சனிக்கிழமை 09/07/2022 இரண்டு நேர நிகழ்ச்சியாக மதியம் 2 மணிக்கும் மாலை 6.30 மணிக்கும் நிகழ்ச்சி Bankstown Bryan Brown அரங்கில் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சி
வழமைபோல் அறிவிக்கப்பட்ட நேரத்தில் சரியாக மதியம்
இரண்டு மணிக்கும் மாலை 6.30 மணிக்கும்
ஆரம்பமானது இங்கு குறிப்பிடத்தக்கது.
மகேஸ்வரன் பிரபாகரன். இந்த நிகழ்ச்சியினால் திரட்டப்படும் அனைத்து நிதியும் இலங்கையில் பல வழிகளில் அல்லல் உறும் எமது சமூகத்தினருக்கு சென்றடைகின்றதென்பதினால், அங்கு தமது உயிரினை நீத்த அனைவரையும் நினைவு கூர்ந்து ஒருநிமிட மௌன அஞ்சலி செலுத்தி இகழ்ச்சியை துடக்கி வைத்தார் பிரபா.
சக்தி இசை குழுவின் நிகழ்ச்சி ஆரம்பமானது. திரு செல்வன் டேவிட்டின் நெறியாழ்க்கையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அன்பாலயம் ஆரம்பமான காலத்தில் அதாவது 15 வருடங்களுக்கு முன் ரஞ்சன் (ஸ்ரீ தக்ஷணா உரிமையாளர்) அவர்களின் ஆதரவுடன் கறியோக்கி இசையில் இசை நிகழ்ச்சியுடன் ஆரம்பித்து, பின் ஒருசில இசை கருவிகளுடன் ரஞ்சன் அடுத்த கட்டத்துக்கு நிகழ்ச்சியின் தரத்தை உயர்த்தினார். அப்போது சிறுமிகளாக பாடல்களை பாடிய கேஷிகா அமீர் மற்றும் அபிசாயினி பத்மசிறி அவர்கள் இப்போதும் அன்பாலயம் இசை நிகழ்வில் மிகவும் தலை சிறந்த பாடகிகளாக பாடிக்கொண்டு இருப்பதை பார்க்கும் போது, மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதனை தொடர்ந்து தனி இசைநிகழ்ச்சியாக இல்லாமல் ஆஸ்திரேலியா Got Talent என்னும் பாணியை பின் பற்றி எமது சமூகத்தில் பலதரப்பட்ட திறமை உடையவர்களை அவர்களது வயதின் அடிப்படையில் வெளிக் கொண்டுவர Talent Show என்னும் ஒரு போட்டி பகுதியை அறிமுகம் செய்தது அன்பாலயம். 2013 இல் இந்த இசை நிகழ்ச்சியை மேலும் ஒரு படி மேல் கொண்டு செல்ல இளைய தலைமுறையின் இசைக்கலைஞர்களை ஒன்று சேர்த்து ரவியின் நெறியாழ்க்கையில் திறம்பட நல்ல ஒரு இசை நிகழ்ச்சியை வழங்கியவர் ஸ்ரீராம் ஜெயராமன்.