மரண அறிவித்தல்

திரு.கங்காதரன் (ஜெமினி)கணேஸ்

(யாழ்.இந்துக் கல்லூரி பழைய மாணவன்)

மலர்வு 09.01.1965 உதிர்வு 22.01.2021

புங்குடுதீவை பிறப்பிடமாகவும் ஜெர்மனி சுட்கார்ட் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெமினி என்றழைக்கப்படும் திரு.கங்காதரன் அவர்கள் 22.01.2021 வெள்ளியன்று ஜெர்மனியில் காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத் தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்ற கணேஷ் - மங்கையற்கரசி(யாழ்ப்பாணம்) தம்பதிகளின் அன்பு மகனும் அல்பிறட் - சுசீலா (மன்னார்)தம்பதிகளின் அன்பு மருமகனும் அமுதா அவர்களின் அன்புக் கணவரும் முரளிதரன்( ஆசிரியர் - திருமலை), சந்திரகௌரி (திருமலை) , சிறிதரன் (வைத்தியர் -யாழ்ப்பாணம்),வித்தியாதரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரம் பின்பு அறியத்தரப்படும்.

மரண அறிவித்தல்

 .

வேங்கடேஸ சர்மா எனும் சத்தியமூர்த்தி சுப்ரமணியன்



நெல்லூர் தெய்வத்திரு சத்தியமூர்த்தி வசந்த லட்சுமி தம்பதிகளில் மகனும் தெய்வத்திரு சோமசுந்தரம் செட்டியார், மீனாம்பாள் தம்பதிகளின் மருமகனுமான
வேங்கடேஸச சர்மா எனும் சத்தியமூர்த்தி சுப்ரமணியன் ஆஸ்திரேலியாவில் காலமானார்.
இவர் சந்திரிகா சுப்பிரமணியன் அன்புக் கணவரும், நிவாஸினி சுப்ரமணியனின் தந்தையும், தினேஷின் மாமனாரும், மாயோனின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 20.01.21 புதனன்று பகல் 12.30 அளவில் மாக்குவரி பார்க் லோட்டஸ் அரங்கில் நடைபெறும்

தொடர்புகளுக்கு

சந்திரிகா சுப்பிரமணியன்+61407912532

தமிழ் தேசியமே எமது மூச்சு! மீண்டும் ஒருமுறை உரத்து ஒலிப்போம் - யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்


17/01/2021  மீண்டும் ஒருமுறை சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம் மற்றும் தமிழ் தேசியம் இவையே எமது மூச்சு என உரத்து ஒலிப்போம் என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

யாழ்.பல்கலைக்கழகத்தில் மக்கள் பேரெழுச்சியாக திரண்ட பொங்கு தமிழ்ப் பிரகடனத்தின் 20 ஆம் ஆண்டு நிறைவு நாள் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இதன்போது மாணவர் ஒன்றியத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொங்கு தமிழ் நினைவுத் தூபியில், கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் பாக்கியநாதன் உஜாந்தன் தலைமையில் இந்த நினைவு நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி மற்றும் மலரஞ்சலி என்பன இடம்பெற்றது.

இதன்போது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் தயாரிக்கப்பட்ட பொங்கு தமிழ் நினைவு நாள் அறிக்கையும் வாசித்துக் காட்டப்பட்டது.

தூயவன் இறைவன் தெரிசனம் தருவான் !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் .... அவுஸ்திரேலியா 



தேவரும் உள்ளே நரகரும் உள்ளே
தேடிடும் விதத்தில் தெரிந்திடும் பலனே 
கோபமும் சாந்தமும் வெளியினில் இல்லை
கொள்கலன் உருவாய் மனிதனே உள்ளான் 

கோவிலும் உள்ளே குளங்களும் உள்ளே
நாளுமே நாடி அலைகிறான் தினமும்
தூய்மையும் வாய்மையும் நிறைந்திடும் வேளை 
தூயவன் இறைவன் தெரிசனம் தருவான் 

