மரண அறிவித்தல்

 .

திருமதி பராசக்தி சுந்தரலிங்கம் 

  23 ஏப்ரல் 1937 – 23 ஜூலை 2024

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் பாடசாலை, கொழும்பு முஸ்லிம் மகளிர், இசப்பத்தான, St. Anthony’s மற்றும் St. Clairs பாடசாலைகளில் ஆசிரியராகக் கடமையாற்றிய திருமதி பராசக்தி சுந்தரலிங்கம் உடல்நலம் குன்றி சிட்னி அவுஸ்திரேலியாவில் 2024 ஜூலை 23 அன்று எம்மை விட்டுப் பிரிந்தார்.

மறைந்த செல்லப்பா ஐயாத்துரை மற்றும் காலஞ்சென்ற மனோன்மணி ஐயாத்துரை ஆகியோரின் மூத்த புதல்வியும், மறைந்த இராமலிங்கம் வீரசிங்கம் மற்றும் மறைந்த பராசக்தி வீரசிங்கம் ஆகியோரின் மருமகளும்;

மறைந்த வீரசிங்கம் சுந்தரலிங்கம் (BBC சுந்தா) அவர்களின் பிரியமான மனைவியும்;

சுபத்திராவின் பாசமிகு தாயும், குலசேகரம் சஞ்சயனின் அன்பு மாமியாரும்;

சேந்தன், சேயோன் ஆகியோரின் விலைமதிப்பற்ற அம்மம்மாவும்;

ஐயாத்துரை கணேசலிங்கம் (யாழ்ப்பாணம்), கனகேஸ்வரி நடராஜா (Toronto), யோகேஸ்வரி கணேசலிங்கம் (Canberra), ஐயாத்துரை சண்முகலிங்கம் (கொழும்பு), ஐயாத்துரை பஞ்சலிங்கம் (Calgary), ஐயாத்துரை சிவபாலன் (Toronto), மற்றும் சிவசக்தி பரிமளநாதன் (சிட்னி) ஆகியோரின் பாசமிகு மூத்த சகோதரியும், நகுலாதேவி கணேசலிங்கம் (யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற வினாசித்தம்பி நடராஜா, Dr கந்தையா கணேசலிங்கம், கமலராணி சண்முகலிங்கம், நிர்மலா பஞ்சலிங்கம், மஞ்சுளா சிவபாலன், மற்றும் பத்மநாதன் பரிமளநாதன் ஆகியோரின் மைத்துனியும்;

காலஞ்சென்ற யோகவதி அரசரத்தினம், வீரசிங்கம் சுந்தரவதனன் (Seattle) ஆகியோரின் மைத்துனியும்; பேராசிரியர் வசந்தி அரசரத்தினம் (யாழ்ப்பாணம்) அவர்களின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

பெரியம்மா, பெரிய மாமி, பேர்த்தி மற்றும் பூட்டி என்று அழைக்கும் உறவுகளும், கலை மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் அனைத்து படைப்புலக நண்பர்களும் அவரது பிரிவால் வாடியுள்ளார்கள்.

இறுதிச் சடங்குகள்:

Lotus Pavilion, Macquarie Park Cemetery and Crematorium (https://nmclm.com.au/locations/macquarie-park/macquarie-park-chapels/), Corner of Delhi and Plassey Roads, North Ryde NSW 2113 என்ற இடத்தில், ஜூலை 27 சனிக்கிழமை காலை 9 மணி முதல் 11 மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு, அதைத் தொடர்ந்து குடும்பத்தினர் மட்டும் கலந்து கொள்ளும் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டு பூதவுடல் தகனம் செய்யப்படும்.

மலர் வளையங்களுக்குப் பதிலாக, இலங்கையில் வாழ்வின் இறுதிக்கட்டத்திலுள்ள, நோயுற்றவர்களைப் பராமரிக்கும் (Palliative Care) பாலம் மனிதநேய அமைப்பின் செயற்திட்டங்களுக்கு [Paalam the bridge to humanity, BSB: 062908, A/C No: 10965099] நன்கொடை வழங்குவதைக் கருத்தில் கொள்ளுமாறு குடும்பத்தினர் விரும்புகின்றனர்.

