அரும்பொன்று கருகியது - செ .பாஸ்கரன்

.

More than 80 children under two-years-old test positive for COVID-19 in single US county

மரணித்த குழந்தை நேற்றைய செய்தி கேட்டதில் எழுதியது.



அரும்பொன்று மலர்ந்து
ஆகிய நாட்களோ தொண்நூறு
தாயின் மடியில் தவழ்வதற்கு
விழுந்த சிறு குஞ்சு
ஒன்பது மாதங்கள்
காத்திருந்த அன்னையவள்
கேட்டாள்
பாலகனின் அழுகுரலை
முத்தமழை பொழிந்தாள்
முகத்தோடு முகம் வைத்தாள்
பட்டுத்துணியின் வழுவழுப்பு
அவன் சின்ன உடம்பில் தெரிகிறது
ஆசையுடன் அரவணைத்து
பாலூட்டி
பார்த்து ரசித்திருந்தாள்
சிறு தும்மல்
மெல்ல சிணுங்குமொலி
கணச்சூடு கண்டது போல்
உடல் சூடு ஏறியது
குளிராக இருக்குமென
கம்பளியால் மூடிவிட்டாள்
உறக்கம் கொள்ளாமல்
விடியும் இரவுதனைக் கடந்தாள்
மருத்துவரை தேடி
மருந்தொன்று வேண்டுமென்றாள்
கொரோனா குழந்தைக்கு
தனிமையில் விடு என்றார்
பிஞ்சுக் கரமிரண்டும் மூடிக்கிடக்க
காற்றைத் தேடி
எழுகின்ற மார்பகங்கள்
விம்மித தணியும் வேதனைத் தீ
என்ன கொடுமை
இளம் தளிரை
தீயில் இட்டது யார்
விலகி இரு என்றசெய்தி
காற்றில் மிதக்கிறது
கேட்பதட்கு யாருமில்லை
சிறு குழந்தை
சிரிப்பின்றிக் கிடக்கிறது



ஆடிப்பூரம் உற்சவம் - சிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் திருக்கோயில் - தேர்த் திருவிழா- 24/07/2020






அஞ்சலிக்குறிப்பு: கோவை ஞானி நினைவுகள் மனக்கண்ணால் இலக்கியம் பேசியும் எழுதியும் இயங்கிய ஆளுமை ! முருகபூபதி


ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் கோயம்புத்தூரில்  மாலைநேர தனது
வீதியுலாவுக்கு என்னை அழைத்துச்சென்ற மூத்த இலக்கிய விமர்சகர் கோவை ஞானி பற்றிய நினைவுகள் மனதில் அலைமோதுகின்றன.

இம்மாதம் ( ஜூலை )  முதலாம் திகதிதான் அவர் தமது  85 வயது அகவையை நிறைவுசெய்துகொண்டு,  அடுத்த கட்டத்திற்கு  நகர்ந்தவர்.

2013 ஆம் ஆண்டு தமிழகம் சென்றிருந்தபோது,  யுகமாயினி சித்தனுடன், சென்று அவரைப்பார்த்துவிட்டுத் திரும்பி, ஒரு பதிவும் எழுதியிருக்கின்றேன்.

அன்றைய தினம் பசுமையானது.   நெடும்பகல் பொழுது.  முதல் நாள் இரவு கோயம்புத்தூரில் இறங்கி,  சித்தன் இல்லத்தில் தங்கிவிட்டு மறுநாள் காலை ஞானியைப் பார்க்கப்புறப்பட்டேன். வழித்துணை சித்தன்.
இலக்கிய உலகில் நான் பிரவேசித்த காலப்பகுதியில் எனக்கு இரண்டுபேரின் பெயர்கள் சற்று மயக்கத்தை கொடுக்கும். ஒருவர் பரீக்ஷா ஞாநி. மற்றவர் கோவை ஞானி.
பரீக்ஷா ஞானி நாடக எழுத்தாளராக இயக்குநராக பிற்காலத்தில் பத்திரிகையாளராக எனக்கு அறிமுகமானவர். பல வருடங்களுக்கு முன்னர் அவர் அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு வந்தபோது, சுபமங்களா ஆசிரியரிடம் எனது தொலைபேசி இலக்கத்தை பெற்றுவந்து குவிண்ஸ்லாந்து மாநிலத்திலிருந்து தொடர்புகொண்டார். நான் அப்போது “ நீங்கள் பரீக்ஷா ஞாநியா, அல்லது கோவைஞானியா?” என்று கேட்டதும்  தற்போது நினைவுக்கு வருகிறது.
இன்று இரண்டுபேரும் இல்லை. யுகமாயினி சித்தனும் இல்லை. வெறுமை சூழ்ந்திருக்கும் உணர்வோடுதான்  கோவை ஞானியை  மீண்டும் நினைவுகூருகின்றேன்.
வீரகேசரி வாரவெளியீட்டுக்குப் பொறுப்பான ஆசிரியர் பொன்.ராஜகோபால்  எனக்கு இலக்கியப்பலகணி பத்திகளை எழுதுவதற்கு ரஸஞானி என்ற புனைபெயரைச்சூட்டியது பற்றி அன்று  கோவை ஞானியிடம் சொன்னபோது,   வாய்விட்டுச்சிரித்து,   “ மற்றும் ஒரு ஞானியா..?  “ எனக்கேட்டவர்,  இன்றில்லையென்றாகிப்போனது ஆழ்ந்த துயரத்தை தந்தாலும், நீண்ட நெடுங்காலமாக கண்பார்வையுமின்றி, ஆத்மபலத்துடன்  இயங்கிவந்து,                  “  இனிப்போதும்  “ என்று அவர் விடைபெற்றிருப்பதாவே கருதிக்கொண்டு, மனதை தேற்றமுடிகிறது.

தமிழுக்கும் அமுதென்று பெயர் !


தமிழ் தொன்மையான மொழி என்பது ஆய்வாளர்களின் கணிப்பு. பல உலக மொழிகளுக்கெல்லாம் முன்னோடியானது.  அதனால்தான் மகாகவி பாரதி,  “  யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்   “ என்று பாடினார். அவரது தாசன், பாரதி தாசன்,  “  தமிழுக்கும் அமுதென்று பெயர்   “ எனப்பாடினார்.
இந்த இணைப்பில், தமிழின் தொன்மையை வேற்று நாட்டுப்பெண்மணி, உலக மொழிகளின் வரலாற்றுப்பின்னணியுடன் ஆதாரங்களுடன் விளக்குகிறார்.  அவசியம் பாருங்கள். மற்றவர்களுடன் பகிருங்கள். 


