வாழ்வென்ற வஸ்து!

.

பிறப்பிற்கும் சாவிற்கும்
ஆன இடையில்
வாழ்வென்று ஒன்றிருக்கிறது
அது முதலில் என்னை மகன் என்றது
பின்னர் சகோதரன் என்றது
பின் கணவன் என்றது
பின் அப்பா என்றது
முடிந்தவரை 
கடமைகளை செய்தேன்
ஒன்றிற்கும் உதவாதவன் என்றது
செத்தபின் அழுதது
பின் பிணம் என்று
தூக்கி போட்டது


********

தைப்பூச விழா சிட்னி முருகன் ஆலயத்தில் 17.01

.

படப்பிடிப்பு ஞானி

ஏ ஆர் ரகுமான், B.H. அப்துல் ஹமீத்

.

மெல்பேர்ன் ஸ்ரீ முருகப் பெருமானின் நாலாம் நாள் மகோற்சவத் திருவிழா.

.


மெல்பேர்ன் சண்சயினில் வீற்றிருக்கும் ஸ்ரீ முருகப் பெருமானின் வருடாந்த மகோற்சவத் திருவிழா கடந்த 08.01.2014 புதன்கிழமையன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு விஷேச அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றது. மகோற்சவத் திருவிழாவில் கடந்த 11.01.2014 சனிக்கிழமை மாலை மெல்பேர்ன் வடபகுதியில் வாழும் இந்துக் குடும்பங்கள் ஒன்று சேர்ந்து திருவிழாவினை ஒழுங்குபடுத்தி இருந்தனர். யாழ்ப்பாணத்தில் எமது ஊர்க்கோயில்களில் நடைபெறுவது போல் மக்கள் தாம் வாழும் பகுதியைப் பிரதிநிதிப்படுத்துவது போன்றிருந்தது.


திரும்பிப்பார்க்கின்றேன் - 24 - முருகபூபதி

.

' நினைவாற்றல்   என்றும்     எம்மோடு      இணைந்திருக்கும்       கடுமையான    நீதிபதி"
தமிழகப்பித்தனாக       வலம்வந்த       சோவியத்     அறிஞர்
கலாநிதி       விதாலி ஃபுர்னீக்கா
   
                                 

இலங்கையில்   1982 -  1983    காலப்பகுதியில்        பாரதி     நூற்றாண்டு விழாக்கள்      நாடு   தழுவிய    ரீதியில்     நடந்தபொழுது     83   ஜனவரியில்      தமிழகத்திலிருந்து      வருகைதந்த    மூத்த    படைப்பாளியும்      பாரதி    இயல்     ஆய்வாளருமான    எனது   உறவினர் தொ.மு. சி ரகுநாதன்       எனக்காக       இரண்டு      பெறுமதியான    நூல்களை கொண்டுவந்து    தந்தார்.
ஒன்று      அவர்      எழுதிய     அவரது      நெருங்கிய     நண்பர்     புதுமைப்பித்தன்     வரலாறு       மற்றது,      மகாகவி      பாரதி     பற்றி    சோவியத்     அறிஞர்கள்     என்ற நூல்.
பாரதி    நூற்றாண்டை      முன்னிட்டு      சோவியத்     விஞ்ஞானிகள், கவிஞர்கள்,      எழுத்தாளர்கள்,      மொழிபெயர்ப்பாளர்கள்      இணைந்த     ஒரு குழு      நூற்றாண்டை    சோவியத்தில்   கொண்டாடுவதற்காக மாஸ்கோவில்        அமைக்கப்பட்டது.      
அந்தக்குழுவில்    இணைந்திருந்த     சோவியத்    அறிஞர்கள்     செர்கி ஏ. பரூஜ்தீன்    -        பேராசிரியர்   -   இ.பி.    செலிஷேவ்   கலாநிதி      எம்.எஸ். ஆந்திரனோவ்   -       கலாநிதி     விளாதீமிர்   ஏ. மகரெங்கோ -      கலாநிதி    வித்தாலி     பெத்ரோவிச்      ஃபுர்னிக்கா   -     கலாநிதி    எல். புச்சிக்கினா  (பெண்) கலாநிதி   செம்யோன்      கெர்மனோவிச்      ருதின்    ( இவரது தமிழ்ப்புனைபெயர்    செம்பியன்)        கலாநிதி      அலெக்சாந்தர்     எம் துபியான்ஸ்கி   -   திருமதி     இரினா    என்.    ஸ்மிர்னோவா    ஆகியோரின் பெறுமதியான     கட்டுரைகள்      இந்தத்   தொகுப்பில்     இடம்பெற்றிருந்தன.
பெறுமதியான      என்று        குறிப்பிடுவதற்குக்காரணம்       இருக்கிறது.
தமிழ்நாட்டில்       எட்டயபுரம்    என்ற       கிராமத்தில்      சுப்பையாவாகப் பிறந்து        சென்னையில்        திருவல்லிக்கேணியில்       மகாகவியாக    மறைந்து      -    இறுதி      ஊர்வலத்தில்     விரல்   விட்டு எண்ணக்கூடியவர்களே     கலந்துகொண்ட     அக்காலத்தில்     அந்த     உலக மகாகவியின்      பெருமை       பற்றித்தெரிந்திராத      தமிழ்      உலகத்திற்கு  -ஆயிரக்கணக்கான      மைல்களுக்கு       அப்பால்     கடல்   கடந்து   வாழ்ந்தவர்கள்       அந்த      நூற்றாண்டுவேளையில்       ஆய்வு    செய்து எழுதியமைதான்     அந்தப்பெறுமதி.
குறிப்பிட்ட      தொகுப்பில்       எனது     கண்ணில்     பட்ட     முக்கியமான  பெயர்       வித்தாலி    ஃபுர்னிக்கா.        இவர்    தமிழக       படைப்பாளிகளுடன் மட்டுமல்ல    -   ஈழத்து    இலக்கியவாதிகள்      சிலருடனும்     கடிதத்தொடர்பில்      இருந்தவர்.

