மரண அறிவித்தல்

.
திரு சிவதம்பு வைத்திலிங்கம் வடிவேல் ஜூன் மாதம்  18 ம் திகதி பிற்பகல் 3.15 மணிக்கு காலமானார்.

கவிதை - காவிரிமைந்தன்


.
தனிமை

ஓங்கி வளரும் தென்னை
ஒன்றைப் பார்த்தால் தனிமை!
பொங்கும் மா கடலெங்கும்
ஒருங்கே கண்டால் தனிமை!
பிறவியின் துவக்கம் தனிமை!
துறவியின் விருப்பம் தனிமை!
தொடங்கும் புள்ளி தனிமை!
முடியும் பயணம் தனிமை!
அறிஞன் பாதை தனிமை!
அவையில் தலைமை தனிமை!
அடடா எத்தனைத் தனிமை!
ஏடெடுப்போம்! எழுதிக் குவிப்போம்!
தனிமை சிறப்பு இதழ் படைப்போம்!!
அடுத்தத் தலைப்பு  தனிமை

ஆசை
மானுட வாழ்வின் இரகசியப் பட்டயம்!
தோன்றும் ‘ஆசை தொடரும் பயணம்!
ஆசையின் விளைச்சல் அமோகம் என்பதே
ஆரம்பாகும் ‘உயிரும்  சொல்லுமே!
அடுத்து அடுத்து என்றே முழங்கும்
ஆசைக் கடலின் அலைகள் எத்தனை!
கற்பனை மேகம் பொழியும் எனினும்
காத்திருக்கும் கூட்டமே அதிகம்!
போதும் என்று சொல்வது அரிது!
வேண்டும்.. வேண்டும் என்பது மனது!!
எங்கே இல்லை  ஆசை?  எதிலே இல்லை  ஆசை?
கவிதை எழுதவும் ஆசை என..
எழுதிக்காட்டுவோம் வாருங்கள்!
ஆசை என்பதே அடுத்தத் தலைப்பு

Sydney Music Festival 2012

படங்கள் கீழே (படப்பிடிப்பு ராஜேந்திரன்)


அவுஸ்திரேலியா சிட்னி ‘உயர்திணை’ நடத்திய விமர்சன அரங்கு


.
சிறுகதை வடிவத்திற்கு வரைவிலக்கணம் அவசியமா?

- மாலதி முருகபூபதி -


அவுஸ்திரேலியா நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தில், சிட்னியில் அமைந்துள்ள தூங்காபி சமூக மண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற விமர்சன அரங்கு, இங்கு வாழும் இலக்கிய ரசனைமிக்க பல்வேறு  கருத்தோட்டம் கொண்டவர்களையும் ஒன்றுகூடச்செய்து ஆரோக்கியமான கருத்துப்பரிமாற்றங்களுக்கு வழிவகுத்தது.
கவிஞர் அம்பி, தமிழக எழுத்தாளர் வைதீஸ்வரன், மற்றும் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்துள்ள எழுத்தாளர்களான முருகபூபதி, கோகிலா மகேந்திரன், ஆ.சி.கந்தராஜா, செ. பாஸ்கரன், கேதார சர்மா, ஜெயகுமரன் சந்திரசேகரம், சௌந்தரி, பாமதி, பிரவீணன் மகேந்திரராஜா, காணா. பிரபா, முன்னாள் சுடர் ஆசிரியர் பொன்னரி கனகசிங்கம், நாடகக்கலைஞர் கருணாகரன் நடராஜா, யாழ்.பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் கலையரசி சின்னையா, கம்பன் கழகம் திருநந்தகுமார், கலப்பை ஆசிரியர் கேதீஸ்வரன், தமிழக இலக்கிய ஆர்வலர் ஆறு. குமாரசெல்வம் உட்பட பல இலக்கிய வாசகர்கள் கலந்து சிறப்பித்த இந்நிகழ்ச்சியை சிட்னி உயர்திணை அமைப்பு ஒழுங்குசெய்திருந்தது.


சிட்னியில் மாபெரும் இசை நிகழ்ச்சி 23,24/6/12


உலக அகதிகள் தின ஒன்று கூடலும் ஊர்வலமும்20 ஆண்டுகளுக்கு மேலாகச் செயற்பட்டுவரும் ஆணைக்குட்பட்ட தடுப்புமுகாம் மூடப்படவேண்டும்

ஜூன் மாதம் 17ந்தேதி  ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணிக்கு மெல்பேர்ன் ஸ்ப்ரிங் வீதியில் அமைந்துள்ள விக்ரோரிய மாநில பாராளுமன்றத்தில் ஒன்றுகூடுவோம். பேச்சாளர்கள் அங்கிருந்து ஊர்வலமாகச் சென்று பிற்ஸ்டராய் (fitzroy) "வெளிப்பாடு" நிகழ்வில் கலந்துகொள்வார்கள்.
வரும்போது கொடிகளையும் சின்னங்களையும் உங்கள் செய்திகளையும் கொண்டுவாருங்கள்.

உயர்திணையின் விமர்சன அரங்கு
உயர்திணையின் ஜீவநதி சிறப்பிதழின் விமர்சன அரங்கு சரியாக 10.06.2012 அன்று ஞாயிற்றுக்கிழமை மப்பும் மந்தாரமும் மழையுமாய் இருந்த ஒரு மாலைநேரம் சரியாக 1.30 மணிக்கு ஆரம்பமாயிற்று.

அரங்கு வழமையான மேடை, சபை என்ற பாணியில் இல்லாமல் எல்லோரும் ஒரேதளத்தில் வட்டமாக ஒரு கலந்துரையாடல் பாணியில் அமைந்திருந்தது.அது சிட்னிக்குச் சற்றே புதிது.

சிற்றுண்டிக்கான இடைவேளை விடப்படாதெனவும் விரும்பியவர்கள் விரும்பிய நேரம் மற்றவர்களுக்குச் இடையூறு ஏற்படுத்தா வண்ணம் தமக்கு செளகரிகமான நேரங்களில் அவற்றைச் சென்று எடுத்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பும் சற்றே புதிது.

