மரண அறிவித்தல்


பிரபல கட்டிட கலைஞர் வி எஸ் துரைராஜா அவர்கள் காலமானார்




பிரபல கட்டிட கலைஞர் வி எஸ் துரைராஜா அவர்கள் டிசம்பர் மாதம் 14ம் திகதி காலை 8.00 மணிக்கு சிட்னி  அவுஸ்திரேலியாவில் சிவபதம் அடைந்தார்.  இவர் செல்வராணியின் அன்பு கணவரும் வத்சலா, மஞ்சு, சுரேன், டாக்டர் சகிகலா ஆகியோரின் அன்பு தந்தையும், நிசாகரன் திருநாவுக்கரசு, குமார் சிரி பத்மா, டாக்டர் சியாமளா, நிமலன் ரத்னம் ஆகியோரின அன்பு மாமனாரும், ரிஷி, மீரா அவர் கணவர் ரமணன், சுஜன், சரளா. சரித்தா, மாயா, ஸ்ரேயா ஆகியோரின் அன்பு பாட்டனாரும் ஆவார்,

இவர் மறைவால் வருந்தும் இளைய சகோதரர்கள் டாக்டர் வி எஸ் கருணாகரன்; அவரது மனைவி தேவகி, வி எஸ் கணநாதன் அவரது மனைவி சகுந்தலா. மற்றும் காலம் சென்ற டாக்டர் வி எஸ் பொன்னுத்துரை. வி எஸ் செல்வநாயகம், செலவரத்தினம், சிவபாக்கியம், தவபாக்கியம் அவர்களினது சகோதரனும் ஆவார்.

யாழ்ப்பாணத்தில் நவாலியை பிறப்பிடமாகக் கொண்ட இவர் வேலுப்பிள்ளை சுப்பையா, தங்கச்சிமுத்து தம்பதிகளின்  மகனாவார்.

அன்னாரின் ஈமைக்கிரிகைகள் சனிக்கிழமை 17 ம் திகதி டிசம்பர் 2011, Delhi and  Plassey Road, North Ryde, NSW 2113 இல் உள்ள Macquarie Park Crematorium, Palm Chapel மண்டபத்தில் மதியம் 12.15 மணி முதல் நடை பெறும். உற்றார் உறவினர்;, நண்பர்கள் இத் தகவலை ஏற்குமாறு வேண்டுகிறோம்

அன்பர்கள் விரும்பினால் trajah@optusnet.com.au மின் அஞ்சல் விலாசத்தில்
தொடர்பு கொள்ளலாம்.

பாரதியின் பிறந்த நாளை தமிழ்முரசு நினைவு கூருகின்றது



SBKB1211
.
                                                                                                          செ.பாஸ்கரன்

11.12 2011 இன்று பாரதியின் பிறந்ததினம்.
11.12 1882 இல் பிறந்த இந்த மனிதன் இன்றளவும் நினைவு கூரப்படுகின்றான் என்றால் அவன் மகா கவியென்பதனால்தான்.  பாரதி ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர்.  தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு என்று எழுதியது மட்டுமல்ல போராட்டத்தில் கலந்து கொண்டு முன்னின்று போராடிய ஓரு போராளி.

"தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?"
தான் சாதாரண மனிதனாக வாழ்து மடியும் ஒருவனல்ல என்று அறைந்து கூறும் உறுதிபடைத்தவன். காலனைக் கண்டும் கலங்காமல் காலனே வாடா உனைக் காலால் உதைப்பேனென சவால்விட்ட துணிவு பாரதிக்குத்தான் இருந்தது.


எமதுலகில் சூரியனும் இல்லை



.

இறப்பர் மரங்களில் பால் இருந்த போதும்
பெருந் தோட்டத்தில் நாம் வசித்த போதும்
இறப்பர் விலை அதிகரித்த போதும்
நாம் இன்னும் கையாலாகாத நிலையிலென
உணர்கிறது இதயம் எப்போதும்

அடர்ந்த பெரும் இறப்பர் காட்டில்
பாறைகள், வேர்கள், நதிகள், ஓடைகளிடையே
இரவு உட்கொண்ட ரொட்டியின் பலத்தினால்
இரு பாதங்களையும் வைத்தபடி
மரத்துக்கு மரம் வெட்டிச் சேகரித்த பால் எடுத்து
நாம் வருகிறோம் சாயத் தேனீர் குடித்தபடி

இலங்கைச் செய்திகள்

தமிழ் வர்த்தகர் கடத்தல்: கொழும்பு கொச்சிக் கடையில் பதற்றம்

இருவர் வெள்ளை வேனில் கடத்தல்

தலைநகரில் மீண்டும் அரங்கேறும் கடத்தல் நாடகங்கள்!

