இளமை --கவிதை



முட்களை பொருட்படுத்தாமல்
பூக்கள் மீது அதிக கவனம் செலுத்தும்
ஒரு தீபம் ஏற்றும் போதே
நூறு தீபம் ஏற்றும் தொலை நோக்கு
பார்வை இருக்கும் !


முடிந்த பால்யத்தை நினைத்து கவலையில்லை
வரும் முதுமைப் பற்றி கனவுகளில்லை !
நடக்கும் வாழ்வை இனிமையாக
நடத்த நினைப்பது இளமை !!

இலக்கியச் சந்திப்பு - 2 - மணிமேகலா

.

25.03.2012 ஞாயிற்றுக்கிழமை.இன்று இரண்டாவது இலக்கிய சந்திப்பு.
காலையில் இருந்தே மப்பும் மந்தாரமுமாக இருந்தது சிட்னி.கூடவே மழைத்தூறலும்!மாலைநேரம் குளிர் ஆரம்பித்து விட்டிருக்கும். மழை வேறு பெய்தால் நம் இலக்கியச் சந்திப்பு என்னாகும் என்று யோசனையாய் இருந்தது.ஆனால்,நல்லவேளையாக மாலைநேரத்துச் சூரியன் ஈரலிப்பான மேகப்பஞ்சில் முகம் துடைத்து பளீச்சென்றிருந்தான்.thank you suryan!
இன்று புதிதாக இரண்டு பேர் அறிமுகமாகி இருந்தார்கள்.ஒருவர் கோகிலா மகேந்திரன்.மற்றவர் இந்துமதி ஸ்ரீநிவாசன்.முன்னவர் ஈழத்தவர்களால் நன்கறியப்பட்ட எழுத்தாளர் மற்றவர் ATBC வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்.இவர்களோடு நம் ஆரம்ப நண்பர்கள் செல்வமும் கார்த்திகாவும்.வேலை அலுவலாக புறநகர் பகுதியில் நிற்பதால் இன்று வரமுடியாத சூழல் என பாஸ்கரன் அறிவித்திருந்தார். பவானி என்ற புதியவரும் வரமுடியாத நிலைமையை இன்று குறுந்தகவல் மூலம் சொல்லி இருந்தார்.செளந்தரியும் பாமதியும் இந்த நிகழ்ச்சிச் சுருக்கத்தை அறியும் ஆவலை வெளிப்படுத்தி இருந்தனர்.
எனவே நாங்கள் ஐந்து பேர்.

வசந்தமாலை 2012 - 8 APRIL 12


சிட்னி தமிழர் ஒன்றுகூடல் 09/04/2012



இலங்கைச் செய்திகள்

.
ஜனாதிபதியின் கடிதத்துக்கு இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பதில்

பம்பலப்பிட்டி இந்துவில் 13 பேர், இராமநாதனில் 7 பேர் 9 பாடங்களில் A சித்தி

யாழில் 9A பெற்ற கல்லூரிகள்

யாழ். பண்ணைக் கடலின் வடக்குப்புறம் அழகுக் கடற்கரை அமைக்கும் செயற்பாடு

சர்வதேச தரத்திலான தனியார் வைத்தியசாலை யாழ்நகரில் நேற்று திறந்து வைப்பு

வரணி பிரதேசத்தில் ஆயுள்வேத வைத்தியசாலை அமைக்க நடவடிக்கை

அமைச்சர் பெருமக்களின் பொறுப்பற்ற பேச்சுக்கள்

வேண்டாம் சுயநலம்; தேவை பொது நலம்

அரசியல்வாதிகளுக்கு இது உறைக்குமா ?


1956 சிங்கள மொழிச் சட்டம் நாட்டுக்குச் செய்த பெரும் அநீதி

மீண்டும் தூத்துக்குடி - கொழும்பு கப்பல்சேவை ஆரம்பம்





''யானை புக்க புலம்....''

