மலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை இல-1 பொலிகை ஜெயா
.
செய்தொழில் உடல் சோரும்
செய்தொழில் உடல் சோரும்
சேயின் குதலையால் மெய் நிமிரும்
இல்லானின் கடின உழைப்புக்கு
இல்லாளின் ஆலிங்கனம் ஒத்தடமாகும்
இல்லாளின் ஆலிங்கனம் ஒத்தடமாகும்
மலரில் மணம் மதியில் குளிர்ச்சிபோல்
மழழைகளின் சிரிப்பில் மலரும் முகம்
மழழைகளின் சிரிப்பில் மலரும் முகம்
ஆஸ்திக்கும் ஆசைக்குமொன்றாய்
ஈன்றெடுத்த இரு கண்மணிகளை
ஈன்றெடுத்த இரு கண்மணிகளை
போர் ஏப்பமிட்டது அறியாது
ஏங்கித்தவித்து புலம்பி ஏறியிறங்கி
ஏங்கித்தவித்து புலம்பி ஏறியிறங்கி
கைகூப்பி காலில் விழுந்து மன்றாடி
கையில் மனுவுடன் அலைகிறது
கையில் மனுவுடன் அலைகிறது
துணையற்ற பாசமிகு தாய்மனசு
காலம் காரிருளாய் நீண்டுபோச்சு
காலம் காரிருளாய் நீண்டுபோச்சு
பெத்தவள் கண்ணீரும் வற்றிப்போச்சு
முகமும் குழியாகி சோபைபோச்சு
முகமும் குழியாகி சோபைபோச்சு
பிள்ளைகளை பார்க்கும் காலம் நீண்டுபோச்சு
பெற்றோர் பேணி பராமரித்தல்
பெற்றோர் பேணி பராமரித்தல்
பிதாமாதாக்களை பிள்ளை பேணுதல்
நாம் குழைக்கும் ஒவ்வொரு கவளத்தையும்
நாம் குழைக்கும் ஒவ்வொரு கவளத்தையும்
நன்றியுள்ளது தனக்கேயென வாய்பார்ப்பதும்
எம்மை பெத்ததுகள் பார்க்கும் காலம்.
எம்மை பெத்ததுகள் பார்க்கும் காலம்.
கவிதை- பொலிகை ஜெயா
தமிழ் எழுத்தாளர் இணைய அகம்
உலகத் தொல்காப்பிய மன்றம்
.
உலகத் தொல்காப்பிய மன்றம்
தொடக்க விழாவும், முதல் கலந்துரையாடல் கூட்டமும்
நாள்: 27.09.2015 இடம்: பாரிசு(பிரான்சு)
தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூல் தொல்காப்பியமாகும். 1847 இல் மழவை மகாலிங்க ஐயர் அவர்கள் தொல்காப்பிய நூலை ஓலைச்சுவடியிலிருந்து அச்சுவடிவில் முதன்முதல் பதிப்பித்தார்(தொல், எழுத்து, நச்சர் உரை). எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாக உள்ள இந்த நூலில் 1600 நூற்பாக்கள் இடம்பெற்றுள்ளன. இதில்உள்ள இலக்கணச் செய்திகளும், மொழியியல் செய்திகளும் உலக மொழியியல் வல்லுநர்களால் பெரிதும் வியந்து பார்க்கும் தரத்தில் உள்ளன. இந்த நூல் குறித்துத் தமிழறிஞர்களும், அயலகத்து அறிஞர்களும் சிறந்த ஆய்வுகளை நிகழ்த்தியுள்ளனர். தொல்காப்பியத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழாய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தொல்காப்பியத்தின் உண்மைப் பொருளையும் நுண்மைப் பொருளையும் காட்டும் வகையில் உரையாசிரியர்கள் உரைவரைந்துள்ளனர். தொல்காப்பியத்தை வழிமொழிந்து பல இலக்கண நூல்கள் தமிழில் வந்துள்ளன. தொல்காப்பியம் பிறமொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தொல்காப்பியம் பாடநூலாகக் கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் வைக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியம் குறித்த ஆய்வுகள், பதிப்புகள் தொடர்ந்து வெளிவந்தவண்ணம் உள்ளன.
