உவந்தேற்றி வைத்துள்ளேன் ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா


                உருகொடுத்த அப்பாவும் 
                கருசுமந்த அம்மாவும்
                பெருவிருப்பத் தோடென்னை
                பேராசனிடம் சேர்த்தார் 
                 அவரருகில் நானிருந்தேன்
image1.JPG                 அகவிருளை அகற்றியவர் 
                 அறிவென்னும் பெருவொளியை
                 ஆசையுடன் காட்டினரே !

                  முதல்நாளில் அவர்பார்வை
                  முன்பயனே எனநினைத்தேன்
                   எனையளக்கும் கோலாக
                   என்னாசான் திகழ்ந்தனரே 
                   கருணையொடு கைபிடித்து
                   கசடகற்ற வழிசொல்லி
                   அரியயுப தேசமெல்லாம்
                   அளித்தனரே என்னாசான் ! 

                   கற்பதனால்  ஆயபயன்
                   என்னவென உணர்ந்ததனால்
                   கற்பதற்கு உரியவற்றை
                   கற்பித்தார் என்னாசான் 
                   கண்திறக்க கருத்துக்களை
                   கற்பித்தார் என்னாசான் 
                   காலமெலாம் அவரெனக்கு
                    கடவுளராய் தெரிகின்றார் !

அருணோதயா கல்லூரியின் 125 வது ஆண்டு விழா சிட்னி நிகழ்வு

 அருணோதயா கல்லூரியின் 125 வது  ஆண்டு விழா சிட்னி நிகழ்வு சனிக்கிழமை 07 09 2019 மாலை 6 மணிக்கு சிட் னி  பஹாய் சென்டரில் இடம்பெற்றது.



சிலப்பதிகாரப் பேச்சுப்போட்டி 2019 - சிட்னி


தமிழ் மொழியின் மகத்தான இலக்கியக் கருவூலம் சிலப்பதிகாரம். தமிழரின் முதல் காப்பியம், முத்தமிழ் காப்பியம், தமிழரின் கலாசாரத்தை உலகிற்கு கொண்டுவந்துள்ள தமிழரின் வரலாற்றுக் காப்பியமாகும் சிலப்பதிகாரத்திற்கு சிட்னியில் முதலாவது அனைத்துலக சிலப்பதிகார மாநாடு 27, 28, 29 செப்டெம்பர் 2019 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது.

முதலாவது அனைத்துலக சிலப்பதிகார மாநாட்டை முன்னிட்டு,  சிலப்பதிகாரத்தின் பெருமைகளையும் சிறப்புக்களையும் மாணவர்களும் அறியும் பொருட்டுப் பேச்சுப்போட்டிகள் செப்டெம்பர் மாதம் 1ம் திகதி  ஞாயிற்றுக் கிழமை சிட்னி தமிழர் மண்டபத்தில் நடைபெற்றது. 
முதலாம் பரிசு பெறுபவருக்குத் தங்கப்பதக்கமும் மற்றவர்களுக்கு வெற்றிக் கோப்பையும்  மாநாட்டில் வழங்கப்படவுள்ளது. 





கணாவின் இன்னிசைக் கச்சேரி (நிகழ்ச்சி விமரிசனம்) - உஷா ஜவாகர்


முதலாம் திகதி செப்டெம்பர் மாதம் 2019 அன்று பரமட்டா ரிவர் சைட் அரங்கில்(Parramatta Riverside Theatre) கணாவின் இன்னிசைக் கச்சேரி நடைபெற்றது.
இது இவர் தனித்து இசையமைத்த முதல் கச்சேரி ஆகும்.
முதலில் கணா என்கிற இந்த அற்புத கலைஞனின் பிறப்பு வளர்ப்பை  பற்றி பார்ப்போம்.
கணாதீபன் கற்பனைத் திறன் மிக்க இசைக்கலைஞன். சின்னஞ் சிறு பாலகனாக 5 வயதில் தன் கையில் கிடைக்கப் பெற்ற கிடாரை வாசிக்கத் தொடங்கினான்.
தாஸ்மேனியாவில் பேர்னி என்ற நகரில் பிறந்த கணா Rockhampton, Young, Orange போன்ற இடங்களில் வளர்ந்திருக்கிறார். அப்போது பியானோ, டிரம்பட் போன்ற வாத்தியங்களை பழகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
அவர் 17 வயது நிறைவடையும் போது பியானோ, கிடார் போன்றவற்றைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார்.
James Morrison உடனும் பாடசாலை நிகழ்ச்சி ஒன்றில் பங்குபற்றிய போது  அந்த நிகழ்ச்சி அவரை bass guitar, drums, trombone போன்றவற்றையும் வாசிக்கத் தூண்டியது.
அவர் சிட்னியில் வந்து வாழத் தொடங்கிய போது வெவ்வேறு கலாச்சார இசையையும் கேட்டு அவற்றிலும் தேர்ச்சியடைந்தார். Robert Menzies College கணாவை பெருமைப்படுத்தும் விதமாக " கணா அருணேஸ்வரன் அவார்ட் ஃபார் எக்செலன்ஸ் இன் கிரியேட்டிவ் ஆர்ட்ஸ்" என்ற விருதை வழங்கி வருகிறது! (The Gana Aruneswaran Award for Excellence in Creative Arts)
கர்நாடக இசையையும் கற்க விரும்பிய கணா வீணை, மிருதங்கம் போன்றவற்றையும் கற்றுத் தேர்ந்தார். வீணையை முடிகொண்டோன் S. N. Ramesh என்பவரிடம் கற்றார்.
அவர் இசையமைத்த Ecstasy என்ற இசையை அவர் டெல்லிக்கு சென்ற போது கற்ற புல்புல் தாராவை மையமாக வைத்து உருவாக்கியிருக்கிறார்.

