ஈழத்தின் பன்முக ஆளுமை யோகா பாலச்சந்திரன் நினைவேந்தல்

 யோகா பாலச்சந்திரன், ஈழத்துப் பெண்


எழுத்தாளராக, பத்திரிகையாளராக,  
வானொலி ஒலிபரப்பாளராக, சமூகச் செயற்பாட்டாளராக இயங்கிய இவர் கடந்த மே 18, 2023 தான் வாழ்ந்து வந்த கனேடிய மண்ணில் காலமானார்.


யோகா பாலச்சந்திரன் குறித்த நினைவுப் பகிர்வை அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக்
கூட்டுத்தாபனத்துக்காக எழுத்தாளர் லெ.முருகபூபதி அவர்கள் வழங்கிய பகிர்வு




மூத்த கலை, இலக்கியவாதி , ஊடகர் யோகா பாலச்சந்திரன் கனடாவில் மறைந்தார் முருகபூபதி

“ கலையோ இலக்கியமோ எதுவானாலும்,மானுட மேம்பாடு கருதியே


படைக்கப்படுதல் வேண்டும் என்பது என் கட்சி. இதனை கலை, இலக்கிய சிருஷ்டியாளர்கள் தமது தார்மீகக் கடப்பாடாக கொள்வதே நியாயமென நினைக்கிறேன். இந்த அடிப்படையில்தான், வெறும் கதா இரசனைக்காக  வரட்டுக் கற்பனாவாதமாக கதை பண்ணாமல், அன்றாடம் நான் சந்திக்கும் சமூகப் பிரச்சினைகளை யதார்த்த ரீதியில் இனம் காட்டுமுகமாக புனைகதைத் துறையை நாடலானேன். இதனால் மகத்தாக எதையோ சாதித்துவிட்டேன் என்றோ, சாதிப்பேன் என்றோ, நான் மனப்பால்

குடிக்கவில்லை. எனினும்,
 ஏதோ ஒரு தாக்கத்தினை எதிரொலியை ஒரு சிறு நெருடலை என் கதைகள், என்றோ எப்போதோ எவரிடமோ ஏற்படுத்துமேயானால், ஶ்ரீராமசேனையின் சேதுபந்தன உருவாக்கத்தில் பங்குகொண்ட சிறு அணிலைப்போல ஆனந்தமடைவேன் 

இவ்வாறு 1983 ஆம் ஆண்டு இலங்கைத் தலைநகரில் கலவரம் வெடிப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் -  மார்ச்சில் யுகமலர் என்ற தனது கதைத்தொகுதியை வெளியிட்ட எங்கள் ஈழத்து இலக்கிய குடும்பத்தின் மூத்த சகோதரி யோகா பாலச்சந்திரன் கனடாவில் கல்கரி மாநகரில்  இம்மாதம் 18 ஆம் திகதி மறைந்துவிட்டார்.


“ எனது தாயகத்தின் மண்ணோடு மண்ணாக என்னுடல் கலக்க வேண்டும். அகண்ட பாரதத்தின் பரந்து விரிந்த வயல்களுக்கு, என் எலும்புகளும், நரம்புகளும் உரமாக வேண்டும் ” என்று கூறியவர் ஆசிய ஜோதி பண்டிட் ஜவஹர்லால் நேரு என்பது பலருக்குத் தெரியும். ஆனால்,  நேருஜிக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே ஒரு செந்தமிழ் வீரன், “சுதந்திர இந்தியாவில் - நாஞ்சில் தமிழகத்து வயல்களிலும், கரமனை ஆற்றிலும் என் அஸ்தியைத் தூவ வேண்டும்.” என்று கூறினான் என்பது எத்தனை பேருக்குத் தெரியுமோ?

பல்வேறு காரணங்களின் அடிப்படையில் வரலாறு கூறும் உண்மைகள் பல உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாததொன்று. அதிலும் தமிழினத்தைப் பொறுத்த வரையில், இந்த சூதாட்டம் நினைவிற்கப்பாற்பட்ட காலந் தொட்டு நிலவிவரத்தான் செய்கிறது. எனினும் நீண்ட காலம் புதை குழிக்குள் இருக்கக் கூடியதல்ல சத்தியம். அது உலகுக்கு வெளிப்படும் போதெல்லாம், விஸ்வரூபத்திலேயே மக்கள் அதைத் தரிசிக்கின்றனர். அப்படி ஒரு தரிசனம தான். இந்த மாவீரன் டாக்டர் செண்பகராமன் வரலாறு.

