விளிப்புடன் இருக்க வேண்டும் ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா



        மண்ணிலே வாழ்கின்ற மனிதரெல்லாம்  நாளும்
image1.JPG             வாய்மையை போற்றியே வாழவேண்டும்  அவர்
        கண்ணாலே பார்க்கின்ற காட்சிகளை   என்றும் 
               கருத்துடன் மனமதில் இருத்த  வேண்டும் !

        பெண்மையை பழிக்கின்ற செயல்களை என்றுமே
             மண்ணுக்குள் புதைந்திட செய்யவேண்டும் நிதம்
        புண்படும் வகையிலே பேசிடும் போக்கினை 
              புறமெனத் தள்ளியே விடுதல் வேண்டும்  !

          அன்புடன்  பேசிடும்  ஆற்றலை  யாவரும் 
                 அகமதில் இருத்திட விரும்ப  வேண்டும் 
          அறமதை செய்திட  நினைத்திடும் பாங்கினை
                 அனைவரும் ஏற்றிட  முனைதல் வேண்டும்   ! 

          துட்டராய் இருப்பாரை காணாது  என்றுமே
                 தூங்காமல் விளிப்புடன் இருத்தல் வேண்டும் 
          முட்டியே மோதிடும் குணமதை வாழ்க்கையில்
                 வெட்டியே எறிந்துமே நிற்றல் வேண்டும்   ! 



             
               
               












1983 - இல் தமிழர்களிற்கு எதிரான வன்முறைகள் குறித்து சில குறிப்புகள்


இம்தியாஸ் ரசாக்
தமிழில் ரஜீபன்
25/07/2019 கறுப்பு யூலை எனப்படும் 1983 இல் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து பலர் நன்கு பதிவு செய்துள்ளனர்.தமிழர்களிற்கு எதிராக, சிங்கள காடையர்கள் கும்பல்கள்  இனப்படுகொலைகளை ஆரம்பிக்க முயன்றதன் காரணமாக யூலை- ஆகஸ்ட் மாதங்களில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் 1983 இல் இடம்பெற்ற அரச ஆதரவுடனான சிங்களவர்களின் கலகத்தினை நன்கு பதிவு செய்துள்ளது.
கொழும்பில் தமிழர்கள் வாழ்ந்த பல பகுதிகள் முற்றாக அழிக்கப்பட்டதுடன் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்தனர் - இந்த கலகங்களிற்கு அரசாங்கத்தின் ஆதரவு இருந்ததை ஆதாரங்கள் புலப்படுத்துகின்றன.
அரச ஊடகமான லேக்ஹவுசில் தமிழ் ஊழியர் ஒருவரை காப்பாற்றிய நபர் ஒருவர் தனது அனுபவத்தை இவ்வாறு விபரிக்கின்றார்.
கொழும்பு நகரத்தின் செல்வாக்கு மிக்க அரச அரசியல்வாதிகளின்  ஆதரவு பெற்ற குழுக்கள் தங்கள் நரபலிவேட்டையை ஆரம்பிக்க தொடங்கின.
பொலிஸாரும் படையினரும் எதனையும் செய்ய முடியாதவர்களாக காணப்பட்ட அந்த தருணத்தில்  பட்டப்பகலில் சூறையாடல்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.
எனக்கு லேக்ஹவுசிலிருந்து வாகனமொன்றை எடுத்துக்கொண்டு சென்றமை ஞாபகமிருக்கின்றது,நான் வத்தளையில் வசித்து வந்த லேக்ஹவுசின் கணக்காளர் எட்வேர்ட்டை அந்த வாகனத்தில் அழைத்து சென்றேன்,
அந்த வாகனத்தில் நாங்கள் ஐந்து சிங்களவர்கள் இருந்தோம் , நாங்கள் எங்களிற்கு மத்தியில் நடுவில் எட்வேர்டை இருக்க செய்தோம்.
ஒவ்வொரு 100 மீற்றரிலும் கத்தி போன்ற ஆபத்தான ஆயுதங்களுடன் காணப்பட்ட கும்பல்கள் எங்கள் வாகனத்தினை சோதனையிட்டன, எங்கள் வாகனத்தில் தமிழர்கள் யாராவது பயணிக்கின்றார்களா என அவர்கள் சோதனையிட்டனர்.
கொழும்பு நகரம் புகைமண்டலமாக காணப்பட்டது.

பாதுகாக்கப்பட வேண்டிய கன்னியா


27/07/2019 இலங்­கை­யொரு பௌத்த நாடு. இங்­குள்ளவர்களில் பெரும்பாலானோர் சிங்­க­ள­வர்கள். இங்கு அனைத்து மதங்­க­ளுக்கும் சம­வு­ரிமை வழங்­கப்­பட்­டி­ருந்­தாலும் இந்த நாட்டின் முழு உரிமை பௌத்­த­ருக்கே உரியது என்­பதை அனை­வரும் ஏற்றுக்கொள்ள வேண்­டு­மென்ற  பௌத்த அடிப்­ப­டை­வாதம் தலைவ™ரித்­தாடும் நிலையில் கன்­னி­யாவில் பௌத்த விகாரை அமைக்க தடை­ எனும்  உயர் நீதி­மன்றின் தீர்ப்­பா­னது நீதி இன்னும் சாக­வில்­லை­யென்பதை நிரூ­பித்துக் காட்­டு­கி­றது. 
கடந்த திங்­கட்­கி­ழமை (22.07.2019) திரு­கோ­ண­மலை மேல்­நீ­தி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழியன் கன்­னியா வெந்­நீ­ரூற்று சர்ச்சை தொடர்பில்  பிறப்­பித்திருக்கும் இடைக்­கால தடை­யுத்­த­ர­வா­னது வர­லாற்று முக்­கி­யத்­துவம்வாய்ந்தது.  அது மாத்­தி­ ரமன்றி, உலக இந்­துக்­களின் ஆன்­மீக கௌர­வத்தை காப்­பாற்­றி­யுள்ள நீதிப் பிர­க­ட­ன­மா­கவும் விளங்­கு­கி­றது. 
திருக்­கோ­ணேஸ்­வ­ரத்­துக்கு மேற்கே அமைந்­தி­ருக்கும் கன்­னியா வெந்­நீ­ரூற்று பிர­தே­ச­மா­னது ஒரு வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த இடம்.  ஒரு புனித பிர­தே­ச­மா­கவும் நூற்­றாண்டுக் காலமாக  இருந்து வந்­துள்­ளது.