நம்பிக்கையைத் தந்துவிட்டு வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு தவறியதால் தமிழர்கள் ஏமாற்றம்


04/09/2019 நாட்டின் இரு பிரதான அரசியல் கட்சிகளும் ஒன்றிணைணந்த போது நீண்டகாலப் பிரச்சினைக்ளுக்குத் தீர்வைக் காண்பதற்கு மெய்யான வாய்ப்பொன்று இருக்கிறது என்ற நம்பிக்கையின் காரணமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மத்திய அரசாங்கத்துடன் ஒத்துழைத்துச் செயற்பட்டது. 
ஆனால் அவ்வாறு செய்தது கூட்டமைப்பைப் பாதித்திருக்கிறது. தவறான 'குதிரைக்கு' தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவைக் கொடுத்து, தமிழ் மக்களுக்காக எதையும் சாதிக்க முடியாமல் போய்விட்டது என்று இப்போது நோக்கப்படுகின்றது. 
இது ஒரு உண்மையாகும். அடுத்த தடவை வாக்காளர்களைச் சந்திக்கும் போது அந்த உண்மைக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், உத்தியோகபூர்வப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் கூறியிருக்கிறார்.

காலம் கடந்த ஞானம்...!


ஐக்­கிய தேசிய கட்­சியும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து உரு­வாக்­கிய நல்­லாட்சி அர­சாங்கத்தரப்­பினர் ஜனா­தி­பதி ஆட்சி முறையை ஒழிப்­ப­தையே பிர­தான நோக்­க­மாகக் கொண்­டி­ருந்­தனர். அத்­துடன் இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வு காண்­ப­தாக அளித்த உறு­தி­மொ­ழிக்கு அமை­வா­கவே 2015ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் பொது வேட்­பா­ள­ரா­கிய மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு ஆத­ரித்து வெற்றி பெறச் செய்­தது. 
ஏட்­டிக்குப் போட்­டி­யான நிலைப்­பாட்டைக் கொண்­டி­ருந்த இந்த இரண்டு கட்­சி­களும் இணைந்து ஓர் அரச நிர்­வா­கத்தில் இணைந்­தி­ருந்த ஓர் அரி­தான சந்­தர்ப்­பத்தின் மூலம் புரை­யோ­டிப்­போ­யுள்ள தமிழர் பிரச்­சி­னைக்குத் தீர்வு காண முடியும் என்ற நம்­பிக்­கையைத் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு கொண்­டி­ருந்­தது. தமிழ் மக்­களும் அந்த நிலைப்­பாட்டின் நியா­யத்­தையும் அவ­சி­யத்­தையும் உணர்ந்து கொண்­டி­ருந்­தனர்.     



எங்கே போகின்றோம் ? - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ... மெல்பேண்.... அவுஸ்திரேலியா முன்னாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்

