Hindu Ladies OGA Sydney Program

யாழ் இந்து மகளிர் கல்லூரியின் மலரும் மாலை 2024 - செ .பாஸ்கரன்

 .

யாழ் இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவிகள்  சங்க சிட்னிக் கிளையினரின் மலரும் மாலை 2024 பத்தாவது வருடமாக திருமதி நளினி விமலேஸ்வரனின் தலைமையில் சிட்னியில் இடம் பெற்றது.  August  மாதம் 31 ஆம் நாள் சனிக்கிழமை மாலையில் Castle Hill இல்  அமைந்திருக்கும் பொயினியர்  தியேட்டரில் ( Pioneer Theatre) இடம் பெற்றது.  சங்கத்தின் பழைய மாணவியும் போசகருமான திருமதி கலையரசி சின்னையா அவர்களும், திரு சின்னையா அவர்களும் மங்கல  விளக்கை  ஏற்றி வைத்தார்கள். பழைய மாணவிகளின் கல்லூரி கீதத்தோடு நிகழ்ச்சி ஆரம்பித்தது. இளவல்களான வித்தியா பாலகுமார், ஷாலினி முருகானந்தன் ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ஆரம்பித்து வைத்தார்கள். ஆங்கிலத்திலும் தமிழிலும் அருமையான ஒரு தொகுப்பாக அவர்கள் ஆரம்பித்து வைத்த பின்பு தொடர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக சிட்னியின்  கம்பன் கழகத்தின் தலைவராக இருப்பவரும் சிறந்த அறிவிப்பாளருமான திரு சஞ்சீவன் குணரட்ணம் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.  இயல்பாகவே அவருக்கு இருக்கும் நகைச்சுவை உணர்வோடு மிக நகைச்சுவையாகவும் அழகாகவும் நிகழ்ச்சியை தொகுத்துக் கொண்டிருந்தது மக்களை கவர்ந்து கொண்டது. நிகழ்ச்சிக்கு தலைமை உரையை வழங்குவதற்காக தற்போதைய நடப்பாண்டின் தலைவியான திருமதி நளினி விமலேஸ்வரன் அவர்கள் வந்து  தலைமையுரையை வழங்கினார். தாங்கள் செய்கின்ற செயல் திட்டங்கள், பாடசாலைக்கான செயல் திட்டங்கள், தமிழ் மக்களுக்கான செயல் திட்டங்கள் என்பவை  பற்றி சுருக்கமாக விவரித்திருந்தார். 

அதனை தொடர்ந்து இசை கதம்பம் என்ற நிகழ்வு ஆரம்பித்தது. இசை கதம்பம் என்றவுடன் கர்நாடக இசை பாடல்கள் ஒலிக்கப் போகின்றதோ என்று  பார்த்துக் கொண்டிருந்தபோது அருமையான இசை கருவிகளின் சங்கமமாக அந்த நிகழ்வு மெருகூட்டியது. இசை கதம்பத்திலே ஸ்ரீமதி திலகா ஜெயநாதன் அவர்களுடைய கோகுலதர்ஷன் மியூசிக் அகாடமி மற்றும் ஸ்ரீமதி லாவண்யா விதுஷன் அவர்களின் ராகமாளிகா மியூசிக் அகடமி மாணவர்கள் மாணவிகள் கலந்து கொண்டு மிக அருமையாக இசை கருவிகளை மீட்டினார்கள் புல்லாங்குழல், வயலின், வீணை, மிருதங்கம், தபேலா, ஒக்டோபாட், கீபோட், கடம்  இப்படி அந்த இசை கதம்பம் மிக அருமையாக அமைந்தது. அந்த வாத்திய இசையிலே புதிய பாடல்கள், பழைய பாடல்கள் என்று எல்லோரையுமே மகிழ்விக்க கூடியதாக பாடல்களை இசைத்தார்கள். அதிலும் பாட்டுப்பாடாவா மற்றும் அதோஅந்த பறவைபோல என்ற இருபாடல்களையும் கலந்து கொடுத்ததட்கு பாராட்டுக்கள் .  இந்த இலவல்கள் இவ்வளவு அருமையாக வாசிக்க  வைத்த அந்த இசை நிகழ்ச்சியாளர்களுக்கு நிச்சயமாக ஒரு பெரிய பாராட்டை கொடுக்க வேண்டும். 