சிலப்பதிகார விழா சிட்னி - 27/05/2023 மாலை 6:00

 



























May மாதம் 27ம் திகதி சிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள  மண்டபத்தில்  மாலை 6 மணிக்கு  நடைபெறவிருக்கும் சிலப்பதிகாரவிழாவின் போது,  மாலை 7 மணிக்கு  திருக்குறள் மனனப் போட்டி - பரிசளிப்பு நிகழ்ச்சியும், ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான சைவ சமய அறிவுப் போட்டிகளுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சியும்   நடைபெற உள்ளது என்பதை அறியத் தருகின்றோம். 

செந்தமிழ் சேக்கிழார் செப்பினார் மாக்கதை !


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ..... அவுஸ்திரேலியா 



பலமொழிகள் உலகிருக்கு பக்தியினைப் பாரா

பக்தியினை உள்வாங்க நினைப் பதுவுமில்லை
தமிழன்னை பக்தியினை தானேந்தி நின்றாள்
நிலவுலகில் பக்தியினை நிறுத்தியதே தமிழும்

கம்பனொடு இளங்கோவும் கன்னித் தமிழணைத்தார்

வள்ளுவரும் வள்ளுவத்தை வழங்கிட்டார் தமிழில்
சங்கத்தமிழ் தமிழுக்கே தங்கத் தமிழாகும்
சேக்கிழார் செழுந்தமிழோ பக்தித் தமிழாகும்

பக்தியினைப் பொருளாக்கிப் பாடினார் அவரும்


பரமனடி பணிந்தாரை பலரறியச் செய்தார்
சொத்தெனவே பக்தியினை சேக்கிழார் கொண்டார்
சுந்தரத் தமிழெடுத்து சுவையாக ஈந்தார்

தேமதுரத் தமிழில் தேவாரம் இருக்கிறது

தித்திக்க தித்திக்க திருவாசக மினிக்கிறது 
அத்தனையும் சேக்கிழார் அகத்தி லமர்த்தினார்
அரனடியார் பக்தியே அவர்கருவாய் ஆகியது

சோழரின் அமைச்சர் சுந்தரமாம் வாழ்க்கை

ஆளணிகள் நிறைவு அதிகாரம் ஆளுமை
சேக்கிழார் மனத்தைத் திசைமாற வைக்கவில்லை
எம்பிரான் எண்ணமே ஏற்றதவ ருள்ளமே

பட்டை பகட்டை தொட்டுவிடா மனமவர்க்கு
பரமனைப் பக்தியை இருத்திட்ட மனமவர்க்கு
உலகுய்ய உலகெலாம் அடியெடுத்தார் சேக்கிழார் 
உமைபாகன் அடியாரை உரைத்திட்டார் காவியமாய்  

அமைச்சராய் இருந்தார் அறவழி நடந்தார்
ஆணவம் மேலிடும் அரசினைக் கடிந்தார்
அரனது அடியார் அன்பினைச் சொன்னார்
ஆணவ அரசின் போக்கினை மாற்றினார்

போரும் வெற்றியும் இன்பமே அல்ல 

இறையது நினைப்பே என்றுமே இன்பம் 
குறையுடை வாழ்வினை ஒழித்திடல் வேண்டும்
புவியதில் நிறைவு இறையது வழியே 

முதல் சந்திப்பு மே 22 – தெணியான் முதலாம் ஆண்டு நினைவு தினம் நினைவுகளில் வாழும் ஈழத்தின் மூத்த முற்போக்கு எழுத்தாளர் தெணியான் ( 1942 – 2022 ) முருகபூபதி


சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் (  1970 களில் ), மல்லிகை இதழில் தெணியானின் எழுத்துக்களை படித்துக்கொண்டிருந்தேன்.

1973 ஆம் ஆண்டு அவரது விடிவை நோக்கி நாவல், வீரகேசரி பிரசுரமாக வெளிவந்தது. அச்சமயம் நான் வீரகேசரியின் நீர்கொழும்பு பிரதேச நிருபர்.

எமது இலக்கிய வட்டத்தின் சார்பில் இந்த நாவலுக்கு எங்கள் ஊரில்


ஒரு அறிமுகவிழாவை ஏற்பாடு செய்வதற்கு , மல்லிகை ஜீவா மூலம் தெணியானுக்கு தகவல் அனுப்பியிருந்தேன்.

