தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில்

 தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை  அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு

கலாச்சார மண்டபத்தின் கட்டிடப்பணிகளுக்கான முதற்கட்ட நிலத்தடி பணிகளை தொடங்கிய சிட்னி முருகன்

 உங்கள் நீண்டநாள் கனவான கலாச்சார மண்டபத்தின் கட்டிடப்பணிகளுக்கான முதற்கட்ட நிலத்தடி பணிகளை தொடங்கிய சிட்னி முருகன் கோவிலுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

இந்த திட்டம் செயல்படுத்தப்பட வழிவகுத்த, 7 மில்லியன் டாலர் கூட்டமைப்பு நிதி ஒதுக்கீட்டை உறுதிப்படுத்திய Andrew Charlton MP அவர்களுக்கு பெருந்தனிவாழ்த்துகள்.

மாநகர மேயர் ஓலா ஹமேட், மாநில உறுப்பினர் ஹ்யூ மெக்டெர்மட் (பிராஸ்பெக்ட் ProspectHugh McDermott MP, மற்றும் கம்பர்லாந்து நகரசபை கவுன்சிலர் சுமன் சாஹா Suman Saha ஆகியோருக்கும் நன்றிகள்.



வள்ளி மணாளன் மஞ்சத்தில் வருகிறான் ! 

 











 



 


 

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் …..  அவுஸ்திரேலியா

 

வள்ளி மணாளன் மஞ்சத்தில் வருகிறான்
உள்ளம் உருகிட திருமுறை ஒலிக்கிது
கள்ளம் களைய கந்தன் வருகின்றான்
மெள்ளவே மஞ்சம் வீதியிலே வருகிறது

வாடிய பயிரென நின்றிடு மடியார்
வாட்டம் போக்கிட மஞ்சத்தில் வருகிறான்
நாடிடும் அடியார் கூடியே குவிகிறார்
வேலவன் மஞ்சம் மெள்ளவே வருகிது

மஞ்சம் பார்த்திட மங்கையர் வருகிறார்
தம்பிகள் தங்கைகள் கூடவே இணைகிறார்
அப்பாவும் அம்மாவும் அரோகரா என்கிறார்
அரனார் மைந்தன் மஞ்சத்தில் வருகிறார்

நினைவழியா வடுக்கள் - சிவா சின்னப்பொடி நூல் நயப்பு : கானா பிரபா

 ஈழத்தமிழினத்தின் இருண்ட வரலாற்றில் இன வாதத்தால் விளைந்த போரின் அனர்த்தங்கள் எவ்வளவு தூரம் பேசுபொருளாக இருக்கிறதோ அது போலவே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட “சாதீய” வன்*முறைகள்.  
ஈழத்தில் நிகழ்ந்த சாதி ஒடுக்குமுறைகளும் அவற்றுக்கு எதிரான கிளர்ச்சிகளும் எழுத்து ஆவணங்களாகவும், நேரடி சாட்சியங்களாகவும் இன்றும் உலாவுகின்றன.
அப்படியொரு ஆளுமை தான் சகோதரர் சிவா சின்னப்பொடி.

வலைப்பதிவு காலத்தில் இருந்து சுமார் 20 வருடப் பழக்கம் இருந்தாலும்,அவரின் “நினைவழியா வடுக்கள்” படித்த பின்புதான் யாழ்ப்பாணத்தில் தொண்ணூறுகளின் நடுப்பகுதி வரை நான் வாழ்ந்திருந்தாலும், எண்பதுகளுக்கு முந்திய அதாவது தாயக சுதந்திர வேட்கையோடு கிளம்பிய புதிய யுக மாற்றத்துக்கு முந்திய காலப்பகுதி வரை அதி தீவிரம் பெற்றிருந்த சாதிய ஒடுக்கு முறைகளின் அனுபவங்களின் கொடுமையைத் தீவிரமாக அவர் எழுத்தினூடே வாசிக்க முடிந்தது.
பல இடங்களில் கண் தரித்து நின்று இரத்தக் கண்ணீர் வராத குறை.

