பிறந்தநாள் வாழ்த்து

லிட்கம் திரு மகாதேவ் அவர்கள்  

                                                           23.03.2012

லிட்கம் திரு மகாதேவ் அவர்கள் இன்று 23.03.2012 தனது பிறந்தநாளை குதூகலமாக கொண்டாடுகிறார் . இவரை அன்பு மனைவி மதுரா மகாதேவ் மாமா, சகோதரர்கள் ,மைத்துனர்கள், மைத்துனிமார் ,உற்றார் ,உறவினர் நண்பர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறார்கள் .இவரை தமிழ்முரசு அவுஸ்திரேலியாவும் பல்லாண்டு வாழ வாழ்துகிறது 

.ஸ்ரீகந்தராசா அவர்களின் நூல்வெளியீட்டு விழா - செ.பாஸ்கரன்


.

18.03.2012 ஞாயிறுமாலை சிட்னியில் செந்தமிழ்ச் செல்வர் பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா அவர்களின் சங்க காலமும் சங்க இலக்கியங்களும் நூல் வெளியீடு ஹோம்புஷ் ஆண்கள் பாடசாலையில் 5.00 மணிக்கு என்று அழைக்கப் பட்டிருந்தேன் சற்று தாமதமாகத்தான் தொடங்கியது. இலக்கிய நண்பர்கள் பலரும் இருந்ததால் அவர்களோடு உரையாடியதில் நேரம் போனது தெரியாமல் போய்விட்டது. சுந்தரதாசின் அறிவிப்போடு தொடங்கிய விழா ஜந்து பெண்கள் குத்துவிளக்கேற்ற யாகவி சோமசுந்தரம் தமிழ்மொழி வாழ்த்துப்பாட ஆரம்பமானது.

விம் ரெக் வழங்கிய மதுரகீதம் 2012 -செ.பாஸ்கரன்

.


17.03.2012 சனிக்கிழமை சிட்னியில் இடம் பெற்ற விம் ரெக் வழங்கிய மதுரகீதம் 2012 நிகழ்வு பகாய் சென்ரரில் இடம் பெற்றது. 6 மணிக்கு ஆரம்பமாகும் என்ற நிகழ்வு 6.20 மணிக்கு திரு திருமதி விஸ்வநாதன் மங்கல விளக்கேற்ற, ஜதுகிரி லோகதாசன் தமிழ்வாழ்த்து பாட , நிவேதா விமல் அவுஸ்திரேலிய வாழ்த்துப்பாட நிகழ்வு ஆரம்பமானது.
விஷ்வா இசைக்குழுவினர் இசை வழங்க பவித்திரா இறைவன் வருவான் என்ற பாடலை மிக அருமையாக பாடினார். இந்திய பாடகிகளின் குரல் போன்று மிக அருமையான பாடலாக அமைந்தது முதற்பாடல். தொடர்ந்து சிட்னியில் பிரபலமான பாடகரான சுந்தர் ஆராவமுதன் ஆயகலைகள் என்ற பாடலை பாடியது மிக நன்றாக இருந்தது. முதற் சில பாடல்கள் பாடும்போது ஒலி கட்டுக்குள் இல்லாமல் மிக குளப்பமாக இருந்தது இதனால் அருமையாக வழங்கப்பட்ட இசையைக்கூட ரசிக்கமுடியாது இருந்தது.

ஹோம்புஸ் தமிழ் கல்விநிலைய வெள்ளிவிழா 24.MAR.12 Sat


மௌனம் கலைகிறது 7 –நடராஜா குருபரன்


.

கிழக்கில் கருணாவின் பிளவை நியாயப்படுத்திய சமூகப் பிரதிநிதிக ள்“ எல்லாப் புகழும் இறைவனுக்கும் எல்லாப்பழியும் புலிகளுக்கும் என்று மட்டுமாகி விடக்கூடாது.”

