உண்மையை விடவும் பொய் பெரும் கவசமாயிற்று அப்பொழுது

.


எவ்வளவுதான் வாழ்ந்தபோதும் தெரியவில்லை
போர்ப்பிராந்தியத்தில்
ஒரு பகலை எப்படி வெல்வதென்று
ஒரு இரவை எப்படிக் கடப்பதென்று
ஒரு காலையை எப்படி எதிர்கொள்வதென்று
மாலையில் பீரங்கிகள் முழங்கின
காலையில் பீரங்கிகள் முழங்கின
இரவில் பீரங்கிகள் முழங்கின
இதற்கிடையில் எப்படி வாழ்வதென்று தெரியவில்லை ஒருவருக்கும்
நெருப்புக்கு அடியில் கிடந்தனர் எல்லோரும்.
தீயெழுந்து ஆடியது பெருநடனத்தை.

சிட்னியில் விஸ்வரூபம் படம்




பென்டில்கில்லில் கோலாகலமாக இடம் பெற்ற பொங்கல் விழா


.
                                                                                                         செ.பாஸ்கரன்

இன்று 20.01.2013 சிட்னியில் பென்டில்கில்லில் அமைந்துள்ள சிவிக் பூங்காவில் யாழ் இந்துக் கல்லூரி பழையமாணவர் சங்கமும் சிட்னி தமிழ் வர்த்தகர்களும் இணைந்து நடாத்திய “தைபிறந்தால் வழி பிறக்கும் பொங்கல் விழா 2013 கோலாகலமாக இடம் பெற்றது. புலம் பெயர் நாட்டில் இப்படி ஒரு பொங்கல் விழா நடந்துள்ளது என்பது மகிழ்வான ஒன்றாக இருந்தது. இந்த விழாவிற்கு 700 பேருக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டார்கள்.




புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம். -குறும்படம்

.
பார்த்ததில் நெஞ்சைத் தொட்ட குறும்படம். நடிகர் கமலஹாசன் குறிப்பிட்டு பேசிய குறும்பமும் கூட .செ .பாஸ்கரன்



Nantri:sinnakuddy1.blogspot.com

சிட்னியில் தமிழர் ஒன்றுகூடல்

இலங்கைச் செய்திகள்

.
பத்து லட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும்

நான் குற்றமற்றவர் - சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் சிறுதுளியும் உண்மை இல்லை


ரிசானாவுக்காக கண்ணீர் சிந்தும் இவ்வேளையில், இதேபோன்ற கொடுந் துன்பங்களை எதிர்கொள்ள நாம் இன்னும் ஆயிரக்கணக்கான ரிசானாக்களை தொடர்ந்து அனுப்ப போகிறோமா?

                                        காமினி வீரக்கோன்

இராணுவத்திலிருந்து 71458 பேர் தப்பியோட்டம்

மஞ்சள், சிவப்பு, பச்சை மழைக்கான காரணம் தெரியுமா?

மேர்வின் சில்வாவை கைது செய்யுமாறு ஆர்ப்பாட்டம்

யாழ். தேவி புகையிரதச் சேவை செப்டெம்பர் மாதம் யாழ்ப்பாணத்தை சென்றடையும்: மகாலிங்கம்

இப்போது ஜனநாயகத்தை பாதுகாக்கும் ஒரு போராளியாக காட்சிதரும் ஷிராணி பண்டாரநாயக்காவின் கண்ணியமும் கௌரவமும் புதிய சட்ட மற்றும் அரசியல் தாக்குதல்களுக்கு உள்ளாகலாம்.
 -  என்.சத்தியமூர்த்தி




POOJA

.

கிழக்கு மாகாணத்தில் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் பணிகள்



இலங்கையில் நீடித்த போரில் பெற்றவர்களை இழந்த ஏழைத்தமிழ் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு  அவுஸ்திரேலியாவிலிருந்து உதவிவரும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் நிதிக்கொடுப்பனவு நிகழ்வும் தகவல் அமர்வும் மாணவர் ஒன்று கூடலும் அண்மையில் திருகோணமலை, செங்கலடி, கல்முனை ஆகிய பிரதேசங்களில் நடைபெற்றன.
கடந்த பலவருட காலமாக அவுஸ்திரேலியாவில் இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் திருகோணமலையில் நிலாவெளியில் இயங்கும் நலிவுற்ற சமூக அபிவிருத்திக்கான தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஊடாக கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும் கிழக்கு பல்கலைக்கழகத்திலும் பல மாணவர்களுக்கு உதவிவருகிறது.

