தமிழ் மூத்த பிரசைகள் சங்கம் (நி. ச. வே) நடாத்திய பேரப்பிள்ளைகள் தினம் - 30-06-2012


படங்கள் கீழே – படப்பிடிப்பு ஞானி





அவுஸ்திரேலிய குடிசன மதிப்பீடு" கணக்கும் வழக்கும் - கானா பிரபா



தொண்ணூற்றி மூன்றாம் ஆண்டு வாக்கில் ஊரில் இருந்த சமயம், சகதோழன் ஒருவன் தனது மாமாவின் உதவியோடு அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதாகச் சொல்லியிருந்தான். அந்த நேரம் "ஏன்ரா உனக்குப் போக வேற இடம் கிடைக்கேல்லையே, வாத்தியார் சொன்னது மாதிரி பின்னடிக்கு மாடு மேய்க்கப் போறாயோ" என்று கூட்டமாகக் கேலி செய்ததும், "வந்தாண்டா பால்காரன்" என்று அன்றைய அண்ணாமலை காலத்தில் அவன் எங்களுக்குப் பலிகடா ஆனான். அப்போதெல்லாம் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து என்றால் பால்மாடுகளும், பண்ணையும் தான் என்ற நினைப்பு, எல்லாம் அங்கர் பால்மா விளம்பரம் செய்த சதி. ஆனால் எழுதிச் செல்லும் விதியின் கைகள் அவனை மேற்குலக நாடு ஒன்றுக்கும், கேலி செய்த நண்பர்களுள் தலையாய என்னை அடுத்த ஆண்டே அவுஸ்திரேலியாவுக்கு விஸா அனுப்ப வைத்துவிட்டது.


கிறிஸ்மஸ் தீவில் 130 பேர் உயிருடன் மீட்பு குடியேற்றவாசிகள் குறித்து பாராளுமன்றில் விவாதம்

Friday, 29 June 2012   கன்பேரா :  கிறிஸ்மஸ் தீவுக்கு அருகில் மூழ்கிய புகலிடக் கோரிக்கையாளர்களின் படகிலிருந்து 130 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைகளுக்காக  கிறிஸ்மஸ் தீவுக்கு  கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதேவேளை குடியேற்றவாசிகளின் சட்டவிரோத பிரவேசம் தொடர்பான  விவாதம் ஒன்றிற்கு அவுஸ்திரேலிய பாராளுமன்றம் தயாராகி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.குடியேற்றவாசிகளுக்கு புகலிடம் வழங்குவதா இல்லையா என்பதனை தீர்மானிக்கும் விசாரணைகளை அவுஸ்திரேலியாவின்  எல்லைக்கு வெளியில் விசாரணைக்கு உட்படுத்தும் சட்ட மூலம்  ஒன்றிற்கு கீழ்ச் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கைச் செய்திகள்

. 
திருமுறிகண்டியில் வேறு இடங்களில் குடியேற மறுத்த பொதுமக்கள் மீது நேற்றிரவு கடுமையான தாக்குதல் லொறிகளில் ஏற்றப்பட்டு மெனிக்பாம் அனுப்பப்பட்டனர்

அலட்சியப்படுத்தப்படும் சட்ட ஆட்சி

"வெளியேறு,வெளியேறு இராணுவமே வெளியேறு"

 “எங்கள் நிலம் எமக்கு வேண்டும்’ “வீட்டுக்கு செல்லவிடு  இராணுவமே வெளியேறு’ பதாகைகள் கோஷங்களுடன் திருமுறிகண்டியில் ஆர்ப்பாட்டம்

1380 பட்டதாரிகளுகளுக்கு வெள்ளியன்று நியமனம்

வவுனியா சிறைச்சாலையில் கைதிகளிடம் பணம் கேட்டுத் தாக்குதல்

சௌத்பார் கிராமத்தில் நிலப்பரப்பை தன்வசப்படுத்த இராணுவம் முயற்சி

ஆக்கிரமிப்புக்கு முடிவு கட்டும்வரை நில மீட்பு போராட்டம் தொடரும் திருமுறிகண்டியில் மாவை சூளுரை

