அறிவியல் கதை - வெளவால் மனிதன் பொன் குலேந்திரன் ( கனடா)


சில ஆண்டுகள்  டிவி காட்சிகளில் தனது வீர, தீர  செயல்களால்    சிறுவர்களினதும் வயது  வந்தவர்கனினதும் பாராட்டைப் பெற்ற வெளவால்  மனிதன்  ஹரி  நிம்மதியாக தூங்கிக் கொண்டு இருந்தான் .
ஒரே  மக்கள் கூட்டத்தின்  குரல்கள் “ஒழிப்போம்  ஒழிப்போம் வெளவால்களை  ஒழிப்போம்    . கொரோனா வைரசை  எமக்கு தந்த  வெளவால்களை  ஒழிப்போம், நிறுத்துவோம்  நிறுத்துவோம் . வெளவால்களை  நாம் உண்பதை   நிறுத்துவோம்”
 முகமூடியையும்    ஆடையையும் களையாமல் படுத்த  வெளவால்  மனிதன்  ஹரியை     வெளவால்  மனிதனின்  தாய்  லூசி   எழுப்பினாள்.


“தம்பி எழும்படா எழும்படா எங்கள் இனம் அழியப்போகுது  இந்த மனித இனம் எம் இனத்தை சுவைத்து  உண்டு விட்டு,  இப்போ கொரோனா வைரசை   உருவாக்கியது  எம் இனம் என்று  எம்மேல் குற்றம்  சாட்டுகிறது”.  




“எம்மை  பாராட்டியவர்கள்  என் திடீர்  என்று இப்படி  மாறி  விட்டார்கள்  அம்மா “

“ஆமாடா தம்பி நீ  வெளவால் மனிதனாக நடித்து   பல உயிர்களை  காப்பாற்றியவன் என்று  உன்னை  பாராட்டியவர்ககள்  ஏராளம் . உன்  உடை போன்ற உடைளை அதிக  விலை  கொடுத்து  கடையில் வாங்கி , அணிந்து, உன்னைப் போல்  நடித்தவர்கள்  இந்த மனிதர்கள். எங்கள் இனத்தை சுட்டு உண்டார்கள். இப்போ எங்கிருந்தோ வந்த கொரோனாவைரஸ் எங்கள் உடம்பில் இருந்து வந்தது என்றும் ,எங்கள் இனத்தின் மேல்  நாங்கள்  பயங்கர வாதிகள்  என்று எம்மேல்  குற்றம் “ அதியன் சாட்டுகிறார்கள்  இந்த மனிதர்கள் “. 

இலங்கைச் செய்திகள்


யாழ். போதனா வைத்தியசாலைக்கு முக கவசங்கள் அன்பளிப்பு

இந்தியாவினால் 10 தொன் மருந்துப்பொருட்கள் இலங்கைக்கு அன்பளிப்பு

வெளிநாட்டு பணத்தை வைப்பிலிட புதிய வங்கிக் கணக்கு

கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் கௌரவம்



யாழ். போதனா வைத்தியசாலைக்கு முக கவசங்கள் அன்பளிப்பு





உலகச் செய்திகள்


தொடர்பற்றிருந்த வூஹான் நகரம் 76 நாட்களின் பின் திறப்பு

உறுதியுடன் எதிர்கொண்டால் வைரஸ் தாக்கத்தில் இருந்து மேலெழுந்து வரமுடியும்

அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 1,970 பேர் பலி

பிரான்ஸில் கொரோனாவினால் 10,000 பேர் பலி

சுமார் 15 இலட்சம் பேருக்கு தொற்று; ஸ்பெயினில் 15,000 பேர் பலி

ஊரடங்கை மீறிய நியூசிலாந்து அமைச்சர் பதவியிறக்கம்

வழமைக்கு திரும்பியது சீனா: மகிழ்ச்சியில் வுஹான் மக்கள்

ICU இலிருந்து வெளியேறினார் பொரிஸ் ஜோன்ஸன்

உலகில் 195 மில்லியன் பேர் தொழிலை இழக்கும் ஆபத்து!



