மரண அறிவித்தல்



திரு ராஜிவ் பற்குணராஜா

யாழ்ப்பாணம் அரியலையயை பிறப்பிடமாகவும் ஆஸ்திரேலியா சிட்னி  ஐ வதிவிடமாகக்  கொண்ட Rajeev Patkunarajah   6.10.16 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம்சென்ற Patkunarajah, Lalitha (சிட்னி)   தம்பதிகளின் அன்பு மகனும் கல்யாணியின்  (சிட்னி) பாசமிகு சகோதரனும் நிரோஷன் ஞானசேகரத்தின்  (சிட்னி) நட்பு மிகு  மைத்துனனும் Ashwathi யின்  அன்பு  மாமனும்  ஆவார்


ஹரிநேசன், Dr சித்ரா  (சிட்னி,  ஆஸ்திரேலியா), Janaharajah  (குட்டி), யசோதா  (நோர்வே) ஆகியோரின் அன்பு மருமகனும் Dr Trishuli , Dr Nimalan   (சிட்னி,  ஆஸ்திரேலியா )  ஆகியோரும் மைத்துனரும் ஆவார்.



பார்வைக்கு
திகதி:ஞாயிறு கிழமை 09/10/2016, 10:00 மு.ப — 02:00 பி.ப
முகவரி:
Liberty Funerals, 101 South St, Granville NSW 2142


கிரியை
திகதி:திங்கள் கிழமை 10/10/2016, 10:00 மு.ப — 01:00 பி.ப
முகவரி:163 Wentworth Ave, Wentworthville NSW 2145
தகனம்
திகதி:திங்கள் கிழமை 10/10/2016, 01:00 பி.ப — 03:00 பி.ப

முகவரி:East Chapel, Rookwood Cemetery, Hawthorne Ave, Rookwood NSW 2141



தொடர்புகளுக்கு
Niroshan Gnanasegaram
Home: +61 298 633 591 Mob:+61 416 450 445

Dr Harinesan Chithira
Mob:+61 439 474 804

மகிழ்ந்திடுவார் ! எம் .ஜெயராமசர்மா ... மெல்பேண் .

.



   வீரமொடு கல்விசெல்வம் விட்டுவிட்டால் வாழ்க்கையில்லை 
    பார்மீது வாழுதற்கு பலருக்கும் தேவையிவை 
    ஊரெல்லாம் யாவருமே கொண்டாடி மகிழுமிந்த
    உயர்ந்த நவராத்திரியை உணர்வுடனே கடைப்பிடிப்போம் !

    வீரமொடு கல்விசெல்வம் வீணாகிப் போவதனை
    பாரினிலே பார்க்கையிலே பதைபதைப்பே வருகிறது
    ஊருக்கும் உதவாமல் உழைத்தவர்க்கும் சேராமல்
    சேராதவிடம் சேர்ந்து செயலொடுந்து போகிறதே !

    முச்செல்வம் பெறுவதற்கு முத்தேவிதனைத் துதிக்க
    இத்தரையில் நவராத்ரி இப்போது நடக்கிறது 
    அத்தேவி அனைவரையும் அகமார வேண்டிநாம்
    சித்தமுடன் துதித்துநின்று சிந்தனையைத் திருத்திடுவோம் !

நான் ரசித்த சிட்னி கீதவாணி விருதுகள் 2016 - செ.பாஸ்கரன்


.
.யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்க சிட்னி கிளை நடாத்திய கீதவாணி விருதுகள் 2016 நிகழ்வு சனிக்கிழமை 08.10 2016 மாலை    6 மணிக்கு Banks town Sports Club    மண்டபத்தில் மண்டபம் நிறைந்த மக்களோடு  இடம் பெற்றது .   கடந்த வருடங்கள் போலவே இம்முறையும் உள்ளூர் கலைஞர்களை ஊக்குவிக்குமுகமாக சிட்னியின்  Eastern Empire     இசைக்குழுவுடன்  பாடகர் பாடகிகளுக்கான போட்டி நிகழ்வு  நான்கு பிரிவாக இடம்பெற்றது. 

              


சிட்னி அம்மனின் ஆதார பீடம் நாட்டல் விழா 16/10/2016




Sri Venkateswara Temple - BRAHMOTSAVAM - 02/10/2016 to 12/10/2016




சிட்னி முருகன் ஆலயத்தில் நவராத்திரி விழா

.
நான்காம் நாள் விழா

நட்சத்திர இசை, நடனத் திருவிழா! 15th October 2016

.

