மரண அறிவித்தல்

.
                                       மூத்த எழுத்தாளர் காவலூர் ராஜதுரை காலமானார்

 
தோற்றம் - 13.10. 1931      - மறைவு 14.10.2014

மரியாம்பிள்ளை டேவிட் (காவலூர்) ராஜதுரை (வசீகரா விளம்பர நிறுவனத்தின் நிறுவனர்)14.10.2014 அன்று சிட்னியில் காலமானார்

Mariampillai David (Kavaloor) Rajadurai, Founder of Vashicara Advertising passed away on 14 October 2014 in Sydney, Australia. Beloved husband of Grace Kanagamalar (Sydney) loving father of Abeyan, Naveenan, Vaseekaran, Jordan Susilan and Deemathi Percival, loving brother-in-law of late Edward and Winfred Thurairajasingam, late Thangamalar and late  Ambigapathy, Ruth Packiamalar and Walter Rajasooriar, late Navaratnam Muthiah, late Kulamany and Anton Rajasingam (Rajasingham Industries ), Ranjithamalar and Christy Manoharan, Jeevamalar and Sri Candappa, loving father-in-law of Maureen Dushyanthy, Matthew Percival, loving grandfather of Velanthi Aadharshana and Bernard Soertsz, Jonathan Janahan, Angeline Nitharshana, Karthika Charmi, Jordina Gracy and Soraya Brooke, Rachel Vivekana, Carissa Saathana, Korban Sukunan, Shara Eliza Iniyal and Anika Vanam. 

Viewing on 20 Monday October 2014 at Redgum Function Centre, 2 Lane St, Wentwrothville, NSW, Australia from 6-8 pm. 

Cremation on 21 Tuesday October 2014 at Rookwood Crematorium Lidcombe, NSW, Australia at 11.30 

Contact Vasee +61499959909 (vasee2208@hotmail.com) Sydney mobile or Naveenan +61408684519 (edilbert@hotmail.com) Sydney mobile. 

என் காத்திருப்பு உனக்கானதே..!

.

ஒவ்வொரு இரவும் பகலும்
உன் நினைவோடு வாழ்கிறேன்
உனது காதல் உனது ஸ்பரிசம்
உன் அரவணைப்பு ஒன்றிற்காகவே
தனிமையில் ஏங்கும்
ஒருத்தியாகவே வாழ்கின்றேன்
உன்னோடு என் முதல் சந்திப்பில்
என் விருப்பத்தை தெரிவித்தபோது
ஏனோ தெரியவில்லை
என்னை வெறுத்து ஒதுக்கினாய்
என் காத்திருப்பு உனக்கானதே
என்று உருகி நின்றேன்
என் மரணம் வரை உனக்காக
காத்திருப்பாயா என்றாய்
உனக்காக காத்திருப்பதை விட
என் மரணம் எனக்கு சுமையானதல்ல
உனக்காக ஏங்கித் தொலைக்கும்
குழந்தையுள்ளம் கொண்டதே எனதுள்ளம்

தமிழ்முரசு வாசகர்களுக்கு எமது தீபாவளி வாழ்த்துக்கள் 22 . 10 .2014

.
 தமிழ்முரசு வாசகர்கள்  அனைவருக்கும்  இனிய தீபாவளி நல்  வாழ்த்துக்கள்! 22.10.2014


முருகன் ஆலயத்தில் தீபாவளி நிகழ்வுகள்

சிட்னியில் சங்கத் தமிழ் மாநாடு 2014 - --- அன்பு ஜெயா

.



 சிட்னி தமிழ் இலக்கியக் கலை மன்றத்தினர் அக்டோபர் 101112 தேதிகளில் சங்கத் தமிழ் மாநாட்டினை வெகு சிறப்பாக நடத்தினர்.

முதல் நாள் நிகழ்வு சிட்னி துர்க்கை அம்மன் வளாகத்தில் தமிழர் மண்டபத்திற்கு அருகில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, தாள வாத்தியத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமாகியது. திருமதி கனகாம்பிகை ஜெகநாதன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். மன்றத் தலைவர் திரு மகேந்திரன் இரத்தினம் தலைமையுரையாற்றினார்.

இந்த மாநாட்டில் இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த பேராசிரியர் மறைமலை இலக்குவனார்பேராசிரியை உலகநாயகி பழனி இருவரும் சங்க இலக்கியம் குறித்து உரையாற்றினர். தில்லி தமிழ்ச் சங்கத்திலிருந்து திரு ராகவன் அவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். மாநாட்டு மலரினை பேராசிரியர் மறைமலை இலக்குவனார் வெளியிட்டார்.

