மரண அறிவித்தல்

.
                                                              மரண அறிவித்தல்
                                                               
                                                      திரு குமார் சித்தாந்துரை

இறப்பு - 11 - 01 - 2011
திரு குமார் சித்தாந்துரை அவர்கள் 11 -01 -2011 அன்று மட்டக்களப்பில் இறைபதம் அடைந்தார். இவர் இளைப்பாறிய ஒட்டுப்பலகை கூட்டுத்தாபன முகாமையாளரும் , திருமதி தெரேச சித்தாந்துரை அவர்களின் அன்பு கணவரும்,  ஜானெட் கெல்வின்,  ரோக்கி,  காலம் சென்ற சக்கி நத்தனியால் ஆகியோரின் அன்புத் தந்தையும் கெல்வின் பெரேரா,  ஸ்டெல்லா ராக்கி ஆகியோரின் அன்பு மாமனாரும் அஞ்சேலோ கெல்வின்,  நிமிஷ கெல்வின், நிகிட்டா ராக்கி, அனுஷ்க ராக்கி ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார் . இத்தகவலை உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்ற்றுக் கொள்ளவும். மேலதிக விபரங்களுக்கு
ஜென்நெட் கெல்வின் : 02 -97497839, 0459571800
அல்லது ராக்கி : 02 -96751105 ஃ0433619452

வாயுரைக்க வருகுதில்லை வாழி நிந்தன் மேன்மையெல்லாம்!

.
இந்த உலகிற்கு ஒரு பெருமை இருக்கின்றது. அது என்ன பெருமை? நேற்று இருந்தவர் இன்று இல்லை என்பது இந்த உலகத்திற்குப் பெருமை என்கிறார் வள்ளுவர்.
நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை எனும்
பெருமை உடைத்து இவ்வுலகு.
சர்விகா விஜயகுமாரன் எனும் இளமயில் தனது வாழ்வை இளமையில் முடித்துக்கொண்டபோது இக்குறளைத் தான் நினைக்க முடிந்தது. அறிவிக்குப் புரிந்த இத்தத்துவம் என் உணர்வுக்குப் புரியாமையினாலேயே இதனை எழுதுகின்றேன்.  எனது பதவிக்காலத்தின் நிறைவுக்கட்டத்தில் ஒரு அழகிய தமிழ் மகளுக்கு அஞ்சலியைச் செய்யவேண்டியிருக்கும் என நான் நினைத்திருக்கவில்லை.

பொங்கல் வாழ்த்துக்கள் 15.01.2011

.


அனைத்து மக்களுக்கும் தமிழ்முரசுஒஸ்ரேலியாவின் பொங்கல் வாழ்த்துக்கள் 15.01.2011

அவுஸ்ரேலிய திரை அரங்குகளில் சிறுத்தை / ஆடுகளம்

.        
அவுஸ்ரேலிய திரை அரங்குகளில் சிறுத்தை / ஆடுகளம்
          ஜனவரி 14 , 15 ,16 ம் திகதிகளில் காணதவறாதீர்கள்                                                                                                                                                                                     















காட்சி நேரங்கள்

மரண அறிவித்தல்



அமரர் திரு சின்னப்பு பிரணவநாதன்
04-04-1928       -        06-01-2011

யாழ்ப்பாணத்தைப் பிறப்படமாகவும், சிட்னியை வதிவிடமாகமாகவும் கொண்ட திரு சின்னப்பு பிரணவநாதன் 6ம் திகதி ஐனவரி மாதம் இரவு சிவபதமடைந்தார்.

அன்னார் கமலநாயகியின் அன்பு கணவரும், காலஞ்சென்ற சின்னப்பு, கனகம்மா ஆகியோரின் அன்பு மகனும், மயூரன், லோஜனா, அமலன், மோகனன் ஆகியோரின் அன்புத்தந்தையும், கருணாசலதேவா, குமுதினி, கிரிஜா, காயத்திரி ஆகியோரின் அன்பு மாமானாரும் கோகுலன், திரிவேணி, ஜனனி, ஹரிஹரன், சௌமியா, மகனியா, அனிதா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவர் புவனேஸ்வரி, காலஞ்சென்றவர்களாகிய துரைச்சாமி, பாலசிங்கம், சண்முகசுந்தரம் ஆகியோரின் அன்புத் தமையனாரும் ஆவர். இவர் காலஞ்சென்றவர்களாகிய ருக்மணி செல்லப்பா, தவஞானம், சரஸ்வதி, மற்றும் டாக்டர் பாக்கியலட்சுமி சின்னையா ஆகியோரின் மைத்துனரும் ஆவர்.


