உன் காலடி வானம் - எம்.ரிஷான் ஷெரீப்,

.

அன்றைய மழைக்கால முன்னிரவில்
அவளது நீண்ட நேரக் காத்திருப்பின் முடிவு
பேருந்துத் தரிப்பிடத்தில் தேங்கி நின்றதோர் கணம்
தாண்டிச் சென்ற எவரையோ அழைத்துப் பேசி
கூடச் செல்லுமுனது பார்வையின் கீழே
நழுவியதவளது பூமி

தெருவோரம் எவரோ வெட்டி வீழ்த்தியிருந்த
மரத்தினை நோக்கிக் கூடு திரும்பிய பட்சிகள்
இருளாய் வட்டமிட்ட அன்றைய இரவு
ஒரு சாத்தானின் உருவம் கொண்டது
அந்தகாரத்தில் உனது நடை
மீன்களின் நீச்சலை ஒத்திருந்தது

மானிப்பாய் இந்துக்கல்லூரியின் இசை இரவு

.


சென்ற வாரம் மானிப்பாய் இந்துக்கல்லூரியின் இசை இரவு நடைபெற்றபோது வருகைதந்திருந்த சங்கீதவித்தகர் உன்னிகிரிஸ்ணனுடைய இனிமையான கச்சேரி இடம்பெற்றது அந்த நிகழ்வின்போது எடுத்த படங்களை கீழே காணலாம்.


மரண அறிவித்தல்

.


ஞானலெட்சுமி வாகீஸ்வரன்மூழ்கிய ஆஸி. புகலிடக் கோரிக்கையாளர் படகிலிருந்து அறுவர் மீட்பு

31/08/2012

ஆஸி, இந்தோனேஷியா தொடர்ந்து தேடுதல்
இந்தோனேஷிய கடற்பகுதியில் மூழ்கிய சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களின் படகில் இருந்த 6 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய கடற் பாதுகாப்பு பிரிவு அறிவித்துள்ளது.
150 புகலிடக் கோரிக்கையாளர்களுடன் அவுஸ்திரேலியா சென்று கொண்டிருந்த படகு இந்தோனேஷிய கடற்பகுதியில் மூழ்குவதாக அந்த படகில் இருந்து ஆஸி. கடற்படைக்கு நேற்று முன்தினம் அபாய அழைப்பு வந்தது.
இதனைத் தொடர்ந்து இந்த பகுதியில் ஹெலிகொப்டர் மற்றும் மீட்புப் படகுகள் கொண்டு தேடுதலில் ஈடுபட்ட இந்தோனேஷிய மீட்புக் குழு படகை காணாததால் தேடுதலை கைவிட்டது.
இந்நிலையில் கடலில் மிதந்து கொண்டிருந்த 6 பேரை அவுஸ்திரேலிய கடற் பாதுகாப்புப் பிரிவு மீட்டுள்ளது. மேற்கு ஜாவாவில் 42 கடல் மைல் தொலைவில் இவர்கள் மீட்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு மீட்கப் பட்டோர் ஆப்கான் நாட்டவர்களாவர். படகு மூழ்கும் போது அதில் பெண்கள் மற்றும் சிறுவர்களும் இருந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து குறித்த பகுதியில் அவுஸ்திரேலிய மற்றும் இந்தோனேஷிய மீட்புக் குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நன்றி தினகரன் 

கலைச் சுவை 2012
கோகிலா மகேந்திரனின் ‘உள்ளத்துள் உறைதல்’ - எனது பார்வையில் கார்த்திகா கணேசர்

.        
                                    நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