சிறிலங்காவின் பாராளுமன்றத் தேர்தலும் தலைப்பு செய்தியாக்கப்படும் தமிழீழ விடுதலைப்புலிகளும் - 2 பரமபுத்திரன்


ஒவ்வொரு தேர்தல் வரும்போதும், தமிழர்களின் இருப்பு நிலை நிறுத்தப்படவேண்டும், உலகுக்கும், சிங்கள மக்களுக்கும் நாங்கள்  யாரென்று காட்டவேண்டும், தமிழ் மக்களின் ஒருமித்த பலத்தை நிரூபிக்கவேண்டும், என்ற முக்கிய கருப்பொருள் முன்வைக்கப்படும். தமிழர்களும் இந்த வசனங்களை உண்மையென நம்பி  போடு புள்ளடி என்று வாக்களிப்பர். சிங்கள அரசுகள், அரசியல்வாதிகளின் புத்திசாலித் தனமான செயல்பாடுகளின் விளவுகளால் இன்று தமிழர்கள் பங்களிப்பு  அற்ற தலைமையை  உருவாக்கி நாட்டினை ஆளும் நிலைக்கு சிங்கள ஆட்சியாளர்கள் வந்துவிட்டார்கள். ஆனால்   தமிழ்மக்களின் அரசியல் பலமும் போய், நிலமும் குறுகி, மொழியும் தளர்ந்து, வாழ்ந்தால் போதும் என்ற நிலைதான்   தமிழர்களுக்குக் கிடைத்த முடிவு என்று சொல்லலாம்.     

பொன்விழா ஆண்டில் இந்த படங்கள் 10 - காலம் வெல்லும் - சுந்தரதாஸ்

.

 தமிழ் திரையுலகில் பிரபல ஒளிப்பதிவாளராக திகழ்ந்தவர் கர்ணன். சாரதா, கற்பகம். கைகொடுத்த தெய்வம் போன்ற பல குடும்ப கதைகளை அடிப்படையாகக் கொண்டு உருவான படங்களை ஒளிப்பதிவு செய்த கர்ணன் 1970 ஆம் ஆண்டு படத் தயாரிப்பாளராகவும், நெறியாளராகவும் அவதாரம் எடுத்தார் அவ்வாறு அவர் டைரக்ட் செய்த முதல் படத்தை குடும்ப கதையாக எடுக்காமல் கவ்பாய் பாணியிலான ஆக்ஷன் படமாக உருவாக்கினார் கர்ணன் . அப்படி கர்ணன் உருவாக்கிய படம்தான் காலம் வெல்லும்.

இது போன்ற படங்களில் கதாநாயகனாக நடிப்பதற்கு என்று இருந்த ஒரே நடிகர் ஜெய்சங்கர் எனவே அவரையே கதாநாயகனாக்கி படத்தை உருவாக்கினார் . தலையில் தொப்பி இடுப்பில் துப்பாக்கி பயணம் செய்ய குதிரை என்று ஓர் ஏற்பாட்டுடன் கதாநாயகனை படம் முழுவதும் உலாவ விட்டார். அவரின் எதிர்பார்ப்பிற்கு குறை வைக்காமல் ஜெய்சங்கரும் கவ்பாய் வேடத்தில் நடித்து அசத்தி இருந்தார்.


உயர்நிலையாய் அமையாதே ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் ... ஆஸ்திரேலியா


அரசியல் பிழைத்தோர்க்கு
       அறமேகூற் றாகுமென்று
அன்றுரைத்த காப்பியத்தை
      படிக்கிறோம் விளக்கிறோம்
பட்டிமன்றப் பொருளாக்கி
      பலவாறு பேசுகிறோம்
கருத்ததனை மட்டுமே
      கருத்திருக்கத் தவிர்க்கிறோம் !

ஒருவனுக்கு ஒருத்தியென
      உரைக்கவந்த காப்பியத்தை
வீட்டிலும் படிக்கிறோம்
     கோவிலிலும் விளக்குகிறோம்
காப்பியத்து நாயகனை
     கடவுளாக்கிப் போற்றுகிறோம்
நாயகனின் கருத்தைமட்டும்
      நட்டாற்றில் விட்டுவிட்டோம் !

நாலுமிரண்டும் சொல்லுக்குறுதி
       நம்நினைவில் பதிந்திருக்கு
நாலையும் தொலைத்தோம்
      இரண்டையும் ஒதுக்குகிறோம்
வேலிக்குச்  சாட்சியாய்
      ஓணானும் வருவதுபோல்
வேண்டாத பலவற்றை
      துணையெனவே வைத்துள்ளோம் !

இறுதிவரை வாசித்தார்- ஞானியின் உதவியாளர் ஜோதிமீனா பேட்டி

.


தமிழ்நாட்டில் கோவை ஞானி அளவுக்குத் தீவிரமாகத் தொடர்ந்து வாசித்துவந்தவர்கள் இருக்க முடியாது. தமிழ் - ஆங்கிலம் இரண்டிலும் தேடித் தேடி நூல்களை வாசித்தவரைப் பார்வையிழப்பும்கூட ஒன்றும் செய்ய முடியவில்லை. உதவியாளர்களை அமர்த்திக்கொண்டு வாசிக்கலானார். ஜோதிமீனா அப்படி 13 ஆண்டு காலம் ஞானிக்கு வாசிப்பாளராக இருந்தார். காலையில் வேலைக்குச் செல்வதுபோல ஞானியின் வீட்டுக்கு வந்துவிடுபவர், மாலை வரை நாளிதழ்கள், புத்தகங்கள் என்று ஞானி சொல்வதையெல்லாம் வாசிப்பார். ஜோதிமீனா வாசிக்கக் கேட்கும் ஞானி, இடையிடையே தன்னுடைய கருத்துகளை விமர்சனங்களாகச் சொல்ல அதை எழுதவும் செய்வார். ஞானியின் வாசிப்பு வேட்கையை நம்மிடம் அவர் பகிர்ந்துகொள்கிறார்.

கோவை ஞானியிடம் நீங்கள் எப்போது உதவியாளராகச் சேர்ந்தீர்கள்?


