மரண அறிவித்தல்




-->

திருமதி  கமலருலேஸ்வரி  சர்வானந்தா
யாழ்  ஓட்டுமடம்,   மற்றும்  வெள்ளவத்தை  கொலிங்வூட்  வீதியை  வதிவிடமாகவும்,  தற்போது  அவுஸ்திரேலியாவில்  வாழ்ந்து  வந்தவரும்;  யாழ் St.Johns College,  Bond Institute,  கொழும்பு  Ladies College  உட்பட  பல  பாடசாலைகளில்  பிரபல  தாவரவியல்  ஆசிரியையாகக்  கடமை  ஆற்றியவருமான  திருமதி  கமலருலேஸ்வரி  சர்வானந்தா  அவர்கள்  கடந்த 09/07/2017  அன்று  இறைபதம்  அடைந்தார். 
அன்னார்  திரு / திருமதி ராஜரட்ணம்  அவர்களது  அருமைப்   புதல்வியும்; சர்வானந்தாவின்  அன்பு  மனைவியும் ;  தினேஷ்  (மெல்பேர்ன்) ,  தர்ஷினி (மெல்பேர்ன்),  ரோஷினி (லண்டன்)  ஆகியோரது  அருமைத்  தாயாரும் :  பிரமிளா,  சுதர்  ஆகியோரின்  அன்பு  மாமியாரும் ; 
விமலருலேஸ்வரி,  சிவராஜா,  பாக்கியராஜா,  ராஜேஸ்வரி,  விஜயராஜா,  யோகேஸ்வரி  ஆகியோரின்  பாசமிகு  சகோதரியும் ;  மனோரஞ்சிதம்,  சச்சிதானந்தா,  விஜயானந்தா,  விஜயலக்ஷ்மி,  செல்வரஞ்சிதம்,  ஜெயலட்சுமி,  விவேகானந்தா  ஆகியோரின்  அன்பு  மைத்துனியும்  ஆவார். 
அன்னாரின்  பூதவுடல்   எதிர்வரும்   16 ந்  திகதி  ஞாயிறன்று  790  Frankston – Dandenong Road,  Dandenong South,  Victoriaவில்  அமைந்துள்ள  Bunurong  Memorial  Park  என்றவிடத்தில்  காலை   10 மணி  முதல்   11 மணி  வரை  பார்வைக்கு  வைக்கப்பட்டு,  அதனைத்  தொடர்ந்து  ஈமக்கிரியைகள்  நடந்தேறி,  தகனம்  செய்யப்படும். 
உற்றார்,  உறவினர்,  நண்பர்கள்  இந்த  அறிவித்தலை  ஏற்றுக்  கொள்ளுமாறு  தாழமையுடன்  வேண்டிக்  கொள்ளப்படுகின்றனர்.  


மரண அறிவித்தல்


திருமதி மனோன்மனி பாலசிங்கம்
யாழ்ப்பாணம் ஐயனார் கோவிலடியை பிறப்பிடமாகவும், மெல்பேனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மனோன்மணி பாலசிங்கம் (மகேஸ்வரி ) புதன் கிழமை (12/07/2017 )காலமானர்.
அன்னார் காலஞ்சென்ற சண்முகம் வியலக்ஸ்மி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னையா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற ஏகாம்பரத்தின் அன்புசகோதரியும்,
காலஞ்சென்ற பாலசிங்கத்தின் அன்பு  மனைவியும், பாலேஸ்வரன் (ஹொலன்ட் ), பாலமாகேஸ்வரன் (மெல்பேன் ), பாலஸ்ரீஸ்வரன் (இலண்டன்), சசிகலா (மெல்பேன் cafe ரொக்கோ ) ஆகியோரின் பாசமிகு தாயாரும், புஸ்பம், இராஜகுமாரி, சுகந்தி ஆகியோரின் அன்புமாமியாரும்,
சுரேன், சுஜா, சுஜி, காலஞ்சென்றசேயோன், பவன், பகிரதன், மீனாட்சி, தர்சன், சோபிதா, ரவிசங்கர் ஆகியோரின் அன்பு பேத்தியும் சந்திரா, சிமோ ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார் .
அன்னாரின் ஈமைக்கிரிகைகள் 16/07/17 ஞாயிற்று கிழமை பிற்பகல்   2 மணிமுதல் முதல் 4 மணிவரை carrum down Bunurong memorial park இல் உள்ள stratus chapel இல் இடம்பெற்று அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும்
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்
தகவல் குடும்பத்தினர்
மகன் பாலமகேஸ்வரன் - 0410396302
மகள் சசிகலா - (03) 87075164

