தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு
மேதையாய் ஞானியாய் விளங்குகிறார் அடிகள் !
பார்த்தேன்! இரசித்தேன்! பகிர்கிறேன்! - -- தமிழ் வளர்த்த சான்றோர் விழா வர்ணனை தொடர்ச்சி - ----------------------- யசோதா -
தமிழ் வளர்த்த சான்றோர் விழாவிலே செஞ்சொற் செல்வர் சிவத்திரு
ஆறு திருமுருகன்
அவர்கள் பிரம்மசிறீ வீரமணி ஐயர் அவர்களின் சா தனைகளும்
சிறப்புகளும் குறித்து நிகழ்த்திய பேருரை
இறைவணக்கத்துடன் தனதுரையை இப்படி ஆரம்பித்தார்
"சான்றோருக்;கு விழா எடுக்கின்ற பெருமைக்குரிய வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார் ஐயா அவர்களே! சபையில் இருக்கின்ற சான்றோர் பெருமக்களே! எல்லோருக்கும் எனது பணிவன்பான வணக்கம்
- பிரம்மசிறீ வீரமணி ஐயர்
பாரதி ஐயா அவர்களுக்கு எல்லாம் அமிர்தமாகத் தேனாகச் சான்றோர் விழாவைக்
கொண்டாடவேண்டும் என்று விருப்பம். உங்களில் வீரமணி ஐயரை
நேரிற் பார்த்தவர்கள் இருப்பீர்கள். அவருடைய பாடலை - இசையை இரசித்தவர்கள் இருப்பீர்கள். நான் அவர் பிறந்த
ஊரைச்சேர்ந்தவன் என்ற காரணத்தால் அவரோடு சிறுபிராயம்முதல் பழகியவர். இயலிசைவாரிதி
நடராச ஐயர் வீரமணி ஐயர் யாழ்ப்பாணத்து
இணுவிலிலே பரராசசேகரப் பிள்ளையார் கோயில் வீதியிலே 1931ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 15ஆம் திகதி பிறந்தவர். சின்ன வயதிலே இணுவில் சைவப்பிரகாச
வித்தியாசாலையிலே - இப்ப இணுவில் இந்துக்
கல்லுரி என்று பெயர்- முத்தமிழ் வித்தகர்
அம்பிகைபார் தொடக்கிய பாடசாலையிலே - இவர்
படித்துக்கொண்டிருந்த பொழுது இவருக்கு ஐந்து வயது. இவருடைய முதலாவது ஆசிரியர்
என்னுடைய தாயார். என்னுடைய தாயாரிடம்தான் இவர் அரிவரி படித்தவர். அம்மா அந்தப்
பாடசாலையிலே ஆசிரியராக இருந்தவர்.
அந்தக் காலத்திலே பெற்றோர் தினவிழா பெரிதாக நடக்கும். அப்பொழுது சரவணமுத்துப் புலவர் - அவர் ஒரு பெரும் புலவர் - அவர் ஒரு நாடகம் தயாரித்தார். அவர் இளம் வயதிலே இறந்துவிட்டார். ஒரு பிள்ளை இரு தாய் ; என்ற இலக்கிய நாடகம்.. என்னுடைய தாயைத் தாயார் பாத்திரமாகவும் வீரமணி ஐயரைப் பிள்ளைப் பாத்திரமாகவும். இரண்டு தாய்மார்களும் அழுதழுது நடிக்கிறார்கள் இது என்ரை பிள்ளை இது என்ரை பிள்ளை என்று. வீரமணி ஐயர் இனியில்லையென்ற அழகான குழந்தை. சின்னனிலேயே தலையிலே குடும்பி வைத்திருந்தார். தாயார் இரண்டு பேரும் அழுதது நடிக்க வீரமணி ஐயர் ஒரு குறும்பைச் செய்திட்டார். வீரமணிக்குச் சொல்லிக் கொடுத்தது உண்மையான தாய் என்று சரசுவதியைக் காட்ட. வீரமணி ஐயர் இரண்டுபேரும் நல்லாய் அழ வீரமணி இரண்பேரும் அம்மா என்று சொல்லிவிட்டார். சரவணமுத்துப் புலவருக்குச் சரியான கோபம். வீரமணியின் அந்த நடிப்பு சபையிலே இருந்த கலையரசு சொர்ணலிங்கத்தைத் திடுக்கிடவைத்தது. அவர்தான் இந்த வீரமணி ஐயரை மானிப்பாய் இந்துக் கல்லூரிக்குக் கொண்டுபோய் 6ஆம் வகுப்பிலே ஆங்கிலக் கல்வி மூலம் படிக்கச் செய்தவர்;. இவரின் தந்தையார் கையிலே ஒரு ~கார்மோனியப் பெட்டியைச் சைக்கிளிலை கட்டிக்கொண்டு வீடுவீடாகச் சங்கீதம் படிப்பிக்கச் செல்வார்களாம் என்று தாய் சொல்லுவார்.