உலகச் செய்திகள்


இந்தோனேசிய எரிமலை உக்கிரமாக குமுறல்

நயகரா நீர் வீழ்ச்சியை இப்படிப் பார்த்ததுண்டா?


எகிப்தில் அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான வாக்கெடுப்பில் வன்முறைகள்

நைஜீரியாவில் கார் குண்டுத் தாக்குதல்

ஈராக்கில் மரணச்சடங்கை இலக்குவைத்து தற்கொலைக் குண்டுத் தாக்குதல்

========================================================================

இந்தோனேசிய எரிமலை உக்கிரமாக குமுறல்


13/01/2014        இந்­தோ­னே­சி­யாவின் சுமாத்திரா தீவி­லுள்ள சினபங் எரி­மலை குமுறி 16,000 அடி உய­ரத்­திற்கு நெருப்புக்குழம்­பையும் சாம்­ப­லையும் சனிக்­கி­ழமை வெளித்­தள்­ளி­ய­தை­ய­டுத்து , அந்த எரி­ம­லையை சூழ­வுள்ள பிராந்­தி­யங்­களைச் சேர்ந்த 25,000 க்கு மேற்­பட்­ட­வர்கள் தமது வீடு­வா­சல்­களை விட்டு வெளி­யே­றி­யுள்­ளனர்.
அந்த எரி­ம­லையைச் சூழ்ந்­துள்ள 5 கிலோ­மீற்றர் பிராந்­தி­யத்­தி­லி­ருந்து 25,516 பேர் வெளி­யே­றி­யுள்­ள­தாக அந்­நாட்டு தேசிய அனர்த்த நிவா­ரண முக­வர்­ நி­லையம் ஞாயிற்­றுக்­கி­ழமை தெரி­வித்­தது.
மேற்­படி எரி­ம­லை­யா­னது கடந்த இரு வார கால­மாக குமுறி வரு­கின்ற போதும், சனிக்­கி­ழமை அதன் குமுறல் என்­று­மில்­லா­த­வாறு தீவி­ர­ம­டைந்­தி­ருந்­தாகக் கூறப்­ப­டு­கி­றது.
இந்தோனேசியாவிலுள்ள 129 உயிர்ப்பான எரிமலைகளில் சினபங் எரிமலையும் ஒன்றாகும்.      நன்றி வீரகேசரி

ஆஸ்திரேலியா அரசே 42 தமிழ் அகதிகளை விடுதலை செய்!

.

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய பல ஆயிரக்கணக்கான அகதிகளில் 46 அகதிகள் ஐந்து ஆண்டுகளாக காலவரையறையின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் 42 பேர் ஈழத் தமிழர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. ஆஸ்திரேலியா நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டு அரசாங்கத்தினால் இவர்கள் கால வரையரையின்றித் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் அனைவருக்குமே சிறிங்கா நாட்டில் உயிர் அச்சுறுத்தல் இருக்கின்றது என்பதை அவுஸ்திரேலிய அரசாங்கம் ஏற்றுக்கொண்டு அகதிகளுக்கான அந்தஸ்து என்ற நிலையை வழங்கியிருக்கின்றது.
ஆனால் அதன்பின்னர் அவுஸ்திரேலிய புலனாய்வு அமைப்பானது இவர்களை அவுஸ்திரேலிய நாட்டுக்கு அல்லது சிறிலங்கா நாட்டுக்கு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக்கருதி ஒரு மதிப்பீட்டை வழங்கியுள்ளது.

நடிகை அஞ்சலி தேவி திங்கள்கிழமை (ஜன.13) காலமானார்.

.

