மரண அறிவித்தல்


அமரர் பொன்னம்மா துரைசிங்கம்

குருவீதி காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும் Montbrae Circuit Narre Warren Melbourne Australiaவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி பொன்னம்மா துரைசிங்கம் அவர்கள் 31-08-18 அன்று அன்னாரின்இல்லத்தில் இயற்கை எய்தினார்.
அன்னார் அமரர் திரு கந்தையா துரைசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், வசந்தமல்லிகா,வசந்தகுமார், சண்முகானந்தகுமார் (சண்குமார்), வசந்தகலா ஆகியோரின் அருமைத் தாயாரும்,நடேசன், ஜெயந்தி, ராமினி, அசோகன் ஆகியோரின் அன்பு மாமியாரும் பிரணவன்-அர்ச்சனா, சேரன்,மீரா-அருண்ஐனகன், கிருஷ்ணாசகானா ஆகியோரின் அருமைப் பாட்டியுமாவார்
அன்னாரின் பூதவுடல் 5 September 2018 புதன்கிழமை அன்று மதியம் 12:30 மணியளவில் Boyd Chapel Springvale 600 Princess Highway Springvale மயானத்திற்கு எடுத்துவரப்பட்டு 1:30 மணிவரை பார்வைக்குவைக்கப்பட்டு பின்னர் கிரியைகள் நடாத்தப்பட்டு, 3:00 மணியளவில்  தகனக் கிரியைக்காகஎடுத்துச்செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு பணிவன்புடன்கேட்டுக் கொள்ளுகின்றோம்.
அன்புடன்
பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள்.
தகவல் (குடும்பத்தின் சார்பில்):
சண்முகானந்தகுமார் (சண்குமார்) + 61 458 253 982









கைகொடுக்கும் ஆன்மீகம் ! - எம் . ஜெயராமசர்ம .........மெல்பேண் ... அவுஸ்திரேலியா


மதிமயக்கும் பொருளை உண்டு 
    மனங்குழம்பும் கூட்டம் இன்று 
பொறியழிந்து நெறி பிறழ்ந்து 
    புதை குழிக்குள் விழுகிறதே 
அறிவிழந்து தனை உணரா
     அக்கூட்டம் விடிவு பெற 
ஆன்மீக வழி  ஒன்றே
     அருந்துணையாய் அமையும் அன்றோ !
image1.jpeg
 கடவுளில்லை என்று  சொல்லி
    கருவறுக்கும் ஒரு கூட்டம்
காமுகராய் மாறி நின்று
    கற்பழிக்கும் ஒரு கூட்டம்
கடவுள் சிலை திருடிநின்று
   காசுசேர்க்கும் ஒரு கூட்டம்
கண்ணியமாய் திருந்தி வர
     காட்டி நிற்போம் ஆன்மீகம் !

மற்றவர்கள் மனம்  உடைய
    வைக்கச்  செய்யும்  ஒருகூட்டம்
பெற்றவர்கள் வருந்தி  நிற்க 
     பிரியச் செய்யும்  ஒருகூட்டம்
கற்றுத் தந்த ஆசானை
     கலங்கச் செய்யும் ஒருகூட்டம்
கட்டாயம் திருந்தி நிற்க 
      கை கொடுக்கும் ஆன்மீகம் !


என்னடா வாழ்கை இது - கவிதை

.

என்னடா வாழ்கை இது....?
எதற்கு இத்தனைப் போராட்டம்
எதை நோக்கிப் பயணிக்கின்றோம்....?
எதை இங்கு சாதிக்கப் போகிறோம்...?

எதையும் கொண்டுவரவில்லை
எதையும் கொண்டு செல்வதில்லை
விட்டுப்போவதும் நமக்குயில்லை
பெற்றப் பிள்ளைகளும் நம்மவர் இல்லை

சிந்தித்துப் பார்க்கையில் சிலநேரம்
சித்தம் சூனியமாகி செயலிழந்து தவித்திட...
சிகரங்கள் சிறுத்து பார்வைக்குள் மழுங்கிட....

