.
இலங்கையில் கல்வித்தேவை நாடி
நிற்கும் பாடசாலைகளுக்கு உதவி செய்யும் நோக்கோடு நிதி சேகரிக்கும் " இளைய
நிலா பொழிகிறதே" என்கின்ற இசை நிகழ்ச்சியை தரிசனம் நிறுவனம் 24. 9. 2022
சனிக்கிழமை சிட்னி துர்க்கை அம்மன் மண்டபத்தில் வெற்றிகரமாக நடத்தி
முடித்திருந்தனர்.
இரண்டாவது தடவையாக இளையநிலா
பொழிகிறதே நிகழ்ச்சியை அவினாஷுடன் இணைந்து தொகுத்து வழங்கும்
வாய்ப்பு எனக்கு கிடைத்திருந்தது. நிகழ்ச்சிக்கான முன் ஆயத்தங்கள் ,
ஒழுங்கமைப்புகள் ,
திட்டமிடல்,பயிற்ச்சிகள், திட்டமிடட
விடையங்களை மேடையிலும் மண்டபத்திலும் நடைமுறைப்படுத்திய விதம், நிகழ்ச்சி , நிகழ்ச்சிக்கு
வருகை தந்தவர்களின் பாராட்டுக்கள் அனைத்தையும் அருகில் இருந்து பார்த்தவன் என்ற
வகையில் இளையோர்களின் பெரும் பங்களிப்போடு நடந்தேறிய இந்த இசை நிகழ்ச்சியைப்பற்றி
எழுதாமல் இருப்பது மாபெரும் குற்றமாக கருதுகிறேன்.
கேஷிகா அமிர்தலிங்கம் 15 வயது சிறுமியாக
இலங்கை தொலைக்காட்சி ஒன்றின் இசைபோட்டிக்கு பங்குபெற்ற அவுஸ்திரேலியாவில் இருந்து
சென்றபோது அவரது பெற்றோர்கள் மலையகதில் பின்தங்கிய பிரதிதேசங்களுக்கு
கூட்டிச்சென்று காட்டிய போது கேஷிகாவின் மனதில் தோன்றிய எண்ணக்கருதான் தரிசனம் .
தரிசனத்தினுடைய நோக்கத்தை மிக சிறப்பாக கடடமைத்திருந்தார் கேஷிகா . தரிசனத்தின்
நோக்கமானது இலங்கையில் கல்வித்தேவை நாடி நிற்கும்
பாடசாலைகளுக்கு உதவி செய்வதோடு அவுஸ்ரேலிய இளம் கலைஞர்களுக்கு மேடைஅமைத்துக்கொடுத்து
அவர்களின் திறமைகளை மக்கள் முன் கொண்டு சென்று அதில்
இருந்து கிடைக்கும் பணத்தை வைத்து இலங்கையில்
உள்ள பாடசாலைகளுக்கு உதவி செய்வது . இதன் அடிப்படையில் கடந்த ஆறு வருடங்களாக வெற்றிகரமாக
பல இளம் மற்றும் சின்னஞ்சிறு குழந்தை கலைஞர்களை ஒன்றிணைத்து அவர்களுடைய அற்பணிப்பையும் திறமையும் மக்கள் முன் கொண்டுசென்று அதனூடாக கிடைத்த பணத்தை
வைத்து பல செயல் திட்டங்களை செய்திருந்தனர்.