தெணியான் தன்னுடன் இரண்டு நண்பர்களை அழைத்து வந்திருந்தார். அவர்கள்:  கிளார்க்கர் அய்யா என்ற இராஜேந்திரம்,  சதானந்தன் மாஸ்டர். எங்கு சென்றாலும் இவர்கள் மூவரும் ஒன்றாகத்தான் பயணிப்பார்கள் என்ற செய்தியையும் அப்போது அறிந்துகொண்டேன்.

வதிரியைச் சேர்ந்த அன்பர் சதாசிவம், எங்கள் ஊரில் பூட் எம்போரியம் என்ற பாதணிக்கடையை நடத்திவந்தார். வடமராட்சியிலிருந்து வந்த மூவரும் சதாசிவம் வீட்டில் தங்கியிருந்தனர்.

விடிவை நோக்கி அறிமுகவிழா, எங்கள் ஊரில்,  1966 இல் அண்ணி என்ற இலக்கிய இதழை நடத்திய,  உறவு முறையில் எமது மாமாவான அ. மயில்வாகனன்  தலைமையில் நடந்தது.

கொழும்பிலிருந்து இலக்கிய ஆர்வலர் எம். கிஸார், தனது காரில் மல்லிகை ஜீவா, மு. கனகராஜன், தெளிவத்தை ஜோசப் ஆகியோரை அழைத்து வந்தார்.

அந்த விழா வெகுசுவாரசியமாக நடந்தது.

அதனைப்பற்றி அடுத்த வாரம் வெளிவந்த தேசாபிமானியில்        ( கம்யூனிஸ்ட் கட்சியின் ஏடு )  மு. கனகராஜன் எழுதியிருந்தார்.  இவ்வாறு தெணியானுடன் 1973 ஆம் ஆண்டு தொடங்கிய இலக்கிய நட்புறவு , சகோதர வாஞ்சையாக வளர்ந்தது.

கடந்த ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி அவர் மறைந்தார். ஆண்டுதோறும் அவரது பிறந்ததினம் வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி முடிந்தவரையில் அவருக்கு வாழ்த்துக் கூறுவதும் எனது கடமையாக இருந்தது.

கந்தையா நடேசன் என்ற இயற்பெயர்கொண்டிருந்த  தெணியான்,  ஈழத்தின் மூத்த  இலக்கிய  ஆளுமை.
பொலிகண்டியில் கந்தையா - சின்னம்மா தம்பதியருக்கு          06-01-1942 இல் பிறந்த நடேசன் , இலக்கிய உலகில் பிரவேசித்ததும் தெணியான் என்ற பெயரில் எழுதத்தொடங்கி,  அதுவே நிலைத்துவிட்டது.

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் 65 இலக்கியப் பயணத்தில் இணைந்து வந்தவர்களும் ஊக்கமளித்தவர்களும் ! “ சுமையின் பங்காளிகள் “ சுகமான அனுபவம் ! ! முருகபூபதி


பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், மலேசியா  சென்று மெல்பன் திரும்பியபோது, அந்தப்பயணத்தில் சந்தித்த இலக்கிய அன்பர்களின் ஒரு வேண்டுகோளை கவனிக்கவேண்டியிருந்தது.

சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் நான் இலக்கியவாதிகளையும் நூலகர்களையும் ஊடகவியலாளர்களையும் சந்தித்தபோது எனது வசம் எனது நூல்கள் எவையும் இருக்கவில்லை.

மாமனாரின் இறுதி நிகழ்வுக்கு சென்றமையால்,  இலக்கிய


அன்பர்களை சந்திக்கும் யோசனையுடன் புறப்படவுமில்லை.

எனது முதலாவது கதைத் தொகுதி சுமையின் பங்காளிகள் தொகுதியின் பிரதிகளும் என்னிடமிருக்கவில்லை.

மலேசியா நண்பர் பீர் முகம்மது, அதன் இரண்டாவது பதிப்பினை அச்சிடுமாறு சொன்னார். முதல் பதிப்பிற்கு இலங்கையின் பிரபல ஓவியர் ரமணிதான் முகப்போவியம் வரைந்தார்.

அதனை அவர் எனக்கு வரைந்து தரும்போது கொழும்பில் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார்.

அக்காலப்பகுதியில் அவர் பல எழுத்தாளர்களுக்கும் மல்லிகை ஜீவாவுக்கும் முகப்பு படங்கள் வரைந்து கொடுத்துக்கொண்டிருந்தார்.

அவ்வேளையில் வெள்ளீய எழுத்து அச்சுக்கள் கோர்த்து,  ஓவியங்கள் புளக் செய்யப்பட்டு நூல்கள் அச்சிடப்பட்டன.