Viewing

Date: 09/01/2011 Sunday
Time: 3pm to 7pm
Venue: T J Andrews Funeral Parlour, Auburn Road, Auburn

Final Rites
Date: 10/01/2011 Monday
Time: 10am to 12pm
Venue: 4 Brooklyn St., Strathfield South NSW 2136

Cremation
Date: 10/01/2011 Monday
Time: 1.15pm  
Venue: Rookwood Cemetery East Chapel

தொடர்புகள்: (02) 9642 7837 அல்லது 0418 442 674 - கு கருணாசலதேவா (மருமகன்)



ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்

.


தமிழ்முரசுஒஸ்ரேலியாவின் ஆசிரியர்களில் ஒருவரான திரு.கு.கருணாசலதேவா அவர்களின் அன்பு மாமனார் திரு சின்னப்பு பிரணவநாதன் அவர்கள்  ஐனவரி மாதம் 6ம் திகதி இரவு சிவபதமடைந்தார் என்ற துயரச் செய்தி கேட்டு வருந்துகிறோம். ஆறாத்துயரில் இருக்கும் கருணாசலதேவா அவர்களுக்கும் தந்தையை இழந்து வாடும் அவர்தம் மனைவிக்கும் குடும்பத்தினருக்கும் தமிழ்முரசுஒஸ்ரேலியா ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக்கொள்கிறது.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்

 ஓம் சாந்தி...     சாந்தி....  சாந்தி....

ஆசிரியர்குழு

எனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்

.
எனது இலங்கைப் பயணம் -6

கீரிமலையில் இருந்து புறப்பட்டுப் பார்த்துக்கொண்டு செல்வச் சன்னிதியை அடைந்தோம் அந்தணர் இல்லாத கோவில் என்பது பலருக்கும் தெரியும். அங்கு அந்தணர் இல்லாதவர் வாய் கட்டிக்கொண்டு பூசை செய்கின்றார். அங்குசென்றபோதுதான் பலர் உதவிகேட்டு வந்தார்கள். இடம் பெயர்ந்து வந்துள்ளதாக கூறினார்கள் முடிந்த உதவிகளை செய்துவிட்டு நின்ற போது கோவிலுடன் தொடர்புள்ள ஒருவருடன் உரையாடினேன் ஆமி பெரியவன் இந்த கோவிலில் மிகவும் நம்பிக்கை கொண்டவன் என்றும் அடிக்கடி வந்து கோவிலுக்கு உள்ளே வந்து கும்பிட்டு செல்வான் என்றும் கூறினார்.

எனதாக நீயானாய் --- எம்.ரிஷான் ஷெரீப்,

.



ஏழு வானங்களும் நிரம்பி வழியும்படியான

நேசத்தைப் பூத்திருக்கின்றன உனது விழிகள்

சுகந்தம் வீசிப் பரவுமதன் பூரிப்பில்தான்

செழிக்கிறேன் நானும்

வன்னி பாசாலைகளின் நலன் பேணல் நிகழ்வு

.
அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வன்னியில் உள்ள 6 பாடசாலைகளிலுள்ள  மாணவர்களின் தேவைகளை பூர்த்திசெய்யும் நற்பணிக்காக  கடந்த சனிக்கிழமை காலை 9 மணி தொடக்கம் மாலை 6 மணிவரை றேடியோ தோன் நிகழ்ச்சி ஒன்றை நடாத்தி நிதி சேகரித்தது. போரினால் பாதிக்கப்பட்டு பெற்றோர்களை இழந்து தவிக்கும் மாணவர்களுக்கு அப்பியாச புத்தகங்கள் சப்பாத்துக்கள் புத்தக பைகள் போன்ற பொருட்களே வாங்கமுடியாத துற்பாக்கிய நிலை உள்ளது.

கொழும்பில் நடைபெறும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு

 .


  சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு கொழும்புத் தமிழ்ச் சங்க ‘தமிழ்த்தூது’ தனிநாயகம் அடிகளார் அரங்கில் இன்று வியாழக்கிழமை கோலாகலமாக ஆரம்பமானது.