       
       மனித வாழ்வுக்கு ஒரு அர்த்தம் இருக்கின்றது.மனித வாழ்வு ஒரு புனித வாழ்வு.மனிதப் பிறவி ஒரு புனிதப் பிறவி." மனிதப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே : என்றார் அப்பர் அவர்கள்." மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் " என்றார் சம்பந்தப் பெருமான். " புவனியிற் போய்ப் பிறவாமையில் நாள்நாம் போக்குகின்றோம் அவமே " எனத் தேவர்கள் கவலைப்பட்டுச் சொல்லுவதாக மணிவாசகப் பெருமான் கூறுகின்றார்.இப்படியெல்லாம் சொல் லும் அளவுக்கு .. இந்தப் புவியும் அதில் வாழும் மனிதவாழ்வும் போற்றப்படு கின்றது.அந்தப் போற்றுதலுக்கு ஏற்ப எமது வாழ்வு அமைகின்றதா? அந்தப் போற்றுதலுக்கு உரித்துடையவர்களாக இருக்கின்றோமா ?                      
    எங்கே போகின்றோம்? என்ன செய்கின்றோம்? என்ன சிந்திக்கின்றோம்? எதுவே ஒரு திட்டமில்லாது இருக்கின்றது.கண்டதேகாட்சி!கொண்டதேகோலம்! என்று வாழ்கின்றோம்.அங்கொருகண்ணும் இங்கொருகண்ணுமாக இருக்கின் றோம்.முழங்காலுக்கும் மொட்டத் தலைக்கும்முடிச்சுப் போடமுயல்கின்றோம். கரும்பிருக்க இரும்பைக் கடித்துப் பார்க்கின்றோம்.கனியிருக்க காய் கவர்ந்து உண்ணுகின்றோம்.
     சிங்கத்தைவிட்டு சிறுநரியை பிடிக்கின்றோம்.எங்களுக்குப் புரியவில்லை! தெரியவில்லை! திகைப்பு ! ஒரே மலைப்பு !சாந்தியில்லை.. சமாதானம்இல்லை .... அன்பு ஒளிந்துகொண்டுவிட்டது.அறம் வெளியேவர மறுக்கிறது.அஹிம்சை ஹிம்சையாகி நிற்கிறது.மன்னிக்கும் இயல்பு மறந்தே விட்டது.கல்வி காசாகி விட்டது.குருபக்தி கருகியேவிட்டது.கல்விக்கூடங்கள் காசுக்கூடங்களாகி   விட்டன.பெரியவரைக் காண்பதே பெரிய விஷயமாகிவிட்டது.சின்னத்தனம் எங்கும் சிரித்து நிற்கிறது.மனத்தில் இருட்டு! வழியில்திருட்டு! பார்க்குமிடங்க ளெல்லாம் படுகுழிகள்மயம் ! எங்கே போகின்றோம் ?                               
      கோவில்கள்கட்டப்படுகின்றன.கும்பாவிஷேகங்கள்.மண்டலாபிஷேகங்கள் நடக்கின்றன.இலட்சார்ச்சனை , கோடியார்ச்சனை, மகாயாகம், சாந்திஹோமம், சங்காபிஷேகம், திருவிழாக்கள் என்று பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறுகின் றன..இவற்றால் பலன் உண்டா? பலன் வந்ததா?இதையெல்லாம் ஏன் சொல்லுகிறேன் என்றால்.... எங்கள் வாழ்வில் " சமயம் சமயமாக இல்லாது போய்விட்டமையேயாகும்". சமயத்தை நாங்கள் யாருமே சரிவரஅறியவில்லை.  சமயத்துக்கான மனப்பாங்கை சரியாக வளர்த்துக் கொள்ளவும் இல்லை. ஒருகணம் யோசித்தால் ....... சமயவாழ்வையே வாழவில்லை ! ஆண்டவன் சன்னிதானத்தில் அனைவரும் சமம்தானே? நாம் அப்படி நடக்கின்றோமா? உயர்வு, தாழ்வு, பதவி, அந்தஸ்த்து, காட்டப்படுவது முறைதானா?..........   
" ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் " என்று அப்பர்பாடிய அந்த அருள் வாக்கை மறந்துவிட்டோம். " கண்ணப்ப னொப்பதோர் அன்பின்மை கண்டபின்' என் மணிவாசகர் கண்ணப்பரைப் போற்ரிய அன்பினை உணரவும் காட்டவும் தவறிவிட்டோம்." பட்ட கட்டையிற் பகற்குருடு போகுது " என்ற தத்துவத்தின் தாற்பரியத்தையும் அறவே மறந்து விட்டோம்.

வழக்கை ஒத்திவைத்து தமிழ் குடும்பம் உடனடியாக நாடு கடத்தப்படுவதை தடுத்தது நீதிமன்றம்


06/09/2019 இலங்கை தமிழ் தம்பதியினர் தொடர்பான வழக்கை  எதிர்வரும் 18 ம் திகதி வரை ஒத்திவைத்துள்ள அவுஸ்திரேலிய நீதிபதி தமிழ் தம்பதியினரின் இரண்டாவது மகளிற்கு பாதுகாப்பு கோருவதற்கான உரிமையில்லை என்பதற்கான  மேலதிக ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு அவுஸ்திரேலிய குடிவரவு துறை அமைச்சரிற்கு உத்தரவிட்டுள்ளார்.
செப்டம்பர் 18 ம் திகதி மீண்டும் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாக நீதிபதி மொர்டெகாய் புரொம்பேர்க்  அறிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் நடேஸ் பிரியா தம்பதியினரையும் குழந்தைகளையும் நாடு கடத்த முடியாது எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
18 ம் திகதியே வழக்கின் இறுதி நாளாகயிருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் குடும்பத்தை நாடு கடத்த தயாராகின்றது அவுஸ்திரேலியா-இலங்கையில் அடக்குமுறைகள் தொடர்வது குறித்து தமிழர்கள் அச்சம்