அந்த நடைமுறை காலப்போக்கில் இல்லாமல்போனதனால் உலகெங்கும் பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்தனர். வீரகேசரியில் பணியாற்றிய பல அச்சுக்கோப்பாளர்கள், புளக் செய்பவர்கள், பக்க வடிவமைப்பாளர்கள் வேலை இழந்தனர்.

கணினியின் வருகை பலரது வயிற்றில் அடித்தது.  அவர்கள் வேறு வேறு தொழில்களை தேடிச்சென்றனர்.

1990 இற்குப்பின்னர் பத்திரிகைகளும் நூல்களும் கணினியை நம்பியிருக்கவேண்டியதாயிற்று.

1999 ஆம் ஆண்டு இலங்கை சென்றிருந்தபோது,  எங்கள் ஊரில் ஆசிரியராக பணியாற்றிக்கொண்டே வீரகேசரி பிரதேச நிருபராகவும் இயங்கிக்கொண்டிருந்த ஒருவர் என்னைத்தேடி வந்தார்.

ஒரு புறம் கஞ்சி, மறுபுறம் கலயம் இரண்டுக்கும் நடுவே பதினான்கு வருடங்கள் ! அவதானி


இறுதிப்போர் முடிந்து 14 வருடங்களின் பின்னர், புதிதாக வந்துள்ள இலங்கை அதிபருடன் தமிழ்க் கட்சிகள் பேசத்தொடங்கிய காலப்பகுதியில் வடக்கிலும், கிழக்கிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சியை , அந்தப் போரில் பாதிக்கப்பட்ட உறவுகளும், தன்னார்வத் தொண்டர்களும் மக்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தார்கள்.

முள்ளிவாய்க்கால் கொடுந் துயரத்தை நினைவேந்தவிடாமல்


தடுத்துக்கொண்டிருந்த முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்‌ஷவை விரட்டும் காலிமுத்திடல் அறப்போராட்டத்தின்போதும்,  கடந்த ஆண்டு இதே மாதம் அங்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி மக்களுக்கு வழங்கப்பட்டது.

அத்துடன் இன்றைய அதிபர் அமைச்சராகவும் இவரது  மாமனார் ஜே.ஆர். ஜெயவர்தனா  அதிபர் பதவியிலுமிருந்த காலப்பகுதியில் எரிக்கப்பட்ட யாழ். பொது நூலகம் குறித்தும் காலிமுகத்திடலில் நினைவுகூரப்பட்டது.

அவ்வேளையில் அங்கு தோன்றிய சுவடுகளை முற்றாக அழித்துவிட்டு, இந்த ஆண்டு பெப்ரவரிமாதம் 04 ஆம் திகதி இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையுடன் காலிமுகத்திடலை மாற்றினார் இன்றைய அதிபர்.

மீண்டும் அங்கே எவரும் போராட்டம் நடத்தமுடியாதவகையில் சட்டங்களை இறுக்கமாக்கினார், இந்த அதிகார வர்க்கத்தின் பிரதிநிதி.

இவர் பிரதமராகவும் மைத்திரிபால சிறிசேன அதிபராகவும் இருந்த காலப்பகுதியில் இவர்களுடன் தேன் நிலவுகொண்டாடிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர், அவ்வேளையில் பெற்றுக்கொண்டிருக்கக்கூடிய எந்தவொரு தீர்வையும் அடையாமல் இருந்துவிட்டு, தற்போது பேச்சுவார்த்தைக்கு  வந்தனர்.

இவர்கள் தலைநகரில் பேச்சுவார்த்தையில் இழுபறிப்பட்டுக்கொண்டிருந்தபோது வடக்கிலும் கிழக்கிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாரப்பட்டுக்கொண்டிருந்தது.

ஒரு குடும்பத் தலைவனுக்கோ, தலைவிக்கோ தமது குடும்பத்தின் தேவை என்ன..?  என்பது நன்கு தெரிந்திருக்கும். பிள்ளைகள் அவர்களை நம்பி வாழ்பவர்கள். சுயமாக தங்கள் கால்களில் நிற்கும் வரையில் அவர்கள் தமது பெற்றோரின் தயவில்தான் தமது தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்கு முயற்சிப்பார்கள்.

ஒரு நாட்டின் அதிபரும் பிரதமரும் குடும்பத்தலைவன் – தலைவிக்கு ஒப்பானவர்கள்.