சிவா சின்னப்பொடி அண்ணரின் பிறப்பு, அதற்கு முற்பட்ட இரண்டு தலைமுறைகள் சாதிய ஒடுக்குமுறைகளால் நாளாந்தம் அனுபவித்த துயர்கள் இவற்றின் நீட்சியாகத் தன் பத்து வயது வரை நேரே சந்தித்த, தீண்டாமையால் விளைந்த இழப்புகளை ஒரு டயரி போலப் பதிந்து கொண்டே போகிறார். தன்னுடைய அனுபவக் குறிப்புகளின் இறுதி அத்தியாயத்தில் ஒரு முழு மனிதனாக அவர் வெள்ளாள மேலாதிக்கத்தைத் தாண்டி கல்வியில் மேன்மை பெற்றதோடு முடிக்கவில்லை. இன்றும் இலை மறை காயாக, நேரடியாக புலம் பெயர்ந்த சூழலிலும் சாதிப் பாகுபாடு பார்க்கும் நம் தமிழரின் முகங்களை அடையாளப்படுத்துகிறார்.
இந்த நூலின் தனித்துவம் அல்லது அவரின் தனித்துவம் அதுவெனலாம். ஏனெனில் இவ்விதம் ஒடுக்கப்பட்ட மக்களில் இருந்து வெளிக்கிளம்பி மேன்மை பெற்ற பலர் தம் அடையாளத்தை மறைத்து, அல்லது தம் சமூகம் குறித்த பிரக்ஞை எழுதுவுமற்ற போலிகளாக இருப்பதையும் சந்தித்தித்திருக்கிறோம்.
இங்கே சிவா சின்னப்பொடி அண்ணர் தன் சமூகத்தை அடையாளப்படுத்தி, இன்னும் ஓயவில்லை இதுவென்கிறார்.
பொதுவாக சாதிய ஒடுக்குமுறைகளால் அல்லற்பட்ட சமூகத்தினர் சக தீண்டாமை ஒழிப்பு செயற்பாட்டாளர்கள், பொதுவுடமைப் போராளிகள், இனவாதத்துக்கு எதிராகத் தோன்றிய இயக்கங்கள் என்று இந்த மூன்று புள்ளிகளும் ஒருமித்துச் சந்திக்கும் மனிதர்கள் மிக அரிது. அல்லது ஒருகட்டத்தில் பிறழ்வு நிலைக்குப் போய் விடுவார்கள். ஆனால் இந்த மூன்று நோக்கிலும் ஒரு “தெளிவான” பார்வை கொண்ட சிவா சின்னப் பொடி, இன விடுதலையைப் புறந்தள்ளும் கள்ளத்தனமற்றவராகவே அடையாளப்படுகிறார்.

சிவனார் நண்பர் செந்தமிழ் சுந்தரர் !

 




















மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் …..  அவுஸ்திரேலியா 




அரனார்  தொண்டராய் அருகி லிருந்தார்
அவரின் மனத்தில் காமம் எழுந்தது
காமனை எரித்தவர் சாபம் கொடுத்தார்
அரனின் தொண்டர் அவனியில் பிறந்தார்

புவனியில் பிறவென அரனார் மொழிந்தார்
தொண்டர் திகைத்து தாழினை பணிந்தார்
கவலை விட்டிடு காப்பேன் என்றார்
புவனியில் தொண்டர் பயணந் தொடர்ந்தார்

அந்தண குலத்தில் பிறந்தார் அடியார்
அழகாய் இருந்ததால் சுந்தரர் ஆனார்
அழகுக் குழந்தையை அரசன் கண்டான்
ஆசைப் பட்டுக் குழந்தையைக் கேட்டான் 

மொழி தமிழாய் தாயாய் என்னோடு உள்ளது!


-சங்கர சுப்பிரமணியன்.




மொழி அம்மா என அழைக்க வைத்தது
மொழி அகரத்தை முதன்மை ஆக்கியது
மொழி வள்ளுவனை மொழியச் செய்தது
மொழி முப்பாலை படைத்தும் நின்றது

மொழி எனை இலக்கியவழி நடத்தியது
மொழி இன உணர்வையும் தந்துள்ளது
மொழி வரலாற்றின் பெருமை பேசியது
மொழி இன்று காக்கும் நிலையில் உளது

மொழி உயிரொடும் ஊணொடும் கலந்தது
மொழியைக் காப்பது நம் கடமை ஆனது
மொழி வேற்று மொழியையும் படைத்தது
மொழி பிறமொழியில் வேர்ச்சொல் ஆனது

திருப்பதி ஆண்டவர் - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்.