2007-ல் ஐயாவுக்குப் படிப்பதற்கு உதவியாளராக வந்தேன். என் கணவர்தான் ஐயாவிடம் சென்றால் நிறைய கற்றுக்கொள்ள முடியும்; நீயும் உன் படிப்பைத் தொடரலாம் என்று அனுப்பிவைத்தார். அப்போது எனக்கு இரண்டாவது குழந்தை பிறந்திருந்த சமயம். என்றாலும், கைக்குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு ஐயாவுக்குப் படிக்க வந்தேன். இன்று முனைவர் பட்டம் பெற்று, கடந்த ஆண்டு இறுதியில் பணிக்கும் சென்றுவிட்டேன் என்றால், அதற்கு ஐயாதான் முழுமுதல் காரணம். 

சிட்னி ஸ்ரீ துர்க்கா திருக்கோவிலில் வரலட்சுமி விரதம் 31/07/2020



விரதம் இருக்கும் முறை:
ஆடி அல்லது ஆவணி மாத பவுர்ணமிக்கு முன்னதாக வரும் வெள்ளிக் கிழமை அன்று, வரலட்சுமி விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.  எதிர்வரும் வெள்ளிக்கிழமை 31/07/2020 ம் திகதி சிட்னி ஸ்ரீ துர்க்கா திருக்கோவிலில் வரலட்சுமி விரதம் நடைபெறுகின்றது. 


வரலட்சுமி விரதத்தின் மகத்துவம்!
பெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பதால், அஷ்ட லட்சுமிகளும் மகிழ்வதாக ஐதீகம். இதனால், திருமணமான பெண்களின் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். செல்வம் சேரும். கன்னிப்பெண்களுக்கு திருமணம் கைகூடும். குழந்தைகளுக்கு கல்வி ஞானம் கிட்டும். அம்பிகையின் அருளால் விரும்பிய நலன்கள் வாழ்வில் கிடைக்கப்பெறும்.


பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சனுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு

.


பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சனுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் கடந்த 11-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து, அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யா ஆகியோருக்கும் வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், அமிதாப் பச்சன் தனது ரசிகர்களுக்காக ட்விட்டரில் கவிதை வடிவில் ஒரு பதிவை நேற்று வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது: விதி மிகவும் சக்தி வாய்ந்த ஒன்று. எனக்கு கரோனா தொற்று ஏற்பட்டு சிறைபடுத்தப்பட்டிருப்பதும் விதியால் நிகழ்ந்ததுதான். எந்த வகையான சிறைபடுத்தலுக்கும் நிச்சயம் ஒரு முடிவு உண்டு. அந்த வகையில், எனது இந்த சிறைவாசத்துக்கும் ஒரு முடிவு இருக்கும்.
அனைவருக்குமே தனிப்பட்ட முறையில் ஒரு எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் இருக்கும். ஆனால், நிர்ணயிக்கப்பட்ட விதியை வெற்றிக் கொள்பவர் யாரும் கிடையாது. மக்களில் பெரும்பாலானோர் தங்கள் விதியை ‘நான்’ என்ற அகந்தையால் வெற்றி கொள்ள நினைக்கின்றனர். ஆனால், அவர்களின் எண்ணம் ஈடேறுவதில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீவித்யா பிறந்த நாள் ஸ்பெஷல்: கண்களால் பேசிய அபூர்வ நடிகை

.

இன்று (24 July ) நடிகை ஸ்ரீவித்யாவின் பிறந்த நாள். அவரைப் பற்றிய சில நினைவுகளை அசைபோடுவோமா? சில முகங்களை வெறுக்க நினைத்தாலும் வெறுக்க இயலாது அப்படியொரு முகம் கொண்டவர் ஸ்ரீவித்யா. பார்த்தவுடன் ஈர்க்கும் அழகு அவருக்கு இருந்தது. ஆனால், அவரது வெற்றிக்குக் காரணம் அந்த அழகு அல்ல; அவரது நடிப்புத் திறனே. எந்த வேடமிட்டாலும் அதில் தனது திறமையை வெளிப்படுத்தி தனக்கு வாய்ப்புத் தந்த இயக்குநருக்குத் திருப்தியை அளித்துவிடும் நுட்பம் அவருக்குள் நிறைந்துகிடந்தது.
ஒரு கதாபாத்திரத்தின் உணர்வுகளைப் பார்வையாளர்களுக்குத் தருவதற்கு நடிகர்களுக்குப் பெரிதும் உதவுபவை கண்கள். நடிப்பைக் கண்களில் வெளிப்படுத்த இயலாத நடிகர்கள் திரையில் வெற்றிபெறுவது கடினம். அந்த வகையில் நடிகை ஸ்ரீவித்யா கொடுத்துவைத்தவர். அவரது அழகான இருவிழிகள் உணர்வுகளின் ஊற்றுக்கண்கள். இதயத்தில் ததும்பும் மெல்லிய உணர்வை இதழ் சொல்லத் தயங்கும்போது அவரது கண்கள் அந்த வேலையைச் செம்மையாகச் செய்யும். சொந்த வாழ்வின் ஏற்ற இறக்கமான சம்பவங்களால் உருவான, இதழ்களால் சொல்ல முடியாத எத்தனையோ சோகங்களை அந்த இரு கண்களுக்குள் பதுக்கிக்கொண்டு தனது நடிப்பைக் காண வரும் ரசிகர்களை ஏமாற்றாமல் அவர் அந்தக் கண்களின் வழியே அள்ளித்தந்த குறும்பு, காதல், தோழமை, ஏக்கம், சோகம் போன்ற பல்வேறு உணர்வுகளை வேறிரு கண்களால் தந்திருக்க முடியுமா?