கிழக்கில் கருணாவின் பிளவை நியாயப்படுத்திய சமூகப் பிரதிநிதிகள் - மௌனம் கலைகிறது 7 –நடராஜா குருபரன்
 2000ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே கருணாவுக்கும் புலிகளுக்கும் இடையிலான முரண்பாடு மெல்ல மெல்ல உள்ளே வளரத்தொடங்கியிருந்தது. இந்த முரண்பாட்டின் விளைவாக 2001, 2002, 2003 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்த முக்கியமான சில சம்பவங்களை முன்னர் குறிப்பிட்டிருந்தேன். 2004ல் கருணாவுக்கும் புலிகளுக்கும் இடையில் இருந்த முரண்பாடு வெளிப்படையான பிளவாக மாறியது. இந்த நிலையில்தான் கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சிலர், பேராசிரியர்கள் சிலர், புத்திஜீவிகள் சிலர், ஊடகத்தரப்பினர் சிலர், வர்த்தகர்கள் சிலர் எனப் பல தரப்பினரும் சேர்ந்து கிழக்குத் தொடர்பாக வன்னிப்புலிகள் வெளிக்காட்டும் தொடர் புறக்கணிப்புக்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டியது அவசியம் என்னும் ஒரு நிலைப்பாட்டை எடுத்துக் கருணாவின் கோரிக்கையை நியாயப்படுத்தினர். இதற்குச் சிறந்த உதாரணமாக அந்த நேரத்தில் கிழக்குப் பல்கலைக்கழகப் பேராசிரியர் திரு தங்கராஜா அவர்கள் கருணாவின் பிளவுக்குக் காரணமான சூழலும் அவர் வைத்த கோரிக்கைகளும் நியாயமானவை என BBC சிக்கு வழங்கிய செவ்வியினைக் குறிப்பிடலாம். அதேபோல் கிழக்குப்பல்கலைக்கழகத்தில் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு எதிராகக் கருணாஅணியினர் ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்புக்கூட்டம் கொடும்பாவி எரிப்பு என்பவற்றில் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஜெயானந்தமூர்த்தி அவர்களும் அன்று பிரசன்னமாகி இருந்தார். சொந்த விருப்பத்தின் பேரிலா அல்லது வற்புறுத்தலின் பேரிலா அவர் அதில் கலந்துகொண்டிருந்தார் என்பது தெளிவில்லை.

புதியதோர் உலகம் - கே.எஸ்.சுதாகர்

.

நீண்ட நாட்களின் பின்பு அஞ்சலியிடமிருந்து ராகவனுக்கொரு மின்னஞ்சல் வந்திருந்தது. நீண்ட நாட்கள் என்பது இங்கே நான்கு வருடங்களைக் குறிக்கும். அஞ்சலி ராகவனிற்கு மருமகள்.

முன்பெல்லாம் ஆறு ஆண்டுகளாக தினமும் மின்னஞ்சல் வரும். எள்ளளவும் பிரயோசனமில்லாத அந்த அஞ்சல்களை குறைந்தது முப்பது நாற்பது பேருக்காவது '•போர்வேட்' பண்ணாமல் விடமாட்டாள் அஞ்சலி. அப்பொழுதெல்லாம் இருவரும் 'மெசஞ்சரில்' (Messenger) செய்திப் பரிவர்த்தனைகள் செய்திருக்கின்றார்கள்.

எல்லாம் ஒருநாள் திடீரென்று சொல்லாமல் கொள்ளாமல் நின்றுவிட்டன. எல்லாம் அவரவர் விருப்பம்.

அந்த இடைவெளிக்குள் ராகவன் மூன்று கொம்பியூட்டர்கள் மாற்றி விட்டான். தொழில்நுட்ப ரீதியில் எல்லாமே பாரிய மாற்றங்கள் அடைந்துவிட்டன.

3வது ஆண்டில் காலடி வைக்கின்றது தமிழ்முரசு


அன்பான வாசகர்களே இவ்வாரம் 3வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்றது  உங்கள் தமிழ்முரசு. உங்களின் ஆக்கமும் ஊக்கமும் எங்களை சோர்வின்றி இயங்கவைக்கின்றது என்பதே உண்மை. படையுங்கள் பகிருங்கள். இது உங்களுக்காக மலரும் வாராந்த இதழ்.
அன்புடன்
ஆசிரியர் குழு

