தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு
தீபாவளித் திருநாள் சிறப்புடை நாளே !
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் …. அவுஸ்திரேலியா
தீயவை அகன்றால் நல்லவை மலரும்
தீபா வளியின் தத்துவம் ஆகும்
ஆணவ அரக்கன் அழிந்த நன்னாளே
ஆனந்தத் தீபா வளியாய் ஆனது
அதிகாலை அனைவரும் எழுந்துமே விடுவார்
அக மகிழ்வுடனே நீராடி மகிழ்வார்
புத்தாடை அணிந்து புத்துணர் வடைவார்
அத்தனை மகிழ்ச்சியும் வந்ததாய் நினைப்பார்
இனிய தீபாவளி
இன்றமிழே இல்லத்திற்பேசுவோம் என்று
இனியதீபா வளியன்று சபதம் ஏற்பீர்!
சிவஞானச் சுடர் பல்மருத்துவ கலாநிதி பாரதி இளமுருகனார்.
(வாழ்நாள் சாதனையாளர்)
அறத்தையெலாம் அழித்துவிட்டு அகங்கா ரத்தால்
அளப்பரிய அழிவுசெய்த நரகா சுரனை
மறக்கருணை
யால்மாலோன்ஆட்கொண்ட வேளை
மனந்திருந்திப் பணிவோடு இருகை கூப்பி
இறக்கின்ற தருணத்திற் கேட்ட வரத்தை
இன்றுவரை தீபாவளி யெனவே நாமும்
சிறப்பாகக் கொண்டாடு
கின்ற வேளை
சிவனருளால் மனத்தகத்தே ஒளியேற் றிடுவீர்!
புத்தம்புது
பட்டாடை பொலிவுற உடுப்பீர்!
போற்றியென்றும் வணங்குமுங்கள் தெய்வம் தொழுவீர்!
பத்தியோடு மறையென்னும் தமிழ்மந் திரத்தைப்
பக்குவமாய்க் கோவில்களில் ஓதி வருவீர்!
எத்திக்கும்
மனதைநீவிர் அலைய விடாதீர்!
இயன்றமட்டும் இன்சொல்லை அன்புடன் பேசிச்
சித்தத்தில்
சிவனுருவை நிறுத்தி நித்தம்
சிவத்தியானம் சிவதொண்டு இயற்றி உய்வீர்!
கந்தக் கடவுள் கருணையின் வடிவமே ! - கந்தசஷ்டிப் பிரார்த்தனை
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் …. அவுஸ்திரேலியா
வதைக்கும் எண்ணம் கொண்டவன் அல்ல
வளங்கும் எண்ணம் கொண்டவன் வேலன்
சினத்தை அடக்குவான் சிறப்பைக் கொடுப்பான்
சிங்கார வேலன் திருவருட் செல்வன்
ஆணவம் கொண்டால் அடக்கியே நிற்பான்
அடியினைப் பரவினால் அணைத்தே மகிழ்வான்
அன்புடன் வேண்டினால் அனைத்தும் அருளுவான்
அரனார் மைந்தன் அழகன் குமரன்
நடைபயிற்சிக்கு புது இலக்கணமா?
-சங்கர சுப்பிரமணியன்.
விளையாட்டு ஆசிரியர் தினமும் சொல்வார்
பூங்காக்களில் சிலர் நடைபயிற்சி செய்வர்
தினம் பயிற்சி செய்வதைக் கண்டுவத்தேன்
அதற்கென்று உள்ள கால்சட்டை அணிவர்
காலணிகளையும் தவறாமல் அணிந்திடுவர்
காலை மாலை கைகளை மிக வேகமாகவே
வீசி வீசி விரைவாக நடந்து பயிற்சி செய்வர்
அண்டைவீட்டு மாமா நடைபயிற்சி செய்வார்
காலையும் மாலையும் கட்டாயமாய் செய்வார்
கால்சட்டையின்றி லுங்கியோடுதான் பயிற்சி
காலணி அணியாமல் செருப்புடனே பயிற்சி
மங்கா… மான்குட்டி போல – சிறுகதை - கே.எஸ்.சுதாகர்
இரவு ஒன்பது மணியாகியும் மெல்பேர்ணில் சூரியன் மறையவில்லை. சண்முகமும் வசந்தியும் சாப்பாட்டை முடித்துக் கொண்டு, ஈசன் தமக்காக ஒதுக்கியிருந்த மேல்மாடி அறைக்குச் சென்றார்கள்.
