விலகல் -- எம். ரிஷான் ஷெரீப்

.


அடைமழை பெய்தோய்ந்த
நள்ளிரவுக்கு முன்னரான பொழுதின் வளி
குளிரில் ஒடுங்கிக் கண்ணாடியில் தன்னைப் பார்க்கும்
பனியை விரலிலேந்தி கடைசிப் பேரூந்திலிருந்து இறங்கினாய்

பகலை விடவும் இருளிடம் இருக்கின்றன
பல்லாயிரம் விழிகள்
அன்று ஒவ்வொரு விழியின் துளியுமிணைந்து
தெருவெங்கும் குட்டைகளாய்த் தேங்கியிருந்ததை
தாண்டித் தாண்டி நீ வந்த காட்சி
இருளின் கறுப்புத் திரைக்குள் மறைந்தது

பட்ட மரத்தின் அடிப்பாகத்தில்
புற்றெழுப்பும் கரையான்களைக்
கொத்த வரும் சாம்பல்குருவிகளை
பொறி வைத்துப் பிடிக்க ஆவலெழும்
வேட்டைக் கதைகளை நீ கொண்டிருந்தாய்

மறந்திராத நினைவில் பேராசிரியர் கார்த்திகேசு.சிவத்தம்பி - கானா பிரபா

.
இன்று ஜூலை 6 ஆம் திகதி ஈழத்தின் கல்விப்பெருந்தகை பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்த மூன்றாவது ஆண்டாக அமைகின்றது. ஈழம் உள்ளிட்ட உலகத்தமிழ்ச் சமுதாயத்தின் அடையாளங்களில் ஒன்றாக இயங்கியவர் சிவத்தம்பி அவர்கள். 
அவர் இல்லாத இந்த மூன்று ஆண்டுகளைத் திரும்ப நினைத்துப் பார்க்கும் போதுதான் நமது கல்விச் சமூகத்தின் எவ்வளவு பெரிய ஆளுமையை இழந்து விட்டோம் என்ற இழப்பின் கனப்பை ஆசானின் பங்களிப்பை முழுமையாக அறிந்தவர்கள் உணர்வர். கல்விமானாகவும், திறனாய்வாளராகவும் இயங்கிய சிவத்தம்பி அவர்களை ஈழத்தில் இயங்கி வந்த இன்னொரு பல்கலைக்கழகமாகவே நான் கருதுவேன். 
என்னுடைய வானொலி வாழ்வின் பதினைந்து வருட காலகட்டத்தில், எத்தனையோ பகிர்வுகளைச் செய்வதற்கு அவர் உறுதுணை புரிந்திருக்கின்றார் என்ற நினைப்பைச் சாதாரணமாகக் கடந்துவிட முடியாத அளவுக்கு அவர் தந்த பல்வேறு ஒலிப்பகிர்வுகளைக் கேட்கும் போதெல்லாம் உணர்வேன். எனக்கு மட்டுமன்றி பொதுவாகவே அனைவருக்கும் அணுகக்கூடிய மிகச் சில கல்விமான்களில் அவர் தலையாயவர். தன்னுடைய இறுதிக்காலம் வரை அதை ஒரு தவமாகவே பின்பற்றியிருக்கின்றார். "

மேற்கு அவுஸ்திரேலியா தமிழ் அரங்கு நிகழ்வில் ஏகோபித்த குரல்

.
தமிழை    உயிர்ப்புடன்   வாழவைக்க    புகலிடத்  தமிழர்கள்  தமது    வீட்டிலே  தமிழ்    பேசுங்கள்
மேற்கு  அவுஸ்திரேலியா   தமிழ்  அரங்கு   நிகழ்வில்  ஏகோபித்த  குரல்