சச்சினின் கனவு நனவானது

 _
 16/03/2012
இந்திய அணியின் மாஸ்டர் பெட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரின் நீண்டநாள் கனவு இன்று நனவானது. இது ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பும் ஆகும்.சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சச்சின் டெண்டுல்கர் தனது 100 ஆவது சதத்தை கடந்து இன்று சாதனை படைத்தார். சச்சின் 12.03.2011 ஆம் ஆண்டு தென்னாபிரிகாவிற்கு எதிரான போட்டியில், சதமடித்தார். இதனையடுத்து சத சாதனையை நிகழ்த்துவதற்கான அவரின் போராட்டம், ஒரு ஆண்டை கடந்தது. மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய தொடர்களில், சத சாதனை நிகழ்த்துவார் என்று பெரிதும் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு தொடர் ஏமாற்றத்தையே அவர் அளித்து வந்தார். இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் ஆசிய கிண்ண தொடரில் இன்றைய பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியிலேயே சச்சின் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். 1989ஆம் ஆண்டு தனது கிரிக்கெட் வரலாற்றை ஆரம்பித்த சச்சின் டெண்டுல்கர், 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தனது முதல் சர்வதேச சதம் அடித்தமை குறிப்பிடத்தக்கது. ___நன்றி வீரகேசரி 

இலங்கைச் செய்திகள்

“இடைக்காலப் பருவப் பெயர்ச்சியே தற்போது பரவலாக மழை பெய்யக் காரணம்”
முல்லைத்தீவில் 3 வருடத்திற்கும் மேலாக மூடப்பட்டிருக்கும் 17பாடசாலைகள்

மாத்தறையில் திடீர் சுற்றி வளைப்பு 100 சந்தேக நபர்கள் கைது



சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் குடாநாட்டில் மோசமாக அதிகரிப்பு

தமிழகத் தேசியவாத இயக்கங்களின் கவனத்துக்கு...

எதிரணிக்கு இருக்கும் ஒரு உடனடிப் பணி

வாழ்க்கைச்செலவு அதிகரிப்புக்கு எதிராக அட்டனில் கண்டனக் கூட்டம் (பட இணைப்பு)

தெல்லிப்பழையில் பாழடைந்த கிணற்றில் வெடி குண்டுகள் மீட்பு

கசூரினா கடலில் பெண்ணிடம் சில்மிஷம்: இளைஞர்கள் பொலிஸாரால் நையப்புடைப்பு

சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு இராணுவத்தினர் உட்படுத்தப்பட்டால் இனக்கலவரம் ஏற்படும்: சம்பிக்க எச்சரிக்கை

கொள்ளுப்பிட்டி சந்தியில் மக்கள் போராட்டம்

கொக்கிளாயில் பிள்ளையார் கோயிலை உடைத்துவிட்டு புத்தர் சிலை அமைப்பு மக்கள் பெரும் கொந்தளிப்பு


சிட்னி முருகன் கோவிலில் இடம்பெற்ற திருக்கல்யாணமும் திருவூஞ்சலும் 13-03-2012

.
கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து தை மாதம் 16ம் நாள் திங்கட்கிழமை (30/01/2012) முதல் 45 நாட்கள் வரை மண்டலாபிஷேகம் நடைபெற்று மாசி மாதம் 30ம் நாள் செவ்வாய்கிழமை (13/03/2012)  காலை 9 மணிக்கு 1008 சங்காபிஷேகமும், மாலை 7 மணிக்கு திருக்கல்யாணமும் திருவூஞ்சலும் நடைபெற்றன.


படப்பிடிப்பு ஞானி



கூகுள் பிளசை தமிழில் மாற்றுவதற்கு

 Monday, 12 March 2012

google_plus_இன்றைய உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் சமூக இணையத்தளமான கூகுள் பிளஸ் தற்பொழுது 60 மொழிகளில் கிடைக்கின்றது.

குறிப்பாக தமிழ் மொழியில் கிடைக்கின்றது. இதனைப் பெறுவதற்கு கூகுள் பிளஸ் தளத்தை திறந்து Settings என்பதை கிளிக் செய்யவும்.

அடுத்து Languages என்பதை கிளிக் செய்யவும். பிறகு அங்கு உள்ள Languages கட்டத்தில் கிளிக் செய்து உங்களுக்கு விருப்பமான மொழியை தெரிவ செய்யவும்.