வழிப் பகை - கன்பரா யோகன்


நேற்று இதே காலை ஏழு மணிக்கு  நல்ல சூரிய வெளிச்சம் இருந்தது. தேங்காய்த் துருவலை தூவிவிட்டது போல பனித் தூவல் படிந்திருந்த புல்லில் சப்பாத்துப் பட்டவுடன் கரக், கரக் என்று ஐஸ் உடைந்தது.
வெளியில் நின்ற காரை பிளாஸ்டிக் உறையினால் போர்த்து மூடிவிட மறந்து விட்டதனால் விண்ட்  ஸ்கிரீனிலிருந்த  ஐஸ் பட்டையை கழற்ற தண்ணீர் ஊற்ற வேண்டியிருந்தது. தோட்டத்து ஹோஸ்  பைப்பை இழுத்து வந்து டப்பைத் திருகினேன். தண்ணீர் ஒரு சொட்டும் வெளிவரவில்லை. பைப்பை வளைக்க உள்ளுறைந்திருந்த ஐஸ் முறியும் சத்தம்.
வீட்டுக்குப்  பின் பக்கதிலிருந்து  வாளியில் நிரம்பியிருந்த மழைத் தண்ணீரை எடுத்து வந்து ஊற்றலாமென்றால் வாளிக்குள் ஒரு சென்றி மீற்றருக்கு அது ஐஸ் தகடாயிருந்தது. அதைத்தூக்கி கொங்கிறீட்டில் எறிய கண்ணாடி சிதறுவதுபோல சிதறியது.
இன்றைய காலை முற்றிலும் வேறாய் விடிந்திருக்கிறது. ஒரு முப்பது மீற்றருக்கு மேல்  எதுவும் தெரியாத பனிப்புகார். தூரத்தே இலை  உதிரா  பைன்  மரங்கள் புகைக்குள் தொங்கிக் கொண்டிருக்கும்  கரு மேகங்களாயும்,  இலை உதிர்த்த உதிர்த்த மேப்பிள் மரங்கள் தலை கீழாகத் தெரியும் நரம்பு மண்டலமாயும் தெரிகின்றன.
பனியில் நனைந்த புல் மஞ்சலும், மண்ணிறமும் இடையிடையே  பச்சை  தூவின தோற்றம் கொண்டிருக்கிறது. சூரியன் இன்று வெளித்தெரியவேயில்லை. பதினோரு மணிக்கு மேல் மேக மூட்டம் கலைய வெளி வரக்கூடும்.  குளிர்  எப்போதும் போல பூச்சியத்திற்கு கீழேயே நின்ற ஒரு காலை தான் இதுவும்.  

மென்வலு யுத்தம்!

Published by T. Saranya on 2019-07-20 


விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கும் அரச படை­க­ளுக்கும் இடை­யி­லான ஆயுத மோதல்கள் முடி­வுக்கு வந்து பத்து வரு­டங்­க­ளா­கின்­றன. ஆனால் உண்­மையில் யுத்தம் முடி­வுக்கு வர­வில்லை. அது மறு­வ­டி­வத்தில் சிறு­பான்மை தேசிய இன மக்­க­ளா­கிய தமிழ்மக்­க­ளுக்கு எதி­ராக தொடர்ந்து முன்­னெ­டுத்துச் செல்­லப்­ப­டு­வ­தையே உணர முடி­கின்­றது. 
ஆனால், இது ஆயு­த­மேந்­திய யுத்­த­மல்ல. பதி­லாக மென்­வலு சார்ந்த யுத்தம்.  ரத்தம் சிந்­தா­தது. எனினும் மோச­மா­னது. இன அழிப்பை அப்­பட்­ட­மான நோக்­க­மாகக் கொண்­டது. அந்த வகையில் பௌத்த மதத்தைத் திணிக்­கவும், தமிழ்மக்­களின் தாயக மண்ணைக் கப­ளீ­கரம் செய்­வ­தற்­கா­கவும் இந்த மென்­வலு யுத்தம் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது. 
இதில் ஒரு பக்கத் தாக்­குதல் மட்­டுமே தீவி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. மறு­பக்கம், அந்தத் தாக்­கு­த­லுக்கு ஈடு கொடுக்க முடி­யாமல் தவிக்­கின்­றது; நிலை தடு­மாறி திகைத்து நிற்­கின்­றது. 
யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்த மஹிந்த ராஜ­பக்ஷ அர­சாங்கம் ஆயுத மோதல்­க­ளுக்குக் கார­ண­மா­ன இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காண­வில்லை.  ரா­ணுவ மய­மான ஆட்சிப் போக்கில்  அதிக நாட்டம் கொண்­டி­ருந்த அந்த அர­சாங்­கத்தைத் தோற்­க­டித்து, நல்­லாட்­சியை உரு­வாக்­கிய மைத்­திரி – ரணில் தலை­மை­யி­லான அர­சாங்­கமும் அர­சியல் தீர்வு காண­வில்லை. பிரச்­சி­னை­க­ளுக்கு முடி­வேற்­ப­டுத்­த­வு­மில்லை.
இதனால், நாட்டில் நிரந்­தர அமை­திக்­கான வழித்­த­டங்கள் உரு­வா­க­வில்லை. யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்டு உயிர் உடை­மைகள் மட்­டு­மல்­லாமல் பாரம்­ப­ரிய உறை­வி­டங்­க­ளையும், உரி­மை­க­ளையும் இழந்­துள்ள தமிழ் மக்­களின் வாழ்க்கை முழு­மை­யாக சீரா­க­வில்லை. யுத்த முடி­வுக்குப் பின்னர் ஏற்பட்­டி­ருக்க வேண்­டிய இனங்­க­ளுக்­கி­டை­யி­லான உண்­மை­யான நல்­லு­றவும், நல்­லி­ணக்­கமும், ஐக்­கி­யமும் ஏற்பட­வில்லை. 

