சிட்னி முருகன் ஆலயத் திருவிழா- தேர்

. அருள்மிகு சிட்னி முருகன் ஆலய அலங்கார உற்சவம் மார்ச் மாதம் 9 ம் திகதி வியாழக்கிழமை ஆரம்பித்து 22 ம் திகதி வைரவர் பொங்கலுடன் நிறைவுறுகின்றது.  பூங்காவனம் 21 ம் திகதி திங்கட் கிழமை இடம்பெற உள்ளது.

மார்ச் மாதம் 19 ம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற தேர்த்திருவிழா ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருக்க கோலாகலமாக இடம் பெற்றது . சுவாமி வீதிஉலா வரும் அந்த அழகிய காட்சியை கீழே காணலாம்.சிட்னி முருகன் ஆலய அலங்கார உற்சவம் - சப்பரத்திருவிழா

. அருள்மிகு சிட்னி முருகன் ஆலய அலங்கார உற்சவம் மார்ச் மாதம் 9 ம் திகதி வியாழக்கிழமை ஆரம்பித்து 22 ம் திகதி வைரவர் பொங்கலுடன் நிறைவுறுகின்றது. தேர்த்திருவிழா 19 ம் திகதி சனிக்கிழமையும் பூங்காவனம் 21 ம் திகதி திங்கட் கிழமையும் இடம்பெற உள்ளது.

மார்ச் மாதம் 18 ம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சப்பரத்திருவிழா ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருக்க கோலாகலமாக இடம் பெற்றது . சுவாமி வீதிஉலா வரும் அந்த அழகிய காட்சியை கீழே காணலாம்.சிட்னி முருகன் ஆலய அலங்கார உற்சவம் - 7ம் திருவிழா

.
அருள்மிகு சிட்னி முருகன் ஆலய அலங்கார உற்சவம் மார்ச் மாதம் 9 ம் திகதி வியாழக்கிழமை ஆரம்பித்து 22 ம் திகதி வைரவர் பொங்கலுடன் நிறைவுறுகின்றது. தேர்த்திருவிழா 19 ம் திகதி சனிக்கிழமையும் பூங்காவனம் 21 ம் திகதி திங்கட் கிழமையும் இடம்பெற உள்ளது.

மார்ச் மாதம் 17 ம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற 7ம் திருவிழா ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருக்க கோலாகலமாக இடம் பெற்றது . சுவாமி வீதிஉலா வரும் அந்த அழகிய காட்சியை கீழே காணலாம்.


சிட்னி முருகன் ஆலய அலங்கார உற்சவம் - 6ம் திருவிழா

.
அருள்மிகு சிட்னி முருகன் ஆலய அலங்கார உற்சவம் மார்ச் மாதம் 9 ம் திகதி வியாழக்கிழமை ஆரம்பித்து 22 ம் திகதி வைரவர் பொங்கலுடன் நிறைவுறுகின்றது. தேர்த்திருவிழா 19 ம் திகதி சனிக்கிழமையும் பூங்காவனம் 21 ம் திகதி திங்கட் கிழமையும் இடம்பெற உள்ளது.

மார்ச் மாதம் 16 ம் திகதி  புதன்கிழமை இடம்பெற்ற 6ம் திருவிழா ஆயிரக்கணக்கான மக்கள் மழையையும் பொருட்படுத்தாமல் திரண்டிருக்க கோலாகலமாக இடம் பெற்றது . சுவாமி வீதிஉலா வரும் அந்த அழகிய காட்சியை கீழே காணலாம்.


சிட்னி முருகன் ஆலய அலங்கார உற்சவம் - 5ம் திருவிழா

.
அருள்மிகு சிட்னி முருகன் ஆலய அலங்கார உற்சவம் மார்ச் மாதம் 9 ம் திகதி வியாழக்கிழமை ஆரம்பித்து 22 ம் திகதி வைரவர் பொங்கலுடன் நிறைவுறுகின்றது. தேர்த்திருவிழா 19 ம் திகதி சனிக்கிழமையும் பூங்காவனம் 21 ம் திகதி திங்கட் கிழமையும் இடம்பெற உள்ளது.