வெளிநாடு மற்றும் உள்நாட்டிலிருந்து வருகை தந்திருந்த பேராளர்களின் பதிவினைத் தொடர்ந்து காலி வீதியிலிருந்து தமிழர் பாரம்பரியத்தை வெளிக்காட்டும் விதமாக எழுத்தாளர்களின் ஊர்வலம் இடம்பெற்றது. பாடசாலை மாணவர்களின் கலாசார நடனங்களுடனும் பக்திப் பாடல்களுடனும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு என்ற வாசகம் பொருத்தப்பட்ட அலங்கார ஊர்தியுடன் ஒற்றுமையுடன் பேராளர்கள் திரண்டிருந்ததைக் காணுகையில் மனம் பூரிப்படைந்திருந்தது.

யுத்தத்தால் உயிரிழந்தோருக்கான அஞ்சலி மற்றும் மங்கல விளக்கேற்றலுடன் மேடை நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. நிகழ்ச்சிகளுக்கு பேராசிரியர் சபா.ஜெயராசா தலைமை தாங்கினார்.

பணத்தைவிட மதிப்புள்ளவன் மனிதன் - சிறுகதை

.



             டாக்டர் பதைபதைத்துப் போனார். பலவிதப்பட்ட நோய்களையும்இ எத்தனையோ வகையான மரணங்களையும் பார்த்துப் பழகிப் போன அந்த மனிதர்இ தன்னுடைய மனைவி இரத்த வாந்தி எடுத்தாள் என்ற செய்தியைக் கேள்விப்பட்டதும் ஒரு மாதிரி ஆகிவிட்டார். தோல் பையைக் கையில் எடுத்துக்கொண்டு அவர் காரில் ஏறினார்.

நோயாளிகள் பரிதாபமாக அவரைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்கள். சிலருக்கு ஊசி போட வேண்டும். சிலருக்கு மருந்து எழுதித் தரப்பட வேண்டும். சிலருக்கு நோய்களைப் பற்றி டாக்டர் கூற வேண்டும். எல்லாரையும் நிராகரித்து விட்டுஇ யாருடைய உடல் நலத்தையும் உயிரையும் பற்றி சிறிதும் கவலைப்படாமல் அவர் தோல் பையை எடுத்துக்கொண்டு காரில் ஏறிவிட்டார்.

ஈஎன் டி எல்எவ் இன் நாட்டுப் பண்.

.

எத்தனை எத்தனை பாடல்கள் பண்ணுகள் என்று புதுப்புத்துக்கொண்டே செல்கின்றார்கள் ஆனால் மக்களைப்பற்றி யாருமே எதுவுமே செய்வதாகவே தெரியவில்லையே. பண்ணும் கோசமும் போட்டு எத்தனை நாட்கள்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டையே அந்த பழைய பாடல் வரிகள் ஞாபகத்திற்கு வருகிறது. இந்தப் பண்ணைக் கேட்க நல்லாத்தான் இருக்கு ஊன்றி கருத்தைக் கவனித்தால் யாரோ யாரையோ மேய்க்கிறதெண்ட கதை சரியாத்தானிருக்கு.

.
இருபதாவது ஆண்டாகத் தைத்திருநாளுக்கு விழா எடுக்கிறது விக்ரோறியத் தமிழ்க் கலாச்சாரக் கழகம்
சாந்தினி புவனேந்திரராஜா

தை முதல் நாள்தைத்திருநாள் –  தமிழ்ப் புத்தாண்டு நாள்தமிழருக்குத் தனிப்பெருந் திருநாள். இயற்கையை வழிபட்டு, இயற்கையோடு இணைந்து வாழ்ந்த பண்டைத் தமிழரின் பண்பாட்டுப் பெருமை மிக்கது தைத்திருநாள்.தைமாதப்பிறப்பைத் தமிழரின் ஆண்டுப் பிறப்பாகத் தரை குளிர்ந்த கறவைத் திங்கள் முதல் நாளில் கொண்டாடி வந்திருக்கிறார்கள் நமது முன்னோர்.  
புத்தாடை அணிந்து, புதுப்பானையில் புத்தரிசிப் பொங்கல் பொங்கிப் புத்தாண்டை வரவேற்றிருக்கிறான் பண்டைத்தமிழன்

கனடாவில் கைதான புலி ஆதரவாளர் சுரேஷ் ஸ்ரீகந்தராஜா விடுதலை!

.
விடுதலைப் புலிகளுக்கு உபகரணங்களையும் நீர்மூழ்கிக் கப்பலுக்கான சாப்ட்வேர்களையும் வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கனடாவில் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர் சுரேஷ் ஸ்ரீகந்தராஜா ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

4.5 லட்சம் டாலர் பிணை உறுதி பத்திரத்தின் பேரில் அவர் ஜாமீனில விடுவிக்கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து நீதிமன்றத்தில், சுரேஷ் ஸ்ரீகந்தராஜா மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது.