சிசு. நாகேந்திரனுக்கு 95 வயது. முருகபூபதி
.
காலம் தரித்து
நிற்பதில்லை. அதனால்
வயதும் முன்னோக்கியே நகர்ந்து கொண்டிருக்கும். இறுதியில் முதுமை வரும்பொழுது
உடன் வரும் நண்பர்கள் தனிமை, இயலாமை, நனவிடை தோயும் இயல்பு. எல்லாம் போதும் என்ற
மனப்பான்மை.
எழுத்தாளர்,
ஆய்வாளர், நடிகர், ஒளிப்படக்கலைஞர்
கலைவளன்
சிசு.
நாகேந்திரனுக்கு 95 வயது.
முதிய
வயதிலும் தமிழ் அகராதி
எழுதியவர்
ஆயினும் -
முதுமையிலும் ஒருவர் அயராமல் இயங்குவதென்பது கொடுப்பினை. அவ்வாறு
மருத்துவனையில் தங்கியிருக்கும் வேளையிலும் தமிழ் அகராதியொன்றை
தயாரிப்பதற்காக குறிப்புகளை பதிவு செய்துகொண்டிருக்கும் எம்மத்தியில் வாழும் ஒரு மூத்தவர்
பற்றியதே இந்தப்பதிவு.
அவர்தான் அவுஸ்திரேலியா மெல்பனில் வதியும் பல்துறை ஆற்றல் மிக்க கலைவளன் சிசு. நாகேந்திரன்.
அவருக்கு நேற்று 09-08-2015
ஆம் திகதி 95 வயது பிறந்தது.
அவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டே இந்தப்பதிவை தொடருகின்றேன்.
இந்த 95 வயதிலும்
அயராமல் இயங்கி கலை, இலக்கிய
மற்றும் சமூக நிகழ்வுகளுக்கு வருகைதரும் எழுத்தாளர் சிசு. நாகேந்திரன் அவர்கள், அவுஸ்திரேலியாவில் வருடந்தோறும் தமிழ் எழுத்தாளர் விழாவை நடத்திவரும் தமிழ் இலக்கிய
கலைச்சங்கத்தின் காப்பாளர். சில வருடங்களுக்கு முன்னர் இந்த அமைப்பின் தலைவராகவும் பணியாற்றியவர்.
திரும்பும் கடிதங்கள் ( Return to Sender ) - வா மணிகண்டன்
.
அமெரிக்க வாழ் நண்பரொருவர் ஒரு படத்தை பரிந்துரைத்திருந்தார். அவர் மரண தண்டனைக்கு ஆதரவானவர். ஒரு குற்றத்தினால் பாதிக்கப்பட்டவனின் மனநிலையிலிருந்து அந்தப் பிரச்சினையை அணுகினால் மரண தண்டனை சரியானதுதான் என்கிற முடிவுக்கு வந்துவிடலாம் என்று சொல்லியிருந்தார்.
கதையின் நாயகி செவிலியராக இருக்கிறாள். அறுவை சிகிச்சை செய்யும் செவிலியராக வேண்டும் என்பதுதான் அவளது லட்சியம். அதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறாள். கிட்டத்தட்ட பணிமாற்றம் உறுதியாகிவிட்டது. அதே சமயத்தில் ஒரு வீடு வாங்கவும் விரும்புகிறாள். அதற்காக ஒரு தரகரை அணுகுகிறாள். அவளுக்கு பிடித்தமான வீடும் அமைந்துவிடுகிறது. புது வீடு; புது வேலை- மிக சந்தோஷமாக இருக்கிறாள். நாயகியுடன் அவளுடைய அப்பாவும் அவர் வளர்க்கும் ஒரு செல்ல நாயும் இருக்கிறார்கள். நாயகிக்கும் நாய்க்கும் ஏழாம் பொருத்தம். அவளுக்கு அப்பாவைப் பிடிக்கிறது. ஆனால் நாயைப் பிடிப்பதில்லை. நாய் பிடிக்கவில்லை என்பதெல்லாம் ஒரு பிரச்சினையா? வாழ்க்கை வெகு அமைதியாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது.