எதிர்பாராத புலமையாளர் கூட்டம்.

பாரதக் கவிஞர் வைதீஸ்வரன் ஐயா,ஈழத்தின் சுடரொளி பத்திரிகையின் ஆசிரியர், வில்லுப் பாட்டுக் கலைஞர்,சிறந்த ஓவியர் கனகசிங்கம் அவர்கள், சக்கர நாற்காலியில் தூர இடத்தில் இருந்து வந்திருந்த கவிஞர் அம்பி,அவுஸ்திரேலியப் பல்கலைக்கழகம் ஒன்றில் பேராசிரியராக இருக்கும் எழுத்தாளர் ஆஸி. கந்தராஜா அவர்கள் (அவர் முதல் நாள் தான் வெளி நாடு ஒன்றில் இருந்து வந்திருந்தார்.),யாழ்.பல்கலைக் கழக முன்னாள் தமிழ் துறை விரிவுரையாளர். கலையரசி.சின்னையா அவர்கள்,’கலப்பை’ சஞ்சிகை ஸ்தாபகர் Dr.கேதீஸ்,நியூசவுத்வேல்ஸ் தமிழ் பாடசாலைகள் கூட்டமைப்பின் நடப்பாண்டுத் தலைவர்.திரு.கதிர்காமநாதன்,வென்ற்வேர்த்வில் தமிழ் கல்வி நிலைய நடப்பாண்டு அதிபர் கணநாதன் அவர்கள். கம்பன் கழகப் பேச்சாளர்.திருநந்த குமார் அவர்கள், எனத்தொடங்கிய அந்த வரிசை இரண்டாம் சந்ததியின் சிந்தனைகளைக் கொண்டிருந்த இணையம் பிறப்பித்த தமிழ் பிள்ளைகளான மெல்போர்னில் இருந்து இந் நிகழ்ச்சிக்கென வருகை தந்திருந்த ஜேகே, கேதா, மற்றும் வைத்தியக் கலாநிதி.திருமுருகன் ஆகியோராலும் ’ஈழத்து முற்றம்’ ஸ்தாபகர் கானா.பிரபா, இணைய வழியால் இணைந்து கொண்ட ஆழமான வாசிப்பனுபவங்களைக் கொண்ட யசோதரன், சக்திவேல், போன்றவர்களாலும், இந் நிகழ்ச்சி பற்றி இணையமூடாக அறிந்து katoomba வில் இருந்து தொடரூந்து வழியாக வந்த செல்வி.கெளரி போன்றவர்களாலும் அழகு பெற்றிருந்தது.மகா பாரதத்தில் ஒரு இடம் வரும்.வில்வித்தையில் சிறப்புற்றிருந்த அர்ச்சுணனுக்கும் கர்னனுக்குமான களம் அது. கர்னன் தன்னால் அர்ச்சுணனுக்குப் போட்டியாக வில்வித்தைப் போட்டிக்கு வரத் தயார் நிலையில் நிற்பான். ராஜகுரு கர்னனைப் பார்த்து ஒரு கேள்வி கேட்பார்.” எந்த சிம்மாசனத்தை நீ அலங்கரிக்கிறாய் கர்னா?” 

இணையத்தைத் தமிழால் அலங்கரிக்கும் ஒரு சந்ததி; பாரம்பரிய மரபுவழி சிந்தனைகளின் வழிவந்த மூத்த சந்ததி இரண்டுக்குமான களமாக இது இருந்தது. சமானமான அறிவுப் புலம் கொண்ட இருவேறு அணியை அங்கு வந்திருந்த பலரும் தெளிவாக அடையாளம் கண்டிருப்பர்.மூத்த அறிவுஜீவிதங்களின் சிந்தனை ஓட்டமும் இளைய சிந்தனையாளர்களின் தீவிர சிந்தனையும் அங்கு ஆரோக்கியமாக அமர்ந்திருக்கக் கண்டேன்.இவர்களை விட தமிழ் இலக்கிய ஆர்வலர்கள்! 

எல்லோருமாகச் சுமார் 40 பேர்! அது இலக்கத்தினால் அல்லாமல் காத்திரமான அறிவினால் சூழப்பட்ட சபை. அது தான் இதன் தனித்துவமான சிறப்பு.

நம்முடய எதிர்பார்ப்பு கிட்டத்தட்ட 10 - 15 பேராகத் தான் இருந்தது என்பதையும் நான் சொல்லியாகவேண்டும். தீவிர வாசகர்கள், எழுத்தாளுமைகள், புதிய சிந்தனைகளைக் கொண்ட ஒரு சிலர் - இது தான் எங்கள் இலக்காக இருந்தது.

இந்த ஆதரவு நாம் எதிர்பார்த்த ஒன்றல்ல. இதற்கு முக்கியமான காரணம் எழுத்தாளர் முருக பூபதி அவர்கள்.அவர் நல்ல ஒரு மனிதக் களஞ்சியம்.மற்றும் இளஞ் சந்ததித் தமிழர்களும் அவர்களுடய இணையப் பக்கங்களும். சிட்னியில் இருக்கும் நமக்கே தெரியாத தீவிர தமிழ் இலக்கிய வாசகர்களை மெல்போர்னில் இருந்த படியே வரவழைத்த பெருமை ஜேகேக்கும் கேதாவுக்கும் உரியது!

உண்மையில் இந்தக் களம் புதிய தலைமுறையையும் மூத்த தலைமுறையையும் சந்திக்கப் பண்ணிய சிந்தனைகளின் மனம் திறந்த ஒரு மோதலாக இருந்தது என்பதையே நான் உணர்கிறேன்.