 

தொடர்புகளுக்கு:

சேந்தன்: +61 425 091 236

சேயோன்: +61 430 369 930


மேற்கத்திய மருந்தும் நாமும் - நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர்

 

          மருந்து தயாரிக்கும் கம்பெனிகள் மிகப்  பெரும் பணத்தை சம்பாதிக்கும் உலகளாவிய நிறுவனங்கள்.  மேற்கத்திய வைத்தியம் கற்ற டாக்டர்கள் இந்த மருந்துகளை மட்டுமே அறிந்தவர்கள்.  இவர்களால்  இந்த மருந்துகள் தாராளமாக விலைப்படுகிறது. இவ்வாறு நான் கூறுவதால் மேற்கத்திய வைத்திய முறையான Allopathy  வைத்தியத்தை நான் குறைத்து மதிப்பிடவில்லை,  அதன் முக்கியத்துவத்தை நாம் அறிவோம்.                                                             

           அதே சமயம் எமது ஆயுள்வேேம், சித்த வைத்தியம் போன்றவற்றை நாம் முற்றாக புறக்கணித்து விட முடியாது. இவர்கள்  மருந்துகளை தாமே மூலிகைகள் கொண்டு தயாரிப்பவர்கள்.  நோய் தீர்க்க வல்லவை.  இவை எல்லாம் நாம் அறியாததா. நமது குடும்ப வைத்தியர் கூறுவர் வைத்தியரிடம் போய் “நோயை மாற்றி விடுங்கோ” என கேட்க கூடாதாம்.  ஏனெனில் ஒரு நோயிலிருந்து பிறிதொரு நோய்க்கு அவர் மாற்றி  விடுவாராம், அதனால் நோயை குணப்படுத்தி விடுங்கோ என கேட்க வேண்டுமாம் இது வேடிக்கையாக இருக்கலாம் ஆனால் ஆழ்ந்த கருத்து உடையது.                                                  

           மேற்கத்திய வைத்திய மருந்துகளோ சில பாத விளைவுகளை கொண்டு வரக்கூடியவை.  அதுதான் பக்க விளைவு side effect  என்பார்கள்.  இந்த விஷயத்தில் வைத்தியரின் மருந்தை உண்ணும் வைத்தியமும்,  நோயாளியும் கவனமாக இருக்க வேண்டும்.  இவை பற்றி எல்லாம் கூற சில சமயங்களில் வைத்தியருக்கு நேரம் இருக்காது. மருந்து வாங்கும்போது கெமிஸ்ட் இடம் கேட்டால் அவர்கள் விவரமாக கூறுவார்கள். இது அவர்கள் கடமையும் கூட , அது மட்டுமல்ல மருந்தின் குணங்கள் யாவற்றையும்,  எவ்வாறன நிலையில் இருக்கும் நோயாளிகள் எதை அருந்தக் கூடாது என்ற அத்தனையையும் விவரமாக ஒரு  கடதாசியில் அடித்து  தருவார்கள். நீங்கள் வீட்டில் வைத்து படித்து விவரமாக அறிந்து கொள்ளலாம்.                                          

           வைத்தியயர் எழுதிய மருந்து சரியில்லை என கெமிஸ்ட் எண்ணினால் அதை அவர் நோயாளிக்கு கொடுக்காது மேலும் வைத்தியரிம் விசாரிக்கும் தகுதி அவருக்கு உண்டு. டாக்டரும் கெமிஸ்ட்டும் மறெயில் வண்டியும் தண்டவாளமும் போன்று இயங்க வேண்டியவர்கள். எனது மாணவி ஒருத்தி பல்கலை கழகத்தில் medical science  படித்து வருகிறாள்,  ஏதோ பேச்சுவாக்கில் நான் கூறினேன்,  நோய்க்கான மருந்துகளை மருந்து கொம்பனிகளில் இதற்கென பயிற்றப்பட்ட chemistry  படித்தவர்களே தயாரிக்கிறார்கள். நாம் கண்டறிந்த formulaவை மருந்தாக்கி பல மிருகங்களில் பரீட்சிர்த்த பின் தான் மனிதருக்கு கொடுத்துப் பார்த்து நோய் குணமானால், அந்த மருந்து தயாரித்து விற்பனைக்கு வரும். இத்தனையும் ஐந்து வருடங்களுக்கு மேல் வரை பரீட்சார்த்த நிலையில் இருந்து வெளிவரும். அதன் பின்   மருந்து கம்பெனிகள் டாக்டரிடம் மருந்து  சாம்பிள்  மருந்துகளையும் அதன் குணங்களையும் துண்டு பிரசாரமாக அடித்து அனுப்புவார்கள்.  இதை படித்த டாக்டர்கள்  நோயாளிக்கு கொடுப்பார்கள் என்றேன்.  டாக்டருக்கு மருந்து தயாரிப்பு பற்றி எதுவும் தெரியாதா என்று அவள் திகைத்தாள். இது அவளுக்கு ஏதோ புதிய செய்தியே.   

