பெய்து முடிந்த மழையின் ஈரம் உலராத கவிதை ஒன்று..

.

இப்போதெல்லாம்
நாம் சந்தித்த இடங்களில்
யாருமே இருப்பதில்லை...
சிந்திக்கிடக்கின்றன
காய்ந்துபோன
சில மஞ்சள் பூக்களும்
நம் நினைவுகளும்....

காதலும் கவிதைகளுமாய்
மாறி மாறி துலங்கிய அந்நாட்கள்
தொலைந்துவிட்டன..

மாலை வெய்யில் தன் மஞ்சள்
நிறமிழந்த ஒரு கோடையில்தான்
நேசிப்பை விற்று
காய்ந்துபோனது உன் இதயம்...

நினைத்துப்பார்க்கையில்
நெஞ்சத்தின் ஆழத்துள்
மெல்ல இறங்குமொரு முள்..

அந்தரவெளியும்
கலவர நிழலுமாய்
நூறாயிரம் கதைகளை
சுமந்தலையும் இதயத்தை
உடைத்துவிடுகிறது
ஒற்றைக்கண்ணீர்த்துளி..

பொழுதில்லை அழுவதற்கும்..

நான் ரசித்த Laughing O Laughing – ஜெயந்தி மோகன்

.


சிட்னி வாழ் தமிழ் மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அந்த ஞாயிற்றுக்கிழமை அழகாக விடிந்தது. ஆம் 08.12.2013 அன்று அவுஸ்திரேலிய மருத்துவ உதவி மையத்தினால் முத்தமிழ் மாலை என்னும் நிகழ்வு ஞாயிறு மாலை 5:30 மணிக்கு நோத் பரமட்டா, கிங்ஸ் பாடசாலை அரங்க மண்டபத்தில் சோபனம் நாடகக்குழுவினரால் நடாத்தப்;பெற்ற Laughing O Laughing  நிகழ்ச்சி தான் அனைத்து தமிழ் மக்களையும் ஒவ்வொரு வருடமும் வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் நிகழ்ச்சி என்பது மறுக்கமுடியாத உண்மை. வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பதை சோபனம் நாடகக்குழுவினர் இந்த வருடமும் நிரூபித்துள்ளனர். சிட்னியில் மட்டுமல்லாது கன்பரா, பிறிஸ்பேன் மற்றும் மெல்பேன் நகரங்களிலும் Laughing O Laughing மாபெரும் நிகழ்வாக நடைபெற்றுள்ளது.

ஒற்றைத் தீப ஒளியில் பாடலுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில் ஆபிரிக்கத் தலைவர் மண்டேலாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததுடன்ää இதனைத் தொடந்து சோபனம் நாடகக் குழுவின் தாரகமந்திரமே “அன்பே சிவம்” எனக் கூறப்பட்டதுடன் இடம்பெறப் போகும் ஐந்து நாடகங்களும் சோபனம் நாடகக் குழுவினரின் நான்கு மாதத்துக் கடின உழைப்பு எனவும் சொல்லப்பட்டது. ஒவ்வொரு நாடகம் தொடங்குவதற்கு முன்பு கடவுளும்ää சாத்தானும் தோன்றி அந்நாடகத்தைப் பற்றியும் அதில் உள்ள நன்மை தீமை பற்றியும் உரையாடுவார்கள்.

முதலாவதாக நல்லவன்Vs கெட்டவன் என்னும் நாடகம் இடம் பெற்றது. நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான இழுபறிதான் இந்த நாடகத்தின் கரு.



மெல்பனில் நடந்த தமிழ்ச்சிறுகதை இலக்கியம் அனுபவப்பகிர்வு

.

மெல்பனில்  நடந்த  தமிழ்ச்சிறுகதை இலக்கியம்  அனுபவப்பகிர்வு
வாசிப்பு அனுபவமும் - செம்மைப்படுத்தலும் - தேர்ந்த ரஸனையும்
( கடந்த 7 ஆம் திகதி சனிக்கிழமை மெல்பனில் வேர்மண்ட் சவுத் சமூக நிலைய மண்டபத்தில் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் நடத்திய நிகழ்ச்சி)
                                               முருகபூபதி


