மரண அறிவித்தல்

·         .                                            
                                                                                        ஸ்ரீமதி ஜெயலக்ஷ்மி சீதாபதி ஐயர்   


                                                                                                                         


மறைவு 10.07.2014

  
       ஸ்ரீமதி ஜெயலக்ஷ்மி சீதாபதி ஐயர் அவர்கள் கடந்த 10 7 14 வியாழக்கிழமை அன்று இரவு 10.45 மணியளவில் இறைவனடி சேர்ந்துள்ளார் என்பதை ஆழ்ந்த அனுதாபத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இவர் காலம் சென்ற சீதாபதி ஐயர் அவர்களின் அன்பு மனைவியும், காலம் சென்ற நவிண்டிலைச் சேர்ந்த சதாசிவ சர்மா- ராஜம்மாள் அவர்களின் அன்பு புதல்வியும் காலம் சென்ற மானிப்பாய் மருதடியைச் சேர்ந்த வெங்கடேஸ்வர இரத்தினசாமி குருக்கள்-சீதாலக்ஷ்மி அவர்களின் அன்பு மருமகளும், வெங்கடேசன் (அனுஷன்), சீதாலக்ஷ்மி, ராஜலக்ஷ்மி ஆகியோரின் அன்புத் தாயாரும், சசிகேரன், கிருஷ்ணமூர்த்தி, மீனாக்ஷி ஆகியோரின் அன்பு மாமியாரும், சுதிக்ஷ்ணன், தீக்ஷிதா, ஷோபனா, சுரேஷ், விஷ்ணு, நிகேதனா, ஜனார்த்தனன், ஸ்ரீநிவாசன் ஆகியோரின் அன்புப் பாட்டியாரும், ஓவியாவின் அன்பு பூட்டியாரும், காலம் சென்றவர்களான சுப்ரமணியம், மோகனாம்பாள், ஜெயராமன், தெண்டு, கௌரி, அஞ்சுமணி, உஷா, மற்றும் வெங்கிட்டு, காஞ்சனா, குணன், ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.


முடிந்துபோன பிரியத்தின் துயரப்பாடல்....

.


தனித்தலையும் ஒரு
பறவையைப்போல நான்
என் இருப்பின்
வேர்களாய்
உன் ஞாபகங்கள்

விலகிப் போன பின்னும்
விட்டுப் பிரியா
துயரத்தின் வாசத்தில்
ஒட்டியிருக்கிறது
நம் ஆதிக்காதல்

நியாபகச்சூட்டிடமிருந்து
ஒளிந்து கொள்வது
அத்தனை சுலபமில்லையெனும் போது
உன் பிரிவின் கூரலகால்
கிழிகிறது என் இதயம்

காத்திருப்பின் ஆடை சுமந்து
நீயும் நானும்
அமர்ந்துபேசும்
மஞ்சல் நிறபூக்கள் உதிர்ந்துகிடக்கும்
யாருமற்ற இருக்கைகளிடம் கேள்..

அமிர் என்ற அமுதர் என்ற அமிர்தலிங்கம் - திருநந்தகுமார்

.
    13.07.1989 அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் சுட்டுக்கொல்லப்பட்ட நாள்  
நினைவுகள் இனிமை: துயரமும் கலந்த தருணங்களாக….
அமிர் என்ற அமுதர் என்ற அமிர்தலிங்கம்


கடந்த சில வருடங்களாகவே இலங்கைப் பாராளுமன்றத்தின் முன்னாள் எதிர்கட்சித் தலைவரும், அப்போதய தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களைப் பற்றி எனது சில நினைவுகளையும் எண்ணங்களையும் எழுதவேண்டும் என்றிருந்தேன். எனினும் அது இந்த வருடம் தான் நிறைவேறுகிறது.  இது அமிர்தலிங்கம் அவர்கள் பற்றிய எனது எண்ணக்கருத்துகளே அன்றி அவர் பற்றிய ஒரு மதிப்பீடு அல்ல என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். அமிர்தலிங்கம் என்ற அந்த மனிதரின் குணம் நாடிக் குற்றம் நாடி அவற்றின் மிகை நாடி மிக்க சொல்லும் முயற்சியாக இல்லையெனினும் அவற்றின் சில அம்சங்கள் இங்கு தவிர்க்க முடியாததாகவே இருக்கின்றன.
இற்றைக்கு இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னர் 13/07/1989 அன்று கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அமிர்தலிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டார்.  இப்போது போல் அல்லாது அக்காலத்தில் தொலைத்தொடர்பு வசதிகள் மிகக் குறைவு அல்லது கிடையாது.  ஜூலை மாதம் பதின்னான்காம் திகதி உதயன் பத்திரிகையில் தலைப்புச் செய்தியைப் பார்த்து அதிர்ந்து போனேன்.  கொழும்பில் அமிர், யோகேஸ் சுட்டுக் கொலை என தடித்த எழுத்துக்களில் தலைப்பிட்டுப் பிரதான செய்தி அமைந்திருந்தது. அமிர்தலிங்கம் அவர்களுடன் முன்னாள் யாழ். பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனும் சுட்டுக்கொல்லப்பட, அவர்களுடன் இருந்த த.வி.கூ தலைவர் திரு சிவசிதம்பரம் அவர்கள் படுகாயமடைந்த சம்பவம் அது.

