22/11/2017 உலக நாடுகளுக்கு மத்தியில் அனைத்து துறைகளிலும் முன்னேறி வரும் சீனா தற்போது அணுசக்தி துறையிலும் தனது வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு சீனா "டாங்பெங் - 41" என்ற ஏவுகணையை தயாரித்து சோதனை நடத்தியது. இது 12 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது.
இதன் மூலம் 10 அணுகுண்டுகளை ஒரே நேரத்தில் ஏவி தாக்குதல் நடத்த முடியும். அதோடு இவை வெவ்வேறு இலக்குகளை குறி வைத்து தாக்கும் திறன் கொண்டவை.
இதுவரை எழு முறை பரிசோதனை செய்யப்பட்டுள்ள இந்த ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் திறன் கொண்டது. தற்போது 8ஆம் முறையாக 2018 மீண்டும் பரிசோதிக்கப்பட உள்ளது.
சீன ஏவுகணை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை குறிவைத்து தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.   நன்றி வீரகேசரி