தொடக்கவுரை:
இந்த நாட்டில்     புகலிடம்    பெற்ற    எழுத்தாளர்கள்,      இங்கு    வந்தபின்னர்  படைபிலக்கியத்துறைகளில்    ஈடுபடுபவர்கள்      எம்மத்தியிலிருக்கிறார்கள்.  சிறுகதை,     கவிதை,    நாவல்,    விமர்சனம்,     நாடகம்,     பத்தி     எழுத்துக்கள்  எழுதுபவர்கள்      இந்தக்கண்டத்தில்       சில      மாநிலங்களில் வசித்துவருகிறார்கள்.     நாம்     இன்று      சிறுகதை     இலக்கியம்  தொடர்பாகவே     அனுபவப்பகிர்வு     நிகழ்ச்சியை     ஒழுங்கு    செய்துள்ளோம்.      எதிர்காலத்தில்     இலக்கியத்தின்    இதர துறைகள் தொடர்பான     அனுபவப்பகிர்வுகளையும்    நடத்தவுள்ளோம்.
ஆங்கில    இலக்கியத்துறையில்     இந்த    நடைமுறை     நீண்டகாலமாக இருந்துவருகிறது.     ஆனால்     எமது      தமிழ்ச்சூழலில்     ஒரு படைப்பிலக்கிய      நூலின்     வெளியீட்டு     விழாவில்     நூலாசிரியரை போற்றிப்புகழ்ந்துவிட்டு,       அவரது      நூலைப்பற்றி      மேலெழுந்தவாரியான  கருத்துக்களை      மாத்திரம்     சொல்லிவிட்டு      சிறப்புப்பிரதி      வழங்கும்  சடங்குகளுடன்      ரசனையை     மட்டுப்படுத்திக்கொண்டு  அகன்றுவிடுகிறோம்.      இணைய     இதழ்கள்      பத்திரிகைகளில்  படங்களுடன்       செய்தி    வெளியானதும்    அதனைப்பார்த்து திருப்தியடைவதுடன்       காரியம்     முடிந்துவிடும்.
சிறப்பு     பிரதி     பெற்றவர்      அதனைப்படித்தாரா?      என்ன    கருத்துடன்  அவரது    வாசிப்பு    அனுபவம்     இருக்கிறது?     என்ற    கவலையெதுவும் இல்லாமல்       அடுத்த நூலை    எழுதவும்    வெளியிடவும்  தயாராகிவிடுகின்றோம்.

இலங்கைச் செய்திகள்

காணாமல் போனோரின் உறவுகள் மீது திருகோணமலையில் தாக்குதல்

பிரித் ஓதி முஸ்லிம் வியா­பா­ரியை மன்­னிப்பு கோரச் செய்த தேரர்கள்  

ஆர்ப்பாட்டத்தை யாழ்ப்பாணத்தில் நடத்துங்கள்,இது எங்கள் இடம்

அட்டனில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து ஊர்வலம்

150 வருட பழைமை வாய்ந்த காளியம்மன் சிலை உடைப்பு : ஹாலி­-எல உடு­வரை பெருந்­தோட்ட மேற்­பி­ரிவில் சம்பவம

காணாமல் போனோரின் உறவுகள் மீது திருகோணமலையில் தாக்குதல்


10/12/2013   திருகோணமலை பஸ் நிலையத்திற்கு முன்பாக காணாமல் போனோரின் உறவுகளால் இன்று முற்பகல் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது இனந்தெரியாத நபர்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
காணாமற் போனோரை தேடியறியும் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் காணாமல் போனோரின் உறவுகள் பலர் கலந்து கொண்டிருந்தனர். ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து கொண்டிருந்த போது இடையில் வந்த இனந்தெரியாத நபர்கள் சிலர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது பொலிஸார் அருகில் இருந்தும் தாக்குதல் மேற்கொண்டவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர். நன்றி வீரகேசரி 




பரணில் இருந்த பழைய நாட்குறிப்பேட்டில் இருந்து

.

06 ஜன. வெள்ளி


மீண்டும் ஒரு வெறுமையான நாளாகத்தான் இன்றைய பொழுதும் போனது. இப்படியே தொடருமோ என்ற அச்சம் மனதை வாட்டுகிறது. எதுவுமேயின்றி வீணாகப் பொழுதைக் கழிப்பது வீண்வேலை என்றும் தெரிந்தும் தொடர்ந்தும் அதுதான் நடக்கின்றது. கோயிலுக்குப் போயிருந்தேன். பெண்களைப் பார்க்கத்தான் மனம் அலைபாய்கின்றது. என்றாலும் சிறிது கடவுள் பக்தியும் அங்கு இருப்பதுபோலத்தான் தெரிகின்றது. கடவுள் என்ற உன்னதமானதொன்றை எவ்வாறு பணம் சம்பாதிக்கப் பாவிக்கின்றார்கள் என்பதைத்தான் கோயிலினுள் நிற்கும் ஒவ்வொரு கணத்திலும் மனம் சிந்திக்கின்றது. ஐயர் செய்யும் கிரியைகள் கூடச் செயற்கையாகத்தான் தோன்றுகின்றது. பற்றுச் சீட்டின் அளவைக் கொண்டு பக்தியை மதிப்பிடுவது போல இருக்கின்றது. ஒரு பவுண் அர்ச்சனைக்கு வெறும் பூவும் திருநீறு சந்தனமும், ஐந்து பவுணிற்கு கூடுதலாக ஒரு ஆப்பிளும் அளவுகோலாக உள்ளது. மன அமைதியை நாடிச் சென்று மனச் சஞ்சலத்துடன் திரும்பிவந்தேன். 