04/09/2019
ஏபிசி
தமிழில் - ரஜீபன்
தமிழ் குடும்பத்தை அவுஸ்திரேலியா நாடு கடத்துவதற்கு தயாராகும் அதேவேளை இலங்கையில் தொடர்ந்தும் தாங்கள் ஒடுக்குமுறைக்கு உள்ளாவதாக தமிழர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர் என ஏபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து அவுஸ்திரேலியாவின் ஏபிசி நியுஸ் மேலும் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய அரசாங்கம் குயின்ஸ்லாந்தின் பைலோ நகரிலிருந்து தமிழ் குடும்பத்தினை இலங்கைக்கு நாடு கடத்த தயாராகின்றது அதேவேளை அவர்கள் அங்கு சித்திரவதைக்கு உள்ளாகலாம் என அவர்களிற்கு சார்பாக குரல்கொடுப்பவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். 
அவுஸ்திரேலியாவில் பிறந்த இரண்டு வயது தருணிகாவே இந்த விவகாரத்தில் முக்கியமானவராக காணப்படுகின்றார்
எனினும் இரண்டுவயது மகள் தொடர்பான மனு வெற்றியளிக்காது என அரச சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

மழைக் காற்று ( தொடர்கதை ) அங்கம் -05 - முருகபூபதி



அந்த வீட்டுக்கு வந்து இருபத்திநான்கு மணிநேரத்துக்குள் அங்கிருக்கும் ஜீவிகா, கற்பகம் ரீச்சர், மஞ்சுளா, சுபாஷினி ஆகியோரின் குணாதிசயங்களை ஓரளவு புரிந்துகொண்ட அபிதா,  அவரவர்க்கு ஏற்றவாறு நடந்துகொள்வதற்கும் தன்னை தயார்படுத்திக்கொண்டாள்.
வீட்டின் எஜமானியாக கருதப்படும் ஜீவிகா கணனியில் மூழ்கியிருக்கிறாள்.
வயதால் மூத்தவளாக இருக்கும் கற்பகம் ரீச்சர், ராசிபலன் பார்க்கும் விரதங்களை தவறாது பின்பற்றும் இயல்புகளை கொண்டிருக்கிறாள்.
மஞ்சுளா, தனக்கென வைத்திருக்கும் உணவுண்ணும் தண்ணீர் , தேநீர், கோப்பி அருந்தும் பாத்திரங்களை வேறு எவரும் தொடக்கூடாதவகையில் சுத்தம் பேணுகிறாள். இவளது காதில் எப்போதும் வெள்ளை நிறத்தில் இயர்ஃபோண் தொங்கிக்கொண்டிருக்கிறது.
சுபாஷினி, எப்பொழுதும் ஏதாவது நகைச்சுவைத்துணுக்குளை உதிர்த்தவாறு வீட்டையே கலகலப்பாக வைத்துக்கொண்டு முகப்புத்தகத்தை அடிக்கடி தடவுகிறாள்.
இந்த நால்வருக்கும் தன்னைப்போன்று ஆண்துணையே  இல்லையா..? என்ற கேள்வி அபிதாவை நெருடிக்கொண்டே இருக்கிறது.
நேரடியாக கேட்கவும் தயக்கம். வந்தன்று சனிக்கிழமை காலை,  கற்பகம் ரீச்சர்,  தான் தயாரித்த  வெந்தயக்குழம்பையும் புட்டையும் ருசிபார்க்காமலேயே, கோயிலுக்கு புறப்பட்டாள்.
ஜீவிகாவுடன் சந்தைக்குச்சென்ற  அபிதா, தெருவில் இறங்கியதும் வேடிக்கை பார்த்தாள்.
 வாகனங்களின் நடமாட்டம் அதிகரித்திருந்தது. அந்த வீட்டுக்கு முன்புறமாக இருக்கும் பிள்ளையார் கோயிலுக்கு பக்கத்தில் ஒரு பெண் பூமாலை கட்டிக்கொண்டிருந்தாள். சிறிய வண்டிபோன்ற ஒரு பெட்டிக்கடை  அது.  அதனை தள்ளிச்சென்று எங்குவேண்டுமானாலும் தரித்துநிறுத்தி கடை விரிக்கமுடியும்.
பலசரக்குக்கடை, சிறிய தேநீர்க்கடை, காலை ஆகார பலகாரக்கடை, எவர்சில்வர் பாத்திரக்கடை, ஐஸ்கிறீம் பாலர், தொலை தொடர்பு , கணினி கம்யூனிக்கேஷன், பாடசாலை புத்தகங்கள் அப்பியாசகொப்பிகள் விற்கும் கடை, செவ்விளநீர், மரக்கறி விற்கும் கடை, லோண்டறி, உடுபுடவை தைக்கும் தையல் கடை…  இவற்றைக்கடந்தால் சபரிமலை அய்யப்பனுக்கான வழிபாட்டிடம், அதற்கு முன்னால் முத்துமாரியம்மன் கோயில், அதற்கு முன்புறமாக பூசைச்சாமான்கள்,  தேங்காய், ஊதுவத்தி, கற்பூரம் விற்கும் இரண்டு சிறிய கடைகள்,  அருகில் இடப்புறமாக செல்லும் அசரப்பா வீதியில் சென்றால், பிறப்புச்சான்றிதழ் – திருமண சான்றிதழ் மொழபெயர்க்குமிடம் என்ற விளம்பரப்பலகையுடன் காட்சி தரும் ஒரு சிறிய கட்டிடம்.
ஜீவிகாவின் வீட்டருகே இத்தனையும் இருப்பது அபிதாவுக்கு வியப்பாகவிருந்தது.
வவுனியாவிலிருந்து புறப்படும்போது, தான் வந்திறங்கப்போகும் நிகும்பலை,  பெரும்பான்மையினர் செறிந்து வாழும் பிரதேசமாகத்தான் இருக்கப்போகிறது என்ற மனப்பதிவுடன்தான் அபிதா வந்தாள்.
ஜீவிகாவின் வீடு அமைந்துள்ள கடற்கரை வீதியில் இடதுபுறம் அஸரப்பா வீதியும் வலதுபுறம் ஜூம்மா மஸ்ஜித் வீதியும் வருகின்றன. அந்த நாற்சந்தியில் முத்துமாரியம்மன் கோயிலிருந்து மணியோசையும் வலதுபுறம் அமைந்துள்ள மசூதியிலிருந்து பாங்கோசையும், கிழக்குப்பக்கமிருந்து புனித மரியாள் தேவாலயத்தின் மணியோசையும் கேட்கிறது.
இப்படியும் ஒரு பெருநகரம் இங்கிருப்பது அபிதாவை ஆச்சரியப்படவைத்தது.
   