மரண அறிவித்தல்

.

நயினாதீவைப் பிறப்பிடமாகவும் கொக்குவில், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கதிர்காமலிங்கம் அவர்கள் காலமானார்.

அன்னார் நயினாதீவைச் சேர்ந்த கதிரேசு  கந்தையா-சௌந்தரம் அவர்களின் அன்பு மகனும், மருதலிங்கம்-ஆனந்தராணி அவர்களின் அன்பு மருமகனும், மாலினி அவர்களின் அன்புக் கணவரும், ராகுலின் அன்புத் தந்தையும் ஆவர்.

இல்லாதவன்

.
E-mailPrintPDF
கவிதை படிப்போமா?இரவின் இருளைக் கிழித்தது
அவன் குரல்...
வாசலில் நின்று அவன்
யாசிக்கிறான்...
பாதி உறக்கமும்
மீதி விழிப்புமாய்
மயக்கத்தில் நான்...

விழித்து எழ
பிடிக்காமல் தான்
"இல்லை"யென்றேன்...
சிரித்தவன் கேட்டான்
எதை நீ இல்லை
என்கிறாய்
இருப்பையா...
இன்மையையா...
புருவங்களை கவ்வி
இழுத்து கைது செய்தது
அவன் கேள்வி...
நானொன்றும் இல்லாதவனில்லை
எப்போதும்
கொடுப்பவன்தான்
இன்று உறக்க மயக்கம்
என்றேன்

மீண்டும் சிரித்தவன்
என் வார்த்தைகளையே திரும்பச்சொன்னான்...

யாழ் மத்திய கல்லூரியின் நாதவினோதம் என் பார்வையில் செ.பாஸ்கரன்

. 


சென்ற சனிக்கிழமை 08 07 2017 அன்று சிட்னி வாழ் யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர் அமைப்பு நாதவினோதம் என்ற இசை நிகழ்ச்சியை SEYMORE CENTER இல் நாடாத்தியது. மண்டபம் நிறைந்த மக்களோடு காணப்பட்டது. வழமை போலவே யாழ் மத்திய கல்லூரியின் நாதவினோதம் குறிப்பிட்ட நேரமான 5.30 மணிக்கே ஆரம்பமானது பாரட்டுக்குரியது.
விஜே தொலைக்காட்சி SUPPER SINGAR இசைக்குழுவான MANI BAND இசைக் கலைஞர்கள் சுற்றியிருக்க நடு நாயகமாக வீணை இசை வித்தகர் ராஜேஷ் வைத்தியா அமர்ந்திருந்தார். 5.30 மணிக்கு ராஜேஷ் வைத்தியாவே ஒலிவாங்கியை எடுத்து வணக்கம் கூறிவிட்டு கணபதி துதியும் தொடர்ந்து அம்மாவென்றழைகாத பாடலையும் வாத்திய இசையில் தந்தார்கள். தொடர்ந்து உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல என்று வீணையில் இசைத்ததும் சபையோரின் கரகோஷம் அதிரவைத்தது. தொடர்ந்து அழகே அழகே ஓவியம் என்றும் இசைத்து அசத்தி விட்டார்கள். அருமையான தொடக்கமாக இருந்தது.
புதியவர்களுக்கு இசை நிகழ்வு எந்த அறிவிப்பாளரும் இல்லாமல் நிகழ்வு தொடங்கியது ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் தொடர்ந்து  யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர்களின் நிகழ்வை பார்ப்பவர்களுக்கு இது தெரிந்தே இருக்கும்.  நிகழ்ச்சி ஆரம்பிக்கும் எந்த இடையூறும் இல்லாமல் தொடரும் குறிப்பிட்ட நேரத்தில் நிறைவடையும். பொன்னாடை பன்னாடை எதுவும் இருக்காது அறிவிப்பாளர்களின் சுய தம்பட்டம் இருக்காது. நிகழ்ச்சியை பார்க்க வந்தவர்கள் பார்த்து ரசித்து விட்டு செல்வார்கள். தொடர்ந்தும் நிகழ்ச்சியை ரசிகர்களுக்காகவே நடாத்தும் உங்கள் பபணி தொடரட்டும்.

