ஒலிவியா நியூட்டன் ஜான் - கானா பிரபா

 “என்னுடைய நிலையில் இருந்து கொண்டு


என்னுடைய சக்திக்கு மேல் நிறையவே சாதித்திருக்கிறேன்
என்ற திருப்தி எனக்கு எப்போதும் இருக்கிறது" – ஒலிவியா நியூட்டன் ஜான்
 
இன்று (09.08.2022) காலை அவர் விடை பெற்ற போது ஆஸி தொலைகாட்சி மேற்சொன்ன அவரின் கூற்றோடு பிரியாவிடை கொடுத்தது.

கேம்பிரிட்ஜ் (இங்கிலாந்து) இல் பிறந்த அவர்  மெல்பர்ன் வாசியாக ஆஸி மண்ணில் வாழ்ந்ததால் இந்த நாடும் அவரைத் தன் தேசத்து மங்கை என்று சுவீகரித்துப் பெருமை கொண்டிருக்கிறது.
ஜேர்மன் மொழிப் பேராசிரியரான தனது தந்தையின் தொழில் நிமித்தம் அவரோடு குடும்பமும் 6 ஆவது வயது ஒலிவியாவும் மெல்பர்னுக்குக் குடிபெயர்ந்து இங்கேயே Christ Church Grammar School (South Yarra) பள்ளிப் படிப்பையும் கற்றவர்.

சரிகமப பாடகி வர்ஷா கிருஷ்ணன் நேர்காணல் செ .பாஸ்கரன்

எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் – 26 எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரமும் எதிர்வினைகளும் ! புகலிட இலக்கியத்திற்கு வளம் சேர்த்த புலம்பெயர்ந்தோரின் தமிழ் ஏடுகள் !! முருகபூபதி


நீண்ட இடைவெளிக்குப் பின்னர், நீர்கொழும்பிலிருந்த எனது குடும்பத்தினரையும் யாழ்ப்பாணத்திலிருந்த மல்லிகை ஜீவாவையும் சென்னையில் சந்தித்து, அவர்களுடன்
  தமிழ்நாட்டில் பயணங்களை மேற்கொண்டுவிட்டு, மீண்டும் சிங்கப்பூர் வழியாக அவுஸ்திரேலியா திரும்பினேன்.

சென்னை விமானநிலையத்தில் எனது அரவணைப்பிலிருந்து கதறி அழுதவாறு பிரிந்த மகனும் மற்றும் கண்கள் குளமாக நின்ற மகள்மாரும் அம்மாவும், மனைவியும் எனது கண்களை விட்டு அகலவில்லை.

 “ குடும்பத்தை கெதியா அழைக்கப்பாரும்  “ என்று மாத்திரம் ஜீவா சொன்னார்.

நளவெண்பாவில் ஒரு வரி இவ்வாறு வரும்.  “ கண்ணிலான்


பெற்றிழந்தான்.  

அந்த முப்பது நாட்களும் கால்களில் சக்கரம் பூட்டியவாறு விரைந்து ஓடிவிட்டன.

சுமார் மூன்று வருடங்கள் குடும்பத்தினரை விட்டுப்பிரிந்து வாழ்ந்து, மீண்டும் சந்தித்து -  முப்பது நாட்களே அவர்களுடன் செலவிட்டு, மீண்டும் பிரிந்து வரநேர்ந்தது.

மல்லிகை ஜீவா, யாழ். திரும்பியதும்  தமிழகப் பயணம் பற்றி மல்லிகையில் எழுதினார். நானும் எழுதினேன். அத்துடன் தினகரன் பிரதம ஆசிரியர் சிவகுருநாதனுடன் தொடர்புகொண்டு,  தமிழகப் பயணம் பற்றிய தொடர் எழுதப்போவதாகச் சொன்னேன்.

கணினி வசதி இல்லாத அக்காலப்பகுதியில்,   வார இதழுக்குரிய ஆக்கங்களை முற்கூட்டியே எழுதி அனுப்பிவிடவேண்டும்.

சுமார் 12 வாரங்கள் தமிழகப் பயணம் பற்றிய குறிப்புகளை படங்களுடன் தினகரன் வாரமஞ்சரியில் எழுதினேன்.

அவ்வேளையில் எனது சில கலை, இலக்கிய , ஊடக நண்பர்களிடமிருந்து கடிதங்கள் வரத்தொடங்கின.  இலங்கை நிலைமைகள் மோசமான நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தன.