.
பயணம் இதழில் சங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் என்னும் தலைப்பில் சங்கப்பாடல்கள் பற்றி எழுதத் தொடங்கியிருக்கிறேன்.ஜன.இதழில் வெளி வந்திருக்கும் அதன் முதல் பகுதி கீழே....
சங்கப் பாடல்கள் தொன்மைப் பண்பாடுகளாலும்,வரலாற்றுத் தகவல்களாலும் நிரம்பியிருக்கும் ஆவணங்கள் மட்டுமல்ல. இன்று வரை அவை இறவாப் புகழோடு இருந்து கொண்டிருப்பதற்குக் காரணம்,என்றைக்கும் தேவையான மானுட மதிப்பீடுகளை, என்றும் எவருக்கும் பொதுவான மன உணர்வுகளை அவை முன் வைப்பதும்தான்.  புறமும் அகமுமாக இரண்டு வகைக் கருப்பொருள்களை மட்டுமே வைத்துக் கொண்டு எண்ணற்ற அறங்களை,எளிதில் அவிழ்த்துச் சொல்லி விட இயலாத ஆழ்மனப் பதிவுகளைச் செறித்து வைத்தபடி…உலக இலக்கிய வரிசையில் அழியாப் புகழுடன் ஒளிர்ந்து கொண்டிருக்கும் இந்தக் கருவூலங்களில் சிலவற்றை இன்றைய தலைமுறைக்கு எளிமையாக அறிமுகப்படுத்துவதே சங்கப்பாடல்களினூடேயான இந்தப் பயணத்தின் முதன்மை நோக்கம்.
''யானை புக்க புலம்...''


அருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்த திருவிழா – 2012 - 7ம் நாள்(02-04-2012)

/
படங்கள் கீழே படப்பிடிப்பு: ஞானி

அருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்த திருவிழா – 2012 - 6ம் நாள்(01-04-2012)

/
படங்கள் கீழே படப்பிடிப்பு: ஞானி

 
(பகல்   திருவிழா )


அருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்த திருவிழா – 2012 - 5ம் நாள்(31-03-2012)

/
படங்கள் கீழே படப்பிடிப்பு: ஞானி


அருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்த திருவிழா – 2012 - 4ம் நாள்(30-03-2012)

/
படங்கள் கீழே படப்பிடிப்பு: ஞானி




அருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்த திருவிழா – 2012 - 3ம் நாள்(29-௦03-2012)

படங்கள் கீழே படப்பிடிப்பு: ஞானி

அருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்த திருவிழா – 2012 - 2ம் நாள்(௦28-௦03-2012)

.
2ம் நாள் திருவிழா நேற்று(௦28-௦03-2012) பக்தி பூர்வமாக இடம் பெற்றது. சிட்னி முருகன்  மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வந்த காட்சி கண் கொள்ளா காட்சியாக இருந்தது.

படங்கள் கீழே    படப்பிடிப்பு: ஞானி

அருள்மிகு சிட்னி முருகன் கோயில் வருடாந்த திருவிழா – 2012 கொடியேற்றம் 27/03/2012


.
கு கருணாசலதேவா


வளம்மிக்க அவுஸ்திரேலியா நாட்டின், சிட்னி மாநகரிலுள்ள வைகாசிக் குன்றில் அமர்ந்துள்ள அருள்மிகு சிட்னி முருகப்பெருமானுக்கு கர வருஷம் உத்தராயண பங்குனி திங்கள் 14ம் நாள் செவ்வாய்க்கிழமை பூர்வபக்ஷ ஷஷ்டித் திதியும் கார்த்திகை நட்சத்திரமும்  சித்த யோகமும் கூடிய சுபதினத்தில் வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

படங்கள் கீழே

படப்பிடிப்பு: கிருஷ்ணா



மாமன்னன் எல்லாளன் வரலாற்று நாடகம் -பகுதி 1


.
(1974 இல் இலங்கையில் மேடையேற்றப்பட்டு, 1988 இல் நூலாக வெளிவந்து, 1992 இல் சில திருத்தங்களுடன் மெல்பேணில் மேடையேற்றப்பட்டது)

(பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா)

(வரலாறினைச் சுவைபட வெளிப்படுத்த சில காட்சிகளும், வசனங்களும்
கற்பனையாக எழுதப்பட்டுள்ளன)
முன்னுரை