அவுஸ்திரேலியாவில் முதன் முறையாகத் தமிழ்த் திரையுலகின் முன்னணிக் கதாநாயகன் சிவகார்த்திகேயன்,கீர்த்தி சுரேஷ் மற்றும் பாடகர் ஸ்ரீனிவாஸ் ,இராஜேஷ் வைத்தியா,ஸ்டீபன்ம.க.ப ஆனந்த்பாவனா,சுப்பர் சிங்கர் 5இறுதிச்சுற்றுப் போட்டியாளர்கள்,பிரியங்காநிருஜன்ட்றீம் டீம் நடனக்குழு,கலந்துகொள்ளும் இவ்வாண்டின் மாபெரும் நட்சத்திர இசைநடனத் திருவிழா!!15th October 2016 | Sydney Olympic Park Sports Centre | Olympic Boulevard | Sydney Olympic Park NSW |

For tickets
Sydney Show-0478 809 238


படித்தோம் சொல்கின்றோம் - முருகபூபதி

.
செய்தி  மடலுக்குள்  நீலாவணனின்   இலக்கியவாசம்
கன்பரா  தமிழ் மூத்த பிரஜைகளின்  காவோலை

 எனக்கு  அப்பொழுது  ஐந்துவயதிருக்கும்.  எங்கள்  வீட்டிலிருந்து பார்த்தால்  கடற்கரை  தெரியும்.  மாலைவேளையில்  தாத்தாவும் நானும்  ஓட்டப்பந்தயத்தில்  ஈடுபடுவோம்.  வீட்டுக்கு  முன்னால் இருக்கும்  மின்கம்பத்தினைத் தொட்டுவிட்டு  கடலை  நோக்கி ஓடுவோம்.
கடற்கரையோரத்திலும்  ஒரு  மின்கம்பம்  இருக்கிறது. அதனைத்தொட்டுவிட்டு  திரும்பி  ஓடிவந்து  வீட்டருகில்  நிற்கும் மின்கம்பத்தை  தொடவேண்டும்.   நான்  வென்றால்  தாத்தா  அருகிலிருக்கும்  மம்மது  கடையில் சீனிபோலை ( இனிப்பு)  வாங்கித்தருவார்.  அதன்  விலை  ஒரு சதம்.
தாத்தா  வென்றால்  நான்  அவருக்கு  கால்  பிடித்துவிடவேண்டும்.
ஆனால்,   தாத்தா  ஒருநாளும்  வென்றதில்லை.  எனக்கு  தினமும் சீனிபோலை  கிடைத்தது.  அதற்காகவே  அவரது காலைப்பிடித்துவிடுவேன்.   தாத்தா  முன்னர் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில்  பொலிஸ் சார்ஜன்டாக இருந்தவர். அதனால் அவரை நாம் பொலிஸ் தாத்தா என்றுதான் அழைப்போம்.
இன்றும்  எங்கள்  ஊரில்  என்னைக்காணும்  - எமது குடும்பத்தைத்தெரிந்தவர்கள் - முதியவர்கள் - பொலிஸாரின்  பேரன் என்றுதான் விளிப்பார்கள்.


இலங்கைச் செய்திகள்


கோத்தபாய உட்பட எழுவருக்கெதிரான விசாரணை இன்று

கோத்தபாயவுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி

யோசித ராஜபக்ஷ  நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்

மோடியை சந்தித்தார் ரணில்

 தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 110 ரூபாவால் அதிகரிக்க இணக்கம்

 “எட்கா” ஒப்பந்தம் இவ்வருட இறுதிக்குள் கைச்சாத்திடப்படும் ; பிரதமர்

ஜனாதிபதிக்கு விசேட இராப்போசன விருந்துபசாரம்


நாற்காலிக்கு கொம்பு உண்டு! - எஸ்.ராமகிருஷ்ணன்

.