மலரின் மலர்ச்சி மனிதனுக்குப் பாடம் !

 









மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் 
மெல்பேண் ..... அவுஸ்திரேலியா


 

   காலையிலே எழுந்தவுடன்

   கண்ணெதிரே கண்டேன்

   கவலையின்றிப்  பூத்திருக்கும்

   கட்டழகு ரோஜா

   வேலையிலே விருப்பின்றி

   சோம்பலிலே கிடந்தேன்
   பூத்தரோஜா தனைப்பார்த்து
   பூரிப்பு அடைந்தேன் 
    

   யாருக்காய் பூக்கின்றோம்

   என்று தெரியாது

   பூக்கின்றோம் பூக்கின்றோம்

   பூத்தபடி நிற்போம்

   பூப்பதிலே சோம்பலின்றி

   பூதந்து இருப்போம்

   பூப்பார்த்த வுடனேயே

   பூரிப்பைக் கொடுப்போம்

 

  சோம்பல் வந்துவிட்டதென

 சோர்ந்துவிட மாட்டோம்

  சுறுசுறுப்பாய் இருந்தபடி

 சுகம்கொடுத்து நிற்போம்

  சாந்தமெங்கள் போக்குவென

 சகலருக்கும் தெரியும்

 சந்தோஷம் கொடுப்பதுவே

 எங்கள் இயல்பாகும்

 

இலங்கை வடமராட்சியிலிருந்து… அவுஸ்திரேலியா குவின்ஸ்லாந்து வரையில் இலக்கியப் பயணத்தை தொடரும் சியாமளா யோகேஸ்வரன் ! முருகபூபதி

“ உள்ளார்ந்த கலை, இலக்கிய ஆற்றல் மிக்கவர்கள், தங்கள் தாயகம்


விட்டு புலம்பெயர்ந்து சென்றாலும், தாங்கள் புதிதாக கால் பதித்த தேசத்திலும் தமது ஆற்றல்களை வெளிப்படுத்திக்கொண்டே இருப்பார்கள்  “ என்று இதற்கு முன்னரும் எனது பல பதிவுகளில் குறிப்பிட்டிருக்கின்றேன்.

எனது இந்த அவதானிப்பில், இம்முறை மற்றும் ஒரு பெண் எழுத்தாளரை இங்கு அறிமுகப்படுத்த விரும்புகின்றேன்.

இலங்கையில் வடமராட்சிப் பிரதேசம் பல கலை, இலக்கிய,   ஊடகத்துறை ஆளுமைகளை மாத்திரமன்றி சிறந்த


கல்விமான்களையும்  எமக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது.

அவர்களின் பெயர்ப்பட்டியல் சற்று நீளமானது.  ஆனால், தற்போது வடமராட்சியில் வாழும் இளம் தலைமுறையினர் அந்த ஆளுமைகளின் வாழ்வையும் பணிகளையும் தெரிந்து வைத்திருக்கிறார்களா..?

அங்கிருக்கும் புகழ்பெற்ற கல்லூரிகள், பாடசாலைகளில் அதிபர்களாக ஆசிரியர்களாக பணியாற்றுபவர்களாவது,  தமது மாணவர் மத்தியில்,  அவர்களை அறிமுகப்படுத்துகிறார்களா..?

அல்லது,    அன்பார்ந்த மாணவர்களே,  நீங்கள் வதியும் இந்த வடமராட்சிப் பிரதேசத்தில் முன்னர் வாழ்ந்த – தற்போது வாழ்ந்துகொண்டிருக்கும் கலை, இலக்கிய ஆளுமைகள் மற்றும் கல்விமான்கள் – தமிழ் அறிஞர்கள் பற்றி ஒரு கட்டுரை எழுதுங்கள் என்று எப்போதாவது சொல்கிறார்களா..?

ஆனால்,  இந்த டிஜிட்டல் யுகத்தில் முகநூல் பார்ப்பவர்களின் எண்ணிக்கை மாத்திரம் கோடிக்கணக்கில் பல்கிப்பெருகியிருக்கிறது.

அதேசமயம் இலங்கையிலும் தமிழர் புலம்பெயர்ந்த தேசங்களிலும் மாதாந்தம்  கலை,  இலக்கியம், வரலாறு சார்ந்த நூல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன.

நான் இதுவரையில் நேருக்கு நேர் சந்தித்திராதனு அவ்வப்போது மெய்நிகர் நிகழ்ச்சிகளில் மாத்திரமே பார்த்து உரையாடியிருக்கும் ஒரு பெண் எழுத்தாளரைப் பற்றித்தான் இந்தப்பதிவில் எழுதுவதற்கு முன்வந்துள்ளேன்.