அரைநூற்றாண்டுக்கு மேல் அரசியல் அனுபவம் மிக்க சமகால அதிபருக்கும் பிரதமருக்கும்,  இலங்கையில்  பிழையான அரசியல் நடைமுறைகளினால் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கும் மூவின மக்களுக்கும் என்ன தேவை?  என்பது  தெரியாமலா இருக்கிறது.?

இதுவரையில் தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக எத்தனை பேச்சுவார்த்தைகள் நடந்துவிட்டன.

தொடர்ந்தும்  ஏமாற்றியமையால்தான், சிங்களவர் தரப்பிலும் தமிழர் தரப்பிலும்  தோன்றிய இளம் தலைமுறையினர்  ஆயுதங்களை  நம்பி களத்தில் இறங்கினர்.

1971 இல் சிங்கள இளைஞர்களின் கிளர்ச்சியை அடக்குவதற்கு இந்தியா உதவ முன்வந்தது போன்று, 2009 இறுதி யுத்தத்தின்போதும் அதனை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இந்தியா முன்வந்தது.

அதனால்தான்,   அந்த யுத்தத்தை நடத்தியது இந்தியாதான்  “ என்று முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்‌ஷ தொடர்ந்தும் சொல்லி வந்தார்.

நிறைவேற்று அதிகாரம் மிக்க பதவியிலிருந்த ஜே. ஆர். ஜெயவர்தனா, தனது உட்கட்சி வெறுப்பையும் சம்பாதித்துக்கொண்டே அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் ஒப்பந்தம் செய்துகொண்டார்.

அதனை எதிர்த்தவரும், அந்த ஒப்பந்தத்தில் இந்தியத் தரப்பில் கைச்சாத்திட்டவரும் இறுதியில் யாரால், எவ்வாறு கொல்லப்பட்டனர்?  என்பதை மீண்டும் இங்கு நினைவுபடுத்தவேண்டிய அவசியம் இல்லை.

பேச்சுவார்த்தை என்பது காலத்தை கடத்தும் ஒரு வகை உத்தி என்பது எமது தமிழ்த்தலைவர்கள் உட்பட சாதாரண மக்களுக்கும் தெரியும்.

தமிழ்த்தலைவர் சம்பந்தன் ஐயா  அவர்களுக்கு 90 வயதாகிவிட்டது. அவருடைய ஆயுள் காலத்திற்குள்ளேயே இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுவிட வேண்டும் என்ற குரல்களும் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.

முதல் சந்திப்பு: இருவரின் வாழ்க்கையை திசை திருப்பிய பத்திரிகையாளர் ஆ. சிவநேசச்செல்வன் ! முருகபூபதி


ஒருவரின் வாழ்க்கையை விதிதான் தீர்மானிக்கின்றது என்பார்கள்.  அந்த விதி,  சில சமயங்களில் மற்றும் ஒரு நபரால் தீர்மானிக்கப்பட்டுவிடும்.

அவ்வாறுதான் எனது எழுத்துலக வாழ்விலும் விதி  விளையாடியது.  1970 களில் சிறுகதை எழுதிக்கொண்டிருந்த என்னை,  வீரகேசரி பத்திரிகை நிறுவனம்,  முதலில் பிரதேச நிருபராகவும், பின்னர் 1977 இல் தலைமை அலுவலகத்தில் ஒப்புநோக்காளராகவும், 1984 இல் துணை ஆசிரியராகவும் மாற்றியது.

இந்த வளர்ச்சியில் என்னை துணை ஆசிரியராக்கிய பெருமை


வீரகேசரியின் முன்னாள் பிரதம ஆசிரியர்                                                       ஆ. சிவனேசச்செல்வனையே சாரும்.

இவரை ஆசிச்செல்வன் எனவும் அழைப்பர்.

முதல் முதலில் 1976 ஆம் ஆண்டு பேராசிரியர் க. கைலாசபதி முதல் தலைவராக அமர்ந்த யாழ். பல்கலைக்கழக வளாகத்தில்தான் சந்தித்தேன்.

அக்காலப்பகுதியில் தமிழ் நாவலுக்கு நூற்றாண்டு பிறந்திருந்தது.

பல  தமிழ் நாவலாசிரியர்களை உருவாக்கிய தமிழ்நாடே இந்த நூற்றாண்டை மறந்திருந்தபோது, பேராசிரியர் கைலாசபதி, தனது தலைமையில் அந்த நூற்றாண்டை இரண்டு நாள் ஆய்வரங்காக யாழ். பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்திருந்தார்.

