இறைவனாய் வாழுகின்றார் ---- எம் . ஜெயராமசர்மா அவுஸ்த்திரேலியா ]

.
    தப்பாகப் போகாமல் தடுத்திடுவார் எங்களப்பா
    எப்போதும் எம்நினைப்பாய் இருந்திடுவார் எங்களப்பா
    அப்பாவி போலவவர் அயலார்க்குத் தோற்றிடினும்
    அப்பாவின் அறிவுத்திறன் ஆருக்கும் இல்லையென்போம் !

    ஆங்கிலத்தைப் பேசுகின்ற ஆற்றலில்லா எங்களப்பா
    அழகுதமிழ் பேசிநின்றால் அனைவருமே அசந்திடுவர்
     பட்டிமன்றம் கவியரங்கம் ஏறிநிற்பார் எங்களப்பா
     பரவசமாய் அவர்படையல் பாங்குடனே வந்துநிற்கும் !

     ஆடம்பரம் அறியாமல் வளர்ந்துவிட்டார் எங்களப்பா
     அறிவுடனே ஆராயும் ஆற்றலுள்ளார் எங்களப்பா
     வீணான வார்த்தைகளை விரும்பாதார் எங்களப்பா
     விருப்புடனே தேர்ந்தெடுத்து விளம்பிடுவார் வார்த்தைதனை !

சிட்னி முருகன் கோவில் - ஆடிப்பூரம் 05.08.16


ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நட்சத்திரமான பூரம்  தினத்தன்று  அம்மன் பல்வேறு அலங்காரங்களில் காட்சி அளித்தார்.   

படங்கள்  


அழகு தெய்வம் முருகனின் நல்லூர் ஆலய வரலாறு...!

.

அழகுத் தெய்வம் முருகனுக்கு  கிராமங்கள் தோறும், நகரங்கள் தோறும் எண்ணுக்கணக்கான ஆலயங்கள் உள்ளன.

யாழ்ப்பாணத்திலும் பல பிரசித்தி பெற்ற முருகன் தலங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று தான் யாழ்ப்பாணம் நல்லூரில் கோயில் கொண்டுள்ள நல்லைக்குமரன் ஆலயம் ஆகும்.
நல்லூர், இலங்கையின் வடபகுதியில் உள்ள தமிழர்களின் இராசதானியாகவும், 12ம் நூற்றாண்டு தொடக்கம் 17ம் நூற்றாண்டு முற்பகுதிவரை யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமாகவும் நல்லூர் விளங்கியது.

 யாழ்ப்பாண அரசிற்கு சிறப்புச் சேர்த்துள்ள நல்லூர், யாழ் நகரில் இருந்து சுமார் இரண்டு மைல் தூரத்தில் அமைந்துள்ளது.
இந்த ஆலயம் 13ம் நூற்றாண்டில் யாழ்ப்பாண இராச்சியத்தை ஆட்சிசெய்த ஆரிய சக்கரவர்த்திகள் வம்சத்தின் முதலாவது அரசனான கலிங்கமாகன் அல்லது கூழங்கை சக்கரவர்த்தியால் கட்டுவிக்கப்பட்டதாக யாழ்ப்பாண வைபவமாலையில் கூறப்பட்டுள்ளது.(கை ஊனமான நிலையில் உள்ளதால் இந்த அரசன் கூழங்கைச் சக்கரவர்த்தி என அழைக்கப்பட்டான்)
எனினும், 15ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தை கைப்பற்றி பதினேழு ஆண்டுகள் ஆட்சி செய்த சிங்கள அரசின் பிரதிநிதியும், பிற்காலத்தில் ஸ்ரீ சங்கபோதி 7ஆம் புவனேகபாகு என்ற பெயர்கொண்டு அழைக்கப்பட்ட கோட்டை அரசனான ஸ்ரீ சண்முகப்பெருமாள் என்பவனால் இக்கோவில் கட்டப்பட்டதாகவும் வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.