Structures of Tamil Eelam : A Handbook 📖 நேற்றிருந்தோம் அந்த நாட்டிலே


ஈழப் போராட்டமானது அதன் தொடக்க காலத்திலேயே தமிழருக்கான சுய நிர்ணய உரிமைக்கான முன்னெடுப்பு மட்டுமன்றி, தன்னிறைவானதொரு சமூகத்தைக் 
கட்டியெழுப்ப வேண்டும் என்ற முனைப்புடனேயே இயங்கியது.
ஈழத்தில் பல்வேறுபட்ட போராளி இயக்கங்கள் நிலைபெற்றிருந்த காலத்தில் பொருண்மிய மேம்பாட்டின் அடிப்படை இலக்காக, ஈழத்தில் கிட்டும் வளங்களை முன்னுறுத்திய தொழிற் செயற்பாடுகள் தொடங்கப்பட்டன. எண்பதுகளில் அங்கு வாழ்ந்தோர் போராளி இயக்க உறுப்பினர்கள் வீடு தோறும் சென்று தும்புத்தடி, கைப்பை போன்ற பொருட்களை  விற்று வந்ததை நினைவுபடுத்தக் கூடும். ஈழத்து அஞ்சல்துறையின் முன்னோடியாக ஈழச் சின்னம் பொறிக்கப்பட்ட முத்திரைகளும் அப்போது அச்சாகின. கலை, பண்பாட்டு விடயங்களில் ஈழத்து நாட்டுக் கூத்து மரபை அடியொற்றி கொஞ்சம் நவீனம் கலந்து போர்க்கால எழுச்சிக் கருத்துகள், ஈழத்தமிழர்  காலாகாலமாகச் சந்திக்கும் கல்வித் தரப்படுத்தல்கள், அடக்குமுறைகளை வெளிக்கொணரும்  கூத்து நாடகங்கள், வீதி நாடகங்கள் போன்றவை பல்கலைக்கழக மட்டம் தாண்டி போராளி இயக்கங்களாலும் அரங்கேற்றப்பட்டன. போரியல் வாழ்வின் ஆரம்ப காலத்தில் எம்.ஜி.ஆர், விஜயகாந்த் போன்றோரின் எழுச்சிப் பாடல்களைத் தமது பிரச்சாரத்துக்குப் பயன்படுத்திக் கொண்ட போராளி இயக்கங்கள் மெல்லத் தாயகத்துக் கலைஞர்கள், படைப்பாளிகளை உள்வாங்கிய படைப்புகளை வெளிக் கொணர்ந்தார்கள். 
இவர்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைப் பொறுத்தவரை ஈழத்துக்கு இந்திய இராணுவம் வர முன்னதாக கவியரங்கங்கள், ஈழமுரசு நாளேடு, விடுதலைப் புலிகள் செய்தி ஏடு, சுதந்திரப் பறவைகள் செய்தி ஏடு, நிதர்சனம் தொலைக்காட்சிச் சேவை, தமிழீழத் திரைப்பட முயற்சிகள், தமிழகத்துப் பாடகர்களை வைத்துப் பண்ணப்பட்ட எழுச்சிப் பாடல்கள் என்று கலை, இலக்கிய முயற்சிகளிலும், தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டுக் கழகம், அர்ச்சயா பழச்சாறு உற்பத்திகள் என்று பல்வேறு கூறுகளாக பொருண்மியம் சார்ந்த முன்னெடுப்புகளும் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் இந்திய இராணுவத்தின் வருகையின் பின் குழம்பிப் போயிருந்த சமூகம் முன்னெப்போதுமில்லாத வகையில் பரந்து பட்ட அளவில் தம்மை மீளக் கட்டியமைத்தது தொண்ணூறுகளுக்குப் பின்னான இரண்டாம் கட்ட ஈழ போரிலிருந்து தான்.

இணக்கப்பாட்டின் அவசியம்


27/07/2019 இந்து சமுத்­தி­ரத்தின் முத்­தாகத் திகழ்­கின்ற இலங்கைத் தீவில் இனக்குழு­மங்­களும், சமயம் சார்ந்த சமூ­கத்­தி­னரும், மொழி­வா­ரி­யான மக்­களும் தீவு­க­ளா­கவே வாழ்­கின்­றனர். அவர்­க­ளுக்­கி­டையில் காலங்கால­மாக நிலவி வந்த நல்­லு­றவும் நல்­லி­ணக்­கமும், ஐக்­கி­யமும் படிப் ­ப­டி­யாகத் தேய்ந்­துள்­ள­மையே இதற்குக் காரணம்.  
இனப்­பி­ரச்­சினை கார­ண­மாக எழுந்த ஆயுதப் போராட்­டத்­தின்­போது இன­வாத அர­சியல் கொள்­கைகள் அள­வுக்கு மீறிய வகையில் கடைப்­பி­டிக்­கப்­பட்டு, தமிழ் மக்கள் அனை­வ­ரை­யுமே பயங்­க­ர­வா­தி­ க­ளாக நோக்கும் ஒரு நிலைமை உரு­வா­கி­யி­ருந்­தது. இதனால் சிங்­கள, தமிழ்மக்­க­ளுக்­கி­டையில் சமூக ரீதி­யாக இருந்து வந்த பிணைப்பு அறுந்து போனது. ஒரு­வரை ஒரு­வர் சந்­தே­கத்­து­டனும் பகை உணர்­வோடும் நோக்கும் நிலைமை ஏற்பட்டது. 
யுத்தம் முடி­வுக்கு வந்த பின்னர் இரு சமூ­கங்­க­ளுக்­கி­டை­யிலும் நில­விய சந்­தேகம், பகை உணர்வு என்­ப­வற்றைக் களைந்து இன நல்­லி­ணக்கம் உரு­வாக்­கப்­ப­ட­வில்லை. மாறாக சிங்­கள பௌத்த தேசியம் எழுச்சி பெறவும், வீச்­சுடன் அது மேலா­திக்கம் கொள்­ள­வுமே வழி­யேற்­ப­டுத்திக் கொடுக்­கப்­பட்­டது. 