மார்ச் மாதம் 15 ம் திகதி  செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 5ம் திருவிழா ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருக்க கோலாகலமாக இடம் பெற்றது . சுவாமி வீதிஉலா வரும் அந்த அழகிய காட்சியை கீழே காணலாம்.

சிட்னி முருகன் ஆலய அலங்கார உற்சவம் -4 திங்கட்கிழமை

.
அருள்மிகு சிட்னி முருகன் ஆலய அலங்கார உற்சவம் மார்ச் மாதம் 9 ம் திகதி வியாழக்கிழமை ஆரம்பித்து 22 ம் திகதி வைரவர் பொங்கலுடன் நிறைவுறுகின்றது. தேர்த்திருவிழா 19 ம் திகதி சனிக்கிழமையும் பூங்காவனம் 21 ம் திகதி திங்கட் கிழமையும் இடம்பெற உள்ளது.


மார்ச் மாதம் 14 ம் திகதி திங்கட் கிழமை இடம்பெற்ற 4ம் திருவிழா ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருக்க கோலாகலமாக இடம் பெற்றது . சுவாமி வீதிஉலா வரும் அந்த அழகிய காட்சியை கீழே காணலாம்.

சிட்னி முருகன் ஆலய அலங்கார உற்சவம் -3 ஞாயிற்றுக்கிழமை

.
அருள்மிகு சிட்னி முருகன் ஆலய அலங்கார உற்சவம் மார்ச் மாதம் 9 ம் திகதி வியாழக்கிழமை ஆரம்பித்து 22 ம் திகதி வைரவர் பொங்கலுடன் நிறைவுறுகின்றது. தேர்த்திருவிழா 19 ம் திகதி சனிக்கிழமையும் பூங்காவனம் 21 ம் திகதி திங்கட் கிழமையும் இடம்பெற உள்ளது.

மார்ச் மாதம் 13 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மூன்றாம்  திருவிழா ஆயிரக்கணக்கான  மக்கள் திரண்டிருக்க கோலாகலமாக இடம் பெற்றது .இந்த திருவிழா ஸ்ரத்பீல்ட். பேர்வுட் பகுதியின் உபயமாகும். அன்ன வாகனத்தில் சுவாமி வீதிஉலா வரும் அந்த அழகிய காட்சியை கீழே காணலாம்.

மரண அறிவித்தல்

   .
  மரண அறிவித்தல்
திருமதி மாணிக்கம் சிவகுருநாதன்                                                               மறைவு 13-03-2011


கரவெட்டியை பிறப்பிடமாகவும், சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட இளைப்பாறிய ஆசிரியர் (Sacred heart school in Karavetti) திருமதி மாணிக்கம் சிவகுருநாதன் 13-03-2011 ஞாயிற்றுக்கிழமை சிவபதம் அடைந்தார். இவர் காலம் சென்ற வல்லிபுரம் சிவகுருநாதனின் அன்பு மனைவியும், ஜனகன், சாந்தி, ராகவன் ஆகியோரின் அன்புத் தாயாரும், நாளாயினி, ஸ்ரீதரன், குமுதினி ஆகியோரின்; அன்பு மாமியாரும், வைஷ்ணவி, யஷ்வினி, கீர்த்தனா, விருஷன், சேயோன், மாயி ஆகியோரின்; அன்புப் பேர்த்தியாரும், காலம் சென்ற திருமதி செல்வரத்தினம், காலம் சென்ற சுப்பிரமணியம், காலம் சென்ற கனகசபை, திருமதி நவரத்தினம் கனகசபை ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார். அன்னாரின் பூதவுடல் 15.03.2011 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியிலிருந்து 8 மணிவரை T. J Andrews parlor, 2,Auburn Rd ,Auburn  இல் பார்வைக்காக வைக்கப்பட்டு 16.03.2011 புதன்கிழமை மதியம் 12.30 மணிக்கு Rockwood மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றீர்கள்.


Viewing: 6pm – 8pm on Tuesday at T. J Andrews, Auburn

Cremation: 12:30pm on Wednesday at Rockwood Cemetry(South Chapel).

தொடர்புகளுக்கு ஜனகன் 0431502211 , ராகவன் 0402214448

.இயற்கையின் சீற்றத்தால் சிதைந்திட்ட ஜப்பான் மக்களுக்கு நம் இதய அஞ்சலி !

