மலரும் முகம் பார்க்கும் காலம் 22 - தொடர் கவிதை
.
„மலரும் முகம் பார்க்கும் காலம்“ கவிதையின் இருபத்திரண்டாவது (22) கவிதையை எழுதியவர் இந்தியா,கைதராபாத்தைச் சேர்ந்த படைப்பாளியான திருமதி.தேனம்மை லக்ஸ்மணன் அவர்கள்.
இவர் தொடர்ந்தும் தனது முகநூலிலும் இணையத்தளங்கள் பத்திரிகைகளில் தனது ஆக்கங்களை எழுதிக் கொண்டிருப்பவர்.தமிழ் எழுத்தாளர் இணைய அகத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்த „விழுதல் என்பது எழுகையே“என்ற நெடுந்தொடரில் பங்குபற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
என் தேகம் புதை பேனா எடுப்பேனா
வன் தேசம் விதை பேனா விடுப்பேனா
கண் காந்தத் தின் பேனா கொடுப்பேனா
மண் தீண்டும் முன் பேனா மலர்வேனா
நெடுந் தீவும் நன் நாடும் காண்பேனா
கடுந் தீயும் கடி தவமும் மாண்பேனா
விடு மக்கள் வீட டையப் பார்ப்பேனா
கொடு உரிமை படை யுடைய யாப்பேனா
தமிழ்ச் சாதி தமிழ் நீதி விளங்கட்டும்
தமிழ்ச் சேதி தமிழ் தேசம் உய்யட்டும்.
தமிழ்ப் பறைஞர் தமிழ்க் குரவர் உலகெட்டும்
தமிழ் முழங்கி தமிழ் ஒலிக்க உயரட்டும்.
பலரும் போக யாக்கைக் கோலம்
அலரும் அகம் மாக்ரை கேலம்
சிலரும் யாகம் யாக்கும் சீலம்
மலரும் முகம் பார்க்கும் காலம்.
திரை நீங்கி திருத் தேசம் முழுவட்டும்
கறை நீங்கி கருப் பெருக்கம் பரவட்டும்.
கரை திரும்பிப் புகழ் ஒளிர வாழட்டும்.
கரை காணா மகிழ் வெளிச்சம் பெருகட்டும்
„மலரும் முகம் பார்க்கும் காலம்“ கவிதையின் இருபத்திரண்டாவது (22) கவிதையை எழுதியவர் இந்தியா,கைதராபாத்தைச் சேர்ந்த படைப்பாளியான திருமதி.தேனம்மை லக்ஸ்மணன் அவர்கள்.
இவர் தொடர்ந்தும் தனது முகநூலிலும் இணையத்தளங்கள் பத்திரிகைகளில் தனது ஆக்கங்களை எழுதிக் கொண்டிருப்பவர்.தமிழ் எழுத்தாளர் இணைய அகத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்த „விழுதல் என்பது எழுகையே“என்ற நெடுந்தொடரில் பங்குபற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
என் தேகம் புதை பேனா எடுப்பேனா
வன் தேசம் விதை பேனா விடுப்பேனா
கண் காந்தத் தின் பேனா கொடுப்பேனா
மண் தீண்டும் முன் பேனா மலர்வேனா
நெடுந் தீவும் நன் நாடும் காண்பேனா
கடுந் தீயும் கடி தவமும் மாண்பேனா
விடு மக்கள் வீட டையப் பார்ப்பேனா
கொடு உரிமை படை யுடைய யாப்பேனா
தமிழ்ச் சாதி தமிழ் நீதி விளங்கட்டும்
தமிழ்ச் சேதி தமிழ் தேசம் உய்யட்டும்.
தமிழ்ப் பறைஞர் தமிழ்க் குரவர் உலகெட்டும்
தமிழ் முழங்கி தமிழ் ஒலிக்க உயரட்டும்.
பலரும் போக யாக்கைக் கோலம்
அலரும் அகம் மாக்ரை கேலம்
சிலரும் யாகம் யாக்கும் சீலம்
மலரும் முகம் பார்க்கும் காலம்.
திரை நீங்கி திருத் தேசம் முழுவட்டும்
கறை நீங்கி கருப் பெருக்கம் பரவட்டும்.
கரை திரும்பிப் புகழ் ஒளிர வாழட்டும்.
கரை காணா மகிழ் வெளிச்சம் பெருகட்டும்
திரும்பிப்பார்க்கின்றேன் - முருகபூபதி
.