 மகா விஷ்ணுவே வெங்கடாசலபதிபாலாஜி என்ற பெயர்களில் திருப்பதியில் எழுந்தருளி உள்ளார். ஒருசமயம் மகாவிஷ்ணுவிற்கும் அவரது துணைவியான மகாலக்ஷ்மிக்கும் சிறிது சர்ச்சை ஏற்பட்டது.
அதனால் விஷ்ணு மனம் நொந்து ஒரு இடத்தில் போய் அமர்ந்துவிட்டார். இவரை சுற்றி கறையான் புற்று எழுந்துவிட்டது. ஒரு இடையனோ ஏதோ காரணத்தால் தன் கையில் உள்ள கோடரியால் கறையான் புற்றை தகர்க்க முனைந்தான். இதனால் மகாவிஷ்ணு காயப்பட்டு இரத்தம் வடிய ஆரம்பித்தது. உடனே பார்வதி தேவியார் பிரசன்னமாகி தனது தலை முடியில் ஒரு பகுதியை வெட்டி விஷ்ணுவின் வெட்டுக்காயத்தில் கட்டுப்போட்டார். இந்த செயலை நினைவு கூறும்   முகமாகவே பக்த கோடிகள் திருப்பதியில் தமது தலை முடியை இறைவனுக்கு சமர்ப்பிக்கிறார்கள் என்பதே ஐதீகம்.

 இவ்வாறு தனது தலைமுடியை காணிக்கையாக கொடுகக்க வரும் பக்தர்களின் தலை முடியை எடுக்க 1000 ஆண் நாவிதர்கள்,பெண்களின் முடியை எடுக்க 50 பெண் நாவிதர்கள் உண்டு.இவர்கள் ஷிப்ட் முறையில் நாள் பூராவும் தலை முடிகளை மழிக்கிறார்கள்.

குபேரனின் மருகரான திருப்பதி வெங்கடாசலபதியின் ஆடை ஆபரணங்கள் மிகுந்த படாடோபமானது,. அவரது முதல் கிரீடத்தை அவரது மாமனாரான குபேரனே அவருக்கு கொடுத்தார் என நம்பப்படுகிறது. நான் தமிழகத்தில் வாழ்ந்த காலத்தில் The Hindu பத்திரிகையில் வெங்கடாசலபதிக்கு மிக உயர்ந்த ரக வைரங்கள் பதிப்பித்த கிரீடம், வைரத்திற்கு பெயர் பெற்ற பெல்ஜியத்தில் இருந்து தருவிக்கப்பட்டதாக படத்துடன் செய்தி பிரசுரமாகி இருந்தது, இதன்பெயர் வஜ்ஜிர கிரீடம். இது 28,367 வைரங்கள் பதிப்பிக்கப் பட்ட விலையுயர்ந்த அரிய கற்களால் ஆக்கப்பட்டது,. இதுதவிர வெங்கடாசலபதி 110 கிலோ எடை உள்ள ஆபரணங்களை அணிந்திருப்பார். அவரது அபய கரமான வைகுண்ட கஸ்தம் தங்கத்தினால் ஆனது. பல விலையுயர்ந்த முத்து,மாணிக்கம்,வைரம் , வைடூரியம் பதிக்கப்பட்டிருக்கும்  அவரது ஆடையான வேஷ்டியோ தங்கத்தினாலான நூலால் நெய்யப்பட்டிருக்கும். அதன் எடை மட்டும் 40 கிலோ,.

Dr சிவா - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 1975ம் ஆண்டு தொடக்கம் சிவாஜி நடித்த பல படங்கள் அவர் ஏற்று


நடித்த பாத்திரங்களை உணர்த்தும் வகையில் படத்தின் பெயராக அமையப் பெற்று வெளிவந்தன. ஜெனரல் சக்ரவர்த்தி, ஜஸ்டிஸ் கோபிநாத், பைலட் பிரேம்நாத், லாரி டிரைவர் ராஜ்கண்ணு, போன்ற பெயர்கள் அவர் நடித்த படங்களுக்கு வழங்கப் பட்டன. அந்த வரிசையை ஆரம்பித்து வைத்த படம் தான் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த Dr சிவா. 


