தை பொங்கல் வாழ்த்துக்கள்

.
தமிழ் முரசு வாசக நெஞ்சங்களுக்கு தை பொங்கல் வாழ்த்துக்கள் 

திருக்கணிதப்படி தைபிறப்பு(மகர சங்கராந்தி) ஜய ஆண்டு (14.1.2015) மார்கழி 30ம் நாள், புதன் கிழமை, தேய்பிறை நவமி திதி, சுவாதி நட்சத்திரம், திருதி யோகம், கரசை கரணம், அமிர்தாதி சித்த யோகம், கூடிய சுபதினத்தில் இரவு 7:28 மணி அளவில் சூரியன் நிராயண முறைப்படி (லஹரி அயனாம்ஸம்) மகர ராசியில் பிரவேசிக்கிறார், இன்றுதான் நிராயண உத்திராயண புன்னியகாலம் துவங்குகிறது.
அன்று பொங்கல் பானை வைத்து சூரிய பூஜை - படையல் செய்ய நல்ல நேரம் காலை 8 மணி முதல் 8:25 மணி வரை மற்றும் 11:50 மணிக்கு மேல் 12:50 மணிக்கு முன்னர் வழிபடுவது உகந்தகாலமாகும்.

பொங்கல் வாழ்த்து— என்னினிய தமிழ் அன்பர்களுக்கு!

       .
               ---------பல்மருத்துவ கலாநிதி  இளமுருகனார் பாரதி.

     ஐந்துபத்தோ ஆயிரமோ விலைமதிப் பில்லா
        அரும்பெருஞ்சீர் விழுமியங்கள் நெஞ்சிற் சுமந்து
     வெந்துசாம்பல் ஆகினாலும் தமிழை மறவோம்
    விரும்பிமகிழ் “தனித்துவம்”விட மாட்டோ மென்று
     வந்தவிந்த நாட்டிற்குக் கொண்டு வந்தோம்
        வாழையடி வாழையாகக் காப்போம் என்றோம்
     இந்தநல்ல உறுதிமொழி எல்லாம் இன்று
         இழையறுந்த பட்டம்போற்; சுழலு தம்மா!

     உளிதேய்ந்து உளிப்பிடியாய்ப் போன கதை
        உங்களுக்குத் தெரிந்திருக்கும்  பொங்க லன்று
     வழிபிறக்கும் தமிழ்வளர்ப்போம் எமது சந்ததி
        வளர்த்துவந்த  வண்டமிழை மறவோம் என்று
     களிகூர்ந்து  மனதாரச் சபதம் எடுப்பீர்!
        கடமையென மனசாட்சி கணமும் உறுத்தக்
     கருத்திருத்திப் பிள்ளைகளைக் கன்னித் தமிழ்
        காதலொடு கற்றுயர வழிச மைப்பீர்!

    இல்லமெலாம் எழில்பொங்க இனிமை பொங்க
        இதயங்கள் அனுதினமும் அன்பிற் பொங்க
    நல்லுளங்கள் வாழ்த்திடவெம் நலங்கள் பொங்க
        நனிசிறந்து வாழ்வுயர மகிழ்ச்சி பொங்க
    நெல்வழங்கும் உழவர்வளம் நிரம்பிப் பொங்க
       நினைந்திறைவன் தாழ்தொழுது வாழ்த்து கின்றேன்!
    எல்லையில்லா உயிர்களுக்கு ஒளியைப் பொங்கும்
       எழுகதிரோன் அருள்பொங்கப் பொங்குவோமே!

           “ வாழ்க வளமுடன்”

                 

மரண அறிவித்தல் கதிர் சிற்றம்பலம்

.