27 பெப். திங்கள்

அதிர்ஷ்டமில்லாத இன்னொரு வாரத்தின் ஆரம்ப நாளாகத்தான் தோன்றுகிறது. எந்த ஒரு நாள் கூட மன அமைதியுடையதாக இல்லாமல் போனது ஏன் என்று விளங்கவில்லை. எனது எதிர்காலத்தில் நான் எப்படி ஆகவேண்டும் என முன்கூட்டியே திட்டமிடாமல் ஏதோ ஒன்றை ஏற்றுக்கொண்டதுதான் காரணம் என்று நினைக்கின்றேன். என்னால் ஏன் மன ஈடுபாட்டுடன் படிக்கமுடியவில்லை என்று தெரியவில்லை. சந்தர்ப்பங்கள் அதிகம் இருந்தும் நழுவ விட்டுக் கொண்டு வருகிறேன். கடைசி நேரத்தில் அவதிப்படுவதை ஏன் விரும்புகிறேன் என்று புரியவில்லை. அதிகம் சோம்பேறியாகிவிட்டேன். படிக்க மனமில்லை. எங்கும் போக மனமில்லை. சும்மா கஷ்டப்படாமல் சுகமாக வாழலாம் என்று கனவு காண்பதுதான் வாழ்க்கையாகிவிட்டது. தலையிடி வேறு தொல்லை தருகின்றது. பீடித்த பிசாசு எப்போது விடும் என்று புரியவில்லை. 


02 மார்ச் வியாழன்

இன்று உடல் நிலை அவ்வளவு ஒத்துழைப்புத் தரவில்லை. தடிமன், காய்ச்சல் வரலாம் போலத் தெரிகின்றது. சிறு வருத்தம் கூடப் பலவீனத்தைத் தருகின்றது. எப்போதும் போல வலி நிவாரணிகளில் தங்கியிருக்க வேண்டியுள்ளது. வழமையான ஒரு தலையிடி என்றாலும் கூட இனிப்புச் சாப்பிடும் ஆர்வத்துடன் என் மனம் வலி நிவாரணிகளைத் தேடுகின்றது. இவ்வளவு தூரம் அடிமையாக என்னால் மாறமுடியும் என்று நான் நினைத்திருக்கவில்லை. சில விடயங்கள் பிழையானது என்று தெரிந்தும் கைவிட முடியாத நிலைமை. கைவிட முடியாத விடயங்களை பிழையில்லாத விடயங்கள் என்று என்னை நானே ஏமாற்றும் தர்க்கங்கள். இதன்மூலம் எப்போதுமே 

தமிழ் பாடசாலை VC மாணவர்களுக்கான கெளரவிப்பும் விருந்துபசாரமும்

.


ஈழத்தமிழ் சங்கத்தின் தமிழ் பாடசாலை VC மாணவர்களுக்கான கெளரவிப்பும் விருந்துபசாரமும் கடந்த 14/12/13 மாலை 06.30 Vermont south community  center ஈழத்தமிழ் சங்கத்தின் தலைவர் திரு.பரமு பரமநாதன் தலமையில்  நடைபெற்றது இரண்டு நிமிட அகவணக்கதுடன்.ஆரம்பித்து  வரவேற்புரையை திரு.பரமநாதன் வழங்க  மாணவன் சுதன் அவர்கள்  தமிழ் கற்றதையும் தமிழால் தான்பெற்ற  பெருமையையும் தமிழின் பெருமையையும் அழகான தமிழில் எடுத்துரைதார் 
திரு. சதிஸ் நாகராசா சிறப்புப் பேச்சின் போது அவரின் வாழ்வனுபவத்தின் சில பகுதிகளையும், தமிழின் சிறப்பையும்,பற்றி சிறந்த உதாரணங்களுடன் சுட்டிக்காட்டி பாரதியாரின் கவிதை ஒன்றை முத்தாப்பாய் தந்து சிறப்புரையை நிறைவு செய்தார்..
வீசி பழைய மாணவர்களின்  பட்டி மன்றம் ”மனிதன் பூரணமடைவதற்கு” பெற்றோரே காரணம்  என்று ஒரு குழுவினர்  இல்லை பிறகாரணிகளும் பங்களிக்கின்றன என்று  மற்றைய குழுவினரும் வாதாடினர்  எல்லா மாணவர்களும் மிகச்சிறப்பாக தமது குழுவுக்காக மிகச் சிறப்பாக தம்து வாதங்களுக்காக நல்ல உதாரணங்களை முன்னிறுத்திப் பேசினார்கள்.
கடைசியாக விசி பாடத்திட்டத்தின்  ஒருங்கிணைப்பாளர்  திரு.ரவிஸ்கந்தா கடந்தா ஆண்டு, நடப்பாண்டு திட்டங்களையும் மாணவர்களின் வளர்ச்சியையும் மிகச் சுருக்கமாக கூறி அமர்ந்தார் அதன் பின் மாலை விருந்தோம்பலுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.     

