புல்லாங்குழல் - கவிதை -புஹாரி( வடகரை)


ஆம்! என்னவளும் ஒரு புல்லாங்குழல்தான்,அதை வாசிக்க நினைத்தவர்களின் மத்தியில் 
நேசிக்க நினைத்தவன் என்பதால்தான்
என்னவோ அதன் இசை ஸ்வரங்களை
என் இரு விழி நரம்புகளிலும் சுமக்கும்
வரம் கிடைத்தது ஒரு கணம்!!!!
என் இரு விழி நரம்புகளிலும் அதன்
இசை நாளங்களை இணைத்தேன்
உயிர் கொடுத்தேன் பின் உரு கொடுத்தேன்
உணர்வில்லாது நடமாடும் உலகம்
என்னவளின் சுவாசம் மட்டும் என்னுடன்...
சத்தியமாக சொல்கிறேன்
நான் தவறவிட்ட புல்லாங்குழலல்ல அவள்..
என்னிடமிருந்து தட்டிப் பறிக்கப்பட்ட புல்லாங்குழல்..
ஏனோ! அதை வாசிக்க நினைத்தவர்கள்
உறவுகள் என்பதாலா,
இல்லை அதற்கு நான் தகுதியற்றவன்
என்பதாலா????

வாரணம் மூன்று!

.
எல்லோருக்கும் வணக்கம்!
தமிழை இப்படியும் ரசிக்கலாம் என்று கற்றுத்தந்த எழுத்தாளர் சுஜாதாவுக்கும், கம்பவாரிதி இ.ஜெயராஜுக்கும் மானசீக வணக்கங்கள்.

காலை ஆறு மணி!
தலையில் துவாய்,
கருத்தரங்கு தமிழில் துவாலை என்று சொல்லலாமா?
யாழ்ப்பாணத்து பனியோடு முட்டி மோதி
302671_114101475361040_106337206137467_85002_905797100_nஊமல் கரியில் பல் துலக்கி,
கரண்டு போன மின்கம்பம்
பிடுங்கிய பீங்கானில் கிணற்று கப்பி.
டயர் வாரில் தேடா வலயம்
ஆழக்கிணற்றில் வாரும்போது
அரைவாசி  தண்ணீர்
ஓட்டை வாளியால் ஓடிவிடும்.
முகம் கழுவி
சைக்கிள் எடுத்து
சந்திக்கடையில் உதயனும் ஈழநாதமும்,
புதன்கிழமை என்றால் ஞாயிறு வீரகேசரியும்!
அப்பாவுக்கு ஒன்று எனக்கொன்று
வாசிப்பதில் தொடங்கும் அனுபவம்!
பாடசாலை இடை வேளை,
பரியோவான் நூலகத்தில் மகாபாரத சித்திரக்கதைகள்!
அஞ்சாதவாசம் முடிகையில் மணியடிக்கும்
வகுப்பில் இருப்புக்கொள்ளாத தவிப்பு.
அது முடிந்த பின்னும் நூலகம்
தாமதமாய் வீடு போனமைக்கு அம்மாவின் திட்டு
திருட்டுத்தனமாய் கரையெல்லாம் செண்பகப்பூ!
ப்ரியா, பாவைவிளக்கு,
அவ்வப்போது அம்புலிமாமா.
ஆடிகொருமுறை சங்கர்லால்!
பொன்னியின் செல்வன்,
கடல்புறா, கடல்கோட்டை, குவேனி.
செங்கை ஆழியானையும் சுஜாதாவையும்
காரை சுந்தரம்பிள்ளையையும்
காதலித்து வளர்ந்த ஈழத்து இளைஞன்
புலம் பெயருகிறான்.