இணைய வழி இனிய இலக்கிய சந்திப்பு - தமிழறிஞர் சாலமன் பாப்பையா 22/08/2020





இலங்கைச் செய்திகள்


கனத்த மழையினால் பல பகுதிகள் நீரில் மூழ்கி போக்குவரத்து பாதிப்பு

பிதுர் தர்ப்பணம் செய்யும் ஆடி அமாவாசை

கருணாவுக்கு எதிரான மனு விசாரணையின்றி நிராகரிப்பு

முன்னாள் புலிகளுடனான உறவு தேர்தலின் பின்னரும் தொடரும்

19ஆவது திருத்த சட்டத்தில் மாற்றம் ஒன்று அவசியமே

கிழக்கு மாகாணத்தில் வீழ்ச்சியடைந்து வரும் தமிழர் பிரதிநிதித்துவங்கள்

முன்பள்ளிகள் அமைச்சு ஒன்றின் கீழ் கொண்டு வரப்படும்

தொல்பொருள் சட்டத்தை திருத்துவது தொடர்பில் ஆராய நிபுணர் குழு நியமிக்க முடிவு

 UNP ஒரு கட்சிதான்; கிளைகள் கிடையாது

பொய்க்குற்றச்சாட்டு சுமத்திய நபரிடம் 1,000 கோடி நஷ்டஈடு


கனத்த மழையினால் பல பகுதிகள் நீரில் மூழ்கி போக்குவரத்து பாதிப்பு




வானிலையில் திடீர் மாற்றம்; இருவர் மரணம்; தொடரும் அபாயம்:
05 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிகை

நாட்டின் தென்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள  தாழமுக்கம் காரணமாக நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் தற்போது நிலவும் கடும் மழையுடனான சீரற்ற காலநிலை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்குமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அதேவேளை கடந்த 24 மணித்தியாலங்களில் கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட பிரதேசத்தில் 219 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. அத்துடன் காலியில் சில பிரதேசங்களில் 160 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் களுத்துறை மாவட்டத்தின் சில பிரதேசங்களில் 117 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் இரத்தினபுரி பறக்கடுவ பிரதேசத்தில் 106 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் கம்பஹா பகுதியில் 100 மில்லி மீற்றருக்கு அதிகமான மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அடுத்து வரும் 12 மணித்தியாலங்களில் அதைவிட அதிகமான மழை வீழ்ச்சி இடம்பெறலாம் என்றும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.  
அதே வேளை கடும் மழை காரணமாக வானிலை அவதான நிலையம் சிவப்பு அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குத் தொடருமெனவும் அறிவித்துள்ளது.  

உலகச் செய்திகள்


கொரோனா மீட்புக்காக பெரும் நிதிக்கு ஐ. ஒன்றியம் இணக்கம்

லிபியாவுக்கு படையை அனுப்ப எகிப்து பாராளுமன்றில் ஒப்புதல்

 'வைரஸில் இருந்து பாதுகாப்பு' விளம்பரம் செய்த ஆடை நிறுவனத்திற்கு அபராதம்

பதில் நடவடிக்கை: செங்டுவில் அமெரிக்க துணைத் தூதரகத்தை மூட சீனா உத்தரவு

ஈரான் பயணிகள் விமானத்தை நெருங்கி அச்சுறுத்திய அமெரிக்க போர் விமானம்

தகாத உறவு: நியூசிலாந்தின் மூத்த அமைச்சர் பணிநீக்கம்

93 வயது நாஜி வதை முகாம் காவலருக்கு ஒத்திவைத்த சிறை

பயணிகளை பணயக் கைதிகளாக பிடித்த நபர்: ஜனாதிபதி தலையீடு

அடுத்த ஆண்டு வரை கொரோனா தடுப்பு மருந்து சாத்தியம் இல்லை


கொரோனா மீட்புக்காக பெரும் நிதிக்கு ஐ. ஒன்றியம் இணக்கம்




கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்க 750 பில்லியன் யூரோ மதிப்பிலான நிதி தொகுப்பிற்கு ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தலைமை அலுவலகத்தில், பட்ஜெட் மற்றும் பொருளாதார மீட்பு நிதி தொகுப்பு உள்ளிட்டவை குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக உள்ள நாடுகளின் தலைவர்கள் நேரடியாக சந்தித்து ஆலோசனை நடத்தினர். கடந்த ஐந்து நாட்களாக நடந்த ஆலோசனைக்கு பின்னர், இறுதியாக ஐரோப்பிய ஒன்றிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் ஒற்றை வரியில் 'டீல்' என டுவிட்டரில் பதிவிட்டார்.
கொரோனா தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இந்த நிதி தொகுப்புடன், முன்னெப்போதும் இல்லாத வகையில், அடுத்த 7 ஆண்டுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒட்டுமொத்த பட்ஜெட் தொகையாக 1.82 டிரில்லியன் யூரோக்கள் ஒதுக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒப்புதல் குறித்து “ஐரோப்பாவுக்கு வரலாற்று சிறப்பு மிக்க தினம்” என பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோன் பாராட்டு தெரிவித்துள்ளார்.   நன்றி தினகரன் 

அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் – பகுதி 24 – குந்தளம் – சரவண பிரபு ராமமூர்த்தி


குந்தளம் – தோற்கருவி
அமைப்பு
இரண்டு தனிக்கருவிகளைக் கொண்ட குந்தளம், வெண்கலம்
அல்லது பலா மரத்தால் செய்யப்படுகிறது. ஒன்று வளந்தலை, மற்றொன்று தொப்பி. இரண்டையும் இணைத்தே இசைக்க வேண்டும். ஒன்றில் ‘ந’கர ஒலியும், மற்றொன்றில் ‘த’கர ஒலியும் எழும்பும். தொப்பியில் சற்று மென்மையான தோலும், வளந்தலையில் சற்று கடுமையான தோலும் வார்க்கப்படுகிறது. வளந்தலைக்கு சவுக்கு அல்லது அழுத்தமான காட்டுமரக் குச்சியைப் பயன்படுத்துவர். தொப்பிக்கு ஆவாரங்குச்சி அல்லது புளியங்குச்சி. இக்குச்சியை நெருப்பில் இட்டு வளைத்து, வில்போல உருட்டி அடியையும், நுனியையும் இணைத்து ஒரு கயிறால் கட்டி, அதன் முனையால் இசைக்க வேண்டும்.