            
சந்திரன் சண்முகம் 

திரும்பிப்பார்க்கின்றேன் 19- -முருகபூபதி

.

இலங்கை    முற்போக்கு      இலக்கிய       முகாமில்       எனக்கொரு      தந்தை   இளங்கீரன்




   இலங்கைத்தமிழ்ச்சூழலில்     ஒருவர்    முழு நேர    எழுத்தாளராக வாழ்வதன்    கொடுமையை    வாழ்ந்து     பார்த்து   அனுபவித்தால்தான் புரியும்.     எனக்குத்தெரிய     பல      முழுநேர      தமிழ்    எழுத்தாளர்கள்  எத்தகைய    துன்பங்களை,     ஏமாற்றங்களை,     தோல்விகளை, வஞ்சனைகளை,     சோதனைகளை      சந்தித்தார்கள்     என்பதை     மனதில் பதிவு செய்யத்தொடங்கியபோது      அவர்களின்       வாழ்வு       எனக்கும்  புத்திக்கொள்முதலானது.
  நான்      எழுத்துலகில்    பிரவேசித்த     காலப்பகுதியில் மினுவாங்கொடையைச்சேர்ந்த     நண்பர்      மு.பஷீர்,       எங்கள் இலக்கியவட்டத்தின்        கலந்துரையாடல்களின்போது       குறிப்பிடும்    பெயர்:-     இளங்கீரன்.      இவரது      இயற்பெயர்      சுபைர்.      இவரும்     முழு நேர    எழுத்தாளராக     வாழ்ந்தவர்.
  நீர்கொழும்பில்      எனது       உறவினர்       மயில்வாகனன்     மாமா 1966 காலப்பகுதியில்      தாம்     நடத்திய     அண்ணி     என்ற    சஞ்சிகையின்  முதலாவது      இதழில்      இளங்கீரன்     அவர்களின்     நேர்காணலை  பிரசுரித்திருந்தார்.      அப்பொழுது     எனக்கு       இளங்கீரனைத்தெரியாது.  அந்த      இதழில்     முன்புற -  பின்புற     அட்டைகளைத்தவிர     உள்ளே அனைத்துப்பக்கங்களிலும்      விடயதானங்கள்      கறுப்பு     நிறத்தில் அச்சிடப்பட்டிருந்தன.       ஆனால்,      இளங்கீரனின்       நேர்காணல்     மாத்திரம் சிவப்பு      நிறத்தில்      அச்சாகியிருந்தது.

கூட்டித்துடைத்துத் துப்புரவாக்கவேண்டும். - -வடபுலத்தான்





cleaningவடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் கமல் என்ற கமலேந்திரன் கொலைக்குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

கொலையுண்டதும் கொலைக்குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள்.

அப்படியென்றால் இது உட்கட்சி மோதலா? அல்லது தனிப்பட்ட முறையிலான முரண்பாடா?

எதுவென்று அறிவதற்காக விசாரணைகள் நடக்கின்றன.
ஆனால், இந்த மாதிரியான சம்பவங்களை மக்களும் விரும்பவில்லை. கட்சி அபிமானிகளும் விரும்பியிருக்க மாட்டார்கள்.

இதை அந்தக் கட்சியான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியே கண்டித்திருக்கிறது.

இவற்றை முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு கட்சியின் தலைமைப்பொறுப்பிலிருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சட்டத்துறையிடம் விட்டிருப்பது ஆரோக்கியமான விடயம்.