தொடர்பற்றிருந்த வூஹான் நகரம் 76 நாட்களின் பின் திறப்பு



தொடர்பற்றிருந்த வூஹான் நகரம் 76 நாட்களின் பின் திறப்பு-Wuhan Lifts Outbound Travel Restrictions-Ending 76 Days Long Lockdown

அப்போலோ சுந்தா ஐம்பது ஆண்டுகள் - கானா பிரபா




இன்று விடிகாலை தொலைக்காட்சிப் பெட்டியைத் திறந்ததுமே அப்போலோ 13 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டு இன்றோடு (ஏப்ரல் 11) ஐம்பது ஆண்டுகள் என்ற செய்தி ஓடிக் கொண்டிருந்தது. விண்ணுலகத்தை உரசிப் பார்த்த விண்வெளி ஆய்வுகளில் தோல்விகரமான முயற்சி இந்த அப்போலோ 13.  விண்ணில் ஏவப்பட்ட இந்தக் கலம் ஆக்சிஜன் கலன் வெடித்ததால், நிலவில் மிதிக்காமல் மீண்டும் பூமிக்கே திரும்பி வந்தது. போனவர்கள் பத்திரமாகத் திரும்பினார்கள்.  13 ஆம் இலக்கம் இங்கேயும் தன் ராசிக்கே உரிய துரதிர்ஷ்ட விளையாட்டைக் காட்டி விட்டதோ என்று எண்ணுவதுண்டு.  

நிலவைக் காட்டிச் சோறுண்ட காலம் போய் எங்கள் காலத்தில் வானத்தில் தினம் தினம் நிலவோடு போட்டி போடும் ஒளிக் கொத்துகள் தோன்றுவதுண்டு. அவை போர்க்காலத்தில் இலங்கை விமானப் படையினர் இரவிரவாக  தாக்குதல் நிலைகளைக் கண்கணித்துக் குண்டு போடுகிறேன் பேர்வழி என்று வானத்தில் மேலே எறிந்து வெளிச்சம் பாய்ச்சும் வெளிச்சக் குண்டுகள். நிலவைப் பார்த்துக் கவிதை பாட முடியாது,  எப்ப ஹெலிக்காரனும், பொம்மர் காரனும் வாறான் என்று மேலே பயந்து பயந்து பார்த்த காலங்கள். உலக விடயங்களையும் உள்ளூர் சமாச்சாரங்களோடு பொருத்தி நினைவில் வைக்கும் எனக்கு அப்போலோ என்றதும் நினைவுக்கு வந்தது அப்போலோ சுந்தா என்ற முத்திரைப் பெயரையும் பெற்ற எங்கள் சுந்தா அங்கிள். ஒலிபரப்பாளராகப் பல சாதனைகள் புரிந்த சுந்தா சுந்தரலிங்கம் என்ற அவருக்குக் கிட்டிய மணி மகுடம் அந்த வாய்ப்பு. அப்போலோ 11 என்ற விண்கலம் விண்ணில் ஆளேறிய முதல் விண்கலம் என்ற பெருமையைப் பெறுவது. அந்த விண்கலம் பயணித்த நாள் ஜூலை 16, 1969 ஆம் ஆண்டு, தனது பணியை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு ஜூலை 24, 1969 இல் திரும்பியது. அப்படியானால் சந்திரனில் மனிதன் காலடி வைத்து ஐம்பது ஆண்டுகளை நாங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

சுந்தா சுந்தரலிங்கம் அங்கிளின் மன ஓசை புத்தகத்தில் மனிதன் சந்திரனில் காலடி வைத்த கணங்களை ஒலிபரப்பிய தன் அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறார் என்ற ஞாபகம் தப்பவில்லை. புத்தகத்தைப் பிரித்துப் பார்த்தேன்.  தொடர்ந்து சுந்தா அங்கிள் பேசுகிறார்.

அப்போலோ சுந்தா

என்  ஒலிபரப்பு அனுபவக் களத்திடை மகிழ்ச்சியும், புகழும் தேடித் தந்த அப்போலோ வர்ணனை பற்றிய நினைவுகள் என்றும் இனிமையானவை. 

