01/11/2017 நியூயோர்க்கில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமொன்றில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 15 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
நியூயோர்க் - கீழ் மென்ஹாட்டன் பகுதியில் உள்ள மிதிவண்டிப் பாதை மற்றும் பாதசாரிகளுக்கான பாதைக்குள் திடீரென பிரவேசித்த டிரக் வண்டியொன்று அங்கிருந்த பொதுமக்கள் மீது மோதி தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
குறித்த டிரக் வண்டியை செலுத்தி தீவிரவாதத் தாககுதலில் இடுபட்ட 29 வயதான நபர் நியூயோர்க் நகர பொலிஸாரால் சுடப்பட்ட நிலையில் காயங்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டவர் உஸ்பகிஸ்தானைச் சேர்நத சாய்புலோ  ஹபிபுல்லேவிக் சாய்போ எனவும் இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு அகதியாக அமெரிக்காவிற்கு வந்து புளேரிடா மற்றும் நியூஜேர்சி ஆகிய இடங்களில் வசித்து வந்துள்ளார்.
குறித்த நபர் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படும் டிரக் வண்டி மற்றும் யூபர் தனியார் போக்குவரத்து நிறுவனத்தின் சாரதியாகவும் தொழில் புரிந்துள்ளார்.
ஆயுததாரியிடமிருந்து இரு துப்பாக்கிகளை பொலிஸார் மீட்டுள்ளதாகவும் பொலிஸார் அயுததாரியை சுடும் போது “ அல்லாஹு அக்பர் ” என கத்தியுள்ளதாகவும் அவரது டிரக் வண்டியை சோதனையிட்ட போது ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் கொடியொன்றை மீட்டுள்ளதாகவும் நியூர்க் நகர பொலிஸார் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.