அதிகாரத்தின் இயல்பே அலட்சியம் செய்வதுதானா ?’ என ஒரு நண்பர் கேட்டார்.
அவர் அரசாங்க அலுவலகத்தில் வேலை செய்பவர். உயர் அதிகாரிகளின் குண விசித்திரங்களைப் பற்றி அடிக்கடி புலம்பிக்கொண்டே இருப்பார். அரசாங்க அலுவலகத்தில் நடைபெறும் குளறுபடிகளைப் பற்றி அவர் சொல்லும்போது அதிர்ச்சியாகவே இருக்கும்.
அன்று அவர் கேட்ட கேள்வி எளிதானதாக இல்லை. நான் அவரிடம் ஒரு சம்பவத்தை விவரித்தேன்.
ஜார் மன்னர் ஆட்சிக் காலத்தில் ரஷ்யாவில் ஒரு ராணுவ அதிகாரி இருந்தார். அவர் யாரையும் மதிக்கவே மாட்டார். ஊழியர்களை அலட்சியமாக நடத்துவார். இந்த அதிகாரியின் கடுமையைக் கண்டு அனைவரும் பயந்தார்கள். தன்னுடைய எல்லையற்ற அதிகாரத்தை நினைத்து, அந்த ராணுவ அதிகாரி பெருமை கொண்டிருந்தார்.
இந்த அதிகாரிக்கு காரின் என்ற பியூன் மட்டுமே விருப்பமான நபராக இருந்தார். காரினை அலுவலகத்தில் எவருக்குமே பிடிக்காது.
காரின் ஒய்வுபெறும் நாள் வந்தது. அதற்கான பிரிவு உபச்சார விருந்தில் கலந்துகொள்ளும்படி அலுவலக நண்பர்களை அழைத்தார் காரின். எவருமே வரவில்லை. ராணுவ அதிகாரியும் கூட வரவில்லை. கடைசியாக ஒரே ஒரு நண்பர் மட்டும் வந்திருந்தார்.

ஆன்மீக நூல்கள் வெளியீட்டு விழா

.
‘Lord of Dance’,  ‘திருநாவுக்கரசர் போற்றிய திருவதிகை’
ஆன்மீக நூல்கள் வெளியீட்டு விழா

செப்டம்பர் 25, 2016 அன்று மலேசியா திருமுருகன் திருவாக்குப் பீடம் தவத்திரு பாலயோகி சுவாமிகள் அருளாசிகளுடன் இரண்டு ஆன்மீக நூல்கள் சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் வெளியிடப்பட்டன. இந்நூல்களை திருபீடம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
முனைவர் சந்திரிகா சுப்ரமண்யன் அவர்கள் எழுதிய ‘LORD OF DANCE’  என்ற நூலினையும்,  சிவஞானச்சுடர் அன்பு ஜெயா அவர்கள் எழுதிய திருநாவுக்கரசர் போற்றிய திருவதிகை என்ற நூலினையும் அண்ணமாலைப் பல்கலைக் கழக துணைவேந்தர் பேராசிரியர் மணியன் அவர்கள் வெளியிட ஆகமவாரிதி முனைவர் சபாரத்தினம் சிவாசாரியார் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.
‘LORD OF DANCE’  என்ற நூல்,  இதன் ஆசிரியர் தமிழில் தில்லை என்னும் திருத்தலம் என்ற பெயரில் எழுதிய நூலின் ஆங்கில வடிவமாகும். இது அனைவரும் படித்திடும் வண்ணம் மூர்த்தி, தலம், தீர்த்தம் மும்மைச் சிறப்புடைய தில்லைத் திருத்தலத்தின் பெருமையையும்  ஆடல்வல்லானின் ஆடல் தத்துவத்தையும் விஞ்ஞான உலகத்திற்கு விஞ்ஞானத்தோடு ஒட்டி வருகின்ற வகையில் எழுதப்பட்டுள்ளது.
அனைத்து பதிவுகளையும் பார்க்க OLD POST டைஅழுத்துங்கள்



மரண கானா விஜியின் நேர்காணல்

.
டங்காமாரி ஊதாரி.... என்ற பாடலைப் பாடிய கானா பாடகர் 
மரண கானா விஜியின் நேர்காணல். மெரீனா கடற்கரை உங்களுக்கு தங்கமாக தெரியும்  ஆனா எங்களுக்கு ? 





குழந்தை ம.சண்முகலிங்கத்தின் போர்க்கால உளவியல் நாடகங்கள்ஓர் பார்வை

.

ஈழத்துத் தமிழ் நவீன அரங்க வரலாற்றில் குழந்தை ம.சண்முகலிங்கம் (1931.11.15)அவர்கள் நாடகத்துறையினுள் நுழைந்த அன்றிலிருந்து(1950) இன்று வரைக்குமான அவரது பங்களிப்பை அறிவோமாகயிருந்தால். அதாவது நடிகராக நாடகாசிரியராக, நெறியாளராக, தயாரிப்பாளராக, ஆய்வாளராக, நாடகப்போதானாசிரியராக, நாடகக் களப்பயிற்சியாளராக, விமர்சகராக, உலக நாடக வராலாற்றாசிரியராக, மொழிபெயர்ப்பாளராக, நாடக அரங்கக் கல்லூரி நிறுவுனராக, கல்விசார் அரங்கினை பிரக்ஞை பூர்வமாக உருவாக்கியவர் என பல்பரிமாணமுடையவராக பல் துறை ஆற்றல் கொண்டவராக விளங்குகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.“குழந்தை ம.சண்முகலிங்கம்அவர்கள்;  நாடகத்துறைக்காற்றி வரும் பணிக்காக கிழக்குப் பல்கலைக்கழகம் கலாநிதி (முனைவர்) பட்டம் வழங்கியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதாவுக்கு என்ன ஆயிற்று?