திரும்பிப்பார்க்கின்றேன் - முருகபூபதி

.
தொலைந்துபோன  வாழ்வை  காற்றுவெளிக்கிராமங்களில்  தேடிய சமூகச்செயற்பாட்டாளன்    கவிஞர்    வில்வரெத்தினம்
      
                 
                          
வீதிகளுக்கு    தனிநபர்களின்   -   பிரபல்யமானவர்களின்  அரசியல் - தொழிற்சங்கத்தலைவர்களின்     பெயர் -    மரங்கள்   -   மலர்கள்  - ஆலயங்களின்  -  தேவாலயங்களின்  மசூதிகளின்  விகாரைகளின் அல்லது    தெய்வங்களின்     பெயர்   சூட்டப்பட்டிருப்பதை அவதானிக்கிறீர்கள்.
மனிதர்கள்    அணியும்   பாதணி   சப்பாத்து.      அந்தப்பெயரில்    வீதி இருக்கிறது.   எங்கே?
கொழும்பில்    கொட்டாஞ்சேனைப்பிரதேசத்தில்     ஜெம்பட்டா  வீதி மிகவும்    பிரசித்தம் .   அந்த   வீதி  முடிவடையும்     இடத்தில்     புனித அந்தோனியார்     தேவாலயம்.     செவ்வாய்க்கிழமை    அந்தோனியாரை வழிபடுபவர்களுக்கு     முக்கியமான      நாள்.   அன்றையதினம்   அந்த வீதி   ஜனத்திரளினால்   பரபரப்படைந்து    காணப்படும்.
அந்த  வீதியில்  ஒரு   சிறிய    வீதி  திரும்புகிறது.    அதன்  பெயர் சப்பாத்து வீதி.    ஆங்கிலத்தில்   Shoe  Road    என   அழைப்பார்கள். அங்கே   1970   களில்   ஒரு   இல்லம்  -  இலக்கியவாதிகளின்   உரத்த உரையாடல்  களமாக  விளங்கியது.   சில  வேளைகளில்   மதுரமான குரலில்    பாடல்களும்    அங்கு    ஒலிக்கும்.    அந்த    இல்லத்திலிருந்து அவ்வாறு   இலக்கியக்குரலும்    இசைக்குரலும்    மாத்திரமின்றி தரமான   காலாண்டு   இலக்கிய   இதழும்  வெளியானது.    அதன் பெயர்    பூரணி.
அந்த    வீட்டில்   வசித்த     என்.கே. மகாலிங்கம்   அவர்களும்    அவரது மனைவியாரும்    தங்களை   சந்திக்கவருபவர்களுக்கு இலக்கியவிருந்துடன்    அறுசுவை  விருந்தும்  படைத்து இன்முகத்துடன்    வழியனுப்பிவைப்பார்கள்.
 பெயருக்கேற்றவிதமாக   இலக்கியச்சிற்றேட்டில்    பூரணத்துவம் காண்பித்தமைபோன்று   அந்த  இல்லமும்   இலக்கியவாதிகளுக்கான விருந்தோம்பலிலும்  பூரணத்துவம்    பெற்றிருந்தது.

சக்தி தொலைக்காட்சியில் வைசாலி யோகராஜா யாழ்ப்பாண தமிழ் சிறுமி ...

.
இலங்கையில் சக்தி தொலைக்காட்சியில் இடம்பெறும் junior super star போட்டியில் வைசாலி யோகராஜா யாழ்ப்பாண தமிழ் சிறுமி ...

சங்க இலக்கியக் காட்சிகள் 15- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

.
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.