யாழில் மனித உரிமை தினப் பேரணி : பொலிஸ் - பொதுமக்கள் மோதல்!

தமிழ் வர்த்தகர் கடத்தல்: கொழும்பு கொச்சிக் கடையில் பதற்றம்
லியோ நிரோஷ தர்ஷன்/ 5/12/2011

கொழும்பு - கொச்சிக்கடை ஜெம்பட்டா வீதியில் தமிழ் வர்த்தகர் ஒருவர் வெள்ளை வேனில் வந்தவர்களால் இன்று பிற்பகல் ஒன்றரை மணியளவில் கடத்தப்பட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த கடத்தல் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வீதியில் டயர்களை எரித்து வீதி மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

முத்தமிழ் மாலை 2011

.


nrd;wthuk; 3k; jpfjp mT];Nuypa kUj;Jt cjtp epjpak; toq;fpa Kj;jkpo; khiy 2011 ,y; ,lk; ngw;w epfo;r;rpfspy; ,Ue;J xU rpy fhl;rpfis fPNo fhzyhk;.





கும்பாபிஷேக மலர் வெளியீடு

.

காணாமல் போன ஒட்டகம்

.
.                       

சித்ரா சிவகுமார், ஹாங்காங்

வளமான நாட்டை அறிவார்ந்த அரசனொருவன் ஆண்டு வந்தான். அவனுடைய அறிவும் தரும குணமும் அக்கம் பக்க நாடுகளில் அவனுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்தன. மக்கள் அனைவரும் அவனைப் பெரிதும் நேசித்தனர்.
வளமான நாட்டில் எந்தவொரு பிரச்சனையும் இல்லாதிருந்த காலத்தில் வியாபாரி ஒருவனின் ஒட்டகம் காணாமல் போனது. பல நாட்கள் தேடியும் கிடைக்கவில்லை.
ஒரு நாள் ஒட்டகத்தைத் தேடிச் சென்ற வியாபாரி வழியில் நால்வரைச் சந்தித்தான். “எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டான்.
“நாங்கள் பெருத்த துயரத்தில் இருக்கிறோம். நாங்கள் எங்கள் நாட்டில் மந்திரிகளாக இருந்தோம். மக்கள் நலனில் அக்கறை கொள்ளாமல் கொடுங்கோல் ஆட்சி செலுத்தும் அரசனை விட்டு, வேறு இடம் தேடிச் சென்று கொண்டிருக்கிறோம்” என்றார் ஒருவர்.
“அப்படியா?” என்றான் வியாபாரி வருத்தத்துடன்.
“ஆமாம்.. நீங்கள்?” என்று கேட்டார் மற்றொருவர்.
“என்னுடைய காணாமல் போன ஒட்டகத்தைத் தேடிச் செல்கிறேன்” என்றான் ஆதங்கத்துடன்.

வவுனியா சாஸ்திரி கூழாங்குளத்தில் களிமண் சிற்பங்கள்




.
                               



 வவுனியா மாவட்டம் சாஸ்திரி கூழாங்குளத்தில் கண்டெடுக்கப்பட்ட பண்டைய வன்னித்தமிழரின் வாழ்வியலை எடுத்தியம்பும் களிமண் சிற்பங்கள் யாழ்.பல்கலைக்கழக வரலாற்று துறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. 
கடந்த செவ்வாயன்று மேற்படி சாஸ்திரி கூழாங்குளத்தில் பொதுநோக்கு மண்டபம் ஒன்றிற்கு மண் இடுவதற்காக அருகிலுள்ள குளத்திலிருந்து மண் எடுக்கப்பட்டு கொண்டுவரப்பட்டுள்ளது. அவற்றை பரவும் போது அவற்றிலிருந்து சில மண் சிற்பங்களை மக்கள் கண்டெடுத்துள்ளனர்.
இதனடிப்படையில் இந்த விடயம் கிராமசேவகருக்கு தெரியப்படுத்தப்பட்டு அவர் மூலம் மாவட்ட அரசாங்க அதிபருக்கு தெரியப்படுத்தப்பட்டது. பின்னர் குறித்த பகுதியில் மண் அகழ்வதற்கும், அகழ்ந்த மண்ணை பரவுவதற்கும் மாவட்டச் செயலகம் தடை விதித்திருந்தது.