சிட்னி முருகன் ஆலயத்தில் மழைக்காக நடைபெற்ற காயத்ரி மந்திரமும் பூஜாவும் 02/09/2018

படப்பிடிப்பு ஞானி 

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் நிலவும் வறட்சி காரணமாக சிட்னி காயத்திரி குழுவால்  நேற்று வரை (02/09/2018) பல நாட்களாக காயத்ரி மந்திரமும் பூஜாவும் நடாத்தப்பபட்ட து 

கடித இலக்கியம்: ஈழத்தின் மூத்த எழுத்தாளர் எஸ். அகஸ்தியர் ( 1926 - 1995) எழுத்திலும் பேச்சிலும் தர்மாவேசம் ! இயல்பில் குழந்தை உள்ளம் ! இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் அகஸ்தியர் எழுதிய கடிதங்கள் - முருகபூபதி


இலங்கையின் மூத்த எழுத்தாளர் எஸ். அகஸ்தியர், வடபுலத்தில் ஆனைக்கோட்டையில்  சவரிமுத்து - அன்னம்மாள் தம்பதியருக்கு 1926 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி பிறந்தவர். தனது இளம் பராயத்திலேயே இலக்கிய உலகில் பிரவேசித்து, இலங்கையில் வெளியான பல பத்திரிகைகள், இதழ்களில்  கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம், கட்டுரை, உணர்வூற்று உருவகம், நாடகம், இலக்கிய வரலாறு   முதலான சகல கலை, இலக்கியத்துறைகளிலும் தொடர்ச்சியாக அயர்ச்சியின்றி எழுதியவர்.
தமிழக இலக்கிய இதழ்களிலும் அவரது பல படைப்புகள் வெளியாகின. இலங்கை மல்லிகை, தமிழ்நாடு தாமரை ஆகிய இதழ்கள் முகப்பில் அகஸ்தியரின் படத்துடன்  சிறப்பிதழ் வெளியிட்டுள்ளன. அவரது நூல்கள், இலங்கையிலும் தமிழ்நாட்டிலும், பிரான்ஸிலும் வெளியாகியுள்ளன.
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைமைக்குழுவில்  இணைந்திருந்தவர். தனது படைப்புகளை வெளியிடத் தயங்கிய பத்திரிகை, இதழ்களின் ஆசிரியர்களுடனும் எந்தத் தயக்கமும் இன்றி  நேரடியாக கருத்துமோதல்களில் ஈடுபடும் இயல்பும் கொண்டிருந்தவர். தர்மாவேச பண்புகள் அவரிடமிருந்தபோதிலும் குழந்தைகளுக்குரிய மென்மையான இயல்புகளினாலும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பின்றி  அனைவரையும் அன்போடு அணைத்தவர்.
1972 முதல் எனதும் நெருக்கமான இலக்கிய நண்பரானார். கொழும்பு வரும் வேளைகளில் நான் பணியாற்றிய வீரகேசரி அலுவலகம் வந்து சந்திப்பார். 1983 தொடக்கத்தில் எமது முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பாரதி நூற்றாண்டை கொண்டாடிய வேளையில் தமிழகத்திலிருந்து வருகைதந்திருந்த மூத்த எழுத்தாளர்களும் பாரதி இயல் ஆய்வாளர்களுமான தொ.மு.சி. ரகுநாதன், ராஜம் கிருஷ்ணன், பேராசிரியர் எஸ். இராமகிருஷ்ணன் ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கும் அழைக்கப்பட்டனர்.

நடந்தாய் வாழி களனி கங்கை - அங்கம்15 மக்கள் திலகத்தின் இலங்கைப்பயணம் எம்.ஜீ. ஆரின் "எங்கவீட்டுப்பிள்ளை" ஒளிப்படக்கலைஞர் ராஜப்பன்! - ரஸஞானி