அவளைக் கண்டான், அனைத்தையும் மறந்தான்!

அவன் ஒரு கட்டிளம் காளை. அழகிய உருவம். இனிய உணர்வுகள் நெஞ்சத்தில் எழுச்சிபெற்று விளையாடும் பருவம். ஊரிலே அவனுக்கு நல்ல பெயர். உழைப்பால் உயர்ந்தவன்,ஒழுக்கத்தில் சிறந்தவன்,உள்ளத்தால் நல்லவன் என்று எல்லோராலும் விரும்பப்படுபவன். அவனது ஊரிலும், அயலூர்களிலும் உள்ள இளம் பெண்கள் அவனிடம் மயங்கினார்கள். அவனோடு உறவாட விரும்பினார்கள். அவனின் அழகிலே சொக்கிய பரத்தையர்கள் தம்மிடம் அவன் சிக்க மாட்டானா என்று ஏங்கினார்கள். ஆனால் அவனோ யாருக்கும் பிடி கொடுக்காமல் இருந்தான்.

மெல்பன் கலை - இலக்கிய விழா 2014. 26.07.2014

.
 அவுஸ்திரேலியா  தமிழ்   இலக்கிய    கலைச்சங்கம்
                         மெல்பன்    கலை - இலக்கிய விழா  2014
கருத்தரங்கு -விமர்சன அரங்கு-கலையரங்கு-இசையரங்கு-  நடன அரங்கு
     26-07-2014  சனிக்கிழமை  பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணிவரையில்
நடைபெறும்  இடம்:     St.Bernadettes  Community Centre - 1264, Mountain Highway,   The Basin - Vic- 3154
                    பகல்பொழுது  நிகழ்ச்சிகள்:     (பகல்   மணிக்கு  ஆரம்பம்)
                              இலக்கிய கருத்தரங்கு
மெல்பன்,  கன்பரா,   பேர்த்   மாநகரங்களிலிருந்து   வருகைதரும் படைப்பாளிகளின்   சிறப்புரைகளும்  அன்பர்களின்   கலந்துரையாடலும்
தமிழ்  ஆராய்ச்சிக்கு  ஆக்கபூர்வமாக   உழைத்த   அமரர்   வண.பிதா தனிநாயகம்   அடிகளார்   நூற்றாண்டு    நினைவுப்பேருரை.
பல்கலைக்கழக  பிரவேசப்பரீட்சைக்குத்  தோற்றும்   தமிழ்   மாணவர்களுக்கும்   தமிழ்   ஆசிரியர்களுக்கும்  பயனுள்ள   கருத்துரைகள்  இடம்பெறும்  கருத்தரங்கு.
                             நூல் விமர்சன அரங்கு
மெல்பன் - சிட்னி - கன்பரா எழுத்தாளர்களின்  நாவல், சிறுகதை, கவிதை, புனைவு  இலக்கிய கட்டுரை,  ஆன்மீக நூல்களின்  திறனாய்வு  நிகழ்ச்சி.
தமிழ்    இலக்கிய     வாசகர்களுக்கு   பயனுள்ள வாசிப்பு அனுபவப்பயிற்சிக்கான   களம்.
                                            இரவு நிகழ்ச்சிகள்:    ( மாலை 6 மணிக்கு ஆரம்பம்)
மெல்பன்   நிருத்தியோ   பாசனா   நாட்டியக்குழுவினரின்  நாட்டிய நாடகம்
மெல்பன்  கலாலயா  மெல்லிசைக்குழுவினரின்  பழைய  புதிய  திரை  இசை கானகீதங்கள்.  இலங்கை - இந்தியா - மலேசியா  கலைஞர்களின் 
                                            Fusion Dances & Drum
     அன்பர்களுக்கு    சுவையான    இரவு    உணவுவகைகள்   
   அனுமதி:      குடும்பம்  $10  வெள்ளி     ---     தனிநபர்:  $5   வெள்ளி.
              அனைவரையும்  அன்புடன்  அழைக்கின்றோம்