தமிழரின் தோற்றுவாய்

.
[எங்கிருந்து தமிழர்?]
எழுதித் தொகுத்தது:        கந்தையா  தில்லைவிநாயகலிங்கம் 
படித்துத் தொடுத்தது:     செல்வத்துரை சந்திரகாசன்
நன்றி                                :   தீபம்;     ttamil.com    

பகுதி:01 of  82
Thamizhar History   


வரலாறு, வரலாற்றிற்கு முந்திய காலமான கிறிஸ்துவுக்கு  முன் 1000- 500 ஆண்டு அளவில் ஆரம்பிக்கப்பட்டதாக நம்பப்பட்டது. ஆனால் இப்போது,  தமிழர்/திராவிடர் பண்பாடு, தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டத்தில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் பழைய நாகரிகத்தைச் சேர்ந்த தொல்லியல் களங்களிலும் [பெரும் கல்லாலான இடங்களும் சின்னங்களும்] , இலங்கை புத்தளத்தில் உள்ள பொம்பரிப்பு அகழ்வு, மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கதிரைவெளி [அல்லது கதிரவெளி] அனைத்தும் இவைகளுடன் தொடர்புடையது என வரலாற்று  ஆசிரியர்களும் தொல்பொருளியலாளரும் கருதுகிறார்கள். தென் இந்தியாவின் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் அருகிலுள்ள தொல்பொருளாய்வு சார்ந்த இடமான அரிக்கமேடுவில் தோண்டி எடுக்கப்பட்ட பண்டத்தின் துண்டுகள், பொம்மைகள் போன்றவைகள், மிகப் பழைய குடியேற்றப் பகுதியான  இலங்கை, சுன்னாகம் பகுதியில் உள்ள கதிரமலை [கந்தரோடை] பகுதியிலும் கண்டு எடுக்கப்பட்டு உள்ளன.  இவைகள் சில கிறிஸ்துக்கு முன் 2000 ஆண்டை சார்ந்ததாக கருதப்படுகிறது. இந்த தொல் பொருள் சாட்சிகள் ,இந்தியா இலங்கையில் உள்ள இந்த வரலாற்று இடங்கள் நீண்ட காலமாக தொடர்ந்து மக்கள் வாழ்ந்ததிற்கு ஆதாரமாக உள்ளது.



எழுதித் தீராப் பக்கங்கள் -- கானா பிரபா

"நான் யூனிவேர்சிற்றியில படிச்ச முடிச்ச கையோட ஊருக்குப் போயிடுவன், இன்னும் நாலு வருசம் தானே பல்லைக் கடிச்சுக் கொண்டு இருப்பம்" என்று சொல்லி 21 ஆண்டுகள் கழிந்து விட்டது அவுஸ்திரேலியாவுக்கு வந்து.

உயர் படிப்புக்காக என்னோடு கூட வந்த நான்கு சிங்கள மாணவர்களும் தங்கள் மொழியில் தமக்குள் மட்டும் பேசிச் சிரிக்க ஆரம்பித்த கணமே நான் மெல்ல மெல்ல தனிமைச் சிறைக்கு இழுத்துச் செல்லப்படுவதை உணர்ந்தேன் பின்னர் வந்த நாட்டில் வகுப்பறையில் வெள்ளைக்கார ஆசிரியருக்கு முன்னால் சக சிங்கள மாணவன் ( என்னுடன் ஒரே விமானத்தில் கூட வந்தவன் தான்) என்னைக் காட்டி "இவர்கள் பயங்கரவாதிகள்" என்று அடையாளப்படுத்திய கதையெல்லாம் முன்னர் எழுதியிருக்கிறேன். என்னுடைய புலப் பெயர்வு வாழ்வில் முதல் பத்து ஆண்டுகள் கிட்டிய அந்தச் சவால் நிறைந்த வாழ்க்கைப் போராட்டத்தை மீளவும் நினைத்துப் பார்க்க வைத்தது நேற்று வாசித்து முடித்த "எழுதித் தீராப் பக்கங்கள்". 