கி.மு. 145 இல் இருந்து
ஈழத் தமிழ் மன்னனான எல்லாளன்
மாயாரட்டை, உறுகுணை என்னும் இரு பகுதிகளைத் தவிர இலங்கை முழுவதையும்
ஒருகுடையின் கீழ் ஆண்டுவருகின்றான்.
அநுராதபுரியைத் தலைநகராகக் கொண்ட
எல்லாளப் பேரரசின்கீழ்
முப்பத்தியிரண்டு சிற்றரசர்கள்
நூட்டின் வௌ;வேறு பகுதிகளையும்
ஆட்சிசெய்து வருகிறார்கள்
மாயாரட்டை உறுகுணை ஆகிய பகுதிகளை
எல்லாளனுக்குக் கப்பம் கட்டிக் கொண்டு, ஆட்சிசெய்யும் கவந்தீசன் என்னும் குறுநில மன்னன்
கப்பம் கட்டுவதை நிறுத்தியதனால்,
அந்த விடயம் அரசவையில் பரிசீலனைக்கு வருகின்றது.

காட்சி 1

களம் :- எல்லாளனின் அரசவை
பங்குகொள்வோர்:- எல்லாளன்
அமைச்சர்
தளபதி
அரசவையினர்.

எல்லாளன்:- எ..ன்..ன? கப்பம் இல்லை என்றானா கவந்தீசன்? இப்புவியின் திக்கெட்டும்
வெற்றிக்கொடி நாட்டி, வீரப்புகழ் ஈட்டி, புதியதொரு வரலாற்றை இப் பூவுலகுக்குப் புகட்டிக் கொண்டிருக்கும் செந்தமிழ் மன்னனான இந்த எல்லாளனுக்கா கப்பம் இல்லையென்றான்?

அமைச்சர்:- அரசே! சிற்றரசன் கவந்தீசன் கப்பங்கட்ட மறுத்த சொல் கேட்டு
சீற்றமடைய வேண்டாம்;. சிந்தித்துச் செயலாற்றுவோம்.

ஜெனிவா தீர்மானம்: இலங்கைக்கான கடுமையான செய்தி - மனித உரிமை கண்காணிப்பகம்

_

25/3/2012

இலங்கையில் யுத்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட யுத்த மீறல்களுக்கு பொறுப்புக் கூறப்பட வேண்டும் என்பதற்கு அனைத்துலக சமூகமானது தனது பலமான ஆதரவை வழங்கியுள்ளதை தற்போது ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைமீதான தீர்மானத்துக்கு கிடைத்த பெரும்பான்மை ஆதரவு வாக்குகள் வெளிப்படுத்தி நிற்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச திரைப்பட விழாவில் கண்டதும் கேட்டதும்

.

மும்பையில் கடந்த 3 முதல் 9 வரை (3 - 9 பிப் 2012) ஆவணப்படங்கள், குறும்படங்கள்,

அனிமேஷன் படங்களுக்கான (12th MIFF) 12 வது சர்வதேச திரைப்பட விழா நடந்தது.

அரபிக்கடலோரம், ஜிலுஜிலுனு காற்று, நான்கு திரையரங்குகள் ஒரே காம்பவுண்டில்.

மராத்திய மாநில அரசும் இந்திய தகவல் ஒலிபரப்பு துறையுடன் இணைந்து நடத்தும்
நிகழ்வு... இதில் பார்த்த பல படங்களின் பெயர்களும் வாயில் நுழையாத டைரக்டர்களின்
பெயர்களும் மறந்துவிடலாம். அல்லது நீங்கள் அப்படி எல்லாம் மறந்துவிடக் கூடாது என்று
அவர்கள் பார்க்க வந்த அனைவருக்கும் வழங்கிய திரையிடப்பட்ட ப்டங்கள் குறித்த
333 பக்கங்கள் கொண்ட கையேடு பழைய பேப்பருடன் சேர்ந்து
பழையன கழிதலாகிவிடும். ஆனால் பார்த்த சில படங்களும் சில காட்சிகளும்
அந்தக் காட்சிகள் ஏற்படுத்திய தாக்கங்களும் எப்போதும் நமக்குள்
வாழ்ந்து கொண்டுதானிருக்கும்.
ராஜேஷ் எஸ் ஜாலாவின் "படிக்கட்டுகளில்" (at the stairs) ஆவணப்படம் வாரணாசியில்
மரணத்திற்காக காத்திருக்கும் மூன்று வயதான கைம்பெண்களைப் பற்றியது.