SVANUBHAVAM 25.10.2014

.


எழுத மறந்த குறிப்புகள் யாழ்தேவி நினைவுப்பதிவு - முருகபூபதி

.
தெற்கிலிருந்து   வடக்கு  நோக்கிய   பாதையைத்தேடி
தர்மசேன  பத்திராஜாவின்    In Search Of A Road
                                           
                                                                          போர்க்காலத்தில்  வடக்கிற்கான  ரயில் பாதை  வவுனியாவுக்கு அப்பாலும்    மன்னார்    பாதையில்    மதவாச்சிக்கு  அப்பால்  மன்னார் - தலைமன்னார்   பியர்  ரயில்  நிலையங்கள்    வரையும்    சென்ற   ரயில்கள்  தடைப்பட்டன.   பாதை     சீர்குலைந்த  பின்னர்  இந்த வழித்தடத்தில்  இயங்கிய    அனைத்து    ரயில்  நிலையங்களும் சிதைந்துபோயின.
அகதி  மக்களின்   முகாம்களாகவும்   விலங்கினங்களின் சரணாலயங்களாகவும்    மாறின.   ரயில்   தண்டவாளங்களும் சிலிப்பர்கட்டைகளும்  பங்கர்   அமைக்க   பெயர்த்து அழைத்துச்செல்லப்பட்டன.    அதனால்    அந்தப்பாதைகளில்   புல்லும் புதரும்   பாம்பு    புற்றுக்களும்    மண்டிவளர்ந்தன.   சில   இடங்களில் ஒற்றையடிப்பாதைகள்    உருவாகின.
ஒரு   காலத்தில்  மக்கள்    நடந்து சென்ற   ஒரு வழிப்பாதைகள் காலப்போக்கில்   பிரிட்டிஷ்  ஆட்சியில்    ரயில்    பாதைகளாயின.   அந்த    பிரிட்டிஷார்    இலங்கையின்    பூர்வீகத்  தமிழர்களுக்கும் இந்தியாவிலிருந்து    அழைத்துவரப்பட்ட   குடிமக்களுக்கும் உருப்படியான    தீர்வை    வழங்காமல்     தட்டிச்சுற்றிக்கொண்டு         (  இந்தியாவிலிருந்து   சுருட்டிச்சென்ற    பெறுமதியான  பொருட்களை பிரித்தானிய    நூதன   சாலைகளில்    பார்க்கலாம்.    கோஹினுர் வைரத்தை  மகாராணியின்  கிரீடத்தில்    பார்க்கலாம்) புறப்பட்டபின்னர்    சுதந்திரம்    என்பது  இலங்கையின்  மூவின மக்களுக்கும்   நிரந்தரமான   மகிழ்ச்சியைத்தரவில்லை.    அரசியல் கட்சிகள்  தமது    வாக்கு வங்கிகளை    பெருக்குவதில்   கவனம் செலுத்திய  அளவுக்கு   இனப்பிரச்சினை    தீர்வு    விடயத்தில்  அக்கறை  காண்பிக்கவில்லை.

56 ஆண்டுகளாக தீபாவளியை துறந்த கிராம மக்கள்: பரபரப்பு இல்லாத 12 பட்டி கிராமங்கள்

.


தீபாவளி எப்போது வருமோ என சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை, இனிப்பு, பலகாரம், பட்டாசு, மத்தாப்பு கனவுகளுடன் எதிர்பார்த்து காத்திருப்பர். ஆனால் இந்த கொண்டாட்டங்களை பற்றி துளிகூட பரபரப்பு இன்றி, சிவகங்கை அருகே 12 பட்டி கிராமத்தினர் கடந்த 56 ஆண்டுகளாக தீபாவளி கொண்டாடாமல் உள்ளனர்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஒன்றியத்தைச் சேர்ந்த எஸ். மாம்பட்டி ஊராட்சி. இதில் மாம்பட்டி, ஒப்பிலான்பட்டி, சந்திரபட்டி, தும்பைப்பட்டி, இடையபட்டி, கிலுகிலுப்பைப்பட்டி, திருப்பதிபட்டி, வலையபட்டி, கச்சப்பட்டி, கழுங்குப்பட்டி, தோப்புபட்டி, இந்திரா நகர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தீபாவளியே கொண்டாடுவதில்லை.வட்டி மேல் வட்டி கட்டி நொந்த கிராமத்தினர்ஐப்பசி மழைக்காலத்தில் பாசனப் பணிகளை தொடங்குவதும், அதற்காக கடன் வாங்கி விதைப்பு செய்வதும் விவசாயிகள் வழக்கம். தை மாதம் அறுவடையின்போது, வாங்கிய கடனுக்கு வட்டியாக நெல், தானியங்களை கொடுத்து வந்துள்ளனர்.
இந்நிலையில், ஐப்பசி மாதத்தில் வரும் தீபாவளி பண்டிகைக்காக கூடுதலாகக் கடன் பட்டு வட்டி மேல் வட்டி கட்டி பெருந்துயரம் தொடர்ந்துள்ளது.