வீதியால் சென்று கொண்டிருந்த பெண்ணின் தங்கச் சங்கிலியை அபகரித்த இருவர் கைது ஒருவர் இராணுவ வீரர் 
  
இராணுவம் முகாம் அமைக்கும் காணி குறித்து பொலிஸ் விசாரணை

 வட மாகாண சபை ஊதாரிப் பிள்ளையா?

வானொலி மாமா நா.மகேசனின் குறளில் குறும்பு 38 – நூல்மறப்பர்



ஞானா:        அப்பா,
       
  “ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
            காவலன் காவா னெனின்”

       
        எண்ட குறளக்கு உரிய பொருள்களைப் பாத்தனாங்கள் தானே. கொடுங்கோன்மை  எண்ட 56 வது அதிகாரத்திலை உள்ள 560 தாவது குறள். இந்தக் குறளிலை எவ்வளவோ கருத்துகள் பொதிஞ்சிருக்கு இல்லையே அப்பா?

அப்பா:        வேறை என்ன? அதுதானே இந்தக் குறளை வைச்சு இப்ப மூண்டு நாளாய்   உரையாடிக் கொண்டிருக்கிறம் ஞானா.

சுந்தரி:        குறளிலை குறம்புவிட வெளிக்கிட்ட இவள் பிள்ளை ஞானா இப்ப குறளிலை நல்லாய் மாட்டுப்பட்டுப் போனாள். இல்லையே அப்பா?

அப்பா:     அவள் மட்டுமில்லைச் சுந்தரி. நீரும், நானும் சேர்ந்துதான் சிக்கியிருக்கிறம்.

ஞானா:        இதிலை ஒரு சிக்கலும் இல்லை அப்பா. நல்ல விஷயங்களை அலசிறது நல்லது தானே. இந்தக் குறளிலை ஆபயன் குன்றிறதைப் பற்றிப் பாத்தாச்சு. அறுதொழிலோர்  ஆர் எண்டும் பாத்தாச்சு, இனி அவர்கள் நு}ல் மறப்பர் எண்டதைப் பற்றிச்  சொல்லுங்கோவன் பாப்பம்.

அப்பா:        இதிலை வந்து ஞானா இந்த அறுதொழிலேர் ஆர் எண்டதை நாங்கள் விளங்கிக் கொண்டம்தானே?

எந்திரமாலை 2012 8 July 12

.

அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தின் 'மாருதி' விருது

.
 தமிழ்முரசு வாசக அன்பர்களுக்கு வணக்கம், அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தின், உயர்விருதான 'மாருதி' விருதுக்குரிய விபரங்களை கீழ்க்காணும் இணைப்பில் தந்துள்ளோம்.  உங்களின் பரிந்துரைகளை ஆவலோடு எதிர்பார்க்கின்றோம்.  உங்கள் ஆதரவு என்றும் எமக்காகுக.
'மாருதி' விருதுக்குரிய பரிந்துரைப் படிவத்தை அச்செடுத்து - பூர்த்திசெய்து,
உங்கள் பரிந்துரையோடு குறித்த திகதிக்குள் அனுப்பிவைக்குமாறு
பணிவன்போடு வேண்டி நிற்கின்றோம்.
நன்றி.
அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தினர் 04-06-2012.

