தாயான ஈசற்கே சென்றூதாய் கோத்தும்பீ - கானா பிரபா


 “திருவாசகத்துக்கு உருகாதார்

ஒரு வாசகத்துக்கும் உருகார்"

என்னும் வாக்குக்கேற்ப, மணிவாசகர் தில்லையிலே “திருக்கோத்தும்பி” ஐ அருளிச் செய்தார்.

“பூ ஏறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த
நாவேறு செல்வியும் நாரணனும் நான்மறையும்
மாவேறு சோதியும் வானவருந் தாமறியாச்
சேவேறு சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ”




அரச வண்டே!
பூ ஏறு கோனும் - தாமரை மலரில் ஏறி அமர்ந்துள்ள பிரமனும், புரந்தரனும் - இந்திரனும், பொற்பு அமைந்த - அழகு அமைந்த, நா ஏறு செல்வியும் - பிரமனது நாவில் தங்கிய கலைமகளும், நாரணனும் - திருமாலும், நான்மறையும் - நான்கு வேதங்களும், மாவேறு சோதியும் - பெருமை மிகுந்த ஒளி வடிவினனாகிய உருத்திரனும், வானவரும் - மற்றுமுள்ள தேவர்களும், தாம் அறியா - தாம் அறியாவொண்ணாத, சே ஏறு சேவடிக்கே - இடப வாகனத்தில் ஏறுகின்ற சிவபெருமானுடைய
திருவடிக் கண்ணே, சென்று ஊதாய் - போய் ஊதுவாயாக.
(பொருள் விளக்கம் நன்றி : தமிழ் இணையப் பல்கலைக்கழகம்)

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் – 93 மலர்ந்துள்ள 2024 புத்தாண்டில் புதிய தலைமுறை படைப்பாளிகள் உருவாகுவார்கள் ! முருகபூபதி


நான் இலக்கியப்பிரதிகளும், செய்திகளும் எழுதத் தொடங்கிய காலத்தில், வெள்ளீய அச்செழுத்துக்களையே பத்திரிகைகளும்  , இதழ் ஊடகங்களும்  பயன்படுத்தின.

நாமும் எமது எழுத்துப்பிரதிகளை பேனையால் எழுதி, தபாலில் அனுப்பி, அவை வெளிவரும் வரையில் காத்திருப்போம்.  நாட்கள், வாரங்கள், மாதங்கள் என அதற்கான காத்திருப்பு நீடிக்கும்.

கணினியின் வருகைக்குப் பின்னர், நிலைமை தலைகீழாகிவிட்டதா..? தலைமேலாகிவிட்டதா… ?  என்பது புரியாத ஒரு காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.

சில வருடங்களுக்கு முன்னர் இலங்கை சென்றிருந்தபோது எனது பேத்தி ஒருத்திக்கு ஏடு துவக்கி வித்தியாரம்பம் செய்துவைக்குமாறு உறவினர்கள் கேட்டுக்கொண்டபோது,  அந்தப்பேத்தி, அவள் குடும்பத்தினர் மேற்கொண்ட ஏற்பாடுகளை ( குத்துவிளக்கு - அரிசி – தாம்பாளம் )  புறக்கணித்துவிட்டு, ஒரு ஐபேர்டை எடுத்து வந்து, அதில் அ, ஆ, இ, சொல்லித்தருமாறு கேட்டுக்கொண்டாள்.

குழந்தைகள் சமகாலத்தில் ஐபேர்டில்தான் நேரத்தை செலவிடுகின்றனர்.

மெல்பனில் வதியும் எனது இரண்டாவது மகளின்  பெண் குழந்தை தற்போது ஐந்தாம் தரத்தில் படிக்கிறாள். வயது பத்து.

அண்மையில் ஒரு நாள் என்னைப்  பேட்டிகண்டு  எழுதினாள்.  தான் ஆங்கிலத்தில் எழுதியதை வாசித்தும் காண்பித்தாள்.