இந்தியப்படை வெளியேறியதும்,  இலங்கைப் படைகள் தனது வேட்டையை தொடங்கியிருந்தன.

எனக்கு வந்த கடிதங்களில்  “ அவுஸ்திரேலியாவுக்கு எவ்வாறு வரலாம்.   “ என்ற பொதுவான கேள்வியே தொனிப்பொருளாக இருந்தது.

நானும் சளைக்காமல், இங்கிருந்த நிலைமைகளை எழுதிக்கொண்டிருந்தேன். அதன்பின்னர் அவர்களிடமிருந்து கடிதங்கள் வரவில்லை.

ஞானம் ( சிறுகதை ) முருகபூபதி

குணவர்தனா, தபாலில் வந்த கடிதத்தை படித்துவிட்டு, வீட்டின்


விட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான்.  

கொவிட் பெருந்தொற்று தொடங்கிய காலத்திலிருந்து அவனும் வீட்டிலிருந்தே வேலை செய்கிறான். மனைவி நிலாந்தி பாடசாலைக்குச் சென்ற மகனை அழைத்துவரச்சென்று திரும்பும்போது, வீட்டு தபால் பெட்டியிலிருந்து எடுத்து வந்த கடிதத்தை அறையை தட்டி தந்துவிட்டு, மகனை குளியலறைக்கு கூட்டிச்சென்றாள்.

 “ குணே… உங்கட உபாலியிடமிருந்து கடிதம்.  திரும்பவும் பணம் கேட்டு எழுதியிருக்கலாம்  “ என்று முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு சொல்லியவாறுதான் அகன்றாள் நிலாந்தி.

குணவர்தனாவின் நெருங்கிய நண்பன்தான் உபாலி.


 அம்பாந்தோட்டையில் ஒரே கிராமத்தில், பிறந்த வளர்ந்து படித்தவர்கள். வீட்டுக்கஷ்டத்தால், கிராமத்து விகாரையிலிருந்த தர்மரத்ன சாதுவின் தூண்டுதலால் தேசத்தை  விடுதலை இயக்கத்திடமிருந்து காக்க இராணுவத்தில் சேர்ந்து, இறுதிப்போரில்   வலது காலை இழந்து முடமாகத் திரும்பியவன்.

குணவர்தனாவின் குடும்பப் பின்னணி செழிப்பாக இருந்தமையால் படித்து பட்டதாரியாக முடிந்தது,  அவுஸ்திரேலியாவில் தொழில்வாய்ப்பும் பெற்று வரக்கூடியதாக இருந்தது.

இறுதிப்போர்க்  காலத்தில் உபாலியைப்பற்றியே மனைவியிடம் அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்த குணவர்தனாவுக்கு ஒருநாள் வந்த கடிதம் அனைத்தையும் சொல்லிவிட்டது.

பாடசாலையில் உதைபந்தாட்டத்தில் துரிதமாகவும் சாமர்த்தியமாகவும் தனது இரண்டு கால்களினாலும் பந்தை நகர்த்தி கோல் போட்டவன் உபாலி.  அவனது விளையாட்டுத்துறை சான்றிதழ்களே இராணுவத்தில் இணைவதற்கு அன்று முக்கிய தகுதியாகவும் இருந்தது.

இறுதிப்போர்  வெற்றியின்  மமதையில் அதிகாரத்திலிருந்தவர்கள் பாற்சோறும் கேக்கும் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது உபாலியின் வலது கால் இராணுவ மருத்துவமனையில் சத்திர சிகிச்சையில் அகற்றப்பட்டது.

குணவர்தனா, அடிக்கடி உபாலிக்கு பணவுதவி செய்தமையால், அன்று வந்த கடிதத்தையும் திறந்து பார்க்காமலேயே, முகத்தை நீட்டியவாறு கணவனிடம் கொடுத்துவிட்டு பிள்ளையின் தேவைகளை கவனிக்கத் தொடங்கினாள் நிலாந்தி.

வழக்கத்தை விட சிறிய  கடிதம். உபாலி அந்தக்கடிதத்தை காலிமுகத்திடலிலிருந்து எழுதியிருக்கிறான். அதனை அவன்  எழுதும்போது போராட்டம் தொடங்கி தொண்ணூற்றியைந்து  நாட்களாகியிருந்தது.