ஒரு நாள் காலைப்பொழுது,  எனக்கு இலக்கிய உரையாடலுடன் புலர்ந்தது.

தனது பெயரை  சியாமளா யோகேஸ்வரன்  என அறிமுகப்படுத்திக்கொண்டு, தான் எழுதியிருக்கும் கானல் நீர்  என்ற  புதிய நாவலுக்கு அணிந்துரை எழுதித்தருமாறு கேட்டது ஒரு பெண் குரல்.

அவரது குரல் எனக்குப் புதியது.

நூல் விமர்சனம்

 


மூன்றாம் அங்கமாக முகிழ்த்து வரும் கற்பகதரு நூலின்
விமர்சனத்தை இருபத்தோராம் சுவைதொட்டு முப்பதாம் சுவைவரை சுவை குன்றாது சமைக்கிறேன்…..சங்கர சுப்பிரமணியன்.


பனை நுங்கு கிடைக்கும் காலம் வைகாசி மாதம் முதல் ஆடிமாதம் வரை நீடிக்கும். இந்தக் காலத்தில் பனை நுங்கு வியாபாரம் இந்தியாவில் களைகட்டுமென்பதை இருபத்தோராம் சுவையாகத் தருகிறார் ஆசிரியர். இந்த வியாபாரத்தை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் பல லட்சம் தொழிலாளர்கள் இருப்பதை அறிய முடிகிறது.


நுங்கு சுவைத்து சாப்பிட மட்டுமே என்று எண்ணாமல் இதில் இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம் போன்ற எண்ணற்ற சத்துக்களை தன்னுள் வைத்திருப்பதையும் அறியலாம். கண்பார்வை நீடிக்கவும் உடல் எடை குறைந்து அழகுடன் விளங்கவும் நுங்கு உதவுகிறது என்பதையும் அறியமுடிகிறது. மேலும் நுங்கிலே இருக்கும் மேல் தோல் சதைப்பகுதி மற்றும் நீர் என்று மூன்றும் உள்ளன. இதில் மேல்தோலில் பல உயிர்ச்சத்துக்கள் நிரம்பியிருப்பதை நினைவூட்டுகிறார்.

யோகத்தைப் பற்றி நுங்கு கூறுகிறது என்பதை இருபத்தி இரண்டாம்

சுவை கூறுகிறது. நுங்கை சீவும்போது மூன்று கண்களைத்தான் பார்க்கமுடியும். ஆனால் அதில் நான்கு கண்கள் இருந்தால் யோகமாம். ஏழு கண்கள் இருந்தால் இருந்தால் இன்னும் சிறப்பு. யோகம் யாருக்கு நுங்கு விற்பவருக்கா? அல்ல விற்பவருக்கா என்பதை மட்டும் விடுகதையாக்கியுள்ளார்.

நுங்கில் போசனைக் கூறுகள் எந்தெந்த விகிதத்தில் கலந்திருக்கிறது என்பதனை பட்டியலிட்டுத் தந்திருப்பது பாராட்டக் கூடியது. நுங்கினை குலையாக கோவில் திருவிழரக்களில் அலங்காரத்துக்காக கட்ட தொங்கவிடப்படுவதை இங்கே பதிவாக்கியிருக்கிறார். நுங்கை சுவைத்தபின் அந்த காயை சிறுசிறு துண்டுகளாக வெட்டி ஆடு மாடுகளுக்கு தீவனமாக்குவது அரியதோர் தகவல்.

காலமும் கணங்களும் : இலக்கிய உறவில் ஒரு ஞானத்தந்தை தலாத்து ஓயா கே. கணேஷ் (1920 – 2004 ) நூற்றாண்டு கடந்தும் பேசப்படும் இலக்கிய ஆளுமை பற்றிய நினைவுகள் ! முருகபூபதி

 ( ஐரோப்பிய நாடுகளிலிருந்து ஒலிக்கும் ஐ. ரி. பி. சி. வானொலியில்  “ எம் தமிழ் உறவுகள்  “ நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகிய உரை. நேர்கண்டவர்:  எஸ்.கே. ராஜென் )

  பாலாவின் இயக்கத்தில் வெளியான பரதேசி


திரைப்படத்தைப்பார்த்த எனது இரண்டாவது மகள் பிரியா மிகவும் கலவரமடைந்து அப்பாநாம் விரும்பி ருசித்து அருந்தும் தேநீருக்குப் பின்னால் துயரம் நிறைந்த பெரிய வரலாறே இருக்கிறதேபரதேசி படம் என்னை மிகவும் பாதித்துவிட்டது என்றாள்.