கோகிலா மகேந்திரனின் “உள்ளத்துள் உறைதல்” என்ற நூல் எவ்வாறு உள்ளத்திலே உறைந்தது என்பதையே இங்கு கூறுகிறேன்.
எமது இன்றய நாட்டு ப்பிரச்சனைகள் பலவும் எவ்வாறு வாழ்வை பாதிக்கிறது என்பதை இந்த நூல் மூலம் அறிய முடிந்தது. நகம் கடிப்பதும், கண்வெட்டுவதும் என சின்னஞ்சிறு பையன் செய்வது தந்தையைப் பிரிந்த ஆதங்கமே என அறிய எமது மனம் அந்த சிறுவனுக்காக வருந்துகிறது. என் வாழ்வில் சில சிறுவர் இரவில் படுக்கையை நனைப்பதை பார்த்திருக்கிறேன். இவ்வாறு நடப்பது சிறுவரின் மன பாதிப்பு என அறிய, இது எனக்கு அப்போதே தெரியவில்லையே, தெரிந்திருந்தால் அந்த சிறுவருக்கு ஆதரவாக இருந்திருப்பே ன்  என மனம் ஏங்கியது. மேலும் குண்டடியுண்ட இடத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன் படிப்பில் கவனம் செலுத்த முடியாது போவது இன்று நடைபெறும் ஒரு பரிதாப நிலை. இது பலரை சிந்திக்கத்தூண்டி இருக்கும். கை கால்களை இழந்த சிறுவரை அறிவோம். மனதால் பட்ட துன்பம் என்றும் மாறாவடுவாக சிறுவரின் வாழ்வை பாதிப்பதை கோகிலா கூறும் வரை சிந்தித்தும் பார்க்கமுடியவில்லை.

கர்ணன் திரைப்பாடலை ஒருகுழந்தையின் குரலில் கேட்டபோது

.
இதை அற்புதம் என்று கூறுவதா அதற்கும் மேலாகவா?

இலங்கைச் செய்திகள்

மேலும் ஒரு தமிழ் அரசியல் கைதி கோமா நிலையில்

அவுஸ்திரேலியாவுக்கு படகில் சென்ற 58பேர் வடமராட்சி கிழக்கில் கைது

அமெரிக்க டொலர் 100 மி. சீன உதவியில் வடக்கு, கிழக்கு இராணுவ முகாம்கள் விஸ்தரிப்பு


வாந்தி ௭டுத்த தங்கைக்கு மீண்டும் மீண்டும் தூக்க மருந்தை வாயில் ஊற்றினேன்: முக்கொலை சந்தேகநபர் வாக்குமூலம்

வெளிநாட்டு கடவுச்சீட்டுடைய 31500 பேர் வடக்குக்கு விஜயம்

 ஸ்ரீலங்கா : தமிழர்கள் முதலில் தமிழர்களுடன் சமரசம் பேணவேண்டும்

சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கையில் (பட இணைப்பு)

 
எமது உறவுகள் எங்கே? வவுனியாவில் கண்ணீர்மல்கக் கோரிக்கை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய பெண்கள் மீது ஏறாவூரில் தாக்குதல்

முன்னேஸ்வரம் காளி கோயில் மிருக வேள்வி இவ்வாண்டு நிறுத்தம்

சுகானுபவ இசைநிகழ்வு at Sydney Baha'i Centre on 9 Sept. 2012

யூன் மாதம் 9ம், 10ம், 11ம் நாட்கள், “சிட்னி இசை விழா” கோலாகலமாக நடைபெற்றது. இதற்கு ஆதரவு நல்கி அனைத்து ரசிகர்களுக்கும் எமது உளம்கனிந்த நன்றிகள் !


எதிர்வரும் செப்டம்பர் மாதம் 09ம் நாள், நடைபெற இருக்கும் இசைநிகழ்வு ஒரு சுகமான அநுபவமாகவே அமைய இருக்கிறது. இதற்கு இசை ரசிகர்களின் ஆதரவு இன்றி அமையாதது.

வீணையடி நான் எனக்கு…!

.