நன்றி thatstamil.oneindia.in

தமிழ் சினிமா

.
மன்மதன் அம்பு
2012 : ருத்ரம் பட விமர்சனம்



நடிப்பு: ஜான் குசெக், அமெண்டா பீட், சிவிடெல் எஜியோபர், தாண்டி நியூடன்

இயக்கம்: ரோலண்ட் எமிரிக்

தயாரிப்பு: கொலம்பியா பிக்சர்ஸ்

'உலகம் அழிய நேர்ந்தால்...' என்ற இந்த ஒற்றைச் சொல்லை வைத்துக்கொண்டு இன்டிபெண்டன்ஸ் டே, தி டே ஆப்டர் டுமாரோ போன்ற படங்களைத் தந்த ரோலண்ட் எமெரிக்கின் கற்பனையின் இன்னுமொரு படம் இந்த 2012. உலகம் முழுக்க பாக்ஸ் ஆபீஸ் வசூலில் கலக்கிக் கொண்டிருக்கும் இந்தப் படம் தமிழில் 'ருத்ரம்' என்ற பெயரில் வெளியாகியுள்ளது.

2011: சர்வதேச வன வள ஆண்டாக ஐ.நா. அறிவிப்பு

.
Last Updated :
  வன வள பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் சர்வதேச, தேசிய, மாநில அளவில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு, ஆய்வரங்குகள் நடத்த அனைத்து நாடுகளும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. உலகில் 160 கோடிக்கும் அதிகமான மக்கள் நேரடியாக வனப்பகுதிகளை சார்ந்து வாழ்ந்து வருகின்றனர். மற்றவர்கள் தங்கள் வாழ்க்கையின் ஏதாவது ஒரு அம்சத்தின் அடிப்படையில் மறைமுகமாக வனங்களைச் சார்ந்தே வாழ்ந்து வருகின்றனர் என சர்வதேச அமைப்புகளின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

   தொழில் வளர்ச்சி, நகரமயமாக்கல் உள்ளிட்ட காரணங்களால் வனப்பகுதிகள் அழிக்கப்படுவதால் மழை அளவு படிப்படியாக குறைவதுடன் உலகின் நீர்வளமும் குன்றி வருகிறது. இது மனிதனின் அடிப்படைத் தேவைகள் கிடைப்பதில் பற்றாக்குறையை ஏற்படுத்துவதுடன், பல்வேறு பிரச்னைகளையும் உருவாக்குகிறது. 



பழைய புகைப்படம் - அ.முத்துலிங்கம்

.
அறைக் கதவை திறந்துகொண்டு உள்ளே நுழைந்த நான் திடுக்கிட்டு நின்றேன். என் மனைவி கன்னத்தை மேசையில் வைத்து படுத்துக் கொண்டிருந்தார். முதல் பார்வையில் அழுகிறார் என்று நினைத்தேன். அன்று காலை எழும்பியதிலிருந்து நான் ஒரு குற்றமும் செய்யத் தொடங்கவில்லை என்பது நினைவுக்கு வந்தது. பதறியபடி 'என்னஇ என்ன?' என்றேன். 'ஒன்றுமில்லை. கம்புயூட்டர் திரையை பார்க்கிறேன்' என்றார். 'அதை ஏன் படுத்திருந்து பார்க்கிறீர்?' என்று கேட்டேன். இங்கிலாந்திலிருந்து அவருடைய அண்ணன் ஒரு பழைய புகைப்படம் அனுப்பியிருந்தார். அது தலைகீழாக வந்திருந்தது. அதைத்தான் பார்த்துக்கொண்டிருந்தார்.