அச்சமயம் நான் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகத்தில் முழுநேர ஊழியனாக பணியாற்றிக்கொண்டிருந்தேன்.

அதற்கு உறுப்பினர்களை சேர்க்கவேண்டும் என்பதற்காக சங்கத்தின் செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரன் என்னை குறிப்பிட்ட ஆய்வரங்கிற்கு அனுப்பிவைத்திருந்தார்.

பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்த நண்பர் எம். ஏ. நுஃமான் என்னை தன்னோடு அந்த நாட்களில் தங்க வைத்துக்கொண்டார்.

நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கு தொடங்குவதற்கு முதல் நாள் நல்லூரில் ஒரு மண்டபத்தில் அந்த ஆண்டு தேசிய சாகித்திய விருது பெற்ற செங்கை ஆழியானுக்கு யாழ். இலக்கிய வட்டம் ஒரு பாராட்டுக் கூட்டத்தை நடத்தியது. நண்பர் மல்லிகை ஜீவாவுடன் சென்றிருந்தேன்.

அந்தக்கூட்டத்திற்கு நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கிற்காக கைலாசபதியால் தமிழ் நாட்டிலிருந்து அழைக்கப்பட்டிருந்த இலக்கிய படைப்பாளி அசோகமித்திரனை இரண்டுபேர் ஒரு காரில் அழைத்து வந்தனர்.

அவர்கள் ஆசிச்செல்வனும் விரிவுரையாளர் சோ. கிருஷ்ணராஜாவும் என்று மல்லிகை ஜீவா எனக்கு அறிமுகப்படுத்தினார்.

கொடுத்து வைத்தவள் - ஸ்வீட் சிக்ஸ்டி - ச சுந்தரதாஸ்

 தமிழ் சினிமா உலகில் பி எஸ் சரோஜா, எம் சரோஜா , சரோஜாதேவி என்று ஓரே கால கட்டத்தில் பல சரோஜாக்கள் நடித்துக் கொண்டிருந்த போது தனது நடனத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்திழுத்தவர் இ வி சரோஜா. இவருடைய நடனத்துக்கு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் அன்று மயங்கி இருந்தனர். மதுரை வீரனில் இவர் ஆடி நடித்த வாங்க மச்சான் வாங்க வந்த வழிய பார்த்து போங்க பாடலும் குலேபகாவலி படத்தில் இவர் நடனமாடி நடித்த லா சொக்கா போட்ட நவாபு செல்லாது உங்க ஜவாபு பாடலும் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகின. இந்த சரோஜா 1961ம் ஆண்டு இயக்குனர் டி ஆர் ராமண்ணாவை திருமணம் செய்து தான் கொடுத்து வைத்தவள் என்று மகிழ்ச்சி அடைந்தார். அதே கையேடு அவரின் சகோதரர் இ வி ராஜன் படத்தயாரிப்பாளராக மாறி படம் ஒன்றை தயாரித்தார். அந்த படம் தான் கொடுத்து வைத்தவள்.


இந்தப் படத்தில் கதாநாயகியாக இ வி சரோஜா நடிக்க , ஹீரோவாக
எம் ஜி ஆர் நடித்தார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் படத்தின் கதை அமைக்கப்பட்டது. கட்டட என்ஜனியரான செல்வம் தொழில் விஷயமாக காஷ்மீர் பயணமாகிறான். வழியிலேயே அவனை தீர்த்து கட்ட அவனில் முதலாளி ஜம்பு ஒரு முரடனை அனுப்புகிறான். அவனுடன் ஏற்படும் மோதலில் செல்வம் உயிர் தப்பினாலும், அவனுக்கு சித்த சுவாதீனம் ஏற்பட்டு விடுகிறது. அனாதை பெண்ணான மீனா
அவன் மீது பரிவு காட்ட, ஒர் இக்கட்டான சூழலில் இருவருக்கும் கல்யாணம் நடந்து விடுகிறது. ஆனால் சில நாட்களிலேயே செல்வம் அவளை பிரிந்து , பின்னர் வைத்தியம் செய்யப்பட்டு , பழைய நிலைக்கு திரும்பி விடுகிறான். எத்தேச்சையாக மீனா அவனை மீண்டும் சந்திக்கிறாள். ஆனால் செல்வத்துக்கோ அவளை அடையாளம் தெரியவில்லை. அவளை பொறுத்த வரை அவள் வாழ்வில் அவன் ஒரு ‘மூன்றாம் பிறைதான்’ .

