ஒரு மரத்தைக்கூட காண முடியவில்லை- தேவதேவன்


.
18tree-600
ஒரு மரத்தடி நிழல் போதும்
உன்னை தைரியமாய் நிற்கவைத்துவிட்டுப் போவேன்
வெட்டவெளியில் நீ நின்றால்
என் மனம் தாங்க மாட்டேன் என்கிறது
மேலும்
மரத்தடியில் நிற்கையில்தான்
நீ அழகாயிருக்கிறாய் 

கணையாழி நிறுவனர் கஸ்தூரிரங்கன் மறைவு.

.
முன்னாள் தினமணி ஆசிரியரும் கணையாழி இலக்கிய இதழின் நிறுவனருமான கஸ்தூரிரங்கன் 04/05/11 காலமானார். அவருக்கு வயது 78. சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் குடியிருப்பில் வசித்துவந்த அவர், சிறிதுகாலம் உடல் நிலை சரியில்லாமல் இருந்தார்.


முதுபெரும் பத்திரிகையாளரும் சமூக ஆர்வலருமான கஸ்தூரிரங்கன் இன்று சென்னை கொட்டிவாக்கத்தில் காலமானார்.

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் டெல்லி நிருபராக 20 ஆண்டுகள் பணியாற்றிய அவர், டெல்லி வாழ் தமிழர்களுக்காக 1965 ல் கணையாழி இதழை தொடங்கினார். கணையாழியில் அரசியலை முதன்மைப்படுத்திய கட்டுரைகள் உலக நாட்டு நடப்புகள், இலக்கியத் தொடர் கட்டுரைகள். அரசியல் பேட்டிகள், பொருளியல் செய்திகள், நகைச்சுவைத் துணுக்குகள் ஆகியன கணையாழியில் வெளியாகியது. கணையாழியை தனது உயிர் மூச்சாக நினைத்து நடத்தி வந்தார்.

இலங்கைச் செய்திகள்

இலங்கையில் போர்க்குற்றங்கள்' - ஐ.நா. நிபுணர் குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கை


ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை  கடந்த திங்கட்கிழமை இரவு வெளியிடப்பட்டுள்ளது இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இலங்கையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல் குற்றசாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் விபரம் வருமாறு:

"சத்யசாயி சென்ரர்" மானிப்பாய் வீதி, தாவடி - கானா பிரபா

.

முற்குறிப்பு: இந்தப் பதிவு சத்யசாயி பாபா குறித்த மாற்றுக்கருத்துக் கொண்டோருக்கான பதிவு அல்ல, அந்தத் தரப்பு அன்பர்கள் தொடர்ந்து படிக்க கஷ்டமாக இருந்தால் இப்பதிவைத் தவிர்க்குமாறும், பின்னூட்ட விமர்சனங்களை விலக்குமாறும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
அது எண்பத்தைந்துகளின் ஒரு மாதம், எங்கள் வைரவர் கோயிலுக்கு முன் வழக்கத்துக்கு மாறாக அன்னிய முகங்கள். கூடவே அவர்களை உபசரித்துக்கொண்டு முருகேசம்பிள்ளை மாமா. நமது ஊரில் அதுநாள் வரை பழகியிருக்காத வெள்ளை குர்தாவும், பைஜாமாவும் போட்ட அந்தப் புதுமனிதர்கள் நொடிக்கொரு தடவை சாய்ராம் சொல்வதும் எங்களுக்குப் புதுமையாக இருந்தது. அவர்களின் மனைவியரும் அப்படியே. சின்னஞ்சிறுசுகள் நாங்கள் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்.