எமது  இளமைப்பருவத்தில் இத்தகைய காட்சிகளை நாம் கண்டதேயில்லை.

அவளை உச்சிமோந்து வாழ்த்தினேன்.

எனது தொடக்க கால இலக்கியப்பிரதிகளும் வெள்ளீய எழுத்தினால் கோர்க்கப்பட்டே நூலுருப்பெற்றன.

காலப்போக்கில் இந்த நிலைமை முற்றாக மாறிவிட்டது.

சமகாலத்தில் தினமும் எங்காவது ஒரு தேசத்திலிருந்து புத்தகங்கள்  வெளிவந்துகொண்டேயிருக்கின்றன.  அச்சில் மட்டுமன்றி மின்னூல்களாகவும்  பலவற்றை பார்க்கின்றோம். தரவிறக்கம் செய்து படிக்கின்றோம்.

கடந்த 2019 ஆம் திகதி எங்கள் நீர்கொழும்பூரில் அச்சிடப்பட்டு வெளிவந்த இலங்கையில் பாரதி நூலின் இரண்டம் பதிப்பு தற்போது தமிழ்நாட்டின் புஸ்தகா பதிப்பகத்தினால் மின்னூலக வெளியாகியிருக்கிறது.

தமிழ் ஊடகத்துறையில் மூன்று தசாப்த காலத்தை நிறைவுசெய்யும் தேவகௌரி சுரேன் ! முருகபூபதி


இலங்கை, இந்தியா உட்பட  கீழைத்தேய - மேலைத்தேய நாடுகளில்  ஊடகவியலாளர்கள் மிகுந்த கவனத்தை பெற்றிருப்பவர்கள்.

அவர்களுக்கு எழுத்துத்தான் வாழ்வளித்தது. அதேசமயம் பலரது உயிரையும் அந்த எழுத்து வாங்கியிருக்கிறது ! ஊடகத்துறையில் காணாமல் போனவர்கள்  ,  கொல்லப்பட்டவர்கள், அச்சுறுத்தப்பட்டவர்கள்  பற்றியெல்லாம் நாம் அறிந்திருக்கின்றோம்.

சிலர் நாடு கடத்தப்பட்டனர். வேறும் சிலர் நாடுவிட்டு நாடு ஓடியிருக்கின்றனர்.

இராணுவத் தளபதியாகவும் அரசியல் தலைவராகவுமிருந்த


நெப்போலியன் போனபார்ட் ( 1769 – 1821 ) ஒரு தடவை,                            “   வீரனிடமிருக்கும் போர் வாளைவிட எழுத்தாளனிடமிருக்கும் பேனா கூர்மையானது “  எனச்சொன்னாராம்.

எனினும், நெப்போலியன் எழுத்தாளனோ, ஊடகவியலாளனோ அல்ல!

அன்றும், இன்றும் அரசுகளும் அரசுத் தலைவர்களும் பயப்படும் தொழில்,  ஊடகத்துறை சார்ந்ததாகத்தான் இருக்கிறது !   

அதனால்தான், காலத்துக்கு காலம் ஊடகத்துறை தணிக்கைக்கும் உட்படுகிறது. அதற்கு எதிராக சட்டங்களும் இயற்றப்படுகின்றன.

எமது தமிழ் சமூகத்தில்  பெரும்பாலான பெற்றோர்கள்,  தங்கள் பிள்ளைகள் படித்து முன்னேறி,  மருத்துவராக, பொறியியலாளராக, கணக்காளராக, சட்டத்தரணியாக வரவேண்டுமென  விரும்புவதுதான்  வழக்கம்.  இந்தத் துறைகளில் தமது பிள்ளைகள் தேர்ச்சி பெறாவிட்டாலும்,  குறைந்த பட்சம் பாடசாலை ஆசிரியராக வந்தாலும் போதும் எனக்கருதுபவர்கள்.  அத்துடன் தங்கள் பிள்ளைகளுக்கு அரசாங்க வேலைதான் கிடைக்கவேண்டும் எனவும் கனவு காண்பார்கள்.