முதலில் ஜீவநதியின் சிறுகதையை முன்வைத்து ஆறு.குமாரசெல்வம் தன் விமர்சனத்தை முன்வைத்தார்.மிக மென்மையான போக்கை அது கொண்டிருந்தது.அதற்கு எதிர்வினையாற்றிய ஜேகே சிறுகதை என்பதன் பரிமானங்களை உலக இலக்கியங்களில் இருந்து எடுகோள்காட்டி சில கதைகளை கதைகளே இல்லை என முழுமையாக நிராகரித்து; கோகிலா அவர்களுடய கதையில் இரண்டு கதைகள் இணைக்கப் பட்டிருக்கின்றன என்று கூறி ஒரு சிறுகதை என்பது ‘ஒரு கல்லை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு நகர்த்தி இருக்கவேண்டும்’ என்ற கருத்தைக் கூறி சிறுகதைக்கான பரந்துபட்ட வாசிப்பனுபவத்தின் அடிப்படையில் ஒரு பார்வையை வெளிப்படுத்தி இருந்தார்.


இது இப்படியே இருக்க விவசாயத்துறையில் பேராசிரியராய் இருக்கும் எழுத்தாளரான ஆஸி. கந்தராஜா சிறுகதை என்பதற்கு வரைவிலக்கணம் என்பதில்லை.ஆரம்பத்தில் இருந்த சிறுகதைக்கான வடிவம் அதன் அமைப்பிலும் தோற்றத்திலும் கொள்ளளவிலும் எத்தகைய மாற்றங்களைக் காலப் போக்கில் கொண்டுவந்து தந்திருக்கிறது என்ற வாதத்தை முன் வைத்து தற்போது அது ஒருபக்கக் கதையாகி ஒரு வரிக் கதையாகக் கூட வந்து விட்டது என்ற கருத்தை வைத்தார்.


அதற்குப் பதிலளித்த கோகிலா அவர்கள் எல்லாவற்றுக்கும் வரவிலக்கணங்கள் உண்டெனவும் இல்லாவிட்டால் ஒரு கட்டுரைக்கும் கதைக்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும் என்றும் எடுத்துக் காட்டி முன்னாள் யாழ்பல்கலைக்கழக தமிழ் விரிவுரையாளரான கலையரசி. சின்னையா அவர்களைக் இதற்குக் கருத்துக் கூறுமாறு கூறி அமர்ந்தார்.சற்றுப் பொறுத்து அதற்குக் கருத்துக் கூறிய கலையரசி அவர்கள் நிச்சயமாகச் சிறுகதைக்கு வரைவிலக்கனம் உண்டு என்பதை தெளிவாக முன் வைத்தார்.

அதன் போது இவற்றை உன்னிப்பாக அவதானித்த படி இவற்றை ஒளிப்படம் எடுத்துக் கொண்டிருந்த கானா.பிரபா மக்கள் - ரசிகர்கள் - வாசகர்கள் தான் வடிவத்தைத் தீர்மானிப்பார்களே தவிர வரைவிலக்கணங்கள் எது கதை என்பதைத் தீர்மானிப்பதில்லை என்ற கருத்தை முன் வைக்க மேலும் இந்த உரையாடல் நகராத படிக்கு நேரம் நகர்ந்து கொண்டிருக்க கதைப்பாகம் முடிந்து கவிதைப் பாகம் ஆரம்பித்தது.


ஜீவநதியின் கவிதைகளை முன் வைத்து கோகிலா அவர்கள் நன்கு செப்பனிடப்பட்ட பேச்சினை கம்பீரமாக ஆரம்பித்து வைத்தார். அது சிறந்த ஒரு ஆய்வுக்கட்டுரையின் வடிவத்தை ஒத்திருந்தது. சற்றுமுன்னர் தான் சிறுகதையின் வரைவிலக்கணம் பற்றிய சர்ச்சை நிகழ்ந்து முடிந்திருந்ததால் கவிதைக்கான வரையறையை அவர் சொல்லுகின்ற போது கவிதைக்கான வரைவிலக்கணத்தை அழுத்திச் சொல்லி கவிதைகளுக்குச் சந்தம் இருந்தால் அது சிறப்பு என்று முன்மொழிந்து அமர்ந்தார். அவரது அந்தப் பேச்சும் அதற்குப் பதிலாய் அமைந்திருந்த கேதாவினது பேச்சும் எழுத்தினால் விபரிக்கத் தக்கதன்று. அது பார்த்துக் கேட்டு உய்த்து உணரவேண்டியது. இந்நிகழ்ச்சியின் பேரழகாய் அது இருந்தது. அதனை வீடியோக் காட்சியாக இங்கு பதியும் எண்ணம் இருப்பதால் அதனை இப்போதைக்கு ஒரு வெற்றிடமாக விட்டுச் செல்கிறேன்.

இங்கும் மரபுக்கும் புதுமைக்குமான மோதலை காணமுடிந்தது.புதுக்கவிதையும் ஹைக்கூ கவிதையும் மரபுக்குள்ளும் எதுகைமோனைக்குள்ளும் சந்தத்துக்குள்ளும் சிறைப்பட்டிருந்தால் தமிழுக்குப் புதிய வரவுகள் சித்தித்திருக்குமா என்ற கேள்வியும் உதாரணங்களும் எதிர் எதிராய் வீசப்பட அழகான புலமை யுத்தம் ஒன்று மிக அழகாக ஆரோக்கியமாக முன்னெடுக்கப்பட்டது.

உண்மையில் சிறுகதைகளுக்கும் கவிதைகளுக்குமான களம் ஆரோக்கியமாக விரிந்து செல்லும் சாத்தியங்கள் நிறையவே இருந்தன. எனினும் நேரம் காரனமாக அதுவும் முடிவுக்கு வர கட்டுரைகள் பற்றிய விமர்சனத்தை இந்துமதி அவர்கள் முன் வைத்தார்.ஆற்றொழுக்கான கம்பீரக்குரலுக்குச் சொந்தக்காரி அவர். பல கட்டுரைகளை இணைத்தும் சில கட்டுரைகளைச் சிலாகித்தும் சில கட்டுரைகளில் இருந்த திருத்தக் கூடிய அம்சங்களை சொல்லியும் அவர் அமர செளந்தரி கட்டுரைகள் பற்றிய கேள்விகள் சிலவற்றை முன் வைத்தார். 