குறிப்பு
கொடுகொட்டியைப் போன்ற இருமுகத் தோலிசைக் கருவி
குந்தளம். கொடுகொட்டியின் சற்று மருவிய வடிவம் தான் குந்தளம். இக்கருவி கோந்தளம், கொந்தளம், குந்தாளம் ஆகிய பெயர்களாலும் குறிக்கப்படுகிறது. அம்மன் கோயில்களில் திருவிழாக் காலங்களில் வாசிக்கப்படுவது. இக்கருவி, மராட்டியர்கள் வழியாக தமிழகத்துக்கு வந்ததாக ஒரு கருத்து உண்டு. ஆனால் பல ஆய்வாளர்கள் இதை ஏற்றுக்கொள்வதில்லை. தமிழ்த்திணைகளில் மருதநிலத்துக்கு உரியதாக ‘கிணை’ என்றொரு பறையை தொல்காப்பியர் சுட்டுகிறார். அதன் பிற்கால வடிவமே குந்தளம் என்பது, சென்னை இசைக்கல்லூரிப் பேராசிரியை டாக்டர் சுப்புலெட்சுமி மோகனின் கருத்து. குந்தளத்தின் பிறப்பிடம் தமிழகம்தான். இங்கிருந்து மராட்டிய மண்ணுக்குப் பரவி, மீண்டும் மராட்டியர்கள் வாயிலாக இங்கே வந்திருக்கலாம்’ என்கிறார் சுப்புலெட்சுமி மோகன். மகாராஷ்டிரத்தில் குந்தளம் "கோந்தாள்" என்று அழைக்கப்படுகிறது. அங்குள்ள பவானி அம்மன் கோவில்களிலும் மராட்டிய மக்களின் இல்லச் சடங்குகளிலும் இசைக்கப்படுகிறது. குந்தளத்தை தமிழர் இசைக்கருவியாக குறிப்பிடலாமா என்று சிலர் கேட்கிறார்கள். தமிழர் நிலத்தில் 300 ஆண்டுகளாக தமிழ் மக்களின் ஆதரவு பெற்றதும், தமிழ் மக்களை மகிழ்வித்து வருவதுமான குந்தள இசைக்கருவியை கண்டிப்பாக அந்த பட்டியலில் சேர்க்கலாம்.

சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்தவர் திரு கஜேந்திரன் அவர்கள். இவர் தஞ்சையை பூர்வீகமாகக் கொண்ட பொய்க்கால் குதிரை ஆடும் மராட்டிய குடும்பத்தைச் சேர்ந்தவர். நம்மிடம் விரிவாகப் பேசினார்.  அவரது பரம்பரையினர் பலரும் இதே தொழிலை மேற்கொண்டு வந்தவர்கள் தான். குந்தளம் சில மாற்றங்களுடன் தற்பொழுது பயன்படுத்தப் படுவதாக கூறுகிறார். வலந்தலைக்கு ஃபைபர் பயன்படுத்தப் படுகிறது என்கிறார். தஞ்சை வடக்கு வாசல்கீழ வாசல் ஆகிய பகுதிகளில் உள்ள அம்மன் கோயில் திருவிழாக்களில் குந்தளம் முக்கிய இசைக்கருவியாக இசைக்கப்டும் என்கிறார் திரு கஜேந்திரன் அவர்கள்.

மாறுபட்ட சிந்தனைப் பண்பாடு - நாட்டிய கலாநிதி கார்த்திகை கணேசர்

.

கடந்த ஞாயிறு ABC அலைவரிசையில் Talk back நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டு கார் ஓடிக்கொண்டிருந்தேன். திருமண வாழ்வில் பொன் விழாக் காணும் தம்பதியருடன் ஒலிபரப்பாளர் பேசினார். ஆமாம், இந்தத் தம்பதியர் 1955இல் திருமனம் செய்தவர்கள். தமது பொன் விழாவைக் கொண்டாடும் பொருட்டு Flying boat இல் மெபோர்னில் இருந்து கடல் மூலமாக சிட்னிக்கு வந்துள்ளார்கள். பொன் விழா கொண்டாடும் தம்பதியர் 70 வயதைத் தாண்டியவர்கள். ஆனால் அவர்களிடம் வயோதிபத்தின் அறிகுறிகள் கிடையாது. திடகாத்திரமும் துணிச்சலும் மிக்கவர்களாக அவர்கள் உரையாடிக்கொண்டிருந்ததைக் கேட்க மகிழ்ச்சியாக இருந்தது.எனது மனம் எம்மவரை நோக்கித் திரும்பியது. அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின் எம்மில் பலருக்கும் திருமண பொன் விழா நடக்கத் தான் செய்கிறது. பெற்றோரைக் கெளரவிக்கும் பொருட்டு பிள்ளைகள் இதை ஒரு விழாவாக நடத்துகிறார்கள். பலரும் வந்து வாழ்த்தி உணவுண்டு களித்துப் போகிறார்கள். ஆனால் எத்தனை பேர் இந்த அவுஸ்திரேலியத் தம்பதிகளைப் போல் திடகாத்திரமானவர்களாக இருக்கிறார்கள்? எத்தனை பேர் இந்த வயதிலும் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்னும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்?

இவை ஏன்? எமது சிந்தனையின் வேறுபாடா? கலாசார வேறுபாடா? பண்பாடா? ஆம்; அத்தனையும் காரணம் எனக் கூறலாம்.

எமது பாரம்பரியம் பெற்றோரானவர்கள் குழந்தைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்குவதுடன் நின்றுவிடுவதல்ல; தொடர்ந்தும் அவர்களைப் பராமரிக்க வேண்டும் என்று எண்ணுகிறோம். ஒரு பையனோ பெண்ணோ 18 வயதை அடைந்ததும் அவர்கள் பெரியவர்கள் ஆகி விட்டார்கள் தம்மைக் கவனித்துக் கொள்ளும் 

புகலிடத்தமிழ் இலக்கியத்தில் அவுஸ்திரேலியாவின் வகிபாகம் - அங்கம் 05 முருகபூபதி


( மதுரை உலகத் தமிழ்ச்சங்கமும் அவுஸ்திரேலியத் தமிழ் வளர்ச்சி மன்றமும் இணைந்து நடத்திய  காணொளி ஆய்வரங்கில்  சமர்ப்பிக்கப்பட்ட  கட்டுரை )