ஆனால், அவரது ஒளிப்படம்தான் எனக்கு கிடைக்கவில்லை! இத்தனைக்கும் அவர் கொழும்பில் ஒரு காலத்தில் புகழ்பெற்ற சிறந்த ஒளிப்படக்கலைஞர். சொந்தமாக ஒரு ஸ்ரூடியோவும் நடத்தியவர்.
கேரளாவிலிருந்து இளம் வயதிலேயே இலங்கைத் தலைநகரம் வந்து, ஒளிப்படக்கலைஞராக வளர்ந்து, பின்னாளில் சொந்தமாகவே ராஜா ஸ்ரூடியோ என்ற நிறுவனத்தையும் தொடங்கியவர். முன்னாள் இலங்கை அதிபர் மறைந்த ரணசிங்க பிரேமதாசவின் நம்பிக்கைக்குரியவராகவும் திகழ்ந்து, அவர் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராக இருந்த வேளையில் கட்டிடப்பொருட்கள் கூட்டுத்தாபனத்தின் இயக்குநர் சபையிலும் அங்கம் வகித்தவர்.
மத்திய கொழும்பில் புதுச்செட்டித்தெருவில் ராஜா ஸ்ரூடியோவையும் பின்னாளில் அதன் அருகாமையில் ஒரு அச்சகத்தையும் நிறுவியவர். இவரது மனைவி  கௌரீஸ்வரி அக்கால கட்டத்தில் இலங்கையில் புகழ்பெற்ற கர்னாடக இசைப்பாடகியாவார்.
கௌரீஸ்வரி கனகரத்தினம் என்ற இயற்பெயர் கொண்டிருந்த அவர் ராஜப்பனை திருமணம் செய்தபின்னர் கௌரீஸ்வரி ராஜப்பன் என அழைக்கப்பட்டார்.
இலங்கையில் தயாரிக்கப்பட்ட இரண்டாவது தமிழ்த்திரைப்படம் தோட்டக்காரி. இதில் ஒரு பாடலுக்கு இவர் பின்னணிக்குரல் வழங்கியவர். பல மேடை இசைநிகழ்ச்சிகளிலும் தோன்றி இலங்கையின் பல  பாகங்களிலும் புகழ்பெற்றிருந்தார்.
ராஜா ஸ்ரூடியோவின் ஒரு தளத்தில் சங்கீத வகுப்புகளும் நடத்தினார்.
ராஜப்பன் தலைநகரில் ஒரு சிறிய ஒளிப்படக்கருவியை ( கெமரா) வைத்துக்கொண்டு, பிறந்தநாள் கொண்டாடும் குழந்தைகளின் படங்களை எடுத்துவந்து, வீரகேசரிக்கும் தினகரனுக்கும் தினபதி, சிந்தாமணி பத்திரிகைகளுக்கும் கொடுத்து வருமானம் தேடிய அதேசமயத்தில் இப்பத்திரிகைகளில் நிரந்தரமற்ற ஒளிப்படக்கலைஞராகவும் பணியாற்றியவர்.
அதாவது அவர் இந்தப்பத்திரிகைகளுக்கு படங்களை கொடுத்து, அவை பிரசுரமானால்தான் பணம் கிடைக்கும். எனினும் மனைவியின் இசைப்பணியால் கிடைக்கும் வருமானத்தையும் தனது ஒளிப்படக்கலைத்தொழிலிலிருந்து கிடைக்கும் சன்மானங்களையும் வைத்து வாழ்க்கைப்படகை செலுத்தி வந்திருக்கும் அவருக்கு, அந்தப்படகை மேலும் வேகமாக செலுத்துவதற்கு துணைசெய்திருப்பவர், யார் என்பதை அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!

பொக்கிஷம்!


ண்ண‌ற்ற பரிசுகள்
உன்னிடமிருந்து
முதல்பார்வை கொண்டு 
இன்றுவரை 
ஒவ்வொன்றும் 
ஒரு பொக்கிஷமாகவே!

ஜெபமாலை......
சிறிது ஏமாற்றம்தான் என்றாலும்
உன்னிடமிருந்து 
முதலாய் வ‌ந்த பெருமையதற்கு...
தெய்வத்திடமிருந்தே ஆரம்பம் 
நமதுறவு என்பதால்!

யானையைச் சுடுதல் - ஜார்ஜ் ஆர்வெல்- தமிழில் :நம்பி கிருஷ்ணன்

.