கூடவே முன்னாளில் பல கவிதைகளை எழுதி தற்போது குடும்பஸ்தை ஆகி விட்ட பாமதி கட்டுரைகள் - அதிலும் சமூகம் சார்ந்து எழுதப்படும் கட்டுரைகள் முறையாக ஆய்வு செய்யப்பட்டு எழுதப்படவேண்டும் என்றும் மேம்போக்காக எழுந்தமானமாக தனக்குத் தெரிந்த ஒரு சின்ன வட்டத்தை முழுமையான சமூகத்துக்குமான பார்வையாக வைத்து விட்டுப் போவதில் இருக்கும் சமூகப் பொறுப்பின்மையைக் காரசாரமாகக் கண்டித்தார்.

எனினும் கட்டுரையின் இறுதியில் இடம்பெற்ற அகிம்சை பற்றிய கருத்து பலரினதும் ஆர்வத்துக்குரிய பேசு பொருளாக இருந்தது. ஜீவநதியில் இடம்பெற்றிருந்த செளந்தரியின் அகிம்சைபற்றிய கட்டுரை இக்காலத்துக்கு அகிம்சை பொருந்துமா பொருந்தாதா என்ற கேள்வியை முன்வைத்திருந்ததும் அது உணர்வு ரீதியாக பலரின் கேள்வியாக இருந்ததும் அதற்குக் காரணமாக இருக்கலாம்.

மாகாத்மாகாந்தி வென்றதற்கான காரணம் அவர் தன் கொள்கையில் உறுதியாகவும் விடாப்பிடியாகவும் இருந்தார் என்பதும் அவருக்கு வாய்த்திருந்த எதிரி மனசாட்சி உள்ளவனாக - தர்மத்துக்குப் பயந்தவனாக இருந்தான் எனவும் பிரவீணன் எடுத்துச் சொல்ல (பிரவீணன் இம்முழு நிகழ்வையும் தொகுத்தளிக்கும் பணியையும் திறம்படச் செய்து கொண்டிருந்தார்) அதற்குப் பதில் கொடுத்த கேதா அவுஸ்திரேலியப் பழங்குடிமக்களை அதே ஆங்கிலேயர் எப்படி நடத்தினார்கள் என கேள்வி எழுப்பினார். தர்மம் வென்றே தீரும் எனவும் அதற்கு நமக்கு பொறுமையும் கொள்கையில் உறுதிப்பாடும் தேவை எனவும் பேச்சுக்கள் சுவாரிசமாய் நடந்து கொண்டிருந்த போது நேரம் 4.25 என கடிகாரம் காட்டியது.

திட்டமிட்ட நிகழ்ச்சிப் பிரகாரம் 45 நிமிடங்களைக் குறும்படக்காட்சிக்கும் அது பற்றிய கலந்துரையாடலுக்கும் ஒதுக்கி இருந்தோம் என்பதும் தாமதமாய் உறைக்க இந்த விவாத அரங்கை நெறிப்படுத்திக் கொண்டிருந்த பாஸ்கரன் அவசரமா ஓடி வந்து என்ன செய்வோம் எனக் கேட்டார்.

நிகழ்ச்சியை நிறைவு செய்வோம் என்று நன்றி கூடி முடித்த போது நேரம் சரியாக 4மணி.30 நிமிடம்.

முழுவதுமாக மூன்று மணி நேரம்! போனதே தெரியவில்லை. ஓரிருவர் மாத்திரம் 4 மணியளவில் தமக்கு வேறு நிகழ்ச்சி இருப்பதாகத் தெரிவித்து மன்னிப்புக் கோரி விடைபெற்றதைத் தவிர மற்ற அனைவரும் நிகழ்ச்சியோடு ஒன்றியிருந்தனர்.

இந்த நிகழ்ச்சி எப்படி நடந்தது என்று என்னை யாரும் கேட்டால் என்ன பதிலைச் சொல்லலாம் என எனக்குத் தெரியவில்லை.எல்லோரும் உணர்வு பூர்வமாக இணைந்து கொண்டிருந்தார்கள். தம்முடய கருத்துக்களையும் அபிப்பிராயங்களையும் தயக்கமின்றி முன்வைத்திருந்தார்கள். அது ஒரு சிறந்த ஆரம்பம் என்றே நினைக்கிறேன். 

எனினும், இந்த நிகழ்ச்சியின் பிடியில் இருந்து வெளியே வர எனக்கு 4 நாட்கள் பிடித்தன. மறு நாள் காலை எனக்கு பலவிதமான தொலைபேசி அழைப்புகள் வந்தன.நேரிலும் பலர் கருத்துச் சொன்னார்கள்.அவர்களுடய கருத்துக்களை அப்படியே தருகிறேன்.

1.”அடுத்த முறை இப்படி ஒரு நிகழ்ச்சியைச் செய்வதற்கு என்ன உதவி வேணுமெண்டாலும் கேளுங்கோ. நான் செய்து தாறன். என்ர தொலைபேசி இலக்கம் இருக்குத் தானே!”.- நிகழ்ச்சி முடிவின் போது திரு கந்தசாமி அவர்கள்.

2. ”High Quality” - திரு.நாகேஸ்வரன். 

3.”பிள்ள இது தான் என்ர இடம். என்ர மகளிட்ட சொல்லியிட்டன். இனி என்னை நீ எங்கும் அழைத்துப் போக வேண்டாம்.மாதம் ஒரு தடவை இங்கு அழைத்து வா அது போதும். நல்ல சந்தோசமா இருக்குப் பிள்ளை.” - ஓய்வு பெற்ற ஆசிரியர். திருமதி. நடராஜா.

4. ”நீங்கள் ஜீவநதி விமர்சனம் என்று ஒருவரை முழுமையாகப் புத்தகத்தை ஆய்வு செய்யக் கொடுத்து விட்டு மிகுதி நேரத்துக்கு சிறுகதை, கவிதை என்று அதன் ஆழ அகலங்களைக் கண்டு வந்திருக்கலாம். விடயங்கள் கூடி விட்டன”. -க.செளந்தரி.