புத்தாண்டில் புதிய தென்றல்

.
 இரண்டாம் ஆண்டில் காலடி வைக்கும் தென்றல் இதழை வாழ்த்துகிறது தமிழ் முரசு ஒஸ்ரேலியா

ஸ்ரீ ஆண்டாள் வைபவம் (தொடர்ச்சி)

.
பரமனுக்கே சூடிக்கொடுத்த ஆண்டாளின் பக்தியிலும்இ அன்பையும் பற்றி போன வாரத்திர்க்கு முன் பார்த்தோம்.
இந்த வாரம்  பூதேவியின் ஆவதாரமான ஆண்டாளின் பக்தியும்இ அந்த கண்ணனையே அடைய அவள்  பூண்ட பாவை நோன்பும்இ அதன் மஹிமையும்இ அவள் கொடுத்த உலகம் புகழ் " திருப்பாவை" என்னும் உன்னத  பாசுரங்களின் மஹிமையை பற்றி பார்ப்போம்.
சூடிக்கொடுத்த நாச்சியாரான ஆண்டாள் சதா மலர் மாலை தொடுப்பதோடுஇ பகவானின் கல்யாண குணங்களையும் பாமாலையாக புனைந்துஇ பரமன் திருவடியையே சதா நினைத்து உருகி இருந்தாள்.
விஷ்ணுசித்தரும் கோதையின்  நிலை கண்டு வருந்திஇ தக்க வரனை கண்டு மனம் முடிக்க எண்ணினார். இதை அறிந்த கோதை "மானிடர்க்கு என்று பேச்சுபடில் வாழகில்லேன்"  என்று முடிவு செய்து "அரங்கனை யல்லாமல் வேறொருவரையும் உடலாலும்இ உள்ளத்தாலும் தொடுவதில்லை “ என்று  திட விரதம் பூண்டாள்.

குயின்ஸ்லாந்து பகுதியில் பெய்து வரும் அடை மழையால் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிப்பு

. குயின்ஸ்லாந்து பகுதியில் பெய்து வரும் அடை மழையால் சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண பொருட்களை வழங்குவதற்கு வானூர்திகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மழை காரணமாக ரொக்கம்டன் நகரில் போக்குவரத்து பாதைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிவாரண நடவடிக்கைகளுக்காக ஒரு பில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

புலம்பெயர் தமிழர்களுக்குப் பேராசிரியர் சிவத்தம்பியின் வேண்டுகோள்

.
  சர்வதேச எழுத்தாளர் மாநாட்டின் முதல் நாள் நிகழ்வுகள் காத்திரமான உரைகளுடன் முன்னகர்ந்து கொண்டிருந்ததுடன் அதன் அடுத்தகட்டமாக பேராசிரியர் சபா.ஜெயராசா தலைமையுரை நிகழ்த்தினார்.

புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பு மற்றும் அடையாளத்தை மீள்நினைவூட்டும் விதமாக அவருடைய உரை அமைந்திருந்தது. சில வார்த்தைப் பிரயோகங்கள் எமது தனித்துவத்தின் அவசியத்தை உணர்த்துவனவாக இருந்தன.

“உலகமயமாதல், புலச்சிதறல் (Diaspora) அடையாள நெருக்கடி (Identity Cricis) முதலியவற்றின் எழுபுலத்தில் இம்மாநாடு கூட்டப்பட்டுள்ளது.

Curry for Lunch

கிரிக்கெட் அணியில் பாக். வம்சவாளி முஸ்லீம் உஸ்மான் காஜா

.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக முஸ்லீம் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு வீரர் இடம் பிடித்துள்ளார். இவர் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவர். இஸ்லாமாபாத்தில் பிறந்தவர். 24 வயதேயாகும் அந்தஇளம் வீரரின் பெயர் உஸ்மான் காஜா. இவர் இஸ்லாமாபாத்தில் பிறந்தவர். இவரது குடும்பம் ஆஸ்திரேலியா நாட்டு குடியுரிமைப் பெற்றவர்கள்.

வளரும் கிரிக்கெட் வீரராக இருந்து வந்த காஜா ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடிக்கும் வேகத்துடன் தீவிரமாக கிரிக்கெட் ஆடி வந்தார். தற்போது அவருக்கு ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைத்துள்ளது,

அறிஞர் ஆறுமுகம் தேவராஜனுக்கு மகாராணி விருது

.
இரண்டாவது எலிசபத் மகாராணியின் 2011 ஆம் ஆண்டுக்கான ராணி சேவை விருது 2011 தமிழ் அரசியலிலும் குறிப்பாக தொல்லியலிலும் அறியப்பட்ட  ஓர் அறிஞரும் எழுத்தாளரும் தற்பொழுது  நியூசீலாந்தில் வாழ்ந்து வருபவருமான ஆறுமுகம் தேவராஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தேவராஜனின் சமூகப் பணிகளை மதித்து இரண்டாவது எலிசபத் மகாராணியினால் ஆண்டு தோறும் வழங்கப்படும் ஞரநநளெ ளுநசஎiஉந ஆநனயட 2011  இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.