ஓடிடும் மனமே ஒருகணம் நில்லு
உயர் குறிக்கோளை உளத்தினில் நிறுத்து
தேடிய சாமி நாடியே வருவார்
வாடிய வாழ்வு வசந்தமாய் மலரும் 

கூட்டமைப்புக்கு வரலாற்றுத் தோல்வி! 25 வருடங்களில் ஏற்பட்ட மாற்றம்


திருகோணமலையின் பட்டணமும் சூழலும் பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டம் இரண்டு முறை தோல்வி கண்டதை அடுத்து இன்று நடந்த தவிசாளர் தேர்வில் 25 வருடங்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசமிருந்த சபையின் அதிகாரம் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குக் கைமாறியது.

மாகாண சபைத் தேர்தல் வரலாற்றின் ஆரம்பம் தொட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசமிருந்த திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கைப்பற்றியதை அடுத்து பிரதேச சபையின் புதிய தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை பிரதிநிதித்துவம் செய்துவரும் ஆர்.ஏ.ரி. எஸ்.டீ. ரத்நாயக்க தெரிவானார்.

இன்று காலையே அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

திருகோணமலை மாவட்டத்தில் 13 உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளன. அதில் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையில் 22 உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

முள்ளிவாய்க்கால் நினைவுதூபி உடைப்பு விவகாரம்! பிரித்தானிய நாடாளுமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை


யாழ். பல்கலைக்கழகத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இரவோடு இரவாக பலவந்தமாக அகற்றப்பட்ட பின்னர் மீண்டும் அதனை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போதிலும் உலகளாவிய ரீதியில் அந்த உடைப்பு சம்பவம் ஏற்படுத்திய தாக்கமும் பின்னடைவும் ஸ்ரீலங்காவுக்கு எதிரான வலுவான நடவடிக்கைக்கான தீர்மானமொன்றின் அவசியத்தை மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளதாக என்று பிரித்தானிய தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சியோபைன் மெக்டோனாக் வலியுறுத்தியுள்ளார்.

எனவே எதிர்வரும் மார்ச் மாதத்தில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் ஸ்ரீலங்காவுக்கு எதிராக வலுவானதொரு தீர்மானத்தை பிரித்தானிய அரசு கொண்டு வர வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அந்நாட்டு நாடாளுமன்ற அமர்வில் இதனை வலியுறுத்திய பேசிய காணாளியினை தனது ருவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

எழுத்தும் வாழ்க்கையும் --- அங்கம் 24 பொலிஸாரின் அராஜகமும் இயக்கங்களின் அறச்சீற்றமும் ! விடுதலைப்புலிகள் உரிமை கோரியிருந்த கடிதம் !! முருகபூபதி


எனது தாத்தா கார்த்திகேசு,  சுதந்திரத்திற்கு முன்னர் பிரிட்டிஷாரின் காலத்தில் பொலிஸ் சார்ஜன்ட்டாக இருந்தவர் என்று இந்த தொடரின் முன்னைய அங்கங்களில் குறிப்பிட்டுள்ளேன்.

அவர் கண்டிப்பானவர்.  எங்கள் ஊரில் அவருக்கு மரியாதை இருந்தது. அவர்  முன்னிலையில்  எவரும் புகைக்கமாட்டார்கள். மது அருந்தமாட்டார்கள்.   பாட்டியின் அண்ணன்  ஒருவர்  கஞ்சா- அபின்  விற்பனை செய்தார் என்று அவரை


கைதுசெய்து சட்டத்தின் முன்னால்  தாத்தா நிறுத்தியவர்.  அந்தச் செல்வந்தர்  இறுதிவரையில்  அந்தக்கோபத்தைக்காண்பித்து,   தங்கை குடும்பத்துடன் உறவைப்பேணவேயில்லை.   

பொலிஸ் தாத்தாவின்  முகத்தில் கனிவை காண்பது அபூர்வம்.  எப்பொழுதும் முகத்தை இறுக்கமாகத்தான் வைத்திருப்பார்.