அவஸ்தைகள்-இந்திரா பார்த்தசாரதி - சிறுகதை



.
சாமான்களை சரிபார்த்து, நண்பர்களுக்குக் கைகாட்டி விட்டு, என் சீட்டில் உட்காரப் போனபோதுதான் அவரை கவனித்தேன்.
பவளம் போன்ற திருமேனி. என் உள்ளுணர்வு சொல்லிற்று, வயது அறுபத்தைந்i_paaதிருக்கலாமென்று. ஆனால் கண், கண்ட வயது ஐம்பது. நிரந்தர 'ஸினிஸிஸ'த்தின் நிழற் கீற்றாய் படிந்த ஏளனப்   புன்னகை. கை விரல் ஒன்பதில் ஒவ்வொரு கல்லென்று நவரத்தின மோதிரங்கள்.
அவர் அணிந்திருந்த உடையும், அவருடைய தோற்றமும் அவரை ஹிந்தி மாநிலத்தவர் என்று அறிவித்தது. தும்மைப் பூ போல் பளீரென்ற வேட்டி, குர்த்தா.
அவர் அறிதுயில் கோலம் கொண்டிருந்தார், கால்களை தாராளமாக நீட்டியபடி. இன்னொருவர் அங்கு உட்கார வேண்டுமென்ற எண்ணம் அவருக்கு இருந்ததாகவே தெரியவில்லை. உலகத்தைப் பந்தாகச் சுற்றி தம் குர்தாப் பையில் வைத்திருப்பவர் போல் அவர் அலட்சியமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அவர் காலருகே இரண்டு பேர் பணிவுடன் நின்று கொண்டிருந்தார்கள். தமிழர்கள். சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனில் ஒரு வடநாட்டுக்காரருக்கு பணிவிடை செய்வது போல் முறுக்கேறிய மீசையுடன் இரண்டு தமிழர்கள் நின்று கொண்டிருந்தது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது.

ஒற்றையாட்சியை நீக்கினால் மட்டுமே இனப்பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் – பேராசிரியர் சிற்றம்பலம்

.

இலங்கையில் இனமுரண்பாடுகள் கூர்மையடையவதற்கு மிக அடிப்படைக் காரணம், சிங்கள மக்கள் மத்தியில் தமது ஆதிக் குடியேற்றம் சம்பந்தமாகச் செல்வாக்குப் பெற்றுள்ள ஐதீகங்களேயாகும் என பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்துள்ளார்.


சிந்தனைக்கூடம் – யாழ்ப்பாணம் எனும் ஆய்வு அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ‘நிறைநிலாநாள்’; கருத்தரங்கில் ‘தமிழர் அரசியலின் எதிர்காலம்’ எனும் தலைப்பில் உரையாற்றிய போதே அவர் இதனைத்தெரிவித்தார்.

அவர் ஆற்றிய உரையின் சுருக்கம் வருமாறு

விக்கிப்பீடியா - சித்ரா சிவகுமார் , ஹாங்காங்

.
“அம்மா.. இன்னிக்கு எனக்கு வீட்டுப்பாடத்திற்கு நீங்க உதவி செய்யணும்மா..”

“என்ன குமார்.. என்ன.. கணக்கு சொல்லித் தரணுமா?”

“கணக்கில்லையம்மா.. என்னோட புவியியல் வீட்டுப்பாடத்திற்கு..”

“என்ன வேணும்ன்னு சொல்லு குமார்”

“அம்மா எனக்கு துருக்கி பற்றிய விவரங்கள் வேணும்..”

“வீட்டிலே இருக்கிற புத்தங்களில் இருக்கான்னு பாரு..”

“அம்மா.. எனக்கு துருக்கி பற்றி பொதுவான தகவல்கள் வேணும். அது என்சைக்ளோபீடியா புத்தகத்தில் தான் இருக்கும். அந்தப் புத்தகம் நம்மகிட்ட இல்லையே..”

கொழும்பு வழியே ஒரு பயணம்.. (தொடர் கதை) - வித்யாசாகர்!!




 10

"என்னைப் போல் எத்தனை பேரை கொள்வீர்கள் என்றேன்” அவளும் அதிர்ச்சியுற்றாள்.

"வேறென்ன காட்டிக் கொடுக்கும் சமுகத்திற்கு மத்தியில் தானே நம் போர், பிரச்சனை, எல்லாமே...?"