நல்லூரான் தேர்பார்ப்போம் எல்லோரும் வாருங்கள் !



















மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண். …அவுஸ்திரேலியா






வேதமொடு திருமுறை மேலான வாத்தியங்கள் 
காலையிலே ஒலிக்கக் கந்தனுமே புறப்பட்டு 
ஆதவனும் அங்கே அழகாக ஒளிகொடுக்க
சோதியெனக் கந்தனுமே தேரேற வந்திடுவான் 

முருகா எனும்நாமம் மூவுலகும் கேட்டுவிடும்
அடியார்கள் தமைமறந்து முருகனையே நோக்கிடுவார் 
தமிழான முருகனுமே தவழ்ந்துவரும் வெண்ணிலவாய்
அழகாக அசைந்தபடி அடியார்கள் தோழ்வருவான் 

வாசுகிப் பாம்பாக தேர்வடமோ நீண்டிருக்கும்
வடம்பிடிக்க அடியார்கள் வாஞ்சையுடன் வந்திடுவார்
வடந்தொட்டால் வழிபிறக்கும் எனவடியார் நம்பிடுவார்
வண்ணமயில் வாகனனின் தேருமே  அசைந்துவரும் 

செந்தமிழ் நடையும் கொடுந்தமிழ் நடையும் ----------------- சென்ற வாரத் தொடர்ச்சி.



பாரதி இளமுருகனார்

 (வாழ்நாட் சாதனையாளர்)


உரைநடை இலக்கியங்கள் அனைத்திற்கும் மிகவும் உரிமையுடையவை உலக வழக்குச் சொற்களான இயற்சொற்கள் என்பதைப் பற்றியும்,  சில இயற்சொற்கள் எவ்வாறு இழிவழக்குச் சொற்களாய் மாற்றமடைந்து வழங்கப்பெற்று வருகின்றது என்பது பற்றியும் சென்ற வாரத் தமிழ் முரசு இதழிலே சுட்டிக் காட்டப்பெற்றது. உரைநடை இலக்கியங்களுக்கு எவ்வாறு இயற்சொற்கள் முக்கியமாக இருப்பது போலச் செய்யுள் வழக்குக்கு இயற்சொல்லும்,  திரி சொல்லும்,  வடசொல்லும்,  திசைச் சொல்லும் முக்கியமானவையே!. இந்த நான்கினும் மிகவும் முக்கியமானது திரி சொற்களே. இதை வலியுறுத்துவதுபோலவே,  தொல்காப்பியனாரும் திரி சொற்களைச் செய்யுள் மொழி என்றார். இயற் சொற்களுக்கு அவற்றின் பொருள் வெளிப்படையாக விளங்கும். ஆனால்,  திரிசொற்களுக்கு அவற்றின்  பொருளை அறிந்து விளங்கவேண்டும். ஒரு திரி சொல்லுக்குப் பல பொருள்கள் இருப்பதையும் பல  பொருள்களுக்கு ஒரு சொல் குறிப்பதையும் படித்திருப்போம். 

சுருங்கச் சொல்வதற்கும்,   சுவைபடச் சொல்வதற்கும் பெரிதும் உதவுவது திரிச்சொற்கள். குறிப்பாக எதுகை மோனையுடன் செய்யுள் இயற்றுவதற்கும்,  கவி நடை சிறப்பாக அமைவதற்கும்,  ஆழமான பொருளை எளிதாகவும் சுருக்கமாகவும் அணி நலன்களுடன் வெளிப்படுத்துவதற்கும் திரி சொற்கள் இன்றியமையாதவை. திரி சொற்கள் இல்லாவிடத்துக் கவிதைகள் சோபிக்காது.