மெல்பேண் மண்ணில் இசையால் மனதைக் கவர்ந்த செல்வி.அஞ்சலி காசிநாதன், செல்வி.அஷ்வினி காசிநாதன் சகோதரிகளின் வாய்ப்பாட்டு சங்கீத அரங்கேற்றம்.















Melbourne George Wood Performing Arts Centre ல் 09.07.2016 சனிக்கிழமையன்று மாலை கலாநிதி சந்திரபானு பரதாலயா அக்கடமியின் பிரபல சங்கீத ஆசிரியை ஸ்ரீமதி சிவகங்கா சகாதேவன் அவரிகளின் மாணவிகளும், திரு.காசிநாதன், திருமதி.சுந்தரராணி காசிநாதன் தம்பதிகளின் அன்புப் பிள்ளைகளுமான செல்வி.அஞ்சலி காசிநாதன், செல்வி.அஷ்வினி காசிநாதன் ஆகியோரின் வாய்ப்பாட்டு சங்கீத அரங்கேற்றத்திற்குச் செல்லக் கூடிய அரிய வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அரங்கேற்றம் மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள் முன்னிலையில் மிகவும் கோலாகலமாக நடந்தேறியது.

மட்டக்களப்பு அரங்க ஆய்வுகூடம் யாழ்ப்பாணத்தில் நிகழ்த்திய மட்டக்களப்புக் கூத்துக்களின் பரிணாமம் ஓர் விவரண அரங்க ஆற்றுகை



யாழ்ப்பாண அரங்கச் செயற்பாட்டுக் குழுவினர்  ஆதரவில் 19.7. 2016 இடம் பெற்ற பண்பாட்டுமலர்ச்சிக் கூடத் திறப்பு விழாவன்று
மட்டக்களப்பு அரங்க ஆய்வு  கூடத்தினர் புதுவிதமான  ஒர்  அரங்க ஆற்றுகை செய்தனர்
 மட்டக்களப்புக் கூத்து அரங்கினையும் அதன் பரிமாணங்களையும் விரிவுரை முறையில் விளக்கும் அதே வேளை நாடகத் தன்மை கொண்டதாகவும்,இது அமைந்திருந்தது
அரங்க ஆய்வுகூட மாணவர்கள் பதின்மருடன் பேராசிரியர் மௌன்குருவும் இவ்வரங்க  ஆற்றுகையில் கலந்து கொண்டார்
.பிரதான உரையை அவரே நடத்தியதுடன் ஆற்றுகையினையும் வழி நடத்தினார்

நூல் நயப்புரை: சமூகப்பயம், மதிப்பின் பாதிப்புக்கு அப்பால் அறத்தைப்பேசும் ' சொல்ல மறந்த கதைகள் ' ஏலையா க. முருகதாசன் - ஜேர்மனி