பழம்பெரும் நடிகை அஞ்சலி தேவி (86) உடல் நலக்குறைவால் சென்னையில் திங்கள்கிழமை (ஜன.13) காலமானார்.
ஆந்திர மாநிலம், பெத்தாபுரத்தை சேர்ந்த அஞ்சலி தேவி சிறு வயதில் இருந்தே நாடகங்களில் நடித்து வந்தார். இவரது நாடகத் திறமையைக் கண்ட பிரபல தெலுங்கு சினிமா இயக்குநர் புல்லையா இவரை தெலுங்கு சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.
அதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் அறிமுகமான அஞ்சலி தேவி எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினிகணேசன், நாகேஸ்வரராவ், என்.டி.ராமாராவ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்தார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட  இதுவரை 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
"மணாளனே மங்கையின் பாக்கியம்', "சர்வாதிகாரி', "அன்னை ஓர் ஆலயம்' உள்பட பல படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அஞ்சலி தேவி, தெலுங்கில் வெளிவந்த "லவகுசா' படம் மூலம் புகழின் உச்சத்துக்கு சென்றார். அந்த படத்தில் இவர் சீதை கதாபாத்திரத்தை ஏற்று நடித்து ரசிகர்களிடம் பெரும் பாராட்டைப் பெற்றார்.
அஞ்சலி பிலிம்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி 27 படங்களைத் தயாரித்துள்ளார். புட்டபர்த்தி சாய்பாபாவின் தீவிர பக்தையான அஞ்சலி தேவி, தனக்குச் சொந்தமான இடத்தை சென்னை ராஜா அண்ணாமலைபுரம் சுந்தரம் சாலையில் உள்ள சத்யசாய்பாபா கோயிலுக்கு  தானமாக கொடுத்துள்ளார்.
அஞ்சலி தேவி தெலுங்கு சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் ஆதிநாராயணராவை திருமணம் செய்து கொண்டார். இவரது கணவர் கடந்த 1993-ஆம் ஆண்டு காலமானார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.  அஞ்சலி தேவியின் பேரன்கள் தற்போது அமெரிக்காவில் வசித்து வருவதால் வரும் வியாழக்கிழமை அவரது இறுதிச்சடங்குகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஞ்சலி தேவியின் உடல் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

சிட்னி முருகன் ஆலயத்தில் தைப்பூச விழா

.பொங்கல் தினத்தில் பொங்கும் உணர்வுகள்!!

.

வாடையும் சோளகமும் துள்ளிக் குதித்தோட
வடக்கன் காளைகளும் நுகம்புகுந்து ஏரிழுக்க - தனக்கென்ற
விதைநிலத்தில் உழைப்பேற்றி நெல்போட்டுப் பயிராக்கி - மகிழ்வுடனே
கதிரறுத்து உரலிட்டுப் பிடைத்தெடுத்து தன்னுழைப்பின் பயன்கண்டு
மண்பானை அடுப்பேற்றி பயறிட்டுப் பாலூற்றிப் பொங்கலோ பொங்கலென்று
சர்க்கரையும் நெய்யும் வாழ்வின் சுவைசெப்ப 
கதிரவனின் கரம்பற்றித் தொழுதேற்றி
நன்றியுடன் மனங்குளிரும் பொங்கலிது.

தமிழினத்தின் வேரறுக்க ஆதியிலே படையுடனே
தொடைதட்டிப் புகுந்தவர்கள்
சமயத்தின் துணைகொண்டு சதிசெய்து பலமாற்றி
புதுவருசத்தைப் பொங்கலிடம் பறித்தெடுத்து 
விரட்டி விபரீதம் செய்த கதை
தமிழ் வருசம்தான் பொங்கலென்ற 
கருத்தினையே புரளியாக்கி மலடியாக்க...

இலங்கைச் செய்திகள்


ஹிக்கடுவை பகுதியில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூடத்துக்குள் பெளத்த தேரர்கள் அத்துமீறல்

தேவாலயங்கள் மீதான தாக்குதல் : பிக்குமார் உட்பட 24 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

கொழும்பு தலைமன்னார் புகையிரத சேவை விரைவில் ஆரம்பம்

 மன்னார் மனித புதை குழி நாளையும் தோண்டுதவதற்கு தீர்மானம்

கண்டியில் தைப்பொங்கல் நிகழ்வு

=========================================================================

ஹிக்கடுவை பகுதியில் கிறிஸ்தவ பிரார்த்தனை கூடத்துக்குள் பெளத்த தேரர்கள் அத்துமீறல்