அன்னமிட்ட கை - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச சுந்தரதாஸ்

 மக்கள் திலகம் எம் ஜீ ஆரின் படங்கள் ஆரம்பிக்கப்பட்டு மளமளவென்று வளர்ந்து திரைக்கு வந்து வெற்றி பெறுவதும் உண்டு,ஆண்டுக்கணக்கில் இழுபட்டு திரைக்கு வந்து பெற வேண்டிய வெற்றியைப் பெறாமல் போவதும் உண்டு.அவ்வாறு வெற்றிக்கனியை தவறவிட்டால் படங்களில் ஒன்றுதான் 1972ல் வெளிவந்த அன்னமிட்ட கை !ஆனால் அப்படி நடந்ததால் இப்படத்துக்கு ஒரு பெருமையும் கிடைத்தது.134 படங்களில் நடித்த எம் ஜீ ஆரின் கடைசி கறுப்பு வெள்ளைப் படம் என்ற பெருமை இப் படத்துக்கு கிட்டியது.



அது மட்டும் அன்றி மேலும் சில சிறப்புகளும் இந்தப் படத்துக்கு கிடைத்தது.பல படங்களில் எம் ஜீ ஆரின் வில்லனாக வந்த நம்பியார் இந்த ஒரு படத்தில் தான் அவரின் அண்ணனாக வருகிறார்.இவர்கள் இருவரும் அண்ணன் தம்பியாக நடித்த ஒரே படம் அன்னமிட்ட கை தான்!

பல படங்களில் ஜோடியாக நடித்த நாகேஷ்,மனோரமா இருவரும்

1960ம் ஆண்டுகளின் இறுதியில் ஜோடியாக நடிப்பதை விட்டுவிட்டார்கள்.ஆனால் இந்தப் படத்தில் அவர்களை ஜோடியாக பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைத்தது.அதிலும் இளமையாகவும் அழகாகவும் மனோரமா காட்சியளித்தார்.நாகேசும் துடிப்பாக தோன்றினார்.

சிவாஜியின் பல படங்களுக்கு வசனம் எழுதி ,எம் ஜீ ஆரின்
விரல் விட்டு எண்ணக் கூடிய படங்களுக்கு வசனம் எழுதிய ஏ எல் நாராயணன் படத்துக்கு வசனம் எழுதியிருந்தார்.அதே போல் சிவாஜியின் கமராமேன் என்று அறியப்பட்ட கே எஸ் பிரசாத் ஒளிப்பதிவை கையாண்டார்.

துரைராஜ்,செல்வராஜ் இருவரின் தந்தை ஜமீந்தார் சதாசிவம்.செல்வராஜையும் அவன் தாயையும் சிறுவயதிலேயே சதாசிவம் விரட்டிவிடுகிறார்.துரைராஜின் தாயும் அவரின் கொடுமை தாங்காமல் இறந்து விடுகிறாள்.துரைராஜ் தந்தையை விட்டு விலகி தனித்து வாழ்கிறான்.பல ஆண்டுகள் கழித்து சகோதரர்கள் சந்திக்கிறார்கள்.அதே சமயம் தந்தை இறந்த செய்தியும் கிட்டுகிறது.அவரின் திரண்ட சொத்துகளுக்கு ஏக வாரிசாக துரை அறிவிக்கப்படுகிறான்.ஆனால் நல்ல மனம் படைத்த அவனோ செல்வராஜை ,துரை என்று அறிமுகப்படுத்தி அவனை சொத்துகளுக்கு அதிபதி ஆக்குகிறான்.ஆனால் அத்துடன் அவன் கடமை முடிவதாக இல்லை.செல்வராஜின் கண் இல்லாத தாய்,எஸ்டேடில் குழந்தைகளை பராமரிக்கும் சீதா,சொத்துக்களை சுருட்ட காத்திருக்கும் எஸ்டேட் மானேஜர் கனகரத்தினம்,அவரின் மகள் டாக்டர் கல்பனா,இவர்களின் சிக்கல்கள்,காதல்,மோசடி,எல்லாவற்றையும் சமாளிக்க வேண்டிய நிலைக்கு ஆளாகிறான்.

வன்னி ஹோப் புலம் வருகை பகுதி 3 ஜூலை 2022

 "இன்று ஒருவர் புன்னகைக்கக் காரணம்"

வீடியோ இணைப்பு கீழே உள்ளது.