என் தாய் வீடு.. -வித்யாசாகர்


.
முன்பெல்லாம் எனக்கு
அம்மா என்று அழைக்கவாவது
ஒருத்தி இருந்தாள்;
என்றேனும் அவளைப் பார்க்கப்
போகையில் மாத தவணையில் பணம் கட்டியேனும்
எனக்கொரு புடவை வாங்கி
வைத்திருப்பாள்;
முடியாவிட்டாலும்
எழுந்து எனக்குப் பிடித்ததை
பார்த்துப் பார்த்து சமைத்துத் தருவாள்;
உதவி செய்யப் போனால் கூட
வேண்டாண்டி இங்கையாவது நீ
உட்கார்ந்து தின்று போ; அங்கே உனக்குத் தர யாரிருக்கா? என்பாள்.
என்னதான் நான் பேசாவிட்டாலும்
இரண்டொரு நாளைக்கேனும்
எனை அழைத்து எப்படி இருக்க..
என்னடி செய்த..
உடம்பெல்லாம் பரவாயில்லையாயென்று கேட்பாள்;

உலகச் செய்திகள்

சிரியாவுக்கு அதி நவீன ஏவுகணைகள்

ஈரானிடம் சிக்கிய அமெரிக்க அதி நவீன ஆளில்லா உளவுவிமானம்

இணையம் மூலம் ஈரானில் நுழைய அமெரிக்கா முயற்சி

சிரியாவுக்கு அதி நவீன ஏவுகணைகள்

3/12/2011

சிரியாவுக்கு அதி நவீன ஏவுகணைகளை ரஷ்யா வழங்கியுள்ளது. சிரியாவில் அந்நாட்டு ஜனாதிபதி பஷர் அல்-அசாத்திற்கு எதிர்ப்புகள் வலுத்துவரும் நிலையில் கப்பல்களை அழிக்கும் ஏவுகணைகளை அனுப்பி வைத்துள்ளது.

இது 300 கி.மீ., தொலைவில் உள்ள இலக்கினைத் தாக்க வல்லது.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இரு நாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இவ் விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் விக்கி ஊடகப் போட்டி


தமிழ் சினிமா

மயக்கம் என்ன - விமர்சனம்

"காதல் கொண்டேன்", "புதுப்பேட்டை" ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து தனுஷ்வை வைத்து செல்வராகவன் இயக்கும் 3வது படம் "மயக்கம் என்ன". தனுஷ்க்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ரிச்சா தமிழில் அறிமுகமாகிறார்.

படம் : மயக்கம் என்ன

நடிப்பு : பதனுஷ் , ரிச்சா கங்கோபதி, மற்றும் பலர்

இசை : ஜி .வி பிரகாஸ்

இயக்கம் : செல்வராகவன்

தயாரிப்பு : ஜெமினி பிலிம் சர்கிட்

"காதல் கொண்டேன்", "புதுப்பேட்டை" ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து தனுஷ்வை வைத்து செல்வராகவன் இயக்கும் 3வது படம் "மயக்கம் என்ன". தனுஷ்க்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ரிச்சா தமிழில் அறிமுகமாகிறார். அடுத்த தலைமுறையினர் பற்றியும், அவர்களின் பிரச்சனையை மையமாக வைத்து உருவாகும் "மயக்கம் என்ன", முழுக்க முழுக்க இளைய தலைமுறையினரை மையப்படுத்தி இருக்கும். படத்தின் கதை மொத்தம், தனுஷ், ரிச்சா இருவரை மையம் கொண்டே எடுக்கப்பட்டுள்ளது.
ஏ.யூ.எம். புரொடக்சன்ஸ் தயாரிக்க, கதை, திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் செல்வராகவன். கூடவே படத்தில் 2பாடல்களையும் எழுதியுள்ளார். செல்வராகவனுடன், தனுஷூம் 2 பாடல்கள் எழுதியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, கோலாபாஸ்கர் படத்தொகுப்பு வேலையை ‌கவனித்துள்ளார்.