மரண அறிவித்தல் - தம்பிஐயா சித்திரவேல்

.
திரு தம்பிஐயா சித்திரவேல்
(இளைப்பாறிய கிராம உத்தியோகத்தர், முன்னாள் பிறப்பு, இறப்பு விவாகப் பதிவாளர்)


மறைவு 09.01.2015
திருf;கோணமலை நிலாவெளியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிஐயா சித்திரவேல் அவர்கள் 09-01-2015 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பியையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், பாக்கியலக்சுமி(புங்குடுதீவு) அவர்களின் அன்புக் கணவரும்நித்யலக்சுமி (rpl;dp) >  சிவகுமார்(லண்டன்), சிவசங்கர்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற காசிப்பிள்ளை, கண்ணகைப்பிள்ளை, அன்னம்மா, தாமோதரம்பிள்ளை, செல்லத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இரவீந்திரரா[h(rpl;dp)>  பிரியா, சுரேசினி(பிரான்ஸ்)  ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யோகாம்பிகை, பேரின்பநாதன்(யாழ்ப்பாணம்), கமலாம்பிகை, இராஜராஜேஸ்வரி(யாழ்ப்பாணம்), கனகையா(திருf;கோணமலை), சரஸ்வதி, காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, சரவணமுத்து ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இராமலிங்கம்(நாரந்தனை), காலஞ்சென்ற கணேசன்தங்கராசா, ஆனந்தராசா, துரைசிங்கம் ஆகியோரின் அன்புச் சகலனும்,
கமலாதேவி சரவணபவன், நிர்மலாதேவி நித்தியானந்தமூர்த்தி(கனடா), ருக்மணிதேவி, சிவசோதி, சிவானந்தசோதி(பிரான்ஸ்), ஹரிஹரன்(கனடா), சிவப்பிரியா(கனடா), காலஞ்சென்ற சுசீலாதேவி கணேசசுந்தரம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுரேஸ்கரன்(சுவிஸ்), யசோதா பாஸ்கரன் ஆகியோரின் சிறிய தந்தையும்,
டேனிக்கா, தர்சனா, குருசஞ்ஜீவ், ஜெனுஸ்கா, கட்ஸரா, எதர்னா, யுவானி, சீவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:

சிவகுமார்           செல்லிடப்பேசி: +94756739620
சிவசங்கர்                  செல்லிடப்பேசி: +33622846925
நித்யலக்சுமி       செல்லிடப்பேசி: +61451213268

இரவீந்திரராஜா       செல்லிடப்பேசி:  +61424674642

மரண அறிவித்தல் அமரர் கந்தையா முருகேசு

.
அமரர் கந்தையா முருகேசு


அன்னை மடியில் 04.08.1937   இறைவன் அணைப்பில் 08.01.2015

யாழ் வடமராட்சி இமையாணன் வடக்கு உடுப்பிட்டியை சேர்ந்த கந்தையா முருகேசு  வியாழக்கிழமை 8/1/2015 அன்று அதிகாலை இறைவன் திருவடி சேர்ந்தார்.

அன்னார் முன்னாள் வவுனியா, பருத்தித்துறை இலங்கை மின்சாரசபை (CEB) ஊழியரும் காலம் சென்ற கந்தையா, மீனாட்ஷி ஆகியோரின் கனிஷ்ட புதல்வனும் காலம் சென்ற வேலுப்பிள்ளை, சின்னமணி, தங்கமுத்து (மலேசியா) ஆகியோரின் அன்பு சகோதரரும், வள்ளிப்பிள்ளை, சுந்தரம் (மலேசியாகாலம் சென்ற துரை ஆகியோரது மைத்துனனும்நாகேஸ்வரி, நாகேஸ்வரன்(அவுஸ்திரேலியா), சிவகுமார்(அவுஸ்திரேலியா) ஆகியோரது அன்பு சித்தப்பாவும், சிவபாதசுந்தரம்,  அவுஸ்திரேலியாவை சேர்ந்த மஞ்சுளா, சுதா ஆகியோரது அன்பு மாமனாரும் யசோதரன் (லண்டன்), கஜேந்திரன், சுபேந்திரன், அவுஸ்திரேலியாவை சேர்ந்த கார்த்திகா, மீரா, கௌசிகன், ஜோர்ஜா, தனுஷ், ஆகியோரது அன்பு தாத்தாவும் ஆவார்.