காவலூர் ராசதுரை - ஈழத்து ஊடகத்துறை அடையாளம் ஒன்று உதிர்ந்தது‏ - .கானா பிரபா .

.

ஈழத்து இலக்கிய மற்றும் ஊடகத்துறை அடையாளங்களில் ஒருவராக விளங்கிய காவலூர் எஸ்.இராசதுரை அவர்கள் காலமாகிவிட்டார் என்ற  செய்தி சிலமணி நேரங்களுக்கு முன்னர் கிட்டியபோது வெறுமனே "மனவருத்தம் அளிக்கும் செய்தி" என்று வார்த்தைகளை உதிர்க்க முடியாத அளவுக்கு கவலையை ஏற்படுத்தி நிற்கிறது. 
காவலூர் ராசதுரை அவர்கள் ஈழம் நன்கறிந்த வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர், விளம்பர நிறுவன நிர்வாகி, சிறுகதை, கட்டுரைப்படைப்பாளி. 

என்னுடைய வானொலிப் பணியின் ஆரம்ப காலத்தில் 2000 காலப்பகுதியில் இலங்கையில் இருந்து இவர் சிட்னிக்குத் தன் பிள்ளைகளைப் பார்க்கும் நோக்கில் வந்தபோது குறுகிய வானொலிப் பேட்டி ஒன்று எடுத்திருந்தேன். அப்போது "பொன்மணி" என்ற ஈழத்துத் திரைப்படத்தைத் தயாரித்தவர் என்ற அடையாளமே அவர் குறித்த அறிமுகமாக வெகுவாக என்னிடம் இருந்திருந்தது. பொன்மணி திரைப்படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை வசனகர்த்தா இவர். பொன்மணி திரைப்படம் பல்வேறு விதமான விமர்சனப் பார்வையைக் கொண்டிருந்தாலும் இந்தப் படம் செய்த ஒரு பெரும் பணி, படத்தில் நடித்த கலைஞர்களில் ஈழத்தின் அறிவுசால் மட்டத்தில் பெரிதும் போற்றப்படும்பேராசிரியர் சிவஞானசுந்தரம் (நந்தி), பேராசிரியை சித்ரலேகா மெளனகுரு உள்ளிட்டோர் நடித்த படம் அதுமட்டுமன்றி ஈழத்து வாழ்வியலின் ஆவணப்படமாகப் போற்றிப் பாதுகாக்கப்படவேண்டியது.

தமிழ் சினிமா எப்படி இருக்க வேண்டும்? - உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

.

தமிழ் சினிமா எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது. தேசப்பற்று, மனிதநேயம், குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் விதத்தில் சினிமா தயாரிக்க வேண்டும் என நீதிபதி விருப்பம் தெரிவித்தார்.
நடிகர் விஜய் நடித்துள்ள கத்தி மற்றும் புலிப்பார்வை படங்களை தமிழகத்தில் வெளியிட தடை விதிக்கக்கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மதுரை வழக்கறிஞர் வி.ரமேஷ் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், கத்தி படத்தில் தமிழர் விரோத வசனங்கள் இடம் பெற்றுள்ளன. புலிப்பார்வை படத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டது தவறாக சித்தரிக்கப் பட்டுள்ளது. இப்படங்கள் தமிழகத்தில் வெளியிட்டால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன் நேற்று பிறப்பித்த உத்தரவு:
தற்போது வெளியாகும் சினிமாக்களில் பாலியல் சார்ந்த பிரச்சினைகள், காட்டுமிராண்டித்தனமான சண்டைக் காட்சிகள், பெண்களை கேவலமாக சித்தரித்தல், மது குடித்தல் மற்றும் புகைப் பிடித்தல், கெட்ட நடத்தை உள்ளவர்களை நல்லவர்களாக சித்தரிப்பது, குற்றச் செயல்களை நியாயப்படுத்துவது ஆகியன தேவையற்றதாக உள்ளது. 