13/01/2014       ஹிக்­க­டுவை, தலாகஸ் சந்­தியை அண்­மித்த பத்­தே­கம வீதியில் அமைந்­துள்ள கிறிஸ்­தவ பிரார்த்­தனைக் கூடம் ஒன்றின் பின்­பக்க வாயிலை உடைத்­துக்­கொண்டு பெளத்த தேரர்கள் உள்­ளிட்ட குழு­வினர் பலாத்­கா­ர­மாக உள் நுழைந்­துள்­ள­துடன் பிர­தே­சத்தில் உள்ள அவ்­வா­றான இரு பிரார்த்­தனைக் கூடங்­களை உடன் அகற்­று­மாறு ஆர்ப்­பாட்­ட­தி­னையும் மேற்­கொண்­டனர்.
ஹெல பொது பௌர' எனும் பெளத்த அமைப்­பினால் நேற்­றைய தினம் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்த இந்த ஆர்ப்­பாட்டம் கார­ண­மாக முற்­பகல் வேளையில் கொழும்பு - காலி பிர­தான வீதியில் ஹிக்­க­டுவை பிர­தே­சத்தில் பரிய வாகன நெரிசல் ஏற்­பட்­டி­ருந்­த­தாக பொலிஸார் குறிப்­பிட்­டனர்.
பிர­தான வீதியை மறித்து ஆரப்­பாட்டக் காரர்கள் தமது எதிர்ப்­பினை வெளி­யிட்­டதால் இந்த நிலைமை ஏற்­பட்­டது. ஹிக்­க­டுவை, தலாகஸ் சந்­தியில் உள்ள ரயில் நிலை­யத்­துக்கு பின்­பு­ற­மாக உள்ள இரண்டு கிறிஸ்­தவ பிரார்த்­தனைக் கூடங்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட இந்த ஆர்ப்­பாட்­டத்தின் போது அந்த கூடங்­களை உடன் அகற்று­மாறு தேரர்கள் கோஷ­மெ­ழுப்­பினர். இதனை அடுத்து பிர­தே­சத்தில் பதற்ற நிலை ஒன்று காணப்­பட்­டது.

தியடோர் பாஸ்கரனுக்கு இயல் விருது - 2013

.

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வருடா வருடம் வழங்கும் இயல் விருது இவ்வருடம் (2013) திரு சு. தியடோர் பாஸ்கரன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இவர் தமிழ் எழுத்தாளர், தமிழ் திரைப்பட வரலாற்றாளர் மற்றும் சூழலியல் ஆர்வலர் ஆவர். இந்த விருதைப் பெறும் 14வது எழுத்தாளர் இவராகும். இதற்கு முன்னர் இந்த விருது சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், ஜோர்ஜ் ஹார்ட், ஐராவதம் மகாதேவன், அம்பை, எஸ்.பொன்னுத்துரை, எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில்நாடன்  போன்றவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
தாரபுரத்தில் பிறந்த சு.தியடோர் பாஸ்கரன்  சென்னை கிறித்துவக் கல்லூரியில் முதுகலைப்பட்டம் பெற்றார். நாற்பதாண்டுகளாக சுற்றுற்சூழல் பற்றியும், சினிமா பற்றியும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வருகின்றார். உயிர்மை பதிப்பகம்  ‘இன்னும் பிறக்காத தலைமுறைக்காக (2006)’, தாமரை பூத்த தடாகம் (2008)’ வானில் பறக்கும் புள்ளெலாம் (2011)  ஆகிய நூல்களைப் பதிப்பித்தது.  உல்லாஸ் கரந்தின் The Way of the Tiger என்ற நூலை ‘கானுறை வேங்கை                       ( காலச்சுவடு 2006) என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கின்றார்.     காட்டுயிர் பற்றி இவர் எழுதிய The Dance of the Sarus (OUP) 1996இல் வெளிவந்தது.  சென்ற ஆண்டு பென்குயின் பதிப்பகம் இவரை தொகுப்பாசிரியராகக் கொண்டு The Sprint of the Blackbuck  நூலை 2009  இல் வெளியிட்டது. தமிழ்நாட்டில் மதிப்புறு காட்டுயிர் காவலராக பணியாற்றியிருக்கின்றார். இயற்கைக்கான உலக நிதியகத்தில் (WWF-India)  அறங்காவலராக உள்ளார்
 1980இல் வெளிவந்த இவரது நூல் Message Bearers (Cre-A)  தமிழ்த்திரை ஆய்வில் முன்னோடி புலமை முயற்சியாக கருதப்படுகின்றது.  தமிழ்சினிமா பற்றிய  The Eye of the Serpent  நூலுக்காக தேசிய விருதான ஸ்வர்ண கமல் விருதை  1997இல் பெற்றார். இந்நூலின் மொழிபெயர்ப்பு  பாம்பின் கண்  2012இல் வெளிவந்தது,  தமிழில் சினிமா பற்றி மூன்று  நூல்கள் எழுதியுள்ளார்.    2003இல் தேசிய திரைப்பட விருதுகள் தேர்வுக் குழுவில் ஒரு நடுவராக இருந்தார்.   ஐ.நா. சபையின் சார்பில் கென்யா நாட்டில் இரண்டு மாதம் ஆலோசகராக பணியாற்றினார்  போஸ்ட்மாஸ்டர் ஜெனரலாகப் பணியாற்றி ஓய்வு பெற்றபின், சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் இயக்குநராக மூன்றாண்டுகள் (1998 – 2001)  பணியாற்றினார்.  மனைவி திலகாவுடன்  பெங்களூரில் வசிக்கின்றார்,.இவர்களுக்கு ஒரு மகள் ஒரு மகன் உண்டு.
இயல் விருது கேடயமும் 2500 டொலர் பணப்பரிசும் கொண்டது. விருது வழங்கும் விழா ரொறொன்ரோவில் ஜூன் மாதம் வழமைபோல நடைபெறும்.