அவுஸ்திரேலியா  தமிழ்   இலக்கிய    கலைச்சங்கம்

உலகச் செய்திகள்


விமானியின் சாதுரியத்தால் இறுதி நொடியில் தடுக்கப்பட்ட விமான விபத்து

போகோ ஹராம் போராளிகளிடமிருந்து தப்பி வந்த 63 பெண்கள், சிறுமிகள்

விமான பாகங்களை ஏற்றிச்சென்ற புகையிரதம் தடம் புரண்டு அனர்த்தம்

சோமாலிய பாராளுமன்றத்துக்கு அருகில் தற்கொலைக் கார் குண்டுத் தாக்குதல்:4 பேர் பலி

மெக்ஸிக்கோ, கெளதமாலாவை உலுக்கிய 6.9 ரிச்டர் பூமியதிர்ச்சி; இருவர் உயிரிழப்பு

பலஸ்தீன காஸாவில் இஸ்ரேலிய வான் தாக்குதலில் 25 பேர் பலி - பலியானவர்களில் 5 சிறுவர்கள் உள்ளடக்கம்

ஒரு நிமிடக் கதை: மருமகள் - எஸ்.எஸ்.பூங்கதிர்

.

அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை என்று அண்ணனின் போன் வந்ததும் சங்கர் அப்பாவைப் பார்க்க கிராமத்துக்கு கிளம்பினான்.
ஆபீஸில் இருக்கும் போது போன் வந்ததால், மனைவி சித்ராவிடம் கூட சொல்லாமல் கிராமத்துக்கு சென்றான். அங்கிருந்து மனைவிக்கு போன் செய்து தான் ஊருக்கு வந்திருப்பதைச் சொன்னான்
அடுத்தநாள் மாலை ஊரில் இருந்து கிளம்பி திங்கள்கிழமை நேராக அலுவலகத்துக்கு சென்றான் சங்கர். இரவு வீடு திரும்பியவனுக்கு அதிர்ச்சி. வீட்டில் மனைவி சித்ரா இல்லை. குழந்தைகள் பள்ளியை விட்டு வந்து பள்ளி சீருடையைக் கூட மாற்றாமல் தூங்கிக்கொண்டிருந்தார்கள்.
அதைப் பார்த்த சங்கருக்கு எரிச்சலாக வந்தது. வீட்டிலிருந்த வேலைக்காரியிடம் “அவ எங்க போய் தொலைஞ்சா...?” என்று கத்தினான்.
“எனக்கு தெரியாது, சார்!... காலையில யாருக்கோ போன் பண்ணாங்க. உடனே ‘நான் அவசரமா வெளியப் போகணும். நான் வர்றவரைக்கும் பிள்ளைங்களைப் பார்த்துக்கோ’ன்னு மட்டும் சொல்லிட்டுப் போனாங்க!" என்று அவள் சொல்ல உடனே சித்ராவின் ‘செல்’லுக்கு சங்கர் போன் செய்தான்.
சித்ரா போனை எடுத்ததும், “வீட்ல இல்லாம நீ எங்க போய் தொலைஞ்சே...!?” கடுப்புடன் கத்தினான்.
“உங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்லைன்னு கேள்விப்பட்டதும், உடனே பேருக்குன்னு போய் பார்த்துட்டு அம்போன்னு அந்த கிராமத்துல வசதியில்லாத உங்க அண்ணனை நம்பி விட்டுட்டு வந்திட்டீங்க. அதான் நான் கிளம்பி வந்து சிட்டியில நல்ல ஹாஸ்பிட்டல்ல அவரை சேர்த்திருக்கேன். இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவேன். அதுவரைக்கும் நீங்க கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க. ப்ளீஸ்!” என்றாள்.
இதைக் கேட்டதும் குற்ற உணர்ச்சியில் சங்கர் தலை குனிந்தான்.

Nantri tamil.thehindu

திரு டொமினிக் ஜீவா அவர்களுக்கு இயல் விருது.

.

திரு டொமினிக் ஜீவா அவர்களுக்கு வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனையான இயல் விருது.  

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் இயல் விருது (2013) இவ்வருடம் திரு. டொமினிக் ஜீவா அவர்களுக்கு அவருடைய 88வது பிறந்த நாளை ஒட்டி சிறப்பு விருதாக வழங்கப்படுகிறது. இந்த விருது பரிசுக் கேடயமும், 2500 டொலர் பணப் பரிசும் கொண்டது.  'ஈழத்தமிழ் நவீன இலக்கிய எழுச்சியின் சின்னம்' எனப் போற்றப்படும் இவர் இந்த விருதைப் பெறும் 15வது ஆளுமை ஆவர். முற்போக்கு இயக்கத்தின் முக்கிய பண்புக் கூறுகளான சமூகமயப்பாடு, சனநாயகமயப்பாடு ஆகியவற்றின் பெறுபேறாக எழுச்சி பெற்ற பல படைப்பாளிகளில் டொமினிக் ஜீவா குறிப்பிடத் தகுந்தவர்.