"அதென்னவோ சரியாகத் தான் சொன்னீர்கள், அந்த சண்டாளன் அன்று எங்கட தலைவரை விட்டுப் போகல்லை யென்டால்; இன்று இத்தனை பெரிய அவலம் ஏது எம் மக்களுக்கு? இன்று நிகழும் இத்தனை கொடுமைகளுக்கும் அவன் செய்திட்ட துரோகம் தானே காரணமாகிறது. இப்பொழுதும் ஒவ்வொரு செயலுக்கும் பின்னாலிருந்து அவன் தானே துணைப் போகிறான்; தேசத் துரோகி யவன்"

"நீங்கள் ஏன் அப்படி நினைக்கணும், இன்னொரு மாதிரியாக அதை மாற்றி யோசித்துப் பாருங்களேன்"

மாணவர்க்கான சத்தியசாயி நித்திலக் கோவை – பகவான் பாபா

61. கடமை

கடமையே கடவுள், பணி புரிதலே   வழிபாடு: மிக சிறுபணியாக இருந்தாலும் அது கடவுளின் திருவடிவில் சார்த்த பெற்ற ஒரு மணி மலரே.

62. சிறந்த சேவை
ஒரு நல்ல முன் மாதிரியானவனாக வாழ்ந்து காட்டுவதே சேவைகளில் எல்லாம் மிகச் சிறந்த சேவை ஆகும்.

63. உண்மையான உற்றார் உறவினர்

உண்மையே தாய்! (சத்யம் மாதா)
மெய்யறிவே தந்தை! (பிதா ஞானம்)
தருமமே உடன்பிறந்தவன்! (தர்மோ பிரதா)
கருணையே நண்பன்! (தயா சகா)
அமைதியே மனைவி! (சாந்தம் பத்னி)
பொறுத்தலே மகன்! (சஷமா புத்ர:)

- இந்த அறுவர் மட்டுமே ஒவ்வொருவரின் உற்றார் உறவினர் ஆவார்.

அறுபத்து மூவர் கருங்கற் திருப்பணி

,

உலகச் செய்திகள்


யார் இந்த ஒசாமா? (ஒரு சிறப்புப் பார்வை) _


அமெரிக்காவினால் தேடப்பட்டுவந்த அல்-கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

யார் இந்த ஒசாமா?

பிறப்பு: 1957,சவுதி அரேபிய கட்டிட நிர்மாணியின் மகன் குடும்பத்தில் 57 பிள்ளைகள். அதில் ஒசாமா பின்லேடன் 17 ஆவது பிள்ளை.

பதின்மூன்றாவது வயதில் அவரது தந்தையை இழந்தார். 17ஆவது வயதில் சிரியன் கெசினை மணந்தார்.

1979 -சோவியத் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு மற்றும் ஆப்கான் தலைவர்களை பாகிஸ்தானில் வைத்து சந்தித்தார், பின்னர் ஆப்கானுக்காக நிதித் திரட்டும் பொருட்டு சவூதி அரேபியாவுக்குச் சென்றார்.

அதோ அந்த பறவைபோல வாழ வேண்டும்


.
மக்கள் திலகத்திற்கு மகுடம் சூட்டிய படங்களில் மகோன்னத படைப்பு - ஆயிரத்தில் ஒருவன். விஸ்வநாதன் - ராமமூர்த்தி இருவரும் இணைந்து வழங்கிய இசைச் சரித்திரத்தில் கடைசிப்பதிவு என்றும் இப்படம் அறியப்பட்டது. திரு. பி.ஆர். பந்துலு அவர்களின் இயக்கத்தில் மாபெரும் சரித்திரப் படமாக எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் பாடல்கள் Record Break! இன்றுவரை மட்டும் அல்ல.. என்றைக்கும் கேட்டு இன்புறத்தக்கவை!! பாடல்களை பெரும்பாலும் கவிஞர் வாலி வழங்கியிருக்க மூன்று பாடல்களை கவிஞர் கண்ணதாசன் அவர்களும் இயற்றியதாக அறிகிறோம்.