 படத்தில் நவீன டாக்டராக சிவாஜி நடித்திருந்தார். வித்தியாசமான

தலை முடி ஸ்டைல் , வாயில் பைப் , கோட் என்று படம் முழுவதும் காட்சியளிக்கிறார் சிவாஜி. அதே போல் படம் முழுவதும் அவரின் நடிப்பு வியாபித்திருக்கிறது. டாக்டரின் சாந்தம், காதலியிடம் கொஞ்சல், காதலியின் அண்ணியிடம் காட்டும் பரிவு, தங்கையை கெடுத்தவனை அடித்து விட்டு பின்னர் அவனிடம் கெஞ்சுவது என்று தன்னுடைய நடிப்பின் மூலம் டாக்ட்டர் பாத்திரத்துக்கு உயிர் கொடுக்கிறார் டாக்டர் சிவா(ஜி ).

  படத்தில் அவருக்கு ஜோடி மஞ்சுளா. மஞ்சுளா இருந்தால் படத்தில் கிளுகிளுப்புக்கு பஞ்சம் இருக்காது என்பது தெரிந்த விஷயம். இப் படத்திலும் டூ பீஸ் அணிந்து , உள்ளாடைகளுடன் நீரில் நீந்தி விளையாடுகிறார் . ஆனால் படத்தின் பிற்பகுதியில் சோக நடிப்பை வழங்கி நெகிழச் செய்கிறார் அவர். 

 படம் முழுதும் கத்துவதற்காக சுந்தரராஜனுக்கு பணம் கொடுத்திருக்கிறார்கள் போல. ஒரே இம்சை. எம் ஆர் ஆர் வாசு கூட அடக்கி வாசித்துள்ளார். பண்டரிபாய் சாந்த சொரூபம் . மனோரமா, வி . கே. ஆர், ராஜபாண்டியன், காந்திமதி, பிரேம் ஆனந்த் என்று பலர் இருக்கிறார்கள். இவர்களுடன் நாகேஷும் சில காட்சிகளில் இருக்கிறார். படத்தில் நாகேஷ், மனோரமா இருந்தும் இருவரும் ஜோடி சேராமல் நடிக்க, எம் ஆர் ஆர் வாசு மனோரமாவுடன் ஜோடியாக நடித்தார். இவர்களுடன் ஜெயமாலினி இந்தப் படத்தில்தான் அறிமுகமாகிறார் . 

சிட்னி / மெல்பேர்ன் / கன்பரா / பிரிஸ்பேனில் நடைபெறும் நிகழ்ச்சிகள் 2025

 .

உங்கள் நிகழ்ச்சிகளை இலவசமாக பிரசுரிக்க   tamilmurasu1@gmail.com  or  paskiho@hotmail.com , murasuau@gmail.com என்ற முகவரியில்  தொடர்பு கொள்ளவும்



                              

சிட்னியில் நடைபெறும் நிகழ்வுகள்                    

27-09- 2025  Sat: சிட்னி சிலோன் லயன்ஸ் கிளப் வழங்கும் நடன, இசை நிகழ்ச்சி at The Bryan Brown Hall, Bankstown 6pm.:'

29-11- 2025  Sat: Australian Medical Aid Foundation proudly presents முத்தமிழ் மாலை

1983ம் ஆண்டு கறுப்பு ஜூலையில் கொழும்பில் தீக்கிரையாக்கப்பட்ட ரியோசினிமா - வெள்ளித்திரையின் நிழல்களும் ஒரு தேசத்தின் ஆன்மாவும்

 Published By: Rajeeban

28 Jul, 2025 | 05:36 PM


sakuna m .gamage

2025 ஜூலை மாதம் அமைதியான ஆனால் உறுதியான சிறிய குழுவினர் கறுப்பு ஜூலையை நினைவுகூருவதற்காக கொழும்பு கனத்தை சுற்றுவட்டத்தில் கூடினார்கள்.1983 இல் இலங்கை தமிழர்களிற்கு எதிராக வன்முறையாக மாறிய வாரம்.

13 படையினர் கொல்லப்பட்டமைக்கான எதிர்வினையாக ஆரம்பித்தது பின்னர் அரசஆதரவுடனான இனக்கலவரமாக மாறியது.ஆயிரக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்இஒரு தலைமுறையின் கனவுகள்,உறவுகள், எதிர்காலம் ஆகியவை புகைமண்டலத்திற்குள்ளும் இடிபாடுகளிற்குள்ளும் புதைக்கப்பட்டது.

இது வெறுமனே கலவரம் இல்லை.இது ஒருநாட்டின் தார்மீக திசைகாட்டியை உடைத்தெறிதல்,இலங்கையின் மனிதநேயத்தில் ஒரு ஆழமான முறிவு.கறுப்பு ஜூலை இலங்கையின் மூன்று தசாப்தகால யுத்தத்தின் ஆரம்பமாக கருதப்படுகின்றது.