பேயும் பிசாசும்


27/07/2019 ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி என்­பன இலங்­கையின் வர­லாற்றில் முக்­கிய கட்­சி­க­ளாக விளங்­கு­கின்­றன. இலங்கை சுதந்­தி­ர­ம­டைந்­ததன் பின்னர் இக்­கட்­சிகள் மாறி மாறி ஆட்சி பீட­ மேறி இருக்­கின்­றன. இந்­நி­லையில் இக்­கட்­சி­களின் செயற்­பா­டுகள் மற்றும் போக்­குகள் தொடர்பில் பல்­வேறு விமர்­ச­னங்கள் இருந்து வரு­கின்­றன.  ­கட்­சிகள் நாட்டின் அபி­வி­ருத்­திக்கு உரி­ய­வாறு வலு­ சேர்க்­க­வில்லை. நாட்டு மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு உரிய தீர்­வைப் பெற்­றுக் ­கொ­டுக்­க­வில்லை என்­கிற பர­வ­லான குற்­றச்­சாட்டு இருந்து வரு­கின்­றது. மலை­யக கட்­சிகள் உள்­ளிட்ட சிறு­பான்மைக் கட்­சிகள் இவ்­விரு பெரும்­பான்மைக் கட்­சி­க­ளுக்கும் மாறி மாறி ஆத­ர­வ­ளித்து வரு­கின்­றன. எனினும் இதற்கு உரிய பலனை சிறு­பான்மைக் கட்­சிகள் பெற்­றுக்­கொண்­ட­னவா  என்று சிந்­திக்­கு­மி­டத்து விடை திருப்­தி­க­ர­மா­ன­தாக இல்லை. தேர்தல் காலங்­களில் சிறு­பான்­மை­யி­னரின் ஆத­ர­வைப் பெற்­றுக்­கொண்டு பின்னர் அவர்­களைத் தூக்கி எறியும் பிழை­யான போக்கே பெரும்­பான்மைக் கட்­சி­க­ளிடம் அதி­க­மாகக் காணப்­ப­டு­கின்­றது என்­ப­தையும் மறுப்­ப­தற்­கில்லை.
மலை­யக மக்கள் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சிக்கு ஆத­ரவு வழங்­கு­வ­திலும் பார்க்க ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு அதி­க­ளவில் ஆத­ரவு வழங்­கு­வ­தையும் அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக உள்­ளது. அந்­த­ள­விற்கு இம்­மக்கள்  ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சி­யைப் புறந்­தள்­ளு­வ­தற்குக் காரணம் என்ன என்­கிற கேள்­விக்கு விடைகள் பல காணப்­ப­டு­கின்­றன. ஸ்ரீல.சு. கட்சி மலை­யக மக்­க­ளுக்கு இழைத்த துரோ­கங்­களின் கார­ண­மாக அக்­கட்சி அவர்­களின் இத­யங்­களில் இடம் பி­டிக்கத் தவறி இருக்­கின்­றது என்­பதே கசப்­பான உண்­மை­.

விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன்-2


22/07/2019 இந்தியாவின் இரண்டாவது நிலவுப்பயணத் திட்டமான சந்திரயான்-2 என்ற விண்கலம் இன்று பிற்பகல் 2.43 மணிக்கு ஏவப்பட்டது.
இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.
நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக 978 கோடி இந்திய ரூபா செலவில், சந்திரயான்-2 விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்தது.
orbiter, lander மற்றும் rover என மூன்று நிலைகளைக் கொண்ட சந்திரயான்-2 விண்கலம் கடந்த திங்கட்கிழமை காலை மார்க்-3 ரொக்கெட் மூலம், ஸ்ரீகரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்திலிருந்து விண்ணில் ஏவப்படவிருந்தது.

பயணியின் பார்வையில் - அங்கம் 16 இலங்கை மணித்திருநாட்டுக்கு வரலாறு கற்பிக்கும் துறவிகள்?! தமிழ்க்கல்வியால் தமிழர் அடையாளத்தை தக்கவைத்துக்கொண்ட நீர்கொழும்பூர் - முருகபூபதி