.


யாரைச் சந்தித்தாலும், “ஜெயலலிதாவுக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்கிறார்கள். அவர்களின் கேள்விக்குப் பின் இருப்பது வெறும் பரபரப்பை நாடும் ஆர்வம் மட்டுமே இல்லை. நாம் உதட்டைப் பிதுக்குகையில், அவர்கள் தமக்குத் தெரிந்தவற்றை நீளமாகச் சொல்கிறார்கள். துண்டு துண்டான தகவல்கள். பல்வேறு வகையிலான யூகங்கள். முன்னுக்குப் பின் முரணான நம்பிக்கைகள். கவலைகள். அக்கறைகள். ஆற்றாமைகள். தம்மைக் காட்டிலும் ஊடகவியலாளர்களுக்குக் கூடுதலான தகவல்கள் தெரிந்திருக்கும் என்று பொதுஜனம் நம்புவதில் பிழையில்லை. இது பிறழ்காலம். ஊடகவியலாளர்களிடமிருந்து பொதுஜனம் செய்தி தெரிந்துகொண்ட காலம் போய், சமூக வலைதளங்களிலிருந்து ஊடகவியலாளர்கள் செய்தி தெரிந்துகொள்ள நேரும் காலம். குழப்பங்களுக்கான மையம் தமிழக அரசின் செயல்பாடு.
சென்னை கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் செப்டம்பர் 22 இரவு ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். மறுநாள் காலை அந்தச் சாலையை நெருங்கவே முடியவில்லை. எங்கும் போலீஸ்காரர்கள். பாதைகளை மறித்திருந்தார்கள். “சாதாரணக் காய்ச்சல். இன்றே முதல்வர் வீடு திரும்பிவிடுவார்” என்பதே அரசுத் தரப்பு சொல்ல முயன்ற செய்தி. அதற்கு ஏன் இவ்வளவு களேபரச் சூழலை உண்டாக்க வேண்டும்? அங்கிருந்த கடைக்கார முதியவர் சொன்னார், “முப்பத்திரண்டு வருஷம் முன்னால நகர்ந்த மாதிரி இருக்கு. யப்பா என்னா கூட்டம்? பட்டிதொட்டி ஜனம் அத்தனையும் அப்போ இங்கெ வந்து கெடந்துச்சு.”

உலகச் செய்திகள்


ஐ.எஸ். தலைவர் உணவில் விஷம் ;  இரகசிய இடத்தில் வைத்திய சிகிச்சை

ஜெயலலிதாவுக்கு செயற்கை சுவாசம் ; மருத்துவமனை அறிக்கையால் பரபரப்பு

 ‘ஜனாதிபதி தான் என் அப்பா’ : பாலியல் தொழிலாளியின் மகன் சமூகவலைத்தளத்தில் உதவி கோரல்

ஜெயலலிதா உடல் நிலை : உயர் நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை

ஐ.நா வின் புதிய பொதுச் செயலாளர் நாயகம் தெரிவு

ரோமன் கத்தோலிக்க திருச்சபையும் ,அங்கிலிகன் திருச்சபையும் இணைகின்றனர்



எழுத்தறிவித்தவன் - இரா சத்திக்கண்ணன்

.

மரபணுக்களில் 
மனிதத்தையும் 

ஐம்பூதங்களில் 
இயற்கையமுதையும் 

அன்பில்
அமைதியில்
அழகையும் 

தாய்மையில்
தியாகத்தையும் 

தமிழில்
கவிதையையும் 
வாழ்க்கையையும் 

எழுதியவன்
எழுத்தறிவித்தவன்!

தமிழ் சினிமா

எம்.எஸ்.தோனி தி அண்ட் டோல்ட் ஸ்டோரி

இந்திய சினிமா மட்டுமில்லை, உலக கிரிக்கெட் ரசிகர்களே எதிர்ப்பார்த்து காத்திருந்த படம் எம்.எஸ்.தோனி தி அண்ட் டோல்ட் ஸ்டோரி. ஒரு சாதரண ரயில்வே டிக்கெட் கலேக்ட்டர் எப்படி இந்தியாவே தலையில் தூக்கி கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் ஆனார், என்பதை நீரஜ் பாண்டே இயக்கத்தில், தோனியாக சுஷாந்த் நடிக்க இன்று உலகம் முழுவதும் இந்த படம் வெளிவந்துள்ளது.