டொமினிக் ஜீவா 1927ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஜோசப் – மரியம்மா தம்பதிகளுக்கு பிறந்தார். இவரது தந்தையார் ஜோசப் ஒரு கலைப் பிரியர். நாட்டுக் கூத்தில் நாட்டமுடையவர். தாயார் மரியம்மாவோ அருவி வெட்டுக் காலங்களில் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி, சக தொழிலாளர்களை மகிழ்வித்தவர். கலையில் ஈடுபாடு கொண்ட தாய் – தந்தையர்க்குப் பிள்ளையாகப் பிறந்த ஜீவா, கலை இலக்கிய ஆளுமையின் ஊற்றுக்கண்ணை பெற்றோரிடமிருந்து பெற்றார். பின்னாளில் ஈழத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு சாதனையாளராக மிளிர்வதற்கான பின்புலம் இப்படி அமைந்தது.

பேராசிரியர் கா. சிவத்தம்பி நினைவரங்கு‏

.
அண்மையில் இடம் பெற்ற பேராசிரியர் சிவத்தம்பி அவர்களுடைய நினைவரங்கில் இருந்து ஒருசில படங்கள்


காகமும் நரியும் - எஸ் ராமகிருஷ்ணன்

.
பாட்டியிடமிருந்து காகம் வடையைத் திருடிய சிறார்கதையை நாம் அறிவோம், நூற்றாண்டுகாலமாக அக்கதை தமிழகத்தில் பிரபலமாக இருந்த போதும் அதற்கு எங்கேயாவது யாராவது சிலை செய்திருப்பார்களா என யோசித்தேன், நான் அறிந்தவரை அப்படி எதுவுமில்லை.
ஆனால் இக்கதையின் மாறுபட்ட பிரெஞ்சுவடிவத்தில் காகத்திடமிருந்த வெண்ணைய்யை நரி தந்திரமாக ஏமாற்றிப் பிடுங்கிக் கொள்கிறது. லா ஃபோந்தேன் 1668ல் வெளியிட்ட இந்தப் பிரெஞ்சுக்கதையை அவர் ஈசாப் கதையில் இருந்து மீள்உருவாக்கம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.இலங்கைச் செய்திகள்


சிறில் ரமபோஷா யாழ். விஜயம்

எமக்கு எது­வுமே வேண்டாம்; பிள்­ளை­களை மட்டும் எம்­மிடம் ஒப்­ப­டைத்தால் போதும்

இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்துவதற்கு இடைக்கால தடை

போரின் இறுதி நாட்களில் ஷெல், துப்பாக்கிச் சூட்டுச்சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே இருந்தன

'அரசாங்கமோ, இராணுவமோ மனித நேயமுள்ளவர்களாக இருந்தால் எனது கணவரை உயிருடன் தர வேண்டும்"

அளுத்கமவில் இராணுவ முகாம் அமைக்க நடவடிக்கை

எழுத்துப் பிழையுடன் வீதியின் பெயர்ப்பலகை

மலையகத்தில் சீரற்ற காலநிலை

எந்தவொரு வழியிலும் இலங்கைக்கு உதவுவதற்கு அவுஸ்திரேலியா தயார்

பாதுகாப்பு அமைச்சின் உத்தரவு தொடர்பில் அமெரிக்கா கவலை

நாடுகடத்தப்பட்ட இலங்கையர்களின் குற்றச்சாட்டு தொடர்பில் ஆஸி. குடிவரவு அமைச்சர் விசனம்

ஆஸி.யினால் கைது செய்யப்பட்ட 41 பேரே கடந்த 7ஆம் திகதி விடுவிக்கப்பட்டவர்கள் - அநுரவின் கேள்விக்கு நியோமல் பதில்
==================================================================