இவ்வாறு அமைத்த படத்தின் கதையை இயக்குனரான தாதாமிராசி எழுதியிருந்தார். வசனத்தை மற்றொரு இயக்குனரான ப . நீலகண்டன் எழுதினார் . சிறந்த வசனகர்த்தாவாக அடையாளம் காணப்பட்ட நீலகண்டன் எம் ஜி ஆரின் படங்களை இயக்க ஆரம்பித்த பின் வசனம் எழுதுவதை நிறுத்தி விட்டார். ஆனாலும் இந்தப் படத்துக்கு அவர் வசனங்களையும் எழுதி , படத்தையும் இயக்கி இருந்தார். வசனங்கள் சிறப்பாகவும் , அளவுடனும் அமைத்திருந்தன. நானே ஊரை ஏமாத்துறவன், நான் உற்பத்தி பண்ணின பயல் என்னையே ஏமாத்துறான் என்று எம் ஆர் ராதா சொல்லும் போது கொட்டகையே அதிர்கிறது. படத்தை தொய்வில்லாமல் இயக்கியிருந்தார் நீலகண்டன்.

கண்ணதாசனின் என்னம்மா சவுக்கியமா எப்படி இருக்குது மனசு, பாலாற்றில் சேலாடுது இரண்டு டூயட்டுகளும் இனிமையாக அமைந்தன. ஏ மருதகாசி இயற்றிய நீயும் நானும் ஒன்று பாடல் கதையுடன் மிக பொருந்தி சுசிலா குரலில் உருக்கமாக ஒலித்தது. கே வி மகாதேவனின் இசை ரசிக்கும் படி அமைந்தது. ஜி துரை படத்தை ஒளிப்பதிவு செய்தார். சையத் அஹம்மத் கலை இயக்குனராக செயற்பட்டு தன் திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.

இலங்கைத் தமிழர்களுக்கான நலன் விரும்பிகள் அமைப்பு

  Well Wishers of Tamils in Sri Lanka (WWTS) 

 “ இந்த  ஆண்டு ( 2023 ) இறுதிக்குள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண


சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு உலகின் எந்தப் பகுதியிலும் வாழும் அனைத்துத் தமிழர்களும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும். முக்கிய விடயங்களைத் தொகுத்து, இந்த முக்கியமான பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்க புலம்பெயர் மக்களை அழைக்க விரும்புகிறோம். 

இவ்வாறு இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர்களுக்கான அரசியல் உரையாடல், ஒற்றுமை, ஸ்திரத்தன்மை மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக உலகளாவிய நலன் விரும்பிகளால் புதிதாக உருவாக்கப்பட்ட அமைப்பின் செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது.

 

இந்த  அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான அவுஸ்திரேலியாவில்


வதியும் திரு. இராஜரட்ணம் சிவநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

புலம்பெயர் தமிழர்களில் பெரும்பாலானோர் இலங்கையின் உள்நாட்டு  அரசியலில் தலையிட ஆர்வம் காட்டவில்லை என நாங்கள் நம்புகிறோம். அவர்கள் தங்கள் குடும்பங்களின் நல்வாழ்வு மற்றும் அவர்களின் செழிப்பு, குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் உண்மையான அக்கறை கொண்டுள்ளனர்.


ஏற்கனவே புலம்பெயர் சமூகம் தனிநபர்களாகவும் சிறு சமூக அமைப்புகளாகவும் பல வழிகளில் பங்களித்து வருகின்றது. புலம்பெயர் நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
இருப்பினும், நிரந்தரமான மற்றும் நிலையான பொருளாதார முதலீட்டுத் திட்டங்களான சிறு தொழில் தொடங்குதல், தொடர்ச்சியான வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் புதுமையான கல்வி நிறுவனங்கள் ஆகியவை குறைவாகவே உள்ளன.

விடுமுறை இல்லங்களை கட்டுவதற்கான வாய்ப்புகள் மற்றும் அவர்களின் ஓய்வு காலத்தில் அதிக நேரத்தை செலவிடுவதற்கான ஊக்கத்தொகைகள் குறைவு.
ஒரு சில பெரிய முதலீட்டாளர்கள் சில பொருளாதார நடவடிக்கைகளிலும் தொண்டு பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் பெரும்பாலான புலம்பெயர்ந்தோர் 1980 மற்றும் 1990 களில் இலங்கையை விட்டு வெளியேறி தற்போது ஓய்வு பெற்றுள்ளனர்.  அல்லது ஓய்வு பெற உள்ளனர். அவர்கள் நிரந்தரமாக இலங்கைக்கு திரும்ப வாய்ப்பில்லை ஆனால் அதிக நேரத்தை அங்கேயே செலவிட விரும்புகிறார்கள்.