அவுஸ்திரேலியாவில்  வசிக்கும்  எழுத்தாளரும்  ஊடகவியலாளருமான லெ.முருகபூபதி  அவர்கள்   நீண்ட  காலமாக  உள்ளத்தில்  பூட்டி வைத்த  பல  இரகசியங்களை  சொல்ல  மறந்த  கதைகள்  என்று கோடிட்டு   சொல்லியுள்ள  நூல்தான்  சொல்ல  மறந்த  கதைகள்.
ஒவ்வொரு  ஆண்   பெண்ணிடமும்  மனம்  என்னும்  அதளபாதாளத்தில் பல  இரகசியங்களைக்  கொண்ட  பல  அடுக்குகள்  தொல்பொருள் போல   புதைந்து  கிடக்கின்றன.
" நான்  வெளிப்படையானவன் "  எனச் சொல்லும்  ஒவ்வொரு மனிதனும்  உண்மையில்  வெளிப்படையானவர்கள்தானா ? என்ற சந்தேகம்  இருக்கவே  செய்கின்றது.
பொதுவாழ்வில்  ஈடுபடுவோரும்  எழுத்து,  ஊடகத்துறையில் ஈடுபடுவோரில்   அங்கொன்றும்  இங்கொன்றுமாக  சிலரும்  தமது அனுபவங்களை   வெளிப்படையாக  எழுத்து  மூலமாக பொதுவெளிக்குக்  கொண்டு வந்திருக்கிறார்கள்.
சில  உண்மைகளை  காலம்  வெளிக்கொண்டு  வரும்  என்பதற்கு உதாரணமாக   இருப்பதுதான்  லெ.முருகபூபதி  அவர்களின்  சொல்ல மறந்த கதைகள்   என்ற  நூலாகும்.
மண்ணுக்கு  மேல்  கற்களைப்  பரப்பி  வைத்தாலும்  புதையுண்டு கிடக்கும்   விதை,  கற்களுக்கிடையில்  கிடைக்கும்  இடைவெளிக்கூடாக   முளையாகி  வீரிட்டு  எழுவது  போல் எழுந்திருக்கிறது.   இந்நூலில்  கிட்டத்தட்ட  19  தலைப்புகளில்  தனது அனுபவங்களைப்   பகிர்ந்திருக்கிறார்  நூலாசிரியர்.
நம்பிக்கை,   எதிர்பாராதது,  காவி  உடைக்குள்  ஒரு  காவியம், காலிமுகம்,   கண்ணுக்குள்  சகோதரி,  உயிர்ப்பிச்சை,  கண்டம், விபத்து,   தமிழ்  மூவேந்தர்களும்  ருஷ்ய  மன்னர்களும்,  அநாமதேய தொலைபேசி   அழைப்பு,  வீணாகிப்  போன  வேண்டுகோள்,   லிபரேசன்  ஒப்பரேசன்  ஒத்திகை,  நிதானம்  இழந்த  தலைமை, வழிகாட்டி  மரங்கள்  நகருவதில்லை,   காத்திருப்பு - புதுவை இரத்தினதுரை,    ஏரிக்கரைச்  சிறைச்சாலை,   மனமாற்றமும் மதமாற்றமும்,   மரணதண்டனைத் தீர்ப்பு ,  மனிதம்,  பின் தொடரும் வியட்நாம்  தேவதை  ஆகிய  தலைப்புகளில்  எழுதப்பட்ட  ஒவ்வொரு அனுபவக் கட்டுரையும்   ஒரு  சிறுகதை  வடிவத்தைப்  பெற்று நிற்கின்றன.
உண்மைகளைப்   பேசுவதற்குத்  துணிவு  வேண்டும். ஆவணப்படுத்தலில்   இது  ஒரு  தனிரகம்.   எழுத்து  ஊடகங்கள் சிந்தனை   விரிவாக்கத்தால்  புதுப்புது  கிளைகளாக  வளர்ந்து நிற்கின்றன.
இந்நூலில்   உள்ளவற்றை   முழுமையாக  வாசகர்கள்  முன்  கொண்டு வந்து   வைப்பது  சிரமமானது.   ஏனெனில்  ஒவ்வொரு  தலைப்பின்  கீழ் எழுதப்பட்டவற்றை   விபரிப்பதாயின்  அதுவும்  ஒரு  நூல்  வடிவைப் பெற்றுவிடும்.   எனவே   சில  தலைப்புகளின்  கீழ்  எழுதப்பட்டவற்றில் ஆங்காங்கே   சில  பக்கங்களில்  உள்ளவற்றை   மிகச்  சுருக்கமாகத்தர முயற்சிக்கிறேன்.
.

பிரண்ட்லைன் நாளேடு அம்பலப்படுத்தும் மருத்துவ உலகின் அசிங்கங்கள் . . . .என்.சுபாஷ்.