அவர் தனது பொலிஸ் சேவையில்  நீதி – நேர்மையை கடைப்பிடித்தமைக்காகவும்   சாதனைகள் புரிந்தமைக்காகவும்   பிரித்தானிய மகாராணியிடத்திலும் பதக்கம் பெற்றவர்.

அவரது பொலிஸ் வாழ்க்கையில்  நிகழ்ந்த திடுக்கிடும் கதைகளை , பாட்டியிடமிருந்து கேட்டுத்தெரிந்துகொண்டேன்.  ஆனால், தாத்தா எனக்கு அக்கதைகளைச்  சொல்லவில்லை. அவர் சொல்லித்தந்தது தேவாரமும் திருவாசகமும்தான்.  அவர் எங்கள் வீட்டு முற்றத்தில் வளர்த்த மல்லிகைப்பந்தலின் கீழே அமர்ந்து என்னை தனது மடியிலிருத்தி  சொல்லித்தந்தார். 

ஆரம்பப்  பாடசாலைக்கு அழைத்துச்சென்றதும், பாடசாலைவிடும்போது  அழைத்துவருவதும் அவர்தான்.  அதனால் எங்கள் வீதியில் எனக்கு பொலிஸாரின் பேரன் என்ற பெயரும் இருந்தது.

அவரது சீருடைகளையும்,  பொலிஸ் தரப்பில் அவருக்குத்தரப்பட்டிருந்த குண்டாந்தடியையும் அந்த பதக்கத்தையும் பார்க்கும்போதெல்லாம்,  வளர்ந்தால் நானும் பொலிஸ்காரனாகவேண்டும் என்ற கனவுதான் அந்த பால்ய பருவத்தில்  என்னிடம் நீடித்திருந்தது.

அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 49 – தொட்டாலு மற்றும் சீங்குழல் – சரவண பிரபு ராமமூர்த்தி



தொட்டாலு
:  தொட்டாலு என்பது உலக்கை போல அமைப்பு உடைய மிகப்பெரிய குழல் இசைக்கருவி. தொட்ட என்றால்  பெரிய  என்று தெலுங்கில் அர்த்தமாம். தொட்டிலி  என்றும் வழங்கும். பெரிய மூங்கில் மரத்தில் 5 துளையிட்டு செய்யப்படும் மிக நீளமான இசைக்கருவி தொட்டாலு. 3 அடி முதல் 5 அடி வரை நீளம் இருக்கும். இக்கருவி தமிழகத்தில் வாழும் ராஜகம்பளத்து நாயக்கர் இன மக்களால் மாடுகளை மேய்க்க பயன்படுகிறது. அவர்களின் குல தெய்வ வழிபாடுகளிலும் மாலை தாண்டும் சடங்கிலும் இடம்பெறும். திண்டுக்கல் மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம், பெரியகோட்டை, வேடசந்தூர், குஜிலியம்பாறை பகுதிகளில் கம்பளத்து நாயக்கர்களிடம் இருந்து வருகிறது இக்கருவி. மாடுகள் மேய்ச்சலுக்கு செல்லும் வேளையில் வாசிப்புக்கு ஏற்ப அவை தண்ணீர் குடிப்பது, நடப்பது, ஓய்வெடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றன.

 