அவரது ஈமைகிரிகைகள் வடமராட்சியில் நடைபெறும்.
அவரது ஆத்ம சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்!!!!!!
தகவல்: வேலுப்பிள்ளை நாகேஸ்வரன் (அவுஸ்திரேலியா).

மரண அறிவித்தல் - திருமதி ஜெயந்தி சுதந்திரராஜ்

.
                                          திருமதி ஜெயந்தி சுதந்திரராஜ்
                                                         


கொழும்பினைப் பிறப்பிடமாகவும் சர்த்வீல்ட் சிட்னியில் வசித்தவருமான ஜெயந்தி சுதந்திரராஜ் வெள்ளிக்கிழமை ஜனவரி மாதம் 9 ம் திகதி 2015 அன்று
இறைவனடி சேர்ந்தார்.
இவர் காலம் சென்ற முன்னை நாள் பொருளியல்  விரிவுரையாளரும் இலங்கை போக்குவரத்துச் சபை பணிப்பாளருமான சங்கரப் பிள் ளை மனோன்மணி தம்பதிகளின் அருமை மகளும் , திரு ரத்தினசபாபதி சுதந்திரராஜின் அருமை மனைவியும்  ஆவார்.
ஞானசக்தி, ரத்தின சாபாபதி தம்பதியினரின் மருமகளும் கவிதா, ஜனகன், அபர்ணா ஆகியோரின் அன்புத் தாயரும்  சந்திரமோகன்
(USA ) அசோகன் (USA) நாகேந்திரன் (USA) மகேந்திரன் (USA) மனோகரி (சிட்னி)
மனோகரன் (USA) ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார். றஜீவ் விசுவநாதன்
நிசாந்தன் ஜெபநேசன், அசிகா குமார் ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆவார்.
றஞ்சனா, சித்திரமாலை, ஜிவன், அமிர்தா, ஜேயேந்திரன், மகாலஷ்மி ஆகியோரின் மைத்துணியும், ஸ்சானா. முகலியா ஆகியோரின் பாட்டியும்  ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரிகைகள் ஜனவரி மாதம் 17 ம் திகதி சனிக்கிழமை
காலை 9:30 மணிக்கு மங்கோலியா சப்பேல், மக்குவாரி பார்க் மயானம், நோத்
ரைட்டில் இடம் பெறும். உற்றார் உறவினர் நண்பர்கள் இவ் அறிவித்தலை ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன்
வேண்டப்படுகின்றீர்கள்
மேலதிக விபரங்களுக்கு:
அபர்னா 0424 286 879
நிசாந்தன் 0410 523 342

திரும்பிப்பார்க்கின்றேன் - பேராசிரியர் நுஃமான் - முருகபூபதி

.
இலக்கியத்திலும்  மொழியியலிலும்  பன்முக  ஆளுமை  கொண்டிருக்கும்   பேராசிரியர்  நுஃமான்
இலக்கியத்தொடர்பாடலுக்கும்  ஆய்வுத்தேடலுக்கும்   பாதை செப்பனிட்டுக்கொடுத்தவர்
  