உலகச் செய்திகள்

.
இத்தாலி பூமியதிர்ச்சி: ஆயிரக்கணக்கானோர் தற்காலிக முகாம்களில் தஞ்சம்

பாரிய சவாலை எதிர்நோக்கும் நேபாள அரசியல் மாற்றம்

இத்தாலியில் பூமியதிர்வு; மூவர் பலி

ஜப்பானில் உலகின் மிக உயரமான ஒலிபரப்புக் கோபுரம் திறக்கப்பட்டது

ஜப்பானின் வடகிழக்கில் கடுமையான நிலநடுக்கம்

இத்தாலி பூமியதிர்ச்சி: ஆயிரக்கணக்கானோர் தற்காலிக முகாம்களில் தஞ்சம்

வடக்கு இத்தாலியில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பூமியதிர்ச்சியை தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் தமது வீடுகளை இழந்து தற்காலி முகாம்களில் தங்கி வருகின்றனர். எனினும் நேற்றைய தினத்திலும் பின் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.

இத்தாலி நேரப்படி கடந்த ஞாயிற்றுக் கிழமை அதிகாலை ஏற்பட்ட இந்த பூமி அதிர்ச்சியில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டதோடு 50 பேரளவில் காயமடைந்தனர். 5.1 ரிச்டர் அளவில் பதிவான இந்த பூமியதிர்ச்சியில் வட மத்திய பொலொக்னா பகுதி அதிகமாக பாதிக்கப் பட்டது. இந்த பூமியதிர்ச்சியை தொடர்ந்து வீடிழந்த 3000 க்கும் மேற்பட்டோர் தற்காலிக முகாம்களில் தங்கவைக் கப்பட்டுள்ளனர்.

சிட்னியில் சுவாமினி ஸ்திரானந்தா



சுவாமி ஸ்திரானந்தா அவர்கள் பின்வரும் திகதிகளிலும் இடங்களிலும் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றவுள்ளார்கள்.

சிட்னி முருகன் கோவில் மாலை 7.30மணி ஞாயிற்றுக்கிழமை 27-05-2012

சிட்னி முருகன் கோவில் மாலை 7.30மணி திங்கட்கிழமை 28-05-2012

சிட்னி முருகன் கோவில் மாலை 7.30மணி செவ்வாய்க்கிழமை 29-05-2012

சிட்னி துர்க்கை அம்மன் கோவில் மாலை 7.30மணி வெள்ளிக்கிழமை 01-06-2012

ஹோம்புஷ் ஆரம்ப பாடசாலை காலை 9.15 மணி ஞாயிற்றுக்கிழமை 03-06-2012

ஈழத் தமிழர் கழகத்தின் அதிஸ்டலாப சீட்டிழுப்பு 29 May 12

.


ஆந்திராவில் இரு ரயில்கள் மோதி விபத்து: 25 பேர் பலி

22/5/2012
ஆந்திராவின் அனந்தப்பூர் மாவட்டத்தில் இன்று அதிகாலையில் நடந்த ரயில் விபத்தில் 25 பேர் பலியானதுடன் 40 பேர் காயமடைந்துள்ளனர்.

பெங்களூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஹம்பி எக்ஸ்பிரஸ், பென்னிகொண்டா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலுடன் மோதியுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் அருகாமையில் உள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 3 பெட்டிகள் விபத்து காரணமாக தடம் புரண்டுள்ளதோடு அதில் ஒரு பெட்டி தீப்பிடித்து எரிந்துள்ளது. மேலும் மீட்பு நடவடிக்கைகள் துரிதமாக நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீரகேசரி இணையம்

Vada Hindu Girls College - 02.06.2012

.

ஈழ மண்ணிலிருந்து இன்னொரு இசையின் பயணம்..

.
காதலும் வீரமும் கலந்தேப் பிறந்த தமிழனின் இசைப் பயணத்தில் கலக்க வந்துள்ள இன்னொரு புதிய காதல் பாடல், முகில் படைப்பகத்தின் ஏழாம் இசைப் படைப்பான இப்பாடலை 'இலங்கையின் இசை இளவரசன் திரு.கந்தப்பு ஜெயந்தன்' வவுனியாவிலிருந்து இசையமைத்து, தன் குரலிலேயேப் பாடியும் கொடுத்துள்ளார். ஈழ மண்ணிலிருந்து வந்து நம் காதுகளின் வழியே மனதைத் தொடுமொரு பாடலை நன்றிகளோடு உங்களின் ரசனைக்கு வேண்டியும் அனுப்புவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

நீ பார்க்கும் பார்வையிலே.. 