Medicine-Imc_0
இந்தியாவில் மருந்து வணிகம் அதிக லாபம் ஈட்டும் தொழிலாக மாறியுள்ளது. அப்படி மாறியதால் கடும் போட்டியும் நிலவுகிறது.நம் நாட்டில் 1970 ஆம் ஆண்டில் அமலுக்கு வந்த காப்புரிமை சட்டத்தின் விளைவாக ஏராளமான இந்திய முதலாளிகள் மருந்து உற்பத்தி மற்றும் வணிகத்தில் இறங்கினர்.  நம் நாட்டில் மருந்துகள் வணிகப் பெயர்களில்( BRAND NAME) மட்டுமே வணிகம் செய்யப்படுகின்றது.. இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஏராளமான நிறுவனங்கள் மருந்து உற்பத்தி மற்றும் வணிகத்தில் ஈடுபட்டன….அதையொட்டி மருத்துவர்களும் மருந்துகளை அரசு மருத்துவமனை அல்லாத வெளிசந்தையில் வணிகப்பெயர்களிலேயே எழுத துவங்கினர்…இது நம் நாட்டில் தற்போது இருக்கும் நிலை.
இந்திய மருந்து சந்தை சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ளது. இதில் சிறு,நடுத்தர பெரிய மருந்து நிறுவனங்கள் தங்கள் மருந்துகளை பிரபலப்படுத்திட மருத்துவ பிரதிநிதிகளை நியமித்து மருத்துவர்களை சந்தித்து விற்பனையை செய்து வருகின்றனர்.. 1990களில் இந்தியாவில் உலகமயம் வந்ததின் விளைவாக போட்டி வெவ்வேறு வடிவங்களில் மாறியது.
உலக மயத்தின் விளைவாக அமெரிக்கா போன்ற நாடுகளில் முன்னணி மருத்துவர்களை ஒட்டு மொத்தமாக விலைக்கு வாங்குவது அதன் மூலமாக தங்கள் நிறுவனத்தின் மருந்துகளை பரிந்துரைக்க வைப்பது, அம்மருந்துகளின் பக்க விளைவுகளை மறைப்பது, ஆராய்ச்சி முடிவுகளில் வரும் பாதகமான விவரங்களை கூட வேறு காரணங்களை சொல்லி  சாதகமாக்கி கொள்வது போன்ற பல அம்சங்கள் இருக்கிறது என்பதை பல பன்னாட்டு மருத்துவ பத்திரிக்கைகள் அவ்வப்போது  அம்பலப்படுத்தியிருக்கின்றன. இது ஒரு சான்று.

வன்னி மக்களின் ஆத்மாவைச் சொல்லும் சயந்தனின் ஆதிரை By Murugapoopathy

படித்தோம்  சொல்கிறோம்
வன்னி  மக்களின்  ஆத்மாவைச் சொல்லும்  சயந்தனின் ஆதிரை
போருக்கு  முன்னரும்  போர்க்காலத்திலும் போருக்குப் பின்னரும்  தொடரும்  தமிழ்  மக்கள்  அவலங்களின் ஆவணம்
வன்னிக்காடுறை  மனிதர்களின்  நிர்க்கதி வாழ்வைப்பேசும்    ஆதிரை
                                                                             முருகபூபதி