இதன் பிறகு உங்களின் கூகுள் பிளஸ் கணக்கை மூடி விட்டு மறுபடியும் திறந்தால் நீங்கள் தெரிவு செய்த மொழிக்கு உங்கள் கூகுள் பிளஸ் கணக்கு மாறி இருக்கும்.

நன்றி தினக்குரல்

உலகச் செய்திகள்

பங்களாதேஷில் படகு விபத்து: 30 பேர் பலி

சிரிய வன்முறைகளில் சிக்கி இதுவரை 8000 பேர் பலி: ஐ.நா.அதிகாரி தகவல்

சுவிஸில் அகோர பஸ் விபத்து : 22 பெல்ஜிய மாணவர்கள் பலி(பட இணைப்பு)

பங்களாதேஷில் படகு விபத்து: 30 பேர் பலி

13/3/2012

பங்களாதேஷில் 200 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழந்ததில் 30 பேர் பலியாகியுள்ளதுடன் பலரைக் காணவில்லை.

பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. பங்களாதேஷில் ஷரியத்பூர் மாவட்டத்தில் இருந்து தலைநகர் டாக்காவுக்கு 200 பயணிகளுடன் எம்வி ஷரியத்பூர்- 1 என்ற படகு புறப்பட்டது.

சர்ச்சைகளுக்கு மத்தியில் சனல் 4 வெளியிட்ட ''தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்"


 15/3/2012

பிரித்தானியாவில் உள்ள சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் இலங்கையின் கொலைக்களங்கள் என்னும் ஆவணப்படத்தின் 2ஆம் பாகமாகிய 'தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்" என்னும் காணொளியை வெளியிட்டுள்ளது. இத் தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் என்னும் காணொளி ஒரு மணித்தியால ஆவணப்படமாக தொகுக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமா

அம்புலி

ampuli_ஹாலிவுட் 3டி படங்களையே தூக்கி சாப்பிடும் விதமாக முழுக்க முழுக்க கோலிவுட் தொழில்நுட்ப கலைஞர்களால், காட்சிக்கு காட்சி மிரளவைக்கும் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகி தரமானதாக வெளிவந்திருக்கும் திரைப்படம்தான் "அம்புலி 3 டி".

ஒரு கல்லூரி காதல் ஜோடி, கல்லூரியின் கோடை விடுமுறையிலும் காதலை வளர்க்க விரும்புகிறது. அதற்காக கல்லூரி விடுதியில், விடுமுறையிலும் தங்குகிறார் ஹீரோ. அவருக்கு உதவுகிறார் அவரது வகுப்பு மாணவனும், அந்த கல்லூரி வாட்ச்மேனின் வாரிசுமான மற்றொரு ஹீரோ. இரவில் நண்பனுக்கும் தெரியாமல் கல்லூரியை அடுத்த கிராமத்தில் இருக்கும் கதாநாயகியைத் தேடி காதலை வளர்க்க, திகில் அடர்ந்த சோளக்காட்டின் வழியாக போகிறார் ஹீரோ! ஹீரோவை மனித உயிர்களை குடிக்கும் அம்புலி துரத்துகிறது. அம்புலியிடமிருந்து தப்பி பிழைக்கும் ஹீரோ, அதன்பின் வரும் இரவுகளில் நண்பனுடன் சேர்ந்து கொண்டு அம்புலி பேயா...? பிசாசா..? மனித மிருகமா...? விநோத மிருகமா...? என்பதை கண்டுபிடிக்க களம் இறங்குவதுடன், காதலையும் வளர்ப்பதும், உயிருக்கு பயந்து வாழும் கதாநாயகியின் ஊரை காப்பாற்றுவதும் தான் அம்புலி படத்தின் அட்டகாசமான மீதிக்கதை!