யார் நமது குரு!‏ - Thinakaran


.
வெகு நாட்களுக்குப் பிறகு இரண்டு  மாணவர்கள் சந்தித்துக்கொண்டார்கள். வழக்கமான நலம் விசாரிப்புகளுக்குப்பின் தங்களுடைய குருநாதர்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்கள்.
‘எங்க குருநாதர் இளமையிலேயே துறவறம் மேற்கொண்டவர்,  பெரிய மேதை, விஷய ஞானம் மிக்கவர், ஆன்மீக நூல்களைக்  கரைத்துக் குடித்தவர் தெரியுமா?’ என்றார் முதல் மாணவர். ‘நமக்கெல்லாம் தினமும் 24 மணி நேரம்தானே இருக்கு? ஆனா எங்க குருநாதர் மட்டும் அந்த நேரத்துக்குள்ள 30 மணி நேர வேலைகளைச் செஞ்சுடுவார்.’
’அப்படியா?’ ஆச்சர்யமாகக் கேட்டார் இரண்டாவது மாணவர்.
’ஆமா. அவர் தினமும்  தியானம் செய்யும்போதே அன்றைய சொற்பொழிவைப்பத்தி யோசிச்சுடுவார். அப்புறமாக் குளிக்கிற நேரத்தில அன்னிக்குப் பேசவேண்டிய விஷயங்களை என்னென்ன உதாரணங்கள் சொல்லி விளக்கலாம், எப்படி எல்லோருக்கும் புரியவைக்கலாம்ன்னு யோசிச்சுக்குவார். சாப்பிடும்போது அதைத் தனக்குள்ளே பேசிப் பார்த்துப் பயிற்சி எடுத்துடுவார். அப்புறம் வகுப்பு தொடங்கினதும் அப்படியே அருவிமாதிரி தத்துவங்களைக் கொட்டுவார். கேட்கிறவங்களெல்லாம் பிரமிச்சுப் போயிடுவாங்க!’
‘ரொம்ப மகிழ்ச்சி’ என்றார் இரண்டாவது மாணவர். ‘எங்க குருநாதரும் பெரிய ஞானிதான். ஆனா உங்க குருநாதர் அளவுக்கு நேரத்தை வளைச்சுப் பிடிக்கிறவர் இல்லை!’
‘ஏன் அப்படிச் சொல்றீங்க?’
‘எங்க குருநாதர் தியானம் செய்யும்போது அதில மட்டும்தான் கவனம் செலுத்துவார். குளிக்கும்போது நல்லா தேய்ச்சுக் குளிப்பார். சாப்பிடும்போது உணவை நல்லா மென்னு ருசிச்சுச் சாப்பிடுவார். வகுப்பு நடத்தும்போது, தான் உணர்ந்ததை  பாமரனுக்கும் புரியும்படி சொல்வார். அவ்வளவுதான்!’

இப்போது முதல் மாணவர் பேசினார்.

27- குறளில் குறும்பு – மாடு, பசு மாடு

.
வானொலி மாமா நா மகேசன் எழுதிய குட்டி நாடகம்


ஞானா அப்பா.....மாடு எண்ட சொல்லுக்குக் கருத்து என்ன அப்பா?

அப்பா ஏன் ஞானா? உனக்கு மாட்டுக்குப் பொருள் தெரியாமல் என்னை
                         வந்து கேட்டு வம்புக்கு இழுக்கிறியே.......குழுமாடு மாதிரி.

ஞானா        பாத்தியளே! பாத்தியளே! மாடு எண்டால் எத்தினையோ பொருள்
                      இருக்குது. அதிலை ஒரு பொருளை நீங்களே சொல்லிப்போட்டியள்.
                      நாலுகாலுள்ள  மிருகம் மாடு எண்டு. ஆனால் சொஞ்சம்
                       இன்சொல்லாய்ச் சொல்லியிருக்கலாம். பசு மாடு  எண்டு.

அப்பா உன்தரவளியோடை மௌன மொழியிலை பேசியிருக்க வேணும்.
                      எனக்கும் நாக்கைஅடக்கத் தெரியேல்லை.

ஞானா கோவியாதையுங்கோ அப்பா......மாடு எண்;ட சொல்லுக்கு வேறை
                     என்ன பொருள்கள் இருக்கப்பா?