                                    
இலங்கையின்  மூத்த  கவிஞரும்  விமர்சகருமான  நுஃமான் அவர்களுக்கு  70  வயது  என்பதை  அறிந்து  முதலில்  எனது நல்வாழ்த்துக்களை   அவருக்குத்  தெரிவித்துக்கொண்டே இந்தப்பதிவை  எழுதத்தொடங்குகின்றேன்.
நுஃமான்   தொழில்  ரீதியில்  பணியாற்றிய  கல்வித் துறையில்  எவ்வாறு  படிப்படியாக  உயர்ந்து  இன்று  தகைமைசார்  பேராசிரியராக  விளங்குகிறாரோ  அவ்வாறே  தாம்  சார்ந்த  இலக்கியத்துறையிலும்   படிப்படியாக  உயர்ந்து  பலருக்கும் முன்மாதிரியாகியிருப்பவர்.
அவர்  கவிஞர்,  விமர்சகர்,  ஆய்வாளர்,  மொழியியல்  அறிஞர், பேராசான்,   பதிப்பாளர்  முதலான  பன்முகம்  கொண்டவர்.
இலக்கியப்பிரவேசத்தில்  அவர்  ஆரம்பத்தில்  சிறுகதைகளும் எழுதியிருக்கிறார்   என்பதை   அறியமுடிகிறது.  பின்னாளில் ஆளுமையுள்ள  விமர்சகராகத்  தோற்றம்  பெற்ற  பலர்  ஆரம்பத்தில் சிறுகதைகள்தான்   எழுதியிருக்கின்றனர்  என்பது  தகவல்.   அந்த வரிசையில்  கைலாசபதி -  தொ.மு.சி ரகுநாதன்  ஆகியோரையும் குறிப்பிடலாம்.
 நுஃமான்  பிறந்த  ஆண்டு  1944  என்பது  மாத்திரமே  தெரிந்த நிலையில்  அவரது  வாழ்க்கைப்பின்புலம்  பற்றிய  எதுவித தகவலும் இற்றைவரையில்  எனக்குத் தெரியாது.  அவரை  முதன்  முதலில் கொழும்பில்   இலக்கியசந்திப்புகளிலும் -  பின்னர்  அவர்  ஆசிரியராக பணியாற்றிய  கொழும்பு  அல்.ஹிதாயா  வித்தியாலயத்திலும் சந்தித்தேன்.
எனது  நினைவுக்கு  எட்டியவரையில்  1972  காலப்பகுதியில்  அவரை ஒரு  பாடசாலை  ஆசிரியராகவும்,  அதேசமயம்  இலக்கிய விமர்சகராகவும்  பார்த்தேன்.   அவரை  கவிஞன்  என்ற   கவிதைக்காக கிழக்கிலங்கையில்  (1969 -1970)  வெளியான   இதழின்  இணை ஆசிரியராகவும்  மகாகவி  உருத்திரமூர்த்தியின்  சில  நூல்களை பதிப்பித்த  பதிப்பாளராகவும்  தெரிந்துகொண்டிருந்தேன்.

மாபெரும் பொங்கல் விழா - சிவிக் பூங்கா பெண்டில் ஹில்

.
மாபெரும் பொங்கல் விழா - சிவிக் பூங்கா பெண்டில் ஹில் - 18 Jan 2015 காலை 7.30



அனுமதி இலவசம்


யாழ் இந்து பழைய மாணவர் சங்கமும் சிட்னி தமிழ் வர்த்தகர்களும் இணைந்து நடத்தும் மாபெரும் பொங்கல் விழா பெண்டில் ஹில் சிவிக் பூங்காவில் 18 திகதி நடைபெற உள்ளது. தமிழரின் பாரம்பரிய கலாச்சார விழுமியங்களை அழிந்து விடாது காக்கவும் அதனை ஞாபகப்படுத்தவும் இந்த விழா வழிகோலும் என்பதில் ஐயமில்லை.

தமிழ் பாரம்பரியத்தினை தழுவிய கலை கலாச்சார நிகழ்வுகள் பல இடம்பெறும். அத்துடன் சிறுவர்களுக்கான விஷேட நிகழ்வுகளும் ஒழுங்குபடுத்தபட்டுள்ளன.தாயாக நினைவுகளை பிரதிபலிக்கும் அலங்கார வளைவுகள் மற்றும் செயற்பாடுகளும் ஒருங்கமைக்கபட்டுள்ளது.

இலங்கைச் செய்திகள்

.

ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றார்

பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார்

மஹிந்த தரப்பிலிருந்த 20 உறுப்பினர்கள் மைத்திரியுடன்? கருணாவும் மைத்திரி பக்கம்
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 1185 முறைப்பாடுகள்

வடக்கில் இதுவரை 21 முறைப்பாடுகள் பதிவு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 1498 முறைப்பாடுகள் : கபே

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 1185 முறைப்பாடுகள்



ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றார்


09/01/2015 இலங்கையின் 6 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேன சற்று முன்னர்  உயர்நீதிமன்ற நீதியரசர் கே.ஸ்ரீபவன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இந்த நிகழ்வு  கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.நன்றி வீரகேசரி 

பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார்

09/01/2015 இலங்கையின் பிரதமரமராக ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
நன்றி வீரகேசரி 

மகரஜோதி உற்சவம் - ஐயப்ப சுவாமி நிலையம்

.