இப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் உருவான கதை ருசிகரமானது. அதுவும் முக்கியமான ஒரு கட்டத்தில் கிடைத்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக.. கடலில் சென்று கொண்டிருக்கும் கப்பலின் மேல்தளத்திலிருந்தபடி கதாநாயகன் தோழர்களுடன் கூடி உற்சாகமாய் பாடுவதாக அமைய வேண்டும் என்ற இயக்குனரின் தேவைக்கேற்ப .. அந்த உற்சாக அலைகளை பிரதிபலிக்கும் வரிகளாய் பாடல் அமையாமல்.. கவிஞர் கண்ணதாசனிடம் தொலைபேசி வாயிலாக.. சூழலை விளக்கி.. அதற்கு அவர் உடனடியாக.. தொலைபேசியிலேயே வழங்கிய பாடல் இது என்பது இனிய செய்தியாகும்.

அன்னையர் தினத்தையொட்டி எழுதப்பட்ட சிறுவர் பாடல்கள்

.
அன்புத் தெய்வம் அம்மா

இயற்றியவர் -
வைத்தியகலாநிதி இளமுருகனார் பாரதி

நேசக் கரத்தால் என்னைத் தூக்கி
நெஞ்சில் அணைக்கும் அம்மா!
பாசத் தோடு ஆசை பொங்கப்
பாலைப் பருக்கும் அம்மா!

மெள்ளப் பாலைக் குடிக்கும் போது
விருப்போ டினிக்கும் தமிழை
அள்ளிக் அள்ளிக் கலந்து ஊட்டும்
அன்புத் தெய்வம் அம்மா!,

காலத்தின் மதிப்பீடுகளை பதிவுசெய்யும் இதழியலாளர் தேவராஜ்


.
வீரகேசரி வாரவெளியீடுகளுக்கு பொறுப்பான ஆசிரியரின் வாழ்வும் பணியும்

முருகபூபதி

“எவ்வளவு காலம் படிக்கவேண்டும்?”

இந்தக்கேள்வியை பல வருடகாலமாக மிகுந்த பரிவோடு தனது அருமை மகனிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார் ஒரு தாயார். இக்கேள்வியின் தொனிப்பொருள் காலம்காலமாக எம்மத்தியில் பேசுபொருள்தான்.

கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு- என்று எம்முன்னோர்கள் சொல்லிவந்திருக்கிறார்கள். கற்றுக்கொள்வதற்கு எவ்வளவோ இருக்கிறது என்று இந்த கணினி யுகத்திலும்; நாம் சொல்லிக்கொண்டிருக்கின்றோம்.

தமிழ் சினிமா

.
வானம்
"மாப்பிள்ளை"
வானம்

அன்பே சிவம் என்பதை உணர்த்து அதை யோசித்து ஐந்து கதைகளை ஒரே திரைக்கதையின் மூலம் திரைப்படமாக்கியிருக்கிறார் இயக்குநர் க்ரிஷ்.

தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்ற வேதம் படத்தின் ரீமேக் தான் இந்த 'வானம்'.

ஏழையாக பிறந்தாலும் எப்படியாவது பணக்கரானாக ஆகிவிட வேண்டும் எனபதற்காக பணக்கார வீட்டு பெண்னை காதலிக்கும் சிம்பு, இசைத் துறையில் சாதனை செய்ய வேண்டும் என்பதை லட்சியமாக கொண்ட பரத், பட்ட கடனுக்காக கூலி வேளை செய்யும் தனது மகனை படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக தனது கிட்னியை விற்கும் சரண்யா பொன்வன்னன், பாலியல் தொழிலாக இருந்தாலும், அதை சொந்தமாக செய்ய வேண்டும் என்று நினைக்கும் அனுஷ்கா, பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலத்தில் ஏற்பட்ட பாதிப்பால் வீட்டை விட்டு ஓடிப்போகும் தம்பியை தேடி அலையும் இஸ்லாமியரான பிரகாஷ்ராஜ் என