அஜெய்-சனம், ஸ்ரீஜித்-ஜோதிஷா காதல் காட்சிகள் நச்! கல்லூரி விடுதி காவலாளி தம்பி ராமய்யாவின் எச்சரிக்கையையும் மீறி ஹீரோ ‌அஜெய், அந்த சோளக்காட்டை சைக்களில் கடந்து போவதில் ஆரம்பமாகும் திகில், படம் முழுக்க பரவிக்கிடப்பது அம்புலி படத்தின் பெரிய பலம்! மொட்டை ராஜேந்திரன் குடித்துவிட்டு போதையில் ஊரைச் சுற்றிக்கொண்டு கிராமத்திற்கு போக விரும்பாமல், தன் பெண் குழந்தையை அம்புலியிடம் பலி கொடுத்துவிட்டு அலறியடித்து ஓடுவதிலாகட்டும், இடையில் காட்டுவாசி போல் பார்த்திபனைக் காட்டி அம்புலி அவர்தானோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி எதிர்பார்ப்பை கூட்டுவதிலாகட்டும் படத்தை பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார்கள் இரட்டை இயக்குநர்கள் ஹரிசங்கர் - ஹரீஷ் நாராயணன் இருவரும்!
ampuli_2

மனித மிருகமாக அம்புலி உருவான விதத்தை ப்ளாஷ்பேக்கில் சொன்ன விதத்திலாகட்டும், அம்புலியின் அண்ணன் பார்த்திபன், கல்லூரி முதல்வரை கொன்றதற்கான காரணத்தை விளக்கியதிலாகட்டும், அதேகாட்டில் தன்னை கொல்ல வேண்டும் என்று வைராக்கியத்துடன் வாழும் பார்த்திபனை, சகோதர பாசத்துடன் அம்புலி விட்டு வைத்திருப்பதை சொல்லாமல் சொல்லியிருப்பதிலாகட்டும், இப்படி ஒவ்வொரு காட்சியையும் கவனமாக கையாண்டிருக்கின்ற இரட்டை இயக்குநர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! செங்கோடனாக பார்த்திபனும், அம்புலியாக கோகுலும் வாழ்ந்தே இருக்கிறார்கள் பலே! பலே!!

திகில் படத்திற்கு ஏற்ற மிரட்டல் பின்னணி இசையை தந்திருக்கும் வெங்கட்பிரபு சங்கர், சாம்ஸ், சதிஷ், மெர்வின் சாலமன் நால்வர் கூட்டணியும், சதிஷ், ஜியின் பயமுறுத்தும் இருட்டிலும் பளீரிடும் ஒளிப்பதிவும் பிரமாதம்! ரெமியனின் கலை இயக்கமும் பிரமாண்டம், பிரமாதம்!!

ampuli_3
கண் எதிரே படமெடுத்தாடும் பாம்பு, முகத்திற்கும் மூக்கிற்கும் அருகில் நீளும் இரட்டைக்குழல் துப்பாக்கி. நம்மையும் காட்டிற்குள் அழைத்துப்போகும் 3டி எஃபெக்ட் சோளக்காடு, நம்மீது பறந்து வந்து விழும் பாவனையை ஏற்படுத்தும் இலை, தழைகள், பாய்ந்து வந்து தாக்கும் பயத்தை ஏற்படுத்தும் ராட்சஸ அம்புலி இத்யாதி இத்யாதி, 3டி தொழில் நுட்பங்களுக்காகவே லாஜிக்கை மறந்து இந்த மேஜிக் படத்தை கண்டு களிக்கலாம்!

ஆக மொத்தத்தில் "அம்புலி", தமிழ் சினிமாவின் "டெக்னிக்கல் புலி" என்றால் மிகையல்ல!!

நன்றி தினக்குரல்

அரவான்

Tuesday, 06 March 2012

 "Aravaan_2வெயில்", "அங்காடித்தெரு" உள்ளிட்ட வெற்றிப்படங்களின் இயக்குநர் வசந்தபாலனின் இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக வெளிவந்திருக்கும் மற்றும் ஓர் திரைக்காவியம் தான் "அரவான்"! பல நூற்றாண்டுகளுக்கு முன் களவும், காவலும், கட்டுப்பாடுமாக வாழ்ந்த தமிழர்களைப்பற்றிய கதைதான் அரவான் மொத்தமும்!