வானொலிகளின் வசந்தகாலம் - சௌந்தர மகாதேவன்

தொலைக்காட்சிகளின் யுகம் இது. நெடுந்தொடர்கள், நல்ல நாட்களில் ஒளிபரப்பாகும் old radio-1திரைப்படங்கள், நாள் முழுவதும் செய்திகள் என்று கண்களுக்கு ஓய்வே இருப்பதில்லை. தொலைக்காட்சியில் பார்க்கத் தவறிய நிகழ்ச்சி களை இணையத்தில் பார்த்துக்கொள்ளவும் வசதி இருக்கிறது. ஆனால், தொலைக்காட்சி புழக்கத்துக்கு வராத காலத்தில் காதுகள்தான் கண்கள்! செவி வழி நுழையும் செய்திகள், பாடல்கள், வானொலி நாடகங்கள் கற்பனைகளை உருவாக்கிய அற்புதக் காலம் அது.

என் சித்தப்பாவிடம் பழைய காலத்து மாடல் வானொலி இருந்தது. டிரங்குப் பெட்டி மாதிரி இருந்த அந்த வானொலியைச் சிறுவயதில் பார்த்துப் பிரமித்திருக் கிறேன். காலை 6 மணிக்கு நிகழ்ச்சி கேட்க வேண்டுமானால், ஐந்தரைக்கே அதை தயார் செய்துவிடுவார் சித்தப்பா. வலது பக்கத்தில் இருக்கும் குட்டி பல்பு எரிந்து ‘சொய்ங்’ என்று சத்தம் எழுப்பிய படிப் பாட ஆரம்பிக்கும்போது அநேகமாக எங்களுக்குத் தூக்கம் கலைந்திருக்கும். வானொலியில் துணி காயப்போடும் கம்பி மாதிரி நீண்ட ஏரியல் அதில் இருக்கும்.

சிட்னியில் அஞ்சலிப் பகிர்வு நிகழ்வு



விளக்கின் இருள் – சிறுகதை -கே.எஸ்.சுதாகர்

.


இது எமது தபால்பெட்டிக்கு வந்திருந்த நாலாவது அநாமதேயக் கடிதம். கடந்த இரண்டு வாரங்களில் இதேமாதிரியான மூன்று கடிதங்கள் வந்திருந்தன.
"I buy houses, gas or no gas, call Tim." - கடிதத்தில் இருந்தது இவ்வளவுந்தான். இதுபோன்ற கடிதங்கள் இனிமேலும் வரலாம். யார் இந்த ரிம்? இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அந்தக்கடிதங்களை எடுத்துக் கொண்டு ரவுனிற்குப் போனேன். ரவுன் எனது வீட்டிலிருந்து பத்துநிமிடங்கள் கார் ஓடும் தூரத்தில் உள்ளது. றியல் எஸ்டேட் (Real Estate) திறந்திருக்கக்கூடும். நகரம் கேளிக்கையில் நிரம்பி வழிகின்றது. மேர்க்கியூரி ஹோட்டலின் கோலாகலமான வெளிச்சத்தில் மனிதர்களின் நடமாட்டம் தெரிகிறது. சாப்பாட்டுக் கடைகளிற்குள் மக்கள் நிதானமாகவிருந்து சாப்பிட்டுக் கொண்டும் மது அருந்திக் கொண்டும் இருக்கின்றார்கள். கிளப்பிலிருந்து ஜாஸ் மிதந்து வருகிறது. மூடப்பட்டிருந்த றியல் எஸ்டேட் கடையின் கண்ணாடிக்குள்ளால் தெரியும் விளம்பரங்களைப் பார்த்து சத்தமிட்டுக் கதைத்தபடி சிலர் நிற்கின்றார்கள். அவர்கள் சண்டையை ஆரம்பிப்பதற்கு முன்னதாக நான் திரும்பிக் கொண்டேன்.
இந்த விஷயத்தை அப்பா ஒருமாதத்திற்கு முன்பாகவே அறிந்து கொண்டார் என்றுதான் நினைக்கின்றேன்.
அன்று...