அப்பா திருக்குறள் புத்தகம் வாங்கியந்த வைச்சது போதும். இனி ஒரு தமிழ்
                        அகராதி....அகராதி எண்டால் என்னெண்டு தெரியுமே dictionary
                        அதுதான் ஒண்டு வாங்கியந்து தரவேணும் உனக்கு.

ஞானா அப்பா நான் பகிடிக்குக் கேக்கேல்லை. விளக்கத்துக்குத்தான்
                          கேக்கிறன் சொல்லுங்கோ அப்பா.

இனியவளே காத்திருப்பேன்’!


‘இனியவளே காத்திருப்பேன்’!- ஆஸ்திரேலியாவிலிருந்து வரும் முதல் தமிழ்ப் படம்



முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் உள்ள தமிழர்கள், நடித்து, தயாரித்து இயக்கியுள்ள படம் ‘இனியவளே காத்திருப்பேன்’.

ஒரு மணிநேரம் 15 நிமிடம் ஓடும் முழுமையான இந்த திரைப்படத்தை, ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஈழன் இளங்கோ இயக்கியுள்ளார். நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்து பல்கலைக் கழகத்தில் மல்டிமீடியா துறையில் பட்டப்படிப்பு முடித்தவர் இவர்.

உலகச் செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கொரிய யுத்த சூன்ய வலயத்திற்கு விஜயம்

ஈரானிடம் மசகு எண்ணெய் இறக்குமதி செய்யும் 12 நாடுகள் மீது பொருளாதாரத் தடை?


சீனாவும், அமெரிக்காவும் ஒரே நிலைப்பாட்டில்!


வரலாற்று சந்திப்பு


தமிழ் சினிமா

.
காதல் பிசாசு


கனடாவாழ் இலங்கை தமிழர் அரவிந்த், தனது நண்பருடன் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளார். ஹீரோவும் அவரே.. இயக்கமும் அவரே..!

சந்தானபாரதி மிகப் பெரிய கான்ட்ராக்டர். அவருக்கு ஒரு மகள். ஹீரோயின் மிதுனா. இவரது வீட்டில் வேலை பார்க்கும் வனிதாவின் மகன்தான் ஹீரோ அரவிந்த். தங்களது மாடி வீட்டிலேயே வனிதாவையும், அரவிந்தையும் தங்க வைத்து பராமரித்து வருகிறார் சந்தானபாரதி. ஹீரோவையும் அவரே படிக்க வைக்கிறார். மிதுனாவும், அரவிந்தும் ஒரே கல்லூரியில் ஒரே வகுப்பில்தான் படிக்கிறார்கள். மிதுனாவுக்கும், அரவிந்துக்கும் காதல் பற்றிக் கொள்கிறது. அப்பாவிடம் சொல்கிறாள் மகள். ஏற்றுக் கொள்கிறார் அப்பா. காதல் சிறகு காற்றில் பறக்கும் நேரத்தில், இங்கே பரீட்சை பேப்பரில் மானம் பறந்துவிடுகிறது..! இருவருமே பெயிலாகிவிடுகிறார்கள்.

இப்போது குடும்பத்தினர் வட்டமேசை மாநாடு போட்டு, முதல்ல படிப்பு. அப்புறமாத்தான் காதல் என்கிறார்கள் கண்டிப்போடு. ஹீரோவுக்கு திடீர் ஞானதோயம். காதலியின் அருகில் இருந்தால் படிக்கவே முடியாது என்ற எண்ணத்தில் மும்பையில் ஒரு கல்லூரிக்கு டிரான்ஸ்பர் வாங்கி அங்கே பறக்கிறார். ஹீரோ மும்பைக்கு போனவுடன் எட்டாமிடத்தில் சனி பகவன் வந்து உக்கிரப் பார்வை பார்த்துவிடுகிறார்.