ஜெயஸ்ரீ ஷங்கர்,சிதம்பரம் 
மயில்கழுத்து நீலப்பட்டுப் புடவையில் அன்னப்பட்சி ஜரிகை ஜொலிக்க மெல்லிய கொலுசொலி பார்கவியின்  நடைக்கு ஜதிபோட,தலையில் சூட்டிய  பிச்சிப்பூவின் மணம் அவள் கடந்து சென்ற பாதை முழுதும்  மலரின் புகழைப்  பரப்பியது.  ”பார்கவி இன்னும் கொஞ்சம் மெல்ல நடவேன்” என்று காதில் அசைந்தாடிய ஜிமிக்கிகள் ரகசியமாய் எச்சரிக்க மனதைப் பிடுங்கித் தின்ற வெட்கத்தையும் பயத்தையும் ஒதுக்கிவிட்டு பிரார்த்தனையோடு மேடையில் விரித்திருந்த ஜமுக்காளத்தில் அமர்ந்தவளின் மடியில் தலை வைத்தது  அவளது அருமை வீணை.
அவளின்  வரவிற்காகவே காத்திருந்த ரசிகர்கள் கூட்டம் உற்சாகமாக, இதயக் கதவைத்  திறந்து வைத்தபடி பார்கவியின் வீணை இசையை ரசிக்கத் தயாராக அமர்ந்திருந்தனர்.  முன் வரிசையில் அம்மாவும் அப்பாவும் பெருமிதத்துடன் தலையசைக்க, சந்தோஷ மயக்கத்தில் விநாயகரை வீணைக்குள் இழுத்தாள் பார்கவி.  அரங்கமே அமைதியில் இருக்க ஒவ்வொருவரின் தூங்கும் இதய வீணையை எழுப்பி  ஜதி போட வைத்தது பார்கவியின் சரஸ்வதி வீணை.

ஆங்கிலம் உட்பட இந்தோ: ஐரோப்பிய மொழிகள் தோற்றம் பெற்றது துருக்கியில்?


.

ஆங்கிலம் உட்பட இன்றைய இந்தோ - ஐரோப்பிய மொழிக்குடும்பம் துருக்கி நாட்டிலிருந்து வழித்தோன்றல்களாக உருவாகியிருக்கலாம் என விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்றின் மூலம் புதிய தகவல் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் ஆராய்ச்சிகள் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து ஆய்வாளர்கள், தென் மேற்கு ரஷ்யாவில் சுமார் 8- 9,500 வருடங்களுக்கு இடைப்பட்ட காலத்திலிருந்து இம்மொழிக்குடும்பம் உருவாகியிருக்கலாம் என தெரிவித்துள்ளதுடன், இந்தோ - ஐரோப்பிய மொழிகளுக்கும், புராதன மொழிகளுக்கும் இடையில் உள்ள தொடர்பை பிணைக்கும் குடும்பச்சங்கிலி வரைபு ஒன்றின் மூலம் இம்மொழிகளுக்கான தோற்றம் எங்கிருந்து வந்தது என்பதற்கான ஆராய்ச்சிகளை அவர்கள் மேற்கொண்டு வந்தனர்.

சொல்லமறந்த கதைகள் -08 -காவி உடைக்குள் ஒரு காவியம்


.
- முருகபூபதி – அவுஸ்திரேலியாஇலங்கையில் வடமேல் மாகாணத்தில் அமைதியான ஒரு சிங்களக் கிராமம். பசுமையான வயல்வெளிகளும் தென்னந்தோப்புகளும் பாக்கு, கித்துல், மா, பலா, வாழை மரங்களும் செழித்து வளரும் விவசாயக்கிராமம்.

முன்னாள் பிரதமர்கள் பண்டாரநாயக்கா, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா, சந்திரிகா குமாரணதுங்க பண்டாரநாயக்கா ஆகியோரின் பரம்பரை தேர்தல் தொகுதியையும் பரம்பரைக்காணிகளையும் கொண்டு விளங்கும் அத்தனகல்லை என்ற நகரத்துக்கு சமீபமான கிராமம்தான் இங்கு நான் குறிப்பிடும் கொரஸ்ஸ.