திசைச் சொற்கள்

தமிழ் நாட்டின் வடக்குத் திசையிலிருந்து வந்து தமிழுடன் கலந்த வட திசைச் சொற்கள் ஆரியச் சொற்களாம். ஒரு காலத்திலே ஆரியச் சொற்கள் செந்தமிழ்ச் சொற்களுடன் கலந்து எழுதப்பெற்று வந்தன. ஆரியச் சொற்கள் செயற்கை ஒலிகளை உடையவை. இயற்கை ஒலிகளைக் கொண்டு இனிமைமிகுந்த ஓசைவளங் கொண்டது செந்தமிழ். சில இடங்களிலே,  காலங்காலமாக ஆரியச் சொற்களுக்குச் சமமான தமிழ் எழுத்துகளைப் பயன்படுத்தாது செந்தமிழின் இனிய சொற்களுடன் அவை கலந்து எழுதப்பெற்று வந்ததால் தமிழின் இனிய ஓசை வளம் திரிபடையத் தொடங்கி  இறுதியிலே  பேசப்பட்டுவந்த அந்தக் கலப்பு மொழி முழுமையாகத் திரிபு அடையப்பெற்று   மலையாளம் - கன்னடம் - தெலுங்கு என  மாறியமை வரலாறாகும்.   தொல்காப்பியர் காலந்தொட்டு இன்றுவரை   தமிழ்ச் சான்றோர்கள் ஆரிய  எழுத்துக்களுக்குச் சமமான தமிழ் எழுத்துகளை  வழங்கிச் செந்தமிழ் வழக்கைச் சிதையாது பாதுகாத்து வந்துள்ளார்கள். ஆரிய வடதிசைச் சொற்கள் இறைவழிபாட்டுக்கு மந்திரங்களாகப் பாவித்துவந்தமையால் தமிழ் நடைபெற்ற அச்சொற்கள் வடசொற்கள் எனத் தனிப்படச் சான்றோராலே நியமனம் பெற்றது. ஏனைய வழிகளால் தமிழொடு கலந்த சொற்கள் திசைச் சொற்கள் என நியமனம் பெற்றது.

வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ

எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே!

ஆஸ்திரேலியா மூத்த தமிழர் சங்க உறுப்பினர்ககளுக்கு ஓர் அறிவித்தல்



கடவுள் மாமா - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 தென்னிந்தியத் திரையுலகில் தயாரிப்பாளராகவும், டைரக்டராகவும்


புகழ் பெற்று விளங்கிய பி. ஆர் . பந்துலு 1974ம் ஆண்டு தன்னுடைய பத்மினி பிக்சர்ஸ் சார்பில் கடவுள் மாமா என்ற படத்தை தயாரித்தார். ஆனால் படத்தை அவர் டைரக்ட் பண்ணவில்லை. அதற்கு பதில் தன்னுடைய உதவி டைரக்டராக நீண்ட காலம் பணியாற்றிய கே. சிங்கமுத்துவுக்கு படத்தை இயக்கும் வாய்ப்பை அளித்தார். இந்த சிங்கமுத்து ஏற்கனவே தாமஸ் என்பவருடன் இணைந்து எம் ஜி ஆர் நடிப்பில் தலைவன் என்ற படத்தை இயக்கி அப் படம் சுமாராகப் போனது. இப்போது பந்துலுவின் ஆதரவில் மீண்டும் படம் இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிட்டியது.


கடவுளை எல்லாரும் அப்பா, அம்மா, அண்ணன், நண்பன் என்று

பலவிதங்களில் அழைத்து வணங்கி தங்கள் பக்தியை செலுத்துவது வாடிக்கை. ஆனால் இந்த சிங்கமுத்து ஒரு படி மேலே போய் கடவுளை மாமா ஆக்கிவிட்டார். ஆனால் இவ்வாறு அழைப்பது ஒரு சிறுமிதான் என்ற வகையில் ஆறுதல் அடையலாம்!