பயணியின் பார்வையில் -- அங்கம் 05 தமிழ் - சிங்கள இலக்கியப்பரிவர்த்தனைக்கு உழைக்கும் சிங்கள எழுத்தாளர்களுடன் சந்திப்பு முருகபூபதிபயணியின் பார்வையில் -- அங்கம் 05 தமிழ் - சிங்கள இலக்கியப்பரிவர்த்தனைக்கு உழைக்கும் சிங்கள எழுத்தாளர்களுடன் சந்திப்பு முருகபூபதி

.

அன்று காலை கொஸ்கமவிலிருந்து இலக்கிய நண்பர் மடுளுகிரியே விஜேரத்ன தொலைபேசியில் தொடர்புகொண்டார்.
கடந்த மே மாதம 6 ஆம் திகதி மெல்பனில் நடந்த எமது 17 ஆவது தமிழ் எழுத்தாளர் விழாவில் உரையாற்றிவிட்டு, மே 9 ஆம் திகதியே புறப்பட்டவர் இவர்.
முதல்தடவையாக அவுஸ்திரேலியா வந்திருந்த மடுள்கிரியே விஜரத்ன எங்கள் புகலிட தேசத்தைச்சுற்றிப்பார்க்காமலேயே புறப்பட்டமைக்கு வெசாக் பண்டிகைதான் காரணம்.
அவர் சிறந்த தமிழ் அபிமானி. அத்துடன் பௌத்த மத அனுட்டானங்களை பின்பற்றுபவர். வெசாக் காலத்தில் தாம் "சில்" அனுட்டிப்பதாகச்சொல்லிக்கொண்டு புறப்பட்டார்.
அவர் மே 9 ஆம் திகதி காலையிலும் நான் அதே தினம் இரவும் இலங்கைக்கு வேறு வேறு விமானங்களில் புறப்பட்டோம்.
அன்று நீர்கொழும்பிலிருந்த எனக்கு அவரது தொலைபேசி அழைப்பு மகிழ்ச்சியைத்தந்தது.
" தோழரே... இன்று உங்களைப்பார்க்க நீரகொழும்பு வருகின்றேன். முகவரி தாருங்கள். இன்று மதியம் உங்களுக்கு நான் ஒரு விருந்து தரப்போகின்றேன்." என்றார்.
" இலக்கிய விருந்தா...?" எனக்கேட்டேன்.


பேராசிரியர் கார்த்திகேசு.சிவத்தம்பி நினைவில் ஆறு ஆண்டுகள் - கானா பிரபா 06.07.17

.