ரேடியோ முருகேசனும் கே.எஸ்.ராஜாவும் - இரா.மோகன்ராஜன்

.


                ரேடியோ முருகேசன் என்ற முருகேசனை சந்தித்ததை உங்கள் நம்பிக்கை சார்ந்து, தற்செயல் அல்லது ஊழ் அல்லது வேறு ஏதொன்றுமாக நீங்கள் வைத்துக் கொள்ளலாம். கதையின் முடிவில் அதை நீங்கள் தீர்மானித்துக் கொள்ளலாம். முருகேசனை நான் சந்திக்க வேண்டியிருந்தது என்ற எளிய உண்மை இப்போதைக்குப் போதுமானது.
                சிங்கப்பூர் மாமா, அம்மாவிற்கு சீதனமாகக் கொடுத்த சோனி டிரான்சிஸ்டர் ரேடியோ ஒன்று எங்கள் வீட்டில் நீண்ட காலமாக பாடிக்கொண்டு இருந்தது என்று சொன்னால், பக்கத்து வீட்டு சுப்பையா தாத்தா அடிக்க வருவார். அவரைப் பொறுத்தவரை அது கத்திக் கொண்டிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அவருக்கு மட்டுமென்ன எங்கள் தாத்தாவிற்கும்தான். எங்கள் என்றால், எனக்கும் என் அக்காவிற்கும்.
                அக்கா நன்றாகப் பாடுவாள், அம்மா அப்படித்தான் சொல்கிறாள். அப்பா உண்மையில் ஒரு தீர்க்கதரிசி என்றுதான் சொல்ல வேண்டும். இல்லையென்றால் வாணி என்று பெயர் வைத்திருப்பாரா?! வாணிஜெயராம் என்றால் போதும் அவருக்கு. "மல்லிகை என் மன்னன் மயங்கும்' - என்று ரேடியோவில் காதோடு மயங்கிடுவார் மனுசன் என்பாள் அம்மா, அம்மாவுக்கு வாணிஜெயராம் குரல் இல்லை என்பதில் அப்பாவுக்கு வருத்தம் ஏதும் உண்டா என்று தெரியாது. ஆனால் அம்மாவுக்கு உண்டு என்றாலும் அம்மா பாடி பார்த்ததில்லை, என்றால் கேட்ட தில்லை. சின்ன முணுமுணுப்பாகக்கூட, ஆனால் அப்பா பாடுவார். அது மெலிசாக, குண்டுமணி உருள்வது போல இருக்கும். ஆனால் அது வாணிஜெயராம் போல இருக்காது. எப்படி இருக்க முடியும்...! ஆனால் பெண்குரல் பாடலை ஆண்கள் பாடினால் ஏன் நன்றாக இருக்கக் கூடாது?! "வசந்தகால நதிகளிலே'... பாடலை ஜெயச்சந்திரனும் கூடத்தான் அதே நளினத்தோடு பாடுகிறார். இதை நான் சொல்லவில்லை அப்பாதான் சொன்னார். அப்படிச் சொல்லும் அவர் வாணிஜெயராம் பாடலை ஹம்மிங் அல்லது சீழ்க்கையில் தான் ஏனோ பாடுவார்.
                இதற்கெல்லாம் குறையில்லாமல் தான் அக்கா பாட ஆரம்பித்தாள். முதலில் ரேடியோவோடு ரேடியோவாக என்றால் விவிதபாரதி இல்லை இலங்கை வானொலி. விவிதபாரதி இரவில்தான் சற்று தெளிவாகக் கேட்க இயலும். பகலென்றால் பாடலும் இரைச்சலாக இருக்கும். கேட்க காதுவலிதான் மிஞ்சும். இலங்கை வானொலி அப்படி அல்ல; கழுவி விட்டதுபோல சுத்தமாக இருக்கும். அவர்களது தமிழும் அப்படித்தான். அதில் வரும் பாடலோடு பாடலாகச் சேர்ந்து பாடுவாள். பாடல், சங்கீதம் என்ப தெல்லாம் சினிமா பாட்டுதான். கர்நாடக சங்கீதம், அது இது என்பதெல்லாம் யாருக்கும் இங்கு விளங்குவதில்லை. பரிச்சயமுமில்லை. தாத்தாவிற்கு, அப்பாவின் அப்பாவிற்கு, சினிமா பாடல் என்பதும் அப்படித்தான்.