கதைப்படி திருடுவதையே தொழிலாக கொண்ட மக்களை உடைய கொம்பூதி - பசுபதியின் ஊர் பெயரைச் சொல்லி புதிதாக ஒரு கள்வன் அங்கே இங்கே என நிறைய இடங்களில் தன் கைவரிசையை காண்பிக்கிறான். இதனால் இன்னல்களுக்கு உள்ளாகும் பசுபதியும், அவரது ஊர்மக்களும், அவன் யார்? எவர்...? என்று ஒரு பக்கம் தேடிக் கொண்டே மற்றொருபக்கம் குலத்தொழிலான களவையும் செய்து வருகின்றனர். அப்படி ஒரு களவில் கொம்பூதி-பசுபதியிடம் கையும் களவுமாக மாட்டுகிறான் அந்த பலே திருடன். அவன் தான் வரிப்புலி எனும் ஹீரோ ஆதி! ஆதியின் கைவரிசையையும், களவாடும் திறனையும் பார்த்து மிரளும் பசுபதி, தான் ஒரு அநாதை எனும் ஆதியை தனது ஊருக்கு அழைத்து வந்து, தனது களவாடும் குரூப்பில் ஒருவர் ஆக்குகிறார். இந்நிலையில் கைதேர்ந்த களவுக்காரனும் கொள்ளையடிக்க முடியாத து‌ணியாத காவலும், கட்டுப்பாடுகளும் நிறைந்த ஓர் ஊருக்கு ஒரு சவாலாக ஆதியும்-பசுபதியும் தங்களது களவு கூட்டத்துடன் களவாட போகின்றனர். அங்கு திருடி திரும்பும் வழியில் காவல்காரர்களின் கண்ணில் மாட்டிவிடும் இவர்கள் தப்பித்தோம், பிழைத்தோம் என ஓடி வரும்போது தவறி விழும் பசுபதி மட்டும் அவர்கள் கையில் சிக்கி கொள்கிறார்.


aravaan_780
ப்புறம்? அப்புறமென்ன...? பசுபதியை அத்தனை பேர் கண்ணிலும் மண்ணை தூவி விட்டு குற்றுயிரும், கொலை உயிருமாக துணிச்சலாக போய், மறுநாள் காலை மீட்டு வருகிறார் ஆதி! அப்படி ஆதி, பசுபதியை தூக்கி வரும் போது அவரை துரத்தி வரும் காவல்காரர் கரிகாலன், ஆதியை பார்த்து டேய் சின்னான் உன்னை விடமாட்டேன்டா என கூவுவது அரைமயக்கத்தில் இருக்கும் பசுபதியின் காதுகளில் விழுகிறது. அதன்பிறகு படுத்த படு‌க்கையாகிவிடும் பசுபதி மீண்டும் எழுந்ததும், அவரது தங்கை சிமிட்டி, ஆதியை காதலிப்பதாக தெரியவருகிறது. அதனால் அரைமனதுடன் ஆதியின் பூர்வீகம் என்ன...? திருடபோய் திரும்பிவந்தபோது துரத்தி வந்த காவல்காரன் கரிகாலன், வரிப்புலி ஆதியை சின்னான் என அழைக்க காரணம் என்ன? தன் தங்கையின் காதலுக்கு பதில் என்ன...? என ஆதியிடம் கேட்கிறார். அதற்கு ஆதி, எனக்கு திருமணமாகிவிட்டது, அதற்குமேல் வேறு எதையும் கேட்காதீர்கள்... என்கிறார். அப்புறம் ஆதி அரவானாக, பலிஆளாகி தப்பி பிழைத்து ஊருக்கு தெரியாமல் வாழ்வதும், உண்மை குற்றவாளியை ஊர் முன் நிறுத்த முடியாமல், போவதும், இறுதிவரை உயிரோடு வாழ்ந்தாரா, இல்லையா என்பதும் தான் அரவான் படத்தின் வித்தியாசமும் விறுவிறுப்புமான மீதிக்கதை!