தமிழர்கள்  தாம்  எங்கு  வாழநேரிட்டாலும்   தமது   வாழ்விடங்களில் தமிழில்   பேசவேண்டும்.  புகலிட  வாழ்வு   எம்மையும்  எமது சந்ததியினரையும்  தாய்மொழியிலிருந்து அந்நியப்படுத்திவிடாமலிருக்க  நாம்  முயற்சி   செய்யவேண்டும் - என்று  மேற்கு    அவுஸ்திரேலியா   மாநிலத்தில்  பேர்த்   நகரத்தில் கடந்த   ஞாயிற்றுக்கிழமை  29  ஆம்   திகதி  நடந்த  தமிழ் அரங்கம் நிகழ்வில்  உரையாற்றியவர்களின்   கருத்தில்   ஏகோபித்த  குரல் எழுந்தது.
மேற்கு  அவுஸ்திரேலியா   தமிழ்ச்சங்கமும்   பேர்த்  மாநகர ஸ்ரீபால முருகன்   ஆலயமும்  இணைந்து  பாலமுருகன்   ஆலய  மண்டபத்தில் நடத்திய  தமிழ் அரங்கம்   நிகழ்வில்   இக்கருத்து  வலியுறுத்தப்பட்டது.
ஸ்ரீபால முருகன்  ஆலய  நிருவாக  அமைப்பின்   தலைவர்    திரு. ஜெயசீலன்   மங்கள   விளக்கேற்றி   இந்நிகழ்வை  தலைமையேற்று நடத்தினார்.
                         மேற்கு   அவுஸ்திரேலியா   தமிழ்ச்சங்கத்தின்  தலைவர்  திரு. அருண். அண்ணாதுரையின்   வரவேற்புரையுடன்  தொடங்கிய  தமிழ்  அரங்கு   நிகழ்வில்  மெல்பனிலிருந்து   வருகை    தந்து கலந்து கொண்ட  எழுத்தாளரும்   ஊடகவியலாளருமான  திரு. லெ.முருகபூபதி    வாழ்வு   அனுபவமும் படைப்பு   இலக்கியமும்    என்னும்    தலைப்பில்  உரையாற்றுகையில், இலக்கியத்துறையில்    கட்டுரைகள்   கருத்துக்களையும்   படைப்பு இலக்கியங்களான  கவிதை,   சிறுகதை,  நாவல்,  புனவிலக்கிய பதிவுகள்  வாழ்வு    அனுபவங்களையும்  வழங்குகின்றன  எனவும் தொடர்பாடல்    மனித  வாழ்வுக்கு   முக்கியமானது -  மின்னல் வேகத்திற்கு    இணையாக    தொடர்பாடல்   நவீன   மின்னியல் சாதனங்களில்    வீச்சோடு    பயணித்தாலும்  மனிதர்கள்  பரஸ்பரம்  உரையாடல்    தொடர்பாடல்களை    பேணிக்கொள்ளவேண்டும்    எனவும்  குறிப்பிட்டார்.
ஒவ்வொருவரிடமும்   வாழ்வு   பற்றிய  புரிதல்  அனுபவங்கள் நிரம்பியிருந்தாலும்    படைப்பு    இலக்கியவாதிகள்தான்    அவற்றை பதிவுசெய்து   வருகிறார்கள்.    அந்தப்பதிவுகளில்   வாசகர்கள் தங்களைத் தேடிக்கொள்கிறார்கள்.   அனுபவங்கள்   தொடர்பாடலிலும் தங்கியிருக்கின்றன.   தங்குதடையற்ற    தொடர்பாடல்தான் விக்ரோரியா    மாநிலத்தில்   வசிக்கும்  தனக்கு    இன்று    மேற்கு அவுஸ்திரேலியா    மாநிலத்தில்   பேர்த்    மாநகரத்தில்  பேசுவதற்கு சந்தர்ப்பம்   வழங்கியிருக்கிறது    என்றும்    முருகபூபதி  தமது உரையில்    குறிப்பிட்டார்.

திரும்பிப்பார்க்கின்றேன் -- முருகபூபதி


கிழக்கிலங்கையின்   மண்வாசனையை    இலக்கியப்படைப்புகளில்  பரவச்செய்த    மருதூர்க்கொத்தன்
                                                     