தமிழ் எழுத்தாளர் விழா இயக்கமும் வாசிப்பு அனுபவப்பகிர்வும் !
  விக்ரோரியா ,  நியூசவுத்வேல்ஸ்,  குவின்ஸ்லாந்து, கன்பரா, மேற்கு – தெற்கு  அவுஸ்திரேலிய  மாநிலங்களில்  எழுத்தார்வமுடன் இயங்குபவர்களை இனங்கண்டுகொண்டதன் விளைவாக 2001 ஆம் ஆண்டில்  உருவானதே அவுஸ்திரேலியா தமிழ் எழுத்தாளர் விழா இயக்கம்.
  “  அறிந்ததைப்பகிர்தல், அறியாததை அறிந்து கொள்ள முயல்தல்   “  என்ற சிந்தனையை  அடியொற்றி,  கலையும் இலக்கியமும் இனத்தின் கண்கள் என்பதையும் வலியுறுத்தி  2001 ஆம் ஆண்டு முதல் மாநிலங்கள் தோறும் வருடாந்தம் தமிழ் எழுத்தாளர் விழா நடைபெற்று வருகிறது.  அந்த இயக்கம் 2004 ஆம் ஆண்டு விக்ரோரியா மாநிலத்தில் அரசில் பதிவு செய்யப்பட்ட அமைப்பாக தமிழ் இலக்கிய கலைச்சங்கம் என்ற பெயரில் தொடர்பயணத்தில் ஈடுபடுகின்றது.
பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் கரங்களினால் ஓர் ஆதி இனம் நசுக்கப்பட்டு, அந்த இன மக்களின் குழந்தைகள் திருடப்பட்டு வெள்ளை இனக்கலப்பிற்கான எத்தனம் உருவாகி Stolen Kids என்ற பிரயோகம்   ஆக்க இலக்கியத்திலும் பேசுபொருளானதை அறிவீர்கள்.
புலம்பெயர்வாழ்வு அவலமும் பதட்டமும் வலிகளும் நிரம்பப்பெற்றது. இரண்டகத்தன்மையை உள்வாங்கியிருப்பது. அதனால்   இங்கு வந்து குடியேறியவர்கள்,  தத்தம் இன அடையாளம் குறித்த அக்கறையோடு வாழத்தலைப்பட்டனர். 

பாட்டி சொல்லைத் தட்டாதே - V.S.கணநாதன்

.
 கண்ணா, அந்தக் காலத்திலே,” என்று சொல்ல, “பாட்டி, என்னை தொந்தரவு பண்ணாதேங்கோ.  நான் என் mobile phonil பகிடிக்கதை கேக்கிறேன்.

அவுஸ்திரேலியாலே பிறந்து வளர்ந்த உனக்கு எப்படி புரிய வைக்கிறது? உன் பெற்றோரும் நானும் யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். உன் பாட்டா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணி புரிந்தவர். காத்தாலே நாலரை மணிக்கு அலாரம் வைச்ச மாதிரி படுக்கை விட்டெழுந்து, கிணத்தடியில் குளிச்சு ……
பாட்டி, நான் நம்பிற மாதிரி கதை சொல்லுங்கோ. நடுங்கிற குளிரில் பாட்டா கிணத்தடியில் குளிச்சு.. என்று சொல்லிச் சிரித்தான்.
கண்ணா, மெல்போர்ன் குளிர் மாதிரி இல்லை எங்கள் ஊரில். அது உடம்புக்கு இதமாக இருக்கும். ஆனால் மாரி காலத்திலே மட்டும் பெரிய அண்டாவில் தண்ணி கொதிக்க  வைச்சு சுடுதண்ணீரில் குளிப்பார். நான் கோப்பி செய்து குடுக்க, அதை அருந்தி, எங்கள் அத்தியடி வீட்டில் இருந்து நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கு நடந்தே போய் முருகனை தரிசித்து வருவார்.
மழை நாட்களிலும் நடந்து போவாரா?
மழை நாட்களில் மட்டும் காரில் போயிட்டு வருவார். அவர் வெளிக்கிட்டவுடன் நான் உன் அப்பாவை எழுப்பி பல் துலக்கிட்டு படிக்கச் சொல்லுவேன். அவனும் அஞ்சு மணியில் இருந்து ஏழு மணிவரை பாடமாக்க வேண்டியதை, பெலத்து பாடமாக்குவான். அவன் தப்பா ஏதும் சொன்னால் நான் உடனே திருத்திடுவேன். சின்னப் பிள்ளைகள் 12 ஆம் வாய்ப்பாடு வரையும், மேல் வகுப்பில் 16 ஆம் வாய்ப்பாடு வரையும் பிழை விடாமல் பாடமாக்க வேண்டும்.
பாட்டி, கஷ்டமான கணக்கு செய்ய, என் calculator மின்னல் வேகத்தில் விடை தந்திடும்.
தெரியும்டா. அந்தக் காலத்தில் ஆத்தி சூடி, நன்னெறி, மேலும் அந்தந்த வகுப்புக்கு ஏற்ற தமிழ், ஆங்கிலக் கவிதைகளை ஒரு சொல்லுத் தவறாமல் பாடமாக்க வேண்டும்.
பாட்டி, நாங்கள் இங்கே அப்படி பாடமாக்க கூடாது. பக்கத்திலிருக்கும்  மாணவனிடம் இருந்து கொப்பி அடித்திட்டான், அல்லது Plagiarism என்று டீச்செர் குற்றம் சாட்டி மாணவனுக்கு மார்க்ஸ் வெட்டுவார்.

கவிஞர் அம்பி எழுதும் சொல்லாத கதைகள் – அங்கம் - 23 கைரேகைச் சாத்திரமும் தலைவிதி மாற்றமும் ! பால்ய காலமும் பாப்புவாநியூகினியும்


“ திரைகடல் ஓடியும் திரவியம் தேடு “  என்று சொன்ன பரம்பரையிலிருந்து வந்தவர்கள் நாம். ஆழ்கடலைக்கடந்து கப்பலோட்டிய தமிழர்கள்தான் எமது முன்னோர்கள்.
எமது தாயகத்திலும் எம்மவர்கள் 1956 காலப்பகுதியில் கப்பலேறிய கதையும் தெரியும்தானே…? அதன்பின்னரும்  1977 இல் லங்காராணி கப்பலில் ஏறிச்சென்ற கதையும் தெரியும்தானே..? இதற்கெல்லாம் முன்பு வல்வெட்டித்துறையிலிருந்து தமிழர்கள் அமெரிக்காவுக்கும் கப்பலில் சென்றார்கள்.
தமிழ்நாடு தூத்துக்குடியிலிருந்து  சுதந்திர போராட்ட வீரர்  வ. உ. சிதம்பரப்பிள்ளையும் கப்பலோட்டினார்.  இந்த வரலாறுகள் புத்தகங்களில், திரைப்படங்களில், நாவல்களில் சொல்லப்பட்டுள்ளன. அவை பற்றி நான் புதிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை.
எத்தகைய இக்கட்டு நேர்ந்தாலும் விடா முயற்சியில் ஈடுபட்டவர்கள்தான் எமது  வழித்தோன்றல்கள்!
அந்தப்பரம்பரையில் வந்திருக்கும் நானும், பாப்புவாநியூகினி நாட்டுக்குச்  செல்வதற்கு ஏன் தீர்மானித்தேன்..?
திரவியம் தேடி சீமானாக வாழ்வதற்கா..?
மாடி மனையும் கூடகோபுரமும் கட்டி எழுப்புவதற்காகவா..?