சென்னை: பெண்ணிய உரையாடல்கள் - ஈழம், தமிழகம், புலம்பெயர் சூழல் (கருத்தரங்கு அறிக்கை)

.
புதிய மாதவி, ரவி (சுவிஸ்)


  இலங்கையின் மறக்கப்பட்ட பகுதி. மலையகம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தேயிலை பச்சை. நடுநடுவே சாக்கு அணிந்துஇ வெடவெடக்கும் குளிரில்இ அட்டைக் கடியையும் குளவிக் கொட்டுதலையும் சகித்துக் கொண்டு கொழுந்து பறிக்கும் பெண்கள். அவர்களில் சிலர் நிறைமாத கர்ப்பிணிகள். பிள்ளை பெறுதல் என்ற மறு உற்பத்தி செயல்பாட்டுக்கும் உற்பத்திக்கு அடிப்படையான உழைப்புக்கும் இருக்கும் நெருக்கமானஇ தவிர்க்கமுடியாத உறவைஇ பெண்ணுடலில் தொழிற்படும் அனுபவத்தைப் பற்றி ஜமுனா அவர்கள் பேசுகிறார். அவர் மலையகத்தைச் சேர்ந்தவர். தமிழ்நாட்டிலிருந்து கூலிகளாக கொண்டு செல்லப்பட்டவர்களின் சந்ததி.  பேசிய வெளி - சென்னையிலுள்ள பெண்கள் சந்திப்பும் சென்னை பல்கலைக் கழக தமிழிலக்கிய துறையும் இணைந்து நடத்திய 2 நாள் (ஜனவரி 3இ 4இ 2014) கருத்தரங்கம். சென்னை பல்கலைக்கழகம்இ சேப்பாக்கம். இதை மும்பையை சேர்ந்த புதிய மாதவி சாத்தியப்படுத்தினார். பேசுவதற்கான பின்னணி - ஈழம்இ தமிழகம்இ புலம்பெயர் சூழல் ஆகிய இடங்களில் பெண்களின் வாழ்வும் பாடும் பற்றிய உரையாடல். இந்த கருத்தரங்கு நடந்த இரண்டு நாட்களிலும் பொது அமர்வுகள் இருந்தனஇ சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையும் பெண்கள் சந்திப்பும் இவற்றுக்கு பொறுப்பேற்றிருந்தன.

இரண்டாம் நாள் அரங்கில் பேசிய ஜமுனாவுக்கு முன் பேசிய சேர்ந்த சந்திரலேகா (இவரும் மலையகத்தைச் சேர்ந்தவர்)  கோணிச் சாக்குடனும் முதுகில் பிணைக்கப்பட்ட கூடையுடனும் கலந்து விட்ட பெண்களின் வாழ்க்கையை சித்திரம் போல் தீட்டிக் காட்டியிருந்தார். இவர்களின் கட்டுரைகளில் விரிந்த ஈழ நிதர்சனம் ஒரு வகை என்றால்இ றஞ்சிஇ ஆழியாள்இ நளாயினி ஆகியோரின் பேச்சில் வெளிபட்ட புலம்பெயர் தமிழர் வாழ்க்கை அனுபவங்கள் வேறு வகையானவை. 1980களில் தொடங்கி வெவ்வேறு சூழ்நிலைகளில் அகதிகளாக சென்ற ஈழத் தமிழ்ப் பெண்களின் வாழ்க்கையில்இ குறிப்பாக காதல்இ குடும்ப உறவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை அவை நிகழ்ந்த வரலாற்று சூழ்நிலைகளின் பின்புலத்தில் வைத்து இவர்கள் விளக்கினர். தவிரவும் தமிழர்கள் தஞ்சம் புகுந்த நாடுகளில் அகதிகள் எதிர்கொள்ள வேண்டிய சட்டத் திட்டங்கள்இ இனவெறிஇ பண்பாட்டு குழப்பங்கள் குறித்தும் இவர்கள் பேசினர். ஆழியாள் அவுஸ்திரெலியாவில் தஞ்சம் புக விழையும் அகதிகள் - தமிழர்கள் மட்டுமல்லாது ஈரானியர்இ சிரியர்கள்இ சுதானைச் சேர்ந்தவர்கள் என்று பல்வேறு ஆசியஇ ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த அகதிகள் - முகங்கொடுக்க வேண்டிய அரசு கட்டுபாடுகள் குறித்து பல புதிய செய்திகளை பகிர்ந்து கொண்டார்.

