.
சிட்னி முருகன் ஆலயத்தில் நேற்றைய தினம் இரண்டாம் திருவிழா கோம்புஸ் வாழ்மக்களின் உபயத்தில் இடம் பெற்றது.வாரநாள் என்பதால் அதிக மக்களை காணமுடியவில்லை.யானை வாகனத்தில் முருகப்பெருமானை அமரவைத்து மண்டபம் போன்ற அமைப்பினுள் அந்த யானை வாகனத்தை வைத்து வீதிஉலா எடுத்துவந்தது அருமையான காட்சியாக அமைந்திருந்தது. இம்முறை நாதஸ்வர தவில் வித்துவான்களில் திரு நாகேந்திரம் அவர்களை காணமுடியவில்லை. நெருக்கமான உறவு ஒன்றின் மறைவினால் வரமுடியவில்லை என்பதை அறிந்தேன். நேற்றய கச்சேரியில் தனித்தவில் கச்சேரி என்னை மிகவும் கவர்ந்திருந்தது. தவில் கலைஞர்களான சின்ராஜா சுதாகரனும் புதியவரான ராமு சீலன் அவர்களும் இணைந்து ஒரு அருமையான தனித்தவில் கச்சேரியை தந்தார்கள். இளைஞர்களான அவ்இருவருக்கும் பாராட்டுக்கள்.
நேற்றைய பிரசாதம் வழங்கலில் தாராளத்தன்மை காணப்பட்டது. அப்படி வழங்கியும் பிரசாதம் எஞ்சியருந்ததாக கூறப்பட்டது.முருகன் வீதிஉலா வந்தபோது பலரும் இலங்கையில் இருந்து அழைத்துவரப்பட்ட குருக்கள் கொடியேற்றாதது பற்றி பாதக சாதகமான பக்கங்களில் உரையாடிக்கொண்டிருந்ததை அவதானிக்ககூடியதாக இருந்தது. அது பற்றி விரிவாக இன்னுமொரு பத்தியில் தரலாமென்று எண்ணுகின்றேன்.
சுவாமி வடமேற்கு வீதியில் தரித்து நின்றபோது பக்தர்கள் பலரும் துர்நாற்றமொன்றை உணர்ந்தார்கள். அது பற்றி பேசியவர்கள் வடமேற்கு வீதியில் அமைந்திருக்கும் மழை நீர் செல்லும் குளாயின் திறவு வாசலினால்தான் அந்த துர்நாற்றம் பரவுவதாக குறிப்பிட்டார்கள். அழுக்கு நீர் தேங்கியிருப்பதால் இது ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது. நிர்வாகம் இதை துப்பரவு செய்யும் பணியை உடனடியாக மேற்கொள்வார்கள் புனித வீதி புனிதமாக இருக்கும் என நம்புகின்றோம்.