ஆனால் அது தமிழர்களின் அடையாளமே அழிக்கப்பட்ட கலாச்சார அழிப்பிற்கான ஒரு முக்கிய தருணமாகவும் இருந்தது.தமிழர்களின் அடையாளமே எரிக்கப்பட்டது.

எரிக்கப்பட்ட வீடுகள் மற்றும் சூறையாடப்பட்ட கடைகளிற்கு மத்தியில் மிகவும் நுட்பமான பேரழிவு இடம்பெற்றது.இது பன்முகத்தன்மை கொண்ட தேசத்தின் பகிரப்பட்ட கதைகள் , பாடல்களை சாம்பலாக்கியது.ஒரு காலத்தில் கூட்டு கற்பனை 

தீப்பிழப்புகளின் உள்ளே சில தவறுகள்

வரலக்ஷ்மி விரதம் வெள்ளிக்கிழமை, 8 ஆகஸ்ட் 2025


 

வரலக்ஷ்மி விரதம் வெள்ளிக்கிழமை, 8 ஆகஸ்ட் 2025

 



வரலக்ஷ்மி தேவிக்கு வணக்கம்!

அவள் அதிருஷ்டங்களை அருளுபவள், அவரது பாதங்கள் தாமரையின் போல அமைந்துள்ளன, ஒவ்வொரு அடியிலும் அருமை தொங்குகிறது. 
அவள் மன்மதனின் தந்தையான விஷ்ணுவின் அன்புக்குரியவள், உருகிய பொன்னைப் போன்ற ஒளியுடன் கம்பீரமாக திகழ்பவள்.
அவளது பிரகாசம் கோடானுகோடி சூரியனின் ஒளிக்குச் சமமானது.
அவள் பக்தர்களுக்குப் பரிசுகளைக் கொடுக்க சுலபமாக இருக்கிறாள், அவள் உண்மையுடன் வழிபடுபவர்களை பாதுகாப்பாள்.
தாமரையின் மாலையால் அலங்கரிக்கப்படுபவள்.
அவள் நற்குணத்தின் உருவகமாக இருப்பவள், கேசவனின் (கிருஷ்ணர்) இதயத்தில் விளையாடுபவள்.

வரமஹாலட்சுமி விரதம் என்பது விஷ்ணு பகவானின் துணைவியான மகாலட்சுமி தேவியை வழிபட ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு புனித விழாவாகும்.
வரலக்ஷ்மி என்பது வரங்களை அருளும் தேவியின் பெயர்.
இது கல்யாணமான பெண்களால் ஆழ்ந்த பக்தியுடன் செய்யப்படும் முக்கியமான பூஜையாகும்.
‘வரமஹாலட்சுமி விரதம்’ எனப்படும் இந்த ஹிந்துவிழா, ஶ்ராவண மாதத்தில், பௌர்ணமிக்கு முந்தைய இரண்டாவது வெள்ளிக்கிழமை அல்லது பூரணமியுக்கு முந்தைய வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது — இது ஜூலை–ஆகஸ்ட் மாதங்களுக்கிடையிலான காலமாகும்.

இந்த நாளில் வரலக்ஷ்மி தேவியை வழிபடுவது என்பது அஷ்டலட்சுமிகளை (ஐஷ்வர்யம், பூமி, ஞானம், பாசம், புகழ், சமாதானம், திருப்தி மற்றும் பலம்) வழிபடுவதற்குச் சமமானதாக நம்பப்படுகிறது.

SVT-வில் ‘வரலக்ஷ்மி விரதம்’ 2025 ஆகஸ்ட் 8ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
விழா காலை 10.00 மணிக்கு
ஸ்ரீ மகாலட்சுமி மற்றும் ஸ்ரீ ஆண்டாள் தேவிகளுக்கு அபிஷேகம் நிகழும்.
அதனைத் தொடர்ந்து அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெறும்.