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற தமிழர் விடுதலைப் பயணம்



அண்மைக்காலத்தில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் சிறிலங்கா அரசுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் போராட்டத்தின் முக்கிய நிகழ்வாக 'தமிழர் விடுதலைப் பயணம்' என்ற பெயரில் நடைபெற்ற ஊர்திப் பயணம் ஞாயிற்றுக்கிழமை நிறைவுற்றது.

தற்போது அவுஸ்திரேலியா வருகை தந்திருக்கும் சிறிலங்கா கிரிக்கெற் அணி அவுஸ்திரேலிய அணிணை எதிர்த்துப் பல போட்டிகளில் விளையாடி வருகின்றது. இவ்விரு நாடுகளும் விளையாடும் அனைத்துப் போட்டிகளிலும் 'சிறிலங்காவைப் புறக்கணி' என்ற மகுட வாக்கியத்தோடு தொடர் போராட்டங்கள் அந்தந்த விளையாட்டு மைதானங்களில் நடைபெற்று வருகின்றன.

இசைப்புயலுக்கு வாழ்த்தும் இந்தப்புயல்



.


நீ தான்
இசைப்புயல்
உனக்கு வாழ்த்து சொல்லுது
இந்தப்புயல்

நீ இளவயதிலே
இசையில் முற்றியவன்
நான் வயசு பத்திலே
உன்னைப்பற்றியவன்

சின்னச்சின்ன ஆசைகளில்
உன் இசை ரோஜாக்களை
பறித்தோம் முதலில்

மெல்லிசை ஞானியர்
கொடிகட்டிபறந்த
தமிழ் திரை இசையில்
நீ தானே
கொம்புயூட்டர்
இசைக்கொடி ஏற்றியவன்

இன்று உனக்கு 44 ஆ??
யார் சொன்னது?
ஒரு வீர தீரனின்
இளமையும் துடிப்பும்
உன்னிசைப்புயலில் இருக்க
உனக்கு வயது
கணிப்பில் இல்லை
இசையால்


ஆஸ்திரேலிய தலை நகரின் அழகில் மயங்க ஆசையா? -


 .
எழுத்துருவாக்கம்: செ.நிரூபன்

இப்போதே பறந்து வாருங்கள்!

ஆஸ்திரேலியாக் கண்டத்தின் தலை நகராக விளங்கும் இடம் தான் கான்பரா எனும் அழகிய நகராகும். ஆஸ்திரேலியாவின் விக்டோரியா (மெல்பேண்) மாநிலத்திற்கும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திற்கும் (சிட்னி) இடையில் இந்த அழகிய நகரம் அமைந்துள்ளது.1908ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் தலை நகரமாக இந்த கன்பரா நகரம் பிரகடனப்படுத்தப்பட்டது. மெல்பேணிலிருந்து 640km தொலைவிலும், சிட்னியிலிருந்து 280km தொலைவிலும் இந் நகரம் அமைந்திருக்கிறது. சுருங்க கூறின் ஓர் நாட்டின் அரசியல், வெளிவிவகாரா விடயங்களிற்கென்று தனியாக அமைக்கப்பட்ட, வடிவமைக்கப்பட்ட நகராக இந்த கன்பரா விளங்குகின்றது. 
கன்பரா மாநிலத்தில் அதிகளவில் உலக நாடுகளின் தூதரகங்களும், அரசியல் தலமை அலுவலகங்களும், தலமைச் செயலகங்களும் அமைந்திருக்கின்றன. மக்கள் தொகை அண்ணளவாக மூன்றரை இலட்சமாகும். கன்பரா நகரமானது ஆஸ்திரேலியாவின் ஏனைய நகரங்களை விடச் சிறப்பாகவும், விசேட கட்டட வேலைப்பாடுகளுடனும் அமைக்கப்பட்டிருக்கின்றது. அமெரிக்க அரசியல் தலமைப் பீடமான வாஷிங்டன் டீசியினைப் போன்று கன்பரா நகரும் அதி உயர் தொழில் நுட்ப டிசைன் வேலைப்பாடுகளுடன் அமெரிக்க கட்டட கலை நிபுணர் Walter Burley Griffin அவர்களின் மேற்பார்வையின் கீழ் கட்டி முடிக்கப்பட்டது.

நீயே நிழலென்று - ஸ்ரீரஞ்சனி - சிறுகதை

.