அனாதையான கற்பகத்தை மாணிக்கம் என்ற காமுகனிடம் இருந்து சண்டை போட்டு காப்பாற்றுகிறான் கந்தன். ஆனால் இந்த சண்டையில் மாணிக்கம் கொலை செய்யப்பட்டான் என்று குற்றம் சாட்டி போலீசார் கந்தனை கைது செய்ய ,சட்டம் அவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கிறது. தான் சிறையில் இருக்கும் போது தன்னுடைய தங்கை நிர்மலாவும் , கற்பகமும் நிராதராவாகி பிறரால் வஞ்சிக்கப்பட்டுள்ளனர் என்பதை அறியும் கந்தன் சிறையில் இருந்து தப்பி அவர்களைக் காண ஓடுகிறான். போலீசார் பிடியில் இருந்து தப்ப ஒரு கிறிஸ்துவ தேவாலயத்துக்குள் நுழையும் அவனை காணும் சிறுமி உமா அவனை கடவுள் மாமா என்று கருதி அழைக்கத் தொடங்குகிறாள். தன் வீட்டுக்கும் அழைத்துப் போகிறாள். அங்கே கந்தனுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. எந்த கற்பகத்தை காக்க சிறையில் இருந்து தப்பினானோ அவள் சித்தப் பிரமை பிடித்து இருப்பதையும், அவளின் குழந்தைதான் உமா என்பதையும், அவளின் கணவன் ராஜ்மோகன் அவளை கை விட்டு விட்டு வேறு ஒரு பெண்ணை மணந்து வாழ்வதையும் அறிந்து கொள்கிறான். ராஜ்மோகனை அழைத்து வர அவனைத் தேடிச் செல்லும் கந்தனுக்கு அங்கே மற்றுமோர் அதிர்ச்சி காத்திருக்கிறது. ராஜ்மோகன் மணந்திருப்பது தன்னுடைய சொந்த தங்கை நிர்மலாவைத்தான் என்றறிந்து அதிர்கிறான் கந்தன்.

தொழில் தெய்வமா? தொழிலைச் செய்பவர் தெய்வமா?…..பகுதி-2


…..சங்கர சுப்பிரமணியன்.




கடலுக்குள் புதைந்து கிடக்கும் பூம்புகார் துறைமுகப்பட்டினம் என்பது தெரியும். ஆனால் அது பதினைந்தாயிரம் ஆண்டுகள் பழமையானது என்பதை எந்த நூலைப் படித்து தெரிந்து கொள்வது? அதை யாராவது எழுதியிருக்கிறார்களா? என்பதை தேடிப்பிடித்து படிப்பதைவிட B.B.C ன் ஆறு நிமிட காணொளி எனது அறிவுக்கு ஐந்து நிமிடத்தில் தீனி போடுகிறது.

இவ்வாறு நூலைப்படித்து அறிந்து கொள்வதற்கு மாற்றாக பல ஊடகங்கள் அதற்கு உதவி செய்கின்றன. அதற்காக நூலைப் படிக்கவேண்டாம் எனச் சொல்லவில்லை. நூலைப்படிப்பவர்கள் நூலைப்படிக்கட்டும். மாற்று ஊடகங்களை பயன்படுத்துவர்கள் அவற்றைப் பயன் படுத்தட்டும் என்பதே என் வாதமாகும்.

பாலை வாங்கி காய்ச்சி உரைஊத்தி தயிராக்கி கடைந்து வெண்ணைய் எடுத்து அதை உருக்கி நெய்யை தயாரிப்பவர்கள் தயாரிக்கட்டும். நேரடியாகவே நெய்யை கடையில் வாங்குபவர்கள் வாங்கட்டும் என்பதே என் வாதம்.

கற்று அறிவைப் பெருக்கவேண்டும். அதேபோல்தான் புசித்து பசியைப் போக்கவேண்டும். படித்து அறிவைப் பெற்றால் என்ன? பார்த்து அறிவைப் பெற்றாலென்ன? இட்லி சாப்பிட்டு பசியைப் போக்கினால் என்ன? இடியாப்பம் சாப்பிட்டு பசியைப் போக்கினால் என்ன?