சீங்குழல்: சீங்குழல் என்பது (மூங்கிலில் இருந்து) சீவிய குழல்


என்கிறது அகராதி.  காட்டில் புதராய் வளர்ந்து செழித்திருக்கும் மூங்கிலில் வண்டுகளால் துளைக்கப்படும் துளைகள் வழியே காற்றுப் புகுந்து இன்னிசையாய் வெளியேறும் நிகழ்வே குழல் வாத்திய தோற்றத்திற்கு தூண்டுகோல் என்பர். அதனால் முதல் துளை வாத்திய கருவியான புல்லாங்குழல் சீங்குழல் என்றும் குறிப்பிடப்படுகிறது (சீம்பால், சீமந்தம் போல்). மிகப்பெரிய அளவில் உள்ள மூங்கில் சீங்குழல்களை ராஜகம்பள நாயக்கர் இன மக்கள் ஜக்கம்மா வழிபாட்டில் இசைக்கிறார்கள். இவர்களின் குழலில் சுமார் அரை அடி இடைவெளியில் 5 துளைகள் இருக்கும். சிறிய அளவு சீங்குழலும் இவர்களிடம் உண்டு. இக்குழல் பெருமாள், ஜக்கம்மா, பொம்மையாசாமி, பொம்மக்கா போன்ற தெய்வ வழிபாடுகளின் போதும், தைப் பொங்கல், எருது ஓட்டத்திற்கும் இசைக்கப்படும். இருவர் எதிர், எதிரே அமர்ந்து இரவு முழுவதும் ஊதுகின்றனர்.

 

கலைந்த மேகம்... லால்பேட்டை ஏ.ஹெச். யாசிர் அரபாத் ஹசனி

   நகரத்தின் பெரிய ஹாஸ்பிட்டலின் வரண்டாவில் கைகளைப் பிசைந்துகொண்டு அங்குமிங்கும் அலைந்துக் கொண்டிருந்தான்  அன்வர். அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்கும் நர்ஸிடம் கை நீட்டி ஏதோ கேட்க முயன்றான். அண்ணா! அங்கே போய் உக்காருங்க. குழந்தை பிறந்தவுடன் நானே வந்து சொல்வேன் என்றாள் நர்ஸ்..ஒரு சேர அமைக்கப்பட்டிருக்கும் நாற்காலியில் போய் அமர்ந்தான்.

சமர்பணம் ஈழத்துச் சித்தர் தவத்திரு யோகசுவாமிகள்


 


இலங்கைச் செய்திகள்

 ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை வழக்கு தள்ளுபடி: விடுதலையானார் பிள்ளையான்

யாழ்.பல்கலை துணைவேந்தர் திறமையான நிர்வாகியானால் இராணுவத்தைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் உணர்வுகளை சிதைத்திருக்க கூடாது!

ரஞ்சன் ராமநாயக்கவின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது?

மீண்டும் முள்ளிவாய்க்கால் தூபி அமைப்பது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

கோட்டாபயவின் பேச்சுக்கு எதிராக கொழும்பில் ஒன்றுதிரண்ட சஜித் அணி

முள்ளிவாய்க்கால் நினைவுதூபி உடைப்பு! தமிழ் நாட்டிலிருந்து வந்த அழுத்தம்??

 பல்கலைக்கழக வளாகத்தில் இடித்தழிக்கப்பட்ட நினைவுத்தூபி மீண்டும் புத்துயிர்!


ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை வழக்கு தள்ளுபடி: விடுதலையானார் பிள்ளையான்

13/01/2021 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பிலான வழக்கில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட ஐந்து பேரும் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற விசேட நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் இன்யை தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதுள்ளார்.

உலகச் செய்திகள்

ட்ரம்ப் மீதான பதவி நீக்க தீர்மானத்திற்கு மூத்த குடியரசு கட்சியினர் இடையே ஆதரவு

ஆயுதமேந்திய போராட்டத்திற்கு ட்ரம்ப் ஆதரவாளர்கள் திட்டம்

அமெரிக்க வரலாற்றில் ட்ரம்புக்கு ஏற்பட்ட பரிதாபநிலை


ட்ரம்ப் மீதான பதவி நீக்க தீர்மானத்திற்கு மூத்த குடியரசு கட்சியினர் இடையே ஆதரவு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதாக அவரது குடியரசுக் கட்சியின் முத்த உறுப்பினர்கள் சிலர் கூறியுள்ளனர்.

அமெரிக்க பாராளுமன்றக் கட்டடத்திற்குள் ட்ரம்ப் ஆதரவாளர்கள் அத்துமீறி, கலகத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பிலேயே ட்ரம்ப் மீது அந்நாட்டு பாராளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானம் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

வாசிப்பு அனுபவப் பகிர்வு 22/01/2021

 


யாழின் வரலாற்றைப் பறைசாற்றும் அடையாளச் சின்னம்!

 யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தினை அடையாளப்படுத்தும் வகையில், யாழ்ப்பாணம்- கண்டி பிரதான வீதியான ஏ-9 வீதிக்கு அண்மையில், செம்மணிப் பகுதியில், அலங்கார வளைவு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் முயற்சியிலும், நிதி ஒதுக்கீட்டிலும் இவ் அலங்கார வளைவு சம்பிரதாய, பண்பாட்டு சின்னங்களைத் தாங்கியவாறு அமைக்கப்பட்டுள்ளது. அலங்கார வளைவின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், நேற்றிரவு விசேட யாக பூஜைகள் இடம்பெற்றன.

தைத்திருநாளான இன்றைய தினம், நல்லூர் ஆலயத்திலிருந்து, திறப்பு விழாவுக்குத் தேவையான பொருட்கள் பாராம்பரிய முறைப்படி மாட்டு வண்டிலில், செம்மணி அலங்கார வளைவு அமைந்துள்ள இடத்திற்கு எடுத்துவரப்பட்டன.

தவில் நாதஸ்வரம் இசைக்க, சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்களைப் பாராயணம் செய்ய, இறையாசியுடன் அலங்கார வளைவுத் திறப்பு விழா இடம்பெற்றது. சிவாச்சாரியர்கள், சைவசமயப் பெரியவர்கள், முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர், உறுப்பினர்கள், அதிகாரிகள், நல்லூர் கந்தசுவாமி ஆலய பரிபாலகர்கள் எனப் பலரும் திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மாஸ்டர் திரைவிமர்சனம்


 ஓடிடி, கொரோனா தாக்கம், லீக்கான காட்சிகள் என பல தடைகைளை தாண்டி, கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு தமிழ் திரையுலகமே உயிர்பெற திரையரங்குகளில் வெளியாகியுள்ளது மாஸ்டர் திரைப்படம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதன் முறையாக விஜய் மற்றும் விஜய் சேதுபதி இப்படத்தில் இணைந்து நடித்துள்ளதால் மாஸ்டர் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய உச்சத்தில் உள்ள, மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவரின் எதிர்பார்ப்பைபும் பூர்த்தி செய்ததா? இல்லையா? பார்ப்போம்.

கதைக்களம்

கல்லூரி பேராசிரியராக வரும் JD(விஜய்). எந்நேரமும் பாட்டிலும் கையுமாக தான் உள்ளார். இதனாலேயே இவர் மீது பெரும் குற்றச்சாட்டுக்கள் வருகிறது.

இதனால் ஒரு கட்டத்தில் பெரிய பிரச்சனை வர அங்கிருந்து வெளியேறி ஒரு சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கு ஆசிரியராக செல்கிறார்.

அங்கு ஆரம்பத்திலிருந்தே விஜய்க்கு உரசல் ஆரம்பிக்கிறது மாணவர்களுடன். இதற்கு முக்கிய காரணம் பவானி(விஜய் சேதுபதி).

ஏனெனில் அந்த சிறுவர் சீர்த்திருத்த பள்ளி அவர் கண்ட்ரோலில் தான் உள்ளது. விஜய் பவானியிடமிருந்த அந்த சிறுவர்களை மீட்க போராடுகிறார்.

ஒரு கட்டத்தில் சண்டை JD Vs பவானியாக மாற, இருவருக்குமான யுத்தத்தில் கடைசியில் யார் வெற்றி, என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

விஜய் ஒரு குடிகார ஆசிரியராக முதல் காட்சியில் தொடங்கும் கைத்தட்டல் கண்டிப்பாக கிளைமேக்ஸ் வரைக்கு நிற்காது போல...ஒவ்வொரு காட்சியிலும் தன் புது வகைவகை மேனரிசத்தால் பட்டாசு தான். அதுவும் சிறுவர் சீர்த்திருத்த பள்ளி மாணவர்களுடம் அவர் நடந்துக்கொள்வது, விஜய் சேதுபதியிடம் சவால் விடுவது, சட்டையை கழட்டி கபடியில் இறங்கி போட்டி போடுவது என படம் முழுவதும் விஜய்க்கான காட்சி ரசிகர்களுக்கு ட்ரீட் தான்.