சங்க இலக்கியக் காட்சிகள் 35- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

.
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும்,  பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.

கரத்தை விடுத்தான், மனத்தை எடுத்தான்!

இளமைப்பருவத்தில் ஏற்படுகின்ற எண்ணக் கிளர்ச்சியிலே கண்கள் கலப்பதும் காதல் சுரப்பதும் இருபாலாருக்கும் இயற்கையானதே. அவ்வாறு கருத்தொருமித்த காதலர்கள் ஒருவரையெருவர் எண்ணியெண்ணி ஏங்கித் தவித்தலும், இருவரும் தனிமையில் சந்திக்கத் துடித்தலும், சந்தித்தபோது ஆசையோடு அணைத்தலும், உடல்கள் கலத்தலும், உறவில் களித்தலும்ää பின்னர் அந்த இன்பத்தை நினைத்தலும்தான் குறிஞ்சித்திணைக்குரிய அகப்பொருள்களாகும். புணர்தலும் புணர்தல் நிமித்தமும் குறிஞ்சித்திணையின் உரிப்பொருள் என்று தொல்காப்பியம் சொல்கிறது.

உலகச் செய்திகள்


எயார் ஏசியா விமா­னத்­துக்­கு­ரி­யவை என நம்­பப்­படும் 5 சிதை­வுகள் கண்­டு­பி­டிப்பு ; புதி­தாக 4 சட­லங்கள் மீட்பு

எயார் ஏசியா விமானத்தின் கறுப்புப்பெட்டி கண்டுபிடிப்பு?

பிரான்ஸில் பத்திரிகை நிறுவனத்தின்மீது துப்பாக்கிச்சூடு

எயார் ஏசியா விமா­னத்­துக்­கு­ரி­யவை என நம்­பப்­படும் 5 சிதை­வுகள் கண்­டு­பி­டிப்பு ; புதி­தாக 4 சட­லங்கள் மீட்பு

05/01/2015   விபத்­துக்­குள்­ளாகி ஜாவா கடலில் விழுந்த எயார் ஏசியா விமா­னத்தின் சிதைந்த பகு­தி­க­ளி­லி­ருந்து எஞ்­சிய சட­லங்­களை விரைவில் மீட்க முடியும் என நம்­பு­வ­தாக மீட்பு நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்ள இந்­தோ­னே­சிய அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.


.


பாரதியோடு பலர் என்னை ஒப்பிடும்போது எனக்கே மிகவும் வெட்கமாக இருக்கும்.
என் பாடல்களில் அவசரத்திற்காக எழுதப்பட்ட செயற்கைப் பாடல்களும் உண்டு.
பாரதி முழுக்க முழுக்கத் தன்னுணர்வுக் கவிஞன்..”
இப்படி மனம் திறந்து பாரதியை பாராட்டியவர் கண்ணதாசன் …
இதோ..இன்னும் கூட பாரதி பற்றி கண்ணதாசன்…
“இன்று என் பாடல்களை நான்கு கோடி மக்கள் இரசிக்கிறார்கள்; பாடுகிறார்கள். அதைக் கண்ணால் பார்க்கும்போதும், காதால் கேட்கும்போதும் எனக்கு உற்சாகம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் மேலும் மேலும் நான் எழுதுகிறேன். அந்த வாய்ப்பே இல்லாமற் போனவன் பாரதி.  தன் கவிதையை யார் இரசிக்கிறார்கள் என்று தெரியாமலேயே அவன் பாடினான்..
“காலம் எப்படி வரவேற்கும்; யார் எப்படி இரசிப்பார்கள்?” என்பது தெரியாமலேயே தனக்குத் தோன்றியதை எல்லாம் பாடினான். அதனால் எந்தக் கவிதையைப் பாடினாலும் தேன் வந்து பாய்கிறது காதுகளில்.
பாரதி ஒரு ஜாதிக்கு, ஒரு மதத்துக்கு உரியவனல்ல; அவன் சர்வ சமரசவாதி.
அவன் வங்காளத்தில் பிறந்திருந்தால் நோபல் பரிசு தாகூருக்குப் போயிருக்காது.
துர்பாக்கியம் பிடித்த தமிழகமே!
பாரதியைக் கொண்டாடு! அதன் மூலம் பாரதத்தை நீ கொண்டாடுகிறாய்,
தேச பக்தியைக் கொண்டாடுகிறாய்,
தெய்வ பக்தியைக் கொண்டாடுகிறாய்,
தமிழ் மொழியைக் கொண்டாடுகிறாய்,
பாரதியைக் கொண்டாடாதவனுக்குத் தமிழன் என்று சொல்லிக் கொள்ள அருகதை இல்லை.”
[ கண்ணதாசன் இதழில் கண்ணதாசன்- செப்டம்பர் 1978]