இந்தச் சமயத்தில் அவளுடைய தோழி கெவின் என்னும் மனிதரைப் பற்றிச் சொல்கிறாள். கெவினுடன் பழகிப் பார்க்கச் சொல்லி பரிந்துரைக்கிறாள். ஒருவேளை பிடித்திருந்தாள் நாயகி தனிமையிலேயே இருக்க வேண்டியதில்லை என்பது தோழியின் பரிந்துரைக்கான காரணம். காதலில் விழக் கூடும் அல்லவா? அதற்கு நாயகியும் சம்மதிக்கிறாள். கெவினைச் சந்திக்க ஒத்துக்கொண்ட நாளன்று நாயகியின் வீட்டுக்கு யாரோ ஒருவன் வருகிறான். வந்திருப்பவன் கெவினாக இருக்கக் கூடும் என்று நாயகி நம்புகிறாள். அவனை உள்ளே வரச் சொல்கிறாள். காத்திருக்கச் சொல்லிவிட்டு அவள் உள்ளே சென்றவுடன் வந்தவன் அத்து மீறுகிறான். தனது அனைத்து பலத்தையும் முயன்று பார்க்கிறாள். ஆனால் அவனுக்கு முன்னால் அவளது பலம் வேலைக்கு ஆவதில்லை. அவளுடன் முரட்டுத் தனமாக மோதி அவளைச் சூறையாடுகிறான். காரியம் முடிந்தவுடன் அவன் தப்பி ஓடுகிறான்.
கோயிலும் சங்கமும் - சிறுகதை - கே.எஸ்.சுதாகர் -
நாட்டிற்குப் புதிதாக வந்து நண்பர்
செந்தி வீட்டில் ஒரு மாதம் குதூகலமாக இருந்தோம். வீடு ஒன்று வாடகைக்கு எடுத்துக்
கொண்டு போகும் போது, "எங்களுக்குக் கிட்ட பத்து நிமிஷம் கார் ஓடும் தூரத்தில் ஒரு கோயில் இருக்கு"
என்று நண்பர் சொன்னார். முதலிலேயே சொன்னால் எங்களை அங்கே கூட்டிக் கொண்டு போக
வேண்டி வரலாம் என நினைத்து அவர் இதை எங்களுக்குச் சொல்லவில்லை.
நண்பர் கோயிலுக்கு எல்லாம் போவதில்லை.
நண்பரின் குடும்பத்திற்கும் கரப்பான் பூச்சிக்கும் ஏதோ ஒரு வகையில் பூர்வ ஜென்மத்
தொடர்பு இருந்திருக்க வேண்டும். கரப்பான் பூச்சிகள் வெளிச்சத்தைக் கண்டு பதகளித்து
ஓடுவது போல, அவர்களும்
மனிதர்களைக் கண்டு பதட்டப்பட்டு ஓட்டமெடுக்கின்றார்கள். கடைகளுக்குப் போய் வருவது
என்றால் கூட ஒரு 'ஒட் ரைமில்'தான் போய் வருகின்றார்கள். அதுவும்
சுவர்க்கரையோரமாக பதுங்கிப் பதுங்கியே போய் வருகின்றார்கள்.
வீடு மாறும் போது கார் ஒன்றும்
எடுத்துக் கொண்டோம்.
கல்லும் சொல்லாதோ கதை (சிறுகதை) - முருகபூபதி
.
திருவிழா ஆரம்பமாகிவிட்டது.
இனி உற்சவமூர்த்திகள்
உற்சாகமாக வலம் வருவார்கள்.
பக்தர்களும் 'அடியார்' களும் உற்சவமூர்த்திகளைத் தேடி ஓடிவருவார்கள்.
கலகலப்புக்கும், பரபரப்புக்கும், பதட்டத்திற்கும் இனி குறைவிருக்காது.