5.”அக்கா,ஒரு விசயத்தை மட்டும் எடுங்கோ. அதப்பற்றி முழுமையாய் ஒரு விமர்சன அரங்கு வையுங்கோ. நீங்கள் நினைக்கிற மாதிரி இல்லை இங்கு பிறந்து வளர்ந்த பிள்ளைகளில் HSC தேர்வு விடயங்களில் எனக்கிருக்கிற அனுபவத்தை வைத்துச் சொல்கிறேன்.மின் தமிழ் பற்றி ஒரு அரங்கு வையுங்கோ.எத்தனை இளம் பிள்ளைகள் வருகிறார்கள் என்று பாருங்கோ”. - கானா.பிரபா.

6.”வருசம் ஒருக்கா ஆய்வரங்கை ஒரு நாள் முழுக்கச் செய்யலாம் நீங்கள்”. - எழுத்தாளர் முருக பூபதி.

7. ”புத்தகத்தை முதலில் வாசிக்கக் கொடுத்து விட்டு பிறகு இந்த நிகழ்ச்சியை நடத்தி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். என்றாலும் இந்த செட்டப் நல்லாக இருக்கிறது. நான் இதை எதிர்பார்க்கவில்லை.இதுவும் ஒரு சாதாரண நிகழ்ச்சியாகத் தான் இருக்கும் என்று நினைத்து வந்திருந்தேன்” -  Dr.பால முருகன்

8.”பலரையும் எழுத்துக்களால் மட்டுமே அறிந்திருந்த நமக்கு அவர்களை நேரில் கண்டு அளவளாவும் வாய்ப்புக் கிட்டியது. அது பற்றி நான் பெரிதும் மகிழ்கிறேன். அக்கா ’கேணியடி’ பாருங்கோ. உங்களுக்கு ஒரு ஐடியா வரும்.”. - ஜே.கே.

9. ”உங்களுடய மாதாந்த இலக்கியச் சந்திப்புக்கு இனி நானும் வருகிறேன்”.- யசோதரன்.

10.”எங்கட முதல் நிகழ்ச்சி தானே! பறவாயில்லை. திருப்தி”. - எழுத்தாளர் கோகிலா.மகேந்திரன்.

11.”எனக்கு சந்தோசம். எதிர்பார்த்தத விட நல்லாக நடந்தது. ஆனா இதே தரத்தை நாங்கள் maintain பண்ண வேணும். அது முக்கியம்.நாங்கள் நல்லாக் காலூண்டினாப் பிறகு கவிதைப் போட்டி, சிறுகதைப் போட்டி எண்டும் செய்யலாம்”. - பாஸ்கரன்.

12.” இலக்கியம் அதின்ர அழகியல் - இது பற்றிப் பேசிறதில எனக்குப் பிரியமே இல்லை. இலக்கியம் மக்களின்ர பிரச்சினையைத் தொடவேணும். அதப் பேச வேணும்.அதப்பற்றின பகிர்தல் இருக்க வேணும். குடுமிப்பிடிச் சண்டையள், எது இலக்கியம்,எது இலக்கியத்தரம் வாய்ந்தது என்பதெல்லாம் நேரத்தை வீணாக்குகின்ற சண்டைகள். நீங்கள் திசைமாறிப்போகாமல் சரியான பாதையில் போக உங்களைச் சிறப்பாகச் செப்பனிட்டுக் கொள்ள வேண்டியது அவசியம் அதுவும் இப்பவே” - பாமதி.

13. “ நான் நினைச்சத விட வித்தியாசமா நல்லா இருந்துது” - பா.சாந்தி.

14. ஒரு email Group  ஒண்ட தயார் செய்யுங்கோ. தமிழ் பள்ளிக்கூட ரீச்சர் மாருக்கும் இப்பிடியான விடயங்களைச் சொல்லுங்கோ. எங்கட பள்ளிக்கூடத்திலேயே 47 ரீச்சர் மார் இருக்கினம்.அவைக்கும் வர விருப்பமா இருக்கும். - இந்து.-

15. குறும்படம் ஒரு தனி subject. அத இதோட கலக்காதைங்கோ.ஆனா சரியான நேரத்துக்குத் தொடங்கி சரியான நேரத்துக்கு முடிச்சீங்கள்.

என்னைக் கேட்டால் இவை எல்லாமே பெறுமதியான கருத்துக்கள். மிக மிக அவசியமாகத் தேவைப்படுபவை. அனைத்தும் உண்மையான, நேர்மையான விமர்சனங்கள்.

இது புதுசு.

அது தான் எங்கள் வெற்றி. நேர்மையான விமர்சனத்தை நாம் வென்றெடுத்திருக்கிறோம். உண்மையான சமூகக் கரிசனையோடு அவை முன்வைக்கப் பட்டிருக்கின்றன. ஒரு சமூகத்தினுடய தேவையை அது உணர்த்துகிறது.அது இந்த விமர்சனங்கள் நமக்குத் தரும் நம்பிக்கை.

உயர நீண்ட தூரம் இருக்கிறது. சிறுதுளிகளில் இருக்கிறது பெரு வெள்ளத்துக்கான சாத்தியங்கள். சிறு விதையில் இருக்கிறது பெரு விருட்சத்துக்கான இருப்பு. ஒரு காலடியில் தொடங்குகிறது நீண்ட தூரத்துக்கான பயணம்.

இது தள்ளாட்டத்தோடு சேர்ந்த தனித்துவமான முதலடி!


nantri:

அக்ஷ்ய பாத்ரம்

கண்ணதாசன் பேட்டி - தீபம் இலக்கிய மாத இதழுக்காக!


.
அரசியல்சினிமாஇலக்கியம் என்று வலம் வரும் அஷ்டாவதானி.

அவரைக் கண்டு பிடிக்க முடியாதுகண்டு பிடித்து ஒரு இடத்தில் அமர்த்தி விட்டால் வேண்டியதை நிமிஷத்தில் முடித்துக் கொடுத்து விடுவார்’- என்பது திரை உலக அனுபவஸ்தர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு ரகசியம்.