அப்பொழுது நான் இலங்கை வானொலியில் இருந்து இலங்கைப் பாராளுமன்ற சமகால மொழிபெயர்ப்பாளராக தெரிவு செய்யப்பட்டிருந்தேன். அன்றைய இலங்கை வானொலி இயக்குநர் நாயகம் நெவில் ஜயவீர அவர்களிடமிருந்து ஓர் அழைப்பு வந்தது. சந்திர மண்டலத்துக்கு மனிதன் பயணிக்கப் போகிறான். வாய்ஸ் ஒப் அமெரிக்கா என்ற அமெரிக்க வானொலி நிலையம் தொடர்ச்சியாக வர்ணனை செய்யவுள்ளது. தொடர்ச்சியாக என்றால் ஓரிரு நாட்கள் அல்ல, மூன்று நான்கு நாட்கள். வாய்ஸ் ஒப் அமெரிக்கா ஒலிபரப்பை இயர்போன் மூலம் காதில் வாங்கியபடி உடனடியாகத் தமிழிலும், சிங்களத்திலும் தர முடியுமா? என்று அவர் கேட்டார். என்னோடு பாராளுமன்றத்தில் இருந்த சிங்கள அறிவிப்பாளர் அல்பிரட்டும் கூட இருந்தார். 

பெரியதொரு சவாலாக இது எமக்கு இருந்தது. இரண்டு பேருமே “நிச்சயம் முடியும்” என்று உறுதி கூறினோம். அவர் உடனேயே ஏற்பாடு பண்ணி கொழும்பிலே உள்ள அமெரிக்கன் தூதரகத்துக்கு அனுப்பி வைத்தார். ஏற்கனவே இத்திட்டம் போல ஜெமினி என்றொரு விண்வெளிக்கலத்தை வானுக்கு அனுப்பிப் பரீட்சித்துப் பார்த்துக் கொண்டிருந்த காலம் அது. அதற்குரிய படங்களையெல்லாம் அவர்கள் திரைப்படங்களாக வைத்திருந்தார்கள். அவர்களே ஏற்பாடு பண்ணி எங்கள் இருவருக்குமாகத் திரையிட வைத்தார்கள். திரையிடும் போது தான் உண்மையாகவே எப்படி இது நடக்கப் போகிறது, எப்படி அவர்கள் பேசப் போகிறார்கள், என்ன என்ன விடயம் எல்லாம் தேவை என்பது எங்களுக்கு ஓரளவு தெரிய ஆரம்பித்தது. பொறுப்பு மிக அதிகம் என்பதும் புரிய ஆரம்பித்தது. 

இப்போதைக்கு ஏது வழி? (கன்பரா யோகன்)



கண்ணுக்குத் தெரியாத  இந்த வைரஸ் நுண் எதிரியின் தாக்கத்தை வரலாற்றில் மக்கள் வெவ்வேறு கட்டங்களில் கடந்தே வந்துள்ளனர் என்பது வரலாறைப் பின்னோக்கிப் பார்த்தால் தெரிகிறது. ஒவ்வொரு முறையும் இப்பேரழிவுகளில் மில்லியன் கணக்கில்  இறந்த போதும் அக்கட்டம் கடந்த பின்னரே இவற்றுக்கான நோயெதிர்ப்பு மருந்துகள் கண்டு பிடிக்கப் பட்டு வந்ததும் மனித உடல்  தானாகவே  எதிர்ப்புச் சக்தியைக் கட்டமைத்துக் கொண்டதும் தெரிய வருகிறது.

ஒரு காலத்தில்  அம்மை, வாந்திபேதி , காசநோய், எயிட்ஸ் உட்பட  பல்வேறு காலப் பகுதிகளில்   இன்ஃபுளுயென்சா  வகையினைச் சேர்ந்த பல்வேறு வகைப்பட்ட  சளிக் காய்ச்சல் ரகங்கள் வந்து உலக சனத்தொகையின் ஒரு பகுதியை  அள்ளிச் சென்றிருந்தன. 1918 இல் பரவிய ஸ்பானிஷ் காய்ச்சலில் பல மில்லியன் வரை மக்கள் இறந்ததாக கணிப்பிடுகிறார்கள்.  இதில்  மிக அண்மைக்  காலத்தில்  பரவியிருந்ததென்று  பார்த்தால்  அது 2009 இல்  தோற்றிய பன்றிக் காய்ச்சல் மற்றும் 2014 இல் தோன்றிய இபோலாவும்தான் குறிப்பிடத்தக்கவையாகவுள்ளன. ஆனால் இவை  கூட இன்றைய COVID-19  வைரஸைப் போல  ஒரே நேரத்தில் எல்லா உலக நாடுகளுக்கும்   ஒரே நேரத்தில் பரவியிருக்கவில்லை.