காலமும் கணங்களும் - முருகபூபதியின் இலக்கியப் பயணம்! இளவாலை எஸ். ஜெகதீசன்
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா என இரு தேசங்களிலும் தனது எழுத்துலகப் பயணத்தைத் தொடரும் சுவை மிகும் எழுத்தாளர் முருகபூபதியின் "காலமும் கணங்களும்" என்ற புதிய நூல் அமேசன் கிண்டிலில் வெளியாவது அறிந்து பெரும் மகிழ்ச்சி.
மேலோட்டமாக ஒரு பருந்துப் பார்வை பார்த்தேன். லயித்தேன்.
கனக செந்திநாதன் முதல் வ. ராசையா வரை, 25 ஆளுமைகளைப் பற்றிய
அருமையான பதிவுகளின் திரட்டாய் இந்த நூல் அமைகிறது.
தனது வாழ்விலும் எழுத்துப் பயணத்திலும் மிகவும் நேசித்த கலை
இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் சமூகப் பணியாளர்களின் வாழ்வையும்
பங்களிப்பையும் முருகபூபதி அழகிய முறையில் ஆவணப்படுத்தியிருப்பது - ஒரு
பொக்கிஷம்.
அவர்களின் அனுபவங்களையும், அரிய தருணங்களையும்,
வரலாற்றுப் பக்கங்களையும் இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் இந்த முயற்சி பாராட்டத்தக்கது.
'காலமும் கணங்களும்' நூல், இலக்கிய உலகிற்கு ஒரு புதிய பரிமாணத்தை
அளிக்கும் என்பதில் ஐயமில்லை.
கலை, இலக்கியம், ஊடகம், சமூக சேவை எனப் பல்வேறு தளங்களில்
பங்களித்த ஆளுமைகளின் நினைவுகளைப் போற்றி, அவர்களின் தியாகங்களையும் சாதனைகளையும்
நினைவுபடுத்தும் இந்த நூல், அனைவருக்கும் ஓர் உத்வேகமாக அமையும்.
முருகபூபதியின் எழுத்துத் திறனையும், சமூகப் பார்வையையும்,
அரிய தகவல்களைத் திரட்டும் அயராத உழைப்பையும் இந்த நூல் மீண்டும் ஒருமுறை உலகிற்கு
வெளிப்படுத்தும்.
'காலமும் கணங்களும்' மென்மேலும் பல வாசகர்களைச் சென்றடைந்து,
அவர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடிக்கும் என்று உறுதி.
இந்த அரிய படைப்பிற்காக முருகபூபதிக்கு எனது நெஞ்சார்ந்த
வாழ்த்துகளையும், அவரது தொடர்ச்சியான இலக்கியப் பணிக்கு எனது முழுமையான ஆதரவையும்
தெரிவித்துக் கொள்கின்றேன் .
---0---
அறிமுகம்: ஒரு குட்டிக்குரங்கின் கதை ( மும்மொழியில் ) ( குழந்தை இலக்கியம் ) - ஷோபா பீரிஸ் முருகபூபதி
குழந்தைகளுக்காக இலக்கியம் படைப்பது மிகவும் சிரமமானது. எனினும் தமிழ் – சிங்களம் – ஆங்கிலம் உட்பட உலகமொழிகள் பலவற்றில் குழந்தைகளுக்கான இலக்கிய நூல்கள், குழந்தைகளின் கண்களையும் கருத்தையும் கவரத்தக்க வகையில் வெளியாகிக்கொண்டுதானிருக்கின்றன.
நாம் குழந்தைப்பருவத்தில் வாழ்ந்த காலத்தில், எமது தாத்தா – பாட்டிமார், மற்றும்
அப்பா, அம்மா சொன்ன குழந்தைகளுக்கான கதைகளைக் கேட்டு வளர்ந்தவர்கள்தான்.