உலகச் செய்திகள்

.
* ஐ. எஸ். போராளிகளின் தலைமையகத்தை புகைப்படமெடுத்த 17 வயது சிறுவன் - 
  சிலுவையில் அறையப்பட்டு படுகொலை

*பெங்களூர் சிறையயில் இருந்து வெளியேறினார் ஜெயலலிதா

சீனாவில் நிர்மாண தளத்தில் மோதல்: 4 பணியாளர்கள் உயிருடன் எரித்து 
   படுகொலை

லிபிய பென்காஸியில் உக்கிர மோதல்: 12 பேர் பலிஇ 10 பேர் காயம்

ஐ. எஸ். போராளிகளின் தலைமையகத்தை புகைப்படமெடுத்த 17 வயது சிறுவன் - சிலுவையில் அறையப்பட்டு படுகொலை




சிரியாவிலுள்ள ஐ.எஸ். போராளிகளின் தலைமையகத்தை புகைப்படமெடுத்த குற்றச்சாட்டில் 17 வயது சிறுவன் ஒருவனை போராளிகள் பகிரங்கமாக 3 நாட்களாக சிலுவையில் அறையப்பட்டு படுகொலை செய்துள்ளனர். 
இது தொடர்பில் பிரித்தானிய டெயிலி மெயில் ஊடகம் சனிக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளது. 
ரக்கா நகரிலுள்ள ஐ.எஸ். போராளிகளின் தலைமையகத்தை புகைப்படமெடுத்த மேற்படி சிறுவன் அந்தப் புகைப்படங்கள் ஒவ்வொன்றிற்கும் 500 துருக்கிய லிரா பெறுமதியான பணத்தைப் பெற்ற நிலையில் போராளிகளால் பிடிக்கப்பட்டான். 

சங்க இலக்கியக் காட்சிகள் 28- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

.
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும்ää பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.

காவலிட்டாள் தாய்! தாவிச் சென்றாள் மகள்!


அவள் பருவமடைந்த இளம் நங்கை. மிகவும் அழகானவள். அவளது அழகைப் புகழாதவர்களே இல்லை. அவளின் அழகிய தோள்களைப் பார்த்துப் பார்த்து அடிக்கடி அவளின் தாயே பாராட்டிப் பெருமிதம் அடைவாள். அவ்வளவு வனப்பான உடலமைப்பு அவளுக்கு. அந்த அழகில் தம்மைப் பறிகொடுத்தவர்கள் எத்தனையோ பேர். அவர்களில் ஒருத்தன் மீது அவளுக்குக் காதல் மலர்ந்தது. இருவரும் கண்ணால் கதைபேசி மகிழ்ந்தார்கள். கண்டு கொள்ளும் இடங்களில் உறவாடி நெகிழ்ந்தார்கள். இந்த விடயம் அவளின் தாய்க்குத் தெரிய வந்தது. மகள் எந்த ஆண்மகனுடனும் தொடர்பு கொள்வதை அவள் விரும்ப வில்லை. அதனால் மகளுக்குக் கட்டுக்காவல் போட்டாள். வெளியில் எங்கும் செல்லாதபடி அவளைத் தடுத்தாள். மகளோää தன் காதலனுடன் சேர்வதுதான் தனது பெண்மைக்குச் சிறப்பானது என்று நினைத்தாள். மகளின் அழகைப் புகழ்ந்து பாராட்டும் தாய் வேறு யார்கண்ணிலும் அவள் பட்டுவிடக்கூடாது என்பதிலே மிகவும் கரிசினையாக இருந்தாள்.

நேற்றும் இன்றும் - சிறைச்சாலை வளாகம் - vaamanikandan

.
* நேற்று மாலையும் சிறைச்சாலைக்குள் நுழைந்துவிட முடிந்தது. ஜாமீன் கிடைத்தது என்ற செய்தி தெரிந்தவுடனே அலுவலகத்திலிருந்து பெட்டியைக் கட்டுவதற்கான முஸ்தீபுகளில் இறங்கிவிட்டேன்.