சிங்கபூரில் ஸ்ரீ தேவியின் மெழுகு சிலை !


04/09/2019 இந்திய சினிமாவில் தனெக்கெனெ ஒரு இடத்தை பதித்தவர் நடிகை ஸ்ரீ தேவி. கடந்த வருடம் டுபாயில் ஹோட்டலில் உயிரிழந்தார்.
அவர் இறந்து ஒரு வருடமாகிவிட்ட நிலையில் புகழ் பெற்ற சிங்கப்பூரிலுள்ள மேடம் துசாட்ஸ் மெழுகு அருங்காட்சியகத்தில் அவருக்கு மெழுகு சிலை வைத்துள்ளார்கள்.
இந்நிலையில், திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர் தனது மறைந்த மனைவி ஸ்ரீதேவியின் மெழுகு சிலையை இன்று திறந்து வைத்தார். இதில் கபூருடன் அவரது இரண்டு மகள்களான ஜான்வி மற்றும் குசி ஆகியோரும் பங்கேற்றனர்.

இலங்கைச் செய்திகள்


ராஜபக்ஷ தரப்பினர் தமிழர்களைப் படுகொலை செய்த இனப்படுகொலையாளிகள் - ஸ்ரீதரன்

சியோன் தேவாலய தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்கள் தோண்டி எடுப்பு

கிளிநொச்சியிலிருந்து நல்லிணக்கத்துக்கான நடைபயணத்தை தொடர்ந்த உயர்தர மாணவர்கள்

பலாலி விமான நிலைய அபிவிருந்திப் பணிகளை நேரில் ஆராய்த அர்ஜூன

யாழ். நோக்கி செல்லும் ஸ்ரீதேவி

கோத்தபாயவின் நிகழ்வில் முரளீதரன் - தெரிவித்திருப்பது என்ன?

விடுதலைப்புலிகள் பொதுமக்களை கொலை செய்தனர்- 2009 எனது வாழ்க்கையின் மிகப்பெரும் நாள்- கோத்தபாயவின் நிகழ்வில் முரளீதரன்- இரண்டாம் இணைப்பு



ராஜபக்ஷ தரப்பினர் தமிழர்களைப் படுகொலை செய்த இனப்படுகொலையாளிகள் - ஸ்ரீதரன்

02/09/2019 மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் தமிழர்களைப் படுகொலை செய்த இனப்படுகொலையாளிகளாவர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார்.