கீழை பர்மாவின் மாவலமயீனியில் பெரும் எண்ணிக்கைகளில் மக்கள் என்னை வெறுத்தார்கள். வாழ்க்கையில் முதல் முறையாக என் முக்கியத்துவத்தின் காரணத்தால் எனக்கு இவ்வாறு நேரிட்டிருக்கிறது. தாலூக்கா போலீஸ் அதிகாரியாக பணியாற்றிக் கொண்டிருந்தேன். அங்கு ஐரோப்பியர்களுக்கு எதிரான சல்லித்தனமான காழ்ப்புணர்வு நிலவி இருந்தது. கலவரம் செய்யும் அளவிற்கு எவருக்கும் துணிவில்லை என்றாலும் ஐரோப்பிய பெண்மணியொருவர் தனியே பஜார் வீதிகளில் நடந்து சென்றால் அவர் மீது வெற்றிலைச் சாறு உமிழப்படும் என்பதென்னவோ நிச்சயம். நான் போலீஸ் அதிகாரியாக இருந்ததால் அவர்களது காழ்ப்பிற்கான இலக்காக இருந்தேன் என்பது வெளிப்படை. தங்களுக்கு பாதிப்பில்லை என்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டபின் அவர்கள் என்னை வம்பிழுத்தார்கள். கால்பந்தாட்ட மைதானத்தில்  சுறுசுறுப்பான பர்மிய குடிம்பனொருவன் என்னை வேண்டுமென்றே தடுக்கிவிழச் செய்தபோது ஆட்ட நடுவர் (அவரும் ஒரு பர்மிய குடிம்பன்) அதைக் கண்டும் காணாதது போல் வேறுபக்கம் திரும்பிக் கொள்வார். பார்வையிட்டுக் கொண்டிருக்கும் கூட்டமோ கோரமான பலத்த சிரிப்பொலியொன்றை எழுப்பும். ஒற்றை நிகழ்வாக அல்லாது பலமுறை இவ்வாறே நிகழும். இறுதியில் ஏளனத்தோடு ‘மஞ்சள்’ முகத்துடன் என்னை எங்கும் எதிர்கொண்ட இளைஞர்களும், நான் கடந்து சென்றுவிட்டேன் என்பதை அறிந்துகொண்டபின் அவர்கள் என்மீதெரிந்த வசைகளும் என்னை மிகவும் எரிச்சலூட்டின. இவ்விஷயத்தில் இளம் பௌத்த பிட்சுகளே மோசமானவர்கள். ஆயிரக்கணக்கில் இருந்தாலும் அவர்களில் ஒருவருக்குக்கூட தெருக்கோடியில் நின்றுகொண்டு ஐரோப்பியர்களை கேலி செய்வதைத் தவிர வேறு வேலையேதும் இருந்ததாகத் தெரியவில்லை.
இவை அனைத்துமே புரிபடாமல் என்னை நிலைகுலையச் செய்தன. ஏனெனில் நான் அப்போது ஏகாதிபத்தியம் ஒரு கேடான விஷயமென்றும் எவ்வளவுக்கெவ்வளவு சீக்கிரம் என்னால் வேலையை உதறித்தள்ளி விட்டு அங்கிருந்து விலகிச் செல்ல முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு எனக்கு நல்லது என்றும் ஏற்கனவே முடிவு செய்துவிட்டிருந்தேன். கொள்கை ரீதியாக (ஆனால் எவருமே அறிந்து கொள்ள முடியாத வகையில் மறைவாக) பர்மிய மக்களை அவர்களை ஒடுக்கும் பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிராக நான் ஆதரித்தேன். என் பணியைப் பொருத்தமட்டில் விவரித்து தெளிவுபடுத்தம் என் ஆற்றல்களை மீறும் வகையிலும் அதை நான் வெறுத்தேன். இது போன்ற பணிகளில் பேரரசுகளின் கீழ்த்தரமான அவலங்கள் அருகாமையிலிருந்து கண்கூடாக காணக் கிடைக்கின்றன. துர்நாற்றம் பிடுங்கும் கூண்டுகளில் ஒடுக்கப்பட்டிருக்கும் அவலநிலைக் கைதிகள், பயத்தால் சாம்பல் நிறத்தில் இருண்டிருக்கும் 

இலங்கைச் செய்திகள்


சமூகத்தை சீர்கெடுக்கும் பெண்களுக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

சர்வதேச காணாமல்போனோர் தினத்த‍ை முன்னிட்டு திருக்கோவிலில் கவனயீர்ப்பு பேரணி

நில ஆக்கிரமிப்புக்கு எதிரான தொடர் போராட்டம் ஆரம்பம் ! முல்லைத்தீவில் திரண்ட மக்கள் ! ஜனாதிபதிக்கும் மகஜர் கையளிப்பு


சமூகத்தை சீர்கெடுக்கும் பெண்களுக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

30/08/2018 சமூகத்தினை சீர்கெடுத்து வரும் பெண்களுக்கு எதிராக வடமாகாண பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியாவில் இன்று  காலை 9.00 மணியளவில் எதிர்ப்பு போராட்ட ஊர்வலமொன்று இடம்பெற்றுள்ளது.

உலகச் செய்திகள்


தி.மு.க. வின் தலைவராகவுள்ளார் மு.க.ஸ்டாலின் 

பிரபல பெண் ஊடகவியலாளர் கொலை!!!