ஆமையும் – முயலும், சிங்கமும்
– முயலும், – கொக்கும் – நரியும், கோழியும்
– பூனையும் - நாயும் – பூனையும் , குரங்கும்
– தொப்பி வியாபாரியும் முதலான பல குழந்தைகளுக்கான கதைகளை கேட்டு வளர்ந்திருக்கின்றோம்.
பெரும்பாலும், குழந்தைகளுக்கான கதைகள்
வண்ணப்படங்களுடன்தான் வெளியாகிக்கொண்டிருக்கும். நவீன தொழில் நுட்ப வளர்ச்சி அசுரவேகம் எடுத்துள்ள இக்காலத்தில், குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளும் பெருகிவிட்டன.
குழந்தைகள் பெற்றோரின்
கைத்தொலைபேசியின் தொடுதிரை மூலமாக தமக்குப்பிடித்தமானவற்றை பார்த்து கேட்டு ரசிக்கின்றனர்.
இதனால், அவர்களின் கண்பார்வைக்கும்
பாதிப்பு நேர்கிறது.
ஆயினும், இந்த அவசர யுகத்தில்,
பெற்றோர்கள் தமது குழந்தைகளை சமாளிக்க முடியாமல் தவிக்கின்றனர்.
பத்திரிகை – இதழ்கள் உட்பட
பல ஊடகங்களும் கைத்தொலைபேசி தொடுதிரைக்குள் பிரவேசித்துவிட்டன.
இந்தப்பின்னணிகளுடன்தான்
எனக்கு அண்மையில் கிடைத்த ஒரு சின்னஞ்சிறிய குழந்தைகளுக்கான வண்ணப்படங்கள் அடங்கிய
நூலை இங்கு அறிமுகப்படுத்துகின்றேன்.
இதனை படைத்தவர் ஷோபா பீரிஸ். ஓவியங்களை வரைந்திருப்பவர் சிந்துபமா சந்திரசேன, தமிழ் மொழிபெயர்ப்பு, தமிழ் இலக்கியத்துறைக்கு அறிமுகமான, பிரித்தானியாவில் வதியும் கலா. ஶ்ரீரஞ்சன்.
ஒரு அடர்ந்த காட்டில் வாழ்ந்த
இரண்டு முயல்களுக்கும், சில குட்டிக்குரங்களுக்குமிடையிலான கதைதான் ஒரு குட்டிக்குரங்கின் கதை.
குரங்குகள் குட்டி முயல்
பிந்துவை எப்போதும் சீண்டிக்கொண்டிருக்கின்றன.
அதற்கு ஆறுதல் சொல்வது மூத்த முயல் லூசி.
இறுதியில், லூசியின் அறிவுரைகேட்டு, குட்டிக்குரங்குகள் திருந்தி,
பிந்துவை அணைத்துக்கொள்கின்றன.
கொழும்பு சரஸவி வெளியீடாக
இந்நூல் வெளிவந்துள்ளது.
நூலாசிரியர் ஷோபா பீரிஸ்,
ஏற்கனவே தமது குழந்தை இலக்கிய நூல்களுக்காக விருதுகள் பெற்றவர்.
இந்த நூலின் கூட்டு முயற்சியிலிருந்து
, இலக்கியத்தின் மூலமும் இன நல்லிணக்கத்தை பேண முடியும் என்று இந்த இலக்கிய சகோதரிகள்
எமது சமூகத்திற்கு சொல்கின்றனர்.
அதிலும் குழந்தைகளுக்கான
இலக்கியத்தின் மூலம் என்று சொல்ல முனைந்துள்ளனர்.
----0---
தகுதியறிந்து…!
-சங்கர சுப்பிரமணியன்.
சிட்னி / மெல்பேர்ன் / கன்பரா / பிரிஸ்பேனில் நடைபெறும் நிகழ்ச்சிகள் 2025
.