ஈசனும் சண்முகமும் ஆத்மநண்பர்கள். பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்தவர்கள். இரண்டொரு வருடங்கள் ஒன்றாக - ஒரே அறையில் இருந்தவர்கள்.
"மங்காவுக்கு ரெலிபோன் செய்து பாப்போமா?" மனைவியைப் பார்த்துக் கேட்டார் சண்முகம். கட்டிலின் மறு கரையில் இருந்த வசந்தி அவரைப் பார்த்து முகத்தைச் சுழித்தாள்.
"உங்களுக்கென்ன விசரா… இதுக்குத்தானா இவ்வளவு செலவழிச்சு லண்டனிலை இருந்து ஒஸ்ரேலியா வந்தனியள்? முதலிலை ஈசனின்ரை மகளின்ரை திருமணத்தைப் பாப்பம்."
"ஓம். ஓம். நீர் சொல்லுறதும் சரிதான். இப்ப மங்காவுக்கு ரெலிபோன் செய்தால், அவள் எங்களை விடமாட்டாள். வந்து தன்னோடை நிக்கச் சொல்லி நாண்டு கொண்டு நிப்பாள்."
வசந்தி சிங்கம் போல கர்ச்சித்தாலும், சமயங்களில் அவள் சொல்வதில் ஒரு நியாயத்தன்மை இருப்பதை உணர்ந்தார் சண்முகம்.
பிரயாணக் களைப்பு. நேர வித்தியாசம். வசந்தி படுத்ததும் உறங்கிவிட்டாள். சண்முகத்திற்கு உறக்கம் வரவில்லை. அருகே இருந்த நிலாமுற்றத்தில் நடை போட்டார். வெப்பம் கலந்த காற்று உடலை வருடிச் சென்றது.
திட்டமிட்டு
அமைக்கப்பட்டிருந்த 'சிட்னம்' கிராமம் கண் முன் விரிகிறது. அனேகமாக எல்லா
வீடுகளுமே காணியின் அகலப்பாட்டைத் தொட்டு நின்றன. வீதியில் இருந்து காணிகள் சற்றே
உயர்ந்திருந்தன. தூரத்தே 'சைலோ' போன்ற மூன்று உருளைகள் பழுப்பு நிறத்தில்
குத்திட்டு நின்றன. அருகே விமானநிலையம் இருந்தபடியால் அடிக்கடி விமானங்கள் எழுந்து
மிதந்தன.
முன் வீட்டிலிருந்து இளம்பெண் ஒருத்தி குப்பை வண்டிலை வளவிற்குள்ளிருந்து வீதிக்கு இழுத்து வந்து கொண்டிருந்தாள். வண்டில் அவளைத் துரத்திக் கொண்டு சரிவு வழியே வந்தது. அந்தப் பெண் வீதியின் இருமருங்கையும் மிரண்டு பார்த்துவிட்டு மீண்டும் வீட்டிற்குள் புகுந்தாள். அவளின் தோற்றமும் மிரட்சியும் அச்சொட்டாக மங்காவைப் போலவே இருந்தது. சண்முகம் ஆடிப் போய்விட்டார். கால ஓட்டத்தில் முதுமையடைந்து அல்லல்பட்டு களைத்துவிட்ட அவர், அருகேயிருந்த தூணைப் பிடித்துக் கொண்டார்.
மங்கா அவர்கள் வாழ்வில் ஒரு மறக்க முடியாத பாத்திரம்.
இது கலிகாலம்!(ஒருபக்க கதை)….சங்கர சுப்பிரமணியன்.
காலை ஆறு மணிக்கு எழுந்தால் இரவு பதினொரு மணிவரை பங்கஜத்துக்கு வேலை இருந்து கொண்டே இருக்கும். ஒரே மகளான சாரு கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறாள். அம்மாவுக்கு உதவியாக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடமாட்டாள்.