ஏன் பெண்ணென்று... குறுநாவல் (4/6) கே.எஸ்.சுதாகர்

அதிகாரம் 4.


1983 ஆண்டு நாட்டில் இனமுறுகல் மேலும் தீவிரமடைந்தது. ஜே.ஆர். ஜெயவர்த்தன அதற்கு மேலும் மேலும் எண்ணெய் விட்டுக்கொண்டிருந்தார். யூலையில் பெரும் கலவரமாக வெடித்த அது பல தமிழர்களைக் காவு கொண்டது.

சந்திரமோகனுக்கும் பத்மினிக்கும் இடையில் இருந்த பிணக்கைத் தீர்த்து வைக்க பல மாதங்கள் எடுத்தன. அவர்கள் இருவரும் இணைந்து வாழ்வதை, அவர்களைத் தவிர மற்ற எல்லாரும் விரும்பியிருந்தார்கள். இதனால் விவாகரத்திற்கு விண்ணப்பிக்க பல மாதங்கள் எடுத்தன.

பொத்தி வைக்கப்பட்டிருந்த இரகசியம் மெல்ல கசியத் தொடங்கியது. மலையகத்தில் இவர்களின் பிரிவைப் பற்றி ஒருவருக்கும் தெரிந்திருக்கவில்லை. பத்மினியை அங்கு கூட்டிச் செல்லாததற்கு நிறையவே சாக்குப் போக்குகள் சொல்லி வந்தான் சந்திரமோகன். நாட்டுபிரச்சினைகளையும் அதற்குக் காரணமாக இழுத்தான்.

சந்திரமோகனுக்குத் திருமணம் என்று கேள்விப்பட்ட நாளில் இருந்து சாரதா பித்துப் பிடித்தவள் போலானாள். எதையும் எவரையும் வெறித்துப் பார்த்தபடி இருந்தாள். தினமும் கோவிலுக்குச் சென்று சுவாமியை முழுசிப் பார்த்தாள். சந்திரமோகனுக்குத் திருமணம் நடந்த அன்று காலைகூட கோவிலில் போய் இருந்துவிட்டாள். பின்னர் அவளை பலாத்காரமாகவே கோவிலில் இருந்து அகற்ற வேண்டியிருந்தது.

நன்றிகெட்ட மனிதர்களை விட நாய்கள் மேலடா… ! அவதானி


நாய் நன்றியுள்ள மிருகம். நாய் வீட்டைக் காக்கும் . என்றவாறெல்லாம் எமது சிறிய வயதில் பாடசாலைகளில் சொல்லித் தந்திருக்கிறார்கள்.

நாய் பற்றி திருவாசகம் முதல் திரைப்படங்கள் வரையில் ஏராளமான பாடல்கள் பிறந்திருக்கின்றன.

நாயிற் கடையாய் கிடந்த அடியேற்கு என்று தாம் இயற்றிய திருவாசகத்தில் மாணிக்கவாசகரும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் மூத்த கவிஞர் நவாலியூர் சோமசுந்தரப்புலவரும் 


வீமா வீமா ஓடி வா என்ற தலைப்பினைக்கொண்ட குழந்தைகளுக்கான பாடலை வரவாக்கியவர்.

கவியரசு கண்ணதாசனும் படிக்காத மேதை திரைப்படத்திற்காக எழுதிய ஒரு பாடலில் நன்றிகெட்ட மகனைவிட நாய்கள் மேலடா என எழுதியிருப்பார்.

   பாவேந்தர் பாரதிதாசனும்  “ என்றன் நாயின் பெயர் அப்பாய்  என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதியிருக்கிறார்.

ஜெயகாந்தனும் நிக்கி என்ற தமது சிறுகதையில் ஒரு குப்பத்து நாயைப்பற்றி எழுதியிருக்கிறார்.

அவுஸ்திரேலியாவில் வதியும்  விலங்கு மருத்துவரான எழுத்தாளர் நடேசன் வாழும் சுவடுகள் என்ற தொகுப்பில் தான் சிகிச்சை செய்த, வீட்டில் செல்லமாக வளர்த்த நாய்கள் பற்றிய கதைகளில் அவற்றின் சிறப்பியல்புகளை  எழுதியிருக்கிறார்.

இந்த பத்தியை படிக்கும் வாசகர்கள், இது என்ன…!  நாய்களின் மகத்மியத்தை இந்த அவதானி எழுதுகிறாரே என யோசிக்கலாம்.