மேற்கத்திய இசையையும், கிராமிய இசையையும் கலந்துகட்டி ஒரு காக்டெயிலாக படைத்திருக்கிறார் ஜிவி. நரேஷின் உற்சாகமான குரலுடன் பயணிக்கும் பாடலின் இடையே ஒரே ஒரு வரிக்காக வழி மரிக்கிறது ஒரு பெண்குரல், அந்த இடம் அருமை. பாடியவர் யாரென்று தெரியவில்லை. (சைந்தவி...?) ஆயிரத்தில் ஒருவன் மாலை நேரம் பாடலைப் போல ஆகிவிடக்கூடாது.

தனுஷ் நல்ல நடிப்பு தான்..அண்ணன் படம் என்பதால் அடக்கியே வாசிச்சிருக்காரு..

ஹீரோயின் ரிச்சா முதல்ல பார்க்கும்போது சாதாரணமா தெரிஞ்சது..போகப்போக நல்ல ஃபிகரா தெரிய ஆரம்பிச்சுடுச்சு..நல்லா முகத்துல எக்ஸ்பிரசன்ஸ் காட்டுது..அழகான கண்கள்..அகலமான முதுகுன்னு நல்லவொரு அறிமுகம்.

நன்றி குசும்பு
தம்பி வெட்டோத்தி சுந்தரம்


கன்னியாகுமரி மாவட்ட எல்லையில் உள்ள வெட்டோத்தி கிராமத்து இளைஞன் சுந்தரம் (கரண்). ஆசிரியர் வேலைக்குச் செல்ல விரும்பும் அவரது வாழ்க்கையில் கடத்தல் தாதாக்கள் யதேச்சையாக நுழைகிறார்கள். கோபக்காரனான சுந்தரத்துக்கும் அவர்களுக்கும் மோதல். தாதாக்களின் காட்பாதர் சிலுவையின் (ஜே.எஸ்) ஒரே மகள் லூர்துமேரியை(அஞ்சலி) வேறு காதலிக்கிறார். கடத்தல் தொழிலை வெறுக்கும் சுந்தரத்துக்கு அதை செய்ய வேண்டிய கட்டாயம் வருகிறது. ஈடுபடுகிறார். குறுகிய காலத்திலேயே கடத்தல் உலகின் முக்கிய புள்ளியாகிறார். ஒரு கட்டத்தில் அஞ்சலியை மணக்க, கடத்தல் தொழிலையே விட்டு விடத் தீர்மானிக்கிறார். விதி வேறுவிதமாக விளையாடுகிறது. அது என்ன என்பது மீதி கதை. தமிழ்நாடு-கேரள எல்லையில் நடக்கும் கடத்தல் தொழில் என்ற புதிய களத்தில் கதை சொல்லியிருக்கிறார்கள். உண்மை சம்பவத்தின் அடிப்படையிலானது என்று கூடுதல் எனர்ஜியும் சேர்த்திருக்கிறார்கள்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கரணுக்கு கை கொடுத்திருக்கும் கதை. பளிச்சென்ற வெள்ளை சட்டையில் பட்டதாரியாகவும், கடத்தல் உலகின் பளீர் தாதாவாகவும் இருவேறு களத்தில் கச்சிதமாக பயணம் செய்திருக்கிறார். பஸ்சில் செல்லும்போது அஞ்சலியிடம் வம்பு செய்வதும், அவரது காதலை புரிந்ததும் வெட்கமும், பூரிப்புமாகத் திரிவதும் கரணை இன்னும் இளமையாகக் காட்டுகிறது. பக்கத்து வீட்டு முஸ்லிம் குடும்பத்தோடு நட்பாய் இருப்பது, ஆதரவற்ற குடும்பத்துக்கு தன் வீட்டிலேய அடைக்கலம் கொடுப்பது என்று நல்லவர் கேரக்டரை சிரிப்பிலேயே கொண்டு வந்து விடுகிறார். பூர்வீக வீடு ஏலத்துக்கு வரும்போது துடிப்பதும், தனக்காக நண்பன் அவமானப்படுவதை தாங்கிக் கொள்ள முடியாமல், நாமும் கடத்துவோம் தோழா என்று பொங்கி எழுவதும் கச்சிதமான நடிப்பு. கிளைமாக்சில் அனுதாபத்தையும் அள்ளிக் கொள்கிறார்.