* சிறைச்சாலையைச் சுற்றிலும் கடந்த சில நாட்களாக இல்லாத அளவுக்கு நிறைய போலீஸார் இருந்தார்கள். உள்ளே விடமாட்டார்கள் போலிருந்தது. ஆனால் ஒரு தில்லாலங்கடி வேலையைச் செய்தேன். பல நூறு ஏக்கருடைய சிறைச்சாலைக்குள் செல்வதற்கு வேறு இரண்டு வழிகள் இருக்கின்றன என்பதை ஏற்கனவே தெரிந்து வைத்திருந்தேன். பயன்படுத்திக் கொண்டேன்.

* டிஐஜியை சந்தித்துவிட்ட தினத்தன்று ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. இப்படியெல்லாம் ரிஸ்க் எடுத்தால் ‘போலி நிருபர் கைது’ என்று தினத்தந்தியில் செய்தி வந்துவிட வாய்ப்பு அதிகம் என்று எச்சரித்த மின்னஞ்சல். அந்த மின்னஞ்சலை நினைத்தபடியேதான் நடந்து கொண்டிருந்தேன்.  ஆனால் அந்த திருட்டு வழியில் யாருமே தடுக்கவில்லை.

* உள்ளே வெறும் எம்.எல்.ஏக்களும் எம்.பிக்களும் மட்டும்தான் இருந்தார்கள். அக்ரி கிருஷ்ணமூர்த்தி மட்டும்தான் அமைச்சர்களில் எனக்கு அடையாளம் தெரிந்தது. சிறைச்சாலை வளாகத்திற்குள் இருக்கும் ஹெலிபேடு பக்கமாகவே நின்றிருந்தார்.

* தினசரி வந்து கொண்டிருந்த கே.ஏ.செங்கோட்டையன், கே.பி.முனுசாமி, ஜெயக்குமார் போன்றவர்கள் இருந்தார்கள். தளவாய் சுந்தரம், செ.ம.வேலுச்சாமி போன்றவர்களும் இருந்தார்கள்.

* சில எம்.எல்.ஏக்கள் ‘எப்படி உள்ள வந்த?’ என்றார்கள். ‘கன்னடத்தில் பேசினேன். விட்டுவிட்டார்கள்’ என்று மட்டும் சொன்னேன். குறுக்கு வழியைக் காட்டிக் கொடுத்தால் நாளைக்கு அத்தனை கட்சிக்காரர்களும் அந்த வழியைப் பயன்படுத்தினால் நானும் சேர்ந்து உள்ளே வர முடியாது என்கிற சுயநலம்தான்.

இலங்கைச் செய்திகள்

.
* போராட்டம் மேற்கொண்ட மாணவர்களை கலைத்த பொலிஸார்!

* ஒரு இனம் இன்னொரு இனத்தை அடிமைப்படுத்த முடியாது - ராஜித

* ஜனவரியில் ஜனாதிபதி தேர்தல் :சூட்சகமாக பங்காளி கட்சிகளுக்கு        
   ஜனாதிபதிஅறிவிப்பு

போராட்டம் மேற்கொண்ட மாணவர்களை கலைத்த பொலிஸார்!



பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மீதான தடை மற்றும் மாணவர் வகுப்புத் தடை ஆகிய விடயங்களை முன்னிறுத்தி பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு எதிராக சப்ரகமுவ பல்கலை மாணவர்களால் பெலிகில் ஓயா சந்திக்கருகில் கூடாரம் அமைத்து  எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதனையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவை பெற்றுகொண்ட பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை கலைத்ததுடன் கூடாரத்தையும் அகற்றினர். 

பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலைக்குள்



.
சென்ற வார இறுதியில் வேலை செய்ததற்கு நேற்று compensation holiday கொடுத்திருந்தார்கள். பயன்படுத்திக் கொண்டேன். வேறு என்ன? பரப்பன அக்ரஹாராதான்.  வழக்கத்தைவிடவும் கூட்டம் அதிகம். மதியம் பன்னிரெண்டு மணியளவில் ஆயிரம் பேராவது இருந்திருப்பார்கள். அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன்இ எடப்பாடி பழனிசாமி, வைத்திலிங்கம் மற்றும் செந்தூர்பாண்டியன் ஆகிய நால்வர் மட்டும் மரத்தடியில் நாற்காலியில் அமர்ந்திருந்தார்கள். செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்தார்கள். தமிழ் செய்தித்தாள்தான். அதில் நத்தம் மட்டும் தாடியோடு இருந்தார். ஓபிஎஸ், நத்தம், செந்தில் பாலாஜி போன்றவர்கள் எல்லாம் அப்படித்தான். அம்மா வரும் வரைக்கும் கன்னத்தில் கத்தி படாது என்று சபதம் எடுத்திருப்பார்கள் போலிருக்கிறது.