  “ கோழி மேய்ச்சாலும் கோர்னமேந்திலதான்  மேய்க்கவேண்டும்  “ என்ற வசனமும் ஒருகாலத்தில் பேசுபொருளாகவிருந்தது.

அதற்கும் காரணம் இருந்தது. அரச உத்தியோகத்தில்  இறுதிக்காலத்தில் ஓய்வுதியமும் கிடைக்கும்.  ரயில் பயணங்களில் இலவச அனுமதிச்சீட்டும் கிடைக்கும்.

இந்தப்பின்னணிக்கதைகளுடன் இந்த முதல் சந்திப்பு தொடரில் நான் குறிப்பிட விரும்பும் பத்திரிகையாளர்தான் தேவகௌரி சுரேன்.

இவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின்   தமிழ் சிறப்பு பட்டதாரி. பேராசிரியர்கள் கா. சிவத்தம்பி, அ. சண்முகதாஸ், எம். ஏ. நுஃமான், சித்திரலேகா மௌனகுரு ஆகியோரின் மாணவி. 1991 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தை விட்டு இவர் வெளியேறியதும் தேர்ந்தெடுத்துக்கொண்ட தொழில் ஊடகத்துறை சார்ந்திருந்தது.

குறிப்பிட்ட காலப்பகுதியில்  இலங்கை போர் மேகங்களினால் சூழ்ந்திருந்தது.

தேவகௌரி  தமது பட்டத்திற்கான ஆய்வாக எடுத்துக்கொண்டது, என்னையும் ஈழத்து இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்திய மல்லிகை மாத இதழைத்தான்.  தேவகௌரியும், இவருடன் பல்கலைக்கழகத்தில் படித்த சூரியகுமாரி பஞ்சநாதனும் வீரகேசரியில் பயிற்சிப் பத்திரிகையாளர்களாக இணைந்தனர்.

2024 ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஸ்காபரோ எண்ணிமத் தமிழியல் மெய்நிகர் கருத்தரங்கு

 எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள், ஆர்வலர்கள்


அனைவருக்கும் பயன்படக்கூடிய சேகரங்கள் மற்றும் ஆய்வுகள் பற்றியம், ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஸ்காபரோ நூலகத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்திட்டங்கள்  பற்றியும் அறிந்து, அவை தொடர்பாக உங்கள் பின்னூட்டங்களையும் வழங்க அழைக்கிறோம்.

நிகழ்வு இரு மொழிகளிலும் நடைபெறும்.  

இங்கு பதிவு செய்க!

விரிவான தகவல்களை தமிழில் இங்கு பெறலாம்: https://tamil.digital.utsc.utoronto.ca/ta/digital-tamil-studies-virtual-symposium


சனிக்கிழமை பெப்ரவரி 10, 2024
8:30 AM – 11:30 AM (ரொறன்ரோ)

7:00 PM – 10:00 PM (சென்னை/கொழும்பு)

கேள்விகள்? மின்னஞ்சல் dsu.utsc@gmail.com


Digital Tamil Studies Virtual Symposium

The Digital Tamil Studies community at UTSC is pleased to present a Digital Tamil Studies symposium Saturday February 10, 8:30 AM -11:30 AM (Toronto time); 7:00 PM-10:00 PM (Chennai, Jaffna, Colombo time).

மூத்த பத்திரிகையாளர் எச். எல். டி. மகிந்தபால நினைவுகள் முருகபூபதி

 இலங்கை Sunday Observer பத்திரிகையின் முன்னாள் பிரதம


ஆசிரியரும், பிரபல எழுத்தாளருமான எச். எல். டி. மகிந்தபால கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி கொழும்பில் மறைந்துவிட்டார் என்ற செய்தியை மெல்பனில் வதியும் இலக்கிய நண்பர் எழுத்தாளர் நொயல் நடேசன் தெரிவித்தார்.