திருகோணமலையிலிருந்து அவுஸ்திரேலியாவரையில் சர்வதேசப்பார்வையுடன் பயணித்த ஆழியாள் மதுபாஷினி
தமிழர் வாழ் நிலங்களில் புதிய பரிணாமமாக ஆறாம் திணையை ஆய்வுக்குட்படுத்தும் ஆளுமை
வெளியே வர்த்தகத்திற்கு செல்லும் அப்பா, திரும்பிவரும்பொழுது வாங்கிவரும் அப்பிள் பழங்களை அவுஸ்திரேலியா அப்பிள் என்றுதான் அறிமுகப்படுத்துவார்.
எனது மகனுடன் அவனது பதினோரு வயதில் இலங்கை சென்றபொழுது, கொழும்பு புறக்கோட்டையில் நடைபாதை வர்த்தகர்கள், " அவுஸ்திரேலியா அப்பிள் " என்று கூவிக்கூவி விற்றபொழுது அதனை வேடிக்கையாகப் பார்த்தான். அந்த பஸ்நிலையத்தில்
தனியார் பஸ் நடத்துனர்கள், பஸ்செல்லும் இடம் பற்றி உரத்த குரலில் தொடர்ச்சியாகச் சொல்லி பயணிகளை அழைப்பதையும் விநோதமாகப்பார்த்தான்.
இங்குள்ளவர்களுக்கு
எதனையும் சத்தம்போட்டுத்தான்
அறிமுகப்படுத்தவேண்டுமோ...?
என்றும் கேட்டான்.
அவன் இலங்கை வந்தபொழுது எத்தனை விநோதங்களைப் பார்த்தானோ அதேயளவு விநோதங்களை வேறு வேறு கோணங்களில் நானும் அவுஸ்திரேலியா கண்டத்துள் பிரவேசித்த 1987 முற்பகுதியில் சந்தித்தேன்.
மேற்கு அவுஸ்திரேலியா மாநிலத் தலைநகர் பேர்த்தில் தரையிறங்கி, சில நாட்கள் அங்கு வேலை தேடிப்பார்த்து கிடைக்காமல், மெல்பனுக்கு ஒரு காலைப்பொழுது பஸ் ஏறியபொழுதுதான் --- அந்தப்பயணம்
முடிவதற்கு சுமார் 48 மணிநேரங்கள் செல்லும் என்ற தகவல் தெரிந்தது. இரண்டு முழுமையான
பகல் பொழுதுகள். இரண்டு முழுமையான இரவுப்பொழுதுகள்.
சிங்காரச் சென்னை சீரழிந்தது எப்படி???? - கலாநிதி சந்திரிகா சுப்ரமண்யன்
.
மா மழை போற்றுதும்! மா மழை போற்றுதும்! என்ற மழையை போற்றிய தமிழர் வரலாற்றில்மழை பிழைத்த காரணத்தினால் சென்னை பேரிடருக்கு உள்ளாகி விட்டது.ஒரு நாட்டின்வளம் அதன் நீர் வளத்தினைச் சார்ந்தது. மாடு கட்டி போரடித்தால் மாளாது என்று யானை கட்டிபோராடிக்கும் மரபாக தஞ்சை மண் இருந்தது.வான் பொய்த்தாலும் தான் பொய்க்காது எனக்காவிரித் தாய் திகழ்ந்தாள்..ஆனால் இந்திய மாநிலங்களில் பெரும் தண்ணீர்த் தட்டுபாட்டைசந்தித்து வரும் மாநிலம் தமிழகமாகும். காரணம் வறட்சி, பருவ மழை பொய்த்த வானம், நீர்வளம் வரண்டதால் கேரளாவுடன் முல்லைப் பெரியாறு, கர்னாடகாவுடன் காவிரி நீர் நதிநீர்ப்பங்கீட்டு பிரச்சனை,.