கட்சியில் கே.ஏ.செங்கோட்டையன், ராமநாதபுரம் அன்வர் ராஜா போன்றவர்கள் எல்லாம் சீனியர்களாக இருக்கக் கூடும். ஆனால் அவர்கள் எல்லாம் தரையில் அமர்ந்திருந்தார்கள். ஏகப்பட்ட எம்.எல்.ஏக்களும், எம்.பிக்களுமாக சிறை வளாகமே நிரம்பிக் கிடந்தது. ஆனால் யார் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. கலர்ச்சட்டையும் பேண்ட்டும் அணிந்தபடி யாரிடம் கேள்வி கேட்டாலும் ஒரு மார்க்கமாக முறைக்கிறார்கள்.

பெண்களின் மனதைக் கொள்ளை கொள்வது எப்படி?

.
பெண்களின் மனதை கொள்ளை கொள்வது எப்படி? என்பது அநேக ஆண்களின்கவலை.என்னென்னவோ செய்தும் இந்த பெண்களை எளிதில் கவர முடியவில்லையே என்பது தான் இன்றைய தலைமுறை இளைஞர்களின் ஆதங்கம்.இதற்காக எத்தனையோ ஆண்கள் தங்களின் சுயத்தை இழந்து அநேக வேடங்களை போடுகின்றனர்.ஆனால் இந்த நடிப்பினை பெண்கள் எளிதில் இனம் கண்டு கொள்வதால் அநேக ஆண்களின் முயற்சி தோல்வியிலேயே முடிகிறது. உண்மையாக இருந்தால் மட்டுமே பெண்களை எளிதில் கவரமுடியும் என்று பலருக்கு தெரிவதில்லை.

பெண்களை, அவர்களின் மனதை கவருவது எப்படி என்பது குறித்து உங்களுக்காக சில யோசனைகள்:



art tamil girlநாம் எதற்காகவாவது அதீத முயற்சி செய்தால் அது கிடைக்கும் வரை நமக்கு போராட்டம் தான். பெண்கள் விடயத்தில் இது ஒரு படி மேலாகவே இருக்கும் பெண்களை கவர நீங்கள் பெரும் முயற்சி செய்யாமல் இருந்தாலே வெற்றி உங்கள் பக்கம் தான். இதுதான் பெண்களை கவருவதற்கான முதல் ரகசியம்.

நீங்கள் உங்கள் வேலையில் உண்மையான ஈடுபாட்டுடன் செயல்பட்டு வெற்றி பெற்றாலே அனைவரின் பார்வையும் உங்கள் பக்கம் திரும்பும். பெண்களின் கவனத்தையும் எளிதில் கவரலாம்.

உணவில் என்னென்ன தரமற்ற பொருட்களைக் கலக்கிறார்கள்? எப்படிக் கண்டு பிடிப்பத

.

கடைகளில் நாம் நம்பி வாங்கும் உணவுப் பொருள்களில் நம் கண்ணால் கண்டுபிடிக்க முடியாத படி பலவகையான கலப்படங்கள் சேர்க்கப்படுகிறது. இது தெரியாமல் அதை காசு கொடுத்து வாங்கி உண்டு நம் உடல் நலத்தை கெடுத்துக் கொள்கிறோம்.


தவறான வழியில் காசு சம்பாதிக்க மக்கள் உயிரோடு விளையாடும் இந்த கயவர்கள் எப்படியெல்லாம் உண்ணும் உணவில் தரமற்ற ஆபத்தான பொருட்களை கலக்கிறார்கள்? அதை எப்படி கண்டு பிடிப்பது?

சர்க்கரையில் சுண்ணாம்புத் தூள் சேர்க்கிறார்கள். சிறிது சர்க்கரை எடுத்து ஒரு கிளாஸ் நீரில் கரைத்தால் அதில் சுண்ணாம்பு இருந்தால் கிளாசின் அடிப் பகுதியில் படியும்.

பெருங்காயத்தில் பிசின் அல்லது கோந்துகளுக்கு மணம் சேர்த்து கலப்படம் செய்கிறார்கள். சுத்தமான பெருங்காயத்தை நீரில் கரைத்தால் பால் போன்ற கரைசல் கிடைக்கும்.கலப்படமற்ற பெருங்காயத்தை எரியச் செய்தால் மிகுந்த ஒளியுடன் எரியும்

ஏலக்காயில் அதன் எண்ணெயை நீக்கி விட்டு முகப்பவுடர் சேர்க்கிறார்கள் இதை கையால் தடவிப்பார்த்தால் முகப்பவுடர் கையில் ஓட்டிக்கொள்ளும். இந்த ஏலக்காயில் மணமிருக்காது.