அதே நேரத்தில் விஜய் படம் என்றாலே அவரை சுற்றி மட்டுமே தான் மாஸ் பில்டப் இருக்கும், ஆனால், அதில் மாஸ்டர் விதிவிலக்கு தான், ஆம், பவானியாக வரும் விஜய் சேதுபதி மாஸ் பண்ணியுள்ளார். அதிலும் இடைவேளை காட்சி இரண்டு பேருக்குமான போட்டி ஹை பாயிண்ட்.

படத்தில் விஜய் ஆசிரியராக வரும் கல்லூரி காட்சிகள் தான் ஏதோ தேவையில்லாததாக தெரிந்தது. ஒரு இண்ட்ரோ போல் கொடுத்து நேராக சீர்த்திருத்த பள்ளி காட்சிகளுக்கு சென்றிருந்தால் இன்னமுமே படம் சுவரஸ்யம் கூடியிருக்கும்.

படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள் உள்ளனர், சாந்தனு, மகேந்திரன், அர்ஜுன் தாஸ் என பலரும் தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளனர்.

ஆனால், ஆண்ட்ரியா படத்தில் உள்ளார் என்றதும் ஏதோ முக்கியமான ரோல் தான் என்றால், ஏமாற்றம் தான், இதற்கு மாளவிகா ரோலே பரவாயில்லை என்று தோன்றுகிறது.

படத்தின் மிகப்பெரிய பலம் என்றால் சண்டைக்காட்சிகள் தான், சில்வா மெட்ரோ சண்டையில் ஆரம்பித்து, சட்டையில்லாமல் வரும் சண்டை, கபடியை சண்டையாக மாற்றி சில மூமண்ட்ஸ் என தெறிக்க விட்டுள்ளார். அதுவும் விஜய்-விஜய் சேதுபதிக்கான சண்டைக்காட்சி சூப்பர்.

சத்யன் சூரியன் ஒளிப்பதிவு முதன் முதலாக லோகேஷ் படத்தில் பல காட்சிகள் வெளிச்சம் தெரிகிறது, அவரும் சிறப்பாக செய்துள்ளார், எடிட்டிங் மட்டும் இன்னும் சில காட்சிகளை வெட்டி இருக்கலாம்.

முதல் பாதியே கொஞ்சம் நீளம் என்றாலும், ஆட்டம், பாட்டம், சண்டை விஜய் - விஜய் சேதுபதி க்ளாஸ் தொடங்குவது என பரபரப்பாகவே செல்கிறது.

ஆனால், இரண்டாம் பாதி செம்ம பாசிட்டிவாக தொடங்கி அடுத்தடுத்த காட்சிகள் கொஞ்சம் சோர்வை தருகிறது படத்தின் நீளம்.

விஜய்-விஜய் சேதுபதி தாண்டி படத்தில் கண்களுக்கு தெரியாத ஹீரோ என்றால் அனிருத் தான், பின்னணி இசை, பாடல்கள் என ருத்ர தாண்டவம்.

க்ளாப்ஸ்

விஜய் மற்றும் விஜய் சேதுபதி.

பாடல்கள், ஒளிப்பதிவு

படத்தின் முதல் பாதி.

சண்டைக்காட்சிகள்

பல்ப்ஸ்

இரண்டாம் பாதி இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பு கூட்டியிருக்கலாம்.

மொத்தத்தில் மாஸ்டர் முதல் பாதியில் விறுப்பாக தன் பாடத்தை ஆரம்பித்து இரண்டாம் பாதியில் கொஞ்சம் டல் ஆக்குகிறர் மாணவர்களை(ரசிகர்களை).

நன்றி CineUlagam