ஜப்பானை கடுமையாகத் தாக்கியுள்ள ஆழிப்பேரலை!

.


வெள்ளி, மார்ச் 11  ம் திகதி  ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட பாரிய பூமியதிர்ச்சியைத் தொடர்ந்து ஆழிப்பேரலை (சுனாமி) உருவாகியுள்ளது.

8.9 ரிச்டர் அளவில் பூமியதிர்வு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து கடல் அலைகள் ஆர்ப்பரித்து ஆழிப்பேரலைகள் உருவாகியுள்ளது


போர்ப் பட்டாளங்கள் -கவிதை - எம்.ரிஷான் ஷெரீப்,

.மேசையில் ஊர்வலம் போகும்
குதிரைப் பட்டாளங்களைப் பார்த்திருந்த சிறுவன்
உறங்கிப் போயிருந்தான்
சிப்பாய்களிறங்கி தப்பித்து வந்த
முற்றத்தில் யானைகளின் நடனம்

உலகச் செய்திகள்

.
லிபிய உள்நாட்டுப் போரும் மேற்குலகின் வியூகங்களும்

வட ஆபிரிக்காவில் டியூனீசியாவிலும் எகிப்திலும் மக்கள் கிளர்ச்சிகள் கண்ட முடிவமைதிக்கு முற்றிலும் வேறுப்டடதாகவே லிபியாவின் கிளர்ச்சி அமைந்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. டியூனீசியாவில் இருந்து இரவோடிரவாக ஜனாதிபதி பென் அலி குடும்பத்தினர் சகிதம் விமானத்தில் ஏறித் தப்பியோடி சவூதி அரேபியாவில் தஞ்சமடைந்தார். எகிப்தில் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் பதவியைத் துறந்து தலைநகர் கெய்ரோவில் இருந்து வெளியேறி வேறு ஒரு நகரத்தில் தங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. அவர் உண்மையில் எகிப்தில் இல்லையென்றும் வேறு நாட்டுக்கு சிகிச்சைக்காகச் சென்று விட்டதாகவும் கூட தகவல்கள் வெளியாகியிருந்தன. லிபியாவில் நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக அதிகாரத்தில் இருந்துவரும் கேணல் மும்மர் கடாபிக்கு எதிரான மக்கள் கிளர்ச்சி தீவிரமடைந்த வேகத்தை அவதானித்த போது அவரும் சில தினங்களில் நாட்டைவிட்டுத் தப்பியோடி விடுவாரென்றே பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.


கடல் சிரித்தது -சிறுகதை - எஸ்.அகஸ்தியர்


ஈழத்து எழுத்தாளர்களில் பிரபல்யமான ஒருவர் எஸ் . அகஸ்தியர் அவரின் சிறுகதை ஒன்றை மீள் பிரசுரம் செய்கிறோம் .


மூன்று நாட்களுக்கு முன் அந்தக் கடற்கரையில் முத்துபிணமாகக் கிடந்தான்அந்தச் சடலத்தின் சதைப் பிண்டங்கள் பிய்ந்துபோய்க்கிடந்தன.

மீன்களின் மாமிச வெறிவேட்டைக்கும்கடல் அலைகளின் முரட்டுமோதல்களுக்கும் ஆளாகி அழுகி நெக்கு விட்டுப்போன அந்தப் பிரேதம் கரையில்சதா மோதிக்கொண்டிருந்தது.

காகங்கள் அதன் கண்களைத் திறந்து தின்று தீர்த்துவிட்டனஇன்னும் அதன் நாற்றம்'வெடில்அந்த ஊரை உசுப்பிவிட்டுக் கொண்டுதானிருந்தது.

சிட்னி முருகன் ஆலய அலங்கார உற்சவம் -2 சனிக்கிழமை

.

அருள்மிகு சிட்னி முருகன் ஆலய அலங்கார உற்சவம் மார்ச் மாதம் 9 ம் திகதி வியாழக்கிழமை ஆரம்பித்து 23 ம் திகதி வைரவர் பொங்கலுடன் நிறைவுறுகின்றது. தேர்த்திருவிழா 19 ம் திகதி சனிக்கிழமையும் பூங்காவனம் 21 ம் திகதி திங்கட் கிழமையும் இடம்பெற உள்ளது.