உலக கிண்ண கால்பந்துப் போட்டி ஒரு பார்வை - புன்னியாமீன்

.
உலகிலேயே அதிகளவு ரசிகர்களை கொண்ட விளையாட்டு கால்பந்து போட்டியாகும்.உலகக் கிண்ண கால்பந்து 1930ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர்  நான்காண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கிண்ண கால்பந்து போட்டி நடைபெற்றுவருகிறது.  அந்த வகையில் 2014ம் ஆண்டுக்கான 20 வது உலகக் கிண்ண  போட்டி பிரேசிலில்  2014 ஜுன் மாதம் 12ம் தேதி ஆரம்பமாகி  2014 ஜூலை மாதம் 13ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
பிரிவுக்கு 4 அணிகள் வீதம் 8 பிரிவுகளில் மொத்தம்  32 அணிகள் கலந்து கொள்ளும் இப்போட்டித்தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு முதற்பரிசாக 35மில்லியன் அமெரிக்க டாலரும் இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 25 மில்லியன் அமெரிக்க டாலரும் மூன்றாம் இடம்பிடிக்கும் அணிக்கு 22 மில்லியின் அமெரிக்க டாலரும் பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கடவுளை விரட்டிவிட்ட இடத்தில் கவிதையை வைக்கலாம்

.

கடவுளை விரட்டிவிட்ட இடத்தில் கவிதையை வைக்கலாம்- கவிஞர் லிபி ஆரண்யா நேர்காணல்நவீன அரசியலை அது உருவாக்கியிருக்கும் அதிகாரத்தை எதிர்கொள்ளத் தம் கவிதைகளில் எள்ளலையும் நையாண்டியையும் பயன்படுத்துபவர் லிபி ஆரண்யா. அரசியலுக்கும் அழகியலுக்கும் சம்பந்தமில்லை என்று நிறுவத் துடிப்பவர்களின் மத்தியில் இந்த இரண்டுக்கும் சம்பந்தம் உண்டு என்பதை தன் கவிதைகளின் வாயிலாக நிரூபிக்கிறார்.
தப்புகிறவன் குறித்த பாடல், உபரி வடைகளின் நகரம் என இரு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. உபரி வடைகளின் நகரம் வாசகர்களின் மத்தியில் மிகுந்த கவனம் பெற்ற தொகுப்பு…
உங்களுடைய கவிதைகள் பகடி மொழியும் நகைச்சுவையும் மிக முக்கியமாகப் பங்கு வகிப்பதற்கு காரணம்...
நான் தென்பகுதியில் இருக்கும் பகடி சார்ந்த உரையாடல்கள் மத்தியில் வாழ்ந்தவன். சிறு வயதில் என்னுடைய வீட்டுக்கு பக்கத்தில் ஒரு பாட்டி இருந்தாங்க. அவுங்க அடிக்கடி எம்.ஜி.ஆர். படத்துக்குப் போவாங்க அதற்காக தாத்தா அந்தப் பாட்டியைப் போட்டு அடிப்பார். பிறகு யாராவது ஒருத்தர் சமாதானம் செய்து அந்தப் பாட்டியைக் கூட்டிவருவார்.
பாட்டியை அடித்த அசதியில் தாத்தா தூங்கி விடுவார். அந்த நேரத்தில் மறுநாள் எம்.ஜி.ஆர். படத்திற்குப் போவதற்கு பாட்டி தயாரிப்பு வேலையில் இறங்கியிருப்பார். பொதுவாக எளிய மனிதர்கள் தன்னுடைய துயரங்களையும் வருத்தங்களையும் வலிகளையும் கடந்து செல்ல ஒரு வலி நிவாரணியாகத்தான் பகடியை வைத்திருக்கிறார்கள். பகடி என்பது நாம் விரும்புகிற அரசியலை முன்னெடுக்கிற ஒரு ஆயுதமாகக் கூட இருக்கலாம்.
உங்களுடைய கவிதைகள் அகம் சார்ந்து குறைவாகவும் தெரு சார்ந்து அதிகமாகவும் உள்ளதே...

ஆசிரியர் செய்த பிழை - ஆஸ்திரேலிய காடுறை கதை 7

.

திரு. ஹென்றி லாசன்

பில் என்று அழைக்கப்படும் வில்லியம் ஸ்பென்சர்ஒரு கோடை நாளில் பள்ளிக்குப் போகாமல் குளத்தில் நீச்சலடிக்கச் சென்றுவிட்டான்ஆசிரியர் அவன் பள்ளிக்கு வராததைப் பற்றி அவன் தந்தைக்கு ஒரு கடிதம் எழுதி அதை வில்லியத்தின் தம்பியான ஜோ என்று அழைக்கப்படும் ஜோசப்பிடம் அவன் வீட்டுக்குச் செல்லும்போது கொடுத்துச் சொன்னார்.

ஜோசப்இதை இன்றிரவு உன் அப்பாவிடம் கொடுக்கவேண்டும்.”