மினுவாங்கொடை என்ற மற்றுமொரு ஊரைக்கடந்து உடுகம்பொலை என்ற இடத்தையும் கடந்து சென்றால் இந்த கொரஸ்ஸ கிராமம் வரும்.

சுதந்திர தினம் --முனைவென்றி நா சுரேஷ்குமார் நாகராஜன்

.

அகிம்சையெனும் ஆயுதமேந்த

அடிபணிந்தனர் ஆங்கிலேயர்

கிடைத்தது சுதந்திரம்

-------------------------------------------------------

சுதந்திரம் கொடுத்த சுதந்திரத்தில்

சுதந்திரமாய்ச் சுற்றித்திரிகிறது

ஜாதி

-------------------------------------------------------

விடுதலை கிடைத்தும்

விழலுக் கிறைத்த நீரானது

ஊழல் அரசியலால்

-------------------------------------------------------

நாம் விடுதலையடைந்ததை

ஆண்டுக்கொருமுறை நினைவுபடுத்துகிறது

சுதந்திரதினம்

-------------------------------------------------------

பள்ளிகளில் மிட்டாய் கொடுக்கப்பட்டது

குழந்தைகள் நன்றி சொன்னனர்

சுதந்திர தினத்திற்கு

-------------------------------------------------------

உலகச் செய்திகள்

.
இணையத்தில் வெளியாகிய சிரிய அரசின் மனிதப் படுகொலைப் புகைப்படங்கள்

வெனிசுலா எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய தீ விபத்து: பலி எண்ணிக்கை உயர்வு
எதிர்ப்புகளை மீறி சாதித்துக்காட்டிய ஈரான்
லண்டன் மெட்ரோபொலிடன் பல்கலையின் உரிமம் ரத்து
அஜ்மல் கசாப் தூக்கிலிடப்படுவது எப்போது?

இணையத்தில் வெளியாகிய சிரிய அரசின் மனிதப் படுகொலைப் புகைப்படங்கள்

சிரியாவில் மோதல்கள் உக்கிரமடைந்துவரும் சந்தர்ப்பத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட  சுமார் 300 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


அரசாங்கப் படையினராலேயே இவர்கள் படுகொலைசெய்யப்பட்டுள்ளதாகவும், கொல்லப்பட்டவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவதாக சிரியப் போராளிகள் தெரிவித்துள்ளனர்.