டிசம்பர், ஜனவரி மாதங்களில் காட்டுத்தீ அவுஸ்திரேலியாவை சுட்டுக் பொசுக்கிக் கொண்டிருந்த வேளையில் பத்திரிகைகள்  அவுஸ்திரேலியக்  கண்டத்தினை  சிவப்பு மையில்  வர்ணமிட்டிருந்ததையும், இன்று உலக வரைபடம் முழுவதையுமே சிவப்பினால் வர்ணமிட்டு உலகளாவிய  இந்த வைரஸின் தாக்கத்தை காட்டி வருவதும் ஒரு வேதனை கலந்த வேடிக்கை.  
இந்த வருட ஆரம்பத்திலிருந்தே அவுஸ்திரேலியாவுக்கு சோதனை காலம் ஆரம்பித்திருந்தது, தனியார் வர்த்தக மற்றும் உற்பத்தி , உல்லாசப் பயணத்துறை சார்ந்த பல்வேறு தொழில்களும் பாதிக்கப்பட்டிருந்தன. கால் நடைப்  பண்ணைகள் பலவும், மரக்கறிகள், மற்றும் பழத்தோட்டங்களும் தீக்கிரையாகியிருந்தன. கன்பராவுக்கு அண்மையிலுள்ள வைன் தயாரிக்கும் வைனரிகள் பல நீண்ட கால தீயின் புகையினால் பாதிக்கப்பட்டதால் இந்த சீசனுக்கு பழங்கள் வைன் தயாரிப்புக்குதவாது என்று  உற்பத்தி நிறுத்தப்பட்டது.

கலைத்துறையில் பொன் விழாக்காணும் நாச்சிமார்கோயிலடி இராசன் (ராஜன்)




ஈழத்தவரால் மரபுக் கலைகள் பேணிப் பாதுகாக்கப்பட்டு, நிகழ்த்திக் காட்டிய தருணத்தில் வில்லிசைக் கலை என்பது பள்ளிக்கூடத்தில் இருந்து கோயில்கள், வாசிகசாலைகள் என்று கடைக்கோடி ரசிகர்கள் வரை கட்டியெழுப்பப்பட்ட மரபாக விளங்கியது.
அந்த வகையில் இந்த வில்லிசைக் கலைக்குப் பெருமை சேர்த்தவரில் நாச்சிமார்கோயிலடி இராசன் அவர்களின் பங்கு புலம் பெயர் சூழல் வரை தடம் பதித்தது.

இன்று எங்களின் பெருமை மிகு ஈழத்துப் படைப்பாளி  நாச்சிமார்கோயிலடி இராசன் அவர்களது பிறந்த நாளில் அவர் கிளிநொச்சி மகாதேவா ஆச்சிரம நிதிக்கான வில்லிசை நிகழ்வு நடத்த அவுஸ்திரேலியாவுக்கு 2011 ஆம் ஆண்டில் வருகை தந்தபோது நான் எடுத்த பேட்டியைப் பகிர்கிறேன்.

சுவீட்சிக்ஸ்டி - மன்னாதி மன்னன் - சுந்தரதாஸ்

.


தமிழ் திரை உலகில் ஆடை வடிவமைப்பாளராகத் திகழ்ந்தவர  எம் நடேசன். தயாரிப்பாளராகவும் டைடக்டராகவும் பின்னர்  அவதாரம் எடுத்த இவர்  தனது நடேஷ் ஆர்ட் பிலிம்ஸ் சார்பில் தயாரித்த படம் மன்னாதி மன்னன். நடேசனின் இலட்சிய படமாக இது உருவானது, 

புரட்சி நடிகர் எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்த இப்படத்துக்கு எம்ஜிஆரின் இமேஜுக்கு பொருத்தமாக மன்னாதி மன்னன் என்று கவிஞர் கண்ணதாசனால்   பெயரிடப்பட்டது காரணம் அவரே படத்திற்கான கதை, வசனம் இரண்டையும் எழுதி இருந்தார் கவிஞர் எழுதிய ஆட்டனத்தி ஆதிமந்தி என்ற நாடகமே இவ்வாறு பெயர் மாறி படமானது. சேர சோழ மன்னர்களை அடிப்படையாகக் கொண்டு அவர்களுடைய அரசில் பகடைக்காயாக உருட்டப்படும்  ஒரு நடனப் பெண்ணின் காதலையும் இளவரசன் மீது அவளுக்கு ஏற்படும் அன்பையும், பக்தியையும் கொண்டு படம் உருவானது.