பல   படைப்பாளிகள்   தமது   இலக்கியப்பிரதிகளை  எழுதும்பொழுது இயற்பெயரை  விடுத்து   புனைபெயர்களில்    அறிமுகமாவார்கள்.   பலர்   தமது   பிறந்த  ஊருக்குப்பெருமை   சேர்க்கும்   வகையில் தமக்குத்தாமே   ஊருடன்   இணைந்த  புனைபெயர்களை சூட்டிக்கொள்வார்கள்.
பின்னாளில்  அவர்களின்    இயற்பெயரை    பிறப்புச்சான்றிதழ் -பதிவுத்திருமண   சான்றிதழ் -  மரணச்சான்றிதழ்களில்தான் காணமுடியும்.    இலக்கிய   வட்டத்திலும்   குடும்ப  மட்டத்திலும் புனைபெயரே   நிலைத்துவிடும்.
கிழக்கு   மாகாணத்தில்   இஸ்மாயில்    என்ற   பெயரில்  ஒரு எழுத்தாளர்  இருந்தார்    எனச்சொன்னால்  எவருக்கும்  தெரியாது. மருதூர்க்கொத்தனையா  சொல்கிறீர்கள்   என்று   அவருக்கு  மிகவும் நெருக்கமான   சிலரே    குறிப்பிடுவார்கள்.
கிழக்கு   மாகாணத்தில்   கல்முனைக்கு   அருகாமையில்   பெரிய நகரமும்   அல்லாமல்   சிறிய   கிராமமாகவும்   காட்சியளிக்காத கடலோர   சிற்றூர்   மருதமுனை.
இந்த   ஊரில்  மருதூர் ஏ. மஜீத்  -   மருதூர்க்கனி   -   மருதூர் வாணன் என்ற   பெயர்களில்   எழுதியவர்களின்   வரிசையில்   முன்னோடியாக இருந்தவர்   மருதூர்க்கொத்தன்.
1935  ஜூன்  மாதம்  6  ஆம்  திகதி   அநுராதபுரத்தில்   பிறந்த   இஸ்மாயில்   என்ற    மருதூர்க்கொத்தன்    (இன்று  அவர்  உயிருடன் இருந்திருந்தால்  79   ஆவது   வயதை   குடும்பத்தினருடனும் இலக்கிய   நண்பர்களுடனும்    கொண்டாடியிருப்பார்.)  2004 ஆம் ஆண்டு  ஏப்ரில்  மாதம்  19  ஆம்   திகதி  மறைந்தார்.
  மருதமுனையில்தான்    வாழ்க்கைத்துணையை  பெற்றார்.
மருதமுனையில்   முன்னர்    அரசினர்  தமிழ்  ஆண்கள் பாடசாலையாக   விளங்கிய    இன்றைய    பிரபல்யமான  அல் - மனார் மத்திய   கல்லூரியில்   பயின்ற   காலத்தில்   புலவர்மணி  ஆ.மு. ஷரிப்புத்தீன்   மற்றும்   வைரமுத்து    ஆகியோரின் மாணக்கராகவிருந்து    அட்டாளைச்சேனை   மற்றும்   பலாலி ஆசிரியப்பயிற்சிக்கலாசாலைகளிருந்து   பயிற்றப்பட்ட   ஆசிரியராக கல்விப்பணிக்கு   வந்தார்.


இலங்கைச் செய்திகள்


கடல் கொந்தளிப்பு:மக்கள் அவதானமாக இருக்கவும்

 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை 

இலங்கை வரும் பாப்பரசர் வடக்கிற்கும் விஜயம் செய்வார்!

17 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

ஞானசார தேரருக்கு அமரிக்காவுக்குள் நுழைய தடை

 "சிறிய பிரச்சினையை முஸ்லிம்கள் சர்வதேச மயப்படுத்திவிட்டனர், எம்மீது கைவைத்தால் முழு நாடும் கொந்தளிக்கும்'

பொதுபலசேனாவின் பின்னணியில் பாதுகாப்புச் செயலாளர் உள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு அடிப்படையற்றது : இராணுவப் பேச்சாளர்

விசா­ரணைக் குழு­வுடன் தொடர்­பு­கொள்­கின்­ற­வர்கள் பழி­வாங்­கப்­ப­டவோ அச்­சு­றுத்­தப்­ப­டவோ கூடாது :ஐரோப்­பிய ஒன்­றியம்

பயிற்சிகளை இன்று நிறைவு செய்த தமிழ் யுவதிகள் இராணுவத்தில் இணைப்பு

புலி சந்தேக நபர்கள் நால்வர் மலேசியாவில் கைது : சந்திரிக்காவை கொல்ல முயற்சித்தவரும் அடங்குவதாக தகவல்

இந்தோனேஷியாவில் நான்கு இலங்கையர்கள் கைது

==================================================================

கடல் கொந்தளிப்பு:மக்கள் அவதானமாக இருக்கவும்

01/07/2014   மன்னார் - பொத்துவில் ஊடாக காலி வரையான கடற் பரப்பு கொந்தளிப்பாக காணப்படும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 80 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனவும், எதிர்வரும் 24 மணித்தியாலத்துக்கு இந்த காலநிலை தொடரும் எனவும் வானிலை அவதான நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்த பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி வீரகேசரி 




சங்க இலக்கியக் காட்சிகள் 14- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

.
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.