எனக்கு மகிந்தபாலவை 1995 களில் அறிமுகப்படுத்தியவரும் நொயல் நடேசன்தான்.

அக்காலப்பகுதியில் நடேசன் உதயம் என்ற இருமொழி ( தமிழ் – ஆங்கிலம் ) பத்திரிகையை நடத்தி வந்தார்.

உதயம் நடத்திய சில கருத்தரங்குகளிலும் மகிந்தபால உரையாற்றினார்.

1970 களிலேயே இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா விக்ரோரியா


மாநிலத்தில் மெல்பனுக்கு தமது துணைவியார் ரஞ்சியுடன் புலம்பெயர்ந்து வந்தவர். ரஞ்சி தமிழ்ப் பெண்மணியாவார்.  அவரை மகிந்தபால காதலித்து மணம் முடித்தவர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. எனினும், ஒருவரை  ஒருவர் குழந்தையாக நேசித்து இணைபிரியாமல்   இங்கே சுமார் அரைநூற்றாண்டு காலம் வாழ்ந்தனர்.

  தங்கள்  இறுதிக்காலத்தில் தாயகம் சென்று வாழ விரும்பினர்.   மகிந்தபாலவின் அன்புத்  துணைவியார் ரஞ்சி, கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் கொழும்பில் மறைந்துவிட்டார்.

அதன்பின்னர் உறவினர்களின் துணையுடன் வாழ்ந்த மகிந்தபால தனது 92 வயதில் மறைந்திருக்கிறார்.

வலதுசாரி சிந்தனைகொண்டிருந்த மகிந்தபால, அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து வந்த பின்னரும், ஊடகத்துறையில் தன்னை மேலும் வளர்த்துக்கொள்வதற்காக இங்கிருக்கும்  பல்கலைக்கழகத்தில் இணைந்து படித்தார். இறுதிவரையில் தொடர்ந்தும் அரசியல் பத்தி எழுத்துக்களை ஆங்கில பத்திரிகைகளிலும் இணைய இதழ்களிலும் எழுதினார். அவுஸ்திரேலிய அரச வானொலி ஊடகங்களிலும் உரையாற்றியிருக்கும் மகிந்தபால, மெல்பனில்  பிரபலமான The Age பத்திரிகையிலும் எழுதி வந்திருப்பவர்.

Colombo Telegraph இணைய இதழிலும்  அரசியல், சமூக விமர்சனக்கட்டுரைகள் பலவற்றை எழுதினார்.

இவரது தொடக்க கால கவிதை இங்கிலாந்து ஊடகங்களிலும் வெளி வந்திருக்கின்றன.

இவரால் விமர்சிக்கப்படாத இலங்கை அரசியல் தலைவர்கள் எவருமிலர்.  உலக அரசியல் குறித்தும் விமர்சனக்கட்டுரைகள் எழுதியிருப்பவர்.

வாழ்க்கை வாழ்வதற்கே - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்

 தமிழ் திரைவானில் ரசிகர்களின் கவனத்தை கவரும் வண்ணம்


இயங்கிய நிறுவனம் கமால் பிரதர்ஸ். 1957ல் சிவாஜி, பத்மினி நடிப்பில் , கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் இவர்கள் தயாரித்த புதையல் படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று கொண்டது. தொடர்ந்து இவர்கள் தயாரித்த தெய்வப் பிறவி படமும் வெற்றிப் படமானது. ஆனால் மூன்றாவது படத் தயாரிப்பின் போது இந்தக் கூட்டணியில் விரிசல் உருவானது. சிவாஜியின் சொந்தப் படமான குங்குமம் படத்தை சரியான முறையில் எடுக்கவில்லை என்று கிருஷ்ணன் பஞ்சு மீது சிவாஜிக்கு மன வருத்தம் ஏற்பட்டதால் அவர்கள் இணைந்து பணியாற்றுவது தடைப்பட்டது. அதே சமயம் தெய்வப் பிறவியை ஏவி எம்முடன் கூட்டாக ஹிந்தியில் தயாரித்த