முதல் நாள் நான் அவர் வீட்டுக்குச் சென்றபோது புரொகிராமுக்காக’ அவர் வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்தார். நான் பேட்டிக்கு வந்திருப்பது பற்றிக் கூறினேன். மறுநாள் காலை ஒன்பது மணிக்கு வரும்படி கூறினார்.

மறுநாள் நான் சென்ற போது கண்ணதாசன் வீட்டில் இல்லை. இருங்கள். வந்து விடுவார்என்றார்கள். நான் காத்திருந்தேன்அவர் வந்து விட்டார். சிறிது நேரத்தில் புறப்பட்டு அவரது அலுவகம் சென்றோம். அங்கே வேறொரு பத்திரிகையைச் சேர்ந்தவர்அவரிடம் எழுதி வாங்குவதற்காகக் காத்திருந்தார்.

சிறிது நேரம் தன் இளமை நினைவுகளையும்தனது பத்திரிகை அரசியல் அனுபவங்களையும் பற்றிக் கவிஞர் வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருந்தார். பிறகுஅந்தப் பத்திரிகையாளரைப் பார்த்து எழுதிக் கொள்ளுங்கள்’ என்று கட்டுரையை ‘டிக்டேட்’ செய்ய ஆரம்பித்தார். தட்டுத் தடங்கலின்றி வார்த்தைகள் சரஞ்சரமாக வெளிவந்தன. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இருபது நிமிஷத்தில் கட்டுரை முடிந்து விட்டது. எழுதியதை வாங்கி ஒரு முறை படித்துப் பார்த்தார். அடித்தல் திருத்தலுக்கான அவசியமின்றிக் கொடுத்து விட்டார்.

நான் கேட்டேன்.

நீங்கள் கைப்பட எழுதுவதில்லையா?’

இலங்கைச் செய்திகள்

கனேடிய பிரஜை கொலையின் பின்னணியில் இளம் பெண் விசாரணைகளில் திடுக்கிடும் தகவல்

   ஜனாதிபதியின்  லண்டன் உரை நிறுத்தத்தின் பின்னணியில்  பிரிட்டிஷ் தமிழர் அமைப்பு

பொன்சேகா எதிர்பார்க்கும் புதிய அரசியல் கலாசாரம்

இலங்கை தனக்குத் தானே உதவ முடியுமா

ஜே.வி.பி.யின் கூட்டத்தின் மீது துப்பாக்கிச்சூடு! இருவர் பலி! பலர் படுகாயம்;! இனந்தெரியாத ஆயுததாரிகள் கைவரிசை! _

உலகச் செய்திகள்இந்தியாவை சுற்றிவளைக்கும் சீனா

சிரியாவில் சிவில் யுத்தம் முதற் தடவையாக ஐ.நா. அறிவிப்பு

சர்வதேச தலையீட்டுக்கு மத்தியிலும் மியன்மாரில் அதிகளவான வன்முறைகள் 
 மத்திய ஈராக்கில் இன்று(13/6/2012) இடம்பெற்ற குண்டுவெடிப்பு மற்றும் தாக்குதலில் சுமார் 42 பேர் பலியாகி உள்ளனர்.தமிழ் சினிமா


தடையற தாக்க

செல்வா என்ற கதாபாத்திரத்தில் வரும் அருண் விஜய் தனது பெயரில் டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். கால்டாக்சி ஓட்டும் அருண் விஜய், பிரியாவாக வரும் மம்தா மோகன்தாஸை காதலித்துக் கொண்டிருக்கிறார்.

வாங்கிய கடனை அடைக்கவில்லை என்பதற்காக அவரது நண்பனை கடத்திச் சென்ற கும்பலிடம் சமரசம் பேசப் போகிறார்.
அது மோதலாக உருவெடுக்க, பொலிஸின் ஆதரவுடன் ரவுடியிசம் செய்யும் மகா என்னும் அந்த கும்பலின் தலைவன் கொல்லப்படுகிறான்.

அந்த கொலைப்பழி அருண் மீது விழுகிறது. இதற்கு பழிவாங்கும் விதமாக மகாவின் கும்பல் அருண் விஜயை துரத்துகிறது. இந்த கும்பலிடமிருந்து அருண் தப்பித்தாரா இல்லையா, காதலியை கை பிடித்தாரா? என்பதை சொல்லி படத்தை முடித்திருக்கிறார் டைரக்டர் மகிழ் திருமேனி.

110 இடங்களில் கத்தரி போட வேண்டும், இல்லையெனில் 'ஏ' சர்டிபிகேட்தான் தரமுடியும் என்று சென்சார் போர்டு சொல்ல, எனக்கு 'ஏ' சர்டிபிகேட்தான் வேண்டும் என்று டைரக்டர் இப்படத்திற்கு வாங்கியது சரியாகத்தான் இருக்கிறது.

படம் முழுக்க வன்முறையும், ஆபாச பேச்சுக்களும் விரவிக் கிடக்கின்றன. ரவுடியிச வாழ்க்கை என்பது இவைகளை சுற்றித்தான் இருக்கும் என்பதை அப்பட்டமாய் காட்டியிருக்கிறார் இயக்குனர்.

அருண் விஜய் இப்படத்தில் அழகாய் இருக்கிறார். நன்றாக நடித்தும் இருக்கிறார். சண்டை காட்சிகளில் மனிதர் வெளுத்து கட்டியிருக்கிறார். மம்தாவுடன் காதல் செய்யும் காட்சிகளில் நன்றாக ஒன்றியிருக்கிறார்.

மம்தா மோகன்தாஸ் அழகாய் வருகிறார். அருணைக் காதலிக்கிறார். வெட்கப்படவும் செய்கிறார். இவரது காதல் காட்சிகள் அனைத்தும் கண்களுக்கு குளுமை.

படத்தில் வில்லன்களாய் வலம் வரும் மகா, குமார் ஆகியோரின் கொடூரமான குணங்கள், அடக்குமுறைகள், குரூரங்கள் அனைத்தும் அந்த கதாபாத்திரங்களுக்கு வலு சேர்க்கின்றன. இவர்களது வில்லத்தனமான நடிப்பு நம்மை சில இடங்களில் உறைய வைக்கிறது.