இலத்திரனியல் ஊடகத்தில் தமிழ் அனுபவப்பகிர்வு

.
  இலத்திரனியல்       ஊடகத்தில்       தமிழ் - அனுபவப்பகிர்வு
அன்புள்ள    கலை,     இலக்கியவாதிகளுக்கும்      சமூகப்பணியாளர்கள்ஊடகவியலாளர்கள்      அனைவருக்கும்       புத்தாண்டு      பொங்கல்  வாழ்த்துக்கள்.      எமது   அவுஸ்திரேலியா     தமிழ்    இலக்கிய    கலைச்சங்கத்தின்    ஏற்பாட்டில்      - மெல்பனில்     இலத்திரனியல்     ஊடகத்தில்   தமிழ்      என்ற    தலைப்பில்    அனுபவப்பகிர்வு      நிகழ்ச்சியை     ஒழுங்கு    செய்துள்ளோம்.
நடைபெறும்     இடம்:      Darebin   Intercultural    Centre  ( 59 A, Roseberry Avenue, Preston, Victoria - 3072)
காலம்23-02- 2014       ஞாயிற்றுக்கிழமை    முற்பகல் 10 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை
இந்நிகழ்ச்சியில்    கலந்துகொள்ள    விரும்புபவர்கள்    எம்முடன் தொடர்புகொண்டு   மேலதிக      விபரங்களைப்பெற்றுக்கொள்ளலாம்.
கல்வி,    இதழியல்,     வானொலி,     ஊடகம் -    படைப்பிலக்கியம்,    சமூகப்பணி,  மற்றும்   இணையத்தள  வலைப்பதிவுகளில்    ஈடுபாடுள்ளவர்களுக்கு  குறிப்பிட்ட     இலத்திரனியல்   ஊடகத்தில்    தமிழ் - அனுபவப்பகிர்வு   நிகழ்ச்சி    பயனுள்ளதாக    அமையும்     என்பதனால்     தங்களுக்கும்    அழைப்பு      விடுக்கின்றோம்.