உலகச் செய்திகள்


கலிபோர்னியாவில் படகில் தீ – 35 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

லண்டனில் இந்திய தூதரகம் எதிரே பாகிஸ்தானியர்கள் வன்முறை போராட்டம்

பிரக்ஸிட் முக்கிய வாக்கெடுப்பில் பிரித்தானிய பிரதமர் தோல்வி ; தேர்தல் அறிவிப்புக்கு தயாராகும் பிரித்தானியா !

நாடுகடத்தல் சட்டமூலத்தை வாபஸ் பெற்றது ஹொங்கொங்

ரஷ்யா - சென்னை இடையே விரைவில் நேரடி கப்பல் போக்குவரத்து- மோடி

காபூல் அமெரிக்க தூதரகம் அருகே குண்டுவெடிப்பு - 10 பேர் பலி ; 42 பேர் காயம்

எனது மகன் கண்ணெதிரே நீரில் அடித்துசெல்லப்படுவதை பார்த்தேன் - பஹாமாஸ் தந்தையின் துயரம்

பிரித்­தா­னிய பிர­த­மரின் தேர்­தலை முன்­கூட்­டியே  நடத்தும்  திட்டத்துக்கு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் முட்­டுக்­கட்டை

டோறியன் சூறாவளியால் 30 பேர் உயிரிழப்பு

சந்திரயான் -2 ன் தொடர்பு துண்டிப்பு : மோடியை கட்டித்தழுவி அழுத இஸ்ரோ தலைவர் சிவன்..! 

காஸாவில் ஆர்ப்பாட்டம்- 14 வயது சிறுவன் உட்பட இருவர் இஸ்ரேலிய படையினரால் சுட்டுக்கொலை

தெலுங்கானா ஆளுநராகப் பதவியேற்றார் தமிழிசை..!


கலிபோர்னியாவில் படகில் தீ – 35 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

02/09/2019 அமெரிக்காவின் கலிபோர்னியாவில் படகொன்றில்  ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 35 அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
கலிபோர்னியாவின் தென்பகுதியில் படகொன்றில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட படகில் 35 பேர் பயணித்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சன்டா பாபர கவுண்டியின் தீயணைப்பு பிரிவினர் படகிலிருந்து தங்களிற்கு அபாய சமிக்ஞை கிடைத்தது என தெரிவித்துள்ளனர்.
இதேவேளை குறிப்பிட்ட படகில் ஏற்பட்ட தீயை அணைப்பது கடினமாகவுள்ளது சில நிமிடத்திற்கு தீ தணிகின்றது பின்னர் மூள்கின்றது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
படகில் உள்ள எரிபொருள் காரணமாகவே இந்த நிலை ஏற்படுகின்றது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பொன் விழா ஆண்டில் இந்தப்படங்கள் 1969 -2019 ச. சுந்தரதாஸ் பகுதி 10


மனைவி

எம் ஜி ஆரின் நடிப்பில் 68ம் ஆண்டு கணவன் என்ற படம் வெளிவந்நது. இந்தப் படத்தின் கதையை எம் ஜி ஆரெ எழுதியிருந்தார். இதற்கு அடுத்த ஆண்டே மனைவி என்று ஒரு படம் திரைக்கு வந்தது. இந்தப் படத்தில் ஜெமினிகணேசன் கதாநாயகனாக நடித்தார்.

வெளிநாட்டில் வாழும் கதாநாயகன் ஒரு விஞ்ஞானி. அவனுக்கு அங்கே ஒரு காதலியும் அமைகிறாள். புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுடன் இந்தியா திரும்ப தயாராகும் இவர்களை வில்லன் கோஷ்டி கடத்தி விஞ்ஞான உண்மைகளை அபகரிக்கத் திட்டமிடுகிறது. இந்த சம்பவத்தில் காதலி வில்லனிடம் அகப்படுகிறாள். கதாநாயகனோ தப்பிப் பிழைத்து இந்தியா திரும்புகிறான். இந்தியா வரும் அவனை தன் நண்பனின் மகளான டாக்டருக்கு வற்புறுத்தி திருமணம் செய்து வைக்கிறார். கதாநாயகனின் தந்தை. விஷயம் அறியும் காதலி வில்லனின் கைப்பாவையாகி காதலனை பழி வாங்கத் திட்டமிடுகிறாள். 
கணவனுக்கு ஏற்கனவே ஒரு காதலி இருந்த விஷயம் அறிந்தும் அவன் மனைவி கணவனுடன் இணங்கிச் சென்று இல்வாழ்வைத் தொடர முயற்சி செய்கிறாள். இதுதான் மனைவி படத்தின் கதை. சஸ்பென்சும், குடும்ப கதையும் கொண்டதாக காட்சிகளை உருவாக்கப்பட்டிருந்தன. 

வில்லிசை நிகழ்ச்சிகள் நடத்துவதில் புகழ் பெற்ற கலைஞர் சுப்பு ஆறுமுகம் படத்திற்கு கதை வசனத்தை எழுதியிருந்தார். அத்துடன் இணைத்தயாரிப்பாளராகவும் படத்தைத் தயாரித்தார்.

