விஞ்ஞானி
நம்ம நாட்டோட முதுகெலும்புனு "விவசாயத்த" சொல்லிட்டு போய்ட்டாங்க, நம் முன்னோர்கள். ஆனா, அதே முன்னோர்கள் இந்த காலத்தில இருந்து இருந்தா முதுகெலும்புக்கு அர்த்தம் தேடிட்டு இருந்து இருப்பாங்க.
இந்த மாதிரி யோசிச்ச பல இயக்குனர்கள் விவசாயத்த மையமாக வச்சு படம் எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க போல. அந்த வரிசையில தான் இந்த படத்தோட இயக்குனர் பார்த்தியும் யோசிச்சு இருக்காரு. இப்படி வர கூடிய படம் நல்ல வசூல் கிடைக்குமா னு தெரியல. ஆனா நிச்சயமா தமிழனோட பாராட்டுக்கள் கிடைக்கும்.
சிறந்த விஞ்ஞானி, சிறந்த விவசாயி, சிறந்த இலக்கியவாதி-னு தமிழன சொன்ன இந்த உலகம் அவன தமிழ் தீவிரவாதம்-னு சொல்லுவாங்க. ஆனால் இந்த படத்தை இயக்குனது ஒரு நிஜமான விஞ்ஞானி தாங்க. இவர் நம் தமிழின் ஆதி இலக்கியமான தொல்காப்பியத்தை ஆராய்ந்து, தொல்காப்பியர் தான் உண்மையான விவசாயி என முடிவுக்கு வந்து இந்த படத்தை எடுத்துள்ளார்.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொல்காப்பியர், இன விருத்திக்கு, உடல் பலத்துக்கு, நா ருசிக்கு என மூவாயிரம் வகை வகையான "நெல்"லை கண்டுபிடித்துள்ளார். அதில் ஒன்று தான் “தாகம் தீர்த்தான் நெல்”.
இந்த நெல்லின் விஷேசம் என்னவென்றால் குறைந்த தண்ணீரிலே குறைந்த நாட்களில் ஒரு போகம் விளைவிக்க முடியும். தன் எதிர்காலத் தலைமுறை பஞ்சத்தால் தவிக்கும் என முன்னுணர்ந்த தொல்காப்பியர் தீர்த்தான் நெல் விதையை ஒரு கற்பானையில் போட்டு புதைத்து வைக்கிறார்.
நிகழ்காலத்தில் "வறட்சி"யின் பிடியில் நெற்களஞ்சியமான தஞ்சை. மக்கள் தங்கள் நிலங்களை ரியல் எஸ்டேட்டிற்க்கு விற்கும் நிலை. இந்நிலையில் அந்த ஊரில் குடியிருக்கும் மீரா ஜாஸ்மின் குடும்பத்திற்க்கு தாகம் தீர்த்தான் நெல் வைத்திருக்கும் கற்பானையும் தொல்காப்பியரின் கல்வெட்டும் புதையலாக கிடைக்கிறது. அந்த நெல்லை உயிர்ப்பிக்க ஒரு தகுதியான விஞ்ஞானியை தேடி நாயகனான பார்த்தியிடம் செல்ல, அதனை செய்ய மறுத்து விரட்டிவிடுகிறார்.
ஒரு நேரத்தில் விஞ்ஞானி பார்த்தி, மீரா ஜாஸ்மின் குடும்பத்திற்க்கு நெருக்கமானவர் என தெரிய வர அவரை மணந்து நெல்லிற்கு உயிர்ப்பிக்கும் ஆய்வில் இறங்க வைக்க திட்டமிடுகிறார். திட்டப்படி கல்யாணம் நடைபெறுகிறது, ஆனால் நடப்பதெல்லாம் திட்டத்திற்க்கு மாறாக. ஒரு கொலை பழியும் விழுகிறது. நாயகன் இதிலிருந்து தப்பித்தாரா? நெல்லிற்கு உயிர் கொடுத்தாரா ? என்பதே இந்த படத்தின் கிளைமேக்ஸ்.
பலம்
தொல்காப்பியர் மூலமாக விவசாயத்தின் அருமையை அமைத்து அதன் கதை களமாக கொண்டு வந்தது இதன் பலம். எப்பவும் போல நமது விவேக்கின் கருத்து நிறைந்த இரட்டை அர்த்த காமெடி . பார்த்தி மீரா வின் டூயெட் பாடல் மெய் சிலிர்க்க வைக்கிறது.
பலவீனம்
நடிகைக்கான பொலிவு மீரா ஜாஸ்மினிடம் தெரியாமல் இருப்பது வருத்தத்துக்குரியது. கொலை பழியோடு தப்பித்து சென்று காட்டில் தஞ்சம் புகும் கதாநாயகன், ஏதோ சுற்றுலாவிற்க்கு வந்தது போல காட்டி இருப்பது படத்தின் அழகை கெடுக்கிறது.
படத்தின் இறுதியில், கதைக்கான ஆதாரங்களை பார்த்தி பட்டியலிடுகிறார். இதனால் தமிழின் பெருமையும் தமிழ் இலக்கியத்தின் பெருமையையும் அறிய முடிகிறது.
நம்ம நாட்டோட முதுகெலும்புனு "விவசாயத்த" சொல்லிட்டு போய்ட்டாங்க, நம் முன்னோர்கள்.
விஞ்ஞானி மொத்தத்தில் தமிழின் விந்தைகள்-னு சொல்லலாம் !!
நன்றி cineulagam