கொடிகள் , கோபுரங்களில், கட்டிடங்களில், மரங்களில், மின்கம்பங்களில், வீடுகளில், வாகனங்களில் வண்ணம் வண்ணமாக
ஏறி காற்றில் அசைந்து இனம்காண்பிக்கும்.
பச்சை, நீலம், சிவப்பு. இப்படி வர்ணங்களில் அவை பட்டொளி
வீசும்.
ஆனால், கறுப்பு,
வெள்ளைக் கொடிகள் வடக்கிலும் கிழக்கிலும் யுத்தம்புரியச்சென்று மரணித்து பரலோகம் சென்றவர்களின் இல்லங்களில் மாத்திரம் சோகத்தை பறைசாற்றிக்கொண்டு காற்றில் அசையும்.
உற்சவமூர்த்திகள் வண்ணப்படங்களில் சுவர்களில் அலங்கரிப்பர். வானொலிகளில் குரல் எழுப்புவர். தொலைக்
காட்சிகளில் தரிசனம் தருவர். பத்திரிகைகளில் கைகூப்பியும்,
கையசைத்தும் காட்சியளிப்பர்.
புல்லடிகளுக்குப் பக்கத்திலிருக்கும் உருவங்களுக்கு மரியாதை பிறக்கும்.
'ஸ்ரீ
ஜயவர்தனபுர '
பக்கம் சென்று வராதவர்கள் - மக்கள்
பக்கம் செல்லாமலேயே 'ஆசனங்களில்
' அமர்வதற்கு ஆசைப்படுவர்.
திருவிழா களைகட்டத் தொடங்கியிருப்பதனால், ' தேங்காய்கள் ' உடைக்கப்பட்டு எறிந்து சிதறப்படும்.
இலங்கைச் செய்திகள்
மஹிந்த புலிகளுக்கு 2200 மில்லியன் பணம் வழங்கியுள்ளார்: ரணில் புதிய தகவல்
சுனாமியின்போது காணாமல் போன சிறுவன் 11 வருடங்களின் பின் பெற்றோரிடம் ஒப்படைப்பு
அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக டுவிட்டரில் நாமல்
பிரதமர் பதவி வேறொருவருக்கே : மைத்திரி மஹிந்தவுக்கு கடிதம்
வித்தியா படுகொலை வழக்கு நால்வருக்கு நேரடித் தொடர்பு
மஹிந்த புலிகளுக்கு 2200 மில்லியன் பணம் வழங்கியுள்ளார்: ரணில் புதிய தகவல்
12/08/2015 விடுதலைப் புலிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டு தடவவைகள் பல மில்லியன்கள் கணக்கான பணத்தை வழங்கியுள்ளார். முதல் தடவை 200 மில்லியன் ரூபா பணத்தையும், 2005 ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர் நிறுவனம் ஒன்றின் ஊடாக 2000 மில்லியன் ரூபா பணத்தை வழங்கியிருந்தார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உலகச் செய்திகள்
சிங்கப்பூரின் 50 ஆவது சுதந்திர தினம்
சொலமன் தீவுகளை உலுக்கிய 6.9 ரிச்டர் பூமியதிர்ச்சி
கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக தமிழர் நியமனம்
நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த குண்டுகள் மீது மண்டியிட்டு அமர்ந்திருக்கச் செய்து 10 கைதிகளுக்கு மரணதண்டனை
நைஜீரிய சந்தையில் குண்டுத் தாக்குதல் 47 பேர் உயிரிழப்பு
சீனாவில் மண்சரிவு; 40 பேரைக் காணவில்லை
சீன துறைமுகத்தில் களஞ்சியசாலையில் வெடிப்பு
எகிப்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய பணயக்கைதி படுகொலை
54 பயணிகளுடன் இந்தோனேஷிய விமானம் மாயம்
இந்தியாவின் 69 ஆவது சுதந்திர தின விழா
சிங்கப்பூரின் 50 ஆவது சுதந்திர தினம்
10/08/2015 சிங்கப்பூரின் 50 ஆவது ஆண்டு சுதந்திர தினம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அந்நாடெங்கும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
தமிழ் சினிமா
செல்வந்தன்
தெலுங்கு திரையுலகின் இளவரசனாக வலம் வரும் மகேஷ் பாபு முதன்முறையாக தமிழ், தெலுங்கில் வெளியாகியுள்ள திரைப்படம் செல்வந்தன்.