ஹக்கீம் எதிர்பார்க்கும் சாணக்கியம்!

 August 26, 2024

வடக்கு, கிழக்குத் தமிழ் மக்கள் சாணக்கியமாக முடிவு எடுப்பார்கள் – தமிழ்ப் பொது வேட்பாளர் முடிவு தவறானது என்று அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்று முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருக்கின்றார். சுமந்திரன்களும் சாணக்கியன்களும் திட்டமிட்ட வகையில் தமிழ்ப் பொது வேட்பாளரை எதிர்த்து வருவதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால், ஹக்கீம் ஏன் இந்த விடயத்தில் இந்தளவு கரிசனை காண்பிக்கின்றார்? தமிழ்ப் பொது வேட்பாளர் நிலைப்பாடு இலங்கையின் அனைத்துத் தரப்புகளையும் திருப்பிப் பார்க்க வைத்திருக்கின்றது என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், அது சாணக்கியமான தீர்மானமா அல்லது இல்லையா என்பதை வரலாறு தீர்மானிக்கும். ஆறு தமிழ்க் கட்சிகள் இணைந்து இந்தியப் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதும் விடயத்தில் – ஆரம்பத்தில் ஹக்கீமும் இணைந்து செல்லும் முடிவில் இருந்தார். ஆனால், பின்னர் அதிலிருந்து நழுவிக்கொண்டார் – காரணம் என்ன? சமஷ்டி அடிப்படையிலான கோரிக்கையை உள்வாங்குவது என்னும் தீர்மானம் எடுக்கப்பட்ட பின்னர் ஹக்கீம் அதிலிருந்து விலகிக் கொண்டார் ஏன்? அவர் சாணக்கியமாக நடந்து கொண்டாரென நாங்கள் எண்ணிக்கொள்ளலாம்.

என்ன செய்யப் போகின்றோம்?

 August 24, 2024


தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட்டிருக்கின்றார். அவரை நோக்கித் தமிழ் மக்களின் வாக்குகளை திரட்டுவது எவ்வாறு என்பதுதான் அடிப்படையான கேள்வி. இந்தக் கேள்விக்கான பதிலை எவ்வாறு கண்டடைவது என்பதுதான் அடிப்படையான கேள்வியாகும். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இப்போதும் வழமையான தளம்பல் போக்கையே தொடர்ந்தும் கடைப்பிடித்து வருகின்றது. மூன்று பிரதான வேட்பாளர்களில் ஒருவரைத்தான் நாங்கள் ஆதரிக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம் என்றும் தமிழ் அரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் கூறுகின்றனர். இந்தப் பின்புலத்தில் நோக்கினால் தமிழ்ப் பொது வேட்பாளர் என்பதுதான் ஒரேயொரு தமிழ்த் தேசிய நிலைப்பாடாகும்.

ஆனால், இந்த நிலைப்பாட்டைத் தோற்கடிக்க வேண்டுமென்று தென்னிலங்கை வேட்பாளர்கள் சிந்திப்பதோ தலையீடுகளை செய்வதோ – ஆச்சரியமான விடயமல்ல. ஆனால், தமிழ்த் தேசிய அரசியல் தரப்புக்குள் இருப்பவர்களே அதனை எதிர்ப்பது தான் மிகவும் சிக்கலான பிரச்னையாகும். குறிப்பாக, தமிழ் அரசுக் கட்சி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகியவை தொடர்ந்தும் தமிழ்ப் பொது வேட்பாளரை தோற்கடிக்க முயற்சித்து வருவது வெள்ளிடைமலை. ஒப்பீட்டடிப்படையில், இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஒரு பகுதியினர் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை ஆதரித்து வருகின்றனர்.