கமால் பிரதர்ஸ் , அப் படத்தின் தோல்வியை அடுத்து தங்களின் அடுத்த படத்தை தனியாக எடுக்கத் தீர்மானித்தது. இந்த நிலையில் தங்கள் அடுத்த படத்தை கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் எடுக்கவிருந்த கமல் பிரதர்ஸ் காமாலுதீன் , சிவாஜிக்கும், கிருஷ்ணன் பஞ்சுக்கும் இடையில் ஆன பிரிவினால் வேறு நடிகரை கதாநாயகனாக போட்டு படம் தயாரிக்க வேண்டிய நிலைக்கு ஆளானார்.

அந்த வகையில் அதே கிருஷ்ணன் பஞ்சு டைரக்ட்ஷனில் அவர்கள் தயாரித்த படம்தான் வாழ்க்கை வாழ்வதற்கே . சும்மா சொல்லக் கூடாது வாழ்க்கையை பாசிட்டிவாக எடுக்க வேண்டும் என்பது போல் படத்துக்கு வாழ்க்கை வாழ்வதற்கே என்று என்று பேர் வைத்ததை பாராட்டியே ஆக வேண்டும்.

சிவாஜி இல்லை என்றவுடன் அவர் இடத்துக்கு ஜெமினி வந்தார். பத்மினிக்கு பதில் சரோஜாதேவி. இவர்கள் இருவருடன் சாரதா, கே ஏ தங்கவேலு, டி எஸ் முத்தையா, அசோகன், எம் வி ராஜம்மா, எஸ் ராமராவ் சுந்தரிபாய், , ஜி . சகுந்தலா, சாக்ரடீஸ் தங்கராஜ் ,கே . மாலதி ஜெமினி பாலு ஆகியோரும் நடித்தார்கள். எல்லாப் படங்களிலும் ஓரிரு காட்சிகளில் வந்து விட்டு போகும் ஜெமினி பாலுவுக்கு இந்தப் படத்தில் அழுத்தமான பாத்திரம் வழங்கப்பட்டிருந்தது.

புதையலுக்கு கலைஞர் கருணாநிதி வசனம் எழுதினார். இதற்கு அவரின் மருமகன் முரசொலி மாறன் வசனங்களை எழுதினார். பாடல்கள் எல்லாம் கண்ணதாசன். இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி. படத்துக்கு இவர்கள் நால்வரின் பங்களிப்பும் இன்றியமையாததாக அமைந்தது.

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் (ATLAS) தமிழ் நூல்களுக்கான பரிசளிப்புத் திட்டம்


அவுஸ்திரேலியாவில் கடந்த  இருபது  வருடங்களுக்கும்  மேலாக  தமிழ்  இலக்கியம் மற்றும் கலைச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் அவுஸ்திரேலியத்  தமிழ் இலக்கிய கலைச் சங்கம், இலங்கையில், வெளியிடப்படும் தமிழ் நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டமொன்றை  கடந்த  2021 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது.

 இலங்கையில் வாழும் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்தத் திட்டம்  இயங்கிவருகிறது.   கடந்த  ஆண்டுகளில் இலங்கையில் வெளியான தமிழ் நூல்களுக்காக நடந்த தெரிவில்,  பரிசுபெற்ற எழுத்தாளர்கள் பற்றிய விபரங்கள் ஏற்கனவே ஊடகங்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டிருந்தது.

 மீண்டும் இந்த பரிசளிப்புத் திட்டம்  இம்முறையும் இலங்கை தமிழ் எழுத்தாளர்களுக்கு அறிவிக்கப்படுகிறது. 

   இந்தத்திட்டம் கீழ்வரும் தேவைப்பாடுகள் மற்றும்  விதிமுறைகளைக் கொண்டு அமைந்துள்ளது.