இன்று ஜூலை 6 ஆம் திகதி ஈழத்தின் கல்விப்பெருந்தகை பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து ஆறு ஆண்டுகள். ஈழம் உள்ளிட்ட உலகத்தமிழ்ச் சமுதாயத்தின் அடையாளங்களில் ஒன்றாக இயங்கியவர் சிவத்தம்பி அவர்கள்.
அவர் இல்லாத இந்த மூன்று ஆண்டுகளைத் திரும்ப நினைத்துப் பார்க்கும் போதுதான் நமது கல்விச் சமூகத்தின் எவ்வளவு பெரிய ஆளுமையை இழந்து விட்டோம் என்ற இழப்பின் கனப்பை ஆசானின் பங்களிப்பை முழுமையாக அறிந்தவர்கள் உணர்வர். கல்விமானாகவும், திறனாய்வாளராகவும் இயங்கிய சிவத்தம்பி அவர்களை ஈழத்தில் இயங்கி வந்த இன்னொரு பல்கலைக்கழகமாகவே நான் கருதுவேன்.
என்னுடைய வானொலி வாழ்வின் பதினைந்து வருட காலகட்டத்தில், எத்தனையோ பகிர்வுகளைச் செய்வதற்கு அவர் உறுதுணை புரிந்திருக்கின்றார் என்ற நினைப்பைச் சாதாரணமாகக் கடந்துவிட முடியாத அளவுக்கு அவர் தந்த பல்வேறு ஒலிப்பகிர்வுகளைக் கேட்கும் போதெல்லாம் உணர்வேன். எனக்கு மட்டுமன்றி பொதுவாகவே அனைவருக்கும் அணுகக்கூடிய மிகச் சில கல்விமான்களில் அவர் தலையாயவர். தன்னுடைய இறுதிக்காலம் வரை அதை ஒரு தவமாகவே பின்பற்றியிருக்கின்றார். "
சேர்! கவிஞர் முருகையன் இறந்த செய்தி வந்திருக்கு வானொலியில் அவரைப் பற்றி ஒரு நினைவுப்பகிர்வு செய்யவேணும்" - நான்
"ஓம் ராசா நான் தயார் இப்பவே செய்யவேணுமோ'
என்றுவிட்டு ஒலிப்பதிவைச் செய்ய ஆரம்பிக்கும் போது எழுதி வைக்காத பகிர்வு சிவத்தம்பி அவர்களிடமிருந்து கொட்டும் போது அவை வெறும் இட்டு நிரப்பல்களாக இராது.

உலகச் செய்திகள்


பிரான்ஸ் பள்ளிவாசலில் தாக்குதல்: 8 பேர் காயம்

மார்பகங்கள், தொப்புள், முழங்கால் தெரியாமல் உடையணியுமாறு உகாண்டா அரசாங்கம் உத்தரவு

விளையாட்டு வினையானதாலேயே மரணம் ; கம்பர்சான்ட் கடலில் உயிரிழந்த 5 தமிழர்கள் உட்பட 7 பேரின் மரண விசாரணை வழக்கு நிறைவு


“நாங்க ரெண்டு பேர் இருக்கோம்..” -எம்.ஜி.ஆர். வீட்டில் ஏழைகளின் குரல்!

.

நண்பர் ஒருவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடி வரும் இந்த தருணத்தில், தனது சொந்த ஊரான மதுரையிலிருந்து சென்னை வந்திருந்தார். மெரினா பீச்சில் உள்ள எம்.ஜி.ஆரின் நினைவிடம், தி.நகர் ஆற்காடு முதலி தெருவில் உள்ள அவரது நினைவு இல்லம் சென்று வந்த அவர், “எம்.ஜி.ஆர். வாழ்ந்த ராமாவரம் தோட்டத்துக்கு இதுவரையிலும் நான் சென்றதில்லை.” என்றார். நண்பரின் அழைப்பைத் தட்ட முடியாமல் ராமாவரம் சென்றோம். 

அரசியல் பேசும் இடம் இதுவல்ல!