தொலைபேசி ஒலிப்பிய மணிச்சத்தம் கேட்டதும் மீன் வெட்டிக் கொண்டிருந்தகையை அவசரமாகக் கழுவி விட்டுஅது தீபாவாகத் தானிருக்கும் என்றுஆர்வத்துடன் ஓடிச் செல்கிறேன் நான்ஆனால் அது வழமையாக வரும் மாதாந்தகிறிஸ்தவ ஆராதனை பற்றிய பிரச்சாரத்துக்கான மின்கணிணி அழைப்பு எனதொலைபேசி இலக்கத்தைப் பார்த்ததும் புரிகிறதுஎனக்குத் தேவையற்ற அந்தச்செய்தி தொலைபேசியில் பதியப்படாமல் இருப்பதற்காக றிசீவரைத் தூக்கி மீண்டும்வைத்துவந்த லைனைக் கட் பண்ணி விட்டு மீண்டும் குசினிக்குள் போகிறேன்.இருந்தாலும் அவள் சொன்ன மாதிரி எப்படியும் இன்று போன் பன்ணுவாள் என்பதில்எனக்கு எந்தவித ஐயமும் இருக்கவில்லை.
அந்த நினைவைத் தொடர்ந்து தீபா பல்கலைக்கழகம் போக முன் சினேகிதர்களுடன்காம்பிங்க்குப் போன போதுஎதிர்பாராமல் வந்து மனதில் நிறைவை ஏற்படுத்தியஅவளின் கோல் ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது.

'மம்கௌ டிட் யுவர் அப்பொயின்ற்மேன்ற் கோ?'
'பிள்ளைக்கு எப்பிடி ஞாபகம் வந்ததுஎங்கையிருந்து போன் எடுக்கிறாய்?'
'இங்கையிருக்கிற ஒரு கடையிலிலை இருந்து போன் பண்ணுறன்என்ன நடந்ததுஎண்டு கேக்கிறதுக்காண்டியும்உங்களோடை கதைக்கிறதுக்காண்டியும் ஒரு மூண்டுமைல் தூரம் ஓடி வந்தனான.;'
' மை பேபிற் வாஸ் ஒகேஅவ்வளவு தூரம் தனிய ஓடி வந்தனியே?'
'யேஸ் லவ் யுஎன்ன நடந்தது எண்டு எனக்கு தெரியோணும் போலிருந்தது.'
'அம்மாவுக்கு டே சேஜறி நடந்த போது ஆறு வயசுக் குட்டியாய் இருந்த போதே கெற்வெல் காட் செய்து கொண்டு வந்தவள் எல்லே என்ரை பிள்ளை,' மனசு சிலிர்த்துக்கொள்கிறதுஉண்மையிலேயே அவளுக்கு என்னில் அத்தனை பாசம் தான்.

உலகச் செய்திகள்


 தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கிய குர்திஷ் இனப் பெண்கள் சுட்டுக் கொலை

கோடிக்கணக்கான இந்துக்கள் குவிந்த கும்பமேளா!: உலகில் அதிகமானோர் குவிந்த நிகழ்வாகவும் பதிவு

பஞ்சாபில் பெண்ணொருவர் 7 பேரால் வல்லுறவு: இந்தியாவை உலுக்கிய மற்றுமொரு சம்பவம்

அக்ரம், ரமீஸ் ராஜாவை பாக்.இற்கு திருப்பி அனுப்ப கோரிக்கை

தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கிய குர்திஷ் இனப் பெண்கள் சுட்டுக் கொலை
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு தங்களின் ஆதரவை வழங்கி வந்த குர்திஷ் இனப் பெண்கள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பாரிஸில் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் அதிகமுள்ள லாச்சப்பல் பகுதிக்கு மிகவும் அருகிலுள்ள கார் டு நோர்ட் தொடருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள குர்திஷ் கல்வி வளாகம் ஒன்றில் நேற்றுக்காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. படுகொலை செய்யப்பட்ட பெண்கள் மூவரும், தமிழர் விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவானவர்கள் என்றும் தமிழர்களால் நடத்தப்படும் போராட்டங்களிலும் பங்கேற்று, தமது ஆதரவுக் குரல்களையும் பதிவு செய்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.   நன்றி தேனீ

விவேகானந்தா!