இப்படத்தில் இரண்டு பாடல்கள் மட்டுமே. எஸ். தமனின் இசையில் குத்தாட்டப் பாடலான 'பூந்தமல்லிதான் புஷ்பவள்ளிதான்..' கலகலக்கிறது. படத்தின் பின்னணி இசையில் தமன் மிரட்டியிருக்கிறார்.

மைனா சுகுமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாய் இருக்கிறது. பிரவீன் - ஸ்ரீகாந்தின் படத்தொகுப்பு திரில்லர் கதைக்கேற்ற வேகத்தை கொடுத்திருக்கிறது. வழக்கமான ரவுடியிசக் கதைதான் என்றாலும், அதை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் படத்தை பரபரவென நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் மகிழ் திருமேனி.

காமெடிக்கென்று யாரையும் தேடாமல் கதைக்குள்ளேயே இயல்பான நகைச்சுவை காட்சிகளை அமைத்திருப்பது பாராட்டுக்குரியது.

அந்த ஊரில் ஒரு பொலிஸ் கூட நல்லவராக இருக்க மாட்டாரா? எல்லோரும் வில்லனுக்கு அடியாட்களா? என ஒரு சில இடங்களில் லாஜிக் ஓட்டைகள் இருப்பினும், ஒரு ஆக்ஷன் திரில்லர் படத்தை பார்த்த திருப்தியைக் கொடுத்திருக்கிறார் மகிழ் திருமேனி.

நடிகர்: அருண் விஜய்.
நடிகை: மம்தா மோகன்தாஸ்.
இயக்குனர்: மகிழ் திருமேனி.
இசை: தமன்.
ஒளிப்பதிவு: சுகுமார்.

கிருஷ்ணவேணி பஞ்சாலை

உடுமலைப்பேட்டையில் உள்ளது கிருஷ்ணவேணி பஞ்சாலை. அந்த ஊரில் இருப்பவர்கள் சாதி விட்டு சாதி திருமணம் செய்வதை ஒத்துக் கொள்ளமாட்டார்கள்.
இந்நிலையில் அமெரிக்காவிற்கு படிக்க சென்றிருக்கும் பஞ்சாலை முதலாளியின் மகனான ராஜிவ் கிருஷ்ணா அமெரிக்க பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். இதனால் மனமுடைந்து போகும் பஞ்சாலை முதலாளி தற்கொலை செய்து கொள்கிறார்.
தந்தையின் ஆசைப்படி அமெரிக்காவிலிருந்து பஞ்சாலையை நிர்வகிக்க வருகிறார் ராஜிவ் கிருஷ்ணா. இப்படி சாதி பிடிப்பு அதிகம் உள்ள அந்த ஊரில் கதாநாயகன் கதிரும், கதாநாயகியான பூங்கோதையும் பஞ்சாலையில் வேலை செய்து கொண்டிருக்கும் போதே காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.
பூங்கோதையின் அக்கா சாதி விட்டு சாதி மாறி காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இதற்கு கதாநாயகனும் அவனது நண்பர்களும் உதவியாய் இருக்கிறார்கள். இதனால் பூங்கோதையின் வெறுப்பிற்கு ஆளாகும் நாயகன், அவரது அக்கா சந்தோஷமாக இருப்பதை எடுத்துச் சொல்லி அவரை சமாதானப்படுத்துகிறார்.
ஆனால் கதாநாயகியின் அம்மாவான ரேணுகாவோ தனது மூத்த மகள் செய்ததை ஏற்க மறுக்கிறார். பின்னாளில் ரேணுகாவை சமாதானப்படுத்தும் பூங்கோதை கர்ப்பமாக இருக்கும் தனது அக்காவையும் அவரது கணவரையும் வீட்டிற்கு அழைத்து வருகிறார்.
சந்தோஷமாய் சாப்பிட்டு விட்டு அனைவரும் உறங்க செல்கின்றனர். மறுநாள் காலையில் பூங்கோதையின் அக்கா செத்துக் கிடக்கிறார். அவரது கணவரோ தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொள்கிறார்.
இதனிடையே பஞ்சாலை தொழிலாளர்களுக்கு முதல் வருடம் வந்த லாபத்தில் 40 சதவீதம் போனஸ் தரும் ராஜிவ் கிருஷ்ணா, நடப்பாண்டில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக 40 சதவீதம் போனஸ் தரமுடியாது என்கிறார். இதனால் போராட்டத்தில் குதிக்கும் பஞ்சாலை தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்கின்றனர்.
பஞ்சாலை சூப்பர்வைசராக வரும் சாக்லேட் சண்முகம் பூங்கோதையை ஒருதலையாய் காதலிக்கிறார். இவரது காதலை பூங்கோதை ஏற்க மறுக்க, விஷம் குடித்து விடுகிறார் சண்முகம். இதனால் கொந்தளிக்கும் சண்முகத்தின் தாய், ரேணுகாவின் குடும்பத்தையே அசிங்க அசிங்கமாய் ரோட்டில் வைத்து திட்டி விடுகிறார்.
இதனால் அவமானத்திற்குள்ளாகும் ரேணுகா தற்கொலை செய்து கொள்கிறார். அனாதையாக்கப்பட்ட பூங்கோதை நாயகனிடம் வருகிறார். உடுமலையிலிருந்து இருவரும் சென்னை வருகிறார்கள்.
அங்கு அவர்கள் நிலை என்ன ஆனது? மூடப்பட்ட பஞ்சாலை என்ன ஆனது? என்பதை சொல்லி படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர் தனபால் பத்மநாபன்.
கதிர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஹேமச்சந்திரனின் நடிப்பு மிகவும் நேர்த்தி. பூங்கோதையாக நடித்துள்ள நந்தனாவின் நடிப்பு கச்சிதமாய் அந்த கதாபாத்திரத்திற்கு பொருந்தியிருக்கிறது. அழகாய் இருப்பது மட்டுமின்றி அழகாய் நடித்தும் இருக்கிறார்.
சாதி பிடிப்பில் உறுதியாக இருக்கும் அம்மாவாக வரும் ரேணுகா, அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். சாக்லேட் சண்முகமாக வரும் சண்முக ராஜாவின் நடிப்பு அற்புதம். கேண்டீன் மாஸ்டராக வரும் எம்.எஸ்.பாஸ்கர், கதிரின் நண்பன் கிட்டுவாக வரும் அஜயன் பாலா, டிப்டாப் பழனிசாமியாக வரும் பாலாசிங் ஆகியோர் மனதில் நிற்கிறார்கள்.
வைரமுத்து, தாமரை ஆகியோர்களின் வரிகளில் பாடல்கள் அத்தனையும் இதம். அதிலும் உன் கண்கள் கண்ணாடி பாடல் கண்களுக்கும், செவிகளுக்கும் இதம்.
என்.ஆர். ரகுநந்தனின் இசை படத்திற்கு பக்க பலம். சுரேஷ் பார்கவ் மற்றும் அதிசயராஜ் ஆகியோரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து வைத்திருக்கிறது. 'சாதி விட்டு சாதி கல்யாணம் பண்றவங்களை எல்லாம் ஏற்றுக் கொள்ளும் ஒரே ஊர் சென்னை மட்டுமே' என்று நச் வசனத்தை கொடுத்த இயக்குனரை பாராட்டலாம்.
பஞ்சாலை தொழிலாளர்களின் வாழ்வியலையும், உடுமலை வட்டாரப் பகுதிகளில் முன்பு இருந்த சாதிப் பிடிப்பை அழகாய் பதிவு செய்திருக்கிறார் தனபால் பத்மநாபன்.
கதாநாயகி அக்காவின் சாவிற்கு யார் காரணம் என்பதை கிளைமாக்சில் சொல்லாமல் விட்டது குறை என்றே சொல்லவேண்டும்.
கிருஷ்ணவேணி பஞ்சாலை - ரசிகர்களை கவரும் ஆலை
நடிகர்: ஹேமச்சந்திரன், சண்முக ராஜா, தென்னவன், ராஜுவ் கிருஷ்ணா, அஜயன் பாலா, எம்.எஸ். பாஸ்கர், பாலாசிங்.
நடிகை: நந்தனா, ரேனுகா.
இயக்குனர்: தனபால் பத்பநாபன்.
இசை: என்.ஆர். ரகுநந்தன்.
ஒளிப்பதிவு: சுரேஷ் பார்கவ், அதிசயராஜ்.