   இந்த நாட்டில் அனைத்து மதங்களுக்கும் சமவுரிமை வழங்கப்பட்டிருந்தாலும், இந்த நாட்டின் உரிமை பௌத்த உரிமை என்பதையும், இது ஒரு பௌத்த நாடு என்பதையும் நாம் அனைவரும் முதலில் ஏற்றுக்கொள்ளவேண்டும்.  எனத்தெரிவித்துள்ளார் இலங்கை பேராயர் கர்தினல் மல்கம் ரஞ்சித். அவர் அத்துடன் நிற்கவில்லை.  “இனி இந்த நாட்டில் உள்ள அனைவரும் சிங்களவர்கள் என்ற ரீதியில் ஒன்றிணையவேண்டும் “ எனவும் அறைகூவல் விடுத்துள்ளார்.
இது இவ்விதமிருக்க, பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட  ரத்னசார தேரர், “ இந்த நாடு பௌத்த சிங்களவருக்கு மட்டுமே உரியது!?” எனச்சொல்கிறார்.
இவர்கள்  இவ்வாறு  திருவாய்மலர்ந்தருளிச்சொல்லும் இந்த பொன்மொழி (?) களுக்கு பின்புலம்  கடந்த ஏப்ரில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலாகும்.
நாட்டின் அதிபர் தேர்தலுக்கான நாள் குறிக்கும் காலப்பகுதியில்,  இவர்களின் இத்தகைய கருத்துக்கள் வெளிவருகின்றன என்பதையும் கவனித்தல் வேண்டும். இவர்கள் யாருக்கு கொம்பு சீவுகிறார்கள் என்பதையும் எளிதாக புரிந்துகொள்ளமுடியும்!
பயணியின் பார்வையில் தொடரின் இறுதி அங்கத்திற்கு வந்துள்ள தருணத்தில், இவர்களின் கருத்துக்களையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டியதன் பின்னணியில்தான்,  நான் பிறந்து வளர்ந்த ஊரின் முதல் தமிழ்ப்பாடசாலைக்கு முதல் தலைமை ஆசிரியராக 1954 ஆம் ஆண்டு பணியாற்றவந்த பண்டிதர் கதிரேசர் மயில்வாகனனார் நூற்றாண்டு கொண்டாட்டம் நடைபெற்ற தகவலையும் இங்கு பதிவுசெய்கின்றேன்.
முகாமைத்துவப் பாடசாலைகள் இலங்கை எங்கும் வியாபித்திருந்த காலத்தில், நீர்கொழும்பில் நீண்டகாலமாக வாழ்ந்த சைவத்தமிழ் மக்களுக்கும் வடக்கிலிருந்து தொழில், வர்த்தகம், திருமண உறவு முறைகளினால் இடம்பெயர்ந்து வருகைதந்த  சைவத்தமிழ் மக்களுக்கும் ஒரு குறைபாடு நீடித்தது.
அக்குடும்பங்களுக்கு கடற்கரை வீதியில் வழிபாட்டிற்கு மூன்று ஆலயங்கள் இருந்தபோதிலும்,  அக்குடும்பங்களின் குழந்தைகளுக்கென ஒரு சைவத் தமிழ்ப்பாடசாலை இல்லாத குறை நீடித்திருந்தது. எனினும் சைவ சமயத்தை போதிக்கின்ற - கூட்டுப்பிரார்த்தனை வகுப்புகளை நடத்துகின்ற தேவையை உணர்ந்த இந்து வாலிபர் சங்கம் சமூக அமைப்பாகவும் இயங்கியமையால் அதற்காக சாமி சாஸ்திரியார் என்ற ஆசான் மூலம் சமயபாட வகுப்பினைச் சங்க மண்டபத்தில் நடத்துவதற்கு தொடங்கியது.
 எனினும் அதற்கு வந்த குழந்தைகள், இதர பாடங்களை ( தமிழ், கணிதம், ஆங்கிலம், புவியியல், குடியியல்) படிப்பதற்கு அருகிலிருந்த  புனித செபஸ்தியார் பாடசாலை, புனித மரியாள்  பாடசாலை, நியூஸ்ரட் ஆங்கில மகளிர் பாடசாலை, ஆவேமரியா மகளிர் பாடசாலை ஆகியனவற்றுக்குத்தான் சென்றனர்.
1954  ஆம் ஆண்டு வரையில் இந்த நிலைமைதான் நீடித்தது.
இந்த நிலையை மாற்றுவதற்கு ஏதுவாக அச்சமயத்தில் இந்து வாலிபர் சங்கத்தின் தலைவராக இருந்த பெரியார் எஸ்.கே. விஜயரத்தினம் அவர்கள் ஒரு வழக்கறிஞராகவும் உத்தியோகப்பற்றில்லாத நீதிவானாகவும் விளங்கினார். அதேசமயம் நீர்கொழும்பு நகர பிதாவாகவும் (மேயர்) தெரிவாகியிருந்தார்.
தனது காலத்திலாவது இங்கு வாழும் சைவத்தமிழ் குழந்தைகளுக்காக ஒரு பாடசாலையை தங்கள் இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் தொடக்கிவைக்கவேண்டும் என்ற தீர்மானத்தை சங்கத்தின் உறுப்பினர்களின் ஆதரவுடன் முன்வைத்தார்.
கத்தோலிக்க மக்கள் செறிந்து வாழ்ந்த அந்தப்பிரதேசத்தில் நூற்றுக்கணக்கான தேவாலயங்கள் இருக்கின்றன. அதனால் அதனை சின்னரோமபுரி எனவும் அழைப்பர்.
அவர்களின் தாய்மொழி தமிழாகத்தான் இருந்தது. முன்னக்கரை, குட்டித் தீவு, மணல்சேனை, தோப்பு, கொச்சிக்கடை, ஏத்துக்கால், நஞ்சுண்டான் கரை, மாங்குழி, பலகத்துறை முதலான தமிழ்ப்பெயர்கொண்ட இடங்களிலேயே  அவர்களின் முன்னோர்களும் பரம்பரையினரும் பிறந்தனர்.
அவர்கள் வழிபாட்டுக்குச்சென்ற தேவாலயங்களில் தமிழில்தான் பிரார்த்தனை திருப்பலி என்பன இடம்பெற்றன.
அந்த தேவாலயங்களின்  முன்றல்களில் உற்சவகாலங்களில் கிறிஸ்தவ வரலாற்றுப்பின்னணியில் தமிழ் நாடகங்கள் இரவிரவாக மேடையேற்றப்பட்டன. சில நாடகங்கள் சுமார் ஆறுமணிநேரத்திற்கு மேலும்  நடந்திருக்கின்றன.
இவ்வாறு தமிழ்பேசிய கத்தோலிக்க மக்களை சிங்களம் பேசவைத்து சிங்களவர்களாக்கிய பெருமை அங்கு வந்து  சிங்களத்தில்  மதவழிபாடுகளை தொடக்கிய கத்தோலிக்க மதகுருமார்களையே சாரும்.
பண்டாரநாயக்கா சிங்களம் மட்டும் மசோதாவை கொண்டுவந்த சமயத்தில், சிங்களம் படித்தால் அரசாங்க உத்தியோகம் கிடைக்கும் என ஆசைவார்த்தை காண்பித்ததிலும் அந்த குருமார் முன்னணியிலிருந்தனர்.

இலக்கியத்தால் இணைந்த பூபதி அண்ணா எனது பெற்றோரின் மாணவன் ! - கனடா ஶ்ரீரஞ்சனி


இரண்டு முறை சாகித்தியப் பரிசு, இன்னும் பல விருதுகள் … இலக்கிய உலகில் தனக்கென ஒரு முத்திரையை ஆழமாகப் பதித்திருக்கும் எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் ஆறு சிறுகதைத் தொகுதிகள், ஐந்து கட்டுரை தொகுதிகள், சிறுவர்களுக்கான கதைகள் எனத் தன் பல்வேறு படைப்புக்களால் தமிழ் இலக்கிய உலகுக்கு மிகுந்த வளம் சேர்த்திருக்கிறார்.
அதுமட்டுமன்றி ஏனைய எழுத்தாளர்களைப் பற்றி உலகம் அறியவேண்டுமென்ற முனைப்புடன் செயல்படும் ஒரு கருமவீரராகவும் அவர் இருக்கிறார். அதற்கு அவரின் வாசிப்பும், பரந்துபட்ட அறிவும், அபாரமான நினைவாற்றலும் மிகவும் கைகொடுக்கின்றன.
நீர்கொழும்பில் பிறந்த பூபதி அண்ணா,  என்னுடைய பெற்றோரின் ஒரு மாணவர் என்பதில் எனக்கு நிறைந்த பெருமை இருக்கிறது. நீர்கொழும்பு விஜயரட்ணம் மகா வித்தியாலத்தில் நான் முதலாம் வகுப்பில் படித்தபோது அவர் அங்கிருந்திருக்கிறார். ஆனால், அது எனக்கு ஞாபகத்தில் இல்லை. பின்னர் கொள்ளுப்பிட்டி மெதடிஸ்ற் கல்லூரியில் நான் ஆசிரியையாக இருந்த ஆரம்பகாலங்களில், ஒரு நாள் என்னைச் சந்திக்க வீரகேசரி துணையாசிரியர் முருகபூபதி அவர்கள் வந்திருக்கிறார் என்று சொன்னபோது என்னால் அதனை நம்ப முடியவில்லை. அவ்வளவு தூரத்துக்கு மிகவும் எளிமையான மனிதர் அவர்.
அந்த அறிமுகத்தின் பின்னர் எங்களின் சுயலாபத்துக்காக அவரின் வீட்டுக்குப் பல தடவைகள் நாங்கள் சென்றிருக்கிறோம். விமானநிலையத்துக்கு அண்மையில் அவரின் வீடு இருந்தமையால் வெளிநாட்டிலிருந்து வருபவர்களை அழைக்கவோ அல்லது வழியனுப்பவோ போகும்போது அவர்களின் அன்பான உபசரிப்பை அனுபவித்திருக்கிறோம்.
அதன் பின்னர், துரதிஷ்டவசமாக எங்களில் பலரை எங்கெல்லாமோ சிதறடிக்க வைத்த எங்கள் நாட்டு நிலைமைகளால், இடைவிட்டுப்போன உறவுகளில் ஒன்றாக பூபதி அண்ணாவின் உறவும் இருந்தது.
எனினும், உண்மையான அன்புக்கு அழிவில்லை என்பதற்கேற்ப, 2007 டிசம்பர்  அவர் ரொறன்ரோவுக்கு வந்திருந்தபோது எங்கள் உறவை நாங்கள் புதுப்பித்துக் கொண்டோம். அவருடனான அந்த நேர உரையாடல்களும், அவர் CTBC க்கு வழங்கிய பேட்டியும் இலக்கிய உலகில் மீளவும் என்னைத் தீவிரமாக இணைத்துக் கொள்வதற்கான உத்வேகத்தை எனக்குத் தந்தது. அதன் முதல் கட்டமாக அவரைப் பேட்டி காணவேண்டுமென்று ஓர் அவா எனக்குள் உருவாகியது.  அந்தப் பேட்டி கனடா உதயன் பத்திரிகையில் பிரசுரமாகியிருந்தது.
பின்னர் இலங்கையிலிருந்து வெளிவரும் ஞானம் சஞ்சிகையை எனக்கு அறிமுகப்படுத்திய அவர் என் ஆக்கங்கள் அதில், தினக்குரல் பத்திரிகையில், மல்லிகை இதழில் பிரசுரிக்கப்படுவதற்கு ஓர் அடிப்படைக் காரணமாக அமைந்திருந்தார். அத்துடன் விஜயரட்ணம் மகா வித்தியாலத்தின் நூற்றாண்டு மலர், சர்வதேச எழுத்தாளர் மாநாட்டு மலர் என அவரது பொறுப்பில் வெளிவந்தவற்றில் எல்லாம் என் எழுத்தும் இருக்கவேண்டுமென்பதை உறுதிப்படுத்தினார்.