அன்பும் வணக்கத்தோடும்..


வித்யாசாகர் 

மௌனம் கலைகிறது 12 – நடராஜா குருபரன்


மரணத்தின் வாசல் வரை....மௌனம் கலைகிறது 12 – நடராஜா குருபரன்

மரணத்தின் வாசல் வரை....


' புலிகளுக்கு எதிரான மாற்றுக் கருத்துடைய அரசியல்வாதிகள் தொடங்கி மலையகமக்களின் பிரதிநிதிகள்  முஸ்லீம்மக்களின் பிரதிநிதிகள் பெரும்பான்மையினக் கட்சிகளைப் பிரதிநிதிப்படுத்திய அரசியல்வாதிகள் வரை யாவருக்கும் ஊடகதர்மத்தின் அடிப்படையிலும் சனநாயக விழுமியங்களுக்கு உட்பட்டும் களங்களைத் தன்னுணர்வுடன் சூரியனில் வழங்கியிருந்தேன்.' 
Wednesday 30th August 2006 The Island

திருமுறை முற்றோதல்

வானொலி மாமா நா. மகேசனின் குறளில் குறும்பு – 35 வளவளா குளகுளா

.
ஞானா: அப்பா…….அப்பா…..திருக்குறளிலை வளவளா குளகுளா எண்டு ஒரு குறள் இருக்குது, உங்களுக்குத் தெரியுமே?

அப்பா: ஞானா, உன்னைப் போலை பெம்பிளைப் பிள்ளையள்தான் வளவளா குளகுளா எண்டு பேசுறது. திருவள்ளுவப் பெருந்தகை சொற் சுருக்கமானவர் கண்டியோ.

ஞனா: இந்தாருங்கோ அப்பா, நீங்கள் வாங்கித் தந்த திருக்குறள் புத்தகம். 523 ஆவது குறளைப் பாருக்கோ.

அப்பா: எங்கை கொண்டா ஞானா பாப்பம். …..ம்….53ஆம் அதிகாரம் சுற்றந்தழால். சுற்றந்தழால் என்டால் கருத்து உனக்குத் தெரியுமே?

ஞானா: அதிலை போட்டிருக்குத்தானே. வாசிச்சுப் பாருங்கோவன்.

அப்பா: சுற்றந்தழால் என்பது, சுற்றம் தழுவுதல். உறவினர்களை ஆதரித்தல் என்பது பொருள். இதிலை நீ சொன்ன 523ஆம் குறளைப் பாப்பம்………எடி விசர்ப்பிள்ளை. இதிலை வளவளா குளகுளா எண்டே கிடக்குது?

சுந்தரி: அப்பா அவள் பிள்ளை ஞானா ஏதாவது குறும்புவிட சொல்லியிருப்பாள். நீங்கள் அந்தக் குறளை வாசியுங்கோ கேட்பம்.

அப்பா: இஞ்சை பாரும் சுந்தரி, இவள் என்ள விறுக்கா விட்டிருக்கிறாள் எண்டு. குறளைக்கேளும்.

“அளவளா இல்லாதான் வாழ்க்கை குளவளாக்

கோடின்றி நீர்நிறைந் தற்று,”

ஞானா: மன்னியுங்கோ அப்பா. சும்மா ஒரு முசுப்பாத்திக்குச் சொன்னனான். இனிமேல் நான் உந்தமாதிரிக் குறும்பு விடுகிறதை நிறுத்தப் போறன். குறளிலை விளங்காத விஷயத்தை நேரடியாய் வந்து கேக்கிறன்.

அப்பா: அது நல்ல பழக்கம். இனிமேல் அப்பிடிச் செய் ஞானா.