ஏடேய் மர மண்டை என்று காதலனை மிரட்டும் தெனாவெட்டு பெண் அஞ்சலி. பஸ்சில், திருவிழாவில் கிராமத்து பெண்ணாகப் பளபளக்கிறார். அவனோட உனக்கு கல்யாணமாமே..? என்று அப்பா சந்தேகத்தோடு கேட்கும்போது, என்னை இன்னும் நம்பலை இல்ல. நீ எந்த மாப்பிள்ளைய பார்த்தாலும் கட்டிக்கிறேன். அப்பதான் உன் சந்தேகம் போகும் என்று தந்தைக்கு பதில் சொல்லி விட்டு அடுத்த நிமிடமே கரணுக்கு போன் பண்ணி, நான் கிளம்பி வர்றேன். எங்க அப்பாவை விட நல்லா கவனிச்சுக்குவல்ல என்று கேட்கும் கல்லூளித்தனத்தை அப்படியே பிரதிபலித்திருக்கிறார். அவருக்கு கரண் மீது காதல் வருவதற்கான காரணம்தான் தெரியவில்லை.

பருத்திவீரனுக்கு பிறகு சரவணன், இதில் மீண்டும் கவனிக்க வைத்திருக்கிறார். அதே காமெடி மைனர் வேடம். கரணை கத்தியால் குத்தி ஜெயிலிலிருந்து காப்பாற்றி பிறகு அவரிடம், தோழா தோழா என்று ஒட்டிக் கொள்வது, தோழா, உடனே ஒரு ரூமை போடுறோம். ஒரு கட்டிங்கை ஏத்துறோம். நிறைய யோசிக்கிறோம் என்று அவர் அடிக்கும் லந்துகள் கலகல. கரணுக்கு பண பிரச்னை வரும்போது கலங்கும்போதும், கரணுக்காக உயிர் விடும்போது சென்டிமென்ட் ஏரியாவிலும் செக் வைக்கிறார் சரவணன். ஊர்லதான் கரன்ட் இல்ல, பேர்லயாவது இருக்கட்டுமேன்னுதான் கரன்ட்டுன்னு பேர் வச்சிக்கிட்டேன் என்று கஞ்சா கருப்பு பெயர் விளக்கம் சொல்லி காமெடி பவர் ஏற்றுகிறார். அலட்டல் இல்லாத வில்லத்தனத்தால் கவனம் ஈர்க்கிறார் சிலுவை ஜே.எஸ். மகளுக்காக கடத்தல் தொழிலை விட்டுவிட முடிவு செய்யும் கரணை, மருமகனாக ஏற்பதும், கிளைமாக்சில் மதம்கொண்ட யானையாக மாறுவதுமாக மிரள வைக்கிறார். வித்யாசாகரின் இசையில், கொலைகாரா... இனிமை. ஆஞ்சநேயலுவின் கேமரா நாகர்கோவில் அழகை கடத்தி வந்திருக்கிறது.

கதையின் கதாபாத்திரங்களில் சிலர் இன்னும் இருப்பதால், லாவகமாக கதையை கையாண்டிருப்பது புத்திசாலித்தனம். கரண் கூடவே இருக்கும் சிறுவனும், கடைசி காட்சியில் அவன் செய்யும் காரியமும் அக்மார்க் சினிமாத்தனம். பிற்பகுதியில் என்டர் ஆனாலும் கவனம் ஈர்க்கிறார் நந்தா சரவணன். கரண் தேவாலயத்தில் மதம் மாறும்போது சரவணன் செய்யும் அலப்பறையும் அதை கரண் ஜஸ்ட் லைக் தட்டாக எடுத்துக் கொள்வதில் லாஜிக் இல்லை. எச்சிலை துப்பி விட்டார் என்பதற்காக சண்முகராஜ் கூட்டத்தை ஓடஓட விரட்டி அடித்து துவம்சம் செய்வதும் கதையோடு ஒட்டாத ஆக்ஷன் பில்டப்கள். இருந்தாலும், கன்னியாகுமரி ஸ்லாங், கடத்தல் தொழிலின் டெக்னிக், பார்டர்- செக்போஸ்ட் பிரச்னைகள், போலீஸ் தாதா உறவும், பகையும் என நேட்டிவிட்டியோடு கதை சொல்லி கவனம் ஈர்க்கிறார் இயக்குனர்.
நன்றி குசும்பு


நா சிவனாகிறேன்!