நன்றி விடுப்பு


ஹொலிவூட் படத்தை இயக்கி நாயனகாகவும் நடிக்கிறேன் கமல் அறிவிப்பு Tuesday, 12 June 2012  


kamal_hassan_3சென்னை: ஹொலிவூட் படத்தில் கதாநாயகனாக நடிப்பதுடன் அந்த படத்தை இயக்குகிறேன். அதற்கான வேலைகள் நடக்கின்றன’ என்று அதிகாரபூர்வமாக அறிவித்தார் கமல் ஹாசன் சிங்கப்பூரில் சர்வதேச இந்தியத் திரைப்பட அகடமி விழா நடைபெற்றது. (ஐஃபா). இந்த விழாவில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள “விஸ்வரூபம்’ படத்தின் முன்னோட்டக் காட்சியுடன் சில சண்டைக் காட்சிகளும் திரையிடப்பட்டன.
இதே விழாவில் லோர்ட் ஆப் தி ரிங்ஸ் பட தயாரிப்பாளர் பேரி ஆஸ்போன் கலந்துகொண்டார். இருவரும் சந்தித்துப் பேசினர்.
விழா முடிந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்திறங்கிய கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது;
எல்லாம் நல்லபடியாக வந்து கொண்டிருக்கிறது. ஐஃபா விழாவில் விஸ்வரூபம் படத்தின் காட்சிகளுக்கு மிகச் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளமை மகிழ்ச்சி அளிக்குது. இந்தப் படம் மூலம் ஹொலிவூட் படம் இயக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. தயாரிப்பவர் பேரி ஆஸ்போன்.
இவர் ஹொலிவூட்டில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்தவர். “மேட்ரிக்ஸ்’ லோர்ட் ஆப் தி ரிங், “கிரேட் கேட்ஸ்பி’ ஆகிய படங்களை அவர் தயாரித்துள்ளார். நானும் அவரும் சந்தித்து பேசிக் கொண்டிருந்த போது அவரிடம் நான் 9 கதைகளைச் சொன்னேன். நான் மூன்றாவதாக சொன்ன கதை அவருக்குப் பிடித்திருந்தது. இது சர்வதேச தரத்திலான கதை என்றும் எனவே இந்தக் கதையை ஹொலிவூட்டில் தயாரிக்க விரும்புவதாக பேரி ஆஸ்போன் தெரிவித்தார்.
நாங்கள் இருவரும் இணைந்து பணிபுரியும் ஹொலிவூட் படத்தில் நானே கதாநாயகனாக நடித்து இயக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். முதலில் இவ்வளவு பெரிய பொறுப்புகளை நாம் எடுத்துக் கொள்ளலாமா? என்று தயங்கினேன.“ ஆனால், அவர் தொடர்ந்து வலியுறுத்தியதால் படத்தை நான் இயக்கி நடிக்க சம்மதித்துள்ளேன்.
விஸ்வரூபத்தை இயக்கிய உங்களுக்கு ஆங்கிலப் படம் இயக்குவது பெரிய விடயமல்ல என்று அவர் ஊக்கமளித்தார்.
இதுதவிர என் சொந்த பட நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸுடனும் இணைந்து படம் தயாரிக்க பேரி ஆஸ்போன் தயாராக இருக்கிறார். நான் ஹொலிவூட்டுக்கு வர÷ வண்டும் என்றும் தொடர்ந்து ஆங்கிலப் படங்களில் நடித்து இயக்க வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார்.

நன்றி தினக்குரல்