கடைசியாக நடித்த சில படங்கள் தொடர் தோல்வியை தழுவ இப்படத்தில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இறங்கி அடித்துள்ளார் மகேஷ் பாபு.
ஸ்ருதிஹாசன், ஜகபதி பாபு, சம்பத்ராஜ், பிரேமானந்தம் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தை பிரபல இயக்குனர் கொரடலா சிவா இயக்கியுள்ளார்.
படத்தின் கதை
மிகப்பெரும் கோடிஸ்வரனாக வலம்வருபவர் ஜகபதி பாபு. இவரது ஒரே மகன் மகேஷ் பாபு வெளிநாடுகளில் படித்து நாடு திரும்புகிறார். தொழிலில் விருப்பம் இல்லாமல் திரியும் இவர் ஸ்ருதிஹாசனை சந்திக்கிறார்.
பார்த்ததும் காதல் பற்றிக்கொள்ள ஒரு கட்டத்தில் தான் யார் என்பதை ஸ்ருதிஹாசனுக்கு மகேஷ்பாபு சொல்ல காதலை மறுக்கிறார்.
என்னுடைய தாத்தா அவர்களது சொந்தம் பற்றி தெரியும், பணக்காரனாக இருக்கும் உனது பூர்வீகம் பற்றி தெரியுமா என்று கேட்கிறார்.
அதன் பின்னர் தனது சொந்த ஊருக்கு செல்கிறார். அங்கே ஊரில் ஏகப்பட்ட பிரச்சனைகள், மேலும் தனது தந்தை தொழிலிலும் ஒரு பிரச்சனை, ஸ்ருதிஹாசனின் காதல்.
இது அனைத்திலும் வெற்றி பெற்றாரா என்பதே மீதிக்கதை..
நடிகர், நடிகைகள்
பெண்கள் ரசிக்கும் விதமாக மகேஷ் பாபு மிக அழகாக பளிச்சிடுகிறார். ஆக்ஷனிலும் பின்னி எடுக்கிறார். ஸ்ருதிஹாசனும் தனது பங்கை வெளிப்படுத்துகிறார். ஆனால் அவருக்கு கிராமத்து வேடம் பொருந்தவில்லை. ஜகபதி பாபு தான் அனுபவ நடிகர் என்பதை வெளிப்படுத்துகிறார்.
தொழில்நுட்ப கலைஞர்கள்
தேவிஸ்ரீ பிரசாத் தனது வழக்கமான அதிரடி இசையில் மிரட்டியுள்ளார். மதியின் ஒளிப்பதிவு ரசிக்கும்படி அமைந்துள்ளது. சண்டைக்காட்சிகளில் அனல் அரசு பின்னி எடுத்துள்ளார். தனது திறமையான திரைக்கதையால் மெருகேற்றியுள்ளார் இயக்குனர் கொரடலா சிவா.
க்ளாப்ஸ்
அதிரடியான வசனங்கள், ஜகபதிபாபுவின் ப்ளாஷ்பேக் காட்சிகள். இடைவேளைக்கு முந்தைய மற்றும் இரண்டாம் பாதி காட்சிகள்.
பல்ப்ஸ்
யூகிக்க கூடிய கதை, முதல் பாதி காட்சிகள், ஸ்ருதிஹாசனின் மேக்அப்பை குறைத்திருக்கலாம்.
மொத்தத்தில் மீண்டும் ரசிகர்களின் பிரின்ஸ் ஆனார் இந்த செல்வந்தன்.
Rating: 3.25/5
நன்றி cineulagam
Subscribe to:
Posts (Atom)