தெரியாத்தனமாக தனக்கு முன்பே தெரிந்த ஒரு பெண்ணை ஹோட்டலில் காப்பாற்றப் போய் மும்பையின் மிகப் பெரிய டானின் மகன் மரணத்திற்குக் காரணமாகிவிடுகிறார். டான் ஹீரோவைத் துரத்த, அந்த டானையும் போட்டுத் தள்ளுகிறார் அரவிந்த். இந்த டானுக்கு எதிர் கோஷ்டியான இன்னொரு டான் அரவிந்தை அரவணைத்துக் கொள்ள.. என்ஜீனியரிங் படிக்க வந்த ஹீரோ பில்லாவாகிறார். தனது குடும்பத்துடனான தொடர்பை துண்டித்துக் கொண்டதால் இவரது நிலைமை வீட்டாருக்குத் தெரியவில்லையாம். இதற்குள் 3 வருடங்கள் ஓடிவிட்டதாம். அதற்குள் ஹீரோயின் மிதுனாவும் தனது படிப்பை முடித்துவிட்டு ஐ.பி.எஸ்.ஸாகி அதே மும்பைக்கு ஸ்பெஷல் டூட்டியில் வந்து சேர்கிறார்.

யாரோ ஒரு டானை பிடிக்கப் போகிறோம் என்று சொல்லி வலைவிரிக்க அதில் தனது காதலனே வந்து விழுந்தவுடன் அதிர்ச்சியாகிறார் மிதுனா. இறுதியில் என்ன ஆனது என்பதை என்னைப் போலவே நீங்களும் தியேட்டருக்குச் சென்று நேரில் பார்த்து அவஸ்தைப்பட்டு தெரிந்து கொள்ள வேண்டுமாய் சபிக்கிறேன்..!

மனம் நிறைய ஆசை இருக்கலாம். நடிப்பதற்கேற்ற முகவெட்டு இருந்தால் ஹீரோவாக விருப்பம் இருக்கலாம். அதே சமயம் கையில் காசு இருந்தால் தனக்குத் தோதான கதையை படம் இயக்கத் தெரிந்தவரிடம் கொடுத்து செய்யச் சொன்னால் நல்லதுதான்.. இப்படி இயக்கத்தையும் நானே செய்வேன் என்று சொல்லி குழி தோண்டி, அதில் தானே துண்டுவிரித்து படுத்துக் கொள்வதெல்லாம் முட்டாள்தனம்..!

தமிழ்ச் சினிமாக்கள் இன்றைக்கு என்ன லெவலில் வந்து கொண்டிருக்கின்றன என்பதையும், தமிழ்ச் சினிமா ரசிகர்களின் சினிமா அறிவு பற்றியும் தெரிந்து கொள்ளாமல் இப்படித்தான் பலரும் வாரவாராம் படத்தினை வெளியிட்டு தங்களது உடலையே காயப்படுத்திக் கொள்கிறார்கள்..!

கே.எஸ்.ரவிக்குமாரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய தங்கவேல் என்பவர்தான் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார். சில இடங்களில் திரைக்கதையும், பல இடங்களில் வசனமும் பளிச்சிடுகிறது. இது மட்டும் இருந்தால் போதுமா..? முதல் காட்சியில் ஹீரோ ஓடி வருவதும், ஹீரோயின் போலீஸ் டிரெஸ்ஸில் துரத்துவதையும் பார்த்தபோதே வயிற்றில் புளியைக் கரைத்துவிட்டது.. அதேதான் படம் முழுக்க.. அரவிந்த் இன்னும் கொஞ்சம் நடிப்பைக் கற்றுக் கொண்டு அதன் பின்பு வரலாம். அதே சமயம் படமெடுக்க முன் வந்த தைரியத்தை பாராட்டத்தான் வேண்டும். வேறு வழியில்லை..!

ஹீரோயின் மிதுனா, 'கருத்தம்மா' ராஜஸ்ரீயின் உடன் பிறந்த தங்கை. சீரியலில் நடிக்க வந்தவரை சினிமாவுக்கு அழைத்து வந்துவிட்டார்கள். சிற்சில இடங்களில் நடிப்புக்காக பார்க்க முடிந்தாலும், ஹீரோயினுக்கான ஜாடையே இல்லாதவர். இவருடன் இன்னொரு ஐபிஎஸ்ஸாக வரும் ஒரு பெண் இவரைவிட அழகாக இருந்து தொலைத்துவிட்டதால் இடைவேளைக்கு பின்பும் பார்க்க சகிக்கவில்லை..!