தமிழ் சினிமா - பிசாசு

.
ஓநாயும் ஆட்டுகுட்டியும் என்ற தரமான படத்தின் தோல்வியிலிருந்து மிஷ்கின் மீண்டும் எழுந்திருக்கும் படம் தான் பிசாசு. பாலா, மிஷ்கின் இரண்டு பகுத்தறிவு வாதிகளின் கூட்டணியில் உருவாகியிருக்கும் பேய் படம் இது. மிஷ்கின் அவர் படத்தில் எந்த நடிகர் நடித்தால் என்ன, நம் கண்ணில் தெரிவது மிஷ்கின் என்ற இயக்குனரின் சாயல் தான்.


பேய் என்றாலே பயம், பயம், பயம் மட்டுமே தான் நம்மிடம் இருக்கிறது. அந்த பயத்தை தாண்டி சென்றால் அந்த பேய்க்கும் ஒரு அழகு உண்டு என்பதை மிக அழுத்தமாகவும், நேர்மையாகவும் காட்டியுள்ளார் மிஷ்கின்.

கதை விவாதம்
படம் தொடங்கியதுமே கதாநாயகி பிரயாகா மரணம், அவளை மருத்துவமனை கொண்டு சென்று காப்பாற்ற முயற்சிக்கிறார் கதாநாயகன் நாகா. மருத்துவமனையில் நாகாவின் கையில் பிரயாகா உயிர் பிரிகிறது. இதிலிருந்து நாகா மிகவும் மனவேதனை அடைந்து குழப்பத்திலேயே வாழ்கிறார்.