படத்தில் ஜெமினி கணேசனுக்கு இரண்டு ஜோடிகள். முனைவியாக விஜயகுமாரியும் காதலியாக ராஜஸ்ரீயும் நடித்திருந்தனர். அன்றைய காலகட்டத்தில் ஜெமினியுடன் பல படங்களில் ராஜஸ்ரீ தொடர்ந்து நடித்து வந்தார். அந்த வரிசையில் மனைவியும் இடம் பிடித்தது. 

குணசித்திர நடிகையான விஜயகுமார் வழக்கமாக எஸ் எஸ் ராஜேந்திரனுடனேயே இணைந்து நடிப்பார். அவர்களிடையே பிரிவு வந்த பின் ஏனைய நடிகர்களுடனும் ஜோடியாக நடிக்கத் தொடங்கிளார்.

மனைவி படத்தில் ஜெமினி விஜயகுமாரி இணை சற்று வித்தியாசமாகவே ரசிகர்களுக்கு தென்பட்டது. ஆனாலும் தன் நடிப்பால் அதனை சரி செய்தார் விஜயகுமாரி.

படத்தின் பெரும் பகுதியில் வருபவர் நாகேஷ். டாக்டராக வரும் இவர் படத்தை தன் நகைச்சுவை மூலம் நகர்த்த உதவதி செய்கிறார். சுப்ப ஆறுமுகத்தின் வசனம் நாகேஷிற்கு உதவியது.

வி கே ராமசாமி டி எஸ் முத்தையா ரமாபிரபா ஆகியோரும் படத்தில் உள்ளனர். அசோகன் தான் வில்லன் குறையின்றி நடித்திருந்தார்.
படத்திற்கு இசை கே வி மகாதேவன். அவரின் இசையில் எல் ஆர் ஈஸ்வரி பாடிய அன்னைப் போல என்னைக் காத்த அன்புத் தெய்வமே பாடல் இனிமையாக அமைந்தது. அதேபோல் பெண்ணின் பெருமையே பெருமை என்று பி சுசிலாவின் பாடலும் பெருமை சேர்த்தது. இது தவி ஒசை இல்லாத மொழி என்ற டுயட்டும் படத்திலுண்டு.
பிரபல ஒளிப்பதிவாளராகவும் டைரக்டராகவும் திகழ்ந்தவர் ஜி கே ராமு. எம் ஜி ஆரின் வெற்றிப் படமான நாடோடி மன்னன் படத்தில் ஒளிப்பதிவாளரான ராமு இரட்டை வேடத்தில் எம் ஜி ஆர் தோன்றும் காட்சிகளை திறமையுடன் படமாக்கியிருந்தார். மனைவி படத்தை இயக்கியவர் இந்த ஜி கே ருhமுதான்.

மனைவி படம் வெளிவந்து நான்காண்டுகள் கழித்து ஒரு படம் கலரில் வந்தது. வெளிநாட்டில் வாழும் விஞ்ஞானி புதிய உண்மைகளை தன் ஆராய்ச்சி மூலம் கண்டு பிடிக்கிறான் வில்லன் விஞ்ஞானியையும் அவன் காதலியையும் கடத்துகிறான். வில்லனால் ஏவப்பட்ட மற்றுமொரு பெண்விஞ்ஞானியின் சகோதரனை ஒரு தலையாகக் காதலித்து கதாநாயகனுக்கு உதவுகிறான். 

மனைவி படத்தின் கதைக் கருவின் மறுபதிப்பாக வெளிவந்த உலகம் சுற்றும வாலிபவன் எம் ஜி ஆர் நடிப்பிலும் டைரக்ஷனிலும் மாபெரும் வெற்றி பெற்றது!















தமிழ் சினிமா


சாஹோ திரை விமர்சனம்
பாகுபலி என்றே ஒரே படத்தின் மூலம் ஓவர் நைட்டில் உலக பேமஸ் ஆனவர் பிரபாஸ். ஆனால், அதற்காக அவர் ஏதோ லக்கில் ஜெயித்தார் என்று சொல்ல முடியாது. தன் 5 வருட உழைப்பை பாகுபலிக்காக கொடுத்தார் பிரபாஸ். அப்படி மீண்டும் தன் PAN இந்தியா மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ள பிரபாஸ் எடுத்த களமே சாஹோ, இது அவர் முயற்சிக்கு வெற்றியை கொடுத்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