இந்தச் சம்பவம் அவருடைய கட்சிக்கு நெருக்கடியைக் கொடுத்தாலும் சட்டத்தின் பொறுப்பில் இதை அவர் விட்டிருப்பது கட்சியை பாதுகாக்கக் கூடிய ஒரு நடவடிக்கையே.

அரசாங்கத்தின் செல்வாக்கையோ அமைச்சுப் பதவியின் அங்கீகாரத்தையோ வைத்து அவர் தன்னுடைய ஆட்களைக் காப்பாற்ற முயற்சிக்காமல் சட்டத்திடம் பொறுப்பை ஒப்படைத்திருப்பது பரவாயில்லை.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கொழும்பு – கம்பஹா பகுதியிலும் இதைப்போன்று ஒரே கட்சியைச் சேர்ந்த இருவர் மோதினர். அதில் ஒருவர் கொல்லப்பட்டார். இன்னொருவர் சிறைக்குச் சென்றார்.

தமிழ் சினிமாவின் ஞான பாடல்கள்? - -தமிழ்மகன்

.


தமிழ் சினிமாவின் ஞான பாடல்கள்?

தமிழ் சினிமா பாடல்களில் ஒரு வித நவீனத் தன்மை பெருகி வருகிறது. நவீனத் தன்மையென்றால் பழைய சிந்தனைகளுக்கு மெருகேற்றுவதல்ல.
நீலமலர்கள்' என்ற தமிழ்ப்படத்தில் பார்வை தெரியாத நாயகி நாயகனைப் பார்த்துக் கேட்கிறாள்:
இது இரவா பகலா?
நாயகன் பதில் -ன்னொரு கேள்வியாக அமைகிறது... ''நீ நிலவா, கதிரா?''
அடுத்து பாடல் இப்படி தொடர்கிறது...
இது வனமா மாளிகையா?
''நீ மலரா ஓவியமா?''
மேகம் என்பதும் மின்னல் என்பதும் அருகில் இல்லையா?
''உன் கூந்தல் என்பதில் பூச்சரம் வைப்பதை அறிவாய் இல்லையா?''
இதே பாடல் இப்போது ''உன் சமையல் அறையில் நான் உப்பா, சர்க்கரையா?'' என்று நவீனப்பட்டிருக்கிறது.
நாம் சொல்ல முனைந்தது இத்தகைய நவீனத்துவத்தைப் பற்றியல்ல.
தமிழ் சினிமா பாடல்களில் இப்போது அதிகரித்து வரும் அறிவியல் செய்திகளும் புள்ளிவிவரங்களும்தான் நாம் சொல்லும் நவீனம்.
வைரமுத்து இன்னும் கொஞ்சம் அதிகமாகவே புள்ளிவிவரங்கள் கொடுப்பார்... 'காதலன்' படத்தில் வரும் ''ஊர்வசி ஊர்வசி'' பாடலில் ''உடம்பில் நரம்புகள் ஆறு லட்சம் அதில் காதல் நரம்பு எந்த பக்கம்?'' என்கிறார். அதே பாடலில் ''தமிழில் வார்த்தைகள் மூன்று லட்சம் இரண்டு சொல்லடி அதிகபட்சம் என்று காதலன் காதலியிடம் ஏங்குவான். ''தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து என்னோடு நீ பாடிவா சிந்து'' என்பார் -ன்னொரு பாடலில். ''அட பூகம்ப வேலையிலும் வான்கோழி களவி கொல்லும்'' என்கிறது 'தாஜ்மகால்' படத்தில் இடம்பெறும் அவருடைய பாடல்வரி ஒன்று. உன் விழி ஈர்ப்பு விசையினிலே நான் வந்து விழுந்துவிட்டேன் என்பது போன்ற அவருடைய வார்த்தைப் பிரயோகங்கள் ஏராளம், ஏராளம்.
வாலி நுனிப்புல் மேய்வது போல் சில விஞ்ஞான விஷயங்களைச் சொல்லுவார். விஞ்ஞானத்தைவிட விரசம் சற்று தூக்கலாகவே இருக்கும். 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் ''ராஜா கைய வெச்சா'' பாடலில் காரையும் பெண்ணையும் ஒப்பிடுவார். ''கட்டியவன் விரல்தான் மேலே படணும், கண்டவன் கைபட்டா கெட்டுப் போயிடும்'' என்றும் ''காரும் பெண்போல வேகம் உண்டாக தேகம் சூடேறுமே'' என்றும் ஒப்பிட்டார்.


விழா அழைப்பிதழ் -2013 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது

.