உடலால் இறந்து உயிரால் வாழவேண்டும் என்று தவிக்கும் பிரயாகா, நாகா வீட்டில் குடியேறுகிறார். அங்கு அவர் செய்யும் சில விசித்திர விளையாட்டு நாகாவை மிகவும் சிரமப்படுத்த, வழக்கம் போல் பேய் ஓட்டுதல், மந்திரம் என மாந்திரகத்தை தேடி போகிறார் ஹீரோ.
ஆனால், எதற்கும் அஞ்சாமல் நாகாவின் காலை சுற்றி வரும் பேய், ஏன் இது நம்மை சுற்றி வருகிறது என அறிய நாகா பிரயாகாவை இடித்து சென்ற கார் ஓட்டுனரை தேடி செல்ல அங்கு தான் அதிர்ச்சி காத்திருக்கிறது. அதன் பிறகு நாகா எடுக்கும் முடிவு என்ன? பிரயாகா என்ன ஆனார்? என்பதை திகில் கலந்து மனித உணர்வுடன் கூறியுள்ளார் மிஷ்கின்.
மிஷ்கின் பற்றிய விவாதம்
எப்போதும் நடிகர்கள், நடிகைகள் பற்றி தானே பேசுவோம், அது ஏன் மிஷ்கின் பற்றிய விவாதம் என்றால் இந்த படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்துலும் மிஷ்கினின் ஆவி உள்ளது. அதனால் தான்.
மிஷ்கினின் வழக்கமான ஸ்லோ மோஷன் காட்சிகள், தலை குணிந்த ஹீரோ, அலட்சிய போலிஸ் என அனைவரும் வந்து போகிறார்கள். ஆனால், இது எல்லாவற்றையும் விட அவர் எடுத்த கதைக்களம் தான் சுவாரசியம்.
சிம்பாளிக் ஷாட் பல இடங்களில் வந்து போகிறது. முதல் காட்சியிலேயே மரணபடுக்கையில் இருக்கும் பிரயாகா ஒரு காலில் செருப்பில் இருப்பது, படத்தில் முக்கியமாக இருக்கும் கலர் பற்றிய அங்கங்கு காட்டப்பட்ட காட்சிகள், குறிப்பாக கிளைமேக்ஸில் ஹீரோ தேடி செல்லும் திருடன் வீட்டில் ஒரு பெண் பச்சை குடத்தில் தண்ணீர் சிந்துகிறார். ஆனால், அவர் தலையில் சிவப்பு கலர் பூ இருக்கிறது. இவை அனைத்து படம் பார்த்தாலே புரியும் சிம்பள்.
ரசிகர்களுக்கு ஒரு ஆச்சரியம் என்னவென்றால் இந்த படத்திம் மஞ்சள் கலர் சேலை கட்டவில்லை, என்று நினைக்கும் நேரத்தில் திடீரென்று ஹீரோவை பார்த்து முறைக்கும் ஒரு பாட்டி மஞ்சள் கலர் சேலை கட்டியிருக்கு, என்ன மிஷ்கின் சார்? இருந்தாலும் சென்ற படத்தை பாராட்டிய ரசிகர்கள் பார்க்க மறந்து விட்டார்கள். ஆனால், இந்த படத்தை பார்த்து கண்டிப்பாக பாராட்டுவார்கள். வெல்கம் பேக் மிஷ்கின்.
கிளாப்ஸ்
ரவிராயின் ஒளிப்பதிவு இருளையும் அழகாக பயமுறுத்தி காட்டியுள்ளது, இதற்கெல்லாம் மேலாக படத்தின் மிக முக்கியமான கிளாப்ஸ் அள்ளுவது அறிமுக இசையமைப்பாளர் அரொல் கரோலி தான். எழுத்தாளர் தமிழச்சி பாண்டியன் எழுதிய ஒரு பாடல் அவரது இசையில் மெய் மறக்க செய்கிறது.
பின்னணி இசையிலும் கலக்குகிறார். மேலும் பிரயாகாவின் தந்தையாக வரும் ராதாரவி, தமிழ் சினிமாவின் பொக்கிஷம், தன் அனுபவ நடிப்பால் ஸ்கோர் செய்கிறார். கதாநாயகனும் அவர் பங்கிற்கு பயந்துள்ளார் சாரி நடித்துள்ளார்.
பல இடங்களில் பயத்தை கொண்டு வந்து நம்மை மீண்டும் அமைதி நிலைக்கு கொண்டு வந்தது. குறிப்பாக அந்த பேய் ஓட்டும் காட்சி, ஹீரோ வீட்டில் திருட வருபவனை பயமுறுத்தும் காட்சி.
பல்ப்ஸ்
மிஷ்கினின் வழக்கமான சண்டைக்காட்சி. கதாநாயகியை பறக்க மட்டுமே வைத்துள்ளார். இன்னும் அவரை பயன்படுத்திருக்கலாமோ என தோன்றுவது. இத்தனை சிம்பாளிக் விஷயங்கள் அனைவருக்கும் புரியுமா? மற்ற படி வேறு ஏதும் இல்லை.
மொத்தத்தில் இந்த பிசாசு முதல் பாதியில் நம்மை கதிகலங்க வைத்து, பிற்பாதியில் காதலிக்க வைக்கிறது.
நன்றி  cineulagam