கதைக்களம்

தோனி இன்று நமக்கு ஒரு சக்சஸ்புல் மனிதராக தான் தெரியும், பல கோப்பைகளை இந்தியாவிற்காக வென்றவர் என பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்.
ஆனால், இந்த இடத்தை அவர் அடைய பட்ட கஷ்டங்கள் சாதரணம் இல்லை, தோனியின் வாழ்க்கையில் அவர் எத்தனை கஷ்டப்பட்டு இந்த இடத்தை அடைந்தார் என்பதையும், அவர் வாழ்க்கையில் நடந்த இன்பம், துன்பம், காதல், மோதல் என நமக்கு தெரியாத பல விஷயங்களை மிகவும் நேர்த்தியாக கூறியிருக்கும் படம் தான் இந்த எம்.எஸ்.தோனி தி அண்ட் டோல்ட் ஸ்டோரி.

படத்தை பற்றிய அலசல்

தோனி கிரிக்கெட் உலகிற்கு எப்படி வருகிறார் முதல் உலக கோப்பையை எப்படி வெல்கிறார் என்பது வரை உள்ளது. சுஷாந்த் படம் முடிந்தவுடன் திரையரங்கமே எழுந்து கைத்தட்டுகின்றது, அவர் நடிப்பிற்கு இதுவே ஒரு சான்று.
தோனியின் வாழ்க்கையில் நாம் பார்க்காத சில சோகப்பக்கங்களை நீரஜ் மிக அழகாக காட்டியுள்ளார், சாதரண குடும்பத்தில் பிறந்து சரித்திர நாயகன் ஆகத்துடிக்கும் ஒரு இளைஞன் வாழ்க்கையில் வறுமையால் எந்த பக்கம் செல்வது என்று தெரியாமல் சுஷாந்த் தோனியாக வாழ்ந்து இருக்கிறார்.
அதிலும் நம் பாதையை நாம் தான் தீர்மானிக்கவேண்டும், வாழ்க்கை முழுவதும் பவுன்சர் வந்துக்கொண்டே தான் இருக்கும், நாம் தான் குனிந்து செல்ல வேண்டும் என்பது போன்ற வசனங்கள் ரசிக்க வைக்கின்றது. இடைவேளையில் தோனி தன் வாழ்க்கையை தீர்மாணிக்கின்றார்.
அதன்பிறகு அவர் வாழ்க்கையில் நாம் அறியாத ஒரு காதல், சாக்‌ஷிக்கு முன் வரும் காதல், அதன் சோகமான முடிவு என பல சர்ப்ரைஸ் ரசிகர்களுக்கு உள்ளது. அதிலும் தோனி எப்படி இத்தனை பொறுமையாக இருக்கிறார் என்பதன் விளக்கமும் காட்சிகளாகவே காட்டப்பட்டுள்ளது.
யார் முன்பும் தோனி அழுகமாட்டார் என்பதையும் காட்டியவிதம் சூப்பர், இசை, ஒளிப்பதிவு என அனைத்திலும் சிக்ஸர் தான், அப்படியே Cg வேலையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம், யுவராஜ், கம்பீர், சேவாக் ஆகியோரின் நட்பு குறித்து காட்டியவிதம் தற்போதாவது தெரிந்திருக்கும் ரசிகர்களுக்கு நாம் எண்ணியது எல்லாம் பொய் என்று.
படத்தின் கிளைமேக்ஸ் அனைவரும் அறிந்தது தான், உலகமே பார்த்தது தான், ஆனால், கொஞ்சம் கூட அந்த சந்தோஷம் குறையவில்லை, அத்தனை சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கின்றார் ரசிகர்கள்.

க்ளாப்ஸ்

சுஷாந்த் மற்றும் படத்தில் நடித்தவர்களின் அனைவரின் நடிப்பு.
ரசிகர்கள் பலரும் அறியாத பல தகவல்களை காட்டிய விதம்.
படத்தின் வசனம். கிளைமேக்ஸ் காட்சிகள்.

பல்ப்ஸ்

படத்தின் நீளம் மட்டுமே, கிரிக்கெட் அறியாத ரசிகர்களுக்கு கொஞ்சம் பொறுமையை சோதிக்கும்
மொத்தத்தில் சாதாரண மனிதன் சரித்திர நாயகன் ஆனதை நாம் அனைவரும் கொண்டாடியே தீர வேண்டும்.

Cast:
Sushant Singh Rajput     நன்றி cineulagam