காட்சி 14

என்னிடம் திரும்பி வந்தான், எதையோ விரும்பிச் சென்றான்!

பண்டைத் தமிழகத்திலே ஆண்கள் பல்வேறு பணிகளுக்காக நாடுவிட்ட நாடு செல்வது சாதாரணமான விடயம். அரசனின் தூதுவராக அல்லது ஒற்றராகச் செல்வோர், வியாபார நோக்கத்திற்காகச் செல்வோர், வௌ;வேறு தொழில்கள் மூலம் பொருளீட்டச் செல்வோர் என்றிப்படி இன்னோரன்ன காரணங்களுக்காக ஆண்கள் ஊர் விட்டு ஊர், நாடு விட்டு நாடு செல்வார்கள். நாட்கணக்கில், மாதக்கணக்கில் மட்டுமல்ல சிலவேளை வருடக்கணக்கில்கூட வெளியிடங்களிலே அவர்கள் தங்கவேண்டி வரலாம். அக்காலங்களில் மனைவியை, காதலியை மற்றும் குடும்பத்தவரைப் பிரிந்திருக்கும் துன்பம் நேரும். ஆண்களைப் பிரிந்த பெண்கள் வீட்டிலிருந்தபடி பிரிவுத் துயரிலே வாடித் தங்கள் துணைவர்கள் திரும்பிவருகின்ற நாளை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். இத்தகைய விடயங்களைக் கூறும் பாலைத்திணையில் அமைந்த பாடல்கள் சங்க இலக்கியங்களிலே ஏராளமாக உள்ளன. அத்தகைய ஒரு பாடல் சொல்லும் காட்சியொன்றை இங்கே பார்ப்போம்.

திருவலகை / தேங்கா துருவி - மணிமேகலா

.

தொழில் நுட்பம் வளர்ந்திட்டுது கண்டியளோ? பழைய சாமானுகளையும் சாப்பாடுகளையும் அதின்ர ருசியையும்  காணுறது இனி வலு கஸ்டம்.’புட்டும் தேங்காய் பூவும் போல’ எண்டு இலங்கையின்ர  கிழக்கு பகுதியில் வாழுற  தமிழ் முஸ்லீம் சனங்களச் சொன்ன பழமொழி இப்பவும் காதில கேட்டுக் கொண்டிருக்கு.

திருவலகை எண்ட உடனம்  நினைவுக்கு வந்தது இந்தத் புட்டு + தேங்காய்ப்பூ கலவை.

புட்டையும் தேங்காய் பூவையும் கலந்து சுடச்சுட சாப்பிடுறது  ஒரு தனி ருசி. அதுக்குள்ள சீனியும் கலந்து சாப்பிடுவினம் சில பேர். இன்னும் கொஞ்சப்பேர் இருக்கினம் வாழைப்பழத்தையும் அதோட  பினைஞ்சு   சாப்பிடுவினம். புட்டும் மாம்பழமும் கூட நல்லாய் தான் இருக்கும்.

இன்னொரு விதமான combination உம் இருக்கு. அது புட்டும் முட்டைப் பொரியலும் அல்லது புட்டும் கத்தரிக்காய் பொரியலும். கொஞ்சப் பேருக்கு புட்டும் மீன் குழம்பும் பிடிக்கும். வேற சிலர் இருக்கினம் அவைக்கு  கத்தரிக்காய் பொரிச்ச குழம்பு வேணும். அல்லாட்டில்  சுடச் சுடப் புட்டும் பழைய வெந்தயக் குழம்பும். அதெண்டாச் சொல்லி வேலை இல்லை.