“எம்.ஆர். ராதாவால் எம்.ஜி.ஆர். சுடப்பட்டது இந்த வீட்டில்தான். எம்.ஜி.ஆர். உயிருடன் இருந்தபோதே, ஜெயலலிதா பெயரில் பேரவை ஆரம்பித்தவர்களுக்கு, அவர் கடுமையாக டோஸ் விட்டதும் இந்த வீட்டில்தான். ஜெயலலிதாவுக்காக மதுரை பழக்கடை பாண்டி எம்.ஜி.ஆரால் செமத்தியாக கவனிக்கப்பட்டதும் இந்த வீட்டில்தான்.” என்று தனக்குத் தெரிந்த விஷயங்களை எடுத்து விட்டார் நண்பர். “தேவையில்லாத அரசியலெல்லாம் இங்கே பேசாதீங்க..” என்று இடைமறித்தார் ராமாவரம் தோட்ட ஊழியரான பீமராஜா. 

இலங்கையில் பாரதி -- அங்கம் 25 முருகபூபதி



"வறுமை, கவிஞனின் தனி உடைமை. கவிஞனுக்கு இந்த மண்ணுலகில் இன்பம் அளிப்பது கவிதை. ஆனால்,  வயிற்றுக்குணவு தேடி வாழும் வகையை அவன் மனைவிதான் கண்டுபிடிக்க வேண்டி வருகிறது. காதல் ராணியாக மனைவியைப் போற்றும் கவிஞன் அவளுக்குச் சாதமும் போடவேண்டும் என்ற நினைவேயின்றிக் காலம் கழித்தானேயானால், என்ன செய்ய முடியும்...?

                                     கவிஞன் விசித்திரமான தன்மை நிறைந்தவன். அவனுக்கு எதுவும் பெரிதில்லை. ஆனால், கவலை நிறைந்த வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்று எந்தப் பெண்தான் நினைக்க முடியும்...? சிறு வயதில் ஆசாபாசங்களும் அபிலாஷைகளும் ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் நிறைந்திருப்பது இயற்கைதானே...? சுகமாக  வாழுவதற்கு  சொர்க்கலோகம் சென்றால்தான் முடியும் என்ற நிலை கவிஞன் மனைவிக்கு ஏற்பட்டு விடுகிறது. அந்த நாளிலிருந்த சத்திமுத்தப் புலவரின் மனைவியிடமிருந்து இன்று என்வரை சுகவாழ்வு ஒரே விதமாகத்தான் அமைந்திருக்கிறது. ஏகாந்தத்தில் அமர்ந்துவிட்டால் முனிவரும்கூட அவரிடம் பிச்சைதான் வாங்கவேண்டும். ஆனால் மனைத் தலைவியாகிய நான் அவ்வாறு நிஷ்டையிலிருக்க முடியுமா...? "  இவ்வாறு மனம் திறந்து பேசியவர் யார் தெரியுமா...?


பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு கவுரவ டாக்டர் பட்டம்!

.


பாடல் மட்டுமல்ல, வீணையிலும் கை தேர்ந்த வைக்கம் விஜயலட்சுமியை கவுரவிக்கும் விதமாக அமெரிக்காவைச் சேர்ந்த உலக தமிழ் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டத்தை அவருக்கு வழங்கி பெருமைப்படுத்தி இருக்கிறது.
2013-ல் பிரித்விராஜ் நடிப்பில் மலையாளத்தில் வெளியான ‘செல்லுலாய்ட்’ படத்தில் பாடிய ‘காற்றே.. காற்றே’ பாடல் மூலம் பிரபலமானவர் பாடகி வைக்கம் விஜயலட்சுமி. பார்வையற்றவரான இவர், தமிழிலும் ஏராளமான பாடல்களை பாடி ரசிகர்களை தனது குரலால் கவர்ந்தவர்.சாதிப்பதற்கு ஊனம் ஒரு தடையில்லை என்பதை நிரூபித்துள்ள வைக்கம் விஜயலட்சுமியின் இசை உலக சாதனையை பாராட்டி அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. பாடல் மட்டுமல்ல, வீணையிலும் கை தேர்ந்த இவரை அமெரிக்காவைச் சேர்ந்த உலக தமிழ் பல்கலைக்கழகம் கவுரவிக்கும் விதமாக இந்த கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கி பெருமைப்படுத்தி இருக்கிறது. இந்த பட்டம் வழங்கும் விழா சென்னையில் நடந்தது.