Invitation_Facebook


2013 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது மூத்த தமிழ்ப் படைப்பாளியான தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

நாள் 22. 12. 2013 

இடம் நாணி கலையரங்கம், மணி ஸ்கூல், பாப்பநாயக்கன் பாளையம் கோவை 

நேரம் மாலை 6 மணி

நிகழ்ச்சிகள் 

தீதிந்த அரசியல் தெளிந்தால் மாறும் தேருதல் தானிங்கு தீர்வினைக் கூறும்

.
Inline image 1

உலகச் செய்திகள்


நான்கு மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அபார வெற்றி : காங்கிரஸ் படுதோல்வி

சவூதியில் பாகிஸ்தானிய பிரஜைக்கு தலையை வாளால் வெட்டி மரண தண்டனை

சிங்­கப்­பூரில் இந்­தியப் பிர­ஜையின் மரணம் தொடர்பில் கல­வரம்

பூட்டிய விமானத்தில் சிக்கிய நபர்

நான்கு மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அபார வெற்றி : காங்கிரஸ் படுதோல்வி

09/12/2013   இந்­தி­யாவில் அடுத்த ஆண்டு, பாரா­ளு­மன்ற தேர்தல் இடம்­பெ­ற­வுள்ள நிலையில் தற்­போது நடை­பெற்று முடிந்­துள்ள டில்லி, சத்­தீஸ்கர், ராஜஸ்தான், மத்­தியப் பிர­தேசம் ஆகிய நான்கு மாநி­லங்­க­ளுக்­கான சட்­ட­சபைத் தேர்தலில் பார­திய ஜனதா கட்சி பெரு­வா­ரி­யான வெற்­றியை பெற்­றுள்­ளது. அதே­நேரம், காங்­கிரஸ் கட்சி படு­தோல்­வி­ய­டைந்­துள்­ளது. இந்த தேர்­தலில் குறிப்­பி­டத்­தக்க மாற்­ற­மாக, தலை­நகர் டில்­லியில் 15 ஆண்­டு­க­ளாக ஆட்­சி­ய­மைத்­து­வந்த காங்­கி­ரஸை, புதி­தாக வந்த 'ஆம் ஆத்மி' கட்சி மூன்றாம் நிலைக்கு தள்ளி இரண்டாம் நிலைக்கு உயர்ந்­துள்­ளது. இதன்­மூலம் கடும் பின்­ன­டைவை சந்­தித்­தி­ருக்கும் காங்­கிரஸ் கட்சி, இந்த முடிவு பாரா­ளு­மன்ற தேர்­தலில் எதி­ரொ­லிக்­குமா என்ற கலக்­கத்தில் உள்­ளது.
டில்லி, சத்­தீஸ்கர், ராஜஸ்தான், மத்­தியப் பிர­தேசம் உள்­ளிட்ட மாநி­லங்­களின் சட்­ட­சபைத் தேர்­தல்­களின் வாக்­கு­ப­திவு கடந்த வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்­றது. இத­னை­ய­டுத்துஇ இந்த வாக்­குகள் எண்ணும் பணி நேற்று காலை 8 மணிக்கு ஆரம்­பித்­தது.
 
டில்­லியை இழந்­தது காங்­கிரஸ்
 
ஜன­நா­ய­கத்தின் வெற்றி என்­கி­றது 'ஆம் ஆத்மி' இதில், 70 தொகு­தி­களை கொண்ட டில்லி சட்­ட­சபைத் தேர்­தலில், ஆளும் காங்­கிரஸ் கட்சி மூன்றாம் நிலைக்கு தள்­ளப்­பட்­டது.
34 இடத்தை பெற்று பார­திய ஜனதா கட்சி இந்த மாநி­லத்தில் வெற்­றி­பெற்­றது. அரவிந்த் கெஜ்­ரி­வாலின் 'ஆம் ஆத்மி' கட்சி 27 இடங்­களை பிடித்து இரண்டாம் இடத்தைபெற்றது.