ஆராய்ந்து தேர்ந்திடுவீர் ! - எம். ஜெயராமசர்மா .... மெல்பேண்

.        


  அடியார்களின் இலக்கோ
    ஆண்டவனை அடைவது
   அரசுள்ளார் இலக்கோ
    அனைத்தையும் அள்ளுவது

     ஆணவத்தின் இலக்கோ
     அனைத்தையுமே அழிப்பது
     ஆதலால் இலக்குதனை
     ஆராய்ந்து தேர்ந்திடுவீர்

     வள்ளுவனார் இலக்கோ
     வாழ்வை வளமாக்குவது
     தெள்ளுதமிழ் பாரதிக்கோ
     தேசமதின் விடுதலையே

     உள்ளமதில் நல்லவெண்ணம்
     ஊற்றெடுத்து நின்றுவிடின்
     நல்லநல்ல இலக்குகளை
     நாம்பெற்று நிற்போமே

ஹைதராபாத்துக்கு ஒரு நாள் காவல்துறை ஆணையரான 10 வயது சிறுவன்!

.
10 வயது சிறுவன் சாதிக்கின் காவல்துறை ஆணையராக வேண்டும் என்ற கனவை ஹைதராபாத் காவல்துறை ஆணையர் மகேந்தர் ரெட்டி நிறைவேற்றியுள்ளார். உடல்நிலை பாதித்து, தன் வாழ் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் சாதிக்கின் ஆசையை நிறைவேற்ற “ஆசையை நிறைவேற்றும் அறக்கட்டளை” முன் வந்தது. இதையடுத்து சிறுவனின் நிலை குறித்து காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ஒரு நாள் மட்டும் சாதிக் காவல்துறை ஆணையராக காவல்துறை உடை அணிந்து கொண்டு, அதற்கான தொப்பியையும் அணிந்து கொண்டு காவல்துறை ஆணையர் நாற்காலியில் அமர்ந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தான். அப்போது, சிறுவனுக்கு காவல்துறை ஆணையர் உட்பட அனைத்து உயர் அதிகாரிகளும் சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினர்.
காவல்துறை ஆணையராக நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டதற்கு, ரௌடிகளை பிடிக்க வேண்டும் என்று மகிழ்ச்சியோடு பதிலளித்தான். சிறுவனின் விருப்பத்தை நிறைவேற்றியிருப்பது தனக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக காவல்துறை ஆணையர் மகேந்திர ரெட்டி கூறினார். நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் சிறுவனின் விருப்பம் நிறைவேறியிருப்பதன் மூலம், அவனது வாழ்நாட்கள் சற்று அதிகரிக்கும் என்று அறக்கட்டளை நிர்வாகி கூறியுள்ளார். நாமும் அந்த சிறுவனுக்கு ஒரு சல்யூட் வைப்போம்.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன்

.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன்: வழக்கை தாமதிக்கக் கூடாது என நிபந்தனை



தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உட்பட நான்கு பேருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இம்மனு தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, மதன் லோக்கூர், ஏ.கே.சிக்ரி அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
ஜெயலலிதா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமன், தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கி இதற்கு முன்பு பிறப்பிக்கப்பட்ட பல்வேறு உத்தரவுகளை சுட்டிக் காட்டினார்.

சிக்கல் இன்னும் முடியவில்லை: சுப்பிரமணியன் சுவாமி பேட்டி

.

உச்ச நீதிமன்றம் ஜெயலலி தாவுக்கு விதிக்கப்பட்ட தண்ட னைக்கு இடைக்கால தடை தான் விதித்திருக்கிறது. நிபந்தனை ஜாமீன் மட்டுமே வழங்கப் பட்டிருக்கிறது. அதனால் ஜெய லலிதாவுக்கு இன்னும் சிக்கல் முடியவில்லை என்பதை மறந்து விட வேண்டாம் என பாஜக மூத்த‌ தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் ஜாமீன் மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, சொத்துக்குவிப்பு வழக்கின் மனுதாரரான சுப்பிரமணியன் சுவாமி ஆஜராகி கடும் ஆட்சேபம் தெரிவித்தார். இருப்பினும் நீதிபதி கள் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.
இந்நிலையில் ‘தி இந்து' சார்பாக அவரிடம் பேசிய போது, “இவ்வழக்கில் ஜெய லலிதாவுக்காக ஆஜரான வழக்கறிஞர் ஃபாலி எஸ்.நாரிமன் நான் மதிக்கக்கூடியவர். அவர் ஜெயலலிதாவின் உடலில் உள்ள நோய்களை பற்றி எடுத்துக்கூறி ஜாமீன் கேட்டார். அதனால் நான் அதிகமாக ஆட்சேபிக்கவில்லை.