உங்கள் நிகழ்ச்சிகளை இலவசமாக பிரசுரிக்க tamilmurasu1@gmail.com or paskiho@hotmail.com , murasuau@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்
சிட்னியில் நடைபெறும் நிகழ்வுகள்
18-07-2025 Fri : ஆடிப்பூரத் திருவிழா வெள்ளிக்கிழமை 18ஆம் தேதி அன்று விநாயகர் பூஜையுடன் தொடங்கி, திங்கள் 28ஆம் தேதி வரை நடைபெறும் at Sydney Sri Durga Devi Devasthanam
27-07-2025 Sun: ஆடிப்பூரத் தேர் திருவிழா at Sydney Sri Durga Devi Devasthanam
27-09- 2025 Sat: சிட்னி சிலோன் லயன்ஸ் கிளப் வழங்கும் நடன, இசை நிகழ்ச்சி at The Bryan Brown Hall, Bankstown 6pm.:'
சிட்னி முருகன் கலாச்சார மண்டபத்தின் கல் நன்கொடைக் திட்டம் - Brick Donation Campaign
இது தமிழ் சமூகம் முழுவதுக்கும் ஒரு பெருமைக்குரிய தருணம். எவரும் ஏதேனும் ஒரு வகையில் உதவியுள்ளனர், மேலும் இந்த புனித இடத்தினால் பயனடையும் அனைவரும் இந்த சாதனையில் பெருமை கொள்ளலாம்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சியின் ஒரு பகுதியாக, "கல் நன்கொடைக் திட்டம்" (Brick Donation Campaign) ஒன்றைத் தொடங்கினர். உங்கள் பெயரிலோ அல்லது உங்களுக்குப் प्रियமான ஒருவரின் நினைவாகவோ, ஒரு கல்லை நன்கொடை அளித்து, இந்த கலாச்சார மண்டபத்கலாச்சார மண்டபத் திட்டத்தில் கட்டுமானத்தில் நேரடியாக பங்கெடுக்க இந்த முயற்சி உங்களை அழைக்கிறது. ஒவ்வொரு கல்லும் கட்டிடத்தின் அடித்தளத்தின் ஒரு பகுதியாக மாறும், இது நமது சமூகத்தின் ஒற்றுமையும் பக்தியும் காட்டும் ஒரு சின்னமாகும்.
நீங்கள் ஒரு கல்லை நன்கொடை அளிப்பதன் மூலம், இந்த மண்டபத்தின் உடல் அடித்தளத்தை மட்டுமல்லாமல், அதன் மரபின் ஓர் அங்கமாகவும் நீங்கள் ஆவீர்கள்.
ஒவ்வொரு கல்லும் உங்கள் குடும்பத்தின் பெயரையும், உங்கள் ஆசீர்வாதத்தையும், பக்தியையும், மரபையும் இந்த தர்மக் கேந்திரத்தின் அடித்தளத்தில் பதியச் செய்கிறது. உங்கள் குடும்பத்தின் பெயரும் பக்தியும் எப்போதும் நினைவில் வைக்கப்படும்.
நீங்கள் கீழுள்ள ‘கல்லை இப்போது நன்கொடை அளிக்கவும்’ என்ற இணைப்பைச் சொடுக்கு செய்து உங்கள் பங்களிப்பை அளிக்கலாம்.
https://eservices.sydneymurugan.org.au/donate-a-brick/
எங்க வீட்டுப் பெண் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்
எம் ஜி ஆர் நடிப்பில் எங்க வீட்டுப் பிள்ளை வெற்றி படத்தை
தயாரித்து விட்டு விஜயா புரொடக்க்ஷன் நாகிரெட்டி, சக்கரபாணி இருவரும் அடுத்து தயாரித்த படம் எங்க வீட்டுப் பெண். ஆனால் நட்சத்திர நடிகர்களை போட்டு எடுத்த எங்க வீட்டுப் பிள்ளை படத்தின் போது ஏற்படாத பிரச்னைகள் எல்லாம் இந்த சிறிய பஜெட் படத்தை எடுக்குக்கும் போது நாகிரெட்டி, சக்ரபாணி இருவருக்கும் ஏற்பட்டது.
விட்டது. படத்தில் நடிக்க வந்த எஸ் .வி . ரங்காராவ் , தன்னுடன் நடிக்கவிருந்த விஜயநிர்மலாவை பார்த்து தன் அதிருப்தியை வெளியிட்டார். ஒல்லி குச்சி போல் இருக்கும் இவரின் நடிப்பு சரிவராது ஆளை மாற்றுங்கள் என்று கூறி விட்டு போய் விட்டார் அவர். பங்காளிகள் இருவரும் உடனே மாற்றினார்கள் ,விஜயநிர்மலாவை அல்ல , ரங்கராவை! தங்கள் எல்லாப் படங்களிலும் தொடர்ந்து நடித்து வரும் ரங்கராவை படத்திலிருந்து கழற்றி விட்டு அவருக்கு பதில் எஸ் .வி .சுப்பையாவை நடிக்க வைத்தார்கள்.