படத்தின் விற்பனைக்காக கடைசி நேரத்தில் சந்தானத்திடம் கால்ஷீட் கேட்டு சில காட்சிகளை தனியே எடுத்து இதில் இணைத்திருக்கிறார்கள். தன்னை அழைத்தவர்களை அவரும் ஏமாற்றவில்லை. அண்ணன் சந்தானம், கொஞ்சம் சுத்தி வளைத்துச் சொல்லும் வசனங்களையும், நீட்டமாக எதுகை, மோனையாக அள்ளிவிடுவதையும் கொஞ்சம் குறைத்துக் கொண்டு, கவுண்ட்டர் அட்டாக் செய்தால் நலமாக இருக்கும்..! இடைல கனடால கொஞ்சம் ஷூட் செஞ்சிருக்காங்கன்றது நல்லா தெரியுது. ஆனா எதுக்கு..? எல்லாம் வேஸ்ட்டு..! பெரிசுகளின் அலப்பறையையே சொல்ல முடியாத சூழல்ல ஒளிப்பதிவு, இசைன்னுல்லாம் கேட்டு நீங்க உங்க மூளைய கன்பியூஸ்ல விட்டுக்காதீங்க..!

நடிச்சே ஆகணும்ன்னா நல்ல இயக்குநர்களைத்தான் முதல்ல தேடிப் பிடிக்கணும்.. கடந்த 3 வாரமா வெளிவந்த எந்த சினிமாவும் மக்கள் ரசனைக்கேத்தாப்புலேயே இல்லைன்றதுதான் உண்மை. அதைவிட உண்மை சுத்தமான வாஷ் அவுட்டுதான் கடந்த 3 வாரங்களாக சினிமா தொழிலுக்கு பதிலா கிடைச்சிருக்கு..!

அரவான் படத்துக்கு எஸ்.எஸ்.ஆர். பங்கஜம் தியேட்டர்ல செகண்ட் ஷோவுக்கு 10 பேர் வந்திருக்காங்க.. நாங்க படத்துக்கு தேவி பாரடைஸ் தியேட்டர்ல 28 பேர் வந்திருக்காங்க.. தேவி பாரடைஸ்ல இந்தப் படத்தை தூக்கிட்டு தியேட்டரையே மூணு நாளைக்கு மூடி வைச்சிருந்திருக்காங்க..! ஒரு வார தியேட்டர் கட்டணமான ஆறே முக்கால் லட்சத்தை வைச்சுட்டு ஒரு படத்தை ஓட்டுறதுக்கு எந்தத் தயாரிப்பாளரும் முன் வரலை. அவங்க என்ன செய்வாங்க..? பூட்டுறா சாமின்னுட்டாங்க..! இதுதான் தற்போதைய தமிழ்ச் சினிமாவின் நிலைமை.

இந்த லட்சணத்துல பெப்சி-தயாரிப்பாளர்கள் சண்டை வேற மும்முரமா இருக்கு. அறிவிக்கப்படாத ஸ்டிரைக் இப்போ அறிவிக்கப்பட்டுவிடலாம்ன்ற ரேஞ்ச்சுல நிக்குது. என்னிக்குன்னுதான் தெரியலை..!

இன்னிக்கு 5 படம் ரிலீஸ் ஆகியிருக்கு.. எதையும் சொல்ல முடியாது. கடும் உழைப்பு, சிறந்த இயக்கத் திறமை, கதையாடல், படத்தின் நேர்த்தி இது எல்லாவற்றையும் தாண்டி நேரம், காலமும் சினிமால முக்கியம்.. அது எல்லாருக்குமே அமையாது. கிடைத்தவர்கள்தான் ஜெயித்திருக்கிறார்கள்..! 99 சதவிகிதம் நமது முயற்சிதான்.. 1 சதவிகிதம்தான் லக்கு இல்லாட்டி இறைவனின் ஆசி...! இதுல 99 சதவிகித்தையே முழுசா செய்யலைன்னா, இறைவனின் ஆசி எப்படி கிடைக்கும்..? தப்பு தம் பக்கம்தான் என்பதை இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் முதல்ல புரிஞ்சுக்கிட்டு அப்புறமா நஷ்டக் கணக்கையும், யாரால் நஷ்டம் வந்திருக்கிறது என்பதைப் பற்றியும் பேசட்டும்..!

தியேட்டருக்கு போங்கன்னும் சொல்ல மாட்டேன்.. போகாதீங்கன்னும் சொல்ல மாட்டேன்.. உங்க இஷ்டம்..!
நன்றி குசும்பு