nantri .seithy.com

இலங்கை செய்திகள்


வித்தியாவின் மரணத்திற்கு காரணமான மூன்று காரணிகள்

சவூதி இளவரசரை விமான நிலையத்தில் வைத்து வரவேற்ற இராஜாங்க அமைச்சர்

ஊட­க­வி­ய­லாளரை கொலை செய்தவருக்கு மரண தண்டனை

மக்கள் மகிழ்ச்சியில் ; இராணுவத்தினரிடமிருந்து 27 வருடங்களின் பின் மயிலிட்டி துறைமுகம் விடுவிப்பு

மக்களே அவதானம் : 80 ஆயி­ரத்தை தாண்­டி­யது டெங்கு நோயாளர்கள் எண்­ணிக்கை



தமிழ் சினிமா

இவன்தந்திரன்

Ivan Thanthiranதமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவின் மிகப்பெரும் பிரச்சனை படித்த இளைஞர்களுக்கு சரியான வேலை கிடைக்காதது தான். அதிலும் குறிப்பாக இன்ஜினியரிங் படித்த மாணவர்கள் லட்சக்கணக்கானோர் வேலையில்லாமல் இருக்க, அவர்களின் வாழ்க்கையை ஏற்கனவே வேலையில்லா பட்டதாரியில் காட்டியிருந்தாலும், தற்போது கௌதம் கார்த்திக், ஆர் ஜே பாலாஜி நடிப்பில் இயக்குனர் கண்ணனும் தன் பாணியில் இன்ஜினியரிங் மாணவர்களின் வாழ்க்கையை காட்டியுள்ள படம் இவன் தந்திரன், விஐபி வெற்றி இதற்கும் கிடைத்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

கௌதம் கார்த்திக், ஆர் ஜே பாலாஜி ரிவர்ஸ் இன்ஜினியரிங்கில் புகழ் பெற்றவர்கள். அதாவது ஒரு பொருளை அதேபோல் அப்படியே செய்வதில் வல்லவர்கள். ஒரு நாள் மந்திரி வீட்டில் கேமரா செட் செய்ய போகிறார்கள்.
அதற்கான சம்பளத்தை கொடுக்காமல் அலைய விடுகிறார்கள். இதனால் அந்த மந்திரியை ஏதாவது செய்ய வேண்டும் என்று இருவரும் ப்ளான் செய்கிறார்கள்.
அந்த நேரத்தில் தான் மந்திரி பல இன்ஜினியரிங் கல்லூரிகளின் லைசன்ஸை ரத்து செய்து, அவர்களிடம் பணம் பறிக்கின்றார்.
மந்திரிக்கு பணத்தை அள்ளிக்கொடுத்துவிட்டு மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கின்றது கல்லூரி நிர்வாகம். இதனால் ஒரு மாணவன் இறக்கும் நிலை உருவாகின்றது. இதை நேரில் கண்ட கௌதம் கார்த்திக் எப்படி அந்த மந்திரியின் சதி திட்டத்தை வெளி உலகிற்கு கொண்டு வருகிறார் என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