தமிழ் சினிமா

 ஜில்லா
 

சிவனும், சக்தியும் மோதினால் என்னனென்ன பிரளயங்கள் நடக்கும் என்பதையே சொல்லியிருக்கிறார் இயக்குனர் நேசன். இயக்குனர் நேசன் இயக்கத்தில் விஜய், மோகன்லாலின் அசத்தலான நடிப்பில் வெளியான ஜில்லா ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை பூர்த்திசெய்துள்ளதா? மதுரை ஜில்லாவையே தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார் மோகன்லால், இந்நிலையில் தனக்காக அடியாள் ஒருவன் உயிரைவிட, அவனின் பிள்ளையான விஜய்யை தத்தெடுத்து சொந்தப் பையன்போல் வளர்க்கிறார். விஜய்யோடு பக்கபலத்துல அடிதடி, வெட்டுக்குத்து, கட்டப்பஞ்சாயத்துனு என்று இருவரும் ஜில்லாவையே கலக்கிவருகிறார்கள். தன் அப்பாவைக் கொன்றது ஒரு பொலிஸ் என்பதால், பொலிசைக் கண்டால் ‘காக்கி’யை கழட்டி ஓடவிட்டு விரட்டி அடிக்கும் அளவுக்கு கோபத்துடன் வலம் வருகிறார் விஜய்.  ஆனால், பொலிஸ் என்பது தெரியாமலேயே அந்த ஊர் சப்-இன்ஸ்பெக்டரான காஜலிடம் மனதைப் பறிகொடுக்கிறார். இது ஒருபுறம் இருக்க, திடீரென ஒரு நல்ல பொலிஸ் மதுரைக்குள் நுழைய, செய்வதறியாது நிலைகுலைகிறார் மோகன்லால். தனக்கு கீழே எல்லாம் இருக்கணும்னா, தன்னோட ஒரு ஆள் பொலிஸ் டிபார்ட்மென்டுக்குள்ள இருக்கணும்னு முடிவு பண்ணி, விஜய்யை பொலிசாக்குகிறார். தனக்குப் பிடிக்கவே பிடிக்காத பொலிஸ் உடையை அணிந்ததும் மனம் திருந்தும் சக்தி, ஒரு கட்டத்தில் சிவனையே எதிர்க்கத் தொடங்குகிறார். சிவனும், சக்தியும் எதிரும் புதிருமாக நிற்க, ‘ஜெயிச்சது யாரு’ங்கிறதுதான் க்ளைமேக்ஸ். விஜய் என்ற ஒரு ‘மாஸ்’ ஹீரோ, மோகன்லால் என்ற ஒரு ‘கம்ப்ளீட் ஆக்டர்’ என இரண்டு உச்ச நட்சத்திரங்களை வைத்துக்கொண்டு, எப்படிப்பட்ட திரைப்படத்தை ரசிகர்களுக்குக் கொடுத்திருக்கலாம்? ஆனால், ரொம்பவும் சாதாரணமான ஒரு கதைக்கு, நீளமான திரைக்கதை ஒன்றை அமைத்து ‘வளவள’வென நீட்டி முழக்கியிருக்கிறார் இயக்குனர்! வழக்கம்போல் அதே துறு துறு விஜய். கொஞ்சம் ‘போக்கிரி’ ஸ்டைல் பாடி லாங்குவேஜ், டயலாக் டெலிவரியோடு சக்தியாக தனது ரசிகர்களுக்கு விருந்தளித்திருக்கிறார்.  ‘இளையதளபதி’யின் டான்ஸ், ஃபைட் பற்றி சொல்லவே வேண்டாம். இதிலும் அடித்துத் தூள் பறக்கவிட்டிருக்கிறார். ஆனாலும், என்னமோ மிஸ்ஸிங். கமலுக்கு எதிராக நின்று ஒருவர் நடிக்க வேண்டும் என்றால் அவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும். ஆனால் அப்படிப்பட்ட ஒரு சிறந்த நடிகரை படம் முழுக்க ‘நான் சிவன்டா...’, ‘நான் சிவன்டா...’ன்னு இப்படி படம் முழுக்க ‘பஞ்ச்’ வசனம் பேசவிட்டிருப்பது கொஞ்சம் இடிக்கிறது. கேரள ரசிகர்கள் மோகன் லாலை இது மாதிரியான ஒரு கதாபாத்திரத்தில் பார்த்திருக்க மாட்டார்கள். இருந்தாலும் அந்த ‘சிவன்’ கதாபாத்திரத்தில் மோகன்லாலைத் தவிர வேறொவரை யோசிக்க முடியவில்லை. வீணடிக்கப்பட்ட தனது பாத்திரத்தையும், தன் நடிப்பால் காப்பாற்றியிருக்கிறார் கேரள சூப்பர் ஸ்டார்! ஹீரோயின் காஜல் அகர்வாலுக்கு லைஃப் டைம் கதாபாத்திரம். மூணு பாடல்களில் விஜய்யுடன் ஆட அற்புதமான வாய்ப்பு அவருக்கு, அவருக்கு கொடுத்துள்ள பகுதியை செவ்வனே செய்திருக்கிறார். சூரி, கிடைத்த கேப்பில் கொமடி செய்திருக்கிறார். பூர்ணிமா பாக்யராஜ், மகத், நிவேதா தாமஸ், ஆர்.கே., பிரதீப் ராவத், ரவி மரியா என ஆளாளுக்கு படம் நெடுக வந்து போகிறார்கள். பாடல்களை கேட்க முடிந்தளவுக்கு படத்தில் ரசிக்க முடியவில்லை. ‘கண்டாங்கி... கண்டாங்கி’ பாடல் மட்டுமே கேட்பதற்கும் பார்ப்பதற்கும் குளிர்ச்சி. ‘மாமா... எப்போ ட்ரீட்’ பாடலில் நடன அமைப்பு கவர்ந்திருக்கிறது. படம் முழுக்க ‘ஜில்லா’ தீம் மியூசிக்கை ஓடவிட்டே பின்னணியை ஒப்பேத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் டி.இமான். ஒளிப்பதிவு நன்றாக உள்ளது, ஆனால் எடிட்டிங்கில் நிறைய கோட்டை விட்டிருக்கிறார்கள். படத்தில் பல நீளமான காட்சிகளையும், தேவையில்லாத காட்சிகளையும் கொஞ்சம் வெட்டி, சுருக்கியிருந்தால் படம் இன்னும் ‘சுறுசுறு’ப்பு பெற்றிருக்கும். பெரிய ‘ஸ்டார் வேல்யூ’ இருந்தும் ,சுவாரஸ்யமில்லாத முதல் பாதி, எதிர்பார்த்த காட்சிகளோடு நகரும் இரண்டாம் பாதி, பொறுமையை சோதிக்கும் 3 மணி நேர திரைக்கதை என நிறைய தடுமாற்றங்கள் ‘ஜில்லா’வில்! விஜய் ரசிகர்களுக்கு வேண்டுமானால் இப்படம் சர்க்கரை பொங்கலாக இருக்கலாம். ஆனால் பொதுவான ரசிகனைப் பொறுத்தவரை இப்படம் வெண்பாங்கல். நடிகர்கள் - விஜய், மோகன்லால் நடிகைகள் - காஜல் அகர்வால், பூர்ணிமா பாக்யராஜ் இசை - டி.இமான் இயக்கம் - ஆர்.டி.நேசன் தயாரிப்பு - ஆர்.பி.சௌத்ரி
நன்றி விடுப்பு