உலகச் செய்திகள்


சென்னையில் 11 மாடி கட்டடம் இடிந்து விபத்து: பலியாகியோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு

 புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்த படகொன்றிலிருந்து 30 சடலங்கள் மீட்பு

ஈராக்குக்கு மேலும் 200 இராணுவ வீரர்களை அனுப்ப ஒபாமா ஒப்புதல்

ஜெருசலேமில் இளைஞன் படுகொலை : பிராந்தியத்தில் பதற்ற நிலை

========================================================================

சென்னையில் 11 மாடி கட்டடம் இடிந்து விபத்து: பலியாகியோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு

30/06/2014   சென்னை போரூர் அருகே 11 மாடி கட்­டடம் இடிந்து விழுந்து தரை­மட்­ட­மானதில் பெண் உட்­பட 11 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். கட்­டட இடி­பா­டு­களில் 50 பேர் வரை சிக்­கி­யி­ருப்­பதால் பலி­யா­கியோர் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கக்­கூடும் என அஞ்­சப்­ப­டு­கிறது.


2013 ஆம் ஆண்டுக்கான கனடா இலக்கியத்தோட்டம் விருதுகள்

.

jakirraja.jpgவழங்கப்பட்டிருக்கின்றன. சிறந்த புனைவெழுத்தாளருக்கான கிருபாகரன் சின்னத்துரை நினைவு விருது கீரனூர் ஜாகீர் ராஜாவின் ‘ஜின்னாவின் டைரி’ என்ற நூலுக்காக வழங்கப்பட்டிருக்கிறது.
கீரனூர் ஜாகீர் ராஜா
கீரனூர் ஜாகீர்ராஜா தமிழின் இளந்தலைமுறை எழுத்தாளர்களில் முக்கியமானவர்.பழைய தஞ்சைமாவட்டத்தின் பின்னணியில் இஸ்லாமிய அடித்தள மக்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் துருக்கித்தொப்பி,கருத்தலெப்பை, மீன்காரத்தெரு போன்ற குறிப்பிடத்தக்க படைப்புகளை ஆக்கியிருக்கிறார்.
கீரனூர் ஜாகீர் ராஜாவின் எழுத்துமுறையை ஒருவகை குறைவுறச்சொல்லல் [மினிமலிசம்] என்று சொல்லலாம். விவரிப்புகள் சித்தரிப்புகள் ஆகியவை மிகக்குறைவாகவும் கூடுமானவரை புறவயமான நிகழ்ச்சிகளையும் உரையாடல்களையும் மட்டுமே சொல்லிச்செல்பவையுமான அழகியல் கொண்டவை அவரது ஆக்கங்கள். 

ஆயிரம் பிறை கண்ட அதிபர் ஒறேற்றர்

.
Nantri uthayan 

153 இலங்கைத் தமிழர்களை அரசாங்கத்திடம் ஒப்படைப்பது இரகசியமானதல்ல: டோனி அப்போட்



03/07/2014  இந்தியாவிலிருந்து 153 இலங்கைத் தமிழர்களை ஏற்றிக்கொண்டு அவுஸ்திரேலியா கிறிஸ்மஸ் தீவுக்கருகில் வந்தடைந்த இலங்கையர்களை அவுஸ்திரேலியா அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்க எடுக்கும் முயற்சி இரகசியமானதல்ல என அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட்  தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,
இலங்கையில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு மனித உரிமை நிலைமைகளில் பாரியளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சட்டம் ஒழுங்கு நிலைமைகளில் சாதகத் தன்மை ஏற்பட்டுள்ளது. 
பாதுகாப்பான முறையில் புகலிடக் கோரிக்iகாயளர்களை கடல் வழியாக திருப்பி அனுப்பி வைப்பது தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்றாகும் எனவும் அவர் குறிப்பிட்டார். நன்றி வீரகேசரி 

153 இலங்கைத் தமிழர்களை அரசாங்கத்திடம் ஒப்படைப்பது படுகொலை செய்வதற்கு சமம்:அவுஸ்திரேலியா தமிழ்க் காங்கிரஸ்

என்னை விடு!‏

.
Nantri 

கனடா தின கவிதை"

.