மா மழை போற்றுதும்! மா மழை போற்றுதும்! என்ற மழையை போற்றிய தமிழர் வரலாற்றில்மழை பிழைத்த காரணத்தினால் சென்னை பேரிடருக்கு உள்ளாகி விட்டது.ஒரு நாட்டின்வளம் அதன் நீர் வளத்தினைச் சார்ந்தது. மாடு கட்டி போரடித்தால் மாளாது என்று யானை கட்டிபோராடிக்கும் மரபாக தஞ்சை மண் இருந்தது.வான் பொய்த்தாலும் தான் பொய்க்காது எனக்காவிரித் தாய் திகழ்ந்தாள்..ஆனால் இந்திய மாநிலங்களில் பெரும் தண்ணீர்த் தட்டுபாட்டைசந்தித்து வரும் மாநிலம் தமிழகமாகும். காரணம் வறட்சி, பருவ மழை பொய்த்த வானம், நீர்வளம் வரண்டதால் கேரளாவுடன் முல்லைப் பெரியாறு, கர்னாடகாவுடன் காவிரி நீர் நதிநீர்ப்பங்கீட்டு பிரச்சனை,.
அப்படி தமிழகத்திற்கு என்ன பிரச்னை? எதனால் வந்தது ஏன் ? எப்படி? உருவானது?
நீரின்றி அமையாது உலகு . தண்ணீரின் மகத்துவத்தை உணர்த்த இதை விட வேறு ஒன்றும்சொல்லத் தேவையில்லை. அந்தக் காலத்தில் காலத்தின் தேவை கருதி மழைநீர் சேகரிப்பு,நீர் பாசன கட்டமைப்பை வைத்திருந்தனர். மழைநீர் சேமிப்பு முறை மூலம் ஒரு ஏரியில்தண்ணீர் நிரம்பினால், கால்வாய் மூலமாக இன்னொரு ஏரிக்கு தண்ணீர் போகும். அதுவும்நிரம்பினால் அங்கிருந்து இன்னொரு ஏரிக்குத் தண்ணீர் பாயும்.. பக்கத்தில் ஆறு, குளம்இருந்தால் அவையும் ஏரிகளுடன் இணைக்கப்பட்டிருக்கும். இப்படியே கடற்பகுதி வரைஏரிகளும் அதன் கால்வாய்களும் நீண்டு இருந்தன. அதனால் ஒரு பகுதியில் வெள்ளம்வந்தாலும், வறட்சியான இன்னொரு பகுதி வளமாக இருக்க முடிந்தது
கவிவிதை - 6 - வயலும் காற்றும் - -- விழி மைந்தன் --
.
சுப்பன் வயலைக் கொத்திக் கொண்டிருக்கிறான்.
சுப்பையா வயலைச் சுற்றி ஓடுகிறான்.
இருவரும் சிறுவர்கள்.
ஆனால் இப்பொழுதே, வயல் கொத்துவது சுப்பனின் வாழ்க்கை ஆகி விட்டது.
விடிகாலையில் எழுகிறான். விரைந்து வயல் செல்கிறான். அப்பனுக்கு உதவியாக ஆவன பல செய்கிறான். மத்தியானம் வயல் வரப்பில் கஞ்சி. மாலையில் சுடச் சுட ஒரு கோப்பை தேநீர். துரவில் குளியல். கோயில் தொழுகை. சின்னதோர் ஓய்வு இரவில் தான் - பால் நிலவில் தன்னையொத்த நண்பர்களுடன் சேர்ந்து கொஞ்சம் விளையாட்டு. தூக்கம்.
சுப்பையா ஊர்ப் போஸ்ட் மாஸ்டரின் மகன். பக்கத்தூர்ப் பெரிய பள்ளியில் படிக்கிறான். வயல் அவன் தகப்பனாருடையது. வயலைச் சுற்றி ஓடுவது அவனுக்கு விளையாட்டு. பள்ளியில் படித்த 'பஞ்சி' தீர்ப்பது.
காலம் காற்றோடு செல்கிறது.
தலைமைப் பதவியில் தமிழர் - அன்பு ஜெயா,
.
தன்னார்வ தொண்டாளராக புலம் பெயர் மக்களுக்கு சேவை செய்யத் தொடங்கி இப்போது புலம்பெயர் மக்களின் சேவைக்கான அதி உயர் அமைப்பான சிட்
வெஸ்ட் பல்லின பல்கலாச்சார சேவைமையத்தின் (SydWest
Multicultural Services)
அதி உயர் பதவியான நிர்வாகக்குழு தலைமைத்துவத்தை எட்டியிருக்கிறார்
வழக்கறிஞர்
சந்திரிகா சுப்ரமண்யன். கடந்த ஆறு ஆண்டுகளாக அந்த
அமைப்பின் நிர்வாகக் குழுவில் பல்வேறு நிர்வாகப் பொறுப்பில் இருந்த
இவர் முதல் முறையாக தலைமைப் பதவியில் அமரும் பெண் என்ற பெருமைக்குரியவர்.கடந்த பல ஆண்டுகளாக டாக்டர் சந்திரிகா சுப்ரமண்யன்
மேற்கு சிட்னி பொது மக்களுக்கு தனது ‘சோமா’ அமைப்பின் மூலம்
இலவச சட்ட உதவிகளைச் செய்து வருகிறார். ஆயிரக் கணக்கானபல்லின
பல் கலாசார மக்களுக்கு இதன் மூலம் பயன் கிட்டுகிறது. குறிப்பாக பெண்கள்
இந்தச் சேவையை பெரிதும் பயன்படுத்துகிறார்கள்.