காலமெல்லாம்  அளந்தளந்தும்  உரைக்கடங்கா 
கருணைபொழி  திருவுருவை  உளங்கனிந்து 
ஓலமிடும்  அடியவரின்  உறுகண்நீக்கும் 
உள்ளொளியை  வாய்மனம்மெய்   புலன்கடந்த 
சீலமெனும்  செழுந்திருவைப்  பரமஹம்சர் 
சிந்தையினில்  தெளிவிக்கத்  தெளிவுகொண்டு 
கோலமுழு   தும்உணர்ந்த  விவேகானந்தா!
கோதற்ற  வேதாந்த  விளக்கேபோற்றி! 

தமிழ் சினிமா

சமர்

'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்ற முதுமொழியை சற்றே சீண்டிப்பார்க்கும் படம் தான் விஷால் நடிப்பில் வெளியாகியிருக்கும் சமர்.
தானுண்டு தன் காதலுண்டு என்று போகிற ஒருவனை, சம்பந்தமேயில்லாமல் சீண்டிப்பார்த்தால் என்னாகும்? இதுதான் இப்படத்தின் ஒருவரி கதை சுருக்கம்.
'தீராத விளையாட்டு பிள்ளை' என்றொரு படத்தை இயக்கி விஷாலின் வாழ்வில் தீராத சோகத்தை ஏற்படுத்திய இயக்குனர் இவர்.
முற்பகல் செய்த பாவத்திற்கு பிற்பகல் பிராயசித்தமாக அமைந்திருக்கிறதா? பெரும் கேள்வியோடு நகர்கிறது படம்.
நம்மையும் இழுத்துக் கொண்டு வேக வேகமாக நகர்கிற இப்படத்தில் இடைவேளை வந்ததே தெரியவில்லை.
ஊட்டியில் வசிக்கிற விஷாலுக்கு காடுகளை சுற்றிக்காட்டும் 'கைட்' வேலை.
சும்மா இருந்துட்டு போகட்டுமே என்று காட்டுத்தனமான சண்டைக்காட்சியோடு படத்தை தொடங்குகிறார்கள்.
இது, கதைக்கு தேவையில்லை என்றாலும், அவரது ரசிகர்களுக்கு தேவைப்பட்டதால் திரு வைத்திருக்கிறார்.
திடீரென விஷாலுக்கு ஒரு காதலி இருப்பதாக கூறி சுனைனாவையும் காட்டுகிறார்கள்.
தனது காதலன் தன்மீது கொண்டிருக்கிற அக்கறை, ஒரு ஸ்பூன் சர்க்கரை அளவுக்கு கூட இல்லையே என்கிற எரிச்சலில், மிக மோசமான கேள்விகளால் திட்டி தீர்க்கிறார் அவர்.
'என் ஹிப் சைஸ் தெரியுமா உனக்கு, அட்லீஸ்ட் என் செப்பல் சைஸ்சாவது தெரியுமா?' என்றெல்லாம் நோகடிக்கும் அவர், 'உனக்கும் எனக்கும் ஒத்துவராது, குட்பை' என்று கூறிவிட்டு பாங்காக்கிற்கு பறக்க, காதலியை மறக்கவும் முடியாமல் சேரவும் முடியாமல் தவிக்கிறார் விஷால்.
சில மாதங்கள் கழித்து அவருக்கு வந்து சேரும் ஒரு கொரியரில் சுனைனாவின் காதல் சொட்டும் கடிதம் ஒன்றும், பாங்காக்கிற்கு வரச்சொல்லி ஒரு விமான டிக்கெட்டும் இருக்க, காதலியின் முகவரி, போன் நம்பர் எதுவுமில்லாமல் பறக்கிறார் விஷால்.
முதல் முறையாக பிளைட் பிடிக்கும் விஷாலுக்கு அழகான த்ரிஷா உதவ, பிரண்ட்ஷிப் முளைக்கிறது இருவருக்குள்ளும்.
ஒரு வழியாக பாங்காக் போனால், சொன்ன இடத்திற்கு சுனைனா வந்தால்தானே? மாறாக விஷாலை சுட்டுவிட துரத்துகிறது ஒரு கும்பல்.
அப்படியே கோட், சூட் போட்டுக் கொண்டு இன்னொரு கும்பல் அவரை காப்பாற்றுகிறது.
ஒன்றுமே புரியாமல் தவிக்கும் விஷாலை அந்த நாட்டிலேயே முக்கியமான தொழிலதிபராக காட்டுகின்றன சில ஆவணங்களும், சூழ்நிலைகளும்.