News Service





பல்லினம் வாழும் கனடாவாம்
பன்மொழி பேசும் கனடாவாம்
நல்லிணக் கத்தைக் காப்பாற்றி
யாவரும் வாழும் கனடாவாம்! 
தனித்தனி யாயெம் பண்பாட்டின்
தனித்தனி யாயெம் தாய்மொழியின்
தனித்துவம் பேணிக் காக்கின்றோம்!
சகலரும் சேர்ந்து வாழ்கின்றோம்!! 

சிட்னித் தமிழ் அறிவகம்

.



பட்டம் விடுவோம் பாலா ஓடிவா --வந்தியத்தேவன்

.
"பட்டம் விடுவோம் பட்டம் விடுவோம் பாலா ஓடிவா" சின்ன வயதில் ஆடிப்பாடிய பாடல். பட்டம் என்பது எங்கள் வாழ்க்கையுடன் ஒன்றிணைந்த இன்னொரு விசயம். வாலாக்கொடி, கொடி என இடத்துக்கு இடம் பெயர் மாறுபட்டாலும் பொதுவாக பட்டம்(காற்றாடி) என்றே அழைப்பார்கள்.



பெரும்பாலும் நவம்பர் மாத கடைசியில் பட்டக்காலம் தொடங்கிவிடும் அதாவது சோளகக் காற்று வீசத்தொடங்க பொடிபெட்டையெல்லாம் வெட்டை வெளிகளிலும் தோட்டக்காணிகளிலும் தங்கள் பொழுதைக் கழிப்பார்கள். பெரும்பாலான பெற்றோருக்கு பட்டம் காலம் வந்தால் கரைச்சல்தான். டிசம்பரில் பாடசாலை விடுமுறை என்பதாலும் பட்டக் காலம் என்பது மாணவர்களிடையே சந்தோஷமான நாட்கள். எப்படியும் பொங்கல் வரை பட்டம் ஏற்றி பட்டதாரியாகிவிடுவார்கள்.

தமிழ் சினிமா


வடகறி




 தமக்கு சொந்தமில்லாத ஒரு பொருளை அடைய நினைத்தால், என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க வேண்டியது வரும் என்பதை சொல்லும் படம் தான் ‘வடகறி'.இப்படம் வருமா? இல்லை வராதா? என 1000 கேள்விகள் சுத்திக் கொண்டிருக்க, ஒரு வழியாக படம் இன்று வந்துவிட்டது.படம் வெளிவருவதற்கு முன்பே எல்லோரும் படத்தை பெரியளவில் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டனர், இதற்கு முழு காரணம் கவர்ச்சி புயல் சன்னி லியோன் இதில் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார் என்பது தான்.

கதை என்ன?

‘மெடிக்கல் ரெப்’பாக வேலை செய்யும் ஜெய்க்கு, சுவாதியைப் பார்த்ததும் அவரைக் காதலிக்க வேண்டும் என்ற ஆசை பிறக்கிறது. ‘நல்ல ஃபோன் வச்சிருக்கிறவங்களைத்தான் பொண்ணுங்க விரும்புவாங்க’ என ஆர்.ஜே.பாலாஜி கொடுக்கும் ஒரு கேவலமான அறிவுரையால், விலையுயர்ந்த ஃபோனை வாங்க வேண்டும் என ஆசைப்படுகிறார் ஜெய்.ஆனால், வீட்டு சூழ்நிலை காரணமாக அவரால் விலையுயர்ந்த போனை வாங்க முடியாமல் போகிறது. இந்நிலையில் டீக்கடை ஒன்றில் அனாதையாக கிடக்கும் ‘ஐபோன்’ ஒன்று ஜெய்யின் கைக்கு கிடைக்க, தன்னிடம் வந்த ஐபோனை சம்பந்தப்பட்டவரிடமே கொடுத்துவிடலாம் என ஜெய் நினைக்கும்போது, நண்பர்கள் அவர் மனதை மாற்றி அந்த போனை அவரையே வைத்துக் கொள்ளச் சொல்கிறார்கள்.அவருக்கும் அது சரி எனப்படவே அதிலிருக்கும் சிம் கார்டை எடுத்துவிட்டு, தன் சிம்மைப் போட்டு அந்தப் போனை பயன்படுத்தத் தொடங்குகிறார். ஆனால், இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் மனம் மாறும் ஜெய், சம்பந்தப்பட்டவரிடமே போனை ஒப்படைத்துவிடலாம் என நினைத்து, பழைய சிம்மை மீண்டும் மாற்றுகிறார்.அப்போது வரும் ஒரு போன் காலுக்கு பதிலளிக்கும் ஜெய்க்கு அடுத்தடுத்து பல பிரச்சனைகள் வெடிக்கின்றன. அது என்ன பிரச்சனை? அதிலிருந்து ஜெய் மீண்டாரா இல்லையா? என்பதே ‘வடகறி’ படத்தின் மீதிக்கதை!