இலங்கைச் செய்திகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு 

கிழக்கு ஆளுநராக செந்தில் தொண்டமான் கடமைகளை பொறுப்பேற்றார்

கிழக்கு ஆளுநராக பதவியேற்ற செந்தில் தொண்டமான் திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் வழிபாடு

வடக்கு, கிழக்கு மற்றும் வடமேல் மாகாண ஆளுநர்களாக இன்று சத்தியப்பிரமாணம்

வடக்கு: சார்ள்ஸ்; கிழக்கு: செந்தில் தொண்டமான்; வடமேல்: லக்ஷ்மன் யாப்பா

யோகா பாலச்சந்திரன் கனடாவில் காலமானார்


முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு 

முள்ளிவாய்க்கால் நிகழ்வின் 14 வருட நினைவேந்தல் நிகழ்வுகள், இன்று கொழும்பில் நடைபெறவுள்ளன.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று காலை   10.30 மணிக்கு பொரளை கனத்தை சுற்றுவட்டத்தில் நடைபெறுமென ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

உலகச் செய்திகள்

உக்ரைனிய தலைநகரில் ரஷ்யா மீண்டும் சரமாரி வான் தாக்குதல் 

உலக வெப்பமாதல் முதல்முறையாக 1.5 செல்சியஸ் வரம்பை மீற வாய்ப்பு

எல்லை பிரச்சினை குறித்து இந்தியாவும் சீனாவும் பேச்சு

தாய்லாந்து தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி

காசா மற்றும் இஸ்ரேலுக்கு இடையே குழப்பத்துடன் போர் நிறுத்தம் அமுல்


உக்ரைனிய தலைநகரில் ரஷ்யா மீண்டும் சரமாரி வான் தாக்குதல் 

உக்ரைன் தலைநகர் கீவ் மீது இந்த மாதத்தில் எட்டாவது முறையாகவும் ரஷ்யா கடும் வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல்களில் மூவருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் (ATLAS) தமிழ் நூல்களுக்கான பரிசளிப்புத் திட்டம்


அவுஸ்திரேலியாவில் கடந்த  இருபது  வருடங்களுக்கும்  மேலாக  தமிழ்  இலக்கியம் மற்றும் கலைச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் அவுஸ்திரேலியத்  தமிழ் இலக்கிய கலைச் சங்கம், இலங்கையில், வெளியிடப்படும் தமிழ் நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டமொன்றை  கடந்த  2021 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது.

 இலங்கையில் வாழும் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்தத் திட்டம்  இயங்கிவருகிறது.   கடந்த  ஆண்டுகளில் இலங்கையில் வெளியான தமிழ் நூல்களுக்காக நடந்த தெரிவில்,  பரிசுபெற்ற எழுத்தாளர்கள் பற்றிய விபரங்கள் ஏற்கனவே ஊடகங்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டிருந்தது.

மீண்டும் இந்த பரிசளிப்புத் திட்டம்  இம்முறையும் இலங்கை தமிழ் எழுத்தாளர்களுக்கு அறிவிக்கப்படுகிறது.  

   இந்தத்திட்டம் கீழ்வரும் தேவைப்பாடுகள் மற்றும்  விதிமுறைகளைக் கொண்டு அமைந்துள்ளது.

'இலக்கியவெளி' இதழ்கள் அறிமுகமும் உரையாடலும்



நாள்:
 28.05.2023

நேரம்: ஞாயிறு மாலை 3.30

இடம்: யாழ் பொதுநூலக குவிமாடம்

 

தலைமை : .சாந்தன்

 

உரை நிகழ்த்துவோர்:

 

வடகோவை வரதராஜன்

.குகபரன்

வேல்.நந்தகுமார்

.இராஜேஸ்கண்ணன்

சின்னராஜா விமலன்

 

நன்றியுரை: அகில் சாம்பசிவம் (ஆசிரியர்இலக்கியவெளி)

 

தொடர்புகளுக்கு: 

 

சு.குணேஸ்வரன் (இணை ஆசிரியர், இலக்கியவெளி)                          0776120049

 

சி.ரமேஷ் (உதவி ஆசிரியர், இலக்கியவெளி)
0772527849

 

ஆர்வலர்களை  அன்புடன் அழைக்கிறோம்.