மார்ச் மாதம் 12 ம் திகதி சனிக்கிழமை இடம்பெற்ற இரண்டாம் திருவிழா மக்கள் திரண்டிருக்க கோலாகலமாக இடம் பெற்றது .இந்த திருவிழா லிட்கம். ஓபன் பகுதியின் உபயமாகும். அந்த அழகிய காட்சியை கீழே காணலாம்


சிட்னி முருகன் ஆலய அலங்கார உற்சவம் - கொடியேற்றம்

.
அருள்மிகு சிட்னி முருகன் ஆலய அலங்கார உற்சவம் மார்ச் மாதம் 9 ம் திகதி வியாழக்கிழமை ஆரம்பித்து 23 ம் திகதி வைரவர் பொங்கலுடன் நிறைவுறுகின்றது. தேர்த்திருவிழா 19 ம் திகதி சனிக்கிழமையும் பூங்காவனம் 21 ம் திகதி திங்கட் கிழமையும் இடம்பெற உள்ளது.

மார்ச் மாதம் 11 ம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற - கொடியேற்றத் திருவிழா ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருக்க கோலாகலமாக இடம் பெற்றது .அந்த அழகிய காட்சியை கீழே காணலாம்.                                                                                                                   படப்பிடிப்பு : ஞானி 


மாணவர்க்கான சத்தியசாயி நித்திலக் கோவை – பகவான் பாபா

.

21. சனாதன தருமம்

இன்று ‘வெறுப்பு’ என்னும் கடும்புயலும், ‘பொய்மை’யும், தர்மம் (அறம்), நியாயம், சத்தியம்(உண்மை) என்னும் மேகங்களைச் சிதறடித்து வானத்தின் தொலைது}ர மூலை முடுக்குகளில் கொண்டு போய்ச் சேர்த்து விட்டன. சனதான தர்மம் (என்றும் அழியா நிலைத்த அறம்) என்பது மறைந்து போகும் அபாயத்தில் இருப்பதாக மக்கள் உணர்கின்றனர். ஆனால் தலைவராம் இறைவன் நினைத்தால் மட்டுமே அது நடக்கும். எந்தத் தலைவராம் இறiவா இந்த அறத்தினை (தருமத்தை) உலகில் கொண்டுவந்து வைத்தாரோ, அவர் இதனை அழியும்படி விடமாட்டார்! எங்கெல்லாம் சத்தியம், அறம், சாந்தி, பிரேமை (அதாவது வாய்மை, அறம், அமைதி, அன்பு) வலியுறுத்துப் படுகின்றனவோ, அவை எந்த மதத்தில் இருந்தாலும் சரி, அல்லது எந்த மொழியில் இருந்தாலும் சரி, அவை எந்தப் பேராசான் (குரு) மூலமாக வந்தாலும் சரி, அந்தப் பேராசான் எங்கிருந்தாலும் சரியே, அங்கே நாம் சனாதன தருமம் இருப்பதை உணரலாம்!


அன்னமும் அறமும் - அப்துல்காதர் ஷாநவாஸ்

.


இன்னும் குளிர்கிறது அம்மா ஊட்டிய பழஞ்சோறு என்ற கவிதையைப் படித்தவுடன் அந்திமக் காலம் வரை நெஞ்சில் நிற்கும் அன்னையின் கைகள் நினைவுக்கு வந்தனஅத்துடன் சில நேரங்களில் ‘‘அன்னமுகம்மதுவை’’கீழே சிந்தாமல் சாப்பிடு என்று அந்தக் கைகள் அடித்ததும் நினைவுக்கு வந்ததுஉணவை அன்ன கோசம் என்றும் சொல்கிறார்கள்உணவு உண்டு விட்டு எழுந்திருக்கும்போது பருக்கைகள்’ சிந்தாமல் இருக்கிறதா என்று பார்க்கும் பழக்கம் சிலருக்கு அனிச்சைச் செயல்ஆனால் உலகில் மூன்றில் ஒரு பங்கு உணவுப் பொருட்கள் உண்ணப்படாமலேயே வீணாகின்றன என்கிறது புள்ளிவிபரங்கள்.என் பார்வையில் -மஷூக் ரஹ்மான்