உலகச் செய்திகள்

தமிழ் சினிமா

சகுனி (வீடியோ இணைப்பு)

அரசியலை மையமாக வைத்து படம் வந்து நாட்களாகி விட்டன. அப்படியே வந்தாலும் அவற்றில் பிரச்சார நெடி இருக்கும்.
ஆனால் கார்த்தி நடிப்பில் வந்துள்ள சகுனி, அந்தக் குறையைத் தீர்த்து வைத்துள்ளது. அரசியலை விமர்சித்த மாதிரியும் ஆயிற்று... பொழுதுபோக்குக்கு பொழுதுபோக்குமாயிற்று!
கதை ரொம்ப சிம்பிள். லாஜிக் கூட ஒப்புக் கொள்ளக்கூடியது தான்... நடைமுறைக்கு சாத்தியமா என்ற கேள்வி இருந்தாலும், இப்படியெல்லாம் நடந்தாகூட நல்லாதான் இருக்கும் என்றே தோன்றுகிறது.
காரைக்குடியில் உள்ள கார்த்தியின் ஒரே சொத்து, ஒரு பூர்வீக வீடு. அதையும் ரயில்வே திட்டத்துக்காக இடிக்கப் பார்க்கிறது அரசு.
இந்த வீட்டை எப்படியாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்னை வரும் கார்த்தி, அமைச்சரிடம் மனு கொடுக்க, அது வழக்கம்போல 'போக வேண்டிய' இடத்துக்குப் போகிறது!
முதலமைச்சரிடம் போனால் நியாயம் கிடைக்கும் என்று போகிறார்... அங்கே உருவாகிறது பகை.
தன் வீட்டை மீட்க வேண்டுமானால் முதலில் முதல்வரை வீழ்த்த வேண்டும்... அதற்கான அரசியல் ஆட்டத்தை சகுனியின் சாமர்த்தியத்தோடும், கண்ணனின் மனிதாபிமானத்தோடும் ஆடுகிறார் கார்த்தி. ஆட்டத்தில் அபாரமாய் வெல்லும் அவர் கடைசியில் அரசியல்வாதியாகிறாரா? என்பது கிளைமாக்ஸ்.
விடலைத்தனமான லுக், தெனாவட்டான பேச்சு, எதிலும் விளையாட்டுத்தனம் என்றே இதுவரை கார்த்தியின் கேரக்டர்கள் அமைந்திருந்தன. முதல்முறையாக இதில் பக்குவமான, புத்திசாலித்தனமான ஆட்டம். அதை அவர் ஆடும் விதம் ரசிக்க வைக்கிறது.
குறிப்பாக இட்லிக்கார ரமணி ஆச்சியை மேயராக்குவதும், பீடி சாமியாரை நெல்லி சாமியாராக மாற்றும் விதமும், வீரத்தமிழன் முன்னேற்றக் கழக தலைவரை முதல்வராக்கத் தரும் ஐடியாக்களும் சுவாரஸ்யமானவை.
முகத்திலும்கூட ஒரு மெச்சூரிட்டி வந்திருக்கிறது கார்த்திக்கு. அவர் போடும் அரசியல் மாஸ்டர் பிளான்களை நம்ப வைப்பது அந்த மெச்சூரிட்டிதான்!
முதல் பாதியில் சந்தானத்தைப் பயன்படுத்திக் கொண்ட விதம், பின்பாதியில் அவருக்கான காட்சிகளை குறைத்து கார்த்தியை முன்னிலைப்படுத்தியிருப்பதும் இயக்குநரின் சாமர்த்தியத்தைக் காட்டுகிறது. நடனம், சண்டை என கிடைத்த வாய்ப்பிலெல்லாம் அழகாக ஸ்கோர் செய்திருக்கிறார் கார்த்தி!
சந்தானமும் கார்த்தியும் ரஜினி கமலாக அறிமுகமாகிறார்கள். சந்தானத்திடம், தான் சென்னைக்கு வந்த கதையை கார்த்தி சொல்லும் விதம் வித்தியாசம்.. நச்சென்று பதிகிறது.