தி.மு.க. வின் தலைவராகவுள்ளார் மு.க.ஸ்டாலின்

28/08/2018 திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருந்த மு.கருணாநிதியின் மறைவுக்கு பின்னர் அக்கட்சியின் தலைவர் பதவிக்கு தெரிவு செய்வதற்காக இன்று உட்கட்சி தேர்தலை நடத்துவதற்கு தி.மு.க. தீர்மானித்துள்ளது.


தமிழ் சினிமா - மேற்கு தொடர்ச்சி மலை திரை விமர்சனம்


தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் தரமான படங்கள் வரும். அப்படி சில படங்கள் வந்தாலும் நம்மில் எத்தனை பேர் அந்த படத்தை திரையரங்கில் பார்க்கின்றோம் என்பது கேள்விக்குறி, அப்படி தரமான கதைக்களத்தில் லெனில் இயக்கி விஜய் சேதுபதி தயாரித்து இன்று வெளிவந்துள்ள படம் படம் தான் மேற்கு தொடர்ச்சி மலை.

கதைக்களம்

மேற்கு தொடர்ச்சி மலை இப்படம் வருவதற்கு முன்பே பல விருது விழாக்களில் கலந்துக்கொண்டு விருதை தட்டிச்சென்றது, இந்த படம் தயாரித்ததற்காக நான் பெருமை படுகின்றேன் என்று விஜய் சேதுபதி ஏற்கனவே கூறியிருந்தார்.
அவரின் பெருமை நாம் ஒவ்வொருவரும் இந்த படத்தை பார்க்கும் போது அனுபவிப்போம், ஏனெனில் உலகப்படங்களுக்கு நிகரான படம் தான் இந்த மேற்கு தொடர்ச்சி மலை.
தேனியிலிருந்து இடுக்கி வரை மூட்டை தூக்கி செல்லும் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கை தான் இந்த மேற்கு தொடர்ச்சி மலை, இதை கதையாக கூற முடியாது, ஒவ்வொருவரின் கதாபாத்திரங்களின் வழியாக கதையை நகர்த்தியுள்ளனர். ஒரு மூட்டை தூக்குபவன் தன் அன்றாட செலவிற்கு பணத்தை சேர்ப்பது எத்தனை கடினம் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது இந்த மேற்கு தொடர்ச்சி மலை.

படத்தை பற்றிய அலசல்

ரங்கசாமி எப்படியாவது சொந்த நிலம் வேண்டும் என்பதற்காக உழைக்கின்றான், அவனின் வாழ்க்கை வழியாக விரியும் இப்படம் ரங்கசாமி, வனகாளி என பல கதாபாத்திரங்களை நம் கண்முன் கொண்டு வந்து செல்கின்றது.
இவர்கள் எல்லாம் நடித்தார்கள் என்று எந்த ஒரு இடத்திலும் சொல்லவே முடியாது, வாழ்ந்தே இருக்கின்றார்கள் என்று தான் சொல்ல வேண்டும், அன்றாட தேவைக்கு அதிகமாக செலவு செய்யும் சென்னை போன்ற பெருநகரங்களில் மக்களின் வாழ்க்கை முறை எப்படி என்று பார்த்து பழகி போன நம் ஜெனரேஷனுக்கு இது படம் இல்லை பாடம்.
அதிலும் ஒரு ஏழைக்கிழவன் தன் பெருமையை பேசும் இடமெல்லாம் மிகவும் ரசிக்க வைக்கின்றது, தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு மிரட்டல், இன்னும் சில நாட்களில் தமிழ் சினிமாவின் முக்கியமான இடத்தில் தேனி ஈஸ்வர் இருப்பார்.
படத்தின் உயிராக இளையராஜாவின் பின்னணி இசை, நம்மை கதையுடன் கையை பிடித்து பயணிக்க பயன்படுகின்றது.

க்ளாப்ஸ்

இப்படி ஒரு கதைக்களத்தை தேர்ந்தெடுத்ததற்காகவே லெனினை பாராட்டலாம்.
படத்தில் நடித்த நடிகர்கள், இத்தனை யதார்த்ததை சமீபத்தில் எப்போதும் பார்த்தது இல்லை.
தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு, இளையராஜாவின் பின்னணி இசை.

பல்ப்ஸ்

பெரிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை.

மொத்தத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் தலையில் தூக்கி கொண்டாடப்பட வேண்டிய படம் இந்த மேற்கு தொடர்ச்சி மலை.  நன்றி CineUlagam