தேநீரின் நிறம் சிவப்பு. அதன் மூலப்பொருளை உற்பத்தி செய்யும் மக்களின் குருதியிலிருந்து - உழைப்பிலிருந்து பிறந்த பானம். பிரித்தானியர் இந்தியாவிலிருந்து தமிழ்மக்களை கூலி அடிமைகளாக அழைத்துவந்து இறுதியில் அவர்களை நாடற்றவர்களாக்கிவிட்டுச்சென்ற வரலாற்றை மகளுக்குச் சுருக்கமாகச்சொன்னேன்.

மறைந்த இலக்கியவாதி கே.கணேஷ் அவர்களைப்பற்றி எனது  காலமும் கணங்களும் தொடரில்  எழுதும்போது பரதேசி படமும் கணேஷ் நீண்ட நாட்களுக்கு முன்னர் எனக்கு எழுதியிருந்த பின்வரும் கவிதையும் நினைவுக்கு வந்தன.

  உழைக்கின்ற மக்கள் நிலையோ தாழ்வு

   உழைக்காத துரைமார்கள் சுகபோக வாழ்வு

   மழைக்காற்று மதிக்காது வடிக்கின்ற மேல்நீர்

   மனம்குளிர நாமுண்ணும் ஒரு கோப்பைத்தேநீர்

இந்தக்கவிதையை இயற்கையும் பசுமையும் கொஞ்சும்


மலையகத்தை சித்திரிக்கும் ஒரு  Picture Postcard  இல் எழுதி 1988 ஆம் ஆண்டு எனக்கு அனுப்பியிருந்தார் நண்பர் கே.கணேஷ். இலங்கை மலையகத்தில் பெண்கள் கொழுந்து பறிக்கும் அழகியகாட்சி அந்த அட்டையில் பதிவாகியிருந்தது.

சென்னையில் பல தசாப்தங்களுக்கு முன்னர் வெளியான லோகசக்தி இதழில் கணேஷ் எழுதிய அந்தக்கவிதையை எனக்கு அந்த மடலில்  நினைவூட்டியிருந்தார்.

நான் அவுஸ்திரேலியாவுக்கு வந்தபின்னர் எனக்கு மாதம் ஒரு தடவை அவரிடமிருந்து கடிதங்கள் வந்துகொண்டிருந்தன. மறைவு வரையில்  எழுதிக்கொண்டேயிருந்தார். ஒவ்வொருகடிதத்திலும் ஏதாவது ஒரு இலக்கியப்புதினம் இருக்கும். சிலரது எதிர்பாராத மறைவு பற்றிய சோகச்செய்தி இருக்கும்.

இலங்கை சுதந்திரமடைந்த காலப்பகுதியிலேயே தமிழ் இலக்கிய உலகில் கவனம்பெற்ற ஆக்கஇலக்கிய படைப்பாளிதான் கணேஷ். கண்டி அம்பிட்டியாவில் 1920 ஆம் ஆண்டு மார்ச் மாதம்  2 ஆம் திகதி பிறந்து, 05-06-2004 இல் கண்டி தலாத்து ஓயாவில் தமது 84 ஆவது வயதில் மறைந்தார்.

அமான் அஷ்ரஃபின் “ஓட்டமாவடி”: கொவிட் பின்புலத்தில் இலங்கை முஸ்லிம்களின் ஒடுக்கப்பட்ட உரிமை

 July 18, 2024 9:32 pm

அமான் அஷ்ரஃப் இயக்கத்தில் வெளியான “ஓட்டமாவடி” திரைப்படம், கடந்த புதன்கிழமை (10) கொழும்பு PVR இல் பிரமாண்டமாக வெளியிடப்பட்டிருந்தது.

இதில் இலங்கையின் முதல் பெண்மணி, பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க மற்றும் அரச பிரதிநிதிகள், இராஜதந்திர உறுப்பினர்கள், பெரும் நிறுவனங்களின் தலைவர்கள், இலங்கை சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் உள்ளிட்ட முக்கிய அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

என் மகன் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 


தமிழ்த் திரையுலகின் தவப் புதல்வனாக கருதப் படும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இருபத்துமூன்றாவது நினைவு தினம் ஜூலை 21ம் திகதியாகும். நடிப்பில் சிகரம் தொட்ட அவரின் நடிப்பில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த படம் என் மகன். தொடர்ந்து சிவாஜியின் நடிப்பில் படங்களை தயாரித்து வெற்றி கண்டு கொண்டிருந்த பாலாஜி தனது சுஜாதா சினி ஆர்ட்ஸ் மூலம் இப் படத்தை உருவாக்கியிருந்தார். வழக்கம் போல் ஹிந்தி படம் ஒன்றை தழுவியே படத்தை தயாரித்திருந்தார்.