அவ்வாறு வாழ்ந்து பலரதும் கவனத்தையும் என்பால் திசைதிருப்புவதற்காகவா…?

மழைக்காற்று ( தொடர்கதை ) - அங்கம் 45 முருகபூபதி

ஞ்சுளாவின் தாய்  சிவகாமசுந்தரி கூடத்திலிருந்த ஷோபாவில் காலை நீட்டி நிமிர்த்தி படுத்துக்கொண்டாள்.  அபிதா, மஞ்சுளாவின் அறைக்குச்சென்று ஒரு தலையணைக்கு உறைமாற்றி எடுத்துவந்து கொடுத்தாள்.
 “ மஞ்சுவின்ர தலையணையா…?  தேங்ஸ்.  அபிதா.. நான் கொஞ்சம் கண்ணயர்ந்துகொள்கிறேன்.  சமையல் முடிந்ததும் எழுப்பு.  பயண அசதிபோவதற்கு தூங்கி எழுந்து ஒரு குளியல்போடவேண்டும். “ 
“  அம்மா.. நீங்க உள்ளேபோய் மஞ்சுவின் கட்டிலிலேயே படுக்கலாமே.  “   என்றாள் அபிதா.
“  வேண்டாம்… இங்கே நல்ல காற்றோட்டம் இருக்கிறது  “  அடுத்த கணம் சிவகாமசுந்தரி கண்களை  மூடிக்கொண்டாள்.
 ‘ மஞ்சுவின்ர  தலையணையா..?  ‘ எனக்கேட்டபோது,  அவளது கண்களில் தோன்றிய மின்னலில் நீரும் கசிந்திருந்ததை அபிதா அவதானித்தாள்.
மனதிற்குள்  ‘ பெற்றமனம் ‘  என்று முணுமுணுத்தவாறு  மதியவேளை சமையலில் மூழ்கிய அபிதாவுக்கு யோசனைகள் பலமாக எழுந்தன.
தனது தாய் இன்று வருவா என்பதை சொல்லாமலேயே மஞ்சுளா வேலைக்குச்சென்றிருப்பதற்கான காரணத்தை ஆராய்ந்தாலும் அவளுக்கு பதில் கிடைக்கவில்லை.
முதல்நாள் இரவு, மஞ்சுவுக்கு சொன்ன புத்திமதிகளினால் இவ்வளவு சீக்கிரம் அவள் மனம் மாறி, தாயை அழைக்கும் அளவுக்கு நிதானம் வந்தமைதான் அபிதாவுக்கு பேராச்சரியமாக இருந்தது.
இந்த வீட்டிலிருப்பவர்கள் ஒவ்வொருவராக விடைபெற்றுச்சென்றுவிட்டால், தான் தனித்துவிடுவேன் என்ற கவலை அவளுக்கு  வந்திருக்கவும் கூடும். அதனால்தான்,  என்னை தன்னுடன் வந்துவிடும்படி கூறினாளோ…?
அல்லது, தனது தாய், யாரையோ நம்பிச்சென்று, காலம் கடந்து தனிமரமாகியிருப்பதை அறிந்துவிட்டதனால் வந்த பச்சாதாபமா..?
எது எப்படி இருந்தாலும்,  நீண்ட இடைவெளிக்குப்பின்னர் தாயும் மகளும் ஒன்றுசேர்ந்திருக்கிறார்கள். அதனைக்கொண்டாடத்தான் வேண்டும்.

அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி - 2020





வாசகர் முற்றம் – அங்கம் – 09 தேர்ந்த வாசகியாக வளர்ந்து, எழுத்தாளராக மிளிர்ந்திருக்கும் சகுந்தலா கணநாதன் ! கல்கியின் சிவகாமி – கொத்தமங்கலம் சுப்புவின் தில்லானா மோகனாம்பாள் முதல் வின்னி மண்டேலா – ஜூலியா கிளார்ட் வரையில் பேசும் வாசகி ! முருகபூபதி


ம்மாவிடம் அன்பையும் அப்பாவிடம் அறிவையும் பெறலாம் என்பார்கள் எமது முன்னோர்கள்.
ஆனால்,  எமது சமூகத்தில் இது மாறியும் நிகழ்வதற்கு வாய்ப்பு அதிகம். அம்மா கண்டிப்பாக இருப்பார். அப்பா செல்லம் பொழிவார்.
எனது  வாசகர் முற்றம் தொடரில் இப்போது,  நான் அறிமுகப்படுத்தவிருப்பவருக்கு எமது அவுஸ்திரேலியத் தமிழர்களின் புகலிடச்சூழலில் அறிமுகம் அவசியமில்லை.  அவர்,  தமது அம்மாவிடமும் அப்பாவிடமும் வாசிப்பு அனுபவமும் உலக அனுபவமும் பெற்று வளர்ந்திருப்பவர். 
அவர் தேர்ந்த வாசகர். அத்துடன் தமிழிலும் ஆங்கிலத்திலும்
எழுதிவருபவர். வயதால் மூத்தவர்.  இனிய இயல்புகளுடன் எப்போதும் மந்திரப்புன்னகையை   வதனத்தில்  கொண்டிருப்பவர். அதனால் ஒரு அன்னையின் ஸ்தானத்தில் வைத்துப்போற்றப்படவேண்டியவர்.  
அவர்தான் திருமதி சகுந்தலா கணநாதன் அவர்கள்.
“  அம்மா... உங்களுக்கு வாசிக்கும் பழக்கத்தினை தூண்டியவர் யார்..? “  எனக்கேட்டேன்.
அவர், தனது குழந்தைப்பராயத்து நினைவுகளை  பகிர்ந்துகொண்டார். அவருடைய தாயார், குழந்தைகள் எப்போதும் சிரித்து மகிழ்ந்திருக்கவேண்டும் எனக்கருதும் சராசரித் தாய்மாரிலிருந்து சற்று வேறுபட்டிருந்திருப்பது தெரியவருகிறது.
திருமதி சகுந்தலா கணநாதன் இப்படிச்சொல்கிறார்:
 “ ஆரம்பத்தில் எமது  அம்மா எங்களுக்கு தேவாரங்கள், திருப்புகழ்,  கீர்த்தனைகள் என்று பலதையும்  சொல்லித்தந்தார்.   பிறகு     சிறுவருக்காக   வெளிவரும்    நகைச்சுவை கதைப் புத்தகங்களை வாங்கி வந்து   எங்களுக்காக குரல் எடுத்து  இரவில்  நாம் உறங்கச்செல்லும்போது வாசிப்பார். அவர் கதைசொல்லும் பாங்கினால் நாமும் அதில் ஒன்றித்துவிடுவோம்.   இவ்வாறு  Bed Time Stories  கேட்டு வளர்ந்தவள் நான்.   “குழந்தைப் பருவத்தில்  நாம்  சிரிச்சு களிக்க வேண்டும்,” என்று அம்மா அப்பாவிடம்  அடிக்கடி சொல்லுவார்.