நகரில் திடீரென்று சில பெண்கள் அடுத்தடுத்து படுகொலை செய்யப்படுகிறார்கள். டீன் ஏஜ், நடுத்தர வயது, திருமணமான பெண்கள் என படுபயங்கரமான கொலைகள். கொலையாளியை பிடிக்க வெறித்தனமாக அலைகிறது போலீஸ். 16வது கொலை நிகழும்போது, கொலையாளி போலீசிடம் சிக்குகிறான். நான் ஏன் கொலை பண்றேன் தெரியுமா? என்றதும் விரிகிறது பிளாஷ்பேக். அப்பாவுக்கு துரோகம் செய்கிறாள் அம்மா. பாசத்தில் வீட்டுக்கழைக்கும் அப்பாவை போட்டுத்தள்ளும் அம்மா, மகனை கொலைகாரனாக்குகிறார். ஜெயிலுக்கு போகும் மகன், வெளியில் வந்து தனது அம்மாவை போன்ற அம்மாக்களைத் தேடி தேடிப்பிடித்து போட்டுத்தள்ளுவதுதான் கதை.

பழைய கதையை, புது டெக்னிக்கில் சொல்ல முயன்றிருக்கிறார்கள். அப்பாவுக்கு, தன் அம்மா செய்த துரோகம் கண்டு உதய் பொங்கி எழுவதும், அதேமாதிரி துரோகம் செய்யும் பெண்களை ஸ்கெட்ச் போட்டு, ஒரேமாதிரியாக கொலை செய்வதும் திக் திக். தப்பு பண்றவங்களுக்கு தண்டனை கொடுத்தா, அது தப்புக் கணக்குல சேராது என்று அவர் கொடுக்கும் சிவன் போஸ், அசத்தல். சைக்கோவாக வரும் அவர், காதல் கொண்டேன் தனுஷை அப்படியே ஜெராக்ஸ் ஆக்கியிருப்பது ஓவர். அவருக்கும், வர்ஷாவுக்கும் காதல் மலர்வதற்கான காரணம் அழுத்தமாக இல்லை. சைக்கோ, த்ரில்லர் கதையில் அடிக்கடி பாடல்கள் இடம்பெறுவது, ஸ்பீட் பிரேக்.

போலீசிடம் மாட்டிக்கொண்ட பிறகு, ஒட்டுமொத்த மீடியாவையும் கோர்ட்டுக்கே வரவழைத்து, தன் தவறுகளுக்கு நியாயம் கற்பிக்க ஹீரோ முயல்வது காமெடியாக இருக்கிறது. அப்பாவாக வரும் பிரேம்குமார் பரிதவிக்க வைக்கிறார். அவரது மனைவியாக வரும் நயானி தீட்சித் நடிப்பில் ஸ்கோர் பண்ணுகிறார். விபத்தில் தன்னைக் காப்பாற்றியவன் என்ற காரணத்துக்காக, காதலித்து மணந்த கணவனையும், மகனையும் தூக்கி எறிந்துவிட்டு நயானி, அவனோடு செல்வது நம்பும்படியாக இல்லை. தொடர்கொலைகள் செய்யும் ஹீரோ, ஏதோ ஒரு கட்டிடத்திலுள்ள ஒரு அறையில், தான் கொலை செய்த பெண்களின் போட்டோவை வரிசையாக மாட்டி வைத்திருப்பதிலும் லாஜிக் டமார். பாடல்களும் பின்னணி இசையும் சுமார் ரகம். பாடல் காட்சிகளில் ஒளிப்பதிவாளர் தெரிகிறார். சிறுவர்களின் வாழ்க்கை எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறது என்கிற கருத்தை சொல்ல வந்திருக்கும் இயக்குனர் அதிலிருந்து தடம்மாறிப் போயிருக்கிறார்.
நன்றி குசும்பு