பாகிஸ்தான், இந்தியருக்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சனின் அமைச்சரவையில் அதிமுக்கிய பதவிகள்


26/07/2019 லண்டன், ( நியூஸ் இன் ஏசியா ) உண்மையான ஒரு பல்லின நாடாகுவதை நோக்கிய பிரிட்டனின் பயணத்திற்கு சான்றாாக இரு தெற்காசிய நாட்டவர்களுக்கு ( இந்தியா, பாகிஸ்தான் ) புதிய பிரதமர் போரிஸ் ஜோன்சனின் அமைச்சரவையில் அதிமுக்கியமான பதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த  பிரீதி பட்டேல் உள்துறை அமைச்சராகவும்  பாகிஸ்தானிய வம்சாவளியினரான  சாஜித் ஜாவித் நிதியமைச்சராவும் பதவியேற்றிருக்கிறார்கள். 
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறவேண்டும் என்று உறுதியாக வலியுறுத்தி வந்திருக்கும் பட்டேல், தெரேசா மேயின் பிரெக்சிட் தந்திரோபாயத்தை மிகவுமம் கடுமையாக எதிர்த்து விமர்சித்த ஒருவராவார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் பிரிட்டனின் உள்துறை அமைச்சராக வந்திருப்பது இதுவே முதற்தடவையாகும். தெரேசா மேயின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பதவி வகித்த சாஜித் ஜாவித்தை பிரீதி பதிலீடு செய்திருக்கிறார். பிரிட்டனில் சிறுபான்மை இனத்தவர் ஒருவர் நிதியமைச்சராக நியமனம் செய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பமாக ஜாவித்தின் நியமனம் அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
" எமது நாட்டைப் பாதுகாப்பானதாகவும் எமது மக்களைப் பத்திரமாகவும் வைத்திருப்பதற்கு எனது அதிகாரத்துக்கு உட்பட்ட சகலதையும் செய்வேன்.எமது வீதிகளில் நாம் காண்கின்ற வன்முறைக்கொடுமையை எதிர்த்து நான்போாடுவேன்.எமக்கு முன்னாலுள்ள சவால்களுக்கு முகங்கொடுப்போம் " என்று ஐக்கிய இராச்சியத்தின் உள்துறை அலவலகத்தில் தனது உயர்பதவி குறித்து குறிப்பிட்டபோது பட்டேல் வியாழனன்று கூறினார்.

இலங்கைச் செய்திகள்


ஆவா குழுவினர் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் - புதிய காரணம் வெளியாகியது

கன்னியா விவகாரம் ; நீதிமன்றம் அதிரடி  உத்தரவு

இந்துக்கள் தமது பூர்வீக நிலத்தை அனுபவிக்க வழி அமைக்கப்பட்டுள்ளது - எம்.ஏ.சுமந்திரன்

மானிப்பாயில் இளைஞன் சுட்டுக்கொலை  ; வாள்வெட்டுக் கும்பலைச் சேர்ந்த மூவர் கைது

டிசம்பர் ஏழாம் திகதி ஜனாதிபதி தேர்தல் - மஹிந்த தேசப்பிரிய

வெலிகடைச் சிறைப் படுகொலையின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு…

வைத்தியர் ஷாபிக்குப் பிணை!

சகோதரர்களுக்கு இடையில் மோதல் ; இடித்து தரைமட்டமாக்கப்பட்ட வைரவர் ஆலயம் - யாழில் சம்பவம்

இந்­திய வம்­சா­வளி மலை­யக சமூ­கத்தின் முதல் பேரா­சி­ரியரான மு.சின்­னத்­தம்பி கால­மானார்



ஆவா குழுவினர் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் - புதிய காரணம் வெளியாகியது

22/07/2019 யாழ்ப்­பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட இணுவில் இணைப்பு வீதியில் சுது­மலை வடக்கு தமிழ் கலவன் பாட­சாலை  முன்­பாக ஆவா குழு  உறுப்­பினர் எனக் கூறப்­படும்  இளைஞர் ஒருவர்  பொலி­ஸாரின் துப்­பாக்கிச் சூட்டில் உயி­ரி­ழந்த விவ­காரம் தொடர்­பி­லான விசா­ர­ணை­களில் பல தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

உலகச் செய்திகள்


பிரித்தானிய எண்ணெய் தாங்கி கப்பல் கைப்பற்றப்படுவதை வெளிப்படுத்தும் காணொளிக் காட்சி ஈரானால் வெளியீடு

மகளின் திருமணத்திற்காக பரோலில் வந்தார் நளினி..!