இலங்கை  மலையகம்  பலாங்கொடையில்  எனது   உறவினர்கள்  சிலர் வசித்தார்கள். எனது  அக்காவை   அங்கு Alpha தேயிலைத்தோட்டத்தில் Field Officer ஆக பணியாற்றியவருக்கு  ( பெற்றோர் பேசிச்செய்த திருமணம்)   மணம் முடித்துக்கொடுத்தார்கள்.  1966 ஆம் ஆண்டில்   நீர்கொழும்பில்  அக்காவின்  திருமணம்  நடந்தபொழுது நான்தான்    மாப்பிள்ளைத்தோழன்.
அக்கா   மலையகத்தில்  குடியேறியதனால்  அங்கு  உறவுகள்  பிறந்தன. ஒருவர்  எனது  அக்காவின்   கணவரின்  தங்கையை    மணம்முடித்தார். அவருக்கும்    பாலங்கொடையில்  ஒரு   வர்த்தகநிலையத்தில் லொறிச்சாரதி  வேலை.
1981  இல்  மலையகத்தில்  இரத்தினபுரி,   காவத்தை, பெல்மதுளை, இறக்வானை,   தெனியாய  ஆகிய  ஊர்கள்  சிங்கள   இனவாதிகளினால்    தாக்கப்பட்டபோது   பலாங்கொடையும் தப்பவில்லை.
அக்கா  குடும்பம்   வவுனியாவில்  காணி  வாங்கி  குடியேறியது. அதுபோன்று   அந்தச்சாரதியின் 
 குடும்பமும்   (எனக்கு  அண்ணா -  அண்ணி   முறை  உறவுபூவரசங்குளத்தில்   ஒரு  துண்டு  காணி வாங்கி  குடிசை அமைத்து வாழத்தலைப்பட்டது.    அவருக்கு  வேப்பங்குளத்தில்  ஒரு  அரிசி ஆலையில்   லொறிச் சாரதி  வேலை   கிடைத்தது.
1985  இல்  ஒருநாள்  அதிகாலை   வழக்கம்போன்று  மனைவி  தந்த இடியப்பப்பார்சலுடன்   வேலைக்குச்சென்ற  அவரை,  இரண்டு  நாட்கள் கழித்து    வவுனியா  ஆஸ்பத்திரி  சவச்சாலையில் சூட்டுக்காயங்களுடன்   சடலமாக  மீட்டோம்.
புலிகள்  வேப்பங்குளத்தில்  மன்னார்  வீதியில்  நடத்திய  கண்ணிவெடித்தாக்குதலில்  சில  இராணுவத்தினர்  கொல்லப்பட்டதன் எதிரொலியாக  நடந்த  துப்பாக்கிச்சூட்டில்  வேப்பங்குளத்தில் கொல்லப்பட்ட  பல  அப்பாவிகளில்  ஒருவர்  அந்த பலாங்கொடையிலிருந்து   இடம்பெயர்ந்து  வந்த   நான்கு பெண்குழந்தைகளின்   தந்தை.

வோட்டலூவில்* நான் By எச்.ஏ. அஸீஸ்



நெப்போலியனே
வோட்டலூவில்  நீ   தோல்வியுற்ற
போர்க் களத்தில்  நிற்கிறேன்
எல்லாத்  திசைகளையும்
ஏறெடுத்துப் பார்க்கிறேன்

இறுதியாக  நீ சூழப்பட்ட  வேளை
ஏது  உன்  மனதில்  தோன்றியிருக்கும்
உன் மீது  நீ  இட்ட   அபரிதமான   முதலீடா
பிறர் திறனில்  நீ  கொண்ட
இளக்காரக்   கணிப்பீடா,   இல்லை
எல்லையற்ற  வல்லமையின்
இருப்பிடம்  நீ  என  நினைத்ததுவா
எத்தனை  களங்களைக் கண்டவன் நீ
எத்தனை போர்க்களத்தை வென்றவன் நீ


இந்தப் போர்  முனையை
நீ   இழந்துவிடக்  காரணம்  ஏன்
உன் கடைசி   ராஜாங்கத்தின்
கடிவாளத்தில்   இருந்தனையோ
சரித்திரம்   உன்னை  வீரனாய்
விபரித்த  போதும்
என்ன   தரித்திரம்  ஆட்கொண்டது
இந்த விரிந்த  தரையில்  வந்து
வீரம்  காட்ட
அழிவின்  பாதையில்  நீ
அமைதி  தேடி   வந்தாயோ
இழிவின்   கொடுமையினை
எவ்வாறு  ருசித்திருப்பாய்
நிற்கிறேன்
நிதானித்து
நீ   தோல்வியுற்ற
போர்க்களத்தில் 
* Waterloo is where Napoleon was defeated in 1815.