பெண்களும் வர்க்கமும் – சங்க இலக்கியங்களை மையமாகக் கொண்ட ஆய்வு

.
பேராசிரியை அம்மன்கிளி முருகதாஸ்
கிழக்குப்பல்கலைக்கழகம்,
இலங்கை
மனிதசமூகத்தில் அதிகாரக்கட்டமைவு என்பது காலந்தோறும் நிலையான ஒன்றாகவே காணப்படுகிறது. சமத்துவ சமுதாயம் என்பது பெரும்பாலும் சொல்லளவிலேதான் உள்ளது. ஆண்டான்-அடிமை ஏழை -பணக்காரன் முதலாளி -தொழிலாளி ஆண்-பெண் என்ற வேறுபாடுகள் பொருளாதாரத்தினால் கட்டமைக்கப்பட்டவை. பொருளாதார அதிகாரத்திலுள்ளோர் தம்மிலும் அதிகாரத்தில் குறைந்தோரை ஆட்டிப்படைத்தலும் பொருளாதார அதிகாரமற்றோர் அதிகார முடையோரைப் பார்த்துப் பயப்படுவதும் அடிபணிந்து வாழ்தலும் இயல்பான நடவடிக்கைகளாக என்றும் காணப்படுகின்றன. சங்க இலக்கியக் கோட்பாடான திணைக்கோட்பாடானது அக்கால சமூகத்தின் பொருளாதார அசமத்துவ நிலையைப் பிரதிபலிக்கிறது என்பார் கா.சிவத்தம்பி (பார்க்க: திணைக்கோட்பாட்டின் சமூக அடிப்படைகள் -சிவத்தம்பி.கா )
தமிழ் இலக்கியங்களில் மேற்கொள்ளப்பட்ட பெண்கள் பற்றிய பெண்ணிய ஆய்வுகள் பெண்களும் வர்க்கமும் தொடர்பாக ஆய்வு செய்வதில் பெரும்பாலும் கவனஞ் செலுத்துவதில்லை. பெண்கள் எந்த வர்க்கத்திலிருந்தாலும் அவர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாகவே மதிக்கப்படுகின்றனர். எனினும் அப்பெண்கள் வாழும் அவ்வச்சமூகத்தின் சிந்தனைக்கு ஏற்ப தம் சிந்தனைகளையும் வாழ்க்கையையும் கட்டமைத்துக் கொள்கின்றனர். அதாவது ஓரு ஆண்டானின் மனைவி ஆள்பவளாவும் அடிமையின் மனைவி அடிமைப் பெண்ணாகவுமேயுள்ளனர்.இந்த அடிமைப்பெண் தன்னிலும் உயர்ந்த வர்க்க ஆண்களுக்கு மட்டுமல்ல உயர்வர்க்கப் பெண்களுக்கும் அடிமையாகவே இருந்தாள். இங்கே ஆண்டானின் மனைவியின் சிந்தனைக்கும் வாழ்க்கை முறைக்கும் அடிமையாக இருக்கும் பெண்ணின் சிந்தனைக்கும் வாழ்க்கை முறைக்குமிடையே வேறுபாட்டைக் காணலாம்.
வீரயுகத்தின் இறுதிக்கட்டத்தில் இருந்த சங்ககால சமூகமும் அதன் தன்மைகளுக்கேற்ப அதிகாரப் படிநிலையில் உயர்ந்தவர்களையும் அதிகாரத்திற் குறைந்தவர்களையும் கொண்டிருந்தது.