இலங்கைச் செய்திகள்

செம்மணி மனித புதைகுழி :  இதுவரை 118 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

வட மாகாணத்தில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு ஜப்பான் அதரவு

செம்மணி மனித புதைகுழி: ஸ்கேன் பரிசோதனைக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி தேவையில்லை – சட்டத்தரணி ரணிதா ஞானராஜா

வடக்கு மாகாணத்தில் பின்தங்கிய கல்வித்தரத்தை முன்னேற்ற கல்விமான்கள் புதிய திட்டங்களை உருவக்க வேண்டும் - அகில இலங்கை இந்து மாமன்றம்

உள்ளக பொறிமுறையால் நீதி கிடைக்காது ; தொடர்ச்சியான கோரிக்கையை புறந்தள்ளும் ஐ.நா! - வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கம்!  



செம்மணி மனித புதைகுழி :  இதுவரை 118 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

Published By: Vishnu

31 Jul, 2025 | 07:09 PM

யாழ்ப்பாணம், அரியாலை செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் வியாழக்கிழமை (31)  முன்னெடுக்கப்பட்ட போது புதிதாக மூன்று மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

உலகச் செய்திகள்

இஸ்ரேலிய படையினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ள காசா மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது - பெருமளவு சுகாதார பணியாளர்களும் சிறைகளில்

அவசர மருத்துவ உதவி தேவைப்படும் சிறுவர்களை காசாவிலிருந்து பிரிட்டன் கொண்டு செல்ல திட்டம் - பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர்

 பாலஸ்தீன அதிகாரிகளிற்கு வீசா வழங்கப்போவதில்லை - தடைகளையும் விதிப்போம் - அமெரிக்கா

ஒஸ்கார் விருதுபெற்ற பாலஸ்தீனியர்கள் பற்றிய திரைப்படத்தை உருவாக்குவதற்கு உதவிய பாலஸ்தீனியர் யூதகுடியேற்றவாசியால் சுட்டுக்கொலை-இஸ்ரேல் இப்படித்தான் எங்களை அழிக்கின்றது - ஒவ்வொருவராக - நண்பர் கருத்து

பாகிஸ்தானுடனான போர் நடவடிக்கைகளை நிறுத்தியது ஏன்? - இந்திய பாதுகாப்பு அமைச்சர் விளக்கம்



இஸ்ரேலிய படையினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ள காசா மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது - பெருமளவு சுகாதார பணியாளர்களும் சிறைகளில்

Published By: Rajeeban

28 Jul, 2025 | 10:38 AM

காசாவை சேர்ந்த 28 மருத்துவர்கள் இஸ்ரேலிய சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள பாலஸ்தீனத்தை சேர்ந்த சுகாதார பணியாளர்கள் கண்காணிப்பு அமைப்பு  அவர்களில் எட்டு பேர் அறுவை சிகிச்சை எலும்பியல் சிகிச்சை தீவிரசிகிச்சை குழந்தைநோயியல் மருத்துவம் இருதயவியல் போன்றவற்றில் நீண்டகால அனுபவம்மிக்க மருத்துவ ஆலோசகர்களாக பணியாற்றியவர்கள் என தெரிவித்துள்ளது.

வரலட்சுமி பூஜை - 08/08/2025


 எங்கள் Regents Park ஸ்ரீ துர்காதேவி ஆலயம் வரலட்சுமி பூஜையை 2025 ஆகஸ்ட் 8 (வெள்ளிக்கிழமை) மாலை 5.00 மணி முதல் விசேஷ ஹோமம் மற்றும் அபிஷேகம், தீப பூஜை மற்றும் மஞ்சள் தோரண (தோரகை) பூஜையுடன் கொண்டாட உள்ளது.

உலகில் உள்ள எட்டு சக்திகளும் – ஆதிலட்சுமி (மூல சக்தி), தனலட்சுமி (செல்வம்), வீரலட்சுமி அல்லது தைரியலட்சுமி (தைரியம்), வித்தையலட்சுமி (ஞானம்), சந்தானலட்சுமி (சந்ததி/குடும்ப வளர்ச்சி), விஜயலட்சுமி (வெற்றி), தனியலட்சுமி (உணவு), மற்றும் கஜலட்சுமி (வலிமை) – இவை அனைத்தும் மகாலட்சுமி தேவிக்கு உரியவை.

புராணங்களில் வரலட்சுமி விரதத்தை அனுசரிக்கும்போது, ஒரு பெண்ணுக்கு வாழ்க்கை முழுவதும் இந்த எட்டு லட்சுமிகளின் ஆசீர்கள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

சிட்னி சிலோன் லயன்ஸ் கிளப் வழங்கும் நடன, இசை நிகழ்ச்சி 27/09/2025



முத்தமிழ் மாலை 29/11/2025