சரி ஐயா.”

ஜோ பள்ளிவிட்டு வரும்வரை ஒரு சந்தில் காத்திருந்த பில் அவன் வந்ததும் அவனுடன் இணைந்துகொண்டான்.

நீ அப்பாவிடம் கொடுக்க ஒரு கடிதம் வைத்திருக்கிறாய் என்று நினைக்கிறேன்.”

ஆமாம்.” ஜோ சொன்னான்.

அதில் என்ன இருக்கிறதென்று உனக்குத் தெரியுமா?”

ம்..தெரியும்நீ ஏன் இன்று பள்ளிக்கு வரவில்லைபில்?”

அதை அப்பாவிடம் கொடுக்குமளவுக்கு நீ ஒன்றும் மோசமானவன் இல்லைதானேஜோ?”

தமிழ் சினிமா - சைவம்


சைவம்
இயக்குனர் விஜய் தன் சிறு வயதில் அவர் குடும்பத்தில் நடந்த சம்பவத்தை தன் அம்மாவிடம் கேட்டு அறிந்து அதை திரைக்கதையாக உருவாக்கி நெகிழ்ச்சியுடனும், உணர்வுடனும் படைத்திருக்கும் படம் சைவம்.

கதை என்னவென்றால்

படம் தொடக்கமே அசைவ மார்க்கெட்டில் ஆரம்பித்து ஆடு, கோழி, மீன் என்று எல்லா அயிட்டத்தையும் ஒருவேளை சாப்பாட்டுக்கே வாங்கி வர சொல்கிறார் நாசர்.கிராமத்தில் வாழ்கின்ற நாசர் ஊர் திருவிழாக்காக வெளி ஊரில் வாழும் தன் மகன், மகள் மற்றும் சொந்த பந்தங்கள் எல்லோரும் (அசைவ)குடும்பம் ஒன்று கூடுகிறார்கள். அதே நேரத்தில் அந்த குடும்பத்தில் எல்லோருக்கும் பேபி சாரா தான் செல்ல பிள்ளை.எல்லோரும் ஒன்று சேர குடும்பமே சந்தோஷத்தில் மிதக்கிறது. இந்த தருணத்தில் கோயில் சென்று எல்லோரும் சாமி கும்பிட அர்ச்சனை தட்டு கொடுக்கும் நேரத்தில் பேபி சாராவின் துணியில் தீ பற்றி கொள்கிறது.உடனே அர்ச்சனை தட்டு கீழே தவறி விழ, குடும்பத்துக்கு ஆகாது என்று பூசாரி கூறுகிறார்.இதற்கு என்ன செய்வது என்று நாசர் கேட்க உங்கள் குடும்பத்தில் ஏதாவது நேர்த்தி கடனை செலுத்த மறந்திருப்பீர்கள், அப்படி இருந்தால் உடனே அந்த நேர்த்தி கடனை செலுத்துங்கள் என்று சொல்கிறார் .பூசாரி சொல்வது போல சில வருடங்களுக்கு முன்பு ஒரு பெரிய விபத்தில் அந்த குடும்பமே தப்பித்தது, அதற்கு கருப்பன்ன சாமிக்கு சேவல் ஒன்றை காணிக்கையாக செலுத்துவதாக வேண்டியிருந்தார்கள், ஆனால் இன்று வரை காணிக்கையை செலுத்தவில்லை.வீட்டில் வாழும் பேபி சாராவின் செல்ல கோழியான பாப்பாவை (சேவல் பெயராம் ) கருப்பனருக்கு படைக்க முடிவு செய்கிறார்கள், ஆனால் அங்கு தான் பிரச்சனையே, திடீரென்று அந்த சேவல் மறுநாளே காணாமல் போகிறது, உடனே அந்த சேவலை தேடி குடும்பமே படை எடுக்கிறதுகடைசியில் சேவல் கிடைத்ததா, கருப்பனருக்கு காணிக்கை தந்தார்களே என்பதே இந்த சைவம்.ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால் செட்டிநாடு குடும்பமாக இருந்த குடும்பம் எப்படி சைவ பிள்ளையாக மாறுகிறார்கள் என்பதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் விஜய்.