மனோஜ்குமார் நடிப்பில் வெளிவந்த பே இமான் படம் என் மகன்

ஆனான். ஹிந்தியில் மனோஜ்குமாரும் ,
பிரானும் செய்த இரண்டு வேடங்களையும் தமிழில் சிவாஜியே ஏற்று நடித்தார். ஆனாலும் தன்னுடைய நடிப்பாற்றலினால் இரண்டு பாத்திரங்களையும் இரு வேறு கோணத்தில் அணுகி நடித்திருந்தார் சிவாஜி. ஒரு சிவாஜி இளைஞனாக காதல், ஆட்டம், பாட்டம் என்று நடிக்க , மற்றைய சிவாஜி போலீஸ் சார்ஜெண்டாக , விறைப்பாகவும், முறைப்பாகவும் நடித்து ரசிகர்களை தன் பக்கம் திருப்பிக் கொண்டார். இந்த நடிப்பின் மறுபக்கம்தான் தங்கப் பதக்கம் எஸ் பி சௌத்ரியாக பரிணமித்தது.

இளம் சிவாஜி காதலிக்கிறார், காதலில் தோல்வி அடைகிறார், காதலியின் கண்களுக்கு புலப்படாமல் மறைந்து பதுங்குகிறார், கொள்ளை கூட்டத்தில் சிக்கி தடுமாறுகிறார், சார்ஜெண்ட் சிவாஜியின் வளர்ப்பு மகனாகி அவர்களுக்காக தியாகம் செய்கிறார். இது ஒரு மகனின் கதை. படத்தில் மற்றுமொரு மகன் இருக்கிறான். போலீஸ் ஐ ஜி யின் மகனான இவன் துஷ்டன் . தந்தையின் செல்வாக்கை பயன் படுத்தி எல்லாவித அட்டூழியத்தையும் செய்கிறான். வழக்கம் போல் இரண்டு மகன்களும் ஒருத்தியையேயே காதலிக்கிறார்கள் .

இந்தியன் – 2 : திரைப்படம் - விமர்சனம் ! சமூகத்தை திருத்த முயன்ற சாகச இந்தியன், திரைக்கதையில் சறுக்கிய பரிதாபம் ! ! முருகபூபதி


வட  இந்தியாவில் உத்தர பிரதேசத்தில்  ஹாத்ரஸில் நடைபெற்ற  நிகழ்ச்சியில் ஒரு சாமியாரின் கால் பதிந்த மண்ணை எடுக்க முனைந்து,  அந்த ஜன நெரிசலில் 122 பேரளவில்  பரிதாபமாக இறந்திருக்கும் காலப்பகுதியில்,

 தமிழ்நாடு கள்ளக்குறிச்சியில்  சாராயம் அருந்தி ஐம்பதிற்கும் மேற்பட்டவர்கள் அநியாயமாக சாகடிக்கப்பட்டிருக்கும் துயரம் கப்பிய காலப் பகுதியில், 

தமிழ் நாட்டில் நிலமோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ஒருவர் கைதாகியிருக்கும் வேளையில்,  சில அரசியல் தலைவர்கள் கூலிப்படைகளினால் கொடூரமாக கொல்லப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில்,

ஆனந்த் அம்பானி திருமணத்துக்கு ஐநூறு கோடி ரூபாவுக்கு மேல்  செலவுசெய்து அதில் கலந்துகொண்ட  விருந்தினர்களுக்கு இரண்டு கோடி ரூபா மதிப்புள்ள கைக் கடிகாரங்கள் பரிசாக வழங்கப்பட்டிருக்கும் வேளையில்,

 இந்திய தேசத்தில் நீடித்திருக்கும்  ஊழலை,  சொத்து சேகரிப்பை ,


கருப்புப்  பணத்தை ஒழிக்கவேண்டும் என்ற குரலோடு லைக்கா சுபாஸ்கரனின் தயாரிப்பில் சங்கரின் இயக்கத்தில் உலக நாயகன் கமல் நடித்த இந்தியன் – 2 திரைப்படம் வெளியாகியிருக்கிறது.

இந்தியன் 1996 ஆம் ஆண்டில் இதே சங்கரின் இயக்கத்தில் சுஜாதாவின் திரைக்கதை வசனத்தில் ஏ. ஆர். ரகுமான் இசையில் வெளிவந்து,  கமலுக்கு அவ்வாண்டில் சிறந்த நடிகருக்கான   தேசிய விருதும் கிடைத்தது.