தமிழ் சினிமா


ஆரம்பம்

தமிழ் சினிமாவின் வழக்கமான பழிவாங்கும் கதையை ஆக்ஷனும், த்ரில்லரும் கலந்து சுவாரசியமாக்க முயற்சி செய்திருக்கிறார் விஷ்ணுவர்தன்.
தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் ’தல’ தீபாவளி என்று கொண்டாடக் காத்திருந்த ஆரம்பம் படம் உண்மையிலேயே தீபாவளிக் கொண்டாட்டத்தை வழங்கியிருக்கிறதா?
சென்னையிலிருந்து மும்பைக்கு வரும் சாப்ட்வேர் இன்ஜினியரான ஆர்யாவை கடத்துகிறார் அஜித்.
ஆர்யாவின் கல்லூரித் தோழியும், அஜித்தின் கூட்டாளியுமான நயன்தாரா இதற்கு உதவுகிறார்.
இதில் ஆர்யாவின் காதலி டாப்சியையும் நம்பவைத்து தனது பாதுகாப்பில் வைத்துக்கொள்கிறார் அஜித். மேலும் அவரை வைத்து ஹேக்கிங்கில் தேர்ந்தவரான ஆர்யாவை மிரட்டி காரியம் சாதித்துக்கொள்கிறார்.
இந்நிலையில் ஆர்யாவின் மூலம் செய்தி அலைவரிசை உரிமையாளர் ஒருவருக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்துகிறார். பிறகு அவரைக் கடத்திக் கொல்லும் முயற்சியில் காவல்துறையினரால் கைதுசெய்யப்படுகிறார்.
அஜித் ஏன் இவற்றையெல்லாம் செய்கிறார் என்ற குழப்பத்தில் இருந்த ரசிகர்களுக்கு இடைவேளைக்கு பின்பு தான் தெளிவு கிடைக்கிறது.
உள்துறை அமைச்சர், காவல்துறை உயரதிகாரி மற்றும் செய்தி அலைவரிசை உரிமையாளர் ஆகியோர் இணைந்து செய்யும் ஒரு மாபெரும் ஊழலால் தனது நண்பர் ராணா டகுபதியை இழக்கிறார் அஜித்.
தன் நண்பனின் மரணத்துக்கு காரணமானவர்களை அம்பலப்படுத்துவதோடு பணத்துக்காக பயங்கரவாதத்துக்குத் துணைபோகும் அவர்களின் மற்றொரு திட்டத்தையும் தகர்ப்பதே மீதிக்கதை.
அஜித் ஒரு நேர்மையான அஸிஸ்டண்ட் கமிஷ்னர். படத்திற்கு மையபலம் அஜித் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
சால்ட் அன்ட் பெப்பர் ஸ்டைலில் ஒன் மேன் ஆர்மியாக கலக்கியிருக்கிறார். படத்தில் அஜித்துக்கு வசனங்கள் அதிகமாக கிடையாது. அனைத்தும் ஆக்சன் தான்.
ஆனால் மொத்தமாக கிளைமாக்சில் கேப்டன் மாதிரி ஊழல், லஞ்சம், அரசியல் என சமகாலப் பிரச்சனைகளைப் ‘பன்ச்’ களாக அடித்து பின்னியெடுக்கிறார்.
ராணாவின் தங்கச்சியாக நயன்தாரா வருகிறார். படம் முழுவதும் அஜித் கூடவே இருக்கிறார். நடிப்பிலும் குறை சொல்ல ஒன்றும் இல்லை, கவர்ச்சிக்கும் இடமிருக்கிறது.
சாப்ட்வேர் இன்ஜினியராக வருகிறார் ஆர்யா. துறு துறு நடிப்பில் ஈர்க்கிறார். இவரின் காதலியாக வரும் டாப்ஸி அழகாக இருக்கிறார். சில காட்சிகளில் அவர் வெளிப்படுத்தும் முகபாவங்கள் நச்சென்று இருக்கின்றன.
கடமையைச் செய்யும்போது உயிரிழக்கும் காவல் அதிகாரியாக வரும் ராணா டகுபதி சிறிய பாத்திரம் என்றாலும் மனதில் பதியும் வகையில் செய்திருக்கிறார்.
மற்றொரு நேர்மையான காவல்துறை அதிகாரியாக கிஷோர் தனக்கேயுரிய மிடுக்கான தோற்றத்தில் வந்து தன் பங்கை சிறப்பாகச் செய்திருக்கிறார். வில்லனான மகேஷ் மஞ்ஜுரேக்கர் பேசும் வசனங்கள் நகைச்சுவைக்கு உத்தரவாதம் அளிக்கின்றன.
விஷ்ணுவர்தன் இந்தப் படத்திலும் அஜித்தை மிகவும் ஸ்டைலிஷ்ஷாக காட்டியிருக்கிறார்.
யுவன்ஷங்கர் ராஜாவின் பாடல்கள் எதுவும் நினைவில் தங்கவில்லை. அந்தக் குறையை பின்னணி இசையில் சமன் செய்துவிட்டார்.
ஓம்பிரகாஷின் ஒளிப்பதிவு மும்பையை அதன் இயல்பு மாறாமல் பதிவு செய்திருக்கிறது. துப்பாக்கிச் சண்டைக் காட்சிகளும் கண்களுக்கு அலுப்பூட்டாத வகையில் படம்பிடிக்கப்பட்டிருக்கின்றன.
ஹாலிவுட் படத்திற்கு எந்த வகையிலும் குறைவில்லாமல் தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப விறுவிறுப்பாக செல்கிறது ஆரம்பம்.
ஹாலிவுட் படத்தை அணு அணுவாக ரசித்தவர்களுக்கு வேண்டுமானால் இந்தப்படம் திருப்தியளிக்காமல் போகலாம்.
ஆனால் சாராசரி தமிழ் ரசிகனுக்கு, முக்கியமாக தல ரசிகர்களுக்கு இந்தப்படம் செமத்தியான தீபாவளி விருந்து.
நடிகர்கள்: அஜித், ஆர்யா
நடிகைகள்: நயன்தாரா, டாப்ஸி
ஒளிப்பதிவு: ஓம்பிரகாஷ்
இசை: யுவன்ஷங்கர் ராஜா
இயக்கம்: விஷ்ணுவர்தன்
தயாரிப்பு: ஏ.எம்.ரத்னம், ஏ.ரகுராம்


நன்றி விடுப்பு

தமிழ் சினிமா