உணவு செரியா நிலை ஏன் உண்டாகிறது? - காவிரிமைந்தன்


.
முப்பது முதல் 32 அடி நீளமுள்ள தொடர்ந்து குழாயாய் அமைந்துள்ள செரிமானப்பாதை (alimentary canal) என அழைக்கப் படும்அற்புதமான திகைக்கச் செய்யும் பொறிவல்லாளராகச் செயலாற்றி வரும் ஒழுங்கில்குறுக்கீடு செய்வது உணவு செரியா நிலையைக் கொண்டு வருகிறது.

இந்த முறை ஒழுங்கில்உணவு சிதைக்கப்பட்டுகடையப்பட்டுகுழம்பாக்கப்பட்டு,கரைந்துவேதியியல் செயலால் எளிய கலவையாகப் பிரிக்கப்பட்டுகுருதியில் ஏற்றுக்கொள்ளும் நிலைபெற்ற பின் குருதி உறிஞ்சிக் கொள்கிறது.

செரிமானப்பாதை மெல்லிய படலத்தால் (membrance) ஆனது. எலும்பு,குருத்தெலும்புவிலங்குகாய்கறிப் பொருள்கள்ஆகியவை இந்த மெல்லிய படலத்தைவிட வலுவாயுள்ளவை கரடுமுரடானவை. ஆனால் இவற்றைக் கரைக்கும் வேதியியற் பொருளைத் தடுத்து நிறுத்தும் தன்மையை இம்மெல்லிய படலம் கொண்டிருக்கிறது. உணவுச் செரித்தலைச் செய்யும் தலையாய பொருள்களுள் ஒன்றான இரைப்பை நீர் (gastric juice) செறிவான ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை (concentrated hydrochloric acid) உடையது. இது சில நிமிடங்களில் வேகவைத்த முட்டையைக் கரைத்து ஈர்த்துக் கொள்ள வல்லது.

அகவு ஆறில் தடம் பதிக்கும் வானமுதம்" தமிழ் ஒலிபரப்பு.


.
                                                                                         நவரத்தினம் அல்லமதேவன்

அவுஸ்த்திரேலிய கண்டத்தில் மெல்பேர்ண் மாநகரில் உதித்த சமூகவானொலி தான் வானமுதம் எனும் தமிழ் ஒலிபரப்புச் சேவை. வானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவை சீராகவும், நேர்த்தியாகவும், தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் அன்றாடம் பூர்த்தி செய்து கொண்டிருக்கின்றது.
தமிழ் மக்களின் சகல தேவைகளையும் சளைப்பின்றி, முழுமனதோடு நிறைவேற்றி வருகின்றது. வானமுதம் எனும் தமிழ் வானொலியின் முன்னேற்றம் வானுயர்ந்து வளர்வதைப் பார்க்க முடிகின்றது.
மெல்போர்ணில் விற்றில்சீ தமிழ்ச் சங்கம்(Whittlesea Tamil Association) 2006 ஆம் ஆண்டு அதன் செயற்பாடாக உதயமானது தான் வானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவை.Plenty valley FM 88.6 எனும் பண்பலைவரிசையில் சமூக வானொலியின் செயற்பாடுகள் விரிவாக்கம் பெற்ற போது பல்லின சமூகங்களுக்கும் பயன் பெறக் கூடிய வகையில் சேவைகள் ஒழுங்குபடுத்தப்பட்டன.

இலங்கைச் செய்திகள்



ஜனாதிபதியை நண்பனாக கருதும் அரபு நாடுகள் மனித உரிமை மாநாட்டில் இலங்கையை ஆதரித்தன

நீண்ட நாட்களுக்கு பின்

தெரிவுக் குழுவும் கூட்டமைப்பும்

 தேசிய நல்லிணக்கம்' எப்போதுமே அழகிய கனவுதான்

அரசின் "புதிய எதிரிகள்"

பொன்சேகாவால் ஆவதென்ன ?