ராய்(ஜாக்கி ஷெரப்) உலகின் மிகப்பெரும் கேங்க்ஸ்டர், இவர் இந்தியாவில் காலடி எடுத்து வைக்க முயற்சி செய்யும் நேரத்தில் சிலரால் தாக்கப்பட்டு இறக்கின்றார். இதை தொடர்ந்து அவர்கள் இந்தியாவிற்குள் கொண்டு வந்த பல லட்சம் கோடி பணமும் எரிந்து நாசமாகின்றது.
அதே நேரத்தில் பணம் இன்னும் இருக்கின்றது, அதை எடுக்க வேண்டும் என்றால் ப்ளாக் பாக்ஸ் வேண்டும் என ராய் மகனாக வரும் அருண்விஜய் மற்ற கேங்ஸ்டர்களிடம் சொல்ல, அந்த ப்ளாக்பாக்ஸை எடுக்க பல கேங்ஸ்டர்கள் குறி வைக்கின்றனர், மேலும் அடுத்த ராய் யார் என்ற போட்டியும் தொடங்குகின்றது.அப்போது பிரபாஸ் இந்த கேஸை கையில் எடுக்க, அதிரடியாக ஒரு திட்டத்தை தீட்டி அந்த ப்ளாக்பாக்ஸை பிரபாஸ் கைப்பற்ற, அதன் பின் பல மர்ம முடிச்சுக்களை அவிழ்க்க, பிரபாஸ் யார், எதற்காக அந்த ப்ளாக்பாக்ஸை எடுத்தார், அதை வைத்து என்ன செய்யப்போகிறார் என்று கதை நீள்கின்றது.

படத்தை பற்றிய அலசல்

முதலில் பிரபாஸ் 5 வருடமாக இரண்டு படத்தில் நடித்த பிரபாஸ், அடுத்து மீண்டும் 3 வருடம் சாஹோவிற்கு கொடுக்க, அது அவருக்கு எந்த அளவிற்கு பயனை அளித்தது என்பது தான் கேள்விக்குறி, பாகுபலியில் இருந்த கிரேஸ் கொஞ்சம் கூட இதில் பிரபாஸிடம் இல்லை, ஒருவேளை தெலுங்கு ஆடியன்ஸிற்கு புடிக்குமா என்று தெரியவில்லை.
படம் பிரமாண்டமாக எடுக்க வேண்டும் என்று மட்டுமே தான் இயக்குனர் சுஜித் நினைத்துள்ளாரே தவிர, படத்தின் திரைக்கதையில் கவனம் செலுத்த மறந்துவிட்டார் போல, அதிலும் படத்தின் முதல் பாதி, அட எப்படா இடைவேளை விடுவீர்கள் என்ற மனநிலைக்கு வந்த பிறகு வரும் ஆக்‌ஷன் காட்சிகள் கொஞ்சம் நிமிர வைக்கின்றது.
அதை விட ஷரதா கபூர் கொஞ்சம் கூட பிரபாஸிற்கு மேட்ச் இல்லை, இருவரின் கெமிஸ்ட்ரியும் நம்மை சோதிக்க தான் செய்கின்றது, குறிப்பாக சேஸிங் டைமில் டூயட் சாங் பாடுவது தியேட்டர் கேண்டினுக்கு நல்ல லாபம். ஒரு ஹீரோ என்றால் ஒரு முறையாவது தோற்க வேண்டும், பிறகு எழுந்து வரும் போது தான் நமக்கே விசில் அடிக்க தோன்றும்.
இதில் பிரபாஸ் 2000 பேரை கொள்கின்றார், அவர் மீது 10 ஆயிரம் புல்லட் சுடப்படுகின்றது, அதில் ஒரு புல்லட் மட்டுமே அவர் மீது படுகின்றது மொத்த படத்தில், இப்படி லாஜிக் பூ சுத்தலாம், ஆனால், இங்கு பூக்கடையே மாட்டியுள்ளனர்.
படத்தின் ஆறுதலான விஷயம் கிளைமேக்ஸ் காட்சிகள், அதன் ஆக்‌ஷன் காட்சிகள், அடுத்தடுத்து வரும் திருப்பம் இது படம் முழுவதும் இல்லாதது பெரிய மைனஸ், மேலும், ஜிப்ரானின் பின்னணி இசை மிரட்டல், மதியின் ஒளிப்பதிவு தனித்துவம்.

க்ளாப்ஸ்

பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு
படத்தின் கிளைமேக்ஸ்

பல்ப்ஸ்

லாஜிக்கே இல்லாமல் சோர்வாக செல்லும் திரைக்கதை.
அருன்விஜய், ஜாக்கி ஷெரப், நீல்நிதின் முகேஷ் என பல பிரபலங்களை பெரியளவில் பயன்படுத்தாது.
மொத்தத்தில் ரூ 300 கோடி பணத்தை ஒரு குழந்தை கையில் கொடுத்தால் என்ன செய்யும் என்பதன் அவுட்புட் தான் இந்த சாஹோ.    நன்றி CineUlagam