ரணிலும் சஜித்தும்

 August 25, 2024


ஜனாதிபதித் தேர்தலில் மூன்று பிரதான வேட்பாளர்கள் காணப் படுகின்றனர். இவர்களில் அநுரகுமார திஸநாயக்கவுக்கு ஒப்பீட் டடிப்படையில் தமிழ், முஸ்லிம் மற்றும் மலைய மக்களின் ஆதரவை பெறுவது மிகவும் கடினமானது – குறிப்பாக ஈழத் தமிழ் மக்களின் ஆதரவை பெறுவது மிகவும் சவாலானது.

இந்தப் பின்புலத்தில் நோக்கினால், அதிகாரத்தை கைப்பற்றும் போட்டியாளர்களாக, ரணில் விக்கிரமசிங்கவும் சஜித் பிரேமதாஸவுமே காணப்படுகின்றனர். இவர்கள் இருவருமே கடந்த காலத்தில் தேசிய இனப்பிரச் னைக்கான அரசியல் தீர்வாக சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை பரிசீலிப்பதை கொள்கையளவில் ஏற்றுக்கொண்டவர்கள்.

இவ்வாறு கூறும்போது – எப்போது என்னும் கேள்வி எழலாம். விடுதலைப் புலிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்க தலைமையி லான அரசாங்கத்திற்கும் இடையிலான பேச்சுவார்த்தையின்போது, சமஷ்டி அடிப்படையிலான தீர்வை கண்டடைவதற்காக தொடர்ந்தும் செயல்படுவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டது. அதுதான், ஒஸ்லோ இணக்கப்பாடு எனப்படுகின்றது. பேச்சுவார்த்தை காலத்தில் ரணில் அரசாங்கத்தில் சஜித் பிரேமதாஸவும் ஒரு முக்கிய நபராவார். ஐக் கிய தேசியக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர். அப்போது, இது தொடர்பில் சஜித் பிரேமதாஸ எதிர்ப்பு வெளியிடவில்லை.

இலங்கைச் செய்திகள்

மித்ர சக்தி போர் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த இந்திய படையினர் நாடு திரும்பினர்

அஜித் தோவல் பிரதமருடன் சந்திப்பு இருதரப்பு உறவை வலுப்படுத்த உறுதி

நோயாளர்களை பராமரிப்போருக்கு யாழில் இலவச தங்குமிடம்

முன்னாள் MP டயனா பிணையில் விடுதலை

உள்நாட்டு சந்தையில் இஞ்சியின் விலை ரூ.3200 ஆக உயர்வு 



மித்ர சக்தி போர் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த இந்திய படையினர் நாடு திரும்பினர் 

August 26, 2024 2:54 pm 

பிராந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்திய-இலங்கை இராணுவத்தினரிடையே நடத்தப்பட்ட இராணுவப் கூட்டு பயிற்சியான மித்ர சக்தி’ பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த இந்தியப் படையினர் நேற்று (25) நாடு திரும்பினர்.

உலகச் செய்திகள்

மேற்குக் கரையில் வான், குடியேறிகளின் தாக்குதல்களில் ஆறு பலஸ்தீனர்கள் பலி

காசாவின் குடியிருப்பு பகுதிகளுக்குள் இஸ்ரேலிய டாங்கிகள் முன்னேற்றம்: மக்கள் தப்பியோட்டம்

மேற்குக் கரையில் தொடரும் இஸ்ரேலின் பாரிய படை நடவடிக்கையில் 17 பேர் பலி

ஹூத்தி தாக்குதல்: தொடர்ந்து எரியும் கப்பலில் எண்ணெய் கசியும் அபாயம்

காசா தாக்குதலுக்கு மத்தியில் மேற்குக் கரையில் இஸ்ரேல் பாரிய படை நடவடிக்கை: 11 பேர் பலி