யுத்த்த்தில் இந்தியாவை இலங்கை சாமர்த்தியமாக சேர்த்த்து எவ்வாறு? இந்திய அரசியல் தலைவர்களின் முக்கிய பங்களிப்பை தவிர்த்துக் கொண்ட சாணக்கியம் விபரிக்கும் “கோதாவின் யுத்தம்’

பொன்சேகாவும் எதிரணியும்


நாணய மதிப்பிறக்கம் எதிர்மறையான பின்விளைவுகளை ஏற்படுத்தும்:கலாநிதி எம்.கணேசமூர்த்தி


தமிழ் சினிமா



ராட்டினம்


தமிழ் சினிமாவில் எப்போதாவது ஒரு முறை தான் சினிமா அல்லாத ஒரு வாழ்க்கையை திரையில் பார்த்து, அந்த மனிதர்களோடே நாமும் பயணிக்க முடியும். அப்படிப்பட்ட அழகான, அரிதான சினிமாக்களில் ஒன்று ராட்டினம்.

நாம் பார்த்த அல்லது அனுபவித்த வலியை, அந்தத் தன்மை மாறாமல் திரையில் மீண்டும் பார்க்கும் போது மனசெல்லாம் இனம் புரியாத உணர்வு ஆக்கிரமித்து நிற்கிறது.

எளிமையான கதை, நேர்மையான காட்சியமைப்பு, எந்த இடத்திலும் சினிமாத்தனமில்லாத இயல்பு இவை தான் ராட்டினத்தின் சிறப்புகள்.

தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளை இதற்கு முன் வேறு எந்தப் படத்திலும் இத்தனை சிறப்பாக கதைக்களமாக்கியதில்லை என்பதற்காகவே இயக்குநர் தங்கசாமியைப் பாராட்ட வேண்டும்.

பள்ளி முடித்த ஜெயத்துக்கும்(லகுபரன்) பள்ளியில் படிக்கும் தனத்துக்கும்(ஸ்வாதி) காதல். ஜெயத்தின் அண்ணன் வளரும் இளம் அரசியல்வாதி.

அண்ணி லோக்கல் கவுன்சிலர். தனத்தின் அப்பா தூத்துக்குடி துறைமுகத்தின் சேர்மன். தாய் மாமா பெரிய 'க்ரிமினல்'... லாயர். அரசியல் தொடர்புகள் எக்கச்சக்கம்!

காதலர்கள் இருவரும் அன்பையும் பரிசுகளையும் பரிமாறிக் கொள்வதோடு நில்லாமல், ஒரு முறை திருச்செந்தூர் வரை ஜாலியாக பைக்கில் போகிறார்கள். வரும் போது ஆத்தூர் பாலத்தில் பொலிஸ் மடக்கி விசாரிக்கிறது. அதோடு நில்லாமல் பெண்ணின் வீட்டில் போட்டுக் கொடுத்துவிடுகிறார் இன்ஸ்பெக்டர்.

பிரச்சினையை பக்குவமாகக் கையாள நினைக்கும் பெண்வீட்டுத் தரப்பு, நேராக ஜெயம் வீட்டுக்கு வந்து விஷயத்தைச் சொல்லி கண்டித்து வைக்கச் சொல்கிறார்கள்.

பெண்ணை கொஞ்ச நாள் வெளியூருக்கு அழைத்துப் போய் வைத்திருந்து, மீண்டும் வருகிறார்கள். ஆனால் காதலர்கள் மீண்டும் சந்திக்கிறார்கள். தனத்தின் அண்ணன் பார்த்துவிட பிரச்சினை வெடிக்கிறது.

பெற்றோரின் வெறுப்பு தாங்காமல் வீட்டைவிட்டு வெளியேறும் தனம், தன்னை அழைத்துப் போய் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறாள். குலசை தசரா விழாவில் வைத்து தாலி கட்டுகிறான் ஜெயம்.