தமிழ் சினிமா - குறை ஒன்றும் இல்லை

.

விவசாயி, விவசாயம்... என்பதையே கிண்டலாகவும், கேலியாகவும் பார்க்கும் இளைய தலைமுறைக்கு, பொட்டில் அறையும்படியாக விவசாயத்தை முதன்மைப்படுத்தும் விதமமாக முத்தாய்ப்பாக வெளிவந்திருக்கும் படம்தான் ‛‛குறையொன்றுமில்லை''.
தாங்கள் உற்பத்தி செய்யும் பொருளுக்கு விவசாயிகளே விலையையும் நிர்ணயம் செய்ய வேண்டும், உரிய லாபம் ஈட்ட வேண்டும் என்று திட்டம் வகுக்கிறார் தனியார் நிறுவன ஊழியர் கிருஷ்ணா எனும் கீதன், அதற்காக கிராம ஆய்வு, ஆராய்ச்சிகளுக்கு செல்லும் கிருஷ்ணா ‛அலைஸ்' கீதனுக்கு அறிமுகமாகிறார் பெண் டாக்டர் சந்தியா எனும் ஹரிதா.

விவசாயிகளே விலை நிர்ணயம் செய்யும் விற்பனை மையங்களை துவக்க இடம் தேர்வு செய்யவும், அதற்கான சூழல் குறித்து ஆய்வு செய்யவும் கீதன் வந்திருப்பது மாதிரியே, கிராம மருத்துவ முகாமுக்கு வந்திருக்கிறார் டாக்டர் சந்தியா எனும் ஹரிதா. இருவருக்குள்ளும் இருவரது நற்பண்புகளையும் பார்த்து, பார்த்து காதல் பிறக்கிறது. முதல் காதலில் தோல்வியுள்ள கீதன், இரண்டாவது காதலில் வெற்றி பெற்றாரா.?, தன் லட்சியமான விவசாயி - விலைபொருள் - விலை நிர்ணயம் உள்ளிட்ட விவகாரங்களில் இலக்கை அடைந்தாரா.? இல்லையா..? என்பதை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்ல முயன்றிருக்கும் படம் தான் ‛‛குறையொன்றுமில்லை''!



கிருஷ்ணாவாக வரும் அறிமுக நாயகர் கீதன், யதார்த்தமான நடிப்பில் வசீகரிக்கிறார். தன் லட்சியத்திற்காகவும், காதலுக்காகவும் போராடும் அவரது நடிப்பு, துடிப்பு எல்லாம் நம்பிக்கையை தருகிறது.

சந்தியாவாக டாக்டர் ஹீரோயினாக வரும் ஹரிதா, இளம் பெண் மருத்துவர்களுக்கே உரிய மிடுக்கும், துடுக்குமாக மிரட்டியிருக்கிறார். ஏக்கம், ஏமாற்றம், காதல், களிப்பு... எல்லாவற்றிலும் கைதேர்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார் அம்மணி.



கீதன், ஹரிதா மாதிரியே நண்பராக வரும் ஹிட்லர், அம்ருதா, உள்ளிட்டோரும் அருமையான நிடிப்பை வாரி வழங்கியிருக்கின்றனர்.

அசோக்குமாரின் அழகிய ஒளிப்பதிவு, ராமணுவின் இனிய இசை உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகள் இருந்தும் விவசாயத்தை முன்னிலைப்படுத்தும் அழுத்தமான கதையை இன்னும் விறுவிறுப்பாக இயக்குநர் கார்த்திக் ரவி படமாக்கியிருந்தார் என்றால், ‛‛குறையொன்றுமில்லை'' இன்னும் நிறைவாய் இருந்திருக்கும்!

மொத்தத்தில், ‛‛குறையொன்றுமில்லை'' - படத்தில் பெரிதாய் ‛‛தவறொன்றுமில்லை!'' - See more at: http://cinema.dinamalar.com/tamil_cinema_fullstory.php?id=943&ta=I#sthash.hwvapZ5j.dpuf