உலகெங்கும் அமைந்துள்ள விமான நிலையங்களில் சுங்கப்பிரிவில் நிற்கும் நாய்கள், அந்தந்த நாடுகளின் பாதுகாப்பிற்கு உறுதுணையாக மட்டுமன்றி குற்றச்செயல்களையும்  கடத்தப்படும் போதை வஸ்துகளையும் கண்டுபிடிப்பதற்காக காவல் துறைக்கு துணையாக இயங்குகிறது.

ஆனால், இலங்கை போன்ற கீழைத்தேய நாடுகளில்  தெருநாய்களை கண்டால், கல்லை எறிந்து கலைத்துவிடும் காட்சிகளைத்தான் பார்க்கின்றோம்.

நலமோடு வாழ்க

 

சிவஸ்ரீ அ. தனராஜசர்மா

சிட்னி துர்க்கை அம்மன் கோவில் குருக்கள்




1 தண்ணீர் நிறைய குடியுங்கள்.
காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.
2 இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.
3 உடற்பயிர்ச்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.
4 தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.
5 நிறைய புத்தகம் படியுங்கள்.
6 ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.
7 குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.
8 குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
9 உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள்.அவர்கள் பயணிக்கும் /மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.
10 எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.
11 உங்களால் முடிந்த அள்வு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.
12 மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.
13 நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.
14 அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம்.
15 உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.

இலங்கைச் செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் ஆர்ப்பாட்டம்

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை

காலி முகத்திடலில் எஞ்சியுள்ள தற்காலிக கூடாரங்கள் அகற்றம்

நல்லைக் கந்தன் உற்சவ காலத்தை முன்னிட்டு இன்று தெய்வீக திருக்கூட்டத் தொடர் நிகழ்வு

ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து சேதம் விளைவித்ததாக 40 பேரின் புகைப்படம் வெளியீடு


காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் ஆர்ப்பாட்டம்

Saturday, August 13, 2022 - 6:00am


கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது போராட்டத்தை ஆரம்பித்து 2000 நாட்களை எட்டியுள்ள நேற்றைய தினத்தில் கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

உலகச் செய்திகள்

 சல்மான் ருஷ்டி மீது கூரிய ஆயுத தாக்குதல்

டொனால்ட் ட்ரம்பின் வீட்டில் பொலிஸ் அதிரடிச் சோதனை

உக்ரைனிய அணுமின் நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: ஐ.நா எச்சரிக்கை

ஆப்கான் தலிபான் ஆதரவு மதத் தலைவர் படுகொலை

சீனாவின் குழுவில் இருந்து இரு நாடுகள் வெளியேற்றம்

சீன எல்லையோரமாக இந்திய - அமெரிக்க போர்ப் பயிற்சி

இங்கிலாந்து பயணித்த பாகிஸ்தான் வீரர்களும் மாயம்


சல்மான் ருஷ்டி மீது கூரிய ஆயுத தாக்குதல்

- கண்ணை இழக்கும் நிலையில் வைத்தியசாலையில் போராடி வருகிறார்
- தனது பாதுகாப்பு தொடர்பில் தஸ்லிமா நஸ்ரின் அச்சம் வெளியீடு

நேற்று (12) நியூயோக்கில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து சல்மான் ருஷ்டி மீது கத்திக் குத்து தாக்குதல் நடாத்தப்பட்ட நிலையில் அவர் தற்போது அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

கிருஷ்ண ஜெயந்தி 20 ஆகஸ்ட் 2022 சனிக்கிழமை - சிட்னி துர்கா கோயில்

 

இது கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடும் ஒரு வருடாந்திர இந்து பண்டிகையாகும்.


மேதகு-II

 

தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும்கேவலப்படுத்தும் திரைப்படங்கள்தொடர்களுக்கு எமது எதிர்ப்பைக் காட்டும் சக்தியில்தமிழர்களின் வரலாற்றை கலை வடிவில் கண்முன்னே படம் பிடித்துக் காட்டும் 'மேதகுபோன்ற படைப்புக்களுக்கு எமது முழுமையான ஆதரவினை வழங்குவோம். அப்படைப்புக்களை கொண்டாடுவோம். இவ்வாறன பல்வேறு தரமான படைப்புகள் தொடர்ந்து வெளிவருவதுநாம் கொடுக்கும் பெரும் ஆதரவில் தங்கியுள்ளது. இந்த மேதகு படைப்புக்களை வெளிக்கொண்டுவந்த படக்குழுவினருக்கு வாழ்த்துக்களும்பாராட்டுக்களும் உரித்தாகட்டும்.