திரையிசைத் தென்றல் திருச்சி லோகநாதன் பிறந்த நாளில் அவரின் புதல்வர்கள் சிறப்பித்த நிகழ்ச்சி



இசைத் தென்றல் திருச்சி லோகநாதன் அவர்களின் பிறந்த நாளில் அவரின் புதல்வர்கள் திரு T.L.தியாகராஜன்,  திரு சங்கராஜா லோகநாதன் இவர்களோடு T.L. தியாகராஜன் புதல்வி மற்றும் திருச்சி லோகநாதன் பேத்தி தீபிகா கலந்து சிறப்பித்த வீடியோஸ்பதி நேரலை

Dil Bechara திரை விமர்சனம்


ஒரு சில படங்கள் தான் நம் நினைவிற்கு மிக நெருக்கமாக இருக்கும், அப்படி மிக நெருக்கமான ஒரு படமாக அமைந்துள்ளது சுஷாந்த் நடிப்பில் இன்று OTYயில் வெளிவந்துள்ள Dil Bechara படம், ஆம், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் அவர்களின் கடைசி படம் இது, இதனாலேயே இப்படத்தை பார்க்க கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
கதைக்களம்
சஞ்சனா கேன்சரால் பாதிக்கப்பட்டவர், அவருக்கு எங்கு சென்றாலும் ஆக்சிஜன் சிலிண்டருடன் செல்லும் ஒரு கொடுமையில் இருந்து வருகிறார், கிட்டத்தட்ட வாழ்க்கையே ஒரு போரிங் என்று தான் செல்கிறது.
அப்போது அவருக்கு சுஷாந்தின் அறிமுகம் கிடைக்க, அவரும் கேன்சரில் ஒரு கால் இழந்து ரஜினி போல் ஆகவேண்டும் என்று தன் நண்பனுடன் இணைந்து ஜாலியாக வாழ்க்கையை நடத்துகிறார்.
அப்போது சுஷாந்த் சஞ்சனாவை பார்க்க, பார்த்தவுடன் பிடிக்க, சஞ்சனாவும் ஒரு கட்டத்தில் அவருடன் பயணப்பட இவர்கள் வாழ்க்கையில் நடக்கும் இன்பம், துன்பம், சந்தோஷம், துக்கம், இழப்பு ஆகியவை மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
இப்படத்திற்கு பலரும் விமர்சனம் செய்யவில்லை, இது சுஷாந்திற்கான டிரிபியூட் என்று தான் சொல்கிறார்கள், அப்படியாகவே தான் படமும் அமைந்துள்ளது.
இத்தனை துறுதுறு இளைஞரை இந்திய சினிமா இழந்துவிட்டதே என்ற ஏக்கம் ஒவ்வொரு காட்சியிலும் அவரை பார்க்கும் போது தோன்றுகின்றது.
அதிலும் சஞ்சனாவின் அப்பாவிடம் ' நீங்கள் நான் சஞ்சனாவை காதலிப்பதை சில்லி என்கிறீர்கள், என் காலை எடுக்கும் போது என் அப்பாவிடம் வேண்டாம் என்றேன்.
என்னால் இனி எப்போது பேஸ்கட் பால் விளையாட முடியும் என்று கேட்டேன், அப்போது என் அப்பா கூட சில்லி என்றார், ஆனால், காலை எடுத்த பிறகும் நான் பேஸ்கட் பால் விளையாண்டேன், என்னுடைய கனவு பெரிது, ஆனால், சஞ்சனா கனவு சிறிது, அதை நான் நிறைவேற்ற வேண்டும்' என அவர் பேசும் காட்சி சுஷாந்த் என்றும் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்க மாட்டார்.
மேலும், சஞ்சனாவிற்கு பிடித்ய விஷயங்களை சுஷாந்த் செய்ய, சுஷாந்திற்கு பிடித்தது போல் சஞ்சனா அவருடன் படத்தில் நடிக்க, அதை கிளைமேக்ஸில் நண்பர்களுடன் போட்டு காண்பிப்பது செம்ம டச்.


ஆனால், சுஷாந்த் நினைவுகள் தாண்டி இதை ஒரு படமாக அனுகினால், இன் கம்ப்ளிட் மூவியாக தான் இருக்கும், ஒரிஜினல் மூவியில்(The fault in our stars) உள்ள ஒரு கனேக்ட் இதில் கொஞ்சம் மிஸ்ஸிங்.
ஆனால், சுஷாந்த் பற்றி சஞ்சனா சர்ச்சில் பேசும் காட்சி கண்டிப்பாக ஒவ்வொரு ரசிகனின் மனநிலை தான். மிக எமோஷ்னல் நிறைந்த காட்சி.
இப்படத்தின் மிகப்பெரிய பலம் ரகுமான் இசை தான். பாடல்கள் எல்லாம் ஆல்ரெடி சென்சேஷ்னல் ஹிட்.
மொத்தத்தில் க்ளாப்ஸ், பல்ப்ஸ், மார்க் இதையெல்லாம் பார்க்காமல் சுஷாந்திற்காக கண்டிப்பாக ஒவ்வொருவரும் பார்க்கலாம் இந்த Dil Bechara.   நன்றி CineUlagam