கௌதம் கார்த்திக்கிற்கு தற்போது தான் கொஞ்சம் நல்ல காலம் ஆரம்பித்திருக்கிறது போல, ரங்கூனை தொடர்ந்து இந்த படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நடிப்பு என்பது தானே அனைத்து காட்சியையும் இழுத்து போட்டு நடிப்பது இல்லை, தனக்கு வராததை அடுத்தவர்களை செய்யவிட்டு நாம் ஒதுங்கி நிற்பதும் புத்திசாலித்தனம் தான் என்பதை கௌதம் உணர்ந்துள்ளார்.
ஷ்ரத்தா தனக்கான கதாபாத்திரத்தில் அழகாக நடித்துள்ளார். கௌதம் கார்த்தி- ஷ்ரத்தாவின் காதல் காட்சிகள், அதற்கான வசனங்கள் ரசிக்க வைக்கின்றது. வில்லன்களாக சூப்பர் சுப்பராயன், ஸ்டண்ட் சில்வா என ஸ்டண்ட் மாஸ்டர்களையே பயன்படுத்தியது புத்திசாலித்தனம்.
ஆர் ஜே பாலாஜி 10 படம் நடித்தால் அதில் 4 படத்தில் தான் காமெடி நன்றாக க்ளிக் ஆகும். அப்படி க்ளிக் ஆகியுள்ளது இவன் தந்திரன், ஹேராம் பட ஹீரோயின் உதடு மாதிரி இருக்கு, OLA ஆட்டோ வந்ததால் உங்க வியாபாரம் போச்சா...அதுக்கு தான் மீட்டர போட்ருக்கனும், கழுத்துல அடிப்பட்டால் நீ என்ன எம்.ஜி.ஆரா.. இவன் அம்பானி, அவ ஹர்பஜன் சிங் வேலை முடிஞ்சதும் கட்டிப்பிடிக்க போறாங்க என இன்றைய ட்ரண்ட் மிமி கிரியேட்டர்களுக்கு நல்ல தீனியாக பல டயலாக் அமைந்துள்ளது.
தற்போது மெஜாரிட்டியை டார்க்கெட் செய்து அதில் வெற்றி பெறுவது தான் டெக்னிக். அதேபோல் தான் இன்ஜினியரிங் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் இருக்கும் மாணவர்கள், படிக்கும் போதே பணம் கட்ட முடியாமல் தவிக்கும் மாணவர்கள் நிலை என இன்றைய இளைஞர்கள் போராட்டத்தை அழகாக காட்டியதற்காகவே கண்ணனை பாராட்டலாம். ஆனால், ஜெண்டில்மேன், வேலையில்லா பட்டதாரி படங்களின் சாயல்களை தவிர்க்க முடியவில்லை.
பிரசன்ன குமாரின் ஒளிப்பதிவு பட்ஜெட் பிரச்சனையா என்று தெரியவில்லை, இரவு நேரத்தில் வரும் காட்சிகள் எல்லாம் கொஞ்சம் குறும்படம் போல் உள்ளது. தமனின் பின்னணி இசை மிரட்டல், பாடல்கள் பெரிதும் கவரவில்லை.

க்ளாப்ஸ்

கதைக்களம், இன்று தமிழகத்தில் மட்டுமின்றி முன்பே கூறியது போல் இந்தியா முழுவதும் நிகழும் காமன் பிரச்சனை.
கௌதம் கார்த்திக், ஆர் ஜே பாலாஜி கூட்டணி ரசிகர்களின் பேவரட் கூட்டணியாகும்.
படத்தின் காதல் காட்சிகள், கமர்ஷியல் படங்கள் என்றாலே வலுக்கட்டாயமாக இருக்கும் தருணத்தில், கதையுடன் வருவது கவர்கின்றது.

பல்ப்ஸ்

ஒரு சில படங்களின் சாயல் பல இடங்களில் தெரிகின்றது.
லாஜிக் மீறல்கள் பல இடங்களில் ஒரு காட்சியில் பணம் கட்டாததால் என்னால் தேர்வு எழுத முடியவில்லை என்று ஷ்ரத்தா கூறுகின்றார். ஆனால், அதற்கு முந்தைய காட்சியில் தான் கௌதம் அவருடைய தேர்விற்கு பணம் கட்டி வருகின்றார்.

மொத்தத்தில் இந்த பிரச்சனையை எந்த காலக்கட்டத்திற்கு எடுத்தாலும் பொருந்தும் என தந்திரமாக திரைக்கதை அமைத்த கண்ணனே ரியல் தந்திரன்.
Direction:
Music:

நன்றி CineUlagam