மயங்குகிறாள் ஒரு மாது - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்
1970 ம் ஆண்டுகளின் நடுப் பகுதிகளில் வித்தியாசமான கதைகளை கொண்ட படங்கள் தமிழில் வெளிவரத் தொடங்கின. இப்படியான படங்களுக்கு நியூ வேவ் படங்கள் என்று முத்திரை குத்தப்பட்டது. இவற்றுள் பெரும்பாலானவை வாழ்க்கையில் வழுக்கி விழுந்த இளம் பெண்களின் கண்ணீர் கதைகளாகவே எழுதப்பட்டிருந்தன. குடும்பத்துக்காக விலைமாதாக மாறுவது, கணவனிடம் திருப்பதி அடையாமால் மற்றொருவனை நாடுவது, கணவனின் வற்புறுத்தலால் அவனின் நண்பனிடம் சோரம் போவது, திருமணத்துக்கு முன்பு கலவியில் ஈடுபட்டு கர்ப்பம் தரிப்பது என்ற வரிசையில் 1975ம் வருடம் வெளியான படம் மயங்குகிறாள் ஒரு மாது.
பொழுதை கழித்து அதன் காரணமாக கற்பமாகிறாள். அவளின் கல்லூரித் தோழியும், பெண் மருத்துவரும் சேர்ந்து காதுக்கு காது வைத்தாற் போல் அவளின் கர்ப்பத்தை ஆரம்பத்திலேயே கலைத்து விடுகிறார்கள். சில காலம் கழித்து பெண் மருத்துவரின் தம்பியை அவள் திருமணம் செய்கிறாள். மருத்துவரும் அத் திருமணத்துக்கு முழு சம்மதத்தையும் தருகிறாள். திருமண வாழ்வு இனிதாக நடக்கும் போது நாகம் போல் ஒருவன் அவள் வாழ்வில் குறுக்கிடுகிறான். காதலனுடன் அவள் நெருக்கமாக இருப்பதை புகைப் படம் எடுத்திருக்கும் அவன் அப்படத்தை காட்டி பணம் கேட்டு அவளை மிரட்டுகிறான். அவளோ அவனைக் கண்டு அஞ்சி நடுங்குகிறாள்.
ஆஸ்திரேலியாவில் 12வது உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு
Published By: Vishnu
19 Jul, 2025 | 02:08 AM
கடந்த 11 ஆண்டுகளாக உலகத் தமிழர்கள் ஒன்று கூடும் உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு ஆஸ்திரேலியாவில் சிட்னியில் டிசம்பர் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் இந்திய அரசு, தமிழக அரசு அனுசரணையுடன் 12 வது உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு ஆஸ்திரேலியா சிட்னியில் நடைபெற உள்ளது.
காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இரண்டு நாட்கள் நடைபெற உள்ள நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 80க்கும் மேற்பட்ட வர்த்தக சங்கங்கள் பல்வேறு நாடுகளைச் சார்ந்த வர்த்தக ஆணையங்கள் கலந்து கொள்ள உள்ளனர். தமிழக அரசு நிறுவனங்கள் மற்றும் சிறு குறுந்தொழில் நிறுவனங்கள், பெண் தொழில் முனைவோர், தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை அரங்கம் அமைத்து காட்சிப்படுத்தப்பட உள்ளனர்.
இம்மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். நம் தமிழர்கள் கலை, கலாச்சாரம், பொருளாதாரம் மேம்பாடு, வர்த்தகம் போன்ற துறைகளில் மேம்படவும் எந்த நாட்டில் என்னென்ன தொழில் வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை அறியும் வகையில் வர்த்தக கண்காட்சி, பிஸ்னஸ் மீட், வர்த்தக கருத்தரங்கம், போன்றவர்களை உள்ளடக்கி இந்நிகழ்வு நடைபெற உள்ளது.
இந்நிகழ்வில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழ் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில மத்திய அமைச்சர்கள், தொழில்துறை அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அனைத்து துறை சார்ந்த அரங்கங்களும் வல்லுனர்களும் பங்கேற்கும் நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு பயனடையுமாறு உலகத் தமிழ் வர்த்தக சங்கத் தலைவர் செல்வகுமார் தெரிவித்தார்.
இலங்கைச் செய்திகள்
தையிட்டி விகாரைக்கு எதிரான வழக்கில் சுமந்திரன் முன்னிலையாவர் ; வலி. வடக்கு தவிசாளர் உறுதி
முன்னாள் அமைச்சர் எஸ்.எம் சந்திரசேனவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!
ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச பொறுப்புக்கூறலை வலியுறுத்தி 21ம் திகதி அவுஸ்திரேலியாவில் போராட்டம்- 'உலகம் இனிமேலும் பார்க்காமல் இருக்க முடியாது,இவை நிலத்தில் காணப்படும் எலும்புகள் இல்லை எங்கள் மக்களின் உயிர்கள்"
தையிட்டி விகாரை வளாகத்தினுள் மீண்டுமொரு சட்டவிரோத கட்டடம் நிர்மாணிக்கும் பணி ; விகாரதிபதியிடம் விளக்கம் கோரவுள்ளது வலி. வடக்கு பிரதேச சபை
செம்மணி படுகொலை : வடக்கு மற்றும் கிழக்கில் இனப்படுகொலை நடந்தது என்பதை சர்வதேசம் ஏற்றுக்கொள்ள வேண்டும் - அருட்தந்தை சக்திவேல்
தையிட்டி விகாரைக்கு எதிரான வழக்கில் சுமந்திரன் முன்னிலையாவர் ; வலி. வடக்கு தவிசாளர் உறுதி
18 Jul, 2025 | 12:17 PM
தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோதமான விகாரைக்கு எதிராக வலி. வடக்கு பிரதேச சபையின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ சுமந்திரன் இலவசமாக வழக்காடுவார் என வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சபையில் உறுதி அளித்துள்ளார்.
வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு வியாழக்கிழமை (18) பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது, தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரை தொடர்பில் பிரதேச சபையால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் வன்னியசிங்கம் பிரபாகரன் தீர்மானம் ஒன்றை முன்வைத்தார்.
உலகச் செய்திகள்
காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளிற்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்வோம்-இஸ்ரேலிற்கு ஆயுதங்கள் வெடிமருந்துகளை வழங்குவதை தடுக்க முயல்வோம் - கொலம்பிய உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட நாடுகள் இணக்கம்
காசாவின் ஒரேயொரு கிறிஸ்தவ தேவாலயம் மீது இஸ்ரேல் தாக்குதல் - மூவர் பலி
காசாவின் உணவு விநியோக மையத்தில் குழப்பநிலை- 20 பேர் பலி
உக்ரைன் மீதான போரை 50 நாட்களுக்குள் நிறுத்தவில்லை என்றால்…” - ரஷ்யாவுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
உக்ரைனிற்கு அதிநவீன ஆயுதங்களை அனுப்புகின்றார் டிரம்ப் - புட்டின் மீது கடும் விமர்சனம்
காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளிற்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்வோம்-இஸ்ரேலிற்கு ஆயுதங்கள் வெடிமருந்துகளை வழங்குவதை தடுக்க முயல்வோம் - கொலம்பிய உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட நாடுகள் இணக்கம்
Published By: Rajeeban
17 Jul, 2025 | 11:34 AM
காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளிற்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்யப்போவதாக கொலம்பியாவில் இடம்பெற்ற மாநாட்டில் கலந்துகொண்ட நாடுகள் தெரிவித்துள்ளன.
இஸ்ரேலிற்கான ஆயுத விநியோகத்தினை தடுக்கப்போவதாகவும இந்த மாநாட்டில் கலந்துகொண்ட நாடுகள் தெரிவித்துள்ளன.
ஆடிப்பூர உற்சவம் 18/07/2025 - 28-07-2025
ஆடிப்பூர விழா தேவிகளை போற்றும் வகையில், துர்கை தேவியின் பராகாசத்தையும், பக்தர்களை ஆசீர்வதிக்க இந்த உலகிற்கு அவள் வந்ததையும் கொண்டாடும் புனித நாள் ஆகும்.
ஜூலை (ஆடி) மாதம் வந்து விட்டது.
இந்த ஆண்டின் ஆடிப்பூரத் திருவிழாவை 10 நாட்கள் கொண்டாட இருக்கிறோம். விழா வெள்ளிக்கிழமை 18ஆம் தேதி ஜூலை 2025 அன்று விநாயகர் பூஜையுடன் தொடங்கி, திங்கள் 28ஆம் தேதி ஜூலை 2025 வரை நடைபெறும்.
தினமும் இரவுகளில் ஹோமம், அபிஷேகம், சிறப்பு பூஜைகள் மற்றும் பரிவார மூர்த்திகளின் பிரதக்ஷணம் (சுற்றுப் பணிகள்) நடைபெறும்.
ஆடிப்பூரத் தேர் திருவிழா ஞாயிறு 27ஆம் தேதி ஜூலை 2025 அன்று நடைபெறவுள்ளது.