உக்ரைன் தலைநகரில் ரஷ்யா கடும் தாக்குதல்: மூவர் பலி

விண்வெளியில் சிக்கியோர் பெப்ரவரியில் திரும்புவர்


மேற்குக் கரையில் வான், குடியேறிகளின் தாக்குதல்களில் ஆறு பலஸ்தீனர்கள் பலி

August 28, 2024 8:00 am 

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள நகர்புற அகதி முகாம் ஒன்றில் இஸ்ரேல் நேற்று முன்தினம் (26) நடத்திய வான் தாக்குதல் ஒன்றில் இரு குழந்தைகள் உட்பட குறைந்தது ஐவர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கணேஷ் சதுர்த்தி மற்றும் விசார்ஜன் செப்டம்பர் 7, 2024 சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை, 8 செப்டம்பர் 2024

 




“சுக்லாம்பர தரம் விஷ்ணும், ஷசி வர்ணம் சதுர் புஜம்
 பிரசன்ன வதனம் த்யாயேத், ஸர்வ விக்ன உபஷாந்தயே”

எப்போதும் வெண்ணிற ஆடை அணிந்திருக்கும் விநாயகப்பெருமான் தூய்மையைக் குறிக்கிறது. ஆன்மிகப் பொலிவுடன் ஒளிரும் சாம்பலைப் போன்ற சாம்பல் நிறத்துடன் அவர் எங்கும் நிறைந்திருக்கிறார். பொருள் அல்லது ஆன்மீகம் என அனைத்து தடைகளையும் அழிக்கக்கூடிய கடவுளை நான் தியானிக்கிறேன்.

கடந்த ஆண்டுகளைப் போலவே, SVT இல் விநாயகர் விசர்ஜனம் ஒரு நாள் முழுவதும் சடங்குகள், கோயில் வளாகத்தைச் சுற்றியுள்ள தெய்வங்களின் ஊர்வலம், கலாச்சார நடவடிக்கைகள் / பொழுதுபோக்கு மற்றும் ஸ்டான்வெல் பார்க் கடற்கரையில் கடலில் உள்ள களிமண் விநாயகர் சிலை விசர்ஜனம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

நிகழ்ச்சி விவரங்கள்:

நாள்: 7 செப்டம்பர் 2024 சனிக்கிழமை.

காலை 09.00 மணி - ஸ்ரீ வரசித்தி விநாயகருக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை & அர்ச்சனை.

நாள்: செப்டம்பர் 8, 2024 ஞாயிற்றுக்கிழமை.

காலை 08.00 – கலச பூஜை காலை 08.15 – கணபதி மூல மந்திரம் திரிசதி ஹோமம் & விஷேஷ மஹா பூர்ணாஹுதி. காலை 10.30 மணி - விசேஷ அபிஷேகம், அலங்காரம் மற்றும் சோடஷோபாசார தீபாராதனை. மதியம் 12.30 - கோயிலைச் சுற்றி ஊர்வலம். மதியம் 02.00 மணிக்கு விசார்ஜன கணபதி பூஜை. மதியம் 2.30 - ஸ்டான்வெல் பார்க் கடற்கரைக்கு ஊர்வலம். பிற்பகல் 03.15 – விசர்ஜன் கடற்கரையில்.

"சிவ கர்ஜனா டீமின்" 40க்கும் மேற்பட்ட டிரம்மர்கள் / நடனக் கலைஞர்களுடன் கோயிலைச் சுற்றியும் கடற்கரையிலும் இறைவனின் பிரமாண்ட ஊர்வலத்தில் சேருங்கள்.

காலை 09.30 – புடவை விற்பனை:- தெய்வங்களை அலங்கரிக்கும் புடவைகள், பக்தர்கள் வாங்கி ஆசிர்வதிக்க வழங்கப்படுகின்றன.

கலாச்சார நிகழ்ச்சிகள்: காலை 10.00 மணிக்குத் தொடங்கும் பாரம்பரிய நடனம் மற்றும் பாரம்பரியப் பாடல்கள் ஏராளமாக இருக்கும், இவை இந்த வகையான இசையமைப்பாளர்களின் காதுகளுக்கு கண்களைக் கவரும் மற்றும் இசையாக இருக்கும்.