அதற்குள் விஷயத்தை இருவீட்டாரும் அரசியலாக்கிவிடுகிறார்கள். ஜெயத்தின் அண்ணன் அசோக்கை, கட்சியின் அண்ணாச்சி அழைத்து எச்சரிக்க, பதிலுக்கு இவரும் கையை உயர்த்த, அது அசோக் கொலையில் முடிகிறது.

விஷயம் கேள்விப்பட்டு கதறிக்கொண்டு புது மனையியுடன் வீடு திரும்புகிறான் ஜெயம். அங்கே விதவை அண்ணி வெறுப்பை உமிழ, இன்னொரு பக்கம் காத்திருக்கும் தனத்தின் வீட்டினர், அவளை தரதரவென இழுத்துப் போகிறார்கள்.

ஜெயம் கட்டிய தாலி என்ன ஆனது? என்பது க்ளைமாக்ஸ்!

ஜெயம் - தனம் திருமணம், அசோக் கொலை போன்ற சில காட்சிகள், திருப்பங்களை யூகிக்க முடிந்தாலும் எந்தக் காட்சியிலும், 'அட இது சினிமாத்தனமா இருக்கே' என்று சொல்ல முடியாததுதான் இந்தப் படத்தின் மிகப் பெரிய ப்ளஸ்.

லகுபரன், ஸ்வாதி இருவருக்குமே இது முதல் படம் என்றாலும் நம்ப முடியாத அளவு இயல்பாக நடித்திருக்கிறார்கள். ஒரு இம்மி கூட மிகைப்படுத்தல் இல்லாத காதலையும் சோகத்தையும் திரையில் பார்ப்பது, நம்மை நாமே பார்த்துக் கொள்வதைப் போல புதிதாக உள்ளது.

தனத்தின் பெற்றோர், அந்த கிரிமினல் லாயர், அரசியல் அண்ணாச்சி, ஜெயத்தின் அண்ணி, குறிப்பாக அண்ணன் வேடத்தில் அசத்தியிருக்கும் தங்கசாமி என அனைவருமே நிஜ பாத்திரங்களாகவே வாழ்ந்துள்ளனர்.

கதை புதிதில்லை... 'காதல்' போன்ற படங்களில் பார்த்ததுதான் என்றாலும், தினம் இப்படி ஒரு கதை, சம்பவங்கள் நடந்து கொண்டுதானே உள்ளன. அப்படிப் பார்த்தால் ஆணுக்கும் பெண்ணுக்குமான காதல் என்பதே கூட திரும்பத் திரும்ப அரங்கேறிய நாடகம்தானே!

படத்தின் முக்கிய பலம் க்ளைமாக்ஸ். ஆனால் இன்னொரு பக்கம் இது சர்ச்சைக்குரியதும் கூட. பள்ளி வயதில் வரும் எல்லா காதலுமே மாறுதலுக்குட்பட்டது என்று சொல்ல முடியாதே. அந்தக் காதலின் தொடர்ச்சி அடுத்தக் கட்டத்துக்குப் போய், வாழ்க்கையில் இணைந்தவர்களை என்னவென்பது!

ராஜ் சுந்தரின் ஒளிப்பதிவு, மனு ரமேசனின் இசை என தொழில்நுட்ப ரீதியாகவும் இந்தப் படம் சோடை போகவில்லை. பின்னணி இசையில் மண்ணும் மனிதர்களின் மனமும் தெரிகிறது.

புதிய இயக்குநர்களில் தங்கசாமி நம்பிக்கை தரும் படைப்பாளியாகத் தெரிகிறார். வாழ்த்துகள்!

நடிப்பு: லகுபரன், ஸ்வாதி, தங்கசாமி, எலிசபெத்.
ஒளிப்பதிவு: ராஜ் சுந்தர்.
இசை: மனு ரமேசன்.
பிஆர்ஓ: நிகில்.
தயாரிப்பு: ஜே மகாலட்சுமி.
எழுத்து - இயக்கம்: கே எஸ் தங்கசாமி.

நன்றி விடுப்பு