 ddd

தமிழ் சினிமா

நான்

விஜய் ஆன்டனி நடித்து தயாரித்திருக்கும் படம் நான். இவரது இசையில் 25வது படமாக வெளிவந்திருக்கிறது.
தனது அம்மாவும் மாமாவும் தவறாக நடந்து கொள்வதை சிறு வயதிலேயே பார்த்துவிடுகிறான் கார்த்திக். இதை அப்பாவிடம் சொல்ல அவரோ தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்கிறார்.
அம்மாவையும் மாமாவையும் வீட்டோடு தீக்கிரையாகிவிடும் கார்த்திக்கை, பொலிஸ் சீர் திருத்தப் பள்ளியில் அடைக்கிறது. தண்டனை காலம் முடிந்து வெளியே வரும் போது இளைஞனாகியிருக்கிறான்.
தனது சித்தப்பாவீட்டிற்கு அவன் போக கொலைகாரன் என்கிறாள் சித்தி. அதைக் கேட்டு அங்கிருந்து கிளம்பும் கார்த்திக் சென்னை போவதற்காக வண்டி பிடிக்கிறான். அந்த பேருந்து விபத்தில் சிக்குகிறது. தனது அருகில் உட்கார்ந்து பயணம் செய்த மெடிக்கல் கல்லூரியில் சேருவதற்காக சென்னை செல்லும், சலீம் அந்த விபத்தில் இறந்துவிட, சலீமின் பெட்டியையும் பையையும் எடுத்துக் கொண்டு சென்னை போகிறான் கார்த்திக். தனது பெயரை மாற்றிக் கொண்டு சலீமாக மருத்துவக் கல்லூரியில் சேருகிறான். அங்கு அதன் பிறகு சந்திக்கும் பிரச்சனைகளும் அதிலிருந்து எப்படி மீள்கிறான் என்பதை முழு நீளப் படத்தில் விரிவாக சொல்கிறது நான்.
படம் துவங்கிய சில நிமிடங்கள்… அதாவது, கார்த்திக் அவன் அம்மாவையும் மாமாவையும் தீவைத்துக் கொழுத்தி விடுவது ரசிகர்களை இழுத்து சீட்டோடு உட்கார வைத்துவிடுகிறது. அதே போல கடைசி காட்சியில் வரும் க்ளைமேக்ஸ் நம் மனதையே உருக்கிவிடுகிறது. இடைப்பட்ட காட்சிகள், சலீமாக மாறும் கார்த்திக்… அதற்கு எடுத்துக் கொள்ளும் முயற்சிகள். கல்லூரியில் அவனுக்கு கிடைக்கும் நண்பன், கடைசியில் அவனையே எதிர்பாராத விதமாக கொலை செய்துவிடும் சலீம். அடுத்து இன்னொரு கொலை… அடுத்து என்ன நடக்குமோ என்கிற ரீதியில் படத்தை நகர்த்திச் செல்கிறது திரைக்கதை.
ஆன்டனிக்கு இது முதல் படமாம் நம்ப முடியவில்லை. எப்போதும் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டிருக்கும் அவர் கார்த்திக் சலீம் கதாபாத்திரத்திற்கு நன்றாகவே பொருந்தியிருக்கின்றார். புகைப்படத்துக்காக நண்பனை விரட்டிச் செல்லும் போதும், எதிர்பாராதவிதமாக நண்பன் கீழே விழுந்து அடிபட்டு இறந்து விட, ஓ… என உரக்க அழும் காட்சிகளிலும் விஜய் ஆண்டனி சிறப்பாக நடித்திருக்கின்றார்.
விஜய் ஆன்டனிக்கு நண்பனாக வருகிறார் சித்தார்த். இவருக்கு ஜோடியாக வருகிறார் ரூபா மஞ்சரி. நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த படத்தில்தான் நடித்திருக்கிறார். மக்கஎல பாட்டுக்கு இவர் போடுகிற நடனம் இருக்கிறதே… அடேங்கப்பா… ரூபாவின் நடிப்பும் அவரது அழகும் கூடியிருக்கிறது.
அனுயாவும் படத்தில் இருக்கிறார். சில காட்சிகள் மட்டுமே வந்து போகிறார். இன்னொரு அழகான புதுமுக நடிகையும் படத்தில் வருகிறார்.
படத்திற்கு இசை விஜய் ஆன்டனி. தான் நடிகராக அறிமுகமாகும் படம் என்பதாலும், தனது 25வது படம் என்பதாலும் கொஞ்சம் ஸ்பெஷலாகவே இசையை போட்டுத் தாக்கியிருக்கிறார். உலகினில் மிக உயரம்… செம டச்சிங்கான பாடல். மக்கஎல மக்கஎல பாடல் ஆட்டம் போட வைக்கிற ரகம். இனிமேல் பல பப்களில் இந்த பாடலுக்குதான் மவுசு. ‘தப்பெல்லாம் தப்பே இல்லை…’ பாடல் தத்துவ பாடல் போல் வருகிறது.
நான் படத்தை எழுதி இயக்கியிருப்பவர் ஜீவா சங்கர். இவர் மறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர். முதல் காட்சியில் ரசிகர்களை மிகவும் கவர்ந்திருக்கின்றார் ஜீவா சங்கர். க்ளைமேக்ஸில் செம டச்சிங்கான சீனை வைத்து நம்மை அப்படியே மௌனமாக்கிவிடுகிறார்.
நன்றி விடுப்பு