ஏவுகணை பரிசோதனையை மேற்கொண்டது  வடகொரியா

லிபிய அகதிகளின் படகு கவிழ்ந்ததில்150 பேர் பரிதாபமாக பலி !

3 இந்திய வம்சாவளியினருக்கு போரிஸ் ஜோன்சன் அமைச்சரவையில் பதவிகள்

பாகிஸ்தானில் செயற்படும் பயங்கரவாத குழுக்களை அழிக்க இம்ரான் கான் நடவடிக்கை எடுக்க வேண்டும் - இந்தியா

அனுமதி கிடைத்தது ; எல்லை சுவர் எழுப்ப தயராகும் ட்ரம்ப்


பிரித்தானிய எண்ணெய் தாங்கி கப்பல் கைப்பற்றப்படுவதை வெளிப்படுத்தும் காணொளிக் காட்சி ஈரானால் வெளியீடு

22/07/2019 பிரித்­தா­னிய கொடி பறக்­க­வி­டப்­பட்ட எண்ணெய் தாங்கிக் கப்­ப­லொன்று வளை­குடா பிராந்­தி­யத்தில்   ஈரானால் கைப்­பற்­றப்­ப­டு­வ­தற்கு முன்னர் பிரித்­தா­னிய கடற்­ப­டை­யி­ன­ருக்கும்   கப்­பல்­களில்  வந்த ஈரா­னிய ஆயுதப் படை­யி­ன­ருக்­கு­மி­டையில் இடம்­பெற்ற  வானொலித்  தொடர்­பாடல் பதி­வுகள் வெளியா­கி­யுள்­ளன.

பொன் விழா ஆண்டில் இந்தப்படங்கள் 1969 -2019 ச. சுந்தரதாஸ் பகுதி 4


சுஜாதா சினி ஆர்ட்ஸ் மூலம் சிவாஜி கணேசனின் நடிப்பில் அடுத்தடுத்து இரண்டு வெற்றிப் படங்களை தயாரித்தவர் பாலாஜி நடிகராக இருந்து தயாரிப்பாளரான இவர் 1969ல் தயாரித்தப் படம்தான் திருடன்.

ஏற்கனவே அதிர்ஷம் வந்துலு என்ற பெயரில் தெலுங்கில் இப்படம் உருவாகியிருந்தது. நாகேஸ்வரராவும் ஜெயலலிதாவும் இதில் இணைந்து நடித்திருந்தார்கள். தெலுங்கில் வெற்றி கண்ட இந்தப் படத்தை தமிழில் சிறு மாற்றங்களுடன் பாலாஜி உருவாக்கினார். 
துமிழில் ஜெயலலிதா பிரபலமாக இருந்த போதும் பாலாஜியின் நண்பராக திகழ்ந்த போதும் அவரை தமிழ்ப் படத்தில் நடிப்பதற்கு பாலாஜி ஒப்பந்தம் செய்யவில்லை. அதற்கு பதில் கே.ஆர். விஜயாவை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தார்.

பாலாஜி சிவாஜியின் நடிப்பில் தயாரித்த முதல் படம் தங்கை. இப்படத்தின் தயாரிப்பதற்கு நிதியுதவி வழங்கியவர் சுதர்சன் சிட்பண்ட் நிதி நிறுவனத்தின் அதிபர் வேலாயுதம் நாயர். அதன் காரணமாகவே நாயரின் மனைவி கே. ஆர். வுpஜயாவை கதாநாயகியாக தங்கை படத்தில் ஒப்பந்தம் செய்தார் பாலாஜி. அவரின் இரண்டாவது தயாரிப்பான என் தம்பி படத்திற்கு சரோஜாதேவி கதாநாயகியானார். காரணம் அப்படம் உருவான சமயம் கே. ஆர். விஜயா காப்பமாக இருந்ததேயாகும். அடுத்த தயாரிப்பான திருடனில் மீண்டும் விஜயா இடம் பெற்றார்.
சிவாஜி கே. ஆர். விஜா இருவருடன் பாலாஜி சுந்தரராஜன் நாகேஷ் விஜயலலிதா ஆகியோரும் நடித்திருந்தனர். இவர்களுடன் சசிகுமார் என்ற புதுமுகமும் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகியிருந்தார். பிற்காலத்தில் இவர் பல படங்களில் துணை வேடங்களிலும் நடித்திருந்தார்.

சிறு வயதிலேயே அனாதையாகி விட்ட ராஜீ சந்தர்ப்ப வசத்தினால் திருடனாக உருவாக்கப்படுகிறான். அவனின் திறமையை பயன்படுத்தி ஜெகதீஷ் பல கொள்ளைகளை நடத்துகிறான். ஒரு சந்தர்ப்பத்தில் போலிஸிடம் சிக்கி சிறை செல்லும் ராஜீ திருந்தி நல்லவனாகிறான். அவனுக்கு ஒரு காதலியும் தொடர்ந்து குழநதையும் கிடைக்கிறது. திருந்தி குடும்பத்துடன் ஒழுங்காக வாழ விரும்பும் ராஜீக்க பழைய கொள்ளைக் கூட்டத்தினர் தொல்லை கொடுக்கிறார்கள். இப்படி செல்கிறது திருடனின் கதை.

குணச்சித்திர நடிப்புடன் சண்டைக் காட்சிகளிலும் திறமையாக நடித்திருந்தார் சிவாஜிp. ஓடும் ரயிலிலும் வளைந்து வளைத்து செல்லும் உயர் கட்டடத்தின் மீதும் சிவாஜி போடும் சண்டைகள் விறுவிறுப்பாக இருந்தன. திருவாருர் தாஸ் அமைத்த சண்டைக் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தன. 