 

வரலாற்று தொகுப்பு - மேதகு திரைக்களம்

உலகத்தமிழர்களின் பேராதரவோடு உருவாக்கப்பட்டு கடந்த வருடம் வெளியானது நமது மேதகு பாகம்-1 திரைக்காவியம்மேதகு-ஐ தொடர்ந்துமேதகு தமிழினத் தலைவர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைத் தாங்கிவரும் பெரும் படைப்பான மேதகு-II திரைக்காவியத்தை மேதகு திரைக்களம் பெருமையுடன் வழங்கும்இது உலகத் தமிழ் மக்களின் படைப்பு. இதன் முக்கிய தொழில்நுட்ப கலைஞர்கள், இயக்குனர் - இரா.கோ.யோகேந்திரன்,

ஒளிப்பதிவு - வினோத் ராஜேந்திரன், இசையமைப்பாளர் - பிரவின் குமார், படத்தொகுப்பு - ஆதித்யா முத்தமிழ்மாறன் (KUVIYAM STUDIOZ), பாடல் வரிகள் - கவிஞர். திருக்குமரன்ஏறன் சிவா, ஒலிப்பதிவுக் கூடம் - யாழிசைப் பேழையகம் (YAZH ISAI RECORDS, THANJAVUR), இயக்குநர் குழு - கபில்பிரபாகரன்முனீஸ்வரன்சந்தோசுகவிமொழிவள்ளி விஸ்வநாத்வாசு நக்கீரன்பாரூக் அப்துல்லா, முதன்மை தயாரிப்பு நிர்வாகிகள் - திருக்குமரன்தஞ்சை குகன் குமார்சுமேஷ் குமார்


சிட்னி

Auburn Reading Cinemas - NSW

20 Aug 2022 Saturday 6.30pm, 21 Aug 2022 Sunday 4pm, 21 Aug 2022 Sunday 6pm

Contact: 0401 842 780, 0424 757 814



கிருஷ்ண ஜெயந்தி 20-08-2022

 


ஸ்ரீ ஜெயந்தி / கோகுலாஷ்டமி ஆகஸ்ட் 20, 2022 சனிக்கிழமை

 

SRI VENKATESWARA TEMPLE(SVT)

1 Temple Road, Helensburgh, Sydney, NSW – 2508, Australia

“ஆகாஷாத் பதிதம் தோயம், யதா கச்சதி
  சாகாரம் ஸர்வதேவ நமஸ்காரன்,
கேஷவம் ப்ரதிகச்சதி”
கிருஷ்ணர் பெரியவர். வானத்திலிருந்து விழும் ஒவ்வொரு மழைத்துளியும் கடலில் பாய்வது போல, எந்த தெய்வத்திற்குச் செய்யப்படும் ஒவ்வொரு பிரார்த்தனையும் பகவான் கிருஷ்ணரிடம் பாய்கிறது. இவ்வளவு பெரிய கிருஷ்ணரை வணங்குகிறேன்.
ஸ்ரீ கிருஷ்ணர் இந்துக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான மற்றும் வழிபடப்படும் தெய்வங்களில் ஒருவர். கிருஷ்ணர் அறிவு, ஞானம், அழகு மற்றும் செழுமை ஆகியவற்றைக் குறிக்கிறது. ஸ்ரீ கிருஷ்ணர் அன்பு மற்றும் தெய்வீக பரவசத்தின் உருவகமாக இருக்கிறார், அது அனைத்து வலிகளையும் குற்றங்களையும் அழிக்கிறது.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பிறப்பு "கோகுலாஷ்டமி மற்றும் ஸ்ரீ ஜெயந்தி" என்று கொண்டாடப்படுகிறது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரம் / அவதாரம் அனைத்து இருள்களின் முடிவு மற்றும் பூமியிலிருந்து தீமையை ஒழித்து, அமைதி மற்றும் அமைதியைக் கொண்டுவருவதைக் குறிக்கிறது.
ஆகஸ்ட் 20, 2022 அன்று SVT இல் திருவிழா உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.