28 வருடங்களுக்குப் பின்னர் அதாவது கால் நூற்றாண்டுக்குப் பின்பு,  இந்த 21 ஆம் நூற்றாண்டில் இந்தியன் 2 வெளிவந்துள்ளது.

இம்மாதம் 12 ஆம் திகதி உலகெங்கும் ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் காட்சிக்கு வந்திருக்கும் இந்தியன் 2 முதல் நான்கு நாட்களிலேயே நூறு கோடி ரூபாவை  வசூல் செய்திருக்கிறது என்ற செய்தியும் வெளியானது. 

இந்த விமர்சனத்தை நான் எழுதும்போது, அது இன்னும் எத்தனை கோடியை தாண்டியிருக்கும் என்பது இங்கு அவசியமில்லை.

ஐநூறு கோடி ரூபா செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் நடித்திருக்கும்  உலகநாயகன்  கமலின் சம்பளம் நூற்றி ஐம்பது கோடி ரூபா  எனவும் சொல்லப்படுகிறது.

இயக்குனர் சங்கர் முன்னர் இயக்கிய ஜென்டில்மென் , முதல்வன் ( அக்‌ஷன் கிங் அர்ஜுன் நாயகனாக நடித்தவை ) இந்தியன் ( கமல் நடித்து 1996 இல் வெளியானது ) அந்நியன்             ( விக்ரம் நடித்தது )  ஆகிய நான்கும் சமூகத்தில் அன்றாடம் நடக்கும் மோசடிகள், ஊழல்களுக்கு எதிராக பேசிய திரைப்படங்கள்.

அந்த வரிசையில்  1996 இல் வெளியான  இந்தியனின் இரண்டாம் பாகம் எனச்சொல்லிக்கொண்டு  28 வருடங்களின் பின்னர் இந்தியன் 2 வெளிவந்துள்ளது.

உலகத் தலைவர்கள் மீது சமீப காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சிகள்!

 July 20, 2024 6:00 am 

தற்போது உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்படும் நிகழ்வு என்றால் அது அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடுதான்.

அமெரிக்க ஜனாதிபதிகள் கொலை செய்யப்படுவது மற்றும் அவர்கள் மீதான கொலை முயற்சிகள் இது முதல்முறை அல்ல, ஏனெனில் ஆபிரஹாம் லிங்கன் முதல் ஜோன் F. கென்னடி வரை பல ஜனாதிபதிகள் அமெரிக்க வரலாற்றில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

உலகத் தலைவர்கள் மீதான படுகொலை முயற்சிகள், உலக நாடுகளையும், சமூகத்தையும் உலுக்கக் கூடிய கொடூரமான நிகழ்வுகளாகும். இந்தச் சம்பவங்கள் அரசியல் பிரமுகர்கள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன.

சமீபத்திய காலங்களில் உலகத் தலைவர்கள் மீது நடத்தப்பட்ட படுகொலை முயற்சிகள் சில உள்ளன. அவற்றை இங்கு பார்க்கலாம்.

உலகின் செல்வாக்கு பெற்ற தலைவர்களில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில்!

 July 20, 2024 6:00 am 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பிரபலமாக உள்ளார். அவருடைய யூடியூப்பில் சுமார் 2.5 கோடிக்கும் மேற்பட்டோர் நரேந்திர மோடியைப் பின்தொடர்கின்றனர். இதன் மூலம் யூடியூப் சமூக வலைத்தளத்தில் செல்வாக்கு மிக்க தலைவர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார்.

பேஸ்புக், வட்ஸ்அப், இன்ஸ்டகிராம் போன்றவற்றிலும் அவர் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

இந்தச் சூழலில் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பிரதமர் நரேந்திர மோடியை பின்தொடர்வோர் எண்ணிக்கை 10 கோடியை தாண்டி உள்ளது. இதன் மூலம் எக்ஸ் தளத்தில் செல்வாக்கு மிக்க உலக தலைவர்களில் முதலிடம் பிடித்துள்ளார் மோடி.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை, எக்ஸ் தளத்தில் 3.81 கோடி பேர் பின்தொடர்கின்றனர். துபாய் மன்னர் ஷேக் முகமதுவை 1.12 கோடி பேரும், கத்தோலிக்க மதத்தலைவர் பரிசுத்த பாப்பரசரை 1.85 கோடி பேரும் பின்தொடர்கின்றனர்.

ஜெர்மனி தமிழ் வான் அவை ஆண்டுவிழா


 
















தமிழரசு கட்சி முடங்குமா?