திருக்குறள் பேச்சுப் போட்டி - சிட்னி 31/07/2019






சிட்னி துர்க்கா ஆடிப் பூரம் தேர்த் திருவிழா 03/08/2019






சிட்னி துர்க்கா அம்மன் கோவிலில் ஆடிப்பூரம் 25/07/2019 - 04/08/2019











அவுஸ்திரேலியக் கம்பன் கழக இசை வேள்வி 2019




இனியவர்களே, வணக்கம். அவுஸ்திரேலியக் கம்பன் கழக இசை வேள்வியில், திறமைமிகு அணிசெய் இசை விற்பன்னர்களுடன். உலகப் புகழ் இளம் இசைக் கலைஞர் சித்தார்த்(Sid) ஸ்ரீராம் வழங்கும், கர்நாடக இசைக் கச்சேரி (சிட்னி, அவுஸ்திரேலியா). உங்கள் வருகையால், விழாவைச் சிறப்பிக்க வேண்டுகின்றோம்.
இவ் இசை வேள்வியை இரசிப்பதற்கான உங்களின் வருகை; தொண்டுரீதியாக நாம் நடாத்தும் 'கம்பன் விழா', ‘நாநலம்', 'வெல்லும் சொல்' மற்றும் 'கம்பன் வகுப்புகள்' போன்ற இலக்கியப் பணிகளுக்கும் ஆதரவு தரவுள்ளது என்பதையும் அன்போடு அறியத்தருகின்றோம்.
5.30 pm, Sunday 4 August 2019.       107, Derby St, Silverwater NSW

நுழைவுச் சீட்டுகளுக்கு: Tele World - Pendle Hill | Pyramids - Flemington | Spiceland - Flemington 












தமிழ் சினிமா - டியர் காம்ரேட் திரைவிமர்சனம்


சில நடிகர்கள், நடிகைகள் படங்கள் என்றால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் ஒரு ஜோடியை மீண்டும் ஸ்கிரீனில் எதிர்பார்க்கிறார்கள் என்றால் அது விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா காம்போ தான். இவர்கள் இருவரின் நடிப்பில் தற்போது வந்துள்ள டியர் காம்ரேட் படம் எப்படி இருக்கிறது என பார்க்கலாம்.

கதைக்களம்

படத்தின் ஹீரோ விஜய் தேவரகொண்டா காம்ரேட் கொள்கைகள் கொண்டவர். அவருக்கு அழகான குடும்பம். கல்லூரி மாணவனாக வரும் அவர் ஸ்டூடன்ட்ஸ் யூனியன் லீடராகவும் வலம் வருகிறார்.
கோபம் ரத்தத்தில் கலந்தது போல அநியாயங்களை காணும் போது அவரிடம் பொங்கி எழுகிறது. ஒரு நாள் ஒரு சிறிய விபத்தில் ஹீரோயின் ராஷ்மிகாவை சந்திக்கிறார்.
பின்னர் அவர் தன் உறவினர் என தெரிந்ததும் ஒரே மகிழ்ச்சி தான். ராஷ்மிகா கிரிக்கெட் வீரர் என தெரிந்ததும் விஜய்க்கு அவர் மீது காதல் லேசாக துளிர் விடுகிறது.
சண்டை, கல்லூரி கலாட்டாக்கள் என போய்க்கொண்டிருக்கையில் எதிர்பாராத பிரச்சனை சந்திக்க விஜய்யின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. அதே வேளையில் கிரிக்கெட்டில் தேசிய லெவலுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் ஹீரோயினுக்கு வெளியில் சொல்ல முடியாத பிரச்சனை.
ஒரு பக்கம் காதல் பிரிவு, மறுபக்கம் கிரிக்கெட்டை கைவிட வேண்டிய நிலை என லில்லி மனக்கவலையில் உள்ளார். பிரிந்த இவர்கள் மீண்டும் சந்தித்தார்களா, ராஷ்மிகாவுக்கு நேர்ந்த பிரச்சனை என்ன? அவரும் காம்ரேட் ஆக மாறினாரா என்பதே கதை.

படத்தை பற்றிய அலசல்

விஜய் தேவரகொண்டா ஏற்கனவே அர்ஜூன் ரெட்டி, கீதா கோவிந்தம் என இரண்டு லவ் ஸ்டோரி படங்கள் மூலம் ஹிட் கொடுத்து பெரும் ரசிகர்கள் வட்டாரத்தை பெற்றவர். கடந்த முறை படத்தில் ரவுடியாக களமிறங்கியவர் தற்போது காம்ரேட் ஆக இறங்கியுள்ளார்.
அவருக்கும் சரியான ஜோடியாக ராஷ்மிகா மூன்றாவது முறையாக இணைந்துள்ளார். இவர் தியேட்டரில் எண்டிரி ஆகும் காட்சிகளுக்கு ரசிகர்களின் விசில் சத்தம் தியேட்டரில் பறக்கிறது. காம்ரேட் ஆக அவரும் கிரிக்கெட் வீரராக இவரும் கொள்கையில் உறுதியாக இருக்கிறார்கள். இருவருக்குமான லவ், ரொமான்ஸ் கெமிஸ்டிரி சூப்பர்.
பாபி, லில்லி என இவர்களின் பெயர்கள் பலரையும் ஈர்க்கிறது. இவர்களின் படத்தில் லிப்லாக் காட்சிகள் இருக்காமல் போய்விடுமா என. அக்காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் செம ரெஸ்பான்ஸ்.
பாரத் கம்மா பட கதையை இயற்கையாக கொண்டு செல்கிறார். சென்னை, தூத்துக்குடி, பெங்களூரு என காட்சிகள் மாறும் விதமாக மழைக்காலத்தில் ரயில் பயணமாக காட்டுகிறார். நிஜ வாழ்க்கையில் ஆண்களால் பெண்கள் சவாலை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும், தவறை தட்டிக்கேட்க வேண்டும் என்ற மெசேஜ் ஹைலைட்.
ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் படத்தில் லவ் சென்சேஷன் என கூறலாம். பின்னணி இசையும் கிளாசிக். சுஜித் சராங்க் ஒளிப்பதிவில் காட்சிகள் ரியாலிஸ்டிக்.

கிளாப்ஸ்

பாபி, லில்லி இருவரின் ரொமான்ஸ், கெமிஸ்ட்ரி ரியலான லவ் ஃபீல்.
படத்தில் சித்ஸ்ரீராம் பாடிய பாடல் அசத்தல்..
இயல்பான காமெடிகள் படத்தில் சின்ன சின்ன இம்பிரஷன்.

பல்பஸ்

படத்தில் நீளம் கொஞ்சம் அதிகம். காட்சிகள் நகர்வு மெதுவாக இருப்பது போன்ற ஒரு ஃபீல்.
மொத்ததில் டியர் காம்ரேட் மழைக்காலத்தில் ஒரு நல்ல ஃபீல் குட் படம்.