 1. கடந்த 2023  ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய  நான்கு துறைகளில் வெளியான    தமிழ் நூல்களே இந்தத்திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படும்.

 2. ஒவ்வொரு துறையிலும் சிறந்ததாகத் தெரிவுசெய்யப்படும் ஒவ்வொரு நூலுக்கும் தலா 50 ஆயிரம் இலங்கை ரூபா பரிசாக வழங்கப்படும்.

என்ரை அவருக்கு ஜின்ஞர் எல் எண்டா காணும்! - சுருதி

 சந்திரசேகரம் குளிருக்கு இந்தமுறை என்றுமில்லாதவாறு ஓவரா


அடித்துவிட்டார். அதன் பிறகு அவருக்கும் மனைவி மரகதத்திற்கும் நடந்தது சண்டை அல்ல, யுத்தம்.

போத்தல்கள் தாறுக்கு மாறாக பறந்து பறந்து விழுந்து வெடித்தன. ஹோல் முழுவதும் உடைந்த போத்தில் துண்டுகளும், மதுபான நாத்தமுமாக இருந்தது.

வில்லங்கம் விவாரத்து வரைக்கும் போய்விடுமோ எனப் பயந்து ஒடுங்கிப்போயிருந்தார் சந்திரசேகரம்.

இருவரும் உரப்பாகக் கத்தியதில் களைத்துப் போய்விட்டார்கள்.

“வெளியில சரியான குளிர். வயசும் போட்டுதுசாதுவாக முனகினார் சந்திரசேகரம்.

“குளிரும் வயசும் உங்களுக்கு மட்டும்தானா? எங்களுக்கு இல்லையா?மரகதம் திருப்பிச் சொல்ல வாயை மடக்கி மூடினார். இதற்கொரு தீர்வு விரைவில் எட்டப்படவேண்டுமென்று மனதைச் சுழலவிட்டார் சந்திரசேகரம்.

இலங்கைச் செய்திகள்

 மறைந்த பவதாரணிக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வு

2023: அந்நியச் செலாவணி வருவாயாக 14.94 பில்லியன் அமெரிக்க டொலர்

இலங்கைக்கு IMF மீண்டும் அங்கீகாரம்

நாவற்குழியில் பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சி

யாழில் ஈரநிலத்திற்கான இயற்கை நடைபயணம்


மறைந்த பவதாரணிக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வு

January 30, 2024 10:52 am 

இசைஞானி இளையராஜாவின் புதல்வி மறைந்த பவதாரணிக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வு கொழும்பு 7, சுதர்ஷி மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (28) மாலை நடைபெற்றது.

உலகச் செய்திகள்

 வேடமிட்ட இஸ்ரேலிய படையால் 3 பலஸ்தீனர்கள் சுட்டுக்கொலை

பெப். 08 தேர்தல்: இம்ரான் கானுக்கு மேலும் 14 வருட சிறை

காசாவில் போர் நிறுத்த முயற்சிக்கு மத்தியில் துருப்புகளை வடக்கிற்கு நகர்த்தும் இஸ்ரேல்

பொதுத் தேர்தல் ஒரு வாரத்தில்; இம்ரான் கானுக்கு 10 ஆண்டு சிறை

மோனாலிசா ஓவியம் மீது ஆர்வலர்கள் ‘சூப்’ வீச்சு


வேடமிட்ட இஸ்ரேலிய படையால் 3 பலஸ்தீனர்கள் சுட்டுக்கொலை

January 31, 2024 10:19 am 

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்குள் பலஸ்தீனர்கள் போன்று வேடமிட்டு புகுந்த இஸ்ரேலிய படையினர் இரு சகோதரர்கள் உட்பட மூவரை சுட்டுக்கொன்றனர்.

மூன்றாவது ஆஸ்திரேலிய தமிழ் ஆசிரியர் மாநாடு 11/02/2024