எங்க பாட்டன் சொத்து - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்
தன்னுடைய ஒளிப்பதிவு திறமையினால் ரசிகர்களிடையே புகழ்
பெற்றவர் ஒளிப்பதிவாளர் எம் . கர்ணன். இவருடைய கேமரா கோணங்கள் ரசிகர்களிடேயே வரவேற்பை பெற்றிருந்தன. ஆரம்பத்தில் டபிள்யு . ஆர். சுப்பராவ் , வி . ராமமூர்த்தி போன்றோரிடம் தொழில் பழகிய கர்ணன் சபாஷ் மீனா, சங்கிலித்தேவன், சாரதா, கற்பகம் , கை கொடுத்த தெய்வம் , மணியோசை போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். அதன் போது இயக்குநர்களாக புதிதாக அறிமுகமான கே. எஸ். கோபாலகிருஷ்ணன், பி. மாதவன், ஜம்பு போன்றோருக்கு ஆரம்பத்தில் பக்க பலமாக இருந்து தன் கமரா மூலம் இவர் உதவியிருந்தார்.
சிட்னி / மெல்பேர்ன் / கன்பரா / பிரிஸ்பேனில் நடைபெறும் நிகழ்ச்சிகள் 2025
.
உங்கள் நிகழ்ச்சிகளை இலவசமாக பிரசுரிக்க tamilmurasu1@gmail.com or paskiho@hotmail.com , murasuau@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்
சிட்னியில் நடைபெறும் நிகழ்வுகள்
26-10-2025 Sun: ஈழத் தமிழர் கழகம் கலைக்கதம்பம் 2025 நிகழ்வு 6.00 PM at Redgum Centre, Wentworthville
29-11- 2025 Sat: Australian Medical Aid Foundation proudly presents முத்தமிழ் மாலை
30-11-2025 Sun: மாத்தளைசோமுவின் 100 சிறுகதைகள் நூல் வெளியீடு ANTHONY CATHOLIC CHURCH-TOONGABBIE-4-00 pm to 6-30 pm.
இலங்கைச் செய்திகள்
கொழும்பு துறைமுக மனித புதைகுழியின் அகழ்வு நிறைவு, நூற்றுக்கும் மேற்பட்ட மனித எலும்புகள் மீட்பு
செம்மணி மனித புதைகுழியின் அடுத்த அகழ்வு: 2 கோடி ரூபாய் நிதிக்கு அனுமதி
இந்திய - இலங்கை பிரதமர்கள் சந்தித்து பேச்சு
கொழும்பு துறைமுக மனித புதைகுழியின் அகழ்வு நிறைவு, நூற்றுக்கும் மேற்பட்ட மனித எலும்புகள் மீட்பு
Published By: Vishnu
17 Oct, 2025 | 03:52 AM
கொழும்பு துறைமுகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மனித உடல்கள் மீட்கப்பட்ட புதைகுழியின் அகழ்வாய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நகரின் உயர் பாதுகாப்பு வலயத்தில் ஜனாதிபதி ரணில் விக்மசிங்கவின் ஆட்சிக் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழி தொடர்பான வழக்கு, 2025 ஒக்டோபர் 13 திங்கட்கிழமை கொழும்பு நீதவான் கசுன் காஞ்சன திசாநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எலும்புகள் குறித்து வைத்திய பகுப்பாய்வை ஆரம்பிக்குமாறு விசேட சட்ட வைத்திய அதிகாரி சுனில் ஹேவகேவுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
உலகச் செய்திகள்
அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவித்தது ஹமாஸ்! - இஸ்ரேல் இராணுவம் தகவல்
2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர் யார்?
அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவித்தது ஹமாஸ்! - இஸ்ரேல் இராணுவம் தகவல்
13 Oct, 2025 | 04:35 PM
காசா போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பினால் சிறைபிடிக்கப்பட்டிருந்த அனைத்து இஸ்ரேலிய பிணைக் கைதிகளும் விடுவிக்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் - காசா போர் நிறுத்த ஒப்பந்தம் எகிப்தில் இன்று (13) கைச்சாத்திடப்படவுள்ளது.
இந்நிலையில், போர் நிறுத்தத்தின் முதற்கட்ட நடவடிக்கையாக, ஹமாஸினால் இரண்டு ஆண்டுகளாக சிறைபிடிக்கப்பட்ட 20 இஸ்ரேலிய பிணைக் கைதிகளும் இன்று விடுவிக்கப்பட்டுவிட்ட செய்தி, அவர்களது குடும்பத்தினரையும் இஸ்ரேல் மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.