நான் அவனில்லே என்று விஷால் கெஞ்சினாலும், மரியாதை... வணக்கங்கள்... என்று திரும்புகிற இடத்திலெல்லாம் செம ஸ்பாஞ்ச் கொடுக்கிறார்கள் அவருக்கு.
எல்லாமே சில தினங்கள்தான். அப்புறம் அப்படியே உல்டாவாகிறது எல்லாம்.
இவர் சந்தித்து வணங்கிய அதே மனிதர்கள் இவரை 'யாருய்யா நீ?' என்று அலட்சியப்படுத்துகிறார்கள்.
காதலிக்கிறேன் என்று அருகில் வந்த த்ரிஷா கூட அந்நியப்படுகிறார் ஒரு கட்டத்தில்.
நொறுங்கிப் போகிறார் விஷால். ஃபுட் பால் மாதிரி நம்மை உருட்டுகிற நபர் யாரென தேடிப் புறப்படுகிறார்.
இதுவரைக்கும் திரைக்கதையில் தீயாக இருந்த திரு, அப்புறம் காட்டுகிற ட்விஸ்ட் தமிழ் சினிமா அறியாதது.
என்றாலும் அவ்விரண்டு பெரிய மனிதர்கள்தான் படத்தையே கேலிக் கூத்தாக்குகிறார்கள். கொஞ்சம் சீரியசான மனிதர்களாக இருந்தால் கூட கதையில் ஒன்றியிருக்கலாம்.
அவர்களோ கொமெடி நடிகர் மதன்பாப்பையே கூட தூக்கி சாப்பிடுகிற மாதிரி சிரித்துக் கொண்டேயிருக்கிறார்கள்.
வில்லன்களை வெல்வதுதானே ஹீரேயிசம். ஒருவழியாக தன்னை அடித்தவர்களை அதே டெக்னிக்கால் திருப்பியடிக்கிறார் விஷால்.
ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு சுபம் போட்டு படத்தை முடிக்கிறார்கள்.
கருப்பாக இருந்தாலும் அழகான ஹீரோ என்று பெயரெடுத்த விஷாலை நாட்டு ஓணான் போலாக்கிவிட்டது தற்போதைய கெட்டப்புகள்.
தன்னை சுற்றிப் பின்னப்பட்ட சதியை என்னவென்றே தெரியாமல் எதிர்கொள்ளும்போது அவரது முக பாவனைகள் தேர்ந்த நடிகர் என்று பாராட்ட வைக்கிறது.
த்ரிஷாவுக்கு இன்னும் பத்தாண்டுகள் சினிமாவில் நடிக்க, அதுவும் ஹீரோயினாக நடிக்கும் ஆசையெல்லாம் இருக்கிறது.
ஆனால் அந்த நம்பிக்கை தாங்குமா என்ற கேள்வியை விதைக்கிறது சற்றே முதிர்ச்சியான அந்த முகம். ஆனாலும் காஸ்ட்யூம்கள் கை கொடுக்கின்றன வயதுக்கும் இளமைக்கும்.
மிக சொற்பமான காட்சிகளே வந்தாலும், சுனைனா இப்படியே இருந்தா நல்லாயிருக்கும்ல... என்கிற ஆசையை விதைத்துவிட்டு போகிறார்.
வில்லன்களாக நடித்திருக்கிறார்கள் ஜே.டி.சக்கரவர்த்தியும், மனோஜ் பாஜ்பாயும்.
இசை யுவன்சங்கர்ராஜா என்று டைட்டிலில் படித்ததோடு சரி. ஒரு சுவடும் தெரியவில்லை திரையில்.
படத்தில் வாங்கிய சம்பளத்திற்கு மேலும் கூட உழைத்திருப்பவர் ரிச்சர்டு எம்.நாதன் மட்டுமே. எவ்வளவு அற்புதமான போட்டோகிராபி!
ஒரு விறுவிறுப்பான திரில்லருக்கு தேவையான எல்லாம் இருந்தும் கடைசி முக்கால் மணி நேரத்தில் அதையெல்லாம் கோட்டை விட்ட டைரக்டர் திரு. தமிழ்சினிமாவின் 'திரு'வாளர் ஆவதை ஒரு சில மதிப்பெண்களில் தவறவிட்டிருக்கிறார்.
நடிகர்கள்: விஷால், த்ரிஷா, சுனைனா
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
இயக்குனர்: திரு
நன்றி விடுப்பு