.
நான் ஒரு ஆசிரியன். ஆசிரியர்களைச் சந்திப்பது மாணவப் பருவத்திலிருந்தே எல்லோர்க்கும் ஏற்படும் அனுபவம்தான். என் பார்வையில் ஆசிரியர்கள்இ அன்றைய மற்றும் இன்றைய ஆசிரியர் – மாணவர் உறவு பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
பள்ளியில் படித்த காலத்தில் ஆசிரியர் என்றாலே எனக்கும் எல்லோரும் போல பயம் அதிகம்.
இப்போது இந்த பயத்தின் காரணத்தை ஆய்ந்தால் ஒரு விஷயம் புரிகிறது. அதாவது ஆசிரியர்கள் அந்நியர்களாக பாவிக்கப்பட்டது .

இலங்கைச் செய்திகள்

.
கனேடிய தமிழ் கணவர் “வெள்ளைவேனில்” மனைவியை கடத்திச் சென்று கொலை

நேற்று யாழில் தாய் மற்றும் 15வயது சிறுவன் ஒருவனையும் வெள்ளை வேனில் கடத்திச் சென்ற சம்பவம், பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. கடத்தி செல்லப்பட்ட 24 மணித்தியாலத்தினுள் யாழ். தலைமையத்தை சேர்ந்த படைவீரர்களால் சிறுவன் காப்பாற்றப்பட்டதுடன், சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

மேலதிக விசாரனைகளுக்காக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் இவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய சந்தேக நபர்களை கைதுசெய்யும் முயற்சியில் படையினரின் ஒத்துழைப்பு பெறப்பட்டுள்ளது.

இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:-


தமிழ் சினிமா

.
*ராணாவில் ரஜினியின் வாள் சண்டை!


*சிங்கம் புலி

சென்னை, மார்ச் 7 (டிஎன்எஸ்) படத்தின் முக்கியமான அம்சம் ஜீவா முதன் முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருப்பது. அதைவிட முக்கியமான (மோசமான) அம்சம் படத்தில் இடம்பெறும் இரட்டை அர்த்த வசனங்களும், காட்சிகளும். விரும்பும் பெண்களையெல்லாம் தன் மன்மத விளையாட்டுக்கு ஈர்த்துகொள்ளும் அடப்பாவி! ஜீவாவும், எங்கு தப்பு நடந்தாலும் அதை தட்டி கேட்கும் ஆக்ரோஷ ஜீவாவும் அண்ணன்-தம்பி. வீட்டில் கெட்டபெயர் எடுத்தாலும் வெளியே நல்ல பெயர் வாங்குகிறார் அண்ணன் ஜீவா.


அன்பும் தியாகமும் தபசு காலத்தினை அர்த்தமுள்ளதாக்கட்டும்!

.


 உண்மை அன்பு எது என்பதையும் உயர்ந்த தியாகம் என்பது என்னவென்பதையும் பரிசுத்த வேதாகமத்தின் ஏசாயா நூல் மத்தேயு நற்செய்திகளில் காண முடியும்.

அன்பு, தியாகம் போன்றவை ஒவ்வொரு மனித வாழ்விலும் இருக்க வேண்டியவை. அன்பைப் பகிர்ந்து வாழ்வதே மனித வாழ்வின் முக்கிய செயற்பாடு. அன்பு காட்ட முடியாதவர்களே மனித உருவில் நடமாடும் மிருகங்களாக செயற்படுகின்றனர்.

ஒருவருக்கொருவர் அன்பு செய்ய வேண்டும் என்பதையே இயேசுகிறிஸ்து ஒருவன் தன்னைத்தான் நேசிப்பது போல பிறரையும் நேசிக்க வேண்டும் என தெரிவிக்கின்றார்.


உலக கோப்பை கிரிக்கெட் போட்டி

.
இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான போட்டி மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டது

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்துள்ளது. இதன் அடிப்படையில் இவ்விரு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளி வீதம் வழங்கப்பட்டுள்ளது.


இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான போட்டி மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டது. இதனையடுத்து போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலைக்கு கொண்டுவரப்பட்டது.

கொழும்பு பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடிய போது இடைநடுவே மழை குறுக்கிட்டதால் போட்டி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதன்போது இலங்கை அணி 32.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களை பெற்றது.