இலங்கைச் செய்திகள்
டெங்கு காய்ச்சலால் 44 பேர் பலி
யாழ். மாணவனின் தற்கொலை தமிழரின் உரிமைகளுக்கான போராட்டங்களில் ஒன்று
குளியலறையில் பாட்டியை சிறைவைத்த மகளும் பேத்தியும் கைது
விஷம் அருந்திய நிலையில் 3 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி
சவூதியில் இலங்கைப் பெண்ணின் மரணதண்டனைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
மஹிந்தவின் தற்போதைய மாதாந்த வருமானம் 4,54,000 : எவ்விதத்தில் நியாயம்?
வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு : அசௌகரியத்தில் நோயாளர்கள்
கொழும்பு துறைமுக அபிவிருத்தித்திட்டம் விரைவில் மீண்டும் ஆரம்பிக்கப்படும்
ஒரு நாளைக்கு ஒரு கோடி கிடைக்கின்றது : கடந்த அரசாங்கத்தில் இந்த பணத்துக்கு என்ன நடந்தது?
வடகோவை வரதராஜனின் நிலவுகுளிர்ச்சியாக இல்லை (சிறுகதைத்தொகுதி) - நயப்புரை: நடேசன்
.
(மெல்பனில் கடந்த 5 ஆம் திகதி நடந்த அவுஸ்திரேலியா
தமிழ் இலக்கியக்கலைச்சங்கத்தின் வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சியில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை)
கனடா எழுத்தளர் மாரக்கிரட் அட்வூட்‘ மற்றவர்கள் கதைகளை நாம் படிப்பதன்
மூலம் நாங்கள் நல்ல கதை சொல்லிகளாக மாறுகிறோம்’ என்றார். கதை சொல்வது காலம் காலமாக ஒவ்வொரு சமூகத்திலும் இருந்தது. அச்சு எழுத்துகள் வருவதற்கு முன்பு கதை சொல்லலே எமது ஊடகம்.
மூலம் நாங்கள் நல்ல கதை சொல்லிகளாக மாறுகிறோம்’ என்றார். கதை சொல்வது காலம் காலமாக ஒவ்வொரு சமூகத்திலும் இருந்தது. அச்சு எழுத்துகள் வருவதற்கு முன்பு கதை சொல்லலே எமது ஊடகம்.
சிறுகதை ஒரு இலக்கியவடிவமாக வரும் போது அங்கு பாத்திரம், மொழி ,உணர்வு, மற்றும் நோக்கம் என பல விடயங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது சாதாரணமான குடிசையாக இருந்தது அழகியவீடாக வருவதற்கு ஒத்தது.
நமது சமூகத்தில் சிறுகதை எழுத்தாளர் அதிகம் காரணம் சிறுகதைகளை உடனே படித்துவிடுவது வாசகர்களுக்கு மடடுமல்ல,அவற்றை பிரசுரிக்கும் மாத,வாரப்பத்திரிகைகளுக்கும் இலகுவானது. இந்த இலகு தன்மையையே இந்த வகையான இலக்கியத்தை உருவாக வழி வகுத்தது. மற்ற நாடுகளில் சிறுகதை இலக்கியம புகழ் பெற்றாலும் அமரிக்காவே தாய்நாடு என்கிறார்கள். தற்போது பல சஞ்சிகைகள் சிறுகதையை பிரசுரிப்பதில்லை. ஆனால் இன்னமும் உலகத்தின் சிறந்த சிறுகதைகள் மொழிபெயர்ப்பு செய்தும் நியோக்கர் சஞ்சிகையில் பிரசுரிக்கப்படும்.
Subscribe to:
Posts (Atom)