 July 21, 2024


இலங்கை தமிழரசு கட்சியின் நீதிமன்ற சச்சரவு எதிர் பார்த்தது போன்று முடிவுறவில்லை – இலகுவில் முடிவுறுமா? இந்தக் கேள்வி தொடர்பில் கட்சியினரும் அச்சம் கொண் டிருக்கின்றனர். கட்சிக்கான புதிய தலைவர் தெரிவைத் தொடர்ந்து கட்சிக்குள் மிகவும் தெளிவாகவே இரண்டு அணிகள் உருவாகிவிட்டன.

அது மிகவும் வெளிப்படை யானது. தமிழ் பொது வேட்பாளர் விடயத்தை எதிர்கொள்ளுவதில் பிளவு தெளிவாகவே தெரிந்தது. தற்போதுள்ள சூழலில், பாராளுமன்ற தேர்தலை முன்னர் போன்று கட்சியால் எதிர்கொள்ள முடியுமா என்னும் கேள்வியுமுண்டு. ஒப்பீட்டடிப் படையில் தமிழ் மக்கள் மத்தியில் அதிக செல்வாக்குள்ள கட்சியென்னும் தகுதிநிலையும் முன்னர் போன்றில்லை.

இந்த நிலையில் தனித்து தேர்தலை எதிர்கொண்டால் முன்னர் போல் கட்சியால் வெற்றியை தக்கவைக்க முடி யுமா என்னும் கேள்வியுமுண்டு. தமிழரசு கட்சியின் தற்போதைய நிலைமை ஒரு விட யத்தை தெளிவுபடுத்துகின்றது – அதாவது, தமிழ் தேசிய அரசியல், தனிநபர்களின் பதவி நிலைப் போட்டிகளுக்குள் சிக்கியிருக்கின்றது.

இலங்கைச் செய்திகள்

அடுத்த ஆண்டு முதல் e – Passport அறிமுகம்

திடீரென கடவுச்சீட்டு பெற திணைக்களத்தில் குவிந்த மக்கள்

ஆந்திராவின் நீர்வேளாண்மை திட்ட பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்

மன்னாரில் ஜூனியர் சுப்பர் சிங்கர் போட்டி

கவிஞர், சிறுகதை எழுத்தாளர் இஸ்மத் பாத்திமா நேற்று காலமானார்

யாழ். போதனா வைத்தியசாலைக்கு அமைச்சர் ரமேஷ் பத்திரன விஜயம்

யாழ்ப்பாணத்து மக்களுக்காக உண்மையாக செயற்பட்டேன் 


அடுத்த ஆண்டு முதல் e – Passport அறிமுகம்

- விண்ணப்பிக்கும் செயன்முறை நாளை முதல் ஆரம்பம்

July 18, 2024 11:07 am 

அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதியிலிருந்து இலங்கையர்களுக்கு மிகவும் பாதுகாப்பான , செயற்திறனுடன் கூடிய e – Passport முறையை ஆரம்பிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. கடவுச்சீட்டிற்கான விண்ணப்பிக்கும் செயன்முறை புதிய செயன்முறையாக நடைமுறைப்படுத்தப்படும்.

உலகச் செய்திகள்

'காசாவில் அனைத்து போர் விதிகளும் மீறல்'      மத்திய பகுதியில் தாக்குதல் தீவிரம் ரபா நகரில் டாங்கிகள் முன்னேற்றம்

கொவிட் தொற்றுக்கு மத்தியில்: தேர்தலில் இருந்து விலக பைடனுக்கு புது அழுத்தம் 

டீஸ்டா நதி நீரைப் பகிர்ந்து கொள்ள இந்தியாவும் பங்களாதேசமும் இணக்கம்

இந்திய விமானப்படை பங்குபற்றலுடன் அவுஸ்திரேலியாவில் கூட்டுப்பயிற்சி

பயணிகளுடன் கடலில் மூழ்கிய எண்ணெய்க் கப்பல்

காசாவில் குண்டு மழைக்கு மத்தியில் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ஆளில்லா விமானத் தாக்குதல்

உலகெங்கும் இணைய சேவைகளில் பாதிப்பு


'காசாவில் அனைத்து போர் விதிகளும் மீறல்'      மத்திய பகுதியில் தாக்குதல் தீவிரம் ரபா நகரில் டாங்கிகள் முன்னேற்றம் 

July 19, 2024 7:45 am 

காசாவில் இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்கள் தொடரும் நிலையில், அங்கு அனைத்து போர் விதிகளும் மீறப்பட்டிருப்பதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனத்தின் ஆணையாளர் நாயகம் பிலிப்பே லசரினி சாடியுள்ளார்.