புகை கூண்டின் வழியாக ஏறி இறங்கி பொத்தினார் போல் மணியக்காரர் வீட்டிற்குள் கொள்ளையடிக்க போகும் காட்சிகளில் தொடங்கி, ஒவ்வொரு சீனிலும் தனது அஜானுபாகுவான உடம்பை வைத்து கொண்டு அசால்ட்டாக நடித்திருக்கும் ஆதிக்கு வைக்கலாம் ஒரு ராயல் சல்யூட்! களவிற்குபோன இடத்தில் காவல்காரர்களிடம் மாட்டிக்‌கொள்ளும் பசுபதியை காபந்து செய்ய போகும் காட்சியில், மாட்டு மந்தையில் மாடுகளுடன் மாடுகளாக போய், பசுபதியை மீட்டு, மாட்டின் மேலேயே அவரை படுக்க வைத்தபடி தானும் அமர்ந்து கொண்டு தைரியமாக துரத்தும் குதிரை வீரர்களை தாக்கியபடி திரும்பும் ஒரு காட்சி போதும் ஆதி, அரவானுக்காக எத்தனை உழைத்திருக்கிறார், எத்தனை ரிஸ்க் எடுத்திருக்கிறார் என்பதற்கு கட்டியம் கூற! வாவ், ஹேட்ஸ் ஆஃப் ஆதி!

aravann_3
பசுபதி களவாணி-கொம்பூதியாகவே வெற்றிலை காவிபடிந்த பற்களும், மீனாட்சி கொண்டையுமாக வாழ்ந்திருக்கிறார். இவருக்கும் ஆதிக்கு இணையான பாத்திரம். அதை ஆதியை விட அழகாகவே செய்திருக்கிறார் மனிதர். ஜல்லிக்கட்டில் தன் ஊர் மானத்தை காக்க ஒற்றை ஆளாக காளையுடன் முட்டி மோதும் காட்சி ஒன்றும் போதும் பசுபதியின் நடிப்பு திறமையை பறைசாற்ற! இனி, இவர் பசுபதி இல்லை... பலேபதி!!

வனப்பேச்சியாக சின்னான்-ஆதியின் காதல் மனைவியாக ப்ளாஷ்‌பேக்கில் வரும் தன்ஷிகாவிற்கு விருதுகள் நிச்சயம்! சிமிட்டி-அர்ச்சனா கவி, ஆதியின் அம்மா ஒச்சாயி டி.கே.கலா, மாத்தூரன்-கரிகாலன், மொசக் காதன், சிங்கம்புலி, வீரணனாக ஆதியின் நண்பராக வரும் திருமுருகன், பாளையக்காரராக வரும் விஜய் சந்தர் உள்ளிட்டவர்களும், சிறப்பு தோற்றத்தில் வந்துபோகும் பரத், அஞ்சலி, ஸ்வேதாமேனன், ஸ்ருதிபிரகாஷ் உள்ளிட்டவர்களும் கூட பாத்திரமறிந்து பளிச் என்று நடித்திருப்பதால் படம் முடிந்து வெகுநேரமாகியும் மனதை விட்டு அகல மறுக்கின்றனர். ஆனாலும் அரவான் படத்தின் அத்தனை முகங்களையும் கரிசல் மண்ணில் போட்டு புரட்டியெடுத்த மாதிரி காட்டியிருப்பது சுத்த போர்.

பிரபலபாடகர் கார்த்திக் இசையமைப்பாளராக முதல் படத்திலேயே முத்திரை பதித்துவிட்டார். பேஷ், பேஷ், சபாஷ்! கார்த்திக்கின் இசை மாதிரியே, சித்தார்த்தின் ஒளிப்பதிவும், விஜய் முருகனின் கலை இயக்கமும் படத்தின் பெரும்பலம்!

சு.வெங்கடேசனின், "களவு இருந்தால் தான் காவலுக்கு வேலை..." உள்ளிட்ட நறுக் - சுறுக் வசனங்களும், வசந்தபாலனின் திரைக்கதை-இயக்கமும் அரவானை தமிழ்சினிமாவுக்கு புதியவனாக காண்பித்திருக்கிறது சில பல ஆங்கிலப் படங்களின் சாயலுடன் (உதாரணம் - மெல் கிப்ஸனின், அபோகலிப்டா) பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருடர்களின் வாழ்க்கையை திகட்ட திகட்ட தந்திருப்பதின் அவசியத்தையும் வசந்தபாலன் காட்டியிருந்தால், அரவான் மேலும் மெச்சும்படி இருந்திருக்கும். ஆனாலும், மரண தண்‌டனைக்கு எதிராக ஓங்கி குரல் கொடுத்திருக்கும் வசந்தபாலனின் அரவான், வித்தியாசமான தமிழ் சினிமாவில் ஒருவன்.
நன்றி தினக்குரல்