நடிகர் நடிகைகளின் நடிப்பு

நாசர் நடிப்பை பற்றி ஊர் அறிந்த விஷயம் தான், ஒரு நடிகர் என்பதை ஓரம் கட்டிவிட்டு, அந்த வேடமாகவே மாறும் சக்திக் கொண்டவர் நாசர், இந்த படத்திலும் தனது சக்தியை காண்பித்திருக்கிறார்.வயதான கதாபாத்திரத்திற்காக அவருக்கு போடப்பட்டுள்ள கெட்டப்பையும், மேக்கப்பையும் உண்மையானதாக மாற்றியுள்ளது நாசரின் நடிப்பு.முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள குழந்தை நட்சத்திரம் சாரா, நடிப்பில் ரொம்பவே தேர்ச்சி பெற்றிருக்கிறார். அழகிலும், நடிப்பிலும் எல்லோரையும் கவர்கிறார் .காட்சிகளை உணர்ந்து, எக்ஸ்பிரஸன்கள் கொடுத்திருக்கும் இவரை இயக்குநர் விஜய் ரொம்ப நன்றாகவே வேலை வாங்கியுள்ளார்.படத்தில் ஏகப்பட்ட புதுமுகங்கள் தான். இவர்களுக்கு பெரிதாக நடிப்பு வராது என்பதை புரிந்துக்கொண்ட விஜய், அதையே படத்தின் பலமாக்கி, அவர்களுடைய கதாபாத்திரங்களை எதார்த்தமாக நடமாட விட்டிருக்கிறார்.குறிப்பாக சரவணன் என்ற ஒரு சிறுவனின் நடிப்பை பற்றி சொல்லவேண்டும், உண்மையில் இந்த படத்தின் பெரிய வில்லனே இவன் தான். நடிப்பு என்பதை தாண்டி இன்றைய தலைமுறையின் மாடர்ன் பிள்ளையாக மணிக்கு ஒரு முறை நிரூபித்துள்ளான்.நாசர் மகன் பாஷா, நடிப்புக்கு ஒன்றும் பெரிய அளவில் வாய்ப்பு இல்லை என்றாலும் கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து உள்ளார், அவரின் தோற்றமும், துறு துறு நடிப்பும் மக்களை கவரும்.வேலைக்காரனாக நடித்திருக்கும் ஜார்ஜ், அவருடைய மனைவியின் நடிப்பு என கண்டிப்பாக காமெடிக்கு பஞ்சம் இல்லை.

பலம்

படத்தில் எல்லோருமே நன்றாக நடித்திருக்கிறார்கள் என்பது இயக்குநர் விஜய்யின் முதல் வெற்றிதான்.நாசரின் மகன் பாஷா அவருடைய பேரனாக நடித்திருக்கிறார். அவருக்கும் அவருடைய அத்தை மகளுக்கும் இடையே காதல் உருவாகும் காட்சிகளும் நன்று.கதையை பொறுத்த வரை பெரிய அளவில் அழுத்தம் இல்லை என்றாலும் அதை விஜய் மேற்கொண்ட விதமும், காட்சிப்படுத்திய விதமும், திருக்குறளைப் போன்று ரொம்ப அர்த்தத்தை வெளிப்படுத்துகிறது.ஜி.வி பிரகாஷின் இசையில் அழகோ அழகு பாடல் கண்டிப்பாக அழகு தான் மற்றும் அவருடைய பின்னணி இசை படத்துக்கு பெரிய பலம்.நிரவ்ஷா ஒளிப்பதிவை பற்றி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, ஒரு ஸ்டைலிஷ் படமாக இருந்தாலும் சரி, இல்லை கிராமத்து படமாக இருந்தாலும் சரி பக்காவாக செய்கிறார், குறிப்பாக சேவலை துரத்தி ஓடும் காட்சியில் செம !

பலவீனம்

காணாமல் போன சேவலை நாசரின் அனுபவமே கண்டுபிடித்திருக்கவேண்டும். அதைச் செய்யாமல் பேரன் சொல்லும்வரை அவருக்குத் தெரியாது என்று காட்டியிருப்பது ரொம்பவே இடிக்குது.குழந்தை சாராவின் நடிப்பு நன்றாக இருந்தாலும் யதார்த்தத்துக்கு மீறிய சில பேச்சுக்கள் கொஞ்சம் ஓவராகவே தெரிகிறது .தலைப்புக்கு ஏற்றவாறு அனைத்து தரப்பு மக்களும் பார்க்க கூடிய அளவுக்கு ஒரு சத்தான சைவ உணவை தான் சமைத்திருக்கிறார் இயக்குநர் விஜய்.

மொத்தத்தில் சைவம் - சத்தான விருந்து


நன்றி cineulagam