பலம்

ஜெய்யின் எதார்த்த நடிப்பும், ஆர்,ஜே.பால்ஜியின் டைமிங் டையலாக்கும் தான், படத்தை எந்த இடத்திலும் அலுப்பு தட்டாமல் கொண்டு செல்கிறது.இவர்களைத் தவிர வெங்கட் பிரபு, கஸ்தூரி, மிஸா கோஷல், அருள்தாஸ் என ஆங்காங்கே சில பிரபலங்கள் வந்து போகிறார்கள். ஒரே ஒரு தேவையில்லாத பாடலுக்கு வந்து ஆட்டம் போட்டிருக்கிறார் ‘கவர்ச்சிக் கன்னி’ சன்னி லியோன். இதுவே படத்திற்கு கூடுதல் பலத்தை தருகிறது. படத்தில் அடிக்கடி வரும் அந்த செல்போன் காமெடி கொஞ்சம் எரிச்சலை வரவைக்கிறது.

பலவீனம்

திரைக்கதை இந்த மாதிரி சேஸிங் படங்களுக்கு வேகமாக இல்லாதது பெரிய மைனஸ். பாடல்கள் சுமார் ரகம் தான், யுவன் இசையமைத்திருக்கும் உயிரின் மேலொரு பாடல் மட்டும் ரசிக்க வைக்கிறது. ஒளிப்பதிவும் நன்றாகவே உள்ளது.மொத்தத்தில் வடகறியை ஒரு தடவைக்கு மேல் டேஸ்ட் செய்ய முடியாது.

























- cineulagam


















வேலையில்லா பட்டதாரி ட்ரைலர்!



இந்தியன் புருஸ்லீ என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படுபவர் தனுஷ். இவர் நடிப்பில் வெளிவரயிருக்கும் 25வது படம் தான் வேலையில்லா பட்டதாரி. இப்படத்தை முதன் முதலாக பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் தனுஷுன் நண்பருமான வேல்ராஜ் இயக்கியுள்ளார்.ட்ரைலர் ஆரம்பத்திலேயே தனுஷ் வழக்கம் போல் ‘ஒரு இண்டர்வியுல போய் நாலு வார்த்தை இங்கிலிஷ் பேசுறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா?’ என்று தன் அப்பாவான சமுத்திரகனியிடம் கேட்கிறார். அதிலிருந்து தொடங்குகிறது, தனுஷுன் அக்மார்க் பார்முலா. பின்பு தமிழ் சினிமாவில் தொன்றுதொட்டு வருவது போல் அமலா பாலுடன் காதல், பாடல் தான், மீண்டும் பொறுப்பாக ஒரு வேலைக்கு தனுஷ் செல்வது போலவும், அதில் வரும் பிரச்சனை, பின் தொழிலாளர்கள் தலைவன் ஆவது போல் ஏதோ தெரிகிறது. கண்டிப்பாக இந்த படத்தில் திருவிளையாடல் தனுஷை பார்க்காலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இதில் இன்னும் ஸ்பெஷலாக நம் எல்லோருக்கும் பிடித்த விவேக்கும் அவர் பங்கிற்கு வசனங்களில் கலக்குகிறார். ட்ரைலரின் இறுதியாக ‘ரகுவரனை வில்லனாக தான் பார்த்திருப்ப, ஹீரோவா இனி தான் பார்க்க போற’ என்று சொல்லி சிகரெட்டை பற்ற வைக்கும் போது ரஜினி ஸ்டெயில் தெரிகிறது. படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கப்போவது அனிருத்தின் இசை தான்.மொத்தத்தில் மீண்டும் கலகல தனுஷை பார்ப்பது உறுதி. நன்றி cineulagam