என்ன... கதாநாயகியான ப்ரணிதாவின் பாத்திரம்தான் சுத்தமாகப் பதியவில்லை. உடன் படம் பார்த்த நண்பரின் கமெண்ட்தான் இதற்கு பொருத்தம்: "ஹீரோயின் அழகா இருக்காங்களா இல்லையான்னு கவனிக்கிறதுக்குள்ள அவங்க ரோல் முடிஞ்சு போச்சேண்ணே!"
பீடி சாமியாராக வரும் நாசரைப் பார்க்கும் போதே, சிரிப்பு எட்டிப் பார்க்கிறது. ஆன்மீகத்தை மார்க்கெடிங் செய்து அவர் சேர்த்த ரூ.1000 கோடியை தேர்தலில் இறைக்க வைத்து ஆட்சியைப் பிடிப்பது அட போட வைக்கிறது!
மோசமான முதல்வராக பிரகாஷ்ராஜ். நிஜ அரசியல் தலைவர்களின் தகிடு தத்தங்களை பிரகாஷ்ராஜ் மூலம் புட்டுப் புட்டு வைக்கிறார்கள். பாலம் கட்டுவதன் பின்னணி, பதவியை பங்கிடும் விதம் என எதிலும் குடும்பத்துக்குப் போகத்தான் மற்றவர்களுக்கு எனும் அந்தத் தலைவர் யாரை நினைவுபடுத்த என்பது தெரியாமல் இல்லை!
கோட்டா சீனிவாசராவ் வழக்கம்போல அருமை. இட்லிக்கார ஆச்சி ராதிகா, மேயராக பதவி ஏற்க ஒவ்வொரு படிக்கட்டில் கால் வைக்கும்போதும், அவரது கடந்த காலம் நினைவில் வந்துபோவது சூப்பர்.
எல்லா அரசியல் தலைவரும் பதவி ஏற்கும்போதும், மோசமான உத்தரவுகளில் கையெழுத்திடும்போதும் இப்படி ப்ளாஷ்பேக் கொஞ்சம் எட்டிப்பார்த்தால், அவர்களின் மனசாட்சி சாகாமலாவது இருக்கும்!
ரசிக்கும்படி காட்சிகள் நிறைய இருந்தாலும், அவற்றை ஒரேயடியாகத் திணித்து விட்டது போன்ற உணர்வு. நீளம் வேறு அதிகம். கொஞ்சம் கத்திரி போட்டு ஷார்ப்பாக்கி இருக்கலாம். கிரண் இறந்துவிட்டார் என்ற செய்தி வெளியாகும்போதே, அடுத்து என்ன நடக்கும் என்பது தெரிந்துவிடுகிறது.
ஜிவி பிரகாஷ் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கலாம். மனசெல்லாம் பாடலை படமாக்கியிருக்கும் விதம் ஜிலீர்... பிஜி முத்தையாவுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்.
முதல் படத்தையே வித்தியாசமாகத் தரவேண்டும் என்ற முனைப்பில், அரசியல் என்ற ஒரு பெரிய கேன்வாஸுக்குள் விளையாடியிருக்கிறார் இயக்குநர் சங்கர் தயாள். சின்னச்சின்ன சறுக்கல்கள் இருந்தாலும், வெற்றி இலக்கைத் தொட்டுவிட்டார்.
நடிப்பு: கார்த்தி, சந்தானம், ப்ரணிதா, பிரகாஷ் ராஜ், ராதிகா, கிரண், கோட்டா சீனிவாசராவ், மனோபாலா, நாசர்.
இசை: ஜீவி பிரகாஷ் குமார்.
ஒளிப்பதிவு: பிஜி முத்தையா.
பிஆர்ஓ: ஜான்சன்.
தயாரிப்பு: ஸ்டுடியோ கிரீன்.
இயக்கம்: சங்கர் தயாள்.

 http://www.youtube.com/watch?feature=player_embedded&v=DIu6kf2EaLM

 http://www.youtube.com/watch?feature=player_embedded&v=DIu6kf2EaLM

 http://www.youtube.